புதன், 20 மே, 2015

"தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை பற்றிய வரலாற்று பொக்கிசங்கள்"...பேராசிரியர் பெ. தங்கராஜ், MA. M.phil.,





1930 கிழக்கு ராமநாதபுரத்தில் மறவர் சாதியார் கூடி பறையர் சக்கிலியருக்கு விதித்த சமூகக் கட்டுப்பாடுகளை தேவேந்திரருக்கும் புகுத்த முனைந்த போதுதான் பெருங்கலகம் துவங்கியது.
நாயக்கர்‬ ஆட்சியையும் அவருக்குத் துணையாகவும் விசுவாசியாகவும் இருந்த கள்ளர்களை எதிர்த்து 1529 முதலே இவர்கள் போராடி வருகிறார்கள், கடந்த 470 ஆண்டுகளாக நடந்து வரும் இம்மோதலில், இரு சாதியிலும் சுமார் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம்.
# 1881, 1891 ஆகிய இரு குடிக் கணக்கெடுப்பிலும் தேவேந்திர குல வேளாளர்களை வேளாண்குடிச் சமூகம் (Agricultural Class) என்று பொது சமூகக் கணக்கில்தான் சேர்த்துள்ளார்கள். 1901ம் ஆண்டு குடிக் கணக்கெடுப்பிலிருந்து தான் 'பள்ளன்’ என்ற ஒரு தனிச் சாதிக்கணக்கு ஆவணங்களில் உள்ளது.
# நாயக்கராட்சிக்குப் பின் வரி வசூல் உரிமையிலும், கிராம ஆதிக்கத்திலும் இருந்த சமீன்தார்களை எதிர்த்து இவர்கள் நடத்திய போர் ஒரு தனி வரலாறாகும். தமிழ் நாட்டு கிராமீயப் பாடல்களில் இவ்வரலாறு பொதிந்து கிடக்கிறது. செல்லாயிபுரம் தமிழ்ச்செல்வன் எழுதிய ஒரு கட்டுரையில் தேவேந்திரருக்கும் போடி, தேவாரம் ஆகிய இரு சமீன்களுக்கும் தொடர் பகை இருந்ததாகவும் இதனடிப்படையில் எழுந்த மோதல்களில் இச்சமூகத்தார் இரு சமீன்களையும் தாக்கிப் பலரைக் கொன்றதாகவும், அரண்மனைக்குச் சொந்தமான பல கட்டங்களை இடித்துத் தகர்த்ததாகவும் இம்மோதலில் ஏராளமான தேவேந்திரரும் சமீன் படை வீரர்களும் மடிந்ததாக உள்ள செய்தியைக் கொடுத்துள்ளார். இதே போல் நெல்லை மாவட்டத்திலும் நடந்துள்ளது. தமிழக நாட்டுப்புறப் பாடல்கள் முழுவதை அலசி ஆராய்ந்தால் இதுபோல் மேலும் பல செய்திகளைக் கண்டுபிடிக்க முடியும்,
# பள்ளன் என்ற பெயர் சதி செய்து திணிக்கப்பட்ட பிறகும், தேவேந்திரகுலத்தான், குடும்பன், காலாடி, பண்ணாடி, ஆகிய குல உயர்வுப் பெயர்களில் தங்கள் சாதிப் பெயரை லட்சக் கணக்கானோர் பதிவு செய்துள்ளார்கள். 1971 குடிக் கணக்கெடுப்பில் 13 லட்சம் பேர் பள்ளன் எனற பெயரிலும், மற்ற குலப் பட்டப் பெயர்களில் 8 லட்சம் மக்களும் பதிவு செய்துள்ளார்கள். இப்பெயர்கள் எல்லாம் இப்பொழுதும் எஸ்.சி. அட்டவணையில் உள்ளன.
# 1938 ல் காந்தி அரிசன சேவா சங்கம் ஆரபித்தார், இச்சங்கம் மூலம் ஆரம்பிக்கப்பட்ட மதுரை சேவாலயம் மாணவர் விடுதியைத் திறக்க வந்த ராசாசியை எதிர்த்துப் போரிட்டது தேக்கம்பட்டி அஞ்சா நெஞ்சன் பாலசுந்தரராசு மட்டுமே. அட்டவணைச் சாதிக் குழந்தைகளை அடிமை வழிக்குப் பக்குவப்படுத்தும் இம்முயற்சியைத் தமிழ்நாட்டில் எதிர்த்த ஒரே தலைவர் தேக்கம்பட்டி பாலசுந்தரராசாகும்,
# 1939 ல், மதுரை மீனாட்சி கோயிலில் நடந்த அரிசன ஆலயப் பிரவேசத்தில் பறையர், நரடார் ஆகிய இரு சாதியார் மட்டுமே கலந்தார்கள். தேவேந்திரர் கலக்கவில்லை. அதற்கு ஆதரவு தருமாறு பாலசுந்தரராசைக் கூப்பிட வந்த வைத்தியநாத அய்யருக்கும் பாலசுந்தரராசுக்கும் மதுரை மங்கம்மாள் சத்திரம் அறை எண். 7 - ல் பெரிய வாக்குவாதம் நடந்துள்ளது, (அரிசன ஆலயப் பிரவேசத்தில் கலந்து கொண்டவர்கள், 1, தும்பைப்பட்டி கக்கன், 2. உசிலம்பட்டி முத்து 3. மதிச்சியம் சின்னையா, 4, ஆலம்பட்டி முருகானந்தம், 5.விராட்டிபத்து ஆவலிங்கம், 6. விருதுநகர் சண்முக நாடார். இதில் 5. பேர் பறையர், ஒருவர் நாடார்.)
# 1947 -ல், ஏ,பி. ராமசாமி செட்டியார் காலத்தில் கூர்மையா கமிட்டி என்ற ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் நோக்கம் அரிசன மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட ரூபாய் ஒரு கோடியை எப்படிச் செலவு செய்வது என ஆய்வு செய்து அறிக்கை தருவதாகும். இக்குழு பள்ளர்களுக்கு இப் பணத்திலிருந்து எதுவும் செலவு செய்ய வேண்டியதில்லை. அவர்கள் நல்லநிலையில் உள்ளார்கள் என்ற கருத்தை வெளியிட்டது, அதாவது, இவர்கள் தீண்டாமை அனுபவிக்கும் மக்கள் அல்ல என்ற கருத்தை வெளியிட்டது, பாட்டாளி முழக்கம் ஏப்ரல் 93 இதழிலேயே நாம் இதை வெளியிட்டோம்.
கூர்மையா கமிட்டியில் மொத்தம் 27 பேர் இருந்தார்கள். இவர்களில் தேவேந்திரர் ஒருவரும் இல்லை. அக்காலக் கட்டத்தில் தேவேந்திர குல வேளாளரில் அஞ்சாநெஞ்சன் பாலசுந்தரராசு ஆயக்குடி எசு.சி பாலகிருட்ணன், திட்டை சுப்ரமணியன், தொண்டு வீராச்சாமி, ஆர். எசு. ஆறுமுகம், பெருமாள் பீட்டர் வீரம்பல் வேதமாணிக்கம், சொக்கலிங்கம், சிவக்கொழுந்து, டி. ட்டி. ராசன், ஜி.ஏ. ஞானசுப்பிரமணியன், மேலக்கால் வீரபத்திரன் ஆகியோர் முக்கியமானவர்களாக இருந்தார்கள். இவர்களில், தேக்கம்பட்டித் தலைவரைத் தவிர, மற்றவர் காங்கிரசுக்காரர்கள் ஆனால், யாருமே கூர்மையா கமிட்டியில் சேர்க்கப்படவில்லை.
இதற்குக் காரணம் இவர்கள் எல்லோரும் சரிகை வல்லவெட்டு அணிவார்கள். இது சமீன்தார், தோரணையாகும்.
எனவே யாரையும் சேர்க்கவில்லை. பொது வாழ்க்கைத் தலைவர்களை விட்டு, விட்டு அரசு அதிகாரிகளை எடுத்துக் கொண்டாலும் கூர்மையா கமிட்டி அமைக்கப்பட்ட போது தேவேந்திரர் சமூகத்தைச் சேர்ந்த 48 கெசடட் அதிகாரிகளாக இருந்தார்கள் என்று தெரிகிறது. இவர்களில் யாரையாவது கமிட்டியில் சேர்த்திருக்கலாம், ஆனால் சேர்க்கவில்லை.
ஆக, இந்தியாவில் பல மாநிலங்களின் எஸ்.சி, எஸ்.டி, பட்டியலை ஆய்வு செய்தால் நாட்டின் பூர்வ குடிகள், மண்ணின் மைந்தர்கள், ஆரியக் கலாச்சாரத்தோடு கலக்காதவர், ஆரிய இனவழி அதர்மக் கொள்கைகளை எதிர்த்துப் போரிட்டவர், இப்படிப்பட்ட சாதி - சமூகங்களையெல்லாம் இப்பட்டியலில் வைத்து அழுத்திருப்பதைக் காணலாம்.
அதே சமயம் ஆரியபார்ப்பன இனவழியை நிலைநாட்ட அவர்களுக்குத் துணையாகவும், அடியாட்களாகவும் இருந்த சாதிகள் எல்லாம், அவர்கள் எத்தனை துறைகளில் எவ்வளவு மோசமாக இருந்தாலும், இப்பட்டியலில் இல்லாமல் இருப்பதையும் காணலாம்.- தகவல் (பேராசிரியர் பெ. தங்கராஜ், MA. M.phil)

1 கருத்து: