செவ்வாய், 5 மே, 2015

கோபாலபுரத்தில் கருணாநிதியுடன் கிருஷ்ணசாமி சந்திப்பு

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமி தி.மு.க. தலைவர் கருணாநிதியை கோபால புரத்தில் அவரது வீட்டில் இன்று சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு முடிந்ததும் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். முக்கியமாக காவிரி, முல்லைப் பெரியாறு, மேகதாது, செம்மரக் கடத்தல் பிரச்சனைகள் பற்றி பேசினோம்.
அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்து தமிழர் நலன் காக்க புதிய அமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளேன். இதற்காக எல்லா கட்சி தலைவர்களையும் சந்திப்பேன். அ.தி.மு.க., தி.மு.க. உள்பட அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்.
இது தேர்தலுக்கான சந்திப்பு அல்ல, கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் பேசுவது. அப்போது பேசுவது தான் சரியானது.
தமிழர் பிரச்சனைகளுக்காக கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் யார் ஈடுபட்டாலும் வரவேற்கத்தக்கதுதான்.
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக