வியாழன், 15 செப்டம்பர், 2011
ஜான்பாண்டியன் மற்றும் ஐந்து பேர் இன்று காலை விடுதலை
பாளையங்கோட்டை: தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் மற்றும் 5 பேர் இன்று காலை விடுதலை செய்யப்பட்டனர்.
பரமக்குடியில் நடந்த தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செல்லும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் மற்றும் 22 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். நேற்று 17 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை 6.30 மணியளவில், வல்லநாடு போலீஸ் துப்பாக்கிச்சூடு தளத்தில் இருந்து ஜான்பாண்டியன் மற்றும் 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
பாளையங்கோட்டையில் உள்ள அவருடைய வீட்டில் வைத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இது இனக் கலவரம் அல்ல சிலருடைய தூண்டுதலின் பேரிலும் சில அதிகாரிகளின் தவறான நடவடிக்கைகளாலும் ஏற்பட்ட கலவரம். இந்த சம்பவம் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக