திங்கள், 29 டிசம்பர், 2014

திராவிட கட்சிகள் ஆட்சியில் அதிகரிக்கும் கவுரவக் கொலை: கிருஷ்ணசாமி சாடல்..

மதுரை: ''திராவிட கட்சிகள் ஆட்சியில் தொழில் வளருகிறதோ இல்லையோ கவுரவக் கொலைகள் அதிகரித்துள்ளன,'' என புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டினார்.
மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது: கலப்பு திருமணம் செய்வோர் கொலையாவது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. 20 மாதங்களில் 40 பேர் கொலையாகி உள்ளனர். காதல் திருமணம் செய்தவர்களை தாக்கும்படி பா.ம.க., எம்.எல்.ஏ., ஒருவரே தூண்டுகிறார். பெண் சிசு கொலைக்கும், கலப்பு திருமணம் செய்யும் பெண் கொலை செய்யப்படுவதற்கும் வித்தியாசம் இல்லை. ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., ஆட்சியில் இருந்துள்ளன. இவர்கள் ஆட்சியில் கவுரவக் கொலைகள் அதிகரித்துள்ளன. தொழில், வேலைவாய்ப்பு வசதிகள் அதிகரிக்கிறதோ இல்லையோ, கவுரவக் கொலைகள் அதிகரித்துள்ளன. தமிழர்களுக்காக குரல் கொடுப்பதாக கூறும் நெடுமாறன், சீமான் போன்றோர் இதை கண்டிக்காதது ஏன்? ஜாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும், என்றார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக