வெள்ளி, 27 டிசம்பர், 2013
வியாழன், 26 டிசம்பர், 2013
புதன், 25 டிசம்பர், 2013
டிசம்பர்-25 கீழவெண்மணி தியாகிகளுக்கு புதிய தமிழகம் கட்சி வீர வணக்கம் -டாக்டர்.க.கிருஷ்ணசாமி.........
டிசம்பர்-25 கீழவெண்மணி தியாகிகளுக்கு புதிய தமிழகம் கட்சி வீர வணக்கம் -டாக்டர்.க.கிருஷ்ணசாமி வேண்டுகோள் புதிய தமிழகம் கட்சித் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது:- இந்தியா சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் ஆகியும் சமுதாய பொருளாதார ஏற்ற தாழ்வுகள் நீக்கப்படவில்லை. பிறந்த நாட்டில் மூன்று செண்ட் வீட்டு மனையோ, ஒரு ஏக்கர் நிலமோ கூட சொந்தமாக இல்லாமல் இன்னமும் வறிய நிலையில் வாழ்வோர் எண்ணற்றோர். இந்த நிலை போக்க எத்தனையோ போராட்டங்கள் நடந்தி இருப்பினும். 1968ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி தஞ்சை மண்ணாம் கீழ வெண்மணியில் நடந்த துயர சம்பவத்தை யாராலும் மறக்க இயலாது. உழைத்த உழைப்பிற்க்கு அரைப்பிடி நெல் கூடுதலாக கேட்டதற்காக முதியோர், பெண்கள், குழந்தைகள் என ஒடுக்கப்பட்ட மக்கள் 44 பேர் ஒரே குடிசையில் அடைத்து கொளுத்தப்பட்ட துயர சம்பவம் நடந்த நாள் அது. தியாகம் புரிந்தவர்கள் விவசாய தொழிலாளர்கள் எனினும் அவர்கள் அனைவரும் வீரம் செறிந்த வேளாண் குடிமக்கள் என்ற சமூக அடையாளம் அறவே மறைக்கப்பட்டுவிட்டது. அம்மக்களின் அளப்பரிய தியாகத்தை போற்றும் வகையில் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக கீழவெண்மணி கிராமத்தில் அவர்கள் நினைவிடத்தில் டிசம்பர் 25ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் அஞ்சலி நடைபெறும். அதேபோல அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் புதிய தமிழகம் கட்சி மாவட்ட நிர்வாகிகள் சார்பாக நினைவஞ்சலி நடைபெறும் என தெரிவித்துக் கொள்கிறேன்.
1968ல் தன் உரிமைக்காக போராடி தீயில் உயிரிட்ட கீழவெண்மணி சோழமண்டல 44 தியாகிகளுக்கு வீரவணக்கங்கள்...
1968ல் தன் உரிமைக்காக போராடி தீயில் உயிரிட்ட கீழவெண்மணி சோழமண்டல 44 தியாகிகளுக்கு வீரவணக்கங்கள்
1. சுந்தரம் (45)
2. சரோஜா(12)
3. மாதாம்பாள்(25)
4. தங்கையன் (5)
5. பாப்பா (35)
6. சந்திரா (12)
7. ஆசைத் தம்பி (10)
8. வாசுகி (3)
9. சின்னப்பிள்ளை (28)
10. கருணாநிதி(12)
11. வாசுகி (5)
12. குஞ்சம்பாள் (35)
13. பூமயில் (16)
14. கருப்பாயி (35)
15. ராஞ்சியம்மாள் (16)
16. தாமோதரன் (1)
17. ஜெயம் (10)
18. கனகம்மாள் (25)
19. ராஜேந்திரன் (7)
20. சுப்பன் (70)
21. குப்பம்மாள் (35)
22. பாக்கியம் (35)
23. ஜோதி (10)
24. ரத்தினம் (35)
25. குருசாமி (15)
26. நடராசன் (5)
27. வீரம்மாள் (25)
28. பட்டு (46)
29. சண்முகம் (13)
30. முருகன் (40)
31. ஆச்சியம்மாள் (30)
32. நடராஜன் (10)
33. ஜெயம் (6)
34. செல்வி (3)
35. கருப்பாயி (50)
36. சேது (26)
37. நடராசன் (6)
38. அஞ்சலை (45)
39. ஆண்டாள் (20)
40. சீனிவாசன் (40)
41. காவிரி (50)
42. வேதவள்ளி (10)
43. குணசேகரன் (1)
44. ராணி (4)
உங்களின் தியாகம் மறையாதது.
1. சுந்தரம் (45)
2. சரோஜா(12)
3. மாதாம்பாள்(25)
4. தங்கையன் (5)
5. பாப்பா (35)
6. சந்திரா (12)
7. ஆசைத் தம்பி (10)
8. வாசுகி (3)
9. சின்னப்பிள்ளை (28)
10. கருணாநிதி(12)
11. வாசுகி (5)
12. குஞ்சம்பாள் (35)
13. பூமயில் (16)
14. கருப்பாயி (35)
15. ராஞ்சியம்மாள் (16)
16. தாமோதரன் (1)
17. ஜெயம் (10)
18. கனகம்மாள் (25)
19. ராஜேந்திரன் (7)
20. சுப்பன் (70)
21. குப்பம்மாள் (35)
22. பாக்கியம் (35)
23. ஜோதி (10)
24. ரத்தினம் (35)
25. குருசாமி (15)
26. நடராசன் (5)
27. வீரம்மாள் (25)
28. பட்டு (46)
29. சண்முகம் (13)
30. முருகன் (40)
31. ஆச்சியம்மாள் (30)
32. நடராஜன் (10)
33. ஜெயம் (6)
34. செல்வி (3)
35. கருப்பாயி (50)
36. சேது (26)
37. நடராசன் (6)
38. அஞ்சலை (45)
39. ஆண்டாள் (20)
40. சீனிவாசன் (40)
41. காவிரி (50)
42. வேதவள்ளி (10)
43. குணசேகரன் (1)
44. ராணி (4)
உங்களின் தியாகம் மறையாதது.
வெள்ளி, 20 டிசம்பர், 2013
மதுரை ஆதீனத்துடன் ஜான் பாண்டியன் திடீர் சந்திப்பு....
மதுரை: மதுரை ஆதீனம் அருணகிரிநாதரை இன்று திடீரென சந்தி்த்து பேசிய தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன், ஆதீனத்திற்கு எந்த மிரட்டலும் இல்லை, அப்படி யாராவது மிரட்டினால் அரசியல் காரணமாகத் தான் இருக்கும் என்று கூறினார்.
மதுரை ஆதீனம் அருணகிரிநாதரைச் சந்திக்க இன்று பகல் 12.40 மணியளவில் ஆதீன மடத்திற்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் வந்தார். கட்சியினரை வெளியே நிறுத்திவிட்டு, அவர் மட்டும் ஆதீனம் வீற்றிருக்கும் பள்ளியறைக்குச் சென்றார்.
தன்னை தரிசித்த அவருக்கு ஆசீர்வாதம் கொடுத்து, விபூதி பூசிவிட்டார் மதுரை ஆதீனம். பிறகு சுமார் 20 நிமிடங்கள் அவர்கள் பேசிக் கொண்டனர். முன்னதாக அவர் மதுரை எஸ்.பி. பாலகிருஷ்ணனையும் சந்தித்தார்.
ஆதீனத்தைப் பார்த்துவிட்டு நெற்றியில் விபூதியுடன் வந்த ஜான் பாண்டியனிடம் இந்த சந்திப்பு பற்றி நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்குப் பதில் அளித்த அவர், "25 ஆண்டுகளாக எனக்கும் சந்நிதானத்துக்கும் பழக்கம் இருக்கிறது. எனது கட்சியை திருச்சியில் தொடங்கி வைத்தது கூட ஆதீனம் தான். அந்த அன்பிற்காக மரியாதை நிமித்தமாக அவரைச் சந்தித்தேன். மற்றபடி எந்த விசேஷமும் இல்லை.
மதுரை மாவட்டம் பாறைபத்தி, சிட்டுலொட்டி கிராமங்களில் வாழும் தேவேந்திரகுல வேளாளர் மக்களிடையே இடப்பிரச்னை காரணமாக மோதல் இருந்து வந்தது. ஒரே மக்களிடையேயான இந்தப் பிரச்னையை சமரசமாக தீர்த்து வைக்க வேண்டும் என்று எஸ்.பி.யை சந்தித்து வலியுறுத்தினேன். அப்படியே ஆதீனத்தைப் பார்க்க வந்தேன்" என்றார்.
"மதுரை ஆதீனத்தை சில தேவர் சமுதாய அமைப்புகள் மிரட்டுவதாகவும், அதனால் தான் உங்களை அவர் சந்தித்ததாகவும் கூறப்படுகிறதே?" என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதில் அளித்த ஜான் பாண்டியன், "எனக்குத் தெரிந்து ஆதீனத்திற்கு எந்த மிரட்டலும் இல்லை. அப்படி யாராவது மிரட்டினால் அரசியல் காரணமாகத் தான் இருக்கும். தேவரும், தேவேந்திரரும் பங்காளிகள் தான். அவர்களுக்குள் பிரச்னை இல்லை. அதற்காக ஆதீனத்தை நான் சந்திக்கவில்லை" என்றார். நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்த ஜான் பாண்டியன், "கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் தான் முடிவு செய்வோம்" என்றார். பின்னர் ஜான் பாண்டியன் காரில் நெல்லை புறப்பட்டார். இந்தச் சந்திப்பு பற்றி ஆதீனத்தின் கருத்தை அறிய முயன்றோம். வழக்கம் போல பத்திரிகையாளர்களைச் சந்திப்பதைத் தவிர்த்துவிட்டார் ஆதீனம். ஜான் பாண்டியனின் வருகையையொட்டி ஆதீனத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. |
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சியில் ''அதிகாரத்தை நோக்கி" இளைஞர்கள் மாவட்ட எழுச்சி மாநாடு..........
திருச்சி: காங்கிரஸ்காரர்கள் பொய் சொல்லிக் கொண்டு உங்களிடம் வந்தால் ஊருக்குள் விடாதீர்கள் என்று ஜான் பாண்டியன் கூறியுள்ளார்.
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சியில் ''அதிகாரத்தை நோக்கி" என்ற தலைப்பில் இளைஞர்கள் மாவட்ட எழுச்சி மாநாட்டை நடத்தினர். அக்கட்சியின் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், பொதுச்செயலாளரும், சட்ட ஆலோசகருமான பிரிசில்லா பாண்டியனும், அக்கட்சியின் நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் பேசிய பிரிசில்லா பாண்டியன் உள்ளிட்ட பலரும், வரும் நாடாளுமன்றத் தேர்தலை மையப்படுத்தியே பேசினர். நிச்சயம் நமது கணக்கை துவங்கி, டெல்லி செங்கோட்டைக்கு தலைவரை அனுப்புவோம் என சூளுரைத்தனர்
இறுதியாக பேசிய ஜான்பாண்டியன், ''கடந்த எட்டு வருடங்களாக என்னை சிறையில் தள்ளியது திராவிட என்கிற பெயரை கொண்டு மக்களை ஏமாற்றிய கட்சிகள்தான். அந்த கட்சிக்கு பாடம் புகட்டாமல் விடமாட்டேன்.
நடந்து முடிந்த 4 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பலத்த அடி விழுந்துள்ளது. தற்போது, மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். இலங்கையில் தமிழர்களுக்கு செய்த துரோகத்துக்கும், தமிழகத்தில் மீனவர்களுக்கு செய்த துரோகத்துக்கும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். ஒரு தொகுதியில் கூட காங்கிரசால் வெற்றி பெற முடியாது.
புதுடெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்ட ஒரு ஆண்டிற்குள் 28 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது மத்திய அரசின் நிர்வாக சீர்கேட்டையும், ஊழல், கற்பழிப்பு குற்றங்களையும் பொதுமக்கள் சகித்துகொள்ள தயாராக இல்லை என்பதையே காட்டுகிறது. காங்கிரஸ்காரர்கள் பொய் சொல்லிக் கொண்டு உங்களிடம் வந்தால் ஊருக்குள்ளயே விடாதீர்கள். நல்லவர்கள் போல் நடப்பார்கள் நம்பாதீர்கள். பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு துணையாக நின்றது காங்கிரஸ் கட்சிதான் என்பதை மறந்துவிடாதீர்கள். சிதம்பரமும், ஜி.கே.வாசனும் இனி தனியாளாய் நிற்க வேண்டிய காலம் வந்துவிட்டது.
கூலியை உயர்த்திகேட்ட குற்றத்திற்காக கீழவெண்மனியில் 44 பேரை எரித்துக்கொன்ற சம்பவத்திலும், தியாகி இமானுவேல் கொலை செய்யப்பட்டபோதும் சரி, பரமக்குடி துப்பாக்கி சூட்டில் ஆறுபேர் சுட்டு கொன்றபோதும் சரி விசாரணைக்காக அமைக்கப்பட்ட நீதிபதிகள் கொண்ட விசாரணை கமிஷன்கள் அனைத்தும் நம் மக்களுக்கு எதிராகவே தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. நீதி மறுக்கப்பட்ட சமூகமாக நாம் இருக்கிறோம். நமக்கு துரோகம் செய்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவோம்" என்றார்.
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சியில் ''அதிகாரத்தை நோக்கி" என்ற தலைப்பில் இளைஞர்கள் மாவட்ட எழுச்சி மாநாட்டை நடத்தினர். அக்கட்சியின் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், பொதுச்செயலாளரும், சட்ட ஆலோசகருமான பிரிசில்லா பாண்டியனும், அக்கட்சியின் நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் பேசிய பிரிசில்லா பாண்டியன் உள்ளிட்ட பலரும், வரும் நாடாளுமன்றத் தேர்தலை மையப்படுத்தியே பேசினர். நிச்சயம் நமது கணக்கை துவங்கி, டெல்லி செங்கோட்டைக்கு தலைவரை அனுப்புவோம் என சூளுரைத்தனர்
இறுதியாக பேசிய ஜான்பாண்டியன், ''கடந்த எட்டு வருடங்களாக என்னை சிறையில் தள்ளியது திராவிட என்கிற பெயரை கொண்டு மக்களை ஏமாற்றிய கட்சிகள்தான். அந்த கட்சிக்கு பாடம் புகட்டாமல் விடமாட்டேன்.
நடந்து முடிந்த 4 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பலத்த அடி விழுந்துள்ளது. தற்போது, மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். இலங்கையில் தமிழர்களுக்கு செய்த துரோகத்துக்கும், தமிழகத்தில் மீனவர்களுக்கு செய்த துரோகத்துக்கும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். ஒரு தொகுதியில் கூட காங்கிரசால் வெற்றி பெற முடியாது.
புதுடெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்ட ஒரு ஆண்டிற்குள் 28 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது மத்திய அரசின் நிர்வாக சீர்கேட்டையும், ஊழல், கற்பழிப்பு குற்றங்களையும் பொதுமக்கள் சகித்துகொள்ள தயாராக இல்லை என்பதையே காட்டுகிறது. காங்கிரஸ்காரர்கள் பொய் சொல்லிக் கொண்டு உங்களிடம் வந்தால் ஊருக்குள்ளயே விடாதீர்கள். நல்லவர்கள் போல் நடப்பார்கள் நம்பாதீர்கள். பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு துணையாக நின்றது காங்கிரஸ் கட்சிதான் என்பதை மறந்துவிடாதீர்கள். சிதம்பரமும், ஜி.கே.வாசனும் இனி தனியாளாய் நிற்க வேண்டிய காலம் வந்துவிட்டது.
கூலியை உயர்த்திகேட்ட குற்றத்திற்காக கீழவெண்மனியில் 44 பேரை எரித்துக்கொன்ற சம்பவத்திலும், தியாகி இமானுவேல் கொலை செய்யப்பட்டபோதும் சரி, பரமக்குடி துப்பாக்கி சூட்டில் ஆறுபேர் சுட்டு கொன்றபோதும் சரி விசாரணைக்காக அமைக்கப்பட்ட நீதிபதிகள் கொண்ட விசாரணை கமிஷன்கள் அனைத்தும் நம் மக்களுக்கு எதிராகவே தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. நீதி மறுக்கப்பட்ட சமூகமாக நாம் இருக்கிறோம். நமக்கு துரோகம் செய்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவோம்" என்றார்.
வியாழன், 19 டிசம்பர், 2013
செவ்வாய், 17 டிசம்பர், 2013
தென் மாவட்ட முன்னேற்றத்திற்கு உத்தரவாதம் தரும் கட்சியுடன் கூட்டணி: டாக்டர் கிருஷ்ணசாமி பேச்சு .....
புதிய தமிழகம் கட்சியின் 17–ம் ஆண்டு தொடக்கவிழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, கட்சி மாநாடு ஆகியவை தென்காசியில் நடந்தது. இதில் கலந்துகொண்ட கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
நெல்லை மாவட்ட மேற்கு பகுதியில் ஏராளமான வளங்கள் இருந்தும் வளர்ச்சி பெறவில்லை. தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் வேண்டும் என்று புதிய தமிழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆளும் கட்சியில் கூட்டணி வைத்தால் பொதுமக்களுக்கு நல்லது செய்யமுடியும் என்று கூட்டணி வைத்தோம்.
ஆனால் எந்த மரத்தின் நிழலில் வளரும் செடியும் பயன்தராது. வெயிலுக்கு வந்தால் தான் அந்த செடியின் மூலம் பலன் கிடைக்கும். தென்மாவட்ட மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றிற்கு யார் உத்தரவாதம் தருகிறார்களோ அந்த கட்சியுடன் தான் கூட்டணி வைப்போம். இது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும்.
தென்காசி மத மோதல்-அரசு மெத்தனம்: கிருஷ்ணசாமி
தென்காசி: தென்காசியில் கடந்த 3 வருடங்களாகவே மத மோதல்கள் நடந்து வரும் நிலையில் அரசு மெத்தனமாக இருப்பது கண்டனத்துக்குரியது என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். தென்காசியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பிப்ரவரி 24ம் தேதி மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் 17ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி மாநாடு நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் அகில இந்திய சமூக நீதி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். தென்காசியில் கடந்த 2,3 ஆண்டு காலமாகவே தொடர்ந்து மத மோதல்கள் இருந்து வருவது வருத்தம் அளிக்கிறது. மத, ஜாதி மோதல்கள் எவ்விதத்ததிலும் சமுதாயத்திற்கு முன்னோற்றம் அளிக்காது. இரு பிரிவு மோதல்களை நிரந்தரமாக தீர்க்காமல் இந்த அரசு காவல்துறையை வைத்து தீர்க்க நினைப்பது அறிவுபூர்வமானது அல்ல. அரசின் மெத்தனப் போக்கு கண்டிக்கத்தக்கது. நிரந்தர தீர்வு ஏற்பட அரசு நடவடிக்கை எடுக்கைவில்லையெனில் புதிய தமிழகம் அந்த பணியை செய்யும். வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது என்று கோஷமிட்டு ஆட்சிக்கு வந்தவர்கள் தென் தமிழகத்தை தேய வைத்து விட்டார்கள். தமிழகத்தில் புதிதாக 39 தொழிற்சாலைகள் தொடங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதில் திருச்சிக்கு தெற்கே எதுவும் இல்லை. தென் மாவட்டத்தில் புகழ் பெற்ற தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க நடைபெறும் சட்ட மன்ற தொடரிலேயே அறிவிக்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும். பல்வேறு வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்த அரசு அதனை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறது. வாக்குறுதியை அரசியல் சாசன முறைபடி நிறைவேற்ற வேண்டும். அதுதான் நாணயமான செயல். தென்காசி எம்பியாக உள்ள அப்பாத்துரை பல வாக்குறுதி கொடுத்தார். ஆனால் அவரும் நிறைவேற்றவில்லை. விரைவில் தென்காசி மாவட்ட மக்களுக்காக மாபெரும் மக்கள் இயக்கம் தொடங்க உள்ளேன் என்றார்.
தென்காசியில் புதிய தமிழகம் கட்சி மாநாடு
தென்காசி: தென் மாவட்டங்கள் தொழில் வளர்ச்சி இல்லாமல் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறாத ‹ழ்நிலை தொடர்ந்து ஏற்பட்டு வருவதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ தெரிவித்தார்.
தென்காசியில் புதிய தமிழகம் கட்சியின் மாநாடு நடந்தது. கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். கூட்டத்தில் ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர சைக்கிள், தையல் மிஷின், பழ மரக்கன்று, விவசாயிகளுக்கு உபகரணங்கள், ஏழை எளியோர்களுக்கு சேலை உட்பட நலத்திட்ட உதவிகள் வழங்கி கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ பேசியதாவது:
செங்கோட்டை - புனலூர் அகல ரயில்பாதை பணிகள் தொடர்ந்து காலதாமதப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெறாததால் அகலரயில்பாதை அமைக்கும் பணியில் தேக்க நிலை இருப்பதாக ரயில்வே நிர்வாகமே தெரிவித்துள்ளது. தென்மாவட்டங்களில் தொடர்ந்து தொழில்வளர்ச்சியை ஏற்படுத்திய எந்தவித நடவடிக்கையும் மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ளவில்லை. இதனால் ஏராளமானோர் படித்து வேலைவாய்ப்பை பெரும் ‹ழ்நிலை இல்லாத நிலை தொடர்கிறது என குறிப்பிட்டார்.கூட்டத்தில் மாநில இளைஞரணி இணை செயலாளர் மதுரம் பாஸ்கர், மாவட்ட செயலாளர்கள் விருதுநகர் ராமராஜன், திருச்சி ஐயப்பன், மதுரை வக்கீல் பாஸ்கர், மாவட்ட துணை செயலாளர் இன்பராஜ், வடக்கு மாவட்ட செயலாளர் அரவிந்தராஜா, மாநகர் மாவட்ட செயலாளர் செல்லப்பா ஆகியோர் கலந்து
கொண்டனர். தென்காசி ஒன்றிய செயலாளர் சந்திரன் நன்றி கூறினார்.