வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

செய்வீர்களா ...?.... நீங்கள் செய்வீர்களா ...?..... தேவேந்திரகுல வேளாளர் என அரசு ஆணை வெளியிடுவீர்களா...?....

 மதுரை, : சாதிகளை ஒருங்கிணைப்பதாக கொடுத்த வாக்குறுதியை முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றவில்லை என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி ...M .D .M .L .A ., அவர்கள் குற்றம் சாட்டினார். மதுரையில் புதிய தமிழகம் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அதன் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி..M .D .M .L .A ., அவர்கள் பங்கேற்றார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் இட ஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், முற்படுத்தப்பட்டோர் என பட்டியலிட்டு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
பள்ளர், குடும்பர், காலாடி, பண்ணாடி, மூப்பர் உட்பட 6 பிரிவு சமுதாய மக்களை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிட வேண்டும். எங்களது கோரிக்கை தொடர்பாக 2011ல் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற போது கோரிக்கை வைத்தோம். இதை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்த ஜெயலலிதா, 4 ஆண்டுகளாகியும் நிறைவேற்றவில்லை.
இந்தக் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி 6 கட்ட போராட்டம் அறிவித்து மதுரையில் முதற்கட்ட ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம். வெற்றி கிட்டும் வரை தொடர்ந்து போராடுவோம். இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி ..M .D .M .L .A ., அவர்கள் கூறினார்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக