ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

முற்போக்காளர்களின் ஜாதி உணர்வை தொடர்ந்து அம்பலப்படுத்துவோம்

சாருநிவேதிதா, ஜெயமோகன் போன்ற கழிசடைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஆதரவாகவும் எதிராகவும் எழுதுகிற பலர் அந்த இரு கழிசடைகளையும் விரும்பி படிக்கிற அல்லது தீவிரமாக படிக்கிற அளவிற்குக்கூட அண்ணல் அம்பேத்கரையும் தந்தை பெரியாரையும் படிப்பதில்லை. இன்னும் பலர் பெரியாரையும் டாக்டர் அம்பேத்கரையும் படிப்பதில்லை என்பது மட்டுமல்ல, இருவரையும் பொதுப்புத்தியளவில் மட்டுமே புரிந்து கொண்டு அவர்களை கடுமையாக விமர்சிக்கிற ஆபத்து நிறைந்த மூடர்களாகவும் இருக்கிறார்கள். தந்தை பெரியாரின் எழுத்துக்கள் பேச்சுக்கள் முழுவதும் புத்தக வடிவம் பெறாதது பெரிய சோகம். டாக்டர் அம்பேத்கரின் எழுத்துக்கள், பேச்சுக்கள் முழுவதும் புத்தக வடிவமான பிறகும் அதை வாங்குவதற்கு ஆளில்லையே என்பது அதைவிட பெரிய சோகம். முன்னணி எழுத்தாளர்களாக, பேச்சாளர்களாக, முற்போக்காளர்களாக இருக்கிற பலபேரிடம் அண்ணல் அம்பேத்கரை படித்ததற்கான அறிகுறிகள் சுத்தமாக இல்லை அல்லது மிக மிக சொற்ப அளவில் அற்பத்தனமான புரிதலோடு இருக்கிறது. சில எழுத்தாளார்கள், பேச்சாளர்கள், பத்திரிகையாளர்களிடம் ‘டாக்டர் அம்பேத்கர் எழுத்துக்களை, பேச்சுக்களை ஏன் படிக்கவேண்டும்? இந்து சமூக அமைப்பை அம்பேத்கர் எப்படி துல்லியமாக, நேர்மையாக அம்பலப்படுத்தி எழுதியிருக்கிறார் என்று விவரித்து, அவசியம் அம்பேத்கரை நீங்கள் படிக்க வேண்டும், அவரை பற்றி எழுத வேண்டும், பேச வேண்டும் என்று நான் பல முறை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டு சிலருக்கு புத்தகமும் வாங்கித் தந்திருக்கிறேன். என்னிடம் ‘சரி, சரி’ என்று மண்டையை ஆட்டிவிட்டு, மீண்டும் பழைய மாதிரியே ஒரே இடத்தில் சுத்தி சுத்தி வந்து செக்காட்டுகிறார்கள். அதிக வார்த்தை விரயங்களோடு, அலுப்பூட்டும் நடையில் எழுதும் ‘நவீன’ எழுத்தாளர்கள், ஊர் பேர் தெரியாத புதுசா எவனையாவது ஒரு வெளிநாட்டுக்காரன கண்டுபுடுச்சி சிலாகித்து எழுதுவதன் மூலம் தன்னை பெரிய அறிவாளியாக காட்டிக் கொள்கிறவர்கள், உலக அறிவாளிகளில் முக்கியமானவராக திகழ்கிற டாக்டர் அம்பேத்கரை பற்றி ஒருவார்த்தைக் கூட குறிப்பிடுவதில்லை. அவரை குறிப்பிட்டால் இவர்களின் நவீன தன்மை, தரமிழந்து தீட்டாயிடும்போல. பத்து பெண்களை வன்புணர்ச்சி செய்து கொலைசெய்தவனை கருணாமூர்த்தி என்று சொல்வதுபோல், ஆயிரம் ஆண்டுகால தீண்டாமையை தீவிரமாக கடைபிடிக்கிறவர்களுக்கு பேரு நவீன எழுத்தளார்களாம்! உலக நியாயம் எல்லாம் பேசுகிற ‘ஞாநி’ போன்ற பிற்போக்காளர்கள் சும்மா பொய்யாக நடிப்பதற்குக் கூட அண்ணல் அம்பேத்கரை குறித்து ஒரு வார்த்தைகூட குறிப்படுவதில்லை. ‘அம்பேத்கரை எனக்கு பிடிக்காது’ என்று எழுதினால்கூட ‘அம்பேத்கர்’ பெயரை குறிப்பிட வேண்டி வருமே என்பதற்காகவே அதை தவிர்க்கிறார் போலும். ஜாதி ஆதிகத்திற்கு எதிராக எழுதுகிற, பேசுகிற எவரும் அண்ணல் அம்பேத்கரை படிக்காமல் செயல்படுவது முறையற்றது என்பது மட்டுமல்ல, அது அறிவற்றதும், அயோக்கியத்தனமானதும்கூட. அண்ணல் அம்பேத்கரை ‘அவர்தானே’ என்று முன்முடிவோடு, அலட்சியமாக தவிர்க்கிற ‘முற்போக்காளர்’களிடமும், ‘அம்பேத்கரா? அட அவரு எதுக்குங்க நமக்கு?’ என்று புறக்கணிக்கிற ஜாதி வெறியர்களிடமும், மாபெரும் ஆய்வாளரும், மாமேதையுமான அம்பேத்கரை தீவிரமாக கொண்டு சேர்க்க வேண்டும். அண்ணலின் சிந்தனைகள் அவர்களின் ஜாதி வெறி உள்ளத்திற்கு மாற்றாக அமையும் அல்லது அவர்களின் ஜாதிவெறியை அம்பலப்படுத்தும். அண்ணல் அம்பேத்கரின் 119 பிறந்த நாளில் முற்போக்காளர்களிடமும் ‘நுட்பமான’ வடிவில் மறைந்திருக்கும் ஜாதி உணர்வை தொடர்ந்து அம்பலப்படுத்துவோம் என்று உறுதி ஏற்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக