செவ்வாய், 1 செப்டம்பர், 2015

மள்ளர் குலத்தின் வீரத்தளபதி .... வீரன் சுந்தரலிங்கம் ...... நன்றி .. தமிழக அரசியல் வார இதழ் {02.09.2015}.

.....வீரன் சுந்தரலிங்கம் ....தேவேந்திரகுல வேளாளர்கள் தங்கள் குல வீரத்தின் அடையாளமாக கருதும் 18வது நூற்றாண்டு தளபதி ..வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு ஒரு கட்டத்தில் தளபதியாக இருந்து கிழக்கிந்திய கம்பெனி படைகளுக்கு எதிரான கட்டபொம்மனின் போராட்டத்தில் பங்கு வகித்தார் .தூத்துக்குடி மாவட்டத்தின் கவனகிரி கிராமத்தில் பிறந்த சுந்தரலிங்கம் மள்ளர் இனத்தைசேர்ந்தவர் ..சேர /சோழ / பாண்டியர் காலத்தில் மள்ளர் என்று அழைக்கப்பட்ட இனம்தான் பின்னால் பள்ளர் என்று மருவியது என்கிறார்கள் . தேம்பாவணி பாடிய வீரமாமுனிவரும் , பேரூர் புராணம் எழுதிய கச்சியப்ப முனிவரும் மள்ளர் ..பள்ளர் என்ற இரு பதங்களையும் ஒரே அர்த்தத்தில் பயன்படுத்தியிருப்பதை சுட்டிக்காட்டுகிறார்கள் . பிற்கால திராவிட எழுத்தாளர்கள்.. குறிஞ்சி , முல்லை ., மருதம் , நெய்தல் , பாலை என்ற ஐவகை தமிழ் நிலங்களில் முறையே குறவர் , இடையர் ,மள்ளர் ,{உ ழவர் } பரதர் என்ற இனத்தவர்கள் வாழ்ந்து முறையே வேட்டை , ஆதிறை மேய்தல் , உ ழவு ,மீன்பிடிப்பு ,தொழில்களை செய்து வந்தனர் என்பது சங்க இலக்கியங்கள் தொட்டு பதிவான தகவல் . இதில் சொல்லப்படும் உ ழவர்கள் மள்ளர்களைக் குறிக்கும் என்று ஒரு கருத்தும் , சேர /சோழ /பாண்டியர்களே மள்ளர்கள்தான், ஆரம்ப காலத்தில் அரசு குலத்தவராக இருந்த மள்ளர்கள் பிற்காலத்தில் வடுக , சாளுக்கிய , நாயக்கர் படையெடுப்புகளினால் உ ழவு தொழிலை தழுவினார்கள் என்றும் கருத்துக்கள் நிலவுகின்றன ..மள்ளர்கள் தமிழர் / திராவிடர் நாகரீகத்தில் குடும்பம் என்ற சமுதாய கட்டமைப்பை ஏற்படுத்தினர் . அதனால் அவர்கள் குடும்பனார் என்றும் அழைக்கப்பட்டனர் . மள்ளர்களின் கொண்டாட்டம்தான் சோழ மன்னர்கள் கொண்டாடிய இந்திரவிழா என்றும் , இன்று நாற்று நடும் விழாவை இந்திரவிழாவாக கொண்டாடுகிறார்கள் எனப்படுகிறது .சோழ மன்னன் நெடுமுடிகிள்ளி இந்திரவிழா கொண்டாடமல் விட்டதால்தான் பூம்புகார் கடற்கோளினால் அழிந்தது என்று நம்புகிறார்கள் . இந்த மள்ளர் இனத்தை சேர்ந்த சுந்தரலிங்க குடும்பனாரின் முழு பிறப்பு விவரங்கள் தெரியவில்லை என்றாலும் தென் தமிழகத்தில் இன்னும் புழக்கத்தில் இருக்கும் நாட்டுப்புற பாடல்களில் இருந்து வீரன் சுந்தரலிங்கத்தின் வீர வரலாற்றை தெரிந்து கொள்ள முடிகிறது . கவனகிரி கிராமம் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆண்ட பாஞ்சாலங்குறிச்சி அருகில் உ ள்ளது .சுந்தரலிங்கம் தனது இளமை காலத்திலேயே சடுகுடு , சதுரங்கம் என்று அந்த பகுதியில் பிரபலமான விளையாட்டு வீரனாக இருந்ததாக தெரிகிறது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக