திங்கள், 30 மார்ச், 2015

தமிழக அரசே.! தமிழக அரசே.!! கொம்பனை தடை செய்..புதிய தமிழகம் கட்சி திருச்சி...

கார்த்திக் நடித்த கொம்பன் திரைப்படம் ஏப்ரல் 2 ம் தேதி வெளியாகவிருக்கும் சூழலில் அந்தப் படத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர் புதிய தமிழகம் கட்சியினர். இந்தப் படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டும், வசனங்களை நீக்க வேண்டும் என்று சில வாரங்களுக்கு முன் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி கேட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று கிருஷ்ணசாமிக்கு சென்னையில் பிரிவியூ ஷோ காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த பின் கிருஷ்ணசாமி படம் வெளி வந்தால் தமிழகத்தில் மிகப்பெரிய ஜாதி மோதல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் தணிக்கை குழுவுக்கு புகார் மனுவை அளித்தார். மதுரை நீதிமன்றத்தில் ஒரு அவசர வழக்கும் தொடர்ந்துள்ளார். தங்கள் எதிர்ப்பின் ஒரு பகுதியாக படத்தை தடை செய்ய கோரி திருச்சியில் புதிய தமிழக கட்சியின் சார்பில் அதன் தலைவர் ஐயப்பன் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களை தடுத்து 34 பேரை கைது செய்து அருண் ஓட்டலில் உள்ள சுமங்கலி மகா ஹாலில் அடைத்து வைத்துள்ளனர்.

கொம்பன் திரைப்படத்தை தடைசெய்யக்கோாி திருச்சியில் புதிய தமிழகம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்..

புதிய தமிழகம் கட்சி திருச்சி வடக்கு மாவட்ட சார்பில் ஆர்பாட்டம் சாலை மறியல் சாதிமோதலை தூவும் கொம்பன் திரைப்படத்தை தடைச் செய்யக்கோரி.தலைமை:.(ம.அய்யப்பன் மாவட்ட செயலாளர்) ( முன்னிலை:மு.பாலு மாவட்ட இளைஞரணி செயலாளர் கலந்து கொண்டவர்கள் ஒன்றிய செயலாளர்கள். மண்ணை.ம.தினகரன்,லால்குடி ப.நம்பிராஜ்,புள்ளம்பாடி து.முருகானந்தம்,உப்பிலியபுரம் மருகானந்தம்,கூத்தூர்கனேஷ்,கூத்தூர்சுதாகர்.கூத்தூர்சுரேஷ் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்

கொம்பன் திரைப்படத்தை தடைசெய்யக்கோாி தென்காசியில் புதிய தமிழகம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்..

தென்காசி-30 தென்காசியில் இன்று தாலுகா அலுவலகம் முன்பு ”கொம்பன்” திரைப்படத்தை தடைசெய்யக்கோாியும் கொம்பன் திரைப்படத்தை பாா்க்கமாட்டோம் என்று கண்ணில் கருப்பு துணி கட்டிக்கொண்டு தங்களுடைய எதிா்ப்பை தொிவிக்கும் விதத்தில் புதிய தமிழகம் கட்சியினா் நெல்லை மேற்கு மாவட்ட செயலாளா் ஜெயக்குமாா் தலைமையில் ஆா்ப்பாட்டம் செய்தனா். ஆா்ப்பாட்டத்தில் கடையநல்லூா் ஒன்றிய செயலாளா் மகேஷ், தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளா் சந்திரன், கிழக்கு ஒன்றிய செயலாளா் இசக்கி, கடையநல்லூா் கவுன்சிலா் ராஜ் உட்பட 50க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்

சாதி கலவரம் வராமல் தடுக்க முடியுமா? - நீதிபதியின் கேள்வியால் கொம்பன் வெளியாவதில் சிக்கல்!

கொம்பன் படம் வெளியானால் சாதிக் கலவரம் வராமல் தடுக்க முடியுமா? என்று நீதிபதி கேள்வி எழுப்பியதால், படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகலுக்குப் பிறகு படத்துக்கு தடை விதிக்கப்படுமா இல்லையா என்பது தெரிந்துவிடும். முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘கொம்பன்‘ பட கதைக்கும் தலைப்புக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குறிப்பிட்ட ஜாதியை குறிப்பிடுவதாக இதன் கதை அமைக்கப்பட்டிருப்பதால் தென் மாவட்டங்களில் ஜாதி மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்திருந்ததுடன் இப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக்கூடாது என தணிக்கை குழுவினருக்கு கடிதம் எழுதி இருந்தார். வரும் 2ம் தேதி இப்படம் திரைக்கு வருவதாக அறிவிப்பு வெளியாகியிருப்பதால், படத்தை தடை செய்யக் செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நேற்று முன் தினம் மனு தாக்கல் செய்தார். அவசர மனுவாக இதை எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் கோரினார். இதையடுத்து இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது கிருஷ்ணசாமி தரப்பு, "இந்தப்படம் வெளியானால் தென்மாவட்டங்களில் நிச்சயம் சாதிக் கலவரம் ஏற்படும்," என்று தெரிவித்தார். அரசு தரப்பு வழக்கறிஞரோ, "அப்படி எதுவும் நிகழாது'' என்றார். உடனே நீதிபதி தமிழ் வாணன், "சாதிக் கலவரம் வராது என்பதை உறுதியாக சொல்ல முடியுமா?'' என்று அரசு வழக்கறிஞரிடமும், காவல் துறையினரிடமும் கேட்டார். இதற்கு உடனே பதிலளிக்க வேண்டும். பிற்பகலில் பதில் வந்தபிறகு தீர்ப்பு கூறப்படும் என்றார். இன்று மதியம் நீதிபதியின் தீர்ப்பில், திட்டமிட்டபடி ‘கொம்பன் ரிலீசாகுமா? இல்லை தடை செய்யப்படுமா? என்பது தெரியவரும்.

நெல்லையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்: புதிய தமிழகம் கட்சியினர் 31 பேர் கைது

திருநெல்வேலியில் தடையை மீறி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 31 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கொம்பன் திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடபோவதாக புதிய தமிழகம் கட்சியினர் அறிவித்திருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸார் அனுமதியளிக்கவில்லை.
இந்த நிலையில் திருநெல்வேலி கிழக்கு மாவட்டச்செயலர் நடராஜன் தலைமையில் புதிய தமிழகம் கட்சியினர் திருநெல்வேலி ரயில் நிலையம் முன்பு திரண்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 31 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

கொம்பன் சர்ச்சை - தணிக்கை அதிகாரிகளின் பாகுபாடு!


ஏப்ரல் 2ந் தேதி வெளியாகிறது ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் முத்தையா இயக்கியுள்ள கார்த்தி நடித்த கொம்பன் திரைப்படம். படம் ‘யு’ சர்டிபிகேட்டுடன் வெளியாவதாகத் சின்னத்திரைகளில் விளம்பரம் வெளியாகிவரும் நிலையில், இப்படத்தால் சாதிரீதியிலான சர்ச்சையும் பதற்றமும் உருவாகும் என புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி புகார் தெரிவித்தார். 

தணிக்கைக் குழுவினர் இப்படத்தை நிராகரித்துவிட்டதாகவும் எனவே மறுதணிக்கை செய்யக் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் திரையுலகினர் தெரிவிக்கின்றனர்.

மேலும், “ஒரு படம் சென்சார் சர்டிபிகேட் பெறாத நிலையில் ரிலீஸ் தேதியை அறிவிக்க முடியாது. அத்துடன் மறுஆய்வு செய்யவேண்டுமென்றால் அதற்கு சில நாட்கள் ஆகும். அதுவும் அலுவலக வேலை நாட்களில் தணிக்கை உறுப்பினர்கள் படத்தைப் பார்ப்பது வழக்கம். 

ஆனால் இதற்கு மாறாக விடுமுறை நாளான ஞாயிறன்று காலையில் கொம்பன் படம் சென்சார் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பல தயாரிப்பாளர்கள் தங்கள் படத்தின் நெருக்கடி கருதி இப்படிக் கோரியபோது சென்சார் இந்தளவு வேகமாக செயல்பட்டதில்லை.  

ஏற்கனவே அஞ்சான் உள்ளிட்ட தமிழ்ப் படங்களும் பல இந்திப் படங்களும் விதிமீறல்களுடனும் தனிப்பட்ட நலன்கள் கருதியும் சென்சார் செய்யப்பட்டது தொடர்பாக அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகும் சென்சார் துறை பாரபட்சமாக செயல்படுகிறது என சினிமா வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர். 

தேசம் முழுவதும் பாதிக்கும் அளவுக்கு தணிக்கை குழு மாறியிருப்பது கண்டிக்கத்தக்கது. நீ யார் கண்டிப்பதற்கு என்று கேட்டால், நான் கலைஞன் என்று பதில் சொல்லுவேன் என்று உத்தம வில்லன் திரைப்படம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் கமல்ஹாசன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

கொம்பன் பட வட்டாரமோ, மிகப் பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ள படத்தை வெளியிடுவதற்கு சட்டரீதியான முயற்சிகளை மேற்கொள்கிறோம் என்கிறார்கள். தணிக்கை அதிகாரிகள் என்ன பதில் சொல்லப் போகிறார்களோ?

கொம்பன் படம் திரைக்கு வருமா?

கொம்பன் படம் வெளியானால் சாதிக் கலவரம் வராமல் தடுக்க முடியுமா? என்று நீதிபதி கேள்வி எழுப்பியதால், படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகலுக்குப் பிறகு படத்துக்கு தடை விதிக்கப்படுமா இல்லையா என்பது தெரிந்துவிடும். முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘கொம்பன்‘ பட கதைக்கும் தலைப்புக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குறிப்பிட்ட ஜாதியை குறிப்பிடுவதாக இதன் கதை அமைக்கப்பட்டிருப்பதால் தென் மாவட்டங்களில் ஜாதி மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்திருந்ததுடன் இப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக்கூடாது என தணிக்கை குழுவினருக்கு கடிதம் எழுதி இருந்தார்.
வரும் 2ம் தேதி இப்படம் திரைக்கு வருவதாக அறிவிப்பு வெளியாகியிருப்பதால், படத்தை தடை செய்யக் செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நேற்று முன் தினம் மனு தாக்கல் செய்தார். அவசர மனுவாக இதை எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் கோரினார். இதையடுத்து இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது கிருஷ்ணசாமி தரப்பு, "இந்தப்படம் வெளியானால் தென்மாவட்டங்களில் நிச்சயம் சாதிக் கலவரம் ஏற்படும்," என்று தெரிவித்தார்.
அரசு தரப்பு வழக்கறிஞரோ, "அப்படி எதுவும் நிகழாது'' என்றார். உடனே நீதிபதி தமிழ் வாணன், "சாதிக் கலவரம் வராது என்பதை உறுதியாக சொல்ல முடியுமா?'' என்று அரசு வழக்கறிஞரிடமும், காவல் துறையினரிடமும் கேட்டார். இதற்கு உடனே பதிலளிக்க வேண்டும். பிற்பகலில் பதில் வந்தபிறகு தீர்ப்பு கூறப்படும் என்றார். இன்று மதியம் நீதிபதியின் தீர்ப்பில், திட்டமிட்டபடி ‘கொம்பன் ரிலீசாகுமா? இல்லை தடை செய்யப்படுமா? என்பது தெரியவரும்.

கொம்பன் திரைப்படத்தை தடைசெய்யக்கோாி விருதுநகர் .. புதிய தமிழகம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்..

புதிய தமிழகம் கட்சி விருதுநகர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாதி வெறியை தூண்டக் கூடிய ' கொம்பன்' படத்தை தணிக்கை குழு தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இன்று (30.3.15) திங்கள் காலை 10-மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டம் செய்த புதிய தமிழகம் கட்சியினரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கொம்பன் திரைப்படத்தை தடைசெய்யக்கோாி தென்காசியில் புதிய தமிழகம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்..

தென்காசி-30 தென்காசியில் இன்று தாலுகா அலுவலகம் முன்பு ”கொம்பன்” திரைப்படத்தை தடைசெய்யக்கோாியும் கொம்பன் திரைப்படத்தை பாா்க்கமாட்டோம் என்று கண்ணில் கருப்பு துணி கட்டிக்கொண்டு தங்களுடைய எதிா்ப்பை தொிவிக்கும் விதத்தில் புதிய தமிழகம் கட்சியினா் நெல்லை மேற்கு மாவட்ட செயலாளா் ஜெயக்குமாா் தலைமையில் ஆா்ப்பாட்டம் செய்தனா். ஆா்ப்பாட்டத்தில் கடையநல்லூா் ஒன்றிய செயலாளா் மகேஷ், தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளா் சந்திரன், கிழக்கு ஒன்றிய செயலாளா் இசக்கி, கடையநல்லூா் கவுன்சிலா் ராஜ் உட்பட 50க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

வியாழன், 26 மார்ச், 2015

நெல் நாகரிகம் – தமிழ் மூவேந்தர் பங்களிப்பு................முனைவர் குருசாமி சித்தன்...

உலகின் நாகரிகங்களை வகைப்படுத்தும் போது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் நாகரிகத்தை “நெல் நாகரிகம் (சுiஉந ஊரடவரசந)” என்று கூறுகிறார்கள். இந்த நெல் நாகரிகம் தோன்றியது, வளர்ந்தது எல்லாம் தமிழகத்திலே தான். தமிழகத்தில் இந்த நாகரிகம் மள்ளர் நாகரிகம் எனப்படுகிறது. தமிழ் இலக்கியங்கள் எல்லாம் இந்த நாகரிகத்தின் தோற்றத்தையும் இந்த நாகரிகத்தைத் தோற்றுவித்தவர்கள் பற்றியும் அதன் “பண்பாடுத் தலைவர்கள் (ஊரடவரசயட ர்நசழ)” பற்றியும் அந்தப் பண்பாடு பற்றியும் விரிவாகவும் பெருமையுடன் கூறுகின்றன.

தமிழ் நில வகைகள் – தமிழர்கள் மக்களின் வாழ்விடங்களை ஐந்து வகைகளாகப் (திணை) பிரித்தனர். இவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை எனப்பட்டது. குறிஞ்சி நிலம் என்பது மலையும் மலை சார்ந்த நிலமும் ஆகும். முல்லை நிலம் என்பது காடும் காடு சார்ந்த நிலமும் ஆகும். மருத நிலம் என்பது நீர் வேளாண்மை செய்யப்படும் வயலும் வயல் சார்ந்த நீர் வளம் மிகுந்த நிலம் ஆகும். நெய்தல் என்பது கடலை ஒட்ழய மணல் பரந்த நிலம் ஆகும். பாலை நிலம் என்பது குறிஞ்சி நிலமும் முல்லை நிலமும் மழையின்மையாலும் கதிரவனின் வெப்பத்தாலும் காய்ந்து வரண்டு திரிந்த நிலம் ஆகும்.
உலக நாகரிகஙகள் – ஆற்றுப் பள்ளதாக்குகள் மற்றும் ஆறு பாயும் சமவெளிகள் மருதநிலப் பகுதிகள் ஆகும். உலகின் பல நாடுகளிலும் நீர் வளம் மிகுந்த நதிக் கரைகளில் அமைந்த இந்த மருத நிலப் பகுதிகளிலெயெ நாகரிகங்கள் தோன்றியுள்ளன. கி.மு. 3400 வாக்கில் தோன்றிய எகிப்திய நாகிகம் நைல் நதிச் சமவெளி நாகரிகம் ஆகும்.கி.மு. 3500 வாக்கில் தோன்றிய சுமேரிய நாகரிகம் ய+ப்ரட்டீஸ். டைகீரீஸ் நதி சமவெளி நாகரிகம் ஆகும். கி.மு. 3000 வாக்கில் தோன்றியது சிந்து நதிச் சமவெளி நாகரிகம் ஆகும். கி.மு. 1600 வாக்கில் தோன்றியது சீன மஞ்சள் நதிச் சமடிவளி நாகரிகம் ஆகும். கி.மு. 2500 வாக்கில் தோன்றிய கிரேக்க நாகரிகமும் நதிச் சமவெளி நாகரிகம் ஆகும். கி.மு. 1000 வாக்கில் தோன்றியது கங்கை நதிச் சமவெளி நாகரிகம் ஆகும். இப்படிப் பல நாடுகளிலும் நாகரிகங்கள் தோன்றியது ஆற்றுச் சமவெளிப் பகுதிகளான மருத நிலங்களில் தான்.
தமிழர் நாகரிகம் – காவிரி, தென்பெண்ணை, பாலாறு, பவானி, அமராவதி, வைகை, தாமிரபரணி பொருணை மற்றும் கடல் கொண்ட பஃறுளி ஆற்றுச் சமவெளிகளான மருத நிலத்தில் தோன்றிய தமிழர் நாகரிகம் “நெல் நாகரிகம்” எனப்படும்;. இந்த நெல் நாகரிகத்தைத் தோற்றுவித்த தமிழர் மள்ளர் எனப்பட்டனர். இந்த நெல் நாகரிகம் தமிழகத்தில் தோன்றி தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பரவியது.
தொல்காப்பிய வேந்தன் – தமிழகத்தில் மருத நிலத்தில் முதன் முதலில் மள்ளர்களால் நெல் கண்டுபிடிக்கப்பட்டு விளைவிக்கப்பட்ட காலத்தில் குடும்பம், ஊர். பேரூர், நகரம், நாடு, அரசுகள் தோன்றின. நெல் நாகரிகத்தின் பண்பாட்டுத் தலைவன் இந்தப் பண்பாட்டினை உடைய மக்களுக்குத் தலைவனானான். தமிழ் இலக்கியங்களில் நமக்குக் கிடைக்ககூடிய மிகப் பழமையான நூலான தொல்காப்பியம் இந்தப் பண்பாட்டுத் தலைவனை வேந்தன் எனக் கூறுகிறது. இந்நூலில் இந்தப் பண்பாட்டுத் தலைவனான வேந்தன் கடவுள் நிலைக்கு உயர்த்தப்பட்ட மிகவும் வளர்ச்சி அடைந்த நிலையைக் கூறுகிறது.
வேந்தன் மேயத் தீம்புனல் உலகமும் – தொல்காப்பியம் – பொருளதிகாரம்
நெல் நாகரிகம் தோன்றிய மருத நிலத்தின் கடவுள் வேந்தன் எனக் கூறுகிறது. தொல்காப்பிம் தோன்றியது கி.மு. 500 என்று கூறப்படுகிறது. ஆகையால் இந்த நெல் நாகரிகம் அதற்கும் பல நூற்றாண்டுகள் முன்னமேயே தோன்றி இந்நிலைக்கு முதிர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பின்பு நெல் நாகரிகத்தைதத் நமது பண்பாடாகக் கொண்ட மருத நில மள்ளர்களின் பண்பாட்டுத் தலைவர்கள் பலரும் வேந்தன்-வேந்தர் எனப்பட்டனர். இப்பண்பாட்டுத் தலைவர்களான தமிழக அரசர்கள் தமிழ் மூவேந்தர் சேர வேந்தன், சோழ வேந்தன், பாண்டிய வேந்தன் எனப்பட்டனர். மருத நில இறைவனானா (அரசனான) வேந்தனின் வழித் தோன்றல்கள் தாம் மள்ளர் குல சேர, சோழ, பாண்டிய வேந்தர்கள்.
பாண்டியன் வேந்தன் – பாண்டியன் நெடுஞ்செழிய மள்ளரை வேந்தன் என்றதும் அவனுடைய நீண்ட மதில் கொண்ட மதுரையை மல்லன் மூதூர் என்றதும் அவன் நெல்லின் மக்களின் குலத்தைச் சார்ந்தவன் என்பதும் பின்வரும் பாடல்களால் அறியலாம்.
வானுட்கும் வழ நீண்டமதில்
மல்லன் மூதூர் வய வேந்தெ.
– புறநானூறு – 18, குடபுலவியனார் பாடியது.
சீர் சான்ற உயர் நெல்லின் ஊர்
கொண்ட உயர் கொற்றவ
– மதுரைக் காஞ்சி வரி 87 – 88, மாங்குழ மருதனார்.- (பாண்டிய வேந்தர் தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்ழயன் நெடுஞ் செழிய மள்ளரைப் புகழ்ந்து பாடியது.
பொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர்
குப்பை நெல்லின் முத்தூறு தந்த
கொற்ற நீன்குடைக் கொடித் தேர்ச் செழிய
– புறநானூறு 24 மாங்குடி மருதனார் தலையாலாங்காத்துச் செருவென்ற நெடுஞ்செழிய மல்லரைப் பாடியது.
சோழ வேந்தன் – சோழன் குளமுற்றுத் துஞ்சிய கிள்ளி வளவன் மள்ளரை வெள்ளைக்குடீ நாகனார் தமிழ் மூவெந்தருள்ளும் சிறந்த வேந்தர் எனப் பாடியது.
மண்திணி கிடக்கைத் தண் தமிழ்க் கிழவர்
முரசு முழ ங்கு தானை மூவருள்ளும்
அரசெனப்படுவது நினதே பெரும
ஆடுகட் கரும்பின் வெண்ப+ நுடங்கும்;
நாடெனப்படுவது நினதே யத்தை, ஆங்க
நாடு கெழு செல்வத்துப் பீடு கெழு வேந்தெ.
– புறநானூறு 35, வெள்ளைக் குழ நாகனார்
கிள்ளி வளவன் மள்ளரைப் பாடியது.
சாலி நெல்லின் சிறை கொள் வேலி
ஆயிரம் விளையுட்டு ஆக
காவிரி புரக்கும் நாடு கிழவோனே.
– பொருநர் ஆற்றுப் படை வரி 246 – 248 – கரிகாற் பெருவளவந்தான் மள்ளரைப் புகழ்ந்து பாழயது.
சேர வேந்தன் – சேரன் வேந்தன் பாலை பாழய இளங்கோ மள்ளரை ஏருடைய வேந்தன் என்றது.
விண்பொருபுகழ் விறல் வஞ்சிப்
பாடல் சான்ற விறல் வேந்தனும்மெ
வெப்புடைய வரண் கடந்து
தும்புறுவர் புறம் பெற்றிசினே
புறம் பெற்ற வயவேந்தன்
மறம் பாழய பாடினியும்மே
ஏருடைய விழுக் கழஞ்சிற்
சீருடைய விழைபெற்றிசினே
-புறநானூறு 11, பேய்மகள் இளவெயினி பாடியது.
உழுபடையல்லது வேறு படையில்லை
திருவில் அல்லது கொலை வில் அறியார்
நாஞ்சில் அல்லது படையும் அறியார்.
(நாஞ்சில் – கலப்பை) – புறநானூறு 20,
குறுங்கோழிய+ர் கிழார் பாடியது.
(சேர வேந்தர் யானைகட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை மள்ளர் பற்றி).
கேரள மாநிலம், வயநாடு பகுதியில் 2000 ஆண்டு பழமையான எடக்கல் குகைக் கல்வெட்டு சேரவேந்தன் வி~;ணுவர்மன் குடும்;பர் குலத்தினன் எனக் கூறுகிறது. “வி~;ணுவர்மம் குடும்பிய குல வர்த்த நஸ்ய லிகித”.
இதன் பொருள் – வி~;ணுவர்மனின் குடும்பம்; குலம் வளர எழுதியது என்பதாகும். குடும்பன் என்பது மள்ளர்களில் பட்டப் பெயர்களில் ஒன்றாகும்.
வேந்திர குலத்தினரின் உயர்வு (வேந்தன் குலத்தினர்) இந்த வேந்தர்கள் மள்ளர் குலத்தினர் என்பது சங்க இலக்கியங்கள் பலவற்றிலும் கூறப்படுகின்றன. வேந்தன் பின் நாளில் இந்திரன், தேவேந்திரன் எனப்பட்டதால் இவர்களும் – இவர்களின் வழித்தோன்றல்களும் தேவேந்திர குலத்தினர் என்றும் கூறப்படுகின்றனர்.
சேர, சோழ, பாண்டியர்கள் வேந்தர்கள் என்பதையும் அவர்கள் நெல் நாகரிகத்தின் பண்பாட்டுத் தலைவர்கள் என்பதையும் இலக்கியங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இந்த நெல் நாகரிகத்தின் தலைமக்களாகிய உழவர்களும்,
மல்லர் குலத்தினரும் – தேவேந்திர குலத்தினரும் இருந்த சிறப்பை, முதன்மையை கீழ்வரும் பாடல்கள் காட்டுகின்றன:
உண்டி கொடுத்தோ ருயிர்கொடுதோரே
உண்டி முதற்றே யுணவின் பிண்டம்
உணவெனப்படுவது நிலத்தொடு நீரே
– புறநானூறு – 18, குடபுலவியனார் பாடியது.
சுழன்றும் ஏர்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவெ தலை
– குறள் 1031
உழதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்.
– குறள் 1033
மருத நில மக்கள் மள்ளர், உழவர். களமர். கடைஞர். வினைஞர், களைஞர், கம்பளர், தொழுவர். கடைசியர், ஆற்றுக்காலாட்டியர் எனப்பட்டனர். உழவுத் தொழிற் தலையாகிய தொழிலாகவாகவும் உழவர்கள் தலை மக்களாகவும் போற்றப்பட்டனர். மன்னர்களும் வேந்தர்களும் மள்ளர் என்றும் உழவர் என்றும் பெருமைப் படக் குறிப்பிடப்பட்டனர். பிற தொழில்களில் உள்ள சாதனையாளர்களும் உழவர்களாக மேன்மையடைந்ததாகக் கூறப்பட்டனர். அதனாலேயே ஏருழவர், சொல்லெருழவர், வாளெருழவர், வில்லேருழவர் என்ற சொற்றொடர்கள் இலக்கியங்களில் ஆளப்பட்டன. உழவர், வீரர், மன்னர் என்ற மூன்று சொற்களுக்கும் பொருள்படுவதாக மள்ளர் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இம்மூவரும் மள்ளர் குலத்தினராதலால் மள்ளர் என்பதற்கு இலக்கணமாக
அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும்
வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்
– என்று திவாகர நிகண்டும்.
செருமலை வீரரும் திண்ணியோரும்
மருத நில மக்களும் மள்ளர் என்ப
– என்று பிங்கல நிகண்டும் கூறுகின்றன.
நெல் நாகரிகத்தில் பண்பாட்டுத் தலைவர்கள் மற்றும் அவர்களின் சுற்றுத்தார் தமது செல்வ வளத்தாலும் படை வலிமையாலும் பிற நில மக்களுக்கும் தலைவர்களாக (இறைவனாக) இருந்தார்க்ள. இதனைத் தொல்காப்பியம்.
மாயோன் (திருமால்) மேய காடுறை (முல்லை) உலகமும்
சேயோன் (முருகன்) மேய மைவரை (குறிஞ்சி) உலகமும்
வேந்தன் (தேவேந்திரர்) மேய தீம்புனல் (மருதம்) உலகமும்
வருணன் மேய பெருமணல் (நெய்தல்) உலகமும்
தொல்காப்பியம் என திருமால், முருகன், தேவேந்திரர், வருணன் ஆகியோர் முறையே முல்லை, குறிஞ்சி, மருதம் மற்றும் நெய்தல் நிலங்களுக்கு இறைவர்கள் எனக்கூறும். பாலை நில இறைவி கொற்றவை ஆகும்.
இலக்கியங்கள், புராணங்கள் இந்தப் பண்பாட்டுத் தலைவர்களின் உறவு முறைகள் பற்றி தெளிவாகக் குறிப்பிடுகின்றன. சிவன் மள்ளர். கொற்றவை எனப்படுகிற பார்வதி ஆகியோரின் குமரன் சேயோன் என்படுகிற முருகன் ஆகும். தேவேந்திரர் எனப்படுகிற வேந்தனின் மகள் தெய்வயானையின் கணவர் சேயோன் பார்வதியின் சகோதரர் மாயோன் எனப்படுகிற திருமால் மள்ளர் ஆகும். வருணன் மள்ளர் வேந்தன் எனப்படுகிற தேவேந்திரருக்குக் கீழ்பட்ட ஒரு தலைவன்.
மள்ளர் குலத்தினரின், தேவேந்திர குலத்தினரின், தமிழரின் இந்த நெல் நாகரிகம் தான் பல கலைகளையும் பண்பாட்டுக் கூறுகளையும் தோற்றுவித்து ஆதரித்து வளர்த்து மக்களிடையே பரப்பியுள்ளது. மனித குலத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும், வளத்திற்கும் பண்பாட்டு மேலாண்மைக்கும் காரணமாக அமைந்துள்ளது.
மள்ளர் – தேவேந்திர குல வேளாளர் வளமை – நெல் வேளாண்மைக்கு இன்றியமையாத நீரை இம்மக்கள் வேண்ட அவர்களின் இறைவனும் மாரிக் கடவுளுமான தேவேந்திரர் கோடை காலத்திலும் கொடுப்பார் என்கிறார் பெரிய புராண ஆசிரியர் சேக்கிழார் பெருமான்.
பிள்ளை தைவரப் பெருகுபால் சொரி முலைத்தாய்போல்
மள்ளர் வேனிலின் மணல் திடர் பிசைந்து கைவருட
வெள்ள நீரிரு மருங்குகால் வர்p மிதந் தேறிப்
பள்ள நீள் வயல் பருமடை உடைப்பது பாலி.
– பெரியபுராணம், திருக்குறிப்புப் தொண்டர் நாயானார் புராணம், பாடல் 22.
இவர் விளைத்துக் குவித்த வானளாவிய நெற்குன்றுகள் மருத நிலத்தைக் மலைகளடர்ந்த குறிஞ்சி நிலமாகக் காட்டியது என்கிறார் இன்னொரு பாடலில்.
கைவினை மள்ளர் வானங் கரக்க வாக்கிய நெற் குன்றால்
மொய் வரை யுலகம் போலும் மளரிநீர் மருத வைப்பு
– பெரியபுராணம், – திருநாட்டுச் சிறப்பு, பாடல் 25
“குன்றுடைக் குலமள்ளர்” என்னும் கம்பர் தமது இராமாயணத்தில் இவர்கள் போர்க்களத்தில் பகைவர்களின் தலைகளை வெட்டி வீழ்த்தியதை உழவு, தொளி கலக்குதல், நாற்று முடிகளைப் பரவுதல் முதலிய நிகழ்வுகளோடு ஒப்பிட்டு கூறுவார்.
நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிணச் சேற்றின்
உதிர நீர் நிறைந்த காப்பின்
கடும் பகடு படி கிடந்த கரும் பரப்பின்
இன மள்ளர் பரந்த கையில்
கடு ங்கமல மலர் நாறும் முடிபரந்த
பெருங்கிடக்கைப் பரந்த பண்ணை
தடம் பணையின் நறும் பழனம் தழுவியதே
எனப் பொலியும் தகையும் காண்மின்
– கம்பராமாயணம், வானரர் களம் – காண் படலம், செய்யுள் 25. பழனிச் செப்புப்பட்டயம் கி.பி. 1528 (மள்ளர் மலர் அக்டோபர் 1998 பக. 20 – 21)
இம்மக்களின் தோற்றம்; மற்றும் வரலாறு பற்றிக் கூறும். உலக மக்களுக்கு செந்நெல் அமுது படைப்பதற்காக சிவனும் உமையும் மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர்களைப் படைத்ததார்கள். இவர்கள் இப்ப+மியில் செந்நெல் தோற்றுவித்தார்கள் என செப்புப்பட்டயம் பெருமைப்பட கூறும்.


நெல் நாகரிகத்தின், நெல்லின் மக்களாகிய மள்ளர்களும் அவர்களுடைய பண்பாட்டுத் தலைவர்களுமாகிய (வேந்தன்) தேவேந்திரர், முருகன், மள்ளர், திருமால் மள்ளர், சிவன் மள்ளர், பார்வதி, சேர வேந்தர், சோழ வேந்தர், பாண்டிய வேந்தரும் அனைத்துக் தமிழ் இலக்கியங்களிலும் பலவாறு புகழ்ந்து பேசப்படுவார்கள். சங்க காலத் தழிழ் இலக்கியங்கியங்கள் தொடங்கி இன்று வரை இலக்கியங்களில் பேசப்படும் நெல்லின் மக்களாகிய மள்ளர் என்னும் தேவேந்திர குல வேளாளர்களின் பண்பாட்டு மேலாண்மை, தமிர்; வளர்ச்சிக்கும் தமிழர் முன்னேற்றத்திற்கும் அவர்கள் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. முழுமையானது.
சங்க காலம் தொட்டு சென்ற நூற்றாண்டு வரை இயற்றப்பட்ட அனைத்துத் தமிழ் இலக்கியங்களும் இந்த தேவேந்திர மள்ளர்களின் புகழ் பாடும். இலக்கியங்களில் நாட்டு வளம் என்னும் படலம் நெல் நாகரிகத்தின் மேன்மையையும் அம்மக்களின் சிற்பபையும் கூறும். ஏர் மங்கலம், வான் மங்கலம், வாள் (கலப்பையில் உள்ள கொழுவு) மங்கலம் உழத்திப்பாட்டு முதலியன அரசர்களுக்கு இணையாக இம்மக்களின் சிறப்பை உயர்த்திப் பாடும். அரசர்களின் இந்நெல் நாகரிகத்தின் தலைவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இந்நெல் நாகரிகத்தினைத் தோற்றுவித்த மக்களின் தற்போதைய பெயர்களான மள்ளர், பள்ளர், தேவேந்திரர், தேவேந்திர குலத்தார், தேவேந்திர குல வேளாளர், பண்ணாடி, காலாடி, குடும்பன், குடையர், அதிகாரி, குடும்பனார், மூப்பனார், பணிக்கர், வாய்;காரர் (வாய் – நீர்வரும் வாய், மதகு), குளத்து மள்ளர் முதலிய பெயர்களுக்கும் தற்போதும் இம்மக்களுடைய முதன்மைத் தொழில் நஞ்செய் விவசாயம் என்பதுவும் நெல் நாகரிகத்தின் தொன்மையும் தொடர்ச்சியையும் இந்நாகரிகத்தின் பங்களிப்பையும் உணர முடியும்.
தமிழ் மள்ளர்களின் இந்நெல் நாகரிகம் இந்தியா முழுவதிலும் இலங்கை, தாய்லாந்து, வியட்நாம், மியான்மர் (பர்மா), பாகிஸ்தான், சீனா, சப்பான், இந்தோனேசியா, மலேசியா, கம்போடியா, பங்காள தேசம், பிலிப்பைன்ஸ் முதலிய தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதிலும் பரவியுள்ளது, இதன் சிறப்பையும் இன்றியமையாமையையும் உணர்த்துகின்றது

புதன், 25 மார்ச், 2015

ஒரு பொதுவுடமை தோழரின் ஆதங்கம்............... மள்ளர் குலத்தில் பிறந்த பொதுவுடமை போராளி S.G.முருகையன்தேவேந்திரர் புறக்கணிப்பு ஏன்?

ஆதிக்க மனம் படைத்த கயவர்
களால் படுகொலை செய்யப்பட்ட
நாகை தொகுதியின் முன்னாள்
எம்.பி.அய்யா சித்தமல்லி முரு
கையன்தான் இந்தப்படத்திலுள்
ளவர்...

இந்திய கம்யூ.கட்சி சார்ந்த அய்யா ஒரு தூய தமிழர்...
எளியவர்..பண்பாளர்....
கட்சியின் புகழை உலகமெல்லாம்
கொண்டு சேர்த்தவர்..
இந்தியாவின் முதல் ஒடுக்கப்ப
ட்ட இனத்து ஒன்றிய பெருந்தலை
வர்...
கீழத்தஞ்சையில் கட்சியை வளர்
த்தெடுத்தவர்...
1977-ஆம் ஆண்டு பொதுத்தேர்
தலில் போட்டியிட்டு வெற்றி
பெற்றவர்...
உலகிலேயே முதன்முறையாக
32 மைல் நீளத்திற்கு ....
மன்னார்குடி-முத்துப்பேட்டைக்
கு தன் தொகுதி மக்கள் பல்லாயி
ரம் பேரை திரட்டி ஒரே நாளில்
சாலை போட்டவர்...
இந்தச்செயலுக்காக சோவியத்
நாட்டிற்கு பதினைந்து நாள்
சுற்றுலா செல்லும் வாய்ப்பை
பெற்றவர்...
நில உச்சவரம்பு சட்டத்தை
நடைமுறைப்படுத்த பெரும்
சமர் புரிந்தவர்...
சாதி கடந்தவர்...எளியவரிலும்
எளியவர்...
47 - ஆண்டுகள் உயிரோடு இருந்து ரத்தமும் சதையுமாய்
மக்களோடு மக்களாக பணி செய்த தோழரை...தமிழரை...
வாழுங்காலம்வரை குடிசையில்
வாழ்ந்த கோமகனை...
நட்ட நடுநிசியில் பேருந்திலிருந்
து இறங்கி வீட்டிற்கு வரும்போது
வெட்டி வீழ்த்தியது ஒரு கும்பல்..
அன்றைய முதல்வர் M G R
இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு எட்டு மணி நேரத்திற்
கும் மேல் சித்தமல்லியில் இருந்து இறுதிச்சடங்கு முடிந்த
பிறகே கிளம்பினார்....
மக்கள் வெள்ளத்தில் நீந்திச்
சென்று அய்யாவின் உடல் அடக்
கம் செய்யப்பட்டது....
அப்பேர்பட்ட இந்த மாமனிதரின்
மரணத்திற்கு பின்னால்...
அவர் சார்ந்த இந்திய கம்யூ.கட்சி
செய்ததென்ன...
எங்கிருந்தோ வந்த சீனிவாசராவு
க்கு மணிமண்டபம் கட்ட வைத்த
கட்சி....
மண்ணின் மைந்தர் அய்யா முருகையனை கைவிட்டது ஏன்...
N C B H- சார்பாக அய்யா விற்கு
ஒரு சிறு நூல்கூட வெளியிட முடியாமல் உங்களை தடுப்பது
எது...
கார்ப்பரேட் நிறுவனம் போன்று
சென்னையில் நீங்கள் கட்டியிரு
க்கும் பெருங்கட்டடத்தின் ஒரு
தளத்திற்குக்கூட அய்யாவுடைய
பெயரை சூட்டமுடியாதா உங்க
ளால்...
வழக்கை மேல்முறையீட்டுக்கு
கூட கொண்டு செல்ல முடியாத
அளவிற்கு கட்சியை தடுப்பது
எது....
விமானவிபத்தில் மரணமடைந்த
தோழர்.பாலதண்டாயுதம் நினை
வாக ...பாலன் இல்லம் வைத்தி
ருக்கும் நீங்கள்....
படுகொலை செய்யப்பட்ட அய்யா
முருகையன் நினைவாக நீங்கள்
வைத்திருப்பது என்ன...?
பாவம் எங்கள் அய்யா...
எஸ்.ஜி.எம்...
உங்களை இனியும் நம்பாமல்
நாங்கள் களத்தில் இறங்கும்
நேரம் நெருங்குகிறது..

ஒரு பொதுவுடமை தோழரின் ஆதங்கம்............... மள்ளர் குலத்தில் பிறந்த பொதுவுடமை போராளி S.G.முருகையன்தேவேந்திரர் புறக்கணிப்பு ஏன்?



மறைந்த தோழர்.எஸ்.ஜி.முருகையன்
பற்றி நேற்று நான் போட்ட பதிவு
குறித்து இன்று நிறைய்ய விசாரி
ப்புகள்...

ஒரு கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளரான
நீங்கள் எப்படி ஒரு கம்யூனிஸ்ட்
பற்றி எழுத முடியும்...
என ஆரம்பித்து ஆயிரம் கேள்வி
கள் என்னை நோக்கி...
நான் அய்யா.முருகையனுடைய
வாழ்க்கை சரிதத்தை எழுத வேண்
டுமென தீர்மானித்தது அவர்
ஒரு தூய தமிழர் என்பதற்காகத்
தானே தவிர அய்யா ஒரு கம்யூ
னிஸ்ட் என்பதற்காக அல்ல....
கேள்வி கேட்கும் கம்யூனிஸ்ட்
தோழர்களே...
முதலில் நான் வைக்கும் கேள்வி
களுக்கு பதில் சொல்லுங்கள்...
1) ஒருங்கிணைந்த தஞ்சை
மாவட்டத்தின் கட்சி அலுவலகம்
தஞ்சை கீழராஜ வீதியில் இருக்கி
றது...அந்த கட்டிடத்தை வாங்கு
வதற்கு...தன் பங்களிப்பை செய்து
முன்நின்ற அய்யா.முருகையன்
படுகொலை செய்யப்படுகிறார்...
அந்தக்கட்டிடத்திற்கும்..அய்யா
வுக்குமான உறவு உலகறிந்தது...
குறைந்தபட்சம் அந்தக்கட்டிடத்
திற்காவது அய்யா பெயரைச்
சூட்டியிருக்கலாமே....?
2) மன்னார்குடி கீழப்பாலத்தில்
இருந்த அய்யா.முருகையன்
நினைவு படிப்பகம்.....திடீரென
ஜீவா நினைவு படிப்பகமாக
மாறியது ஏன்....?
3)அய்யாவைக் கொன்ற கொலை
யாளி போஸ் சுதந்திரமாக நடமாட....அய்யாவைக் கொலை
செய்ய மூலகாரணமாக விளங்கிய சேக்தாவூதை...
கொலை செய்த அய்யாவின்
தம்பி .ராதாகிருஷ்ணன் ...ஆயுள்
தண்டனை பெற்று கடலூர் மத்ய
சிறையில் வாடுகிறார்...
அய்யா கொலை வழக்கை கட்சி
ஏன் மேல்முறையீடு செய்யவி
ல்லை...
அய்யாவின் உடன்பிறந்த தம்பி
எஸ்.ஜி.ராதாகிருஷ்ணனை கட்சி
ஏன் காப்பாற்றவில்லை...
4) கீழத்தஞ்சையில் ஏதேனும்
ஒரு கட்சிக்கட்டிடத்திற்கு
அய்யா.முருகையன் பெயர்
வைக்கப்பட்டுள்ளதா....
ஏன் வைக்கவில்லை.
அவர் முதல் பெருந்தலைவரா
யிருந்த கோட்டூர் கட்சி அலுவல
கத்துக்குக்கூட அய்யா பெயர்
வைக்கமுடியவில்லையே...
ஏன்...
5) நான்கு ஆண்மக்கள் அய்யாவி
ற்கு...அவர்களில் ஒருவரான
ரமேசை அதிமுக விற்கு ஏன்
கட்சி போகவிட்டது...?
6)கட்சியால் குடும்பத்தில் பலன்
பெற்ற யாராவது இருக்கிறார்களா?
7) அய்யா நினைவைச் சொல்லும்
வகையில் தமிழகத்தில் ஏதேனும்
ஒன்றைச்சொல்லுங்கள் பார்ப்
போம்....?
8) அய்யா நினைவுதினத்தை
தஞ்சை கம்யூ.கட்சி அலுவலகத்
தில் கூட அனுசரிப்பதில்லையே
ஏன்...?
9) உண்மையிலேயே அய்யா
பெயர் புகழை நிலைநிறுத்த
வேண்டுமென்றால் அதற்கு
இத்தனை ஆண்டு தாமதமா...?
10) தோழர்.நல்லகண்ணு அய்யா
அவர்கள்...
தோழர்.எஸ்.ஜி.முருகையனுக்கு
கட்சி செய்யும் இருட்டடிப்பை
ஏற்றுக்கொள்கிறாரா...?
முடிந்தால் பதில் சொல்லுங்கள்..நன்றி...Anwar Balasingam Singam...

திருவாரூர் மாவட்டம்,திருத்துறைப்பூண்டி ஒன்றியம், மணலி தொடக்க வெளாண்மை கூட்டுறவு சங்க நிர்வாக சீர்கேட்டை கண்டித்து புதிய தமிழகம் கட்சி மாபெரும் கண்டன ஆர்பாட்டம்....

திருவாரூர் மாவட்டம்,திருத்துறைப்பூண்டி ஒன்றியம், மணலி தொடக்க வெளாண்மை கூட்டுறவு சங்க நிர்வாக சீர்கேட்டை கண்டித்து புதிய தமிழகம் கட்சி மாபெரும் கண்டன ஆர்பாட்டம்..புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர்...மாண்புமிகு..டாக்டர்.க.கிருஸ்ணசாமி.M.D.M.L.A.,அவர்களின் ஆணைக்கினங்க.....மாபெரும் ஆர்பாட்டம்......கோரிக்கைகள்....40   ஆண்டுகளாக பட்டியல் வகுப்பினரை நியமனம் செய்யாத அதிகாரிகள் மீது தீண்டாமை வன்கொடுமை வழக்கு பதிவு செய்யா கோரியும்..................@தொடக்க கூட்டுறவு வங்கியில் கொடுக்கப்பட்ட விவசாய எந்திரங்களின் வரவு...செலவுகளை ஒப்படைக்க கோரியும்........@விவசாய இடுபொருட்களை சாதி பாரபட்சமின்றி வழங்க கோரியும்....@2010.....1024..ஆண்டு காலங்களில் தனிநபர் கடன் பெற்ற பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் பட்டியலை உடனே வெளியிடகோரியும்.........டீசல்.,பெட்ரோல் வாடகை மற்றும் மாத சம்பளம் தொடர்பான விரிவான அறிக்கை வெளியிட கோரியும்..................@வாடகை கட்டிடத்தில் இயங்கிவரும் அங்காடியை சொந்த கட்டிடத்திற்கு மாற்ற கோரியும்....ஆர்பாட்டம் நடைபெற்றது.....பங்கேற்றவர்கள்......தலைமை.....உ.இளங்கோவன்...புதிய தமிழகம் ஒன்றிய செயலாளர்...,திருத்துறைப்பூண்டி......மாவட்ட செயலாளர் ஆர்.செளந்திரபாண்டியன்....மாவட்ட செயலாளர்...M.தியாகராஜன்....ஒன்றிய செயலாளர்கள்....நீடாமங்களம்...சுரேஷ்கண்ணன்...கோராடாசேரி...சதிஸ்குமார்....கூத்தாநல்லூர் சிவக்குமார்...திருவாரூர்..சீனி..செம்மலர்...மட்றும் மாவட்ட ...ஒன்றிய...நகர பொறுப்பாளர்களும்...போது மக்களும்...விவசாய தொழிலாளர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்...திருவாரூர் மாவட்டம்,திருத்துறைப்பூண்டி ஒன்றியம், மணலி தொடக்க வெளாண்மை கூட்டுறவு சங்க நிர்வாக சீர்கேட்டை கண்டித்து புதிய தமிழகம் கட்சி மாபெரும் கண்டன ஆர்பாட்டம்..புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர்...மாண்புமிகு..டாக்டர்.க.கிருஸ்ணசாமி.M.D.M.L.A.,அவர்களின் ஆணைக்கினங்க.....மாபெரும் ஆர்பாட்டம்......கோரிக்கைகள்....@௪௦ ஆண்டுகளாக பட்டியல் வகுப்பினரை நியமனம் செய்யாத அதிகாரிகள் மீது தீண்டாமை வன்கொடுமை வழக்கு பதிவு செய்யா கோரியும்..................@தொடக்க கூட்டுறவு வங்கியில் கொடுக்கப்பட்ட விவசாய எந்திரங்களின் வரவு...செலவுகளை ஒப்படைக்க கோரியும்........@விவசாய இடுபொருட்களை சாதி பாரபட்சமின்றி வழங்க கோரியும்....@2010.....1024..ஆண்டு காலங்களில் தனிநபர் கடன் பெற்ற பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் பட்டியலை உடனே வெளியிடகோரியும்.........டீசல்.,பெட்ரோல் வாடகை மற்றும் மாத சம்பளம் தொடர்பான விரிவான அறிக்கை வெளியிட கோரியும்..................@வாடகை கட்டிடத்தில் இயங்கிவரும் அங்காடியை சொந்த கட்டிடத்திற்கு மாற்ற கோரியும்....ஆர்பாட்டம் நடைபெற்றது.....பங்கேற்றவர்கள்......தலைமை.....உ.இளங்கோவன்...புதிய தமிழகம் ஒன்றிய செயலாளர்...,திருத்துறைப்பூண்டி......மாவட்ட செயலாளர் ஆர்.செளந்திரபாண்டியன்....மாவட்ட செயலாளர்...M.தியாகராஜன்....ஒன்றிய செயலாளர்கள்....நீடாமங்களம்...சுரேஷ்கண்ணன்...கோராடாசேரி...சதிஸ்குமார்....கூத்தாநல்லூர் சிவக்குமார்...திருவாரூர்..சீனி..செம்மலர்...மட்றும் மாவட்ட ...ஒன்றிய...நகர பொறுப்பாளர்களும்...போது மக்களும்...விவசாய தொழிலாளர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்...

ஞாயிறு, 22 மார்ச், 2015

கிராமப்புற மாணவர்கள் தொழில்படிப்புகளை படிக்க வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி அறிவுரை...

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேலமீனாட்சிபுரம் மற்றும் செவல்குளம் ஆகிய கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து தலா ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் செலவில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு ஓட்டப்பிடாரம் யூனியன் ஆணையாளர் வசந்தா தலைமை தாங்கினார். யூனியன் கூடுதல் ஆணையாளர் உலகநாதன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ.வும், புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவருமான டாக்டர் கிருஷ்ணசாமி கலந்துகொண்டு அங்கன்வாடி மையக்கட்டிடத்தை திறந்து வைத்து பொது மக்களிடம் குறைகளை கேட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:–
மேலமீனாட்சிபுரத்தில் ஒரே ஒரு தெருமட்டும் உள்ளது. இந்த தெருவில் பொது மக்கள் கேட்டுகொண்டதன் பேரில் விரைவில் சிமெண்ட் சாலை போடப்படும். பொது மக்கள் நீங்களே உங்களை சுற்றி உள்ள இடத்தை சுத்தமாக வைத்தால்தான் நோய்கள் வராமல் தடுக்கலாம். கிராமத்தில் உள்ள இளைஞர்கள் பட்டபடிப்பை வேலைக்காக படிக்காமல் விபரமாக படிக்கவேண்டும். தொழில் சார்ந்த படிப்பை படிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக வெள்ளப்பட்டி, அனந்தமாடன்பச்சேரி, கொல்லங்கிணறு ஆகிய கிராமத்தில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநில தொண்டரணி செயலாளர் லட்சுமணபாண்டியன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர்கள் கருப்பசாமி, கண்ணன், மாவட்ட செயலாளர்கள் ராமராஜன், கதிரேசன், புதிய தமிழகம் பாராளுமன்ற பொறுப்பாளர் பட்டவராயன், மாநில செய்தி தொடர்பாளர் பாபு, ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் மனோகரன், குலசேகரநல்லூர் ஊராட்சி செயலாளர் முனியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சனி, 21 மார்ச், 2015

அதிமுக அரசை கண்டித்து சென்னையில் கண்டன பேரணி: கிருஷ்ணசாமி பேட்டி..

நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு அதிமுக ஆதரவு அளித்தது தவறானது என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.



நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு அதிமுக ஆதரவு அளித்தது தவறானது. பாஜக அரசு கொண்டு வந்த திட்டத்தை அதிமுக அரசு ஆதரித்திருப்பது, மோசமான நடவடிக்கை. விவசாயிகளின் உரிமைகளை பாதிக்கும் மோசமான சட்டத்தை ஆதரித்த அதிமுகவை வரலாறு மன்னிக்காது. தமிழகத்தில் சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்டவர்கள் மீதும், தாழ்த்தப்பட்ட மக்கள் மீதும் தாக்குதல் நடத்துவது அதிகரித்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் 100க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதுபோன்ற வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த தவறிய அதிமுக அரசை கண்டித்து, வரும் மே மாதம் 6ஆம் தேதி சென்னையில் கண்டன பேரணி நடத்தப்படும் என்றார்.

சட்டம் ஒழுங்கு அரசிடம் இல்லை. கூலிப்படையினர் கையில் சென்றுவிட்டது.. டாக்டர் க.கிருஷ்ணசாமி ..

சென்னை: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் 105 கவுரவ கொலைகள் நடந்துள்ளன. இதை சட்டமன்றத்தில் நான் சுட்டிக்காட்டியபோது முதல்வர் அதை மறுத்தது கொலையாளிகளுக்கு ஊக்கமாகிவிட்டது. பள்ளிகளில் அண்மைக்காலமாக சாதிய தலைவர்களின் தினங்களை குறிப்பிட்ட பிரிவு மாணவர்கள் கொண்டாடுகின்றனர். அப்போது சிறு மோதல்களில் தொடங்கி கொலை சம்பவங்களில் முடிகிறது. எனவே, அந்த தினங்களை கொண்டாட அனுமதிக்கக் கூடாது என்று பள்ளி மற்றும் கல்லூரிகள் இயக்குனர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளேன்.கிருஷ்ணகிரி கருவானூர் கிராமத்தில் கோயில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர் அரவிந்தனை தாக்கியதோடு மட்டுமல்லாமல் சிறுநீர் பெய்து அவமானப்படுத்தியுள்ளனர். 

தமிழகத்தில் கவுரவ கொலை கலாசாரம் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும். சட்டம் ஒழுங்கு அரசிடம் இல்லை. கூலிப்படையினர் கையில் சென்றுவிட்டது. எனவே, மத்திய அரசு நேரடியாக தலையிட்டு மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம் ஒரு குழுவை அனுப்பி விசாரிக்க வேண்டும். இதையெல்லாம் வலியுறுத்தி சென்னையில் மே 6ம்தேதி பெரிய அளவில் பேரணி நடத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

சனி, 14 மார்ச், 2015

தமிழகத்தில் அகல ரயில்பாதை திட்டங்கள் முடங்கி உள்ளன : கிருஷ்ணசாமி....

மத்திய அரசின் தங்க நாற்கர சாலை திட்டத்தில் கோவை,கரூர் மாவட்டங்களை இணைக்க வேண்டும் என்று இன்று மார்ச் 14-ஆம் தேதி புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது
போத்தனூர்-பொள்ளாச்சி அகல ரயில் பாதை திட்டத்தை விரைந்து செயல்படுத்தத் தேவையான நிதியை வரும் ரயில்வே பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும்.திண்டுக்கல்லிருந்து கோவை, சத்தி வழியாக மைசூர் வரைச்சாலைத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.அதேபோல், கோவை பல்லடம், காங்கயம், வெள்ளகோவில், கரூர் வழியாக திருச்சிக்கு நான்கு வழிச்சாலை அமைக்க வேண்டும்.
தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவை மாவட்டம் மற்றும் கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை தங்க நாற்கர சாலைத்திட்டத்தில் இணைப்பதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர் வேலை வாய்ப்பை பெறுவார்கள். இத்தகைய, கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துக்கட்சிகள், பல்வேறு அமைப்பினர், வணிகர்கள் மற்றும் பொதுமக்களையும் ஒன்று திரட்டி கோவை ரயில் நிலையம் முன்பாக இன்று (மார்ச் 14-ஆம் தேதி) புதிய தமிழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது

வெள்ளி, 13 மார்ச், 2015

கொம்பன்' திரைப்படத்துக்கு திடீர் எதிர்ப்பு: மறுதணிக்கை செய்ய வலியுறுத்தல்...

கொம்பன்' திரைப்படத்துக்கு திடீர் எதிர்ப்பு: மறுதணிக்கை செய்ய வலியுறுத்தல்...திரைப்படங்கள் வெறும் பொழுபோக்கு என்ற நிலையைத் தாண்டி மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் வாழ்வைப் பாதிக்கும் மிகப்பெரும் நிறுவனங்களாக மாறிவிட்டன. அதுவும் குறிப்பாக தமிழ் திரைப்படங்கள் தமிழருடைய கலாச்சார வாழ்வு, பண்பாடுகள், அரசியல் நிலைப்பாட்டையே மாற்றி அமைக்கும் அளவுக்கு உருவெடுத்துவிட்டன. பலருடைய அரசியல் வாழ்க்கைக்கும் சமூக அறிமுகத்துக்கும் திரைப்படங்களையே மிகப்பெரிய கருவிகளாக பயன்படுத்தி வருகிறதை தாங்கள் அறிவீர்கள். சமூக அந்தஸ்து, பண்பாடுகள், அரசியல் வளர்ச்சி ஆகியவற்றைத் தூக்கி நிறுத்திக்கொள்ள திரைப்படங்களே பெரிதும் பயன்படுவதால் அதனால் ஏற்படும் சமூக தாக்கங்கள், இருவேறு குழுக்களிடையே ஏற்படும் மோதலுக்கான வாய்ப்புகள் ஆகியவற்றைத் தடுப்பது குறித்து சமூக அக்கறையோடு விரைவில் வெளிவர உள்ள கொம்பன் திரைப்படம் குறித்து தங்களுடைய கவனத்திற்கு கொண்டுவந்து தீர்வுகாண விரும்புகிறேன்.

ஞானவேல்ராஜன் என்பவரது தயாரிப்பில் முத்தையா என்பவரால் இயக்கப்பட்டு நடிகர் கார்த்திக் மற்றும் லட்சுமிமேனன் நடித்து வெளிவர உள்ள கொம்பன் திரைப்படம் இன்று உள்ள நிலையிலேயே வெளிவருமாயின் தென்தமிழகத்தில் மிகப்பெரிய சாதிமோதலுக்கு வித்திடும். கொம்பன் என்ற பெயரே வன்முறையாளனை போற்றிப் புகழும் ஒரு சொற்றொடர். அது நல்ல பண்பட்ட மனிதர்களைக் குறிக்கும் சொல் அல்ல. இத்திரைப்படத்தில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள ஆப்பநாட்டு கிராமத்தை மையமாக வைத்தே முக்கிய கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆப்பநாடு மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் முக்குலத்தோரில் ஒரு பிரிவினரான மறவர்கள், தங்களை ஆப்பநாட்டு மறவர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்வதுண்டு.

1918-ல் இருந்தே அப்பகுதி மறவர்கள் பிற தமிழ்சாதி மக்களான தேவேந்திரகுல வேளாளர்கள், ஆதி திராவிடர்கள் (பறையர்கள்) மற்றும் நாடார்கள் மீது கடும் கட்டுப்பாடுகளையும் ஒடுக்குமுறைகளையும் ஏவிவிட்டவர்கள் என்பதற்கான ஆதாரங்கள் பல உண்டு. இதற்கு எட்டுக்கட்டளை என்றும் பதினொறு கட்டளை என்றும் பெயருண்டு. இந்தக் கட்டுப்பாடுகளை எதிர்த்துப் போராடி எண்ணற்ற தேவேந்திரகுல வேளாளர்கள் உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள்; எண்ணிலடங்கா உடைமைகளை இழந்திருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக 1957 செப்டம்பர் 11 அன்று தியாகி இம்மானுவேல் சேகரன் படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்னணியிலேயே பெரிய அளவில் முதுகுளத்தூர் கலவரம் வெடித்தது. 1978 முதல் 1980 வரையிலும் தொடர்ச்சியாக ஆப்பநாடு மறவர்களுக்கும் தேவேந்திரகுல வேளாளர்களுக்கும் தொடர் மோதல்கள் ஏற்பட்டன. 1982, 1989, 1993, 1995, 1997, 2001 ஆகிய ஆண்டுகளில் மீண்டும் தொடர் கலவரங்கள் மற்றும் 2011-ல் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 தேவேந்திரகுல வேளாளர்கள் மரணமெய்தினார்கள். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 11-ஆம் நாள் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினம், அக்டோபர் 30-ஆம் நாள் இன்னொரு தலைவரின் நினைவு தினம் ஆகிய நாட்களில் மேற்குறிப்பிட்ட இரு பிரிவினருக்கிடையே மோதல்கள் நிலவி வருவதை நாடே அறியும்.

அப்பகுதியில் சிறு சாதிப்பொறி கூட பெருங்காட்டுத் தீயாக மாறும் என்பது கடந்தகால வரலாறு. கொம்பன் திரைப்படம் முழுக்க முழுக்க இராமநாதபுரம் மற்றும் ஆப்பநாடு மறவர்களை தூக்கிப் பிடிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளதாக தெரிகிறது. கதாநாயகன் மேற்குறிப்பிட்ட சமுதாயத்தை பிரதிபலிப்பவராகவும், அவரின் எதிரிகளாக சித்தரிக்கப்படக்கூடியவர்கள் தேவேந்திரகுல சமூகத்தைச் சார்ந்தவர்கள் என அடையாளப்படுத்தும் விதமாக வில்லனுடைய கை மணிக்கட்டில் சிவப்பு பச்சை கயிறு கட்டப்பட்டிருக்கிறது. மேலும் 'இராமநாதபுரம் மாவட்டத்தில் எங்களை எதிர்க்க எவன்டா இருக்கான்?' என்பது போன்ற வசங்களும் இடம்பெற்றிருப்பது அப்பட்டமான சாதிய தூக்கல் ஆகும். சிவப்பு பச்சை வண்ணம் தென்தமிழகத்தில் திரளாக வாழக்கூடிய தேவேந்திரகுல வேளாளர்களை அடையாளப்படுத்தும் வண்ணம் ஆகும். மேலும் புதிய தமிழகம் கட்சிக் கொடி மேலே சிவப்பும் கீழே பச்சையும் கொண்டதாகும். மேலும் கதாநாயகனின் உறவுகளைக் காண்பிக்கின்ற போது கர்ணகொடூரமான உருவங்களை உருவகப்படுத்தி இருக்கிறார்கள். சுருக்கத்தில் இத்திரைப்படம் எந்தவிதமான கலைநயத்தோடும் பொழுதுபோக்கு அம்சங்களோடும் தயாரிக்கப்படவில்லை. மாறாக வன்முறையின் மூலமாக ஒரு சமுதாயத்திற்கு மேலாண்மைக் கொடுத்து, சாதி ரீதியாக ஒரு குறிப்பிட்ட பிரிவினரை தூக்கியும் பிற பிரிவினரை தாழ்த்தும் விதமாகவும், இந்திய அரசியல் சாசன விதிமுறைகளுக்கு மாறாகவும், திரைப்படங்கள் போன்ற வலிமைவாய்ந்த கலாச்சார நிறுவங்களின் நோக்கத்திற்கு எதிராகவும் இப்படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

இத்திரைப்படத்தின் பெயரும் அதில் அடங்கியுள்ள வசனங்களும் காட்சிகளும் ஏற்கெனவே எதிரும் புதிருமாக உள்ள இரு சமுதாய மக்களிடையே இராமநாதபுரம் மற்றும் தமிழ்நாடெங்கும் மோதல்களைத் தோற்றுவிக்கும். எனவே மொத்தத்தில் கொம்பன் என்ற திரைப்பட பெயரே வீண் வம்பை விலைக்கு வாங்கும்; ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் ஒற்றுமையையும் சீர்குலைக்கும். எனவே ஆட்சேபகரமான கொம்பன் என்ற திரைப்படத்தின் பெயருக்கும், ஒரு குறிப்பிட்ட சாதி தூக்கலுக்கான வசனங்களுக்கும், மித மிஞ்சிய வன்முறைக் காட்சிகளுக்கும், சாதி ரீதியான அடையாளங்களுக்கும் தணிக்கைக் குழு அனுமதி அளிக்கக் கூடாது என வலியுறுத்துகிறேன். ஒருவேளை தணிக்கைக் குழுவின் பார்வையிலிருந்து தப்பியிருப்பின் மறுதணிக்கை செய்யப்படவேண்டும். அதுவரை இப்படத்தை திரையிடக் கூடாது என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

'கொம்பன்' திரைப்படத்துக்கு திடீர் எதிர்ப்பு: மறுதணிக்கை செய்ய வலியுறுத்தல்...

கார்த்தி, லட்சுமி மேனன் நடித்துள்ள 'கொம்பன்' திரைப்படத்தில் சாதிய ரீதியாக சில சர்ச்சைகள் உள்ளதால் இப்படத்தை மறுதணிக்கை செய்யவேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
'குட்டிப்புலி' இயக்குநர் முத்தையாவின் இரண்டாவது படம் 'கொம்பன்'. கார்த்தி, லட்சுமி மேனன் நடித்துள்ள இப்படத்தில் ராஜ்கிரண், கோவை சரளா, கருணாஸ், தம்பி ராமையா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வேல்ராஜ் ஒளிப்பதிவில், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.
சமீபத்தில் 'கொம்பன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. ட்ரெய்லருக்கு இணையத்தில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. மார்ச் 27-ம் தேதி 'கொம்பன்' திரைப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 'கொம்பன்' படத்தை மறு தணிக்கை செய்ய வேண்டும் என்கிறார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி.
'' 'கொம்பன்' திரைப்படத்தில் காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு வன்முறையான வசனங்கள் இருப்பதாக நாங்கள் கேள்விப்படுகிறோம். அந்தப் படம் ஒரு சிலரை உயர்த்தியும், பல்வேறு சிறுபான்மையினரை தாழ்த்தியும் கொடுஞ்சொற்களால் வசனங்கள் இருக்கின்றன.
இந்த படத்துக்கு திரைப்பட தணிக்கை குழு அனுமதி அளித்து இருந்தால் அது தவறானது. அந்தப் படம் திரையிடப்படுவதற்கு முன்பாக ஆய்வு செய்து, மறு தணிக்கை செய்ய வேண்டும்'' என்று கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளா

புதன், 11 மார்ச், 2015

'கொம்பன்' திரைப்படத்துக்கு மறு தணிக்கை தேவை! - டாக்டர் கிருஷ்ணசாமி...

மதுரை: நடிகர் கார்த்தி நடித்த 'கொம்பன்' திரைப்படத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வசனங்கள் இருப்பதால் அதனை மறுதணிக்கை செய்ய வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி தெரிவித்தார். மதுரையில் செவ்வாய்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "விரைவில் திரைக்கு வரவிருக்கும் நடிகர் கார்த்தி - லட்சுமி மேனன் நடித்த 'கொம்பன்' திரைப் படத்தில் குறிப்பிட்ட ஜாதியை உயர்த்தியும், சிறுபான்மை மக்களை தாழ்த்தியும் வசனம் உள்ளதாக அறிகிறோம். அந்த திரைப்படத் தணிக்கை குழு அனுமதியளித்துள்ளது. அது தவறானது. அந்த திரைப்படத்தை மீண்டும் தணிக்கை செய்ய வேண்டும். இது சம்பந்தமாக திரைப்படத் தணிக்கை குழுவினரை சந்திக்க உள்ளோம்," என்றார். கொம்பன் படம் வரும் மார்ச் 27-ம் தேதி திரைக்கு வருகிறது. மேலும் அவர் கூறுகையில், "தமிழகத்தில் சமீபகாலமாக ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்கள் கொடூரமான தாக்குதல் மற்றும் தீண்டாமை கொடுமைகளுக்கு ஆளாகி உயிரிழப்புகள் அதிகமாகிறது. இதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தென் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அனுமதிக்கப்படாத தலைவர்களின் பிறந்த நாள் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. எனவே, குடியரசு விழா மற்றும் சுதந்திர தினத்தை தவிர மாணவர்கள் வேறு விழாக்களைக் கொண்டாட கல்வித் துறை அனுமதிக்க கூடாது. மீறி கொண்டாடும் மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.

பொதிகை ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி

ராஜபாளையத்திற்கு வந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
ஆலங்குளம் சிமெண்டு ஆலையை நவீனப்படுத்த கோரி புதிய தமிழகம் உள்ளிட்ட பிற கட்சிகள் போராடியதை தொடர்ந்து ஆலை இயக்கப்பட்டு வருகிறது. சிமெண்டு ஆலைக்கு ரூ. 195 கோடியை வரும் பட்ஜெட்டில் அரசு ஒதுக்கும் வரை கட்சியினர், போராட்டக்குழுவினர் உட்பட பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
அ.தி.மு.க, தி.மு.க. அரசுகளால் தென் தமிழகத்தில் தொழில் வளத்தை பெருக்குவதற்காக, மதுரை முதல் தூத்துக்குடி வரை உள்ள நான்கு வழிச்சாலையின் இருபுறமும் தொழிற்பூங்காக்கள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு செயல்வடிவத்திற்கு வரவில்லை. வரக்கூடிய நிதிநிலை அறிக்கையில் அரசு அறிவிப்பை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்.
திருமங்கலம் முதல் தென்காசி வரை நான்கு வழிச்சாலை அமைக்க கோரியும், ஆலங்குளம் வழியாக நெல்லை வரை நான்கு வழிச்சாலை அமைக்க கோரியும், விழுப்புரம் முதல் குமரி வரை அகல ரெயில்பாதையும், இரு வழிப்பாதையும், சரக்கு ரெயில்பாதையும் வேண்டும் என்பது தொடர் வேண்டுகோள். தமிழகத்தில் பல்வேறு பகுதியில் அகல ரெயில்பாதை திட்டங்கள் முடங்கி உள்ளன. கோவையிலிருந்து திண்டுக்கல், கோவையிலிருந்து கரூர் வழியாக திருச்சிக்கு 4 வழிச்சாலை அமைக்க வேண்டும். இருவழி இருப்பு பாதைகள் வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டம் நடைபெறும்.
முதற்கட்டமாக வருகிற 14–ந்தேதி கோவையில் ஆர்ப்பாட்டமும், இரண்டாவதாக திருமங்கலத்தில் இருந்து குற்றாலம் வரை நான்கு வழிப்பாதை, குமரி வரையில் இருவழி இரும்பு பாதை கேட்டு வரும் ஏப்ரல் 3வது வாரம் ராஜபாளையத்தை மையமாக வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
செங்கோட்டையில் இருந்து சென்னை வரை செல்லும் பொதிகை ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும். கூடுதலாக பகல் நேர ரெயிலை ரெயில்வே நிர்வாகம் இயக்க வேண்டும் எனவும் புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்படும்.

தமிழகத்தில் அகல ரயில்பாதை திட்டங்கள் முடங்கி உள்ளன : கிருஷ்ணசாமி....


ராஜபாளையம்,மார்ச்.10 (டி.என்.எஸ்) ராஜபாளையத்திற்கு வந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஆலங்குளம் சிமெண்டு ஆலையை நவீனப்படுத்த கோரி புதிய தமிழகம் உள்ளிட்ட பிற கட்சிகள் போராடியதை தொடர்ந்து ஆலை இயக்கப்பட்டு வருகிறது. சிமெண்டு ஆலைக்கு ரூ. 195 கோடியை வரும் பட்ஜெட்டில் அரசு ஒதுக்கும் வரை கட்சியினர், போராட்டக்குழுவினர் உட்பட பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

அ.தி.மு.க, தி.மு.க. அரசுகளால் தென் தமிழகத்தில் தொழில் வளத்தை பெருக்குவதற்காக, மதுரை முதல் தூத்துக்குடி வரை உள்ள நான்கு வழிச்சாலையின் இருபுறமும் தொழிற்பூங்காக்கள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு செயல்வடிவத்திற்கு வரவில்லை. வரக்கூடிய நிதிநிலை அறிக்கையில் அரசு அறிவிப்பை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்.

திருமங்கலம் முதல் தென்காசி வரை நான்கு வழிச்சாலை அமைக்க கோரியும், ஆலங்குளம் வழியாக நெல்லை வரை நான்கு வழிச்சாலை அமைக்க கோரியும், விழுப்புரம் முதல் குமரி வரை அகல ரெயில்பாதையும், இரு வழிப்பாதையும், சரக்கு ரயில்பாதையும் வேண்டும் என்பது தொடர் வேண்டுகோள். தமிழகத்தில் பல்வேறு பகுதியில் அகல ரயில்பாதை  திட்டங்கள் முடங்கி உள்ளன. கோவையிலிருந்து திண்டுக்கல், கோவையிலிருந்து கரூர் வழியாக திருச்சிக்கு 4 வழிச்சாலை அமைக்க வேண்டும். இருவழி இருப்பு பாதைகள் வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டம் நடைபெறும்.

முதற்கட்டமாக வருகிற 14–ந்தேதி கோவையில் ஆர்ப்பாட்டமும், இரண்டாவதாக திருமங்கலத்தில் இருந்து குற்றாலம் வரை நான்கு வழிப்பாதை, குமரி வரையில் இருவழி இரும்பு பாதை கேட்டு வரும் ஏப்ரல் 3வது வாரம் ராஜபாளையத்தை மையமாக வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

செங்கோட்டையில் இருந்து சென்னை வரை செல்லும் பொதிகை ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும். கூடுதலாக பகல் நேர ரயிலை  ரயில்வே நிர்வாகம் இயக்க வேண்டும் எனவும் புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

செவ்வாய், 10 மார்ச், 2015

செண்பகவல்லி அணைக்கட்டை சீரமைக்க வலியுறுத்தி புதிய தமிழகம் ஆர்ப்பாட்டம்..

தமிழகத்தில் கரும்பு விவசாயிகள் போதிய விலை கிடைக்காமல் அவதியடைந்து வருகிறார்கள். அரசு நிர்ணயித்த விலையை கூட முறையாகவோ, சரியான காலத்திலோ கொடுக்காமல் தனியார் சர்க்கரை ஆலைகள் இழுத்தடிக்கிறார்கள். கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.3,500 தமிழக அரசு வழங்க வேண்டும்.
மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள செண்பகவல்லி அணை கடந்த 40 ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்தின் சில பகுதிகள் வறட்சிக்கு ஆளாகியுள்ளன. ஆகவே, அந்த அணையைச் சீரமைக்க மத்தியஅரசு, கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.

செண்பகவல்லி அணைக்கட்டை சீரமைக்க வலியுறுத்தி புதிய தமிழகம் ஆர்ப்பாட்டம்..

திருநெல்வேலி: செண்பகவல்லி அணைக்கட்டின் உடைப்பை சீர்செய்ய வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியினர் வாசுதேவநல்லூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர், மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள செண்பகவல்லி அணைக்கட்டின் ஒரு பகுதி கேரள மாநில வனப்பகுதிக்குள் வருகிறது. அணையில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட உடைப்பினால் தமிழகத்திற்குள் தண்ணீர் வரத்து பாதிப்படைந்துள்ளது. எனவே உடைப்பை சரிசெய்தால் நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் 20 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். இதனை வலியுறுத்தி வாசுதேவநல்லூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். வரும் பட்ஜெட் கூட்டத்தொடரிலும் இதுகுறித்து சட்டசபையில் பேச உள்ளதாக தெரிவித்தார்..

சனி, 7 மார்ச், 2015

தென்மாவட்டங்களில் ஒன்றரை ஆண்டுகளில் 105 கொலைகள்- துணை ராணுவம் கேட்கும் டாக்டர் கிருஷ்ணசாமி! ..

1995-ஆம் ஆண்டு பட்டியலின தேவேந்திரகுல வேளாளர்கள் பெரிதும் வாழும் கொடியங்குளம் கிராமம்  தூத்துக்குடிகாவல்துறையினரால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏறக்குறைய 10 ஆண்டுகள் தென்தமிழகத்தில் தேவேந்திரகுல வேளாளர்களுக்கும் முக்குலத்தோருக்கும் மோதல் நீடித்தது. புதிய தமிழகம் கட்சியின் தொடர் முயற்சியால் 2001-க்குப் பிறகு சமூக நல்லிணக்கம் உருவாக்கப்பட்டது. 2001-லிருந்து 2011 வரையிலும் 10 ஆண்டுகள் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக பெரிய அளவிலான மோதல்களோ, தொடர் சம்பவங்களோ நடைபெறவில்லை. 2011-ஆம் ஆண்டு தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் மரணமெய்தினார்கள். கடந்த 4 ஆண்டுகளில் ஆங்காங்கே நடைபெற்ற சிறிய சம்பவங்கள் கடந்த காலங்களை நினைவுபடுத்தக்கூடிய வகையில் அடுக்கடுக்கான கொலை சம்பவங்களாக மாறிவிட்டன. கடந்த ஒர் அண்டில் மட்டுமே தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் 40-க்கும் மேற்பட்ட தேவேந்திரகுல வேளாளர்கள் மற்றும் பிற பட்டியலின வகுப்பினர் உட்பட 90 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
15, 16 வயது நிரம்பிய பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், படித்த இளைஞர்கள், இளம்பெண்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் கட்சி முன்னோடிகள் என குறிவைத்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் கொடுப்பதையே தங்கள் சாதிக்கு எதிரான சவாலாகக் கருதி கைதேர்ந்த கூலிப்படைகளை ஏவி கொலைசெய்யும் போக்கு அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் புதிய வடிவம் எடுத்துள்ளது. தென்தமிழகத்தில் பட்டியலினப் பிரிவு மக்கள் மட்டுமின்றி வேறெந்த சமுதாயத்திலும் ஒருபடி மேலே வளரக்கூடியவர்களை கொலை செய்து அழித்தொழித்து அதன் மூலம் அனைத்து சமுதாய மக்கள் மத்தியிலும் ஒரு பீதியை உருவாக்கி ஒரு குறிப்பிட்ட பிரிவினருடைய மேலாதிக்கத்தை நிலைநாட்டத் திட்டமிடப்படுகிறது.
இதுவரையிலும் உத்திர பிரதேசம், பீகார் போன்ற வடக்கு மாநிலங்களில் மட்டுமே நிலவிவந்த சாதிமறுப்புத் திருமண தம்பதியினரை உயிரோடு கொளுத்தும் அவலங்கள் தமிழகத்தில் அண்மைக்காலமாக மிகமிக அதிகரித்துவிட்டன. இதுபோன்று கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 105 சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. கெளரவக் கொலைகள் நடைபெறாத நாளே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. தருமபுரி இளவரசன் கொலையில் துவங்கி நேற்றைய தினம் சிவகங்கை தமிழ்செல்வி வரையிலும் எண்ணற்ற கொலைகள் அரங்கேறிவிட்டன. தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமைகள் பற்றியோ, கெளரவக் கொலைகள் குறித்தோ கொடுக்கப்படும் எந்த ஆதாரங்களையும் காவல்துறைக்குப் பொறுப்பேற்றிருக்கக்கூடிய பன்னீர்செல்வம் கண்டுகொள்வதாய் இல்லை. அதைவிட 100 படி மேலே சென்று தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் கெளரவக் கொலைகளும் தமிழகத்தில் நடைபெறவே இல்லையென்று அப்பட்டமான பொய்யை அவர் தெரிவிக்கிறார்.
கண்ணெதிரே நடக்கக்கூடிய கொலைகளைக் கூட அது கொலையே அல்ல என்று காவல்துறை அமைச்சர் வக்காலத்து வாங்குகிற பின்புலத்தில் கொலைகாரக் கும்பல் முழு தைரியத்தோடு தமிழகத்தில் வலம் வருகிறது. அ.இ.அ.தி.மு.க. எப்பொழுதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொழுதெல்லாம் இதுபோன்ற எளிய மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தானாக அதிகரித்துவிடும் என்பதற்கு இந்தமுறை ஆட்சியும் விதிவிலக்காக விளங்கவில்லை. மாறாக
இவ்வாட்சியில் புதிய வரலாற்றைப் படைக்கக்கூடிய அளவிற்கு கெளரவக் கொலைகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் கொலை செய்யப்படுவது மட்டுமல்ல, அந்த மக்கள் சிறிது வளமோடு வாழக்கூடிய பகுதிகளில் அவர்களை சொந்தக்காலில் வளர்ந்துவிடாமல் தடுத்திடும் நோக்கத்தோடு அவர்களுடைய சொத்து சுகங்களை அபகரிக்கும் கொடுமைகளும் அதிகரித்துவிட்டன. கொடியங்குளம் சம்பவத்தில் கூட அது ஒரு சாதி மோதல் என்பது ஒருபக்கம் இருப்பினும் சிறிது வசதியோடு வாழ்கிறார்கள்; அந்த வசதிகளை நிர்மூலமாக்க வேண்டுமென்று தான் அன்றைய காவல்துறையைப் பயன்படுத்தி அந்த கிராம மக்களுடைய சொத்துகளும் சுகங்களும் சூறையாடப்பட்டன. கடந்த 10 தினங்களுக்கு முன்பு திருவைகுண்டம் பிச்சனார்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த புதிய தமிழகம் கட்சியின் நகரப் பொறுப்பாளராக செயல்பட்டுவந்த பாஸ்கர் என்ற இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவர் மீது எந்தவித கிரிமினல் வழக்குகளும் இல்லை; யாரோடும் முன்விரோதம் ஏதும் இல்லை. ஆனால் அந்தப் பகுதியில் சிறிது நிலபுலன்களோடு வாழ்ந்துவந்த தங்களுடைய சொந்தங்களுக்கு பக்கபலமாக விளங்கியவர். அந்த கிராமத்தில் இன்றுவரையிலும் நடக்கக்கூடிய விதவிதமான தீண்டாமைக் கொடுமைகளை சொல்லி மாளாது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட 40 வீட்டுமனைகளில் இப்பொழுது 85 குடும்பங்கள் நெருக்கடியிலேயே வாழ்கிறார்கள். பேரூராட்சியின் அங்கமாக இருக்கக்கூடிய அந்தப் பகுதிக்கு எந்தவிதமான சாலைவசதிகளும் இல்லை; தெருவிளக்குகள் இல்லை; அங்கன்வாடி இல்லை; சமுதாயநலக்கூடம் இல்லை. பேரூராட்சியும் அவர்களுக்கு நியாயமாக செய்யவேண்டிய வசதிகள் எதையும் செய்யவில்லை. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கக்கூடியவர்கள் அல்லது அப்பகுதியின் அமைச்சராக இருக்கக்கூடியவரும் ஏதும் செய்யவில்லை.
அருகாமையில் இருக்கக்கூடிய அங்கன்வாடிகளுக்கு பிள்ளைகள் சென்றால் அந்த அங்கன்வாடி ஆசிரியையே சாதியக் கண்ணோட்டதோடு அக்குழந்தைகளை அடித்து விரட்டிடும் கொடுமை; அங்குள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரியில் கூட பட்டியலின வகுப்பினர் பிள்ளைகள் எவரும் படிக்க முடியாத அளவிற்கு அன்றாடம் அச்சுறுத்தல் தொல்லைகள்; பெண்கள் அந்தப் பகுதியைத் தாண்டி வேறுபகுதிக்கு வேலைக்குச் சென்றுவிட்டு தங்கள் குடியிருப்புகளுக்கு வரக்கூடிய வழியில் ஒரு குறிப்பிட்ட பிரிவு இளைஞர்களால் படக்கூடிய அவமானங்களுக்கு எல்லையே இல்லை. அப்பகுதியில் திருவாடுதுறை ஆதீனத்தின் கீழ் இயங்கும் குமரகுரு பள்ளி மற்றும் கல்லூரியில் தேவர் ஜெயந்தியன்று ஒரு குறிப்பிட்ட பிரிவு மாணவர்கள் அனைத்து சமுதாய மாணவர்களுக்கும் வலுக்கட்டாயப்படுத்தி இனிப்பு கொடுத்து கொண்டாடுவது; அதை கல்வி நிர்வாகமும் கண்டுகொள்ளாமல் அதற்கு அனுமதியளித்து வருகிறது. பள்ளி செல்ல முடியாது, கல்லூரி செல்ல முடியாது, வெளியிடங்களுக்கு வேலைக்குச் செல்லமுடியாது.
தங்களிடத்தில் இருக்கக்கூடிய அரை ஏக்கர், ஒரு ஏக்கர் நிலம் மற்றும் குத்தகைக்கு எடுத்த நிலங்களிலே விளையும் எந்தப் பயிர்களுக்கும் பாதுகாப்பும் இல்லை. நன்கு விளைந்த நெல் அல்லது உளுந்து அல்லது பயிர்வகைகள் எதுவானாலும் அய்யாமார்கள்(தேவர்கள்) மாடுகள் திண்றது போக மீதம் இருந்தால் தான் இம்மக்கள் அறுவடை செய்து கொள்ளலாம். ஒரு ஏக்கருக்கு 10,000 செலவழித்து வளர்ந்த நெற்பயிராயிற்றே… அறுவடை செய்யும் தருவாயில் இருக்கக்கூடிய பயிராயிற்றே… உளுந்தாயிற்றே… அதில் மாடுகளை விட்டு அழியாட்டம் செய்யலாமா? என்று தட்டிக் கேட்டால் அடி உதை. புகார் கொடுத்தால் புகார் கொடுத்தவர் மீதே வழக்கு; தங்களது அழியாட்டங்களை தட்டிக்கேட்க தலைநிமிர்ந்தால் கூலிப்படைவைத்து வெட்டிக் கொல்வது, இதுதான் திருவைகுண்டம் சுற்று வட்டாரத்தில் நடக்கும் சமூகநீதி. தனக்காக மட்டுமல்லாமல் ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்காகவும் இதுபோன்ற அநியாயங்களை எதிர்த்தும் குரல் கொடுத்ததற்காகத்தான் புதிய தமிழகம் கட்சியின் பொறுப்பாளர் பாஸ்கர் கூலிப்படையினரால் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
நாட்டுக்குள் நாடு என அரசியல் சாசனத்தை துச்சமென மதிக்காத சாதிசாசனத்தை உருவாக்க தொடர்ந்து ஒரு கும்பல் தென்தமிழகத்தில் முயற்சித்து வருகிறது. இதற்கு பெரும்பாலும் இரையானவர்கள் பட்டியலின தேவேந்திரகுல வேளாளர்கள் என்றாலும் பிற சமுதாயத்தினரும் தப்பியதில்லை. 2002-ஆம் ஆண்டு தேவகோட்டையில் உடையார் சமுதாயத்தைச் சேர்ந்த நல்லமுறையில் வளர்ந்து வந்த ரூசோ என்ற தி.மு.க. இளைஞரணி பொறுப்பாளர் படுகொலைக்கு ஆளானார். திருவைகுண்டம் அருகே நடந்துவரும் மணல் கொள்ளையை தடுக்க தன்னலம் கருதாமல் பாடுபட்ட ஆசிரியர் தேவசகாயம் நாடார் கொடூரமாகக் கொல்லப்பட்டார். அதேபோன்று சுயம்புலிங்க நாடார் என்பவர் கழுத்துறுத்து கொலை செய்யப்பட்டார். வள்ளியூரில் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த் டேவிட் ராஜா என்ற கல்லூரி மாணவர் மற்றும் திருநெல்வேலியில் யாதவ சமுதாயத்தைச் சேர்ந்த பொன்னையா என்ற இளைஞர் ஆகியோர் கொலைசெய்யப்பட்டனர்.
தென்தமிழகத்தில் நடக்கக்கூடிய எல்லா சம்பவங்களிலும் ஒர் அம்சம் நிரந்தரமாக நிலையோடிருக்கிறது. கொலை செய்வதன் மூலம் கொலைக்குள்ளாகும் சமூகங்களின் மத்தியில் ஓர் அச்சத்தை உருவாக்குவது; அதன்மூலம் தங்களுக்கு எந்தவிதமான எதிர்ப்பும் எந்தப்பகுதியில் இருந்தும் வராதவாறு பார்த்துக் கொள்வது; இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு எல்லாவிதமான சமூக விரோதச் செயல்களிலும் ஈடுபடுவது; அச்சம் காரணமாக விலைமதிப்பற்ற தங்கள் வீடுகள், நிலங்கள், வணிக நிறுவனங்கள் உட்பட பல சொத்துக்களை கிடைத்த விலைக்கு விற்றுவிட்டு எப்படியாவது அந்த இடத்தைக் காலி செய்துவிட்டு போனால் போதும் என்ற மனநிலையை உருவாக்கி, அதன்மூலம் அச்சொத்துகளைக் கவர்வது; கேட்ட விலைக்கு நிலத்தைக் கொடுக்கவில்லையெனில் 500, 1000 எண்ணிக்கையிலான மாடுகளை விட்டு விவசாய நிலங்களை அழிப்பது; சிறு மற்றும் குறு விவசாயிகளுடைய நிலங்களை அந்த ஒரு குறிப்பிட்ட பிரிவினரே நிலவுடைமையாளரின் அனுமதி இல்லாமலேயே உழுவது மற்றும் பணத்தை வசூலிப்பது போன்ற எண்ணற்ற அக்கிரமங்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் காவல்துறை மற்றும் அரசியல் பின்புலத்தோடு அரங்கேறி வருகின்றன.
கூலிப்படையினருக்கு அரசு மீதும் காவல்துறை மீதுமிருந்த கொஞ்சநஞ்ச பயமும் கடந்த 6 மாத காலமாக முற்றிலும் போய்விட்டது.
தேசம், தேசியம், தமிழ், திராவிடம் பேசும் எவரும் பூர்வீக தமிழ்க்குடி மக்களுக்கு எதிராக நடைபெறும் கொடுங்கோண்மைகளை எதிர்த்து குரல் கொடுக்கத் தயாராக இல்லை. தென்தமிழகம் ஆசியக் கொடுங்கோண்மையின் (Asian Despotism) கருவூலமாக மாறிவருகிறது. பெரும்பாலான ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் மண்ணுரிமை மறுக்கப்படுகிறது; மனித உரிமை காலில்போட்டு மிதிக்கப்படுகிறது; வாழ்வுரிமை கேள்விக் குறியாகிறது.

தென்மாவட்டங்களில் ஒன்றரை ஆண்டுகளில் 105 கொலைகள்- துணை ராணுவம் கேட்கும் டாக்டர் கிருஷ்ணசாமி! ..

சென்னை: தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 105 படுகொலைகள் நடந்துள்ள காரணத்தினால் பாதுகாப்புக்கு மத்திய அரசிடம் துணை ராணுவத்தை கோர முடிவு செய்யப்பட்டுள்ளது என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தென் மாவட்டங்களில் 105 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில்மட்டும் ஒரே இனத்தைச் சேர்ந்த 87 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட சமூகத்தினர் கூலி ஆட்களை ஏவி வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபடுகின்றனர். 105 படுகொலைகளில் கருணை கொலைகளும் அடங்கும். அரசும், காவல்துறையும் படுகொலைகளை தடுக்க தவறிவிட்டன. தென் மாவட்டங்களில் அமைதி திரும்ப தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தென் மாவட்டங்களில் பாதுகாப்புக்கு மத்திய அரசிடம் துணை ராணுவத்தை கோர முடிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை திரட்டி டெல்லியில் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

ஒன்றரை ஆண்டில் 105 பேர் படுகொலை; பாதுகாப்புக்கு மத்திய அரசிடம் உதவி கேட்க முடிவு; கிருஷ்ணசாமி..


கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தென் மாவட்டங்களில் 105 படுகொலை நடந்துள்ளது. தென் மாவட்ட பாதுகாப்புக்கு மத்திய அரசிடம் துணை ராணுவத்தை கோர முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி சனிக்கிழமை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், 

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தென் மாவட்டங்களில் 105 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில்மட்டும் ஒரே இனத்தைச் சேர்ந்த 87 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட சமூகத்தினர் கூலி ஆட்களை ஏவி வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபடுகின்றனர். 105 படுகொலைகளில் கருணை கொலைகளும் அடங்கும். அரசும், காவல்துறையும் படுகொலைகளை தடுக்க தவறிவிட்டன. தென் மாவட்ங்களில் அமைதி திரும்ப தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தென் மாவட்டங்களில் பாதுகாப்புக்கு மத்திய அரசிடம் துணை ராணுவத்தை கோர முடிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை திரட்டி டெல்லியில் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

செவ்வாய், 3 மார்ச், 2015

தென்தமிழகம் முழுவதும் நேர்மையான காவல் துறை அதிகாரிகளை நியமிக்க வேண்டும் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி..

தூத்துக்குடி, : தென்தமிழகம் முழுவதும் நேர்மை யான காவல்துறை அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தூத்துக்குடியில் அவர் அளித்த பேட்டி: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 6 மாதங்களில் 87 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஒரே ஆண்டில் மட்டும் 102 கவுரவ படுகொலைகள் நடந்துள்ளன. தென்மாவட்டங்களில் கடந்த 2013ம் ஆண்டிலிருந்து நடந்த கொலை களின் பிரேத பரிசோதனை அறிக்கைகள் அடிப்படையில் பார்க்கும்போது கொல்லப்பட்ட அனை வருமே ஒரே மாதிரியாக கைதேர்ந்த கொலையாளி களால் கழுத்தின் பின்பகுதியில் வெட்டப்பட்டு இறந்துள்ளனர். 7 கொலை சம்பவங்களில் இதுமாதிரியான நிலையே காணப்பட்டுள்ளது. இதன் பின்புலத்தில் திட்டமிட்டு செயல்படும் கும்பல் உள்ளது. இந்த கொலைகார கூலிப்படையின் பின்னணியில் மணல் கடத்தல் கும்பல், கந்து வட்டிக்காரர்கள், கான்ட்ராக்டர்கள் பலர் உள்ளனர். இங்கிருந்து தான் அவர்களுக்கு பணம் செல்கிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இதுபோன்று பல படுகொலை சம்பவங்களில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதுபோன்ற சம்பவங்களில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். இந்த சம்பவங்கள் குறித்த அரசின் பார்வை தவறாக உள்ளது.
ஸ்ரீவைகுண்டம் பாஸ் கரன் கொலை சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணை நேர்மையாக நடந்து வரு கிறது. இதில் நீதி கிடக்கும் என நம்புகிறோம். இல்லாத பட்சத்தில் சிபிஐ உதவியை நாடுவோம். தென்தமிழகம் முழுவதும் நேர்மை யான காவல்துறை அதிகாரிகளை நியமிக்க வேண்டும். இவ் வாறு அவர் கூறினார்.
மாவட்ட செயலாளர் கருப்பசாமி உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

திங்கள், 2 மார்ச், 2015

தொடர் கொலைகளுக்கு காரணமான மணல் கொள்ளை தடுக்க தனி குழு.. டாக்டர் கிருஷ்ணசாமி ..




ஸ்ரீவைகுண்டம்: தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் புதிய தமிழகம் கட்சி நகர செயலாளர் பாஸ்கரன் கடந்த பிப். 22ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அவரது பெற்றோருக்கு புதிய தமிழக கட்சி தலைவர்  கிருஷ்ணசாமி எம்எல்ஏ நேற்று ஆறுதல் கூறினார்.  பின்னர், கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:  பாஸ்கரன் படு கொலையை தொடர்ந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தால் நீதிமன்றத் தின் அனுமதி பெற்று இங்கு வந்துள்ளேன். ஸ்ரீவைகுண்டம் பகுதியில் சைக்கிள், வேன் மற்றும் டிராக்டர்களில் மணல் கொள்ளை நடக்கிறது. இங்கு மணல் கொள்ளையர்களால்தான் அதிக கொலைகள் நடக்கின்றன. இந்த கொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களை தனி புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு ஆதரவாக போலீசார் செயல்படுகின்றனர். நேர்மையான போலீசாரை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்..