வெள்ளி, 1 மே, 2015

புதிய தமிழகம் கட்சி ..காலச்சுவடுகள் 1999..

ஜனவரி06, மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை
உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன - தேசிய மனித உரிமை ஆணையத்தின் டிரைக்டர் ஜெனரல் டி.ஆர்.கார்த்திகேயன் ஒப்புதல் - முத்தரப்பு பேச்சு - மாநிலம் தழுவிய பந்த் நிறுத்தம் - தலைவர் அறிவிப்பு.
ஜனவரி 12, தமிழக தேயிலைக் காப்பித் தோட்டத் தொழிலாளர்களுக்கு
ஊதிய உயர்வு.
ஜனவரி 23, வால்பாறைத் தோட்டத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளா - அறிக்கை அளிக்க மனித உரிமை ஆணையத்திடம் தலைவர் மனு.
பிப்ரவரி 25, ஆளுநர் மாளிகையை நோக்கி ஊர்வலம் நடத்த தடை -
பேரவையில் முதல்வர் மீதான உரிமை மீறல் பிரச்சனை - அனுமதி மறுப்பு - தலைவர் வெளிநடப்பு.
மார்ச் 02, மாஞ்சோலை அந்தோணிமுத்து கொலை வழக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் - 11 ஆவது எதிரி.
மார்ச் 03, தூத்துக்குடி மாவட்டம் நாரைக்கிணறு பள்ளி தலைமை ஆசிரியர் கொலை வழக்கு - குற்றப்பத்திரிக்கை தாக்கல் - மூன்றாவது எதிரி.
மார்ச் 15, அண்ணாமலைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் பணியிட
விளம்பரம் (N.1 Laa© 12.03.1999) 18% தாழ்த்தப்பட்டோர் பணியிடங்களை முழுமையாக நிரப்பக் கோரிக்கை.
மார்ச் 31, தேயிலைத் தோட்டத் தொழிற்சங்கங்கள் இரகசிய வாக்கெடுப்பு எண்ணிக்கையில் அங்கீகரிக்க தலைவர் கோரிக்கை - தொழிலாளர் ஆதரவில்லாமல் பெயரளவில் மட்டும் செயல்படும் தோட்டத் தொழிலாளர் தொழிற்சங்கங்களின் பெயரால் - தோட்ட அதிபர்கள் பேச்சுவார்த்தைகள் உடன்பாடுகளின் மீது மோசடி செய்வதைத் தடுக்க தொழிலாளர் நல ஆணையத்துக்கு தலைவர் கோரிக்கை.
ஏப்ரல் 09 கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் மண்டகப்படி வழங்க வலியுறுத்தி உண்ணாவிரதம் - ஆர்.டி.ஓ - மண்டகப்படி அமைக்க அனுமதி வழங்கினார் - அவர் இடம் மாற்றம் - மக்கள் போராட்டம் - கலவரம் -தேவேந்திர குல வேளாளர்கள் மீது தாக்குதல்
ஏப்ரல் 14, வௌ;ளை அறிக்கை வெளியடக்கோரி - கவர்னர் மாளிகை
நோக்கி - தலைவர் தலைமையில் ஊர்வலம் - லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பு.
ஏப்ரல், அரசு கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்களில் உள்ள பின்னடைவுப் பணியிடங்களை நிரப்பக் கோருதல் - தமிழகக் கல்வியமைச்சர் மறுப்பு - உரிமையை கேட்ட திரு.கிருத்துதாஸ் காந்தி, இ.ஆ.ப., ஆதிதிராவிடர் நலத்துறையிலிருந்து மாற்றம் - தாழ்த்தப்பட்டோருக்கான அரசு குழுக்களிலிருந்து தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி விலகல் - விடுபட்ட 595 பணியிடங்களை நிரப்பக்கோரி வள்ளுவர் கோட்டம் அருகே 15 நாள் தொடர் ஆர்ப்பாட்டம், தொண்டர்கள் தொடர்ந்து சிறைபடல் - 100 பின்னடைவு பணியிடங்களை நிரப்ப அரசு விளம்பரம் - இதில் 72 பேர் தேர்வு செய்யப்பட்டனர் - 495 பணியிடங்களை நிரப்பக் கோரி தொடர்ந்து கோரிக்கை இப்போதும் எழுப்பப்படுகிறது.
ஏப்ரல் 28, மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை கோரி காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய முடிவு.
ஜுன் 02, தமிழகம் முழுவதும் தோட்டத் தொழிலாளர் ஊதிய ஒப்பந்தம் டிசம்பர் மாதத்தோடு நிறைவு - புதிய ஊதியம் மாத ஊதியமாக - தினக்கூலிமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க தலைவர் கோரிக்கை - மாத ஊதியம் தினக்கூலி 150 ரூபாய் என்பதாக கணக்கிடக் கோரிக்கை - பேச்சுவார்த்தை தோல்வி.
ஜுலை 22, தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் தாழ்த்தப்பட்டோர் பணியிடங்களை நிரப்புவதில் முறைகேடு - பின்னடைவு பணியிடங்களை நிரப்பாமல் மோசடி - இந்திய குடியரசுத் தலைவர் - தமிழக முதல்வர் - தமிழக ஆளுநா; - தமிழக கால்நடைத்துறை அமைச்சர் - தமிழக தலைமைச் செயலகர் ஆகியோரைச் சந்தித்து நேரில் மனு.
ஜுலை 23, மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் 200க்கு மேற்பட்டவர்கள் கைக்குழந்தைகளோடு சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிராக தலைவர் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ், இடதுசாரி இயக்கத் தலைவர்கள், பெரியார் திராவிட கழக தலைவர்கள் தலைமையில் நெல்லையில் போராட்டம். தாமிரபரணியில் விக்னேஷ் என்ற மழலைச் செல்வன் உள்ளிட்ட 17 பேர்கள் மாவட்ட நிர்வாகத்தின் அடக்குமுறையால் உயிர் நீத்தனர். தண்ணாண்பொருணை (தாமிரப்பரணி) தமிழர்களின் அவலப் பொருணையானது.
ஆகஸ்;டு 14, நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது அணியில் தமிழ்மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி - பத்து தொகுதிகளில் போட்டி - தேர்தல் அறிக்கை வெளியீடு - ஐந்து தொகுதிகளில் ‘புதிய தமிழகம்’ ஒரு லட்சமும் அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் வாக்குகள் பெற்றது. கூட்டணி கட்சிகளின் தொகுதிகளில் பெற்ற வாக்குகள் வழி மேலும் 5 தொகுதிகளில் ஒரு லட்சம் அளவில் வாக்குகள் கிடைத்துள்ளன என்பது மதிப்பீடு.
செப்டம்பர் 11, தியாகதீபம் இம்மானுவேலர் நினைவுநாள் - தலைவர் அஞ்சலி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக