சனி, 31 ஜனவரி, 2015

பழனி.....தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்கான... முதல்மரியாதை மண்டகப்படி திருவிழா.

தமிழ் கடவுள் பழனி முருகன் திருக்கோயிலில்...
தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்கான...
முதல்மரியாதை மண்டகப்படி திருவிழா... நடைபெற்றது...
பாண்டியர் பரம்பரையான...
மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின்
தலைமகனார்...
தமிழினவேந்தர்...
மண்டகப்படி மீட்டெடுத்த போராளி...
பெ.ஜான்பாண்டியன் அவர்களுக்கு
பரிவட்டம் கட்டி முதல்மரியாதை
செய்யப்பட்டது...
உலகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து
திரளான தேவேந்திர குல வேளாளர் செந்தங்கள்
கலந்துகொண்டனர்...
பள்ளர் குலமே...! பாண்டியர் குலம்...!.

திருவரங்கம் இடைத்தேர்தலில் திமுகவுக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு...

திருச்சியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த திருவரங்கம் தேர்தல் குறித்து பேசும் போது:
ஜனநாயகத்தின் அடிப்படை அம்சமாக விளங்க்கூடியவைகளில் நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல்கள் எந்த அளவிற்கு நேர்மையாகவும், வெளிப்படையாக நடைபெறுகிறதோ அதை பொறுத்தே ஒரு நாட்டில் வலுவடையக்கூடிய தன்மையை நிர்ணயிக்கும் ஆனால் அண்மைக்காலமாக தமிழகத்தில் நடைபெற்றக்கூடிய பொதுதேர்தல்களோ அல்லது இடைத்தேர்தல்களோ ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக ஆக்க கூடியதாக இருக்கின்றன. அதற்கு உதாரணமாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதியிலிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகள் வாங்கப்பட்ட சுழ்நிலை உருவாக்கப்பட்டது. இடைத்தேர்தலை பொறுத்தமட்டில் ஜனநாயகத்தையே தாழ்த்த கூடிய வகையில் முற்றிலும் வாக்காளர்களை விலைபேசக்கூடிய நிலை உள்ளது.
இப்படிப்பட்ட கூழ்நிலையில் தமிழகத்தில் சொத்துகுவிப்பு வழக்கில் ஜெ. தண்டனை பெற்று தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்த பிறகு நடக்க கூடிய இடைத்தேர்தல் என்பதால் ஜனநாயக விதிமுறைகளுக்கு மாறாக முன் உதாரணமாக நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. எனினும் எவ்வளவு மோசமான சுழ்நிலைகள் உருவானாலும் கூட ஜனநாயகத்தின் கடமையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் அதே போல சமூக இயக்கங்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் உண்டு.
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரையில் புதியதமிழகம் கட்சிக்கு 180 கிராமங்களில் கிளைகளும், 60,000 மேற்பட்ட வாக்குகள் உண்டு. அந்த அடிப்படையில் தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஜெ. போட்டியிட்ட போது அவருக்காக நானே பிரச்சாரத்தில் ஈடுபட்டேன்.
புதியதமிழகம் கட்சி போட்டியிடவில்லை. திமுக தலைவர் கலைஞர் அவர்கள் திமுக வேட்பாளாரை பொதுவேட்பாளராக ஏற்றுக்கொண்டு ஆதரவளிக்க வேண்டும் என்றும், திமுக பொருளாளர் ஸ்டாலின் என்னிடம் தொலைபேசியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டுக்கொண்டதற்கு இனங்க திமுக வேட்பாளர் ஆனந்த அவர்களுக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவளிக்கிறது. அவருடைய பெற்றிக்கு புதிய தமிழகம் பொறுப்பாளர்கள் முனைப்புடன் செயல்படுவார்கள். சுழ்நிலையை பொறுத்து ஆனந்த அவர்களுக்கு பிரச்சாரம் செய்வேன்.
புதிய தமிழகம் கட்சி ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் அங்கம் வகித்தது. தமிழகத்தை பொறுத்தவரையில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை. தமிழகத்தில் ஒரு ஆட்சி இருக்கிறதா? இல்லையா என்கிற மிகப்பெரிய கேள்வி எழுந்துக் கொண்டுயிருக்கிறது.
சட்டத்திற்கு புறமான ஆட்சி செய்து கொண்டுயிருக்கும் ஆளுங்கட்சியை எதிர்த்து போட்டியிடும் பிரதான எதிர்கட்சியான திமுகவின் வேட்பாளரை ஆதரிக்கிறோம். ஜனநாயகத்தில் போர் என்று வந்துவிட்டால் கீழே படுத்துக்கொள்ள முடியாது. எதிர்த்து சண்டையிட வேண்டும். தேர்தலை சந்திக்காதவர்கள் எப்படி அரசியல்கட்சி நடத்த முடியும் .

ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் திமுகவுக்கு புதிய தமிழகம் ஆதரவு : டாக்டர் க. கிருஷ்ணசாமி பேட்டி...

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தலில், திமுக வேட்பாளரை புதிய தமிழகம் கட்சி ஆதரிக்கும் என்றார் அக்கட்சியின் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி.
திருச்சியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி :
மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்கள் ஜனநாயகத்தின் அடிப்படை அம்சங்களுள் ஒன்று. இத்தேர்தல்கள் நேர்மையாக நடைபெற்றால் தான் நாட்டின் ஜனநாயகம் வலுப்பெறும். ஆனால், தமிழகத்தில் அண்மைக்காலமாகக் கையாளப்படும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் நடைமுறை, ஜனநாயகத்தை தரம் தாழ்த்துவதாக உள்ளது.
இந்த மோசமான நடைமுறை ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலிலும் தொடரும் என்பது உறுதி. ஜனநாயக விதி மீறல்கள் இல்லாமல் இத்தேர்தல் நடைபெறும் என்பதில் நம்பிக்கையில்லை. இருப்பினும், தேர்தலைச் சந்திக்காத அரசியல் தெளிவான சிந்தனையாக இருக்க முடியாது. தேர்தல் என்ற ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு அரசியல் கட்சிகளுக்கும் உண்டு என்ற அடிப்படையில், இத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சி, திமுகவுடன் கைக்கோர்த்து களமிறங்குகிறது.
ஸ்ரீரங்கம் தொகுதி திமுக வேட்பாளரை பொது வேட்பாளராகக் கருதி ஆதரவளிக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் ஆகியோர் கேட்டுக் கொண்டதன் பேரில், ஸ்ரீரங்கம் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரிக்கும் முடிவை புதிய தமிழகம் கட்சி மேற்கொண்டுள்ளது.
இத்தொகுதியில் எங்கள் கட்சிக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. இப்பகுதியில், சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் உள்ளனர். எங்கள் கட்சித் தொண்டர்கள் அனைவரும், திமுக வேட்பாளரின் வெற்றிக்கு முழு வீச்சில் பாடுபடுவர்.
இத்தொகுதி வாக்காளர் பட்டியலில் 9 ஆயிரம் வாக்காளர்கள் 2 முறை இடம் பெற்றுள்ளனர் என்ற தகவல் வேதனைக்குரியது. சரியான, தெளிவான வாக்காளர் பட்டியல் கூட வெளியிடப்படவில்லை என்பது, ஜனநாயகத்தைக் கேள்விக் குறியாக்கியுள்ளது என்றார் டாக்டர் கே. கிருஷ்ணசாமி.

தி.மு.க.,வுக்கு ஆதரவு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி.

.புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி திருச்சியில் கூறியதாவது: ஸ்ரீரங்கம் தொகுதியில் புதிய தமிழகம் கட்சிக்கு, 60 ஆயிரம் ஓட்டுகள் உள்ளன. இதனால் தான் கடந்த, 2011ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதாவுக்கு, நானே நேரடியாக பிரசாரம் செய்தேன். தற்போது நடக்கவுள்ள ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில், புதிய தமிழகம் போட்டியிடவில்லை. 'ஸ்ரீரங்கம் தேர்தலில் போட்டியிடும், தி.மு.க., வேட்பாளரை, பொது வேட்பாளர் என்ற அடிப்படையில் ஆதரிக்க வேண்டும்' என, அக்கட்சி தலைவர் கருணாநிதி ஆதரவு கேட்டார். மேலும், தி.மு.க., தரப்பில் என்னிடம் ஆதரவு கேட்டனர். அதனால், இடைத்தேர்தலில் மட்டும், தி.மு.க., வேட்பாளர் ஆனந்தை, புதிய தமிழகம் கட்சி ஆதரிக்கிறது. தமிழகத்தில் நடக்கும் சட்டத்துக்கு புறம்பான, ஆட்சிக்கு முடிவு கட்டவே, ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க.,வை ஆதரிக்கிறோம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

வியாழன், 29 ஜனவரி, 2015

குடியரசு தின அணிவகுப்பில் ஜெயலலிதா படத்தை வைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை...டாக்டர் க.கிருஷ்ணசாமி .

 புதிய தமிழகம் கட்சியின் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான கிருஷ்ணசாமி தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு எழுதிய கடிதம்: 
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தண்டனை பெற்று சிறை யில் அடைக்கப்பட்டார். தற்போது மேல்முறை யீட்டு மனுவில் ஜாமீனில் வெளியில் உள்ளார் என்பது உங்களுக்கும், உங்களுக்கு கீழ் பணிபுரியும் அதிகாரிகளுக்கும் நன்றாக தெரியும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சட்டப்பேரவை உறுப்பினர் பதவி, அவருக்கு இருந்த அதிகாரங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு அவருக்கு பதிலாக வேறொருவர் நியமிக்கப்பட்டுள் ளார் என்பதும் உங்களுக்கு நன்றாக தெரியும். 

நமது நாடு 1950ம் ஆண்டு குடியரசாக அறிவிக்கப்பட்ட ஜனவரி 26ம் தேதியை, ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம். தமிழகத்தில் அரசு சார்பில் கொண்டாடப்பட்ட குடியரசு தின துறைவாரியான வாகன அணி வகுப்பு நடத்தப்பட்டது. அணிவகுப்பு வாகனங்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படங்கள் காட்சிப்படுத்தி அலங்கரிக்கப்பட்டிருந்தது நியாயமா என உங்களிடம் நான் கேட்கிறேன். நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவரின் படத்தை முன்னுதாரணமாக வைப்பது அரசியல் சாசன முறைப்படி சட்ட விரோதமான செயலாகும். தமிழக அரசு மேற்கொண்டிருக்கும் நடைமுறை ஜனநாயகத்துக்கு எதிரானதாகும். 

எதிர்காலத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் இக்கடிதத்தை எழுதியுள்ளேன். ஜனநாயகத்துக்கு விரோதமாக நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தனிக்குழு அமைத்து, அணிவகுப்பு வாகனங்களில் ஜெயலலிதாவின் படங்கள் இடம்பெற வைக்க காரணமாக இருந்த அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

வெள்ளி, 23 ஜனவரி, 2015

.திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் ராயபுரம் கிராமத்தில் தேவேந்திர மக்கள் மீதான ஒடுக்குமுறை. கண்டித்து புதிய தமிழகம் சார்பாக..துண்டறிக்கை.

Displaying PUTHIYA TAM copy.jpgதிருவாரூர் மாவட்டத்தில் 56% இறுக்கும் தேவேந்திரகுல வெளாளர்கள் சமீபகாலமாக தேவேந்திரர் அமைப்புகளிலும் புதிய தமிழகம் கட்சியிலும் அமைப்பாக வலுப்பெருவதை போறுக்காத ஆதிக்க சக்திகள் திட்டமிட்டு தேவேந்திரகுல மக்கள் மீது சமூக..பொருளாதார..அரசியல் அடக்குமுறையை கையாண்டு வருகின்றனர்..திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் பனையூர் கிராமத்தில் தேவேந்திர படுகொலைகள்..மன்னார்குடி ஒன்றியம்  தென்பாதி கிராமத்தில்  தேவேந்திர மக்கள் மீதான ஒடுக்குமுறை...தற்போது நீடாமங்கலம் ஒன்றியம் ராயபுரம் கிராமத்தில்  தேவேந்திர மக்கள் மீதான ஒடுக்குமுறை. கண்டித்து புதிய தமிழகம் சார்பாக மாண்புமிகு.. புதிய தமிழகம் நிறுவனர். டாக்டர்.

டாக்டர் க.கிருஷ்ணசாமி ..M.D.M.l.A..அவர்கள் ஆணைக்கினங்க புதிய தமிழகம் திருவாரூர் மாவட்டத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம்.மற்றும் ..துண்டறிக்கை...

புதன், 14 ஜனவரி, 2015

தியாகி.S.G முருகையன்தேவேந்திரர். M.P.அவர்களின் வாழ்வும்..பணியும்...

 1.இட ஒதுக்கீடு இல்லாத காலத்தில் இந்தியாவின் முதல் பட்டியல் வகுப்பினர்..(தேவேந்திரர்) பிரிவில் முதல் கோட்டூர் ஒன்றிய பெருந்த்தலை வர்.  2.மன்னார்குடி முத்துதுப்பேட்டைக்கு உழைக்கும் மக்களின் உழைப்பை ஒன்று திரட்டி ஓரே நாளில் அரசின் உதவியின்றி பாணி ஆற்றின் கீழ் கரையை அகலப்படுத்தி பேருந்து செல்வதற்கு சாலை அமைத்த சிரமதான சிற்பி... 
3.ஆதிச்சபுரம்..வேதபுரம் புதிய சாலையை மக்களின்  மூலம் சிரமதான பாணியில் உருவாக்கி தந்தவர். 4.வீராக்கி..விக்கிரபாண்டியம் சாலையை மக்களால் உருவாக்கி தந்தவர். 5.கமலாபுரம்..கண்கொடுத்தவனிதம்..சாலையை  சிரமதான பணியின் மூலம் உருவாக்கித்  தந்தவர்.. 6.கொரடாச்சேரி..கப்பலுடயான் ..சாலையை சிரமதான பணியின் மூலம் உருவாக்கித்  தந்தவர்.. 7.சித்த மருந்தகங்கள் பெருகவாழ்ந்தான்.. விக்கிரபாண்டியம்..திருக்களார்...ஆகிய ஊர்களில் அமைத்துக் கொடுத்தவர்... 8.கால்நடை மருத்துவ மனைகள் கோட்டூரிலும்...பெருகவாழ்ந்தானிலும் அமைத்து கொடுத்தவர்.. 9.S.G.முருகையன்தேவேந்திரர்.M.P.அவர்களின் முயற்சியில் பாம்புக்கானி..பெருமள்கோயில்..நத்தம்..எளவனூர்....சொத்திரியம்..கண்டமங்கலம்..பெரியகுருவாடி. மகாராசபுரம்..பாலையூர்..நத்தம்..தெற்குதென்பரை..காரைத்திடல்..போன்ற பல ஊர்களில் தொடக்கப்பள்ளிகளை உருவாக்கி தந்தவர்.. 10..கோட்டூர் ஒன்றிய அலுவலகத்தின் புதிய கட்டிடத்தை நிர்மானித்தவரும் இவரே.. 11.விக்கிரபாண்டியம்.இராதாநரசிம்மபுரம்..கேட்டூர்..பெருகவாழ்ந்தான்..மழவராயநல்லூர்..களப்பால். புத்தகரம்..ஆகிய ஊர்களில் உயர்நிலைப்பள்ளிகளை உருவாக்கி தந்தார்.. 12..நாகை நாடாளுமன்றத்தின் முதல் பட்டியல்வகுப்பினர் (தேவேந்திரர்) S.G.M அவர்கள்தான்.. 13.நாகையில் இயங்காமல் கிடந்த துறைமுகத்தை உடனே,ஜனதிபதி நீலம் சஞ்சீவிரெட்டி அவர்களை சந்தித்து நாகை துறைமுகத்தை இயங்க வைத்தார்..கப்பல் போக்குவரத்து தொடங்க வைத்தார். (வருடம்1977..1978). 14.அயல் நாடுகளுக்கு செல்ல அதிக அளவில் கையொப்பமிட்ட M.P.யும் இவரே.. இவரின் அரசியல் ஏளிமை மற்றவர்களுக்கு ஒரு படமாக அமையும்..சாதாரணமான குடிசையில் வாழ்ந்து, பேருந்தில் பயணம் செய்து கடைசிமூச்சு உள்ளவரை ஏழை,ஏளிய மக்களுக்காக வாழ்ந்த இவரை 06.01.1979ஆம் ஆண்டு இரவு 12.30.மணியளவில் பேருந்திலிருந்து இறங்கி தன்வீட்டிற்கு செல்லும்போது ஆதிக்க கும்பல் கூலிப்படையின் துணையோடு 33இடங்களில் கத்தி குத்து காயங்களுடன் செங்குருதி சிந்தி சாய்ந்தர் அந்த மாவீரன்... S.G.முருகையன் என்ற அந்த மாவீரன் மள்ளர்குல மாணிக்கம் இறக்கும் போது அவரிடம் இருந்த பெட்டியில்..100 ருபாய் பணம்..மக்கள் அவருக்கு கொடுத்த மனுக்கள்...ஒரு கதர்வேட்டி..சட்டை..குழந்தைகளுக்கு வாங்கிய மில்க்பிக்கீஸ் பிஸ்கெட்...லெட்டர் பேடு..பாராளுமன்ற உறுப்பினர் அட்டை...மூக்குக்கண்ணாடி..பாராளுமன்ற உறுப்பினர் முத்திரை ...சில்லரைகாசுகள்...மட்டுமே இருந்தன..எந்த வங்கிகணக்கிலும் சேமிப்பு இல்லை...அவர் இறந்ததாலும் அவர்விட்டு சென்ற பணிகள் தொடரும்...சோழமண்டலத்தின் இம்மானுவேல்சேகரன் ஐயா S.G.M. அவர்களின் நினைவு தினம் ஆண்டு தோறும் ஜனவரி 6ம் நாள் சித்தமல்லியில் சங்கமிப்போம்..வீரவணக்கம் செலுத்துவோம்..

சனி, 10 ஜனவரி, 2015

பசுபதிபாண்டியன் நினைவு நாள்: தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு!


pasupathi-pandianதேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு நிறுவனர் பசுபதிபாண்டியனின் 3ம் ஆண்டு நினைவுநாள் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி அலங்காரத்தட்டில் வருகிற 10ந் தேதி(சனிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது.
இதில் தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொள்வார்கள்.
நிகழ்ச்சியில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாதவாறு தடுக்க தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.துரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு நிறுவனர் பசுபதிபாண்டியனின் நினைவு நிகழ்ச்சி அமைதியான முறையில் நடப்பதற்காக 7ந் தேதி (நேற்று) காலை 6 மணி முதல் வருகிற 11ந் தேதி காலை 6 மணி வரை தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி விழாவில் கலந்து கொள்ளும் அனைவரும் ஊர்வலமாக வருவதற்கும், 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து வகை வாடகை வாகனங்கள் நுழைவதற்கும் குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144ன் கீழ் மாவட்ட கலெக்டரால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
விழாவை அமைதியான முறையில் நடத்திட எனது தலைமையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. விழாவில் கலந்து கொள்ள வருபவர்கள் தூத்துக்குடி நகர பகுதிக்குள் செல்லாமல் போலீசாரால் அனுமதிக்கப்பட்ட வழிதடத்தில் செல்ல அறிவுறுத்தப்படுகிறது. இந்த தடை உத்தரவு திருமணம் மற்றும் இறுதி சடங்கு ஊர்வலங்களுக்கு பொருந்தாது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மள்ளர் குலத்தில் பிறந்த போதுவுடமை போராளி.. முருகையன்தேவேந்திரர் அவர்களின் 36ம் ஆண்டு நினைவேந்தல்.. புதிய தமிழகம் கட்சி..வீர வணக்கம்....

Displaying 20150106_131954.jpgபுதிய தமிழகம் நிறுவனர் டாக்டர்.

க.கிருஷ்ணசாமி md.mla..அவர்கள் ஆணைக்கினங்க திருவாரூர் மாவட்ட புதிய தமிழகம் கட்சியினர் வீர வணக்கம் செலுத்தினர்.

தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன்..அவர்களின் 3ம் ஆண்டு நினைவு நாள்...

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் நினைவு தினத்தை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன், திண்டுக்கல், நத்தவனத்துப்பட்டி பகுதியில் 2012 ஜன., 10 ல் கொலை செய்யப்பட்டார். அவரது நினைவு தினத்தில் அவரது சொந்த கிராமமான அலங்காரதட்டு பகுதியில் நினைவு தினம் அணுசரிக்கப்படும். இதில் கலந்து கொள்ள அவரது ஆதரவாளர்கள் பல மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடிக்கு வருகை தருவார்கள். அப்போது அசம்பாவித சம்பவங்கள் நடக்கமால் இருக்க, ஜன., 8 ம் தேதி இன்று காலை 6 மணிமுதல் 11 ம் தேதி காலை 6 மணி வரை 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மள்ளர் மீட்பு களத்தின் மாபெறும் கவனஈர்ப்பு ஒன்றுகூடல் நிகழ்வு..நாகை..

நெல்லின் மக்களான மள்ளர்களை SC பட்டியலிலிருந்து நீக்கி MBC பட்டியலில சேர்க்க கோரியும் 10 விழுக்காடு இடப்பங்கீடு வழங்க கோரியும் மருதநிலத் தலைவன் தமிழத்திரு.கு.செந்தில் மள்ளர் தலைமையில் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கவன ஈர்ப்பு ஒன்று கூடல் நடைபெற்றது ,ஒருங்கிணைப்பு மள்ளர் மீட்புக் களம் ,நாகை மாவட்டம் சோழர்நாடு.

செவ்வாய், 6 ஜனவரி, 2015

தஞ்சை மாவட்ட களநாயகர்கள் வழியாக சமூக வரலாறு....

சமூக சமத்துவத்திற்கான போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பிறப்பால் உயர்வு, தாழ்வு கற்பிக்கும் முறை மிகவும் கொடியது இந்து மதமும், மனுதர்மமும் கூடவே சேர்ந்து இந்தியாவில் சாதி முறையை இறுகப்படுத்தின. இழப்பதற்கு ஏதுமில்லாதவர்களிடம் கூட மூட நம்பிக்கைகளும், சாதிய இழிவுகளும் ஒட்டிக் கிடந்தன.

இக்கொடுமைகளுக்கு எதிராகத் தீர்க்கதரிசிகளாக, ஞானிகளாக நின்று அறிவாயுதம் ஏந்திக் கருத்தியல் போர் புரிந்தனர் பலர். நேரடியாக மக்களிடம் நின்று மக்களைத்திரட்டித் தலைமை தாங்கி சாதியம் மற்றும் வர்க்கச் சுரண்டலுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர் பலர். இவர்களை எல்லாம் பதிவு செய்வது அவசியமானது.

tanjore temple

வரலாறு என்பது மன்னர்களின், போர்களின், வரலாறு மட்டும் அல்ல. மக்களின் வரலாறு கீழிருந்து மேலெழுப்பும் வரலாற்று வரைவுகள் இன்று எழுதப்படுகின்றன. “உழைக்கும் மக்கள் அறிவுத்தாகம் கொண்டு இருக்கிறார்கள்.ஏனெனில் அவர்கள் வெற்றிபெற அது தேவைப்படுகிறது. உழைக்கும் மக்களில் பத்தில் ஒன்பது பேர் அறிவு தான் அவர்களுடைய விடுதலைப் போராட்டத்தில் ஆயுதம் என்பதையும் அவர்களுடைய தோல்விகள் எல்லாம் அவர்களுடைய கல்விக் குறைவால் நேர்ந்தவை என்பதையும் இப்பொழுது உண்மையிலேயே கல்வி ஒவ்வொருவருக்கும் எளிதில் கிடைக்கும்படி செய்வதும் தம் கடமை என்பதையும் உணர்ந்து விட்டார்கள்” என்பார் லெனின்.

இந்த அறிவு குறித்து, கல்வி குறித்து, விழிப்புணர்வின் ஒரு பகுதியாகத்தான் களத்திலே நின்று மக்களுக்காகப் போராடிய நாயகர்களின் வரலாறு களைப் பதிவு செய்வதைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

கீழத்தஞ்சையின் நிலவுடைமைக் கொடுமைகள் மனித குல நாகரிக வரலாற்றின் மிக மோசமான பக்கங்கள் இன்றைய இளையதலைமுறை நம்ப மறுக்கும் இவை யாவும் இச்சமூகத்தின் மீது நடத்தப் பட்ட வன்கொடுமைகள் ஆகும். பொருளாதார நிலையில் நிலமற்ற நிலம் சார் உழைப்பாளிகளான இம் மக்கள் சாதி அடுக்கு நிலையிலும் ஒதுக்கப் பட்டார்கள். சாதி, நிலம் இரண்டின் பாற்பட்டும் ஒடுக்கப்பட்ட இவர்களுக்காகப் பொதுவுடைமை அமைப்புகள், இயக்கங்கள் கண்டனர். இவ்வியக்கங் களின் முன் நின்ற களப்பேராளிகளின் பங்கும், பணியும் குறிப்பிடத்தக்கவை.

ஆங்கிலேயே ஏகாதிபத்திய அடக்குமுறை இந்தியர்களை நசுக்கியது. இந்தியப் பொருளா தாரத்தைச் சுரண்டியது. கிட்டத்தட்ட இந்தி யாவை இங்கிலாந்தின் சந்தையாக மாற்றியது. அந்த அளவிற்குப் பொருளாதார அடக்குமுறைகள் இருந்தன. ஆங்கிலேயர்களை விரட்ட இந்தியத் தலைவர்கள் பல்வேறு வழிகளைக் கையாண்டு இறுதியில் வெற்றிபெற்றனர். சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியக் காவல்துறை தஞ்சை மாவட்டத்தில் இருந்த பல்வேறு இளம் போராளிகளை அரசாங்கத் துப்பாக்கிக் குண்டுகளால் துளைத்து எடுத்தது. ஏன்? யாருக்காக இளம் போராளிகளைக் கொன்றார்கள்? அப்படி என்னதான் அந்தப் போராளிகள் செய்தார்கள்?

மேற்கண்ட வினாக்களுக்கு விடை காண முற்பட்டால் இந்தக் கொள்ளையர்களைக் காட்டிலும் அந்த வெள்ளையர்களே எவ்வளவோ பரவா யில்லை என்று தோன்றும்.

இந்திய விடுதலைப்போராட்ட தியாகிகளை விட சமூக விடுதலைப் போராட்ட வீரர்களைத் தான் உயர்ந்தவர்களாக இன்று தஞ்சை மண் கொண்டாடி வருகிறது. காரணம் தஞ்சை மாவட்டத்தில் இந்து நிலப்பிரபுத்துவ கோட்டை களை இடித்து, சமூக விடுதலைக்கு வித்திட்ட மாபெரும் தியாகிகள் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து வருகிறார்கள்.

தஞ்சை மாவட்ட களநாயகர்கள்:

ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கும் மாற்றத்திற்கும் குறிப்பிட்ட சமூக அரசியல் பொருளாதார இயக்கங்களின் பங்களிப்புகள் மிக முக்கியமானவை. அதே வேளை, தனித்துவம் மிக்க தனி மனித ஆளுமை களின் செயலாக்கமும் தனித்து நோக்கவேண்டுவன.

சமூக விளைச்சலில் முன்னத்தி ஏர்களாய் தொழிற்பட்ட சமூகம் சார்ந்து இயங்கிய மக்கள் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள் பல வெளி வந்துள்ளன. பொதுவான மனிதப் பண்பியல் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கக் கூடியதும், சமூக முன் மாதிரியாகத்திகழத் தக்கதுமாக வாழ்க்கை வரலாற்று நூல்கள் விளங்குகின்றன.

நாட்டின் விடுதலைக்கு முன்னரும், பின்னரு மான கால கட்ட அரசியல் சமூகப் பண்பாட்டு விழுமியங்களைக் கண்டறியும் நோக்காகவும், நாட்டின் விடுதலைக்கான போராட்டக்களத்தில் தொடங்கிப் பொருளாதாரச் சமத்துவம், பண் பாட்டு மீட்டுருவாக்கம் ஆகிய தளங்களில் விரியும் தன்மை கொண்ட ஆய்வுப் பொருண்மைகளைக் கொண்ட பல நூல்கள் வெளிவந்துள்ளன.

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக மட்டுமின்றி சமூக நிலையிலும், பண்பாட்டு நிலையிலும், முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகத் தஞ்சை வட்டாரம் விளங்குகிறது. இன்றைய தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களை உள்ளடக்கிய ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் சமூக மாற்றத்திற்காகக் களத்தில் நின்ற கீழ்க்கண்ட நாயர்களின் வரலாறு, வாழும் வரலாறாய் வார்த் தெடுத்துக் கீழ்கண்ட நூல்கள் மூலம் வரலாற்றை அறிவிக்கின்றது.

இன்றைய தஞ்சாவூர், திருவாரூர், நாகப் பட்டினம் மாவட்டங்களை உள்ளடக்கிய ஒன்று பட்ட தஞ்சை மாவட்டத்தில் சமூக மாற்றத்திற்காகக் களத்தில் நின்ற கீழ்க்கண்ட நாயகர்களின் வரலாறு வாழும் வரலாறாய் வளர்த்தெடுத்துக் கீழ்க்கண்ட நூல்கள் மூலம் வரலாற்றை அறிவிக்கிறது.

1. பி.சீனிவாசராவ்- தோழனைக்காக்கத் துடித்த தோழன்

2. தியாகி களப்பால் குப்பு

3. மாவீரன் வாட்டக்குடி இரணியன்

4. எனையீன்ற ஆம்பலாப்பட்டு (ஆறுமுகம்)

5. பாதையில் படிந்த அடிகள், தலை நிமிர்ந்த தமிழச்சிகள், மணலூர் மணியம்மை

6. மாவீரன் கணபதி- கயிற்றில் தொங்கிய கணபதி

7. தோழன் வெங்கடேசன்

8. தோழர் பட்டுராசு

9. சாம்பவனோடை சிவராமன்

10. பண்ணை அடிமைத்தனத்திற்கு எதிரான போராட்டத்தில் பி.எஸ். தனுஷ்கோடி

11. ஏ.எம். கோபு

12. மணலி கந்தசாமி-வாழ்வும் போராட்டமும்

13. எஸ்.ஜி. முருகையன் வாழ்வும் பணியும் ஆகியனவாகும்.

போராட்ட வடிவங்கள்:

தனுஷ்கோடியின் தந்தை சாத்தன் விளாத்தூர் கிராமத்தில் சுப்பிரமணிய அய்யர் பண்ணையில் பணி செய்துகொண்டிருந்தபோது நிலப்பிரபு வெங்கட்ராம அய்யர் அடித்ததினால் அடுத்து பாங்கல் கிராமத்திற்குத் தனது வீட்டின் நிலைக் கதவுகளைப் பெயர்த்து எடுத்துக்கொண்டு ஆடு மாடுகளைப் பிடித்துக்கொண்டும் மனைவி, குழந்தைகளுடன் ஓடி அங்குப் பிள்ளை இனப்பண்ணையில் பண்ணையடிமையாகப் பணியில் சேர்ந்து கொண்டார். அய்யர் பண்ணையிலிருந்து வரும் நபர்களைப் பிள்ளை இனத்தவர் காட்டிக்கொடுக்காமல் சேர்த்துக் கொள்வர் என்பது இங்கு முக்கியமான ஒன்றாகும்.

ஆலயநுழைவு:

குருக்களார் மடத்தைச்சேர்ந்த கோவில் கதவுகளைப் போராளி பி. வெங்கடேசன் திறந்து விட்டார். அனைத்து இன மக்களும் கோவிலினுள் சென்று வணங்கினர். ஊரில் உள்ள பசனைக் குழுவில் தாழ்த்தப்பட்ட மக்களையும் அழைத்துச் சென்று திருநீறு கேட்டதும் கோயில் குருக்கள் ஓடிவிட்டனர். பசனையும் நின்று போனது.

தோழர் பட்டுராசு தனது கிராமமான நெம்மேலியில் பள்ளிக்கூடம் ஆரம்பித்து அதில் தன்னுடன் சிங்கப்பூரில் வேலை செய்த தாழ்த்தப்பட்ட ஆசிரியர்களைப் பணியமர்த்தினார். அனைத்து மாணவர்களையும் ஊரில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு அழைத்துச்சென்று அதிர்வை ஏற்படுத்தினார்.

வாட்டாக்குடி:

வாட்டாக்குடியில் தாழ்த்தப்பட்ட இனமக்கள் வசிக்கும் பகுதியில் சுற்றி உள்ள இடத்தை ஊர்ப் பண்ணையார் தனது ஆதிக்கத்தில் வைத்திருந்தார். 30 சேரி குடும்பமும் வேறு வாழிடமும் வழியும் இல்லாது இருப்பதைக் கண்ட இரணியன் பண்ணை யாரிடம் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பேசி அந்தப் புறம்போக்கு இடத்தை மக்கள் பயன்படுத்த வழி செய்தார்.

முள்வேலி:

கழனிவாசல் கிராமத்தில் நிலப்பிரபுக்கள் அங்குள்ள குளத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் நீர் எடுக்கக்கூடாது என மிரட்டுவது பற்றி அறிந்த தனுஷ்கோடி அங்குள்ள விவசாயத் தோழர்களை அழைத்துக் கொண்டு தானே முன்நின்று குளத்தில் இறங்கி நீர் எடுத்துத் திரும்பினார். ஆலத்தூரில் நிலப்பிரபு சாம்பசிவஐயர் ரௌடிகளை அழைத்து வந்து தாழ்த்தப்பட்ட மக்கள் இருந்த தெருவைச் சுற்றி முள்வேலி வைத்தார். தனுஷ்கோடி இக் கொடுமைகளை எதிர்த்துப் போராடி முள் வேலியை நீக்கி விட்டார்.

ஊருக்குள் நுழையத் தடை:

இதனால் மேலும் கோபமடைந்த நிலப் பிரபுக்கள் தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் வயலில் நண்டு நத்தை பொறுக்கக்கூடாது எனவும், வரப்பில் நடக்கக்கூடாது எனவும், வலிவலம் தேசிகளுக்கு சொந்தமான நமசிவாயபுரம், காருகுடி, கோயில் பத்து, நெய்விளக்கு, கீழ் வலிவலம், சுந்தர பாண்டிய புரம் மற்றும் அனக்குடி ஆகிய எட்டு பண்ணை களுக்குள்ளும் கம்யூனிஸ்ட் தலைவர்களான கே.ஆர். ஞாபனசம்பந்தம், பி.எஸ். தனுஷ்கோடி, கே.டி. நடராஜன், ஈசனூர் சுப்பையா நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் ஊருக்குள் வரக்கூடாது எனத் தடையுத்தரவு போட்டனர்.

மதுக்கூர் ஜமீன் தனது ஆதிக்கத்தில்உள்ள ஆம்பலாப்பட்டு கிராமத்தில் கரைகாப்பு, ஏரிப் புறம்போக்கு, மேய்ச்சல் தரிசு நிலங்களையும் தனி யாருக்கு விற்றார். இவற்றையெல்லாம் தனி யாருக்கு விற்றால் ஊர் மக்கள் மற்றும் ஆடு, மாடு, மேய்வது, குளிப்பதற்கெல்லாம் எங்கே போவது எனக்கேட்டு ஆறுமுகம் தனது மக்கள் படையுடன் பெரும்போராட்டம் நடத்தினார். தனது மக்கள் படையுடன் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றார்.

கூலி உயர்வு கேட்டதற்காக இராதா நரசிம்ம புரம் இராயர் பண்ணை நிலப்பிரபு இராயர் தாழ்த்தப்பட்ட மக்கள் செல்லும் பாதையை அடைத்தும், தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தும் கிணற்றில் கள்ளியைப் போட்டும் வைத்தனர். இரணியன் பண்ணையார் இராயர் வீட்டுக்குச் சென்று கார்வாரியை நையப்புடைத்துப் பாதையைத் திறந்துவிட வைத்தார்.

பெண்ணடிமைப்போராட்டம்:

பெண்கள் அடிமைத்தனமாக வாழ்வதையும், கைம்பெண் நோன்பு நோற்பதையும் கடுமையாக எதிர்த்துப் போராடினார். மணியம்மை ஆண்களைப் போல் உடை உடுத்தி புரட்சி செய்தார். தனது உறவுக்காரச்சிறுவர்கள் பொதுஇடத்தில் மண் அள்ளியதைக் கண்டு அடித்த கார்வாரியின் கையை வெட்டினார், பண்ணையே அதிர்ந்தது.

இதுபோன்ற பெண்களுக்கு சைக்கிள் ஓட்டவும், தற்காப்புக் கலைகளையும் தான் கற்றுக்கொண்டு கற்பித்தார். பண்ணையடிமைப் பெண்களை நிலப்பிரபுக்கள் பாலியல் பலாத்காரம் செய்வதை எதிர்த்துப் போராடினார்.

தோழர் பட்டுராசு பெண்ணடிமையை எதிர்த்து தன் மனைவிக்கு மோதிரம் மட்டுமே மாற்றி சுயமரியாதையாகத் திருமணத்தை நடத்தியும், வாழ்ந்து காட்டினார்.

பண்ணையடிமைச்சிறுவர்கள்:

மஞ்சக்கொல்லை பண்ணையார் தனது பண்ணையில் வேலை செய்த சிறுவனை வேலை செய்யச்சொல்லிக் கட்டி வைத்து தாக்கினார். இதைக் கேள்விப்பட்டுச் சிறுவனை அழைத்து வரச் சென்ற தாய் தந்தை உட்பட சிலரைக் கட்டி வைத்து அடித்திருக்கிறார். அடிப்பட்ட சிறுவனுக்குக் காய்ச்சல் கண்டுவிட்டது. அதனால் மறுநாள் மாடு மேய்க்க வர இயலவில்லை எனக் கூறச்சென்ற சிறுவனின் தந்தையை மீண்டும் கட்டி வைத்து அடித்திருக் கிறார். மாடுகள் தானே பண்ணைக்கு முக்கியம், மனிதர்கள் அல்லவே.

இதைக் கேள்விப்பட்ட சிவராமன் தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துக் கொண்டு பண்ணையைத் தாக்கச் சென்றார். பண்ணையார் செய்தியறிந்து ஒளிந்து கொண்டார் போலிஸ் காவலுக்கு நின்றது. மக்கள், வீட்டை முற்றுகையிட்டு போலிஸ்காரர்களுடைய துப் பாக்கியைப் பறித்துக்கொண்டு மக்கள் கோச மிட்டனர். பின்னர் போலிசின் வேண்டுகோளுக் கிணங்க சிவராமன் துப்பாக்கியைத் திருப்பிக் கொடுக்க வைத்தார்.

பாலியல் பலாத்காரம்:

காரைக்கால் சாலையில் நல்லாவூர் மேற்கேயும், கிழக்கேயும் உள்ள இரு ஊர்கள் மகாதேவ ஐயருக்குச் சொந்தமானவை. பண்ணையடிமைகளைச் சாட்டையால் அடிப்பது, சாணிப்பால் கொடுத்துக் கொல்வது அனைத்தும் இங்கு நடக்கும். இங்குத் தாழ்த்தப்பட்ட இளைஞன் ஒருவன் புதிதாகத் திருமணம் செய்தான். மணப்பெண்ணை முதலிரவு அன்றே பாலியல் பாலத்காரம் செய்தான் மகா தேவ ஐயர். இதைக் கேள்விப்பட்ட ஏ.எம். கோபு தனது தோழர்களுடன் மகாதேவ ஐயரைப் பழிதீர்த்து நிலப்பிரபுகளுக்கு எச்சரிக்கை விடும் நிகழ்வாக அமைத்தார்.

சுதந்திரப்போராட்டம்:

1941-இல் உப்பு சத்தியாக்கிரகத்தில் சேர்ந்து கொண்டு பி.சீனிவாசராவ் போராடினார். இரண்டு முறை சிறை சென்றார். 1932-இல் அந்நியத்துணியை எதிர்த்தும் போராடிச் சிறை சென்றார். 1935இல் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் 25ஆம் ஆண்டு பொன் விழாவை இந்தியாவில் கொண்டாடக் கூடாது எனத் துண்டு பிரசுரங்களை அச்சடித்துக் கொடுத் தார். தஞ்சை மாவட்டத்தில் விவசாய சங்கங்கள் ஊர்தோறும் சென்று அமைத்தார்.

மலேசியாவில் தமிழர்களைக்கொலைகாரன், தாழ்ந்தவன் என்ற பொருள்படும்படியாக ஒரங்கிள்ளேவ் என்று அந்நாட்டவர் பேசுவர். கணபதி இதை எதிர்த்துக்கடுமையாகப் போராடினார். மலேசியா தமிழர்களுக்காக அரசிடம் 45 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தி மலேசியா அரசிடம் உரிமைகளும் சலுகைகளும் பெற்றுத்தந்தார்.

1987இல் ராஜாஜி முதல்வராக இருந்தபோது தமிழகத்தில் இந்தித்திணிப்பை எதிர்த்து மலேசியாவில் கணபதி பேரணி நடத்தினார். தேநீர்க் கடை யிலும் கலப்பு மணங்கள் செய்வித்தும் ஜாதிக் கொடுமையை ஒழித்தார். எட்டாம்வகுப்பு மாணவராக இருந்தபோது திருவிடைமருதூர் ஆதின மேல்நிலைப்பள்ளியில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடர்ந்து சுதந்திரம் வேண்டி ஏ.எம். கோவிந்தராசன் போராடிக் கைதாகிச் சிறை சென்றார்.

மடங்களுக்கு எதிரான போராட்டம்:

உத்திராபதி மடத்திற்கு எதிராகவும் பண்ணையடிமைகளுக்காகவும் குப்பு போராடினார். குத்தகை வார விவசாயிகள் மூன்றில் ஒன்று 33 வாரம் கேட்டு போராடினான். தென்பறையில் விவசாயிகளை ஒன்றிணைத்து குப்பு, வெங்கடேசன், இராமானுசன், அமிர்தலிங்கம் உள்ளிட்ட தலைவர்கள் முன்னிற்று சங்கம் அமைத்தனர்.

பண்ணைக்களத்தில் பண்ணைக்கு முழுப் படியும், பண்ணையடிமைகளுக்கு முக்கால்படியும் அளப்பர். இதனை எதிர்த்துக் குப்பு போராடினார், கூலியாட்கள் கடையில் நெல்லைவிற்கும் போது கடைக்காரர் முழுப்படிப்பை முக்கால்படியாகக் குறைத்து அளப்பர். இதனை எதிர்த்துக் குப்பு தனியாகக் கடை வைத்து சரியாக அளந்து எடுத்தார். இதனைக்கண்ட ஆதிக்கத்தார் கடையை எரித்து விட்டனர்.

சாணிப்பால், சவுக்கடிக்கெதிரான போராட்டங்கள்:

குப்புசாமி பண்ணையடிமைகளையும், குத்தகை தாரர்களையும் அழைத்துப் பேசி நிலப்பிரபுக்களின் சாணிப்பால், சவுக்கடிக்கு எதிராகப் போராடினார். இதற்கான பேச்சுவார்த்தைக்கு மாவட்ட காவல் துறை துணை ஆணையர் திரு. மகாதேவன் அவர்கள் அரசு சார்பில் முன்னின்று பேச்சுவார்த்தை நடத்தினார். பண்ணையடிமைகளும், நிலப்பிரபுக் களும் தத்தம் நியாயங்களை எடுத்துக்கூறினர்.

இறுதிப்பேச்சு வார்த்தையில் பெரும் நில உடைமை யாளர் தியாகராசமுதலியார், காடுகொடுத்த நாயக்கர்கள், திருக்களார் மடாதிபதி கிருஷ்ண சாமி போன்றோரும், கே.டி. நடராஜன், களப்பால் குப்பு, சேரங்குளம் அமிர்தலிங்கம், ராமானுஜம் ஆகிய கம்யூனிச தலைவர்களும் கலந்துகொண்டு பேசியதில் சாணிப்பால், சவுக்கடி போன்ற கொடிய தண்டனைகள் விலக்கிக் கொள்வதற்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியது.

கூலி உயர்வு கேட்டுப் போராட்டங்கள்:

1944-இல் டிசம்பரில் மாவட்ட ஆட்சியர் திரு. இஸ்மாயில்கான் தலைமையில் காவல்துறை கண்காணிப்பாளர் திரு. வரதன் முன்னிலையிலும், கூலி உயர்வுகேட்டுப் போராடியதற்கான ஒப்பந்தக் கூட்டம் நடைபெற்றது. நிலப்பிரபுக்கள் சார்பில் சாம்பசிவ அய்யரும், விவசாய சங்கம் சார்பில் மணலி கந்தசாமி, கலப்பால் குப்புசாமி ஆகியோர் கலந்து கொண்டதன் விளைவாகப் பண்ணையாள் தினக் கூலியானது இரண்டு சின்னப்படிக்குப் பதிலாக மூன்று படி கொடுக்கப்பட வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகள் நிறைவேறின.

கூலி உயர்வுக்காகவும், நிலத்தை விட்டு பண்ணையடிமைகளாகவும் வெளியேற்றக்கூடாது என மணலி கந்தசாமி போன்ற தலைவர்களே பைங்காட்டூரில் போராடினர் 24. 12. 1944இல் பைங்காட்டூர் விவசாயிகளுக்கும், திருக்களார் மடத்திற்கும் இடையில் மாவட்ட ஆட்சித் தலைவர் இஸ்மாயில்கான் தலைமையில் ஒப்பந்தம் ஏற்பட்டது.

1945இல் கோனேரிராஜபுரத்தை மைய மாகக் கொண்டு அதைச்சுற்றிச் சுமார் 32 கிராமங்களிலும் குத்தகை 50ரூ வரக்கோரி களப்பால் குப்பு தலைமையில் போராட்டத்தைத் துவங்கினார். 5 நாள் போராட்டத்திற்குப் பிறகு சமரசம் ஏற்பட்டது.

மணலி கந்தசாமி, அமிர்தலிங்கம், குப்புசாமி பா. வெங்கடேசன் ஆகியோர் மன்னார்குடியில் கூட்டங்கள் நடக்கக்கூடாது என 144 தடை உத்தரவு அரசால் போடப்பட்டது. அவ்வளவு எதிர்ப்புகள், தலைவர்கள் சந்திக்க வேண்டி இருந்தது.

1946இல் குன்னியூரில் பொதுக்கூட்டம் நடந்தது. விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் கஷ்டப் பட்டனர். கண்டு முதலும் குறைவாக இருந்தது. 1946 ஏப்ரலில் தஞ்சை மாவட்ட அமர்வு நீதிப் பகுதியை நடுவராகக் கொண்டு நில உடைமை யாளர்கள், விவசாயிகள் பேச்சுவார்த்தை ஏற் பட்டது. அதன்படி சாகுபடி செய்பவரை நிலத்தை விட்டு வெளியேற்றக்கூடாது என்பது உட்பட பல கோரிக்கைகள் கையெழுத்தாகின.

உத்திராபதி மடத்தில் குத்தகையை ரத்து செய்ய விவசாயிகள் வேண்டினர். மடாதிபதி மறுத்தார் விவசாய சங்கமும் போராட்டத்தில் இறங்கினர் பிறகு கோரிக்கை ஏற்று மடம் இறங்கி வந்தது.

கீழவெண்மணி:

கீழவெண்மணியில் 44 தாழ்த்தப்பட்ட பண்ணையடிமைகளைக் கூலி உயர்வு கேட்டதற்காக உயிரோடு எரித்துக்கொல்லப்பட்டனர். இதையும் விவசாய சங்கத்தோழர்களே எதிர்த்துக் குற்றவாளிகளைக் கைது செய்யப்போராடினர்.

முடிவுரை:

இவ்வாறு தஞ்சை மாவட்டத்தில் மக்கள் விடுதலைக்காகவும், சமத்துவத்திற்காகவும், உரிமைக் காகவும் போராடிய தலைவர்கள் மக்கள் மனதில் வரலாறாய் நின்று வாழ்ந்து வருகின்றனர். இவர்களைப் பற்றிப் பாடல்களாகவும், பழமொழிகளிலும், நாட்டுப்புற வழக்கமாய்ப் பயின்று வரக்காண்பது இன்றும் உண்மையான மக்கள் விடுதலைக்கான தலைவர்கள் என்பது உண்மையாகிறது. இதன் மூலம் தஞ்சை மாவட்டக் களநாயகர்கள் வழியாக சமூக வரலாறு உயர்த்திப்பிடிக்கப்பட்டு வருகிறது.

சித்தமல்லியில் இன்று முருகையன்தேவேந்திரர் எம்.பி.நினைவு தினம்.(.06.01.2015)

சித்தமல்லியில் இன்று முருகையன் எம்.பி.நினைவு தினம் அனுசரிப்புதிருவாரூர் மாவட்டத்தின் பொதுவுடைமைவாதியும், மறைந்த எம்.பி.யுமான சித்தமல்லி எஸ்.ஜி. முருகையனின் 36-வது நினைவு தின அஞ்சலி நிகழ்ச்சி சித்தமல்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
சித்தமல்லியைச் சேர்ந்தவர் எஸ்.ஜி. முருகையன் (படம்). இவர் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் நிலவி வந்த நிலப்பிரபுத்துவ முறைக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். நாகை எம்.பி.யாக இருந்தபோது, 1979-ல் கொலை செய்யப்பட்டார். அவரின் 36-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சித்தமல்லியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் பலர் அஞ்சலி செலுத்துகின்றனர். இதைத் தொடர்ந்து, பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை எஸ்.ஜி.எம். ரமேஷ், எஸ்.ஜி.எம். லெனின் ஆகியோர் செய்து வருகின்றனர்.

சொக்கம்பட்டி கிராமத்தில் புதிய தமிழகம் கட்சியின் 18-ஆம் ஆண்டு தொடக்கவிழா

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் ஒன்றியத்துக்குட்பட்ட சொக்கம்பட்டி கிராமத்தில் புதிய தமிழகம் கட்சியின் 18-ஆம் ஆண்டு தொடக்கவிழா மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது. புதிய தமிழகம் கட்சியின் தெல்லை மேற்கு மாவட்டச் செயலாளர் அண்ணன் வீரா.அரவிந்தராஜா, கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிச் செயலாளர் திரு.குமார்பாண்டியன், கடையநல்லூர் தெற்கு மாவட்டச் செயலாளர் திரு.காசிப்பாண்டியன் ஆகியோரோடு நானும் கலந்து கொண்டேன். விழா ஏற்பாடுகளை அந்த கிராமத்தின் புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி மற்றும்மாணவரணியினர் சிறப்பாக செய்திருந்தனர். ஒருகாலத்தில் அதிகமான தீண்டாமைக் கொடுமைகளைச் சுமந்து நின்ற கிராமங்களில் ஒரு கிராமம் தான் சொக்கம்பட்டி கிராமம். ஆனால் இன்று சமூகத் தளத்தில் அந்த கிராம தேவேந்திரகுல வேளாளர்கள் தன்மானத்தோடும், சுயமரியாதையோடும் உயர்ந்து நிற்பதைக் காணும்போது மிகப் பெருமையாக இருந்தது. சொக்கம்பட்டி கிராமத்தின் அத்தகைய உயர்வுக்கு காரணம் டாக்டர் அய்யா அவர்களின் வருகை தான் என்று கூறியபோது இன்னும் பெருமையாக இருந்தது. அந்த ஊரில் ஆதிக்கம் செலுத்திவந்த ஒரு குறிப்பிட்ட சமூகம் அரசியல் பலத்தோடும், பணபலத்தோடும் எதிர்த்து நின்றபோது சொக்கம்பட்டி தேவேந்திரகுல வேளாளர்கள் ஒற்றுமை எனும் ஒற்றை ஆயுதத்தால் தங்களது தன்மானத்தை மீட்டெடுத்தனர். இன்றும் அந்த கிராமத்தில் இளைஞர்களும், மாணவர்களும் எவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதைக் காணும்போது பூரிப்பாகத்தான் இருந்தது. நம் சமூகம் அதிகமாக வாழக்கூடிய பல கிராமங்கள் இன்னும் ஒற்றுமையாக வாழ்வதற்கு தங்களுக்குள் தயக்கம் காட்டி வருகிற இக்காலத்தில் நம் சமூக ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக ஒரு கிராமம் இருக்கிறது என்று சொன்னால் அது சொக்கம்பட்டி கிராமம் என்று பெருமையாகச் சொல்லலாம். விழாவினை ஏற்பாடு செய்த சொக்கம்பட்டி கிராம தேவேந்திரகுல வேளாளர் சமுதாய பெரியவர்களுக்கும், தாய்மார்களுக்கும், புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி மற்றும் மாணவரணி தோழர்களுக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்...