ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 20 ஜனவரி, 2012

ஜா‌ன் பா‌ண்டியனை கைது செ‌ய்தது தவறு- காவ‌ல்துறை ‌மீது ‌விசாரணை குழு கு‌ற்ற‌ச்சா‌ற்று

ஜான் பாண்டியனை கைது செய்ததும், இமானுவேல் சேகரன் குருபூஜையில் அவரை கலந்துக் கொள்ள முடியாமல் தடை செய்தது தேவையற்றது எ‌ன்று‌ம் இதுவே கலவரத்தைத் தூண்டியது என்று‌ம் தொ‌ண்டு ‌நிறுவன‌ம் நட‌த்‌திய விசாரணை‌‌க் குழு கூறியுள்ளது.

ராமநாதபுர‌ம் மாவ‌ட்ட‌ம், பரமக்குடியில் துப்பாக்கிச் சூடு ‌நிக‌ழ்வு தொடர்பாக, நீதிபதி சம்பத் தலைமையில் விசாரணைக் குழு ஒ‌ன்றை தமிழக அரசு அமைத்துள்ளது.

இத‌னிடையே, மதுரையை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று, தனியாக விசாரணை நடத்தி பல்வேறு பரிந்துரைகளை அரசு‌க்கு அளித்துள்ளது.

அதில், ஜான் பாண்டியனுக்கு ஆதரவாக பரமக்குடியில் மறியலில் ஈடுபட்டவர்களைக் கட்டுப்படுத்த அல்லது கலைக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

கூட்டத்தினர் கலவரம் செய்தனர் என்ற காவல்துறையினரின் வாதம் அடிப்படை இல்லாதது எ‌ன்று‌‌ம் காவல்துறையினரின் வாகனம் தீ வைக்கப்பட்டது என்ற கூற்று, பொது அறிவுக்கு விரோதமானது எ‌ன்று‌ம் அ‌ந்த குழு கூ‌றியு‌ள்ளது.

காவல்துறையினரின் செயலை நியாயப்படுத்துவதற்காகவே, காவல்துறையினரின் வாகனங்கள் தீ வைக்கப்பட்டதாக பொது விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

ஜான் பாண்டியனை கைது செய்ததும், இமானுவேல் சேகரன் குருபூஜையில் அவரை கலந்துக் கொள்ள முடியாமல் தடை செய்தது தேவையற்றது எ‌ன்று‌ம் இதுவே கலவரத்தைத் தூண்டியது என்று‌ம் விசாரணை‌‌க் குழு கூறியுள்ளது.

குரு பூஜைக்கு எந்த ஆயுதமும் இல்லாமல் சென்றவர்கள் மீது சுமார் 4 மணி நேரம் காவ‌ல்துறை‌யின‌ர் துப்பாக்கிச் சூடு நடத்தியது நியாயத்திற்கு புற‌‌ம்பானது எ‌ன்று‌ம் பொது‌ ‌விசாரணை குழு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக