ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 20 டிசம்பர், 2016

தமிழ் தேசிய கும்பல்களின் பித்தலாட்டம் ...!!!...

தமிழ் தேசிய கும்பல்களின் பித்தலாட்டம் ...!!!.... தமிழகத்தில் பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகள் , படுகொலைகள் , அரசியல் அதிகாரம் பற்றி வாய் திறக்க மறுக்கும் தமிழ் தேசியம் யாருக்கானது ..?... சமீபத்தில் அதிமுக தலைமை கழகம் வெளியிட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியலை பார்த்தாலே தெரியும் ... தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆட்சி யாருக்கானது என்று ..?... சில குறிப்பிட்ட ஆதிக்க சாதிகள் வாழவும் , ஆளவும்தான் திராவிட கட்சிகள் இயங்குகின்றன ... தமிழகத்தின் 30 மாவட்ட செயலாளர்களில் முறையே முக்குலத்தோர் {12}... கவுண்டர் {10}.. வன்னியர் {10}... இப்போது புரிகிறதா ..?... தமிழகத்தில் பார்பனர் , பார்பனர் அல்லாத அரசியல் இப்போது இல்லை ... ஆதிக்க சாதிய அரசியல் , பட்டியலின மக்களின் அரசியல் என்பதுதான் தற்போதைய நிலை ...திராவிடத்தை அகற்ற நினைக்கும் தமிழ் தேசியவாதிகள் ஒரு சமுகத்தை ஆதிதிராவிடர் , தலித் ,என்று அழைப்பதை எப்படி வேடிக்கை பார்கிறார்கள் ..?... இந்துத்துவத்தை தகர்க்காமல் பேசும் தமிழ் தேசியம் யாருக்கானது ..?.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக