திங்கள், 19 செப்டம்பர், 2011
பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு உள்நோக்கமே காரணம்: சந்திரபோசு
பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு ஒருசிலரின் உள்ளோக்கமே காரணம் என்று தியாகி இமானுவேல் பேரவை குற்றம் சாட்டியுள்ளது.
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி மதுரை சிந்தாமணி, பரமக்குடி பகுதிகளில் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்துக்க்கான பின்னணி குறித்த கருத்தரங்கம் தமிழ்நாடு தியாகி இமானுவேல் பேரவை சார்பில் மதுரையில் நேற்று நடந்தது. பேரவையின் பொதுச்செயலாளர் சந்திரபோசு தலைமை தாங்கினார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். சந்திரபோசு கூறியதாவது:-
கடந்த 16 ஆண்டுகளாக இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரித்து வருகிறோம். இதையொட்டி முளைப்பாரி, வேல்குத்துதல், காவடி, பால்குடம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. 2007- முதல் மக்கள் அதிகமாக வரத் தொடங்கினர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நினைவிடத்துக்கு வருகின்றனர். இதனால் இமானுவேல் சேகரனின் நினைவு தினம் குருபூஜையாக மாறியது.
இந்த ஆண்டு நினைவு தினத்தையொட்டி தெய்வத்திருமகன் இமானுவேல் என்று பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டு இருந்தன. இது குறிப்பிட்ட ஒரு சிலருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அந்த ஒருசில தலைவர்களின் ஆலோசனைப்படி போலீஸ் அதிகாரிகள் செயல்பட்டு துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கிறார்கள். எதிர்காலத்தில் வளர்ந்துவிடக்கூடாது என்ற உள்நோக்கத்தில் தான் துப்பாக்கிச் சூடு நடந்து உள்ளது. இந்த சம்பவம் குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய குழு அமைத்து விசாரிக்கவேண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வழங்கவேண்டும். பொய் வழக்குகளை திரும்பப் பெறவேண்டும், 144 தடை உத்தரவை ரத்து செய்யவேண்டும். இமானுவேல் சேகரனின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக