செவ்வாய், 1 செப்டம்பர், 2015

மள்ளர் குலத்தின் வீரத்தளபதி .... வீரன் சுந்தரலிங்கம் ...... நன்றி

மள்ளர் குலத்தின் வீரத்தளபதி .... வீரன் சுந்தரலிங்கம் ...... நன்றி .. தமிழக அரசியல் வார இதழ் {02.09.2015}......வீரன் சுந்தரலிங்கம் .......சுந்தரலிங்கத்தின் வீரத்தையும் , தைரியத்தையும் நேரில் கண்ட கட்டபொம்மன் தனது படையில் சேர்த்துக் கொண்டார் .. பின்னாளில் கட்டபொம்மனின் தளபதிகளில் ஒருவரானார் ... இது நடந்தது 1775...80 கால கட்டத்தில் இருக்கும் . பின்னால் கிழக்கிந்திய கம்பெனி படை பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை முற்றுகையிட்டு தாக்கிய போது , சுந்தரலிங்கம் தன் மாமன் மகளை ஆட்டு மந்தையை ஓட்டிச் செல்ல செய்து , ஆடுகளுக்கிடையே ஒளிந்து வெள்ளையர்களின் வெடிகிடங்கை நோக்கி சென்றார் .. ஆங்கிலேய வீரன் ஒருவன் குரல் எழுப்ப , நிலைமை மீறிவிட்டது என்பதை புரிந்து கொண்ட சுந்தரலிங்கம் ஒரு தீப்பந்தத்தை கொளுத்திக்கொண்டு வெடிகிடங்கின் மேல் குதித்துவிட்டார் . அவருடன் அவரது முறைப்பெண் வடிவும் குதிக்க , வேடிக்கிடங்கு வெடித்து சிதறியது . இது நடந்தது 1796 அல்லது 1799 ஆக இருக்கலாம் .இந்திய சுகந்திர போராட்ட சரித்திரத்தில் 18ம் நூற்றாண்டிலேயே "மனித வெடிகுண்டு "... தற்கொலைப்படை என்ற பெருமையை வீரன் சுந்தரலிங்கம் / வடிவு ஆகியோரை சாரும் ... இதே பெருமையை 1780ல் வேலுநாச்சியாரின் பெண் தளபதி குயிலியும் பெறுகிறார்கள் .. வீரன் சுந்தரலிங்கம் இன்றளவும் தேவேந்திர குல வேளாளர்களின் பெருமையாக கருதப்படுபவர் . சுகந்திர போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய சுந்தரலிங்கத்தின் வீரமும் , தியாகமும் நிச்சயம் அவரது இனம் தாண்டி , அவரது பெருமை மனித குல வரலாற்றில் ஒரு அடையாச் சின்னமாக விளங்கும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக