வெள்ளி, 1 மே, 2015

புதிய தமிழகம் கட்சி ..காலச்சுவடுகள் 1998..

பிப்ரவரி 12, உழுபவருக்கே நிலம் : புதிய தமிழகம் தேர்தல் அறிக்கை
வெளியீடு.
இசுலாமியருக்கு எதிரான ‘பொடா’ சட்டத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும்
100 கூட்டங்கள் - 56 ஆவது கூட்ட முடிவில் பொடா சட்டம் உடைப்பு.
நாடாளுமன்ற தேர்தலில் 15 தொகுதிகளில் போட்டி - 6 தொகுதிகளில் ஒரு
லட்சம் அளவில் வாக்கு பெற்று முத்திரை பதிப்பு.
ஏப்ரல் 04, கோவை குண்டு வெடிப்பு - தீவிரவாதத்தைக் காரணம் காட்டி தி.மு.க ஆட்சியைக் கலைக்கக்கூடாது - சென்னை செய்தியாளர் கூட்டத்தில் தலைவர் அறிக்கை.
ஏப்ரல் 09, பால்விலையை உயர்த்தும் முயற்சி - ரத்து செய்ய கோரிக்கை.
ஏப்ரல் 18, அனைத்து வசதிகளுடன் கூடிய வீரன் சுந்தரலிங்கம் கிராமம் - முதல்வர் கலைஞர் தலைமையில் விழா - தலைவர் பங்கேற்பு.
ஏப்ரல் 25, தமிழக அரசின் இடஒதுக்கீடு ஆய்வு குழுவுக்கு அரசு அதிகாரிகளின் போதிய ஒத்துழைப்பு இல்லை - தலைவர் கண்டனம்.
ஏப்ரல் 25, வௌ;ளை அறிக்கைக் கோரி மே 15 ம் தேதி கோட்டையை நோக்கி பேரணி - தலைவர் அறிவி;ப்பு.
மே சென்னை உயர்நீதி மன்றத்தில் கண்டதேவி தேர் இழுப்பு சிக்கல் தலைவர் மனு (W.P.N 9235)
மே 03, தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் இட ஒதுக்கீடு - சிறப்பு ஆட்சிக்குழு -குழப்பம் விளைவிக்க நிர்வாகம் முயற்சி - ஆளுநருக்கு தலைவர் மனு.
மே 04, ஸ்ரீவைகுண்டம் ஆழ்வார் கட்குலம் - 10 தாழ்த்தப்பட்டவர்கள் படுகொலை - மே 2 செல்ல முயற்சி - மாவட்ட நிர்வாகம் தடை - தமிழக முதல்வருக்கு 04.05.1998 அன்று தலைவர் கோரிக்கை.
மே 15, தலைவர் தலைமையில் சென்னையில் பேரணி - தமிழக முதல்வரிடம் இடஒதுக்கீடு உரிமை மனு அளிப்பு.
மே 16, அரசு ஊழியர் ஓய்வு வயது வரம்பு 58 லிருந்து 60 ஆக உயர்த்த திட்டம் - தலைவர் கடும் எதிர்ப்பு.
ஜுன் 10, நகர்புற உச்சவரம்பு சட்டத்தை நீக்கக் கோரும் மசோதாவை எதிர்த்து தலைவர் கருத்து - பம்பாயில் ஷப்னா ஆஸ்மி உள்ளிட்ட 64 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் முறையீடு - ராம்ஜெத்மலானியின் கருத்து பாராளுமன்ற ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது - தலைவர் அறிக்கை.
ஜுன் 11, அரசு கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு முழுமையாகப் பின்பற்றப்படவில்லை - தலைவர் கோரிக்கை.
ஜுன் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் ஆலயத் தேர்திருவிழா - தாழ்த்தப்பட்டோருக்கு அனுமதி மறுப்பு - மோதல் உருவாகும் சூழல் - தேரோட்டம் ரத்து - தாழ்த்தப்பட்ட மக்களை வழிபாட்டில் பங்கேற்க சென்னை உயர்நீதி மன்றத்தில் தலைவர் வழக்கு - நீதிமன்றம் தேர்த் திருவிழாவை நடத்த இடைக்கால உத்தரவு - நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக்கோரி கண்டதேவியிலிருந்து தேவகோட்டை வரை பேரணி - தலைவர் அறிவிப்பு - 144 தடை உத்தரவு - தடையை மீற முயற்சி.
ஜுன் 24, சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு - அனைத்து இந்துக்களும் வடம் பிடிக்கலாம் (A.P.NO. 15ஃ99ஃ72) - தேர்வடம் இழுக்க தாழ்த்தப்பட்டவர்கள் விருப்பம் - ஆதிக்க சாதிகள் மறுப்பு - 144 தடையுத்தரவு.
ஜுன் 27, சுயநிதிக் கல்லூரிகளுக்கு எதிரான அனைத்து சமூக, கட்சிகளின் கூட்டம் - தீர்மானங்கள் நிறைவேற்றம் - அரசு ஆணை எண் 253 ஐ நிறைவேற்ற மறுக்கும் சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளை அரசு ஏற்று நடத்த ஆளுநரிடம் புதிய தமிழகம் மனு.
ஜுலை 7 - தேவக்கோட்டையில் ‘சொர்ணமூர்த்தி ஈசுவரர் கோவில் - ஒரு சாதி உடமை - ‘ஒரு சாதியினர் மட்டும் வழிபடும் உரிமை’ என்னும் மூர்க்கத்தனத்திற்கு எதிராக உயர்நீதி மன்ற தீர்ப்பு பெற்றமை - உயர்நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த ஆதிக்கசாதிகள் எதிர்ப்பு.
ஜுலை 09, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு அறப்போர் - சென்னையில் பேரணி.
ஜுலை 15, தூத்துக்குடி மாவட்டம் மேலப்பூவாணி கணேசன் காவல் நிலையத்தில் மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்த தமிழக முதல்வருக்கு தலைவர் கோரிக்கை.
ஜுலை 17 அஞ்சல் ஊழியர்களின் போராட்டம் - அஞ்சல் ஊழியர்களுக்குப் பதிலாக இராணுவம் - என்.ஜி.ஓ. மூலம் அஞ்சல் பணியைச் செய்ய அரசு முயற்சி - இராணுவ அமைச்சரும் முன்னாள் தொழிற்சங்கத் தலைவருமான ஜார்ஜ்பெர்னாட்டிஸின் செயல் வருத்தமளிக்கிறது - ஊழியர் போராட்டத்தை உடைக்க இராணுவ அமைச்சர் துணைபோவதா - தலைவர் கேள்வி?
ஜுலை 25, காவிரி நதிநீர் உரிமைக்கான குரல் - நடுவர் மன்ற தீர்ப்பிற்கு தலைவர் எதிர்ப்பு.
ஆகஸ்டு 01, சுயநிதிக் கல்லூரி எதிர்ப்புப் பேரணி - சென்னையில் தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம் - ஆளுநரிடம் மனு.
ஆகஸ்டு 02, தமிழகத்தின் தென்மாவட்ட கிராமப்புறப் பகுதிகளில் நாடுமுறை (State Within State) வழக்கில் உள்ளதையும், இந்த சாதிய நாடுக்கட்டுமானமுறை தேவக்கோட்டைத் தாலுக்காவில் உள்ள முறையை அம்பலப்படுத்தியும் சமூக மோதல்களுக்கும், அடித்தளமக்களின் வழிபாட்டு உரிமை, வாழ்வியல் உரிமைப்பறிப்பு செயல்களுக்கும் உள்ள தொடர்பை விளக்கியும் - இந்திய மக்களாட்சி மாண்புகளை மரணக்குழிக்கு அனுப்பும் நாடு முறையை ஒழிக்கக் கோரிதேசிய மனித உரிமை ஆணையத் தலைவர் நீதியரசர் வெங்கடாசலய்யாவுக்கு தலைவர் அறிக்கையைத் தாக்கல் செய்தார். இந்த அறிக்கையே Frontline' இதழில் State Within State என்ற சிறப்புக் கட்டுரை வெளிவர காரணமாக அமைந்தது.
ஆகஸ்டு 17, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் கொத்தடிமை முறை - தமிழக முதல்வர் கலைஞரை நேரில் சந்தித்தார் தலைவர் - மனு அளிப்பு- இரவு 8 மணி முதல் பகல் 12 மணி வரை
ஆகஸ்டு 20, மாஞ்சோலை தேயிலை தொழிலாளர்களுக்கான போராட்டம் -
பிறமலைத்தோட்டங்களிலும் தொழிலாளர் போராட்டம் தொடக்கம் - மாஞ்சோலை - நெல்லை 75 கி.மீ நடைபயணம் - தலைவர் ஆயிரக்கணக்காத் தொண்டர்கள் பங்கேற்பு.
ஆகஸ்ட் 28, தமிழக அரசுக் கல்லூரி ஆசிரியர் பின்னடைவுப் பணியிடங்களை நிரப்ப தமிழக கல்வி அமைச்சர் க.அன்பழகன் மறுப்பு - ஆகஸ்ட் 15 முதல் கல்வி அமைச்சர் இல்லம் தொடர் முற்றுகை - குழு உறுப்பினர் கிருஸ்த்துதாஸ்காந்தி மாற்றம் - தமிழக அரசின் மூன்று ஆதிதிராவிடர் நலக்குழுக்களிலிருந்து தலைவர் விலகல்.
செப்டம்பர் 11, தியாகதீபம் இம்மானுவேலர் நினைவுநாள் - தலைவர் அஞ்சலி.
செப்டம்பர் 11, 12, புதிய தமிழகம் முதல் மாநில மாநாடு - இராமநாதபுரம்
அக்டோபர் 02 - கோவை சோமனூர், பல்லடம், திருப்பூர் தேனீர் கடைகளில் நிலவிய இரட்டைக் குவளை ஒழிப்பு போராட்டம் - தமிழ்நாடு அரசு விழித்துக் கொண்டு கசப்பான அறிக்கை வெளியிட்டது - தமிழகத்தில் இரண்டாயிரம் கிராமங்களில் இரட்டைக் குவளை இருப்பதாக ஒப்புதல் - தமிழகத்தில் இரட்டைக் குவளை இருந்தது அம்பலம் - அதை முறியடிக்க தலைவர் தலைமையில் கடும் போராட்டம் - இரட்டைக் குவளை முறை ஒழிந்தது
அக்டோபர் 05, கோவை சூலூரில் தகராறு - 19 தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பொய் வழக்கு - தலைவர் தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்.
அக்டோபர் 07, தென்மாவட்ட சாதிக் கலவரங்கள் - நவம்பரில் நடைபெற உள்ள கூட்டத்தில் கலந்து கொள்ள தலைவர் நிபந்தனை.
அக்டோபர் 11, சாதிக் கலவரத்தை விசாரிக்க மதுரையில் தன்அமர்வு நீதிமன்றம்.
அக்டோபர் 20 தமிழ்ப் பல்கலைக் கழகத்துக்கு வழங்கும் 1.13 கோடி நிதியை
7.5 கோடியாக உயர்த்தி வழங்க 27.10.1980 முரசொலி உலகத் தமிழ் மாநாடு தொடர்பான கலைஞர் கடித்ததை மேற்கோள்காட்டி தமிழக முதல்வருக்கு தலைவர் கோரிக்கை.
அக்டோபர் 25, 26, அனைத்துக் கட்சிக் கூட்டம் - மாஞ்சோலை அந்தோணிமுத்து என்ற ஊழியர் படுகொலை - தலைவர் மீது பொய் வழக்கு
நவம்பர் 17, தமிழக தாழ்த்தப்பட்டவர்கள் நிலை - சர்வதேச ஊடகங்களில் தென்தமிழகத்தில் சாதிய சிக்கல்கள் அம்பலம்.
நவம்பர் 21, அரசியல் சட்டத்தை திருத்துவதாக பாரதீய ஜனதா அரசு
அறிவித்ததற்கு எதிர்ப்பு.
டிசம்பர் 15, பெரும்பான்மையான மலைத் தோட்டங்களில் தோட்டத் தொழிலாளர்களுக்கு அநீதி - இந்து நாளிதழ் படப்பிடிப்பு.
டிசம்பர் 21, சாத்தன்குளம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிராக அனைத்துக் கட்சிகள் ஒன்று திரள வேண்டும் - தாழ்த்தப்பட்ட மக்கள் குளித்து விட்டுத்தான் கோயிலுக்குள் வரவேண்டும் என்று தீண்டாமை உணர்வுடன் பேசியதைக் கண்டித்து ஜனவரி 26 இல் காஞ்சிமடத்துக்கு எதிராக - சங்கராச்சாரியருக்கு எதிராக போராட்டம் - தலைவர் அறிவிப்பு.
டிசம்பர் 30,
1998 நாடளுமன்ற தேர்தல் 17 பாராளுமன்ற தொகுதிகளில் புதிய தமிழகம் போட்டி - அருப்புக்கோட்டை சட்டமன்றத்திலும் போட்டி - மாட்டுவண்டி சின்னம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக