செவ்வாய், 14 ஏப்ரல், 2015

ஆந்திர சம்பவம்: நெல்லையில் ஆர்ப்பாட்டடம்: ஆந்திர வங்கி முற்றுகை..

..ஆந்திர மாநிலத்தில் தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து திருநெல்வேலியில் திங்கள்கிழமை புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆந்திர வங்கியை முற்றுகையிட்ட இந்து மகாசபா அமைப்பினர் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திர மாநிலத்தில் தமிழகத்தை சேர்ந்த 20 தொழிலாளர்களை சுட்டுக் கொன்ற சம்பவத்தை கண்டித்து பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திங்கள்கிழமை திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மத்திய மாவட்டச் செயலர் பா. ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்டச் செயலர் க. நடராஜன், வடக்கு மாவட்டச் செயலர் எஸ். இன்பராஜ், தெற்கு மாவட்டச் செயலர் எம். சுரேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கட்சியின், மேற்கு மாவட்டச் செயலர் ஏ. ஜெயக்குமார், ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட இணைச் செயலர் எட்வர்ட்ராஜ், முன்னாள் மாவட்டச் செயலர் எம்.எஸ். செல்லப்பா, மத்திய மாவட்ட இளைஞரணி செயலர் கார்த்திக் உள்பட 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
வங்கி முற்றுகை: இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அகில இந்திய இந்து மகா சபா அமைப்பினர் திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ஆந்திர வங்கி முன்பு திரண்டுமுற்றுகையிட்டனர். ஆந்திர மாநில அரசுக்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பினர்.
இதில் பங்கேற்ற திருநெல்வேலி மாவட்டச் செயலர் ஜி. இசக்கிமுத்து, மாவட்டத் தலைவர் எஸ்.எம். கணேசபாண்டியன், மாநில துணைச் செயலர் இ. ராமசாமி, மாநகர பொதுச்செயலர் ஜி. இசக்கிபாண்டி, மாவட்ட துணைச் செயலர் எஸ். மாரியப்பன் உள்ளிட்ட 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக