ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 23 டிசம்பர், 2010

தமிழகத்தில் 3.5 லட்சம் பின்னடைவு பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் 3.5 லட்சம் பின்னடைவு பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி




தமிழகத்தில் 3.5 லட்சம் பின்னடைவு பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.



தமிழக மத்திய மாநில அரசு ஊழியர் கூட்டமைப்பு சார்பாக மதுரை தமிழ்நாடு ஓட்டலில் நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொள்ள வந்த புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியதாவது:-



தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு 19 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் இது நடைமுறையில் இல்லை. இதனால் தமிழகத்தில் உள்ள 110-க்கும் அதிகமான அரசுத் துறைகளில் 3 லட்சத்து 50 ஆயிரம் பின்னடைவு பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளன. இவற்றை உடனே அரசு நிரப்ப வேண்டும். மேலும் ஏ, பி, சி, என்ற 3 உயர்நிலைகளில் பின்னடைவு பணியிடங்கள் காலியாகவே இருக்கின்றன. எஸ்சி, எஸ்டிக்கான இட ஒதுக்கீட்டை பெறுவதற்கு நாம் ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டி உள்ளது.



2006-ம் தேர்தலில் போது தி.மு.க.வினர் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பின்னடைவு பணியிடங்களை நிரப்புவதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்து 5 ஆண்டு காலம் முடியபோகிறது. இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதற்கிடையே இந்த பட்டியல் பிரிவில் 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி, எஸ்சி, எஸ்டியினரின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன.



சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் காலி பணியிடங்களை நிரம்பும் போது எஸ்சி, எஸ்டிக்கான ஒதுக்கீட்டு இடங்களில் உள் ஒதுக்கீடு அடிப்படையில் ஒரு பிரிவினருக்கு மட்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இது சட்ட விரோதம். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த விரைவில் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக