சனி, 17 செப்டம்பர், 2011

பெட்ரோல் குண்டு வீச்சு: ஜான்பாண்டியன் வழக்கு

திருப்பூரில் இருந்து தேனிக்கு ஒரு அரசு பஸ் நேற்று இரவு புறப்பட்டு வந்தது. செம்பட்டி அருகே கே.ராமநாதபுரம் என்ற இடத்தில் அந்த பஸ் வந்து கொண்டிருக்கும்போது 16 பேர் கொண்ட ஒரு கும்பல் பஸ்சை மறித்து நிறுத்தியது. திடீரென பஸ்மீது சரமாரியாக கற்களை அவர்கள் வீசினார்கள். இதில் பஸ்சின் கண்ணாடிகள் உடைந்து சிதறி யது. திடீரென பஸ் மீது பெட்ரோல் குண்டும் வீசப்பட்டது. ஆனால் தீப்பிடிக்காமல் பாட்டில் மட்டும் உடைந்து சிதறியது. கல்வீச்சில் கருப்புசாமி, சக்திவேல், கண்டக்டர் ராசு உள்பட 5 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற செம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார்கள், அந்த பஸ்சை பாதுகாப்பாக செம்பட்டி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மேலும் நேற்று இரவு பழனி, கோவை செல்லும் அனைத்து பஸ்களும் திண்டுக்கல் பை- பாஸ் வழியாக சுமார் 35 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்லும்படி மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டது. கே.ராமநாதபுரம் தேவேந்திர இளைஞர் பேரவை நிர்வாகிகளை ஜான்பாண்டியன் தூண்டிவிட்டதாக, ஜான் பாண்டியன் உட்பட 16 பேர் மீது வழக்குபதிவு செய்து செம்பட்டி போலீசார் கே.ராமநாதபுரம் பழனிச்சாமி மகன் பாலமுருகன் (22), ராஜேந்திரன் மகன் கருப்பையா (21), கந்தசாமி மகன் நாகராஜ் (23), செல்வராஜ் மகன் சவுந்திரபாண்டி (22), ராமசாமி மகன் கலைச் செல்வன் (23), சின்னசாமி மகன் சஞ்சீவி (24) ஆகிய 6 பேரை ஊர் அருகில் ஒரு குளத்தில் பதுங்கியிருந்த போது கைது செய்தனர். மேலும் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனத்த லைவர் ஜான்பாண்டியன், கே.ராமநாத புரம் தேவேந்திர இளைஞர் பேரவை தலைவர் அழகர் (23) உள்ளிட்ட 10 பேரை செம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக