ஞாயிறு, 26 ஜூலை, 2015

கொள்கை, லட்சியம் எதுவும் இல்லாமல் ஊறுவிளைவிக்கும் கருத்துகளை டாக்டர் ராமதாஸ் பரப்புகிறார்.....டாக்டர் . க . கிருஷ்ணசாமி . M .D .M .L .A .,.

...........................மதுரை, : கொள்கை, லட்சியம் எதுவும் இல்லாமல், சமுதாயத்துக்கு ஊறுவிளைவிக்கும் கருத்துகளை டாக்டர் ராமதாஸ் பரப்பி வருகிறார் என்று புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார். மதுரையில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பல்லபட்டி சாலையில் கடந்த 15ம் தேதி பட்டாசு ஆலைக்கழிவுத் தீயில் ஜீப் சிக்கி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர். 8 பேர் படுகாயமடைந்தனர். இதை சாலை விபத்தாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பட்டாசு ஆலை கழிவுகளால் ஏற்பட்ட விபத்தை சாலை விபத்தாக பதிவு செய்து மூடி மறைக்கின்றனர். இதனால் தொழிலாளர்கள் நஷ்டஈடு பெற முடியாமல் பரிதவிக்கின்றனர்.
இந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க வேண்டும். தி.மு.க. தலைவர் கருணாநிதி தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். இதை புதிய தமிழகம் கட்சி வரவேற்கிறது. கொள்கை, லட்சியம் இல்லாத கட்சி பாட்டாளி மக்கள் கட்சி. தமிழ் சமுதாய மக்களுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் டாக்டர் ராமதாஸ் கருத்துக்களை பரப்பி வருகிறார். திரைப்படங்கள் எந்த சமூகத்தையும் உயர்த்தியும், தாழ்த்தியும் எடுக்கக்கூடாது நடுநிலையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது, மாநில இளைஞரணி செயலாளர் பாஸ்கர் மருதம் உடனிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக