சனி, 31 ஜனவரி, 2015

தி.மு.க.,வுக்கு ஆதரவு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி.

.புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி திருச்சியில் கூறியதாவது: ஸ்ரீரங்கம் தொகுதியில் புதிய தமிழகம் கட்சிக்கு, 60 ஆயிரம் ஓட்டுகள் உள்ளன. இதனால் தான் கடந்த, 2011ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதாவுக்கு, நானே நேரடியாக பிரசாரம் செய்தேன். தற்போது நடக்கவுள்ள ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில், புதிய தமிழகம் போட்டியிடவில்லை. 'ஸ்ரீரங்கம் தேர்தலில் போட்டியிடும், தி.மு.க., வேட்பாளரை, பொது வேட்பாளர் என்ற அடிப்படையில் ஆதரிக்க வேண்டும்' என, அக்கட்சி தலைவர் கருணாநிதி ஆதரவு கேட்டார். மேலும், தி.மு.க., தரப்பில் என்னிடம் ஆதரவு கேட்டனர். அதனால், இடைத்தேர்தலில் மட்டும், தி.மு.க., வேட்பாளர் ஆனந்தை, புதிய தமிழகம் கட்சி ஆதரிக்கிறது. தமிழகத்தில் நடக்கும் சட்டத்துக்கு புறம்பான, ஆட்சிக்கு முடிவு கட்டவே, ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க.,வை ஆதரிக்கிறோம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக