திங்கள், 29 ஏப்ரல், 2013
திங்கள், 22 ஏப்ரல், 2013
" மீண்டெழும் பாண்டியர் வரலாறு
செந்தில் மள்ளர் அவர்களின் படைப்பான இந்த நூலை வாங்கும் போது என்னிடம் இருந்த கேள்விகள். இந்த நூல் இதற்கு முன்பு வந்த மள்ளரிய நூல்களில் இருந்து எந்த வகையில் வேறுபட்டு இருக்கும். பாண்டியர் யார்? என்று ஏற்கனவே மள்ளரிய நூல்கள் நிறுவியிருக்கும் போது இந்த நூல் எந்த விதத்தில் அமைந்திருக்கும் என்ற பல கேள்விகள் என்னுள் இருந்தது.
ஆனால் இந்த நூலின் சிறப்பு முந்தயை மள்ளரிய நூல்களில் இருந்த சில கேள்விகளுக்கு பதில் கொடுத்து. மேலும் ஆதாரங்களை குவித்து இருக்கின்றது.
உதாரணமாக மல்லர்-மள்ளர்-பள்ளர்-தேவேந்திர
பள்=உழவு, பள்ளர்=உழவர் என்று விளக்கி, பாண்டியர்=உழவர். எனவே பள்ளர்=பாண்டியர் என்று தெளிவுபடுத்தி இருக்கின்றது.
செந்தில் மள்ளரின் ” பள்ளர் என்பது பேச்சு வழக்கு, மள்ளர் என்பது இலக்கிய வழக்கு “ என்ற கோட்பாடு பல கேள்விகளுக்கு பதில் கொடுத்து இருக்கின்றது. தனிப்பட்ட முறையில் எனக்கு இருந்த ஒரு சந்தேகம் தமிழகத்தில் நாயக்கர் பள்ளர் என்ற சொல்லை பரப்பினார்கள் என்றால் அப்போது ஈழத்திலும் பள்ளர் என்றே அழைக்கப்பட என்ன காரணம். இந்த கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது.
மேலும் மள்ளரிய ஆய்வில் குறைகளாக விளங்கிய கள ஆய்வுகள், சேர நாட்டில் பள்ளர்களின் ஆய்வு, ஈழ நாட்டில் பள்ளர்களின் ஆய்வு ஆகியவற்றை செய்து மள்ளரிய ஆய்வில் இமயத்தை தொட்டு இருக்கின்றார் செந்தில் மள்ளர்.
இந்த நூலில் நான் வியந்த ஒரு கட்டம் “ உலக புகழ் பெற்ற உத்திரமேருர் கல்வெட்டு நம்முடைய குடும்பு முறையை பற்றியது என்று”. மேலும் தமிழகத்தின் மிக பிரபலமான செப்பேடுகளும், கல்வெட்டுகளும் பள்ளரை பற்றியது என்பதை கண்டு வியந்தேன்.
கள ஆய்வில் செந்தில் மள்ளர் ஒரு பெரிய சாதனையாளர், கள ஆய்வு “வேந்தன்” என்றே அவரை நாம் அழைக்கலாம். மல்லர் கோயில், புலயர், பாண்டி கோயில், பழங்காநத்தம், பள்ளர் மடங்கள் போன்ற எண்ணற்ற கள ஆய்வுகள்.
இந்த புத்தகம் ஒரு பொக்கிசம். பள்ளர் தான் பாண்டியர் என்று பச்சை குத்திவிட்டார் செந்தில் மள்ளர்
பரமக்குடிசதி திட்டம்
எம் உயிரிலும் மேலான தேவேந்திரர் குல வேளாளர் சமுதாயத்தினருக்கு ஒரு வேண்டுகோள் பரமகுடியில் நடக்க இருக்கும் சித்திரை திருவிழாவில் யாரும் மது அருந்த வேண்டாம்
புலணாய்வு துறை எச்சரிக்கை:-
பரமகுடியில் தேவேந்திரர் குல வேளாண் மக்களுக்கு எதிராக ஏப்ரல் 24. 25 ஆகிய தேதிகளில் பல்வேறு சதி திட்டங்களை அரங்கேற்ற பல்வேறு சதிகார கும்பல்கள் பரமகுடியில் ஊடுரூவி வருவாதாகவும் மத்திய மாநில புலணாய்வு துறை எச்சரித்துள்ளது.
"தீயினால் சுட்டபுண் உள்ஆறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு"
"சுட்ட வடு"
இக்குறலின் தன்மைக்கு ஏற்ப பரமகுடியில் ஒருவித சூழ்நிலைகள் நடைபெறுவதாக தெரிகிறது
இது நாள் வரை நாம் வீரம் வீரம் என்று அழிந்தது போதும்
திருவிழாவின் போது நம் இளைஞர்கள் மது அருந்தாமலும் தனிமையில் எங்கும் செல்லாமல் இருப்பது மிக அவசியம் பாதுகாப்பான இடத்திலும் அல்லது இளைஞர் சமுதாயம் ஒன்நினைந்து பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கி கொள்ள வேண்டும்
பார்த்திபனூர் கொலை:-
பார்த்திபனூர் அருங்குளத்தில் தேவேந்திரர் சமுதாயத்தினர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
பார்த்திபனூரில் கனிசமான ஒரு பேச்சு எழுகின்றது இக்கொலையை பள்ளி கல்லூரி படிக்கும் வயதுள்ள இளைஞர்கள் செய்திருக்கலாம் என்று பேச்சு எழுகின்றது
இது எந்த அளவிற்கு உன்மை என்று தெரியவில்லை
குறிப்பாக:-
பள்ளி கல்லூரி படிக்கும் மானவர்களும் இளைஞர்களும் பிற சமுதாய நண்பர்கள் அழைக்கின்றனர் அல்லது மது அருந்த தனிமையில் அழைக்கின்றனர் என்று யாரும் தனியாக செல்ல வேண்டாம் எம் தேவேந்திர இளைஞர் சமுதாயமே...
இந்த சதி திட்டத்தின் காரணமாக பரமகுடியில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு கேமாரக்கள் பயண்பாட்டில் உள்ளது..
"இக்கருத்துகளை பதிவு செய்வதால் தேவேந்திரர் கோழையும் அல்ல பிறர் வீரர்களும் அல்ல"
இது நாள் வரை நாம் இழந்தது போதும்...
தேவேந்திரர் குல இளைஞர்களுக்கு:-
ஒருவர் வீரத்துடன் ஜாதி சதிகார கும்பல்களால் மாய்வது வீரமா..??
அல்லது
"விவேகத்துடன் தன்னையும் தன் குடும்ப உறுப்பினர்களையும் பாதுகாத்து வாழ்வில் கல்வி பொருளாதாரத்தை உயர்த்தி சாமுதாயத்தில் நிலையான அங்கீகாரத்தை பதிப்பது வீரமா...??"
"தேவேந்திரர் சமுதாயமே பிறப்பும் இறப்பும் ஒருமுறை தான்"
கற்பி ஒன்றுசேர் புரட்சிசெய்
சேர சோழா பாண்டிய மூவேந்தர் என்னும் தேவேந்திரர் வம்சத்தை அடையாள படுத்து...
விவேகத்துடன் செயல்படுங்கள்
இச்செய்தியை யாரும் அலட்சிய படுத்த வேண்டாம்
pls share to all devendraas
தேவேந்திரர் இளைஞர் நல அமைப்பு (DYWA) பரமகுடி

வெள்ளி, 19 ஏப்ரல், 2013
மீண்டெழும் பாண்டியர் வரலாறு*....கு.செந்தில்மள்ளர்..
*மீண்டெழும் பாண்டியர் வரலாறு*
வீரபாண்டிய ளகட்டபொம்மன், போன்ற போலி பாண்டியர்களின் வரலாறு உடைகிறது.
**********-***********
உலகின் முதல் மாந்தன் தோன்றிய இடமாக வரலாற்று அறிஞர்களால் கருதப்படும் லெமூரிய கண்டம் என்றழைக்கப்படும் குமரி கண்டத்தை கடல் கொண்ட போது பல்லாயிர கணக்கான பாண்டிய குல மக்களை பாதுகாப்பாக நாவலந்தீவு என்றழைக்கப்படும் இன்றைய இந்தியாவில் குடியேற்றிய அன்றைய பெருமைமிகு பாண்டியரின் இன்றைய நேரடி வாரிசுகள் யார்? என்று தடம் பிடித்து காட்டும் "மீண்டெழும் பாண்டியர் வரலாறு" என்ற நூல் தமிழரிஞர் தமிழ்திரு.செந்தில்மள்ளர் அவர்களின் ஏழாண்டு கால கடும் உழைப்பில் பாண்டியர்களின் இன்றைய வாரிசுகளை அடையாள காணும் நோக்கத்தில்
1)சங்க இலக்கியங்கள்
2)கல்வெட்டுக்கள்
3)செப்புபட்டையங்கள்
4)பள்ளு இலக்கியங்கள்
5)நாட்டுப்புற பாடல்கள்
6)தமிழகத்தில் பழம்பெரும் கோயில்களில்(பழனி, மதுரை மீனாட்சி, திருப்பரங்குன்றம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் முதலிய) உள்ள உரிமைகள்
7)பாண்டியர் தம் மக்களின் நிலப்பத்திர ஆவணங்கள், பாண்டியராசா கோயில் வழிபாடு
8)"பாண்டியன்" பெயர் தாங்கிய(சுந்தரபாண்டியபுரம், விக்கிரபாண்டியபுரம், பராக்கியபாண்டியபுரம் முதலிய) ஊர்களில் வாழும் பாண்டிய மக்கள்
9)கோவை பொன்னேர் பூட்டும் விழா, இராஜபாளைய வெண்குடை திருவிழா, சித்திரா பௌர்ணமி அன்று இந்திர விழா போன்ற விழாக்களில் உள்ள பாண்டியர் தடங்கள்
10)திரு.சுப்பையா பாண்டியர் அவர்களால் 1924 ல் தமிழ்நாட்டின் முதல் முதலில் தொடங்கப்பட்ட பாண்டியர் சங்க ஆவணம்
மேலும் இந்தியா முழுவதும் மேற்க்கொண்ட நேரடி கள ஆய்வின் விளைவாக யாவரும் ஏற்கும் வண்ணம் உருவாகியுள்ளது.
பாண்டியர் தம் மக்களை பற்றி பேசும் இந்நூலினை தமிழர் வரலாற்று ஆய்வு நிறுவனம் ஏப்ரல் 28. 2013 அன்று விழுதுநகர் மாவட்டம் சாத்தூரில் முனைவர் குருசாமி சித்தர் அவர்களின் தலைமையில் வெளியிட உள்ளது.
இந்நூலின் உண்மை தன்மையை கருத்தில் கொண்டு இந்நூலின் முதல் பிரதியை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் வெளியிடுகிறார்.
மேலும் இந்நூல் தமிழ் சாதிகளுக்கிடையே உள்ள தொப்பூழ் கொடி இரத்த உறவை சான்றுகளுடன் விளக்குவதால் இந்நூலின் தற்க்கால முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழ் சமுக தலைவர்களான
1)எழுகதிர் ஆசிரியர்- முனைவர் அருகோ நாடார்.
2)தமிழர்களம்-அரிமாவளவன் மீனவர்.
3)இனமான இயக்குனர்- மணிவண்ணன் கள்ளர்.
4)புதுக்கோட்டை பாவாணர் செட்டியார்.
5)பேராசிரியர் தீரன் வன்னியர்.
6)தோழர் தன்மானன்.
7)அறிவர் குணா பறையனார்.
8)கொங்கு வேளாள இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு கவுண்டர் M.L.A.
9)தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வன்னியர் Ex M.L.A
10)ஈழ புரட்சி கவிஞர் காசி ஆனந்தன் கரையாளர்
போன்ற அறிவார்ந்த பெருமக்கள் மற்றும் தமிழறிஞர்கள் பங்கேற்கிறார்கள்.
திராவிடத்தால் வீழ்ந்தோம்
தமிழரியத்தால் எழுவோம்
என்ற சிந்தனையுடன் சாத்தூரில் அணிவகுப்போம் தமிழ் தேசத்தை மீண்டெடுப்போம் வாரீர்.

திராவிடனே வெளியேறு தமிழனை ஆளவிடு///
திராவிடம் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
****************************** *
தமிழ் மொழியை பழித்தது- ஈரோடு திராவிடம்.
தமிழின கொள்கையை திரித்தது- காஞ்சி திராவிடம்.
தமிழினத்தையே அழித்தது- திருக்குவளை திராவிடம்.
நான் ஒரு பாப்பார்த்தி என்று சட்டமன்றத்திலே முழங்கி தமிழின ஆரிய பகையை வளர்த்தது- போயஸ்கார்டன் திராவிடம்.
சேற்றில் முளைத்த செந்தாமரை என்றாலும் வழக்கொழித்து போன திராவிடத்திற்கு வக்காளத்து வாங்கும்- கலிங்கப்பட்டி திராவிடம்.
இதற்கிடையே நடுவில் வந்து பம்பரம் விடும்- கோயம்பேடு நாக்கு துருத்தி திராவிடம்.
எத்தனை திராவிட கூத்தடா எங்கள் தமிழ் திருநாட்டில், தமிழ்நாடு தமிழர்களின் தாய்நாடா? இல்லை வந்தேரி திராவிட மந்தைகளின் மேய்ச்சல் காடா?
திராவிடனே வெளியேறு
தமிழனை ஆளவிடு
******************************

நிலத்தடி நீர் விற்பனை ஐகோர்ட் தடையை விலக்கக்கோரி டாக்டர் க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ அவர்கள் மனுத்தாக்கல்
ஓட்டப்பிடாரம் பகுதியில் விவசாய நிலத்திலிருந்து தண்ணீர் எடுத்து தனியார்தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்ய கோட்டாட்சியர் விதித்த தடை உத்தரவுக்குஎதிராக ஐகோர்ட் கிளை விதித்துள்ள தடையாணையை விலக்கக்கோரி டாக்டர்கிருஷ்ணசாமி எம்எல்ஏ அவர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியில் விவசாய நிலங்களில் ராட்சத போர்வெல்அமைத்து தண்ணீர் எடுத்து, தனியார் தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.இதற்கு கோவில்பட்டி கோட்டாட்சியர் தடை விதித்தார்.
இந்தத் தடையை எதிர்த்து கல்மேடு வடக்கு பகுதியை சேர்ந்த பால்ராஜ் உட்பட 12 பேர்,ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். மனுக்களை நீதிபதி அருணா ஜெகதீசன்விசாரித்து, தண்ணீர் விற்பனைக்குத் தடை விதித்து கோவில்பட்டி கோட்டாட்சியர்பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்த தடையை விலக்கக்கோரி ஓட்டப்பிடாரம் தொகுதி எம்எல்ஏவும், புதிய தமிழகம் கட்சியின்தலைவருமான டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவைவக்கீல் பாஸ்கர் மதுரம் தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:
ஓட்டப்பிடாரம் பகுதியில் விவசாய நிலங்களில் 800 அடி ஆழத்திற்கு போர்வெல் அமைத்து தண்ணீர் எடுக்கப்படுகிறது.இதனால், இப்பகுதி நிலங்கள் கட்சி வறட்சிக்குள்ளாகி வருகின்றன. பொதுமக்கள் கிராமங்களைக் காலி செய்துவேலைக்காக வெளியூர் சென்று வருகின்றனர். சிலர் விவசாயத்திற்கான இலவச மின் இணைப்புப் பெற்று, தண்ணீர்எடுத்து தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். நிலத்தடி நீரைச் சுரண்டுவதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுவருகிறது. இதைத் தடுக்க நான் கோட்டாட்சியரிடம் மனுக் கொடுத்தேன். அந்த மனுவை ஏற்று, விவசாய நிலங்களில்இருந்து தண்ணீர் எடுத்து, தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்ய கோவில்பட்டி கோட்டாட்சியர் தடை விதித்துள்ளார்.
ஏற்கனவே ஓட்டப்பிடாரம் பகுதியில் நிலத்தடி நீர் அதள பாதாளத்திற்குச் சென்று விட்டதால் குடிநீர் பஞ்சம்தலைவிரித்தாடுகிறது. பொதுமக்கள் ஒரு குடம் குடிநீரை ரூ.7 கொடுத்து வாங்குகின்றனர். எனவே, கோட்டாட்சியர்உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க வேண்டும். இந்த வழக்கில் என்னை எதிர்மனுதாரராகச் சேர்க்கஅனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
வீரன் சுந்தரலிங்கம் பிறந்த நாள்:
தூத்துக்குடி மாவட்டம் - பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமம் கவர்னகிரி. 1770 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் நாள் காலாடி என்ற கட்டக் கருப்பணனுக்கும் முத்திருளி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தவர்தான் சுந்தரலிங்கம். இவரது முழுப்பெயர் கட்டக் கருப்பண்ணன் சுந்தரலிங்கம் என்பதாகும். தேவேந்திரகுலத்தைச் சேர்ந்தவர். அவரது வீரத்தைக் கேள்விப்பட்ட கட்டபொம்மன் தனது ஒற்றர் படைக்குத் தளபதியாக்கினார். தனது வீரத்தாலும் மதி நுட்பத்தாலும் சீக்கிரமே கட்டபொம்மனின் அனைத்துப் படைகளுக்கும் தளபதியாக உயர்ந்தார் சுந்தரலிங்கம்.
சுந்தரலிங்கத்தின் பொறுப்பில்தான் கட்டபொம்மனின் தானியக்கிடங்கும், வெடிமருந்துக் கிடங்கும் இருந்தன. கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் முட்டல், உரசல் உருவானபோது வெள்ளையத்தேவனும், சுந்தரலிங்கமும் கட்டபொம்மனுக்கு பக்கபலமாக விளங்கினர்.
கட்டபொம்மனை பல நாட்கள் அலைக்கழிய வைத்து ராமநாதபுரம் அரண்மனையில் ஜாக்சன் துரை சந்தித்தபோது சுந்தரலிங்கமும் உடனிருந்தார். அந்தச் சந்திப்பு பின்பு பெரும் சண்டையாக மாறியபோது தனது வாளால் பல வெள்ளைச் சிப்பாய்களை வீழ்த்தினார். இதையடுத்து கட்டபொம்மனை அழிக்க வெள்ளையர்கள் 1799ல் பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்தார்கள். ஆங்கிலேயப் படை பாஞ்சாலங்குறிச்சிக்கு வெளியே கரிசல் காட்டில் முகாமிட்டிருந்தது. பீரங்கிகள், வெடிகுண்டுகள், துப்பாக்கிகளுடன் வெள்ளையர்களின் படை குவிந்திருந்தது.
1799 செப்டம்பர் 8ம் தேதி சுந்தரலிங்கம் தனது முறைப்பெண்ணான வடிவுடன் ஆடுமேய்ப்பவர்களைப் போல வேடமணிந்து, வெள்ளையர்களின் வெடிமருந்து கிடங்குப் பகுதிக்குப் போனார். தீப்பந்தத்தைக் கொளுத்தியபடி சுந்தரலிங்கமும், வடிவும் வெடிமருந்துக் கிடங்கிற்குள் பாய்ந்தார்கள். பலத்த வெடிச்சத்தத்துடன் கிடங்கு தீப்பிடித்து எரிந்தது. சுந்தரலிங்கமும், வடிவும் இந்திய சுதந்திரப் போரின் முதல் தற்கொலைப் படை தாக்குதல் தொடுத்தவர்களானார்கள். அவர்களது வீரமரணத்திற்கு அடுத்த நாள் நடைபெற்ற போரில் பாஞ்சாலங்குறிச்சி ஆங்கிலேயர் வசமானது.
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதாலேயே சுந்தரலிங்கத்தின் வீரம் வரலாற்றில் முக்கியத்துவம் பெறாமல் போய்விட்டது. நாட்டுப்புறப் பாடல்களின் மூலம் இவர் அறியப்பட்டார். இவர் பிறந்த ஊரில் நினைவு சின்னமும், அழகு வளையமும் அமைத்தது தமிழக அரசு, 1997-ல் அந்த மாவீரனது நினைவாக விருதுநகர் மாவட்டத்தில் ஓடும் அரசு பேருந்துகளுக்கு ‘வீரன் சுந்தரலிங்கம் போக்குவரத்துக் கழகம்’ என்று கலைஞர் கருணாநிதி பெயரிட்டபோது, பெரும் சாதிக்கலவரம் மூண்டது கொடுமை. கலவர நெருப்பை மேலும் மூட்டிவிட்டு ஒரு பிரதான அரசியல் கட்சி அதில் குளிர் காய்ந்தது கொடுமையிலும் கொடுமை.
உலக வரலாற்றில் ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு எதிராக, தற்கொலைப் படையாக மாறி தன்னையும் தன் முறைப்பெண் வடிவுவையும் நாட்டுக்காக அர்ப்பணித்தவர் வீரன் சுந்தரலிங்கம்

பாஞ்சாலங்குறிச்சி இறுதி கட்ட போரில் ஆங்கிலயேரின் கை ஓங்கிய பொழுது அவர்களின் ஆயுத கிடங்கை அழிக்க திட்டமிட்டு தனது உடலில் வெடிமருந்தை பொருதி ஆயுதகிடங்கில் பாய்ந்து வெடித்து சிதறி வெள்ளையர்களின் ஆயுதக்கிடங்கை அழித்து தன் உயிரை தியாகம் செய்து உலகின் முதல் தற்கொலைப்படை ,உலகின் முதல் மனித வெடிகுண்டு(worlds first human bomber) என்று உலக வரலாற்றில் தமிழனுக்கு பெருமை தேடிச்சென்ற வெட்டும் பெருமாள் பாண்டியனின் மரபில் வந்த வீரத்தின் பிறப்பிடம் பாஞ்சாலங்குறிச்சி படைத்தளபதி "சுந்தரலிங்கக்குடும்பனார்" பிறந்த தினம் இன்று .
தமிழனின் வீரத்தை உலகிற்கு பறைசாற்றிய மாவீரன் சுந்தரலிங்கக் குடும்பனார் பிறந்த தினத்தை போற்றுவோம்
தமிழனின் வீரத்தை உலகிற்கு பறைசாற்றிய மாவீரன் சுந்தரலிங்கக் குடும்பனார் பிறந்த தினத்தை போற்றுவோம்
பாஞ்சாலங்குறிச்சி வீரன் சுந்தரலிங்கம்
வீரன் சுந்தரலிங்கம்
பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மு நாயக்கரைத் தெரியுமா? ஓகோ! வீரபாண்டிய கட்டபொம்மன் என்று சொன்னால்தான் தெரியுமா. சரி. இந்தப் பெயரை சிலம்புச் செல்வர் அளித்தது. பாஞ்சாலாங்குறிச்சியின் பாளையக்காரர் பெயர் கட்டபொம்மு நாயக்கர் தான். இவருடைய தம்பி ஊமைத்துரை. இவ்விருவரும் மாபெரும் வீரர்கள். இவருக்கு ஒரு அமைச்சர் இருந்தார், அவர் பெயர் தானபதி பிள்ளை. இப்படிப்பட்ட தன்மானம் மிக்க ஒரு பாளையக்காரரிடம் அமைந்த தளபதிகள் எப்படி இருந்திருப்பார்கள். வெள்ளையத் தேவன் என்று ஒரு மாவீரன். சுந்தரலிங்கம் என்று மற்றொரு சூரன். இப்படிப்பட்ட வீரசிகாமணிகளைத் தன்னுடன் வைத்திருந்த கட்டபொம்மு நாயக்கர் வெள்ளையனை எதிர்த்து வீரமுழக்கம் செய்ததில் என்ன வியப்பு?
இந்த தளபதிகளில் சுந்தரலிங்கம் பற்றி சிறிது பார்ப்போம். இந்த சுந்தரலிங்கத்தின் முழுப்பெயர் என்ன தெரியுமா? கட்டக் கருப்பண்ணன் சுந்தரலிங்கம் என்பது அவன் முழுப் பெயர். சுந்தரலிங்கக் குடும்பனார் என்றும் அழைப்பது உண்டு. கட்டபொம்மு நாயக்கரின் பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகிலுள்ள வெள்ளைவாரணம் எனும் கிராமத்தில் பிறந்தவர் இவர்.
கட்டபொம்மு நாயக்கர் பாஞ்சாலங்குறிச்சியில் கோட்டையைக் கட்டி, படை, குடிகளுடன் கம்பளத்தார் ஆட்சியை நிறுவிய காலத்தில் பலதரப்பட்ட வேலைகளுக்கு ஆட்களை நியமித்தார். அப்படி ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செய்திகளைக் கொண்டு சேர்க்கும் பணிக்கு நம்பகமான ஆட்களை நியமனம் செய்தார்கள். அப்படிப்பட்ட பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சாதாரண வீரனாகத்தான் சுந்தரலிங்கம் ஆரம்பத்தில் பணியைத் தொடங்கினார்.
கட்டபொம்மு நாயக்கரின் படையில் பல தரப்பட்ட பிரிவினர்களும் வீரர்களாகச் சேர்ந்தனர். அப்படிப் பட்ட வீரர்களில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பலரும் இருந்தார்கள். அப்படிப்பட்ட வீரர்களில் சுந்தரலிங்கமும் ஒருவர். இவர் தன்னுடைய நேர்மையான உழைப்பு, வீரம், ராஜ விசுவாசம் இவற்றால் பாளையக் காரர்களின் பார்வையில் மிக உயர்வாகக் காட்சியளித்தார். இவருடைய நேர்மையான உழைப்பையும், வீரத்தையும் பலமுறை பாராட்டிய கட்டபொம்மு நாயக்கர் இவரைப் படைத் தளபதியாக பதவி உயர்த்தி கெளரவித்தார்.
ஏற்கனவே கட்டபொம்மு நாயக்கரிடம் வெள்ளையத்தேவன் எனும் துடிப்பான வீரம் மிகுந்த தளபதி ஒருவர் இருந்தார். அவருக்கு நிகராக சுந்தரலிங்கமும் வீரத் தளபதியாக விளங்கினார்.
ஒரு முறை ஆங்கில கும்பினியாரின் படைகள் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை முற்றுகையிட்டுவிட்டது. தளபதி வெள்ளையத்தேவன் அப்போது கோட்டையில் இல்லை. ஆகவே அவனை அழைத்துவரும்படி கட்டபொம்மன் சுந்தரலிங்கத்தை அனுப்பி வைத்தார். சுந்தரலிங்கம் வெள்ளையத் தேவனின் வீட்டை அடைகிறார். தளபதி வெள்ளையத் தேவன் மிகுந்த கோபக்காரன். தூக்கத்தில் இருக்கையில் யாராவது எழுப்பிவிட்டால் தாக்கிவிடும் குணமுடையவன். ஆகவே மிகவும் ஜாக்கிரதையாக சுந்தரலிங்கம் வெள்ளையத் தேவனை எழுப்புகிறார். பின்னர் தளபதியிடம் எல்லா விவரங்களையும் சொல்லி, வெள்ளையர்கள் கோட்டையைச் சூழ்ந்து கொண்டிருக்கும் நிலைமையை எடுத்துரைக்கிறார். உடனே இருவரும் அங்கிருந்து கிளம்பி கோட்டைக்குள் சென்று கட்டபொம்முவைச் சந்திக்கிறார்கள்.
கட்டபொம்மன் இவ்விரு தளபதிகளிடமும் தன் படைகளைக் கொடுத்து போர்க்களம் செல்லும்படி பணிக்கிறார். கோட்டைக்கு வெளியே உக்கிரமான போர் நடந்தது. அந்தப் போரில் வெள்ளையத் தேவன் வீரமரணம் அடைந்து விடுகிறான். எஞ்சியப் படைகளைக் கொண்டு சுந்தரலிங்கம் வேறு சில படைத் தளபதிகளான ஆதிவீரமல்லு சேர்வை, கந்தன்பகடை, கண்டகோடாலி என்பவர்களைக் கூட்டாகச் சேர்த்துக் கொண்டு ஆங்கிலேயர்களோடு மோதுகிறார். எட்டத்தில் கூடாரமடித்துத் தங்கியிருந்த வெள்ளையர்களின் முகாமைத் தாக்கி அங்கு காவல் இருந்த சிப்பாயைச் சுந்தரலிங்கம் குத்திக் கொன்றுவிடுகிறார். இந்தப் போரில் கந்தன்பகடை எனும் தளபதி கட்டபொம்மு பக்கத்தில் வீரமரணம் அடைந்து விடுகிறார்.
கோட்டைக்கு வெளியே முற்றுகை இட்டிருந்த வெள்ளைப் படைகளுக்கிடையே சுந்தரலிங்கமும், வீரமல்லு சேர்வையும் மாட்டிக் கொள்கிறார்கள். யுத்தகளம் முழுவதும் இரண்டு பக்கத்து வீரர்களின் இறந்த உடல்கள் வீழ்ந்து கிடக்கின்றன. மாட்டிக் கொண்ட சுந்தரலிங்கம் ஒரு தந்திரம் செய்தார். பிணத்தோடு பிணமாகக் கீழே விழுந்து புரண்டு சென்று செத்துக் கிடந்த வெள்ளைக்காரச் சிப்பாயின் உடையை எடுத்து மாட்டிக் கொண்டு அவர்களது துப்பாக்கியையும் பிடுங்கிக் கொண்டு, யுத்த களத்திலிருந்து இவ்விரு தளபதிகளும் தப்பி ஓடி பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை அடைந்து விடுகிறார்கள்.
போர்க்களத்தில் நடந்த விவரங்களைச் சுந்தரலிங்கம் கட்டபொம்மு நாயக்கருக்கு எடுத்துச் சொன்னார். இவ்விரு தளபதிகளைன் சாகசங்களைப் பாராட்டி கட்டபொம்மு இவ்விருவருக்கும் பத்து வராகனில் தங்கப் பதக்கமும், முத்துக்கள் பதித்தக் கடுக்கன், அடுக்கு முத்து மோகன மாலை, ஹஸ்த கடகங்கள், முன்கை மூதாரிகள் என பலவகைப்பட்ட ஆபரணங்களைப் பரிசளித்து கெளரவித்தார்.
பாளையக்காரர் மட்டும் மாவீரனாக இருந்துவிட்டால் போதுமா, அவனுக்கு அமைந்த தளபதிகளும் அவனைப் போலவே வீரர்களாக இருக்க வேண்டாமா? அப்படி அமைந்ததால்தான் இன்றும் வீரபாண்டியன் கட்டபொம்மு நாயக்கர் என்று பலரும் வியந்து போற்றி பாராட்டுகிறார்கள். அந்தப் புகழுக்கெல்லாம் சுந்தரலிங்கம் போன்ற தளபதிகள்தான் காரணம் என்பதை நாம் மறக்கலாமா?
பின்னர் 1799ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் 5ஆம் தேதி, வெள்ளைக்காரப் படைகளோடு வீரபாண்டியன் கட்டபொம்மன் நடத்திய இறுதிப் போரில் இந்த மாவீரன் சுந்தரலிங்கம் வீரமரணம் எய்தினார் என்பது வரலாறு. வாழ்க வீரன் சுந்தரலிங்கம் புகழ்!
எழுதப்படாத சரித்திரம்-மாவீரர் சுந்தரலிங்கத் தேவந்திரர்!
தமிழர் வரலாறு பற்பல ரூபங்கள் காட்டும் மாயக்கண்ணாடியாக இருக்கிறது. ஓர் உண்மையின் மேல் விழுந்து பல பொய்கள் மறைகின்றன. ஆதாரங்கள், தகவல்கள் கிடைக்காமை காரணமாக வரலாறு புலப்படவில்லை என்றால் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. கிடைத்திருக்கிற வரலாறுகூட சாதிக்கழிப்புகள், சாதி மேலாண்மை காரணமாக அழிக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் போகும் நிலைமை இன்றும் நீடிக்கிற அவலமாகத் தொடர்கிறது. ஆங்கிலேயக் கும்பனி ஆட்சியைந் எதிர்த்த தொடக்க காலப் போராட்ட வரலாற்றில் மேலெழுந்து வருகிற சில தலைவர்கள் புலித் தேவர், கட்டபொம்மன், மருது சகோதரர்கள் போன்றவர்களுடன் அவர்க-ளுக்கு நிகராகத் தகத்தகாயத் தியாகங்கள் செய்து தம் உயிரையும் ஈந்து, போதிய வெளிச்சமற்றுப்போன மாபெரும் தியாக வீரர்கள் இருக்கவே செய்கிறார்கள்.
அவர்களில் முதலில் வருகிறவர் சுந்தரலிங்கத் தேவேந்திரர். பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரர் கட்டபொம்மு நாயக்கரின் தளபதியாக வாழ்ந்தவர் அவர். பாஞ்சாலங்குறிச்சிப் பாளையமும் கட்டபொம்முவும் கும்பனி ராணுவத்தால் அழித்தொழிக்கப்படுவதற்கு முன்னால், அவர்களைக் காத்து அம் முயற்சியில் தம் உயிரைத் தந்தவர் சுந்தரலிங்கம். ஆதிக்க ஆங்கிலேயரை எதிர்த்து முதல் சுதந்திரப் போராட்ட முயற்சிகள், எழுச்சிகளாகவும், புரட்சியாகவும் முளைத்தது தமிழகத்தில்தான் என்பேதே உண்மையான வரலாறு.
‘சிப்பாய் புரட்சி’ என்று சொல்லப்பட்ட, இந்தியாவின் வட மாநிலங்களில் நிகழ்ந்த 1857 போரே , இந்தியாவின் முதல் சுதந்திரப்போர் என்று வரலாறு தெரியாதவர்கள் (சாவர்க்கர் எழுதியதையும் சேர்த்தே சொல்கிறேன்) எழுதிய தவறுகளுக்கு மாறாக, பிரிட்டிஷ் கும்பனியை எதிர்த்த ஆதிப் போராட்டங்கள், போர்கள் தமிழ் மண்ணிலேயே நடந்துள்ளன. இந்தியாவின் ஆதிச் சுதந்திரப் போராளிகளில் ஒருவரே சுந்தரலிங்கத் தேவேந்திரர். பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகில் உள்ள சுவர்னகிரியில் பிறந்தவர் சுந்தரலிங்கம். தந்தை கட்டக் கருப்பணத் தேவேந்திரர். தாயார் முத்தம்மாள். சுந்தரலிங்கம் பிறந்த ஆண்டு ஏறக்குறைய 1771 என்று நம்பப்படுகிறது. மனைவி சண்முகவடிவு. தம்பதிகளுக்கு இரு மகன்கள் உண்டு. ஒரு ‘நதி நீர்ப் பங்கீட்டில்’தான் சுந்தரலிங்கத்தின் அரசியல் வரலாறு தொடங்கி இருக்கிறது. பாஞ்சாலங்குறிச்சிக்குச் சொந்தமான ஆற்றிலோடைக் கண்மாய் நீரை எட்டயபுரத்தைச் சேர்ந்த தருவைக்குளம் கண்மாய்க்குத் திருப்ப எட்டயபுரத்து அதிகாரம் ஆற்றிலோடைக் கண்மாயின் குறுக்கே கரை எழுப்பியபோது, அதைத் தடுத்து எட்டயபுரத்தார்களை விரட்டியடித்த வீரச் செயலால் புகழடைந்தார் சுந்தரலிங்கம். பாஞ்சாலங்குறிச்சிக்கு அவர் செய்த முதல் தொண்டு அது. இதைத் தொடர்ந்து, சுந்தரலிங்கம், கட்டபொம்முவின் படைப்பிரிவில் முக்கியப் பொறுப்பில் சேர்க்கப்பட்டுத் தன் அர்ப்பணிப்பு மிக்க வீரச் செயல்களால் தளபதி என்கிற அளவுக்கு உயர்ந்திருக்கிறார்.
மதுரையை மையமாகக் கொண்டு விசாலமான தமிழ்நாடு-திருவிதாங்கூர் உள்ளிட்ட பூமியை ஆண்ட விசுவநாத நாயக்கன் (1529-1564) நிர்வாக வசதிக்காக, தமிழ்நாட்டு நிலப்பரப்பை 72 பாளையங்களாகப் பிரித்தார். அதில் ஒன்று பாஞ்சாலங்குறிச்சி பாளையம். இப்பாளையம் கட்டபொம்முவின், ஆந்திராவில் இருந்து வந்த தெலுங்கு தோக்குலவார் பிரிவு, முன்னோர்களுக்குத் தரப்பட்டது. அந்த வழியில் வீரபாண்டிய கட்டபொம்மன் வருகிறார். இவர் காலத்தில் நிலவரி, வசூலிக்கும் பொறுப்பு ஆங்கிலக் கும்பனிக்கு வந்து சேர்ந்தது. பெரும்பாலான பாளையங்கள் ஒழுங்காகக் கப்பம் கட்டித் தம் விசுவாசத்தைக் கும்பனிக்குக் காட்டிய காலத்தில், கட்டபொம்மு கப்பப் பணம் தர மறுத்தார். மறுத்தமைக்கான காரணங்கள், ஆங்கிலேயரின் அணுகுமுறை. வரம்பு மீறிய அதிகாரக் கொடுங்கோல் முறையில் சுதேச மன்னர்கள் என்று மக்களால் கருதப்பட்ட பாளையக்காரர்கள் மேல் ஆங்கிலேயர் செலுத்திய அவமரியாதைப் போக்குகள். இரண்டாவது காரணம், ஆதிக்கச் சக்திகளை எதிர்த்து அரும்பிக் கொண்டிருந்த சுதந்திர உணர்வு.
கும்பனிக்கு 1972 முதலே ஆறு ஆண்டுகளாகக் கட்டபொம்மு வரிகட்ட மறுத்துக் கொண்டிருந்தார். இந்தச் சூழலில் திருநெல்வேலி, இராமநாதபுரத்தின் ஆட்சியராக 1797-ல் நியமிக்கப்பட்ட ஜாக்சன், 26.10.1797 அன்று,‘உடனடியாக வரி செலுத்த வேண்டும் என்றும், தூத்துக்குடியில் முகாம் இட்டிருந்த இராணுவ அதிகாரி டேவிட்சனுக்கு உணவுக்காக ஆடுகள் அனுப்ப வேண்டும்’ என்றும் கட்டபொம்மனுக்குத் தாக்கீது பிறப்பித்தான். கட்டபொம்மன், இதைப் புறக்கணித்தான். அடுத்து ஜாக்சன் எழுதிய, ‘பாளையம் பறிமுதல் செய்யப்படும்’ என்று எச்சரிக்கை விடுத்த இரண்டு கடிதத்தையும் கட்டபொம்மு கசக்கித் தூர எறிந்தான். இந்தக் காலத்தில், கும்பனிக்கு எதிராக இதர பாளையக்காரர் மனதில் சுதந்திர வேட்கை உருவாகிக் கொண்டிருந்தது. இறுதியில் கட்டபொம்மு ஜாக்சனைச் சந்திக்கப் புறப்படுகிறார். உடன் சுந்தரலிங்கமும், ஊமைத்துரையும் பாதுகாப்புக்குச் செல்கிறார்கள். பேட்டிக்கு வரச் சொன்ன ஜாக்சன், சுமார் 23 நாட்கள் 400 மைல்கள் அவர்களை அலையவிட்டு அவமானப்படுத்திக் கடைசியில் 10.9.1798 - அன்று மாலையில் சந்திக்கிறான். கட்டபொம்மனை நிற்க வைத்தே பல மணிநேரம் பேசி, அவரை மேலும் அவமானப்படுத்துகிறான். டர்ரென்று நாற்காலியை ஸ்டைலாக இழுத்துப் போட்டு சிவாஜி கணேசன் உட்காருவார். சிவாஜிதான் அமர்ந்தார். நிஜக் கட்டபொம்மு நின்றுகொண்டிருந்தார். தன்னைக் கைது செய்யும் சூழல் உருவாவதை கட்டபொம்மு உணர்கிறார். தண்ணீர் குடித்துவிட்டு வருவதாகக் கீழே வருகிறார். ஆங்கிலச் சிப்பாய்கள் அவரை மடியைப் பிடித்து இழுக்கிறார்கள். சில சிப்பாய்கள் கட்டபொம்மனையும், ஊமைத் துரையையும் நோக்கிச் சுடுகிறார்கள். கோட்டைக்கு வெளியே நின்றிருந்த சுந்தரலிங்கம், தன் வீரர்களுடன் கட்டபொம்மனைப் பாதுகாக்க வருகிறார். அப்போது ராணுவத் துணைத் தளபதி கிளார்க், கட்டபொம்மனைக் கொல்ல பாய்ந்து வருவதைக் கண்ட சுந்தரலிங்கம், தன் வாளால் அவனை வெட்டிச் சாய்த்தார்.
கட்டபொம்மு அப்போது தப்பித்தது, சுந்தரலிங்கத் தேவேந்திரரால்தான். ஓரளவு அமைதி திரும்பும் சூழ்நிலையில், எட்டையபுர நாயக்கர் கட்டபொம்மு மீது, கும்பனிக்குப் புகார்க் கடிதம் அனுப்புகிறார். கட்டபொம்முவுக்கும், எட்டப்ப நாயக்கருக்கும் முன்னரே இருந்த எல்லைத் தகராறும், எட்டப்பரின் கும்பனி விசுவாசமும் இப்படிப்பட்ட பல புகார்களைக் கொடுக்க வைத்தன. அதே காலத்தில் ஊத்துமலை பாளையக்காரர், சிவகிரிப் பாளையக்காரர் முதலான பலரும், கட்டபொம்மனின் மேல் கும்பனிக்குப் புகார் அனுப்பிக் கொண்டே இருந்தார்கள். மற்றொரு பாளையத்தில் பிரவேசிப்பது, அழிம்பு செய்வது, பயிர்களை நாசமாக்குவது அல்லது களவாடுவது, மாடு பிடிப்பது போன்ற சின்னச் சின்ன வரம்பு மீறுதலை எல்லோருமே எல்லா பாளையக்காரர்களுமே செய்தவர்கள்தான். கட்டபொம்முவும் செய்தார். எரிச்சலடைந்த கும்பனி ஆட்சி, பாஞ்சாலங்குறிச்சியின் மேல் படையெடுத்தது.
இந்த இடத்தில் நாம் ஒன்றை நினைவுப்படுத்திக் கொள்வது நல்லது. பாஞ்சாலங்குறிச்சி வரலாற்றை எழுதியவர்களில், சுந்தரலிங்கத் தேவேந்திரரின் பங்களிப்பைத் தனியாகப் பிரித்து எழுதி, அவருக்குரிய மரியாதையை ஏற்படுத்திய வரலாற்று ஆசிரியர் தமிழவேள் அவர்களைப் பாராட்ட வேண்டும். ‘பாஞ்சாலங்குறிச்சி படைத் தளபதி சுந்தரலிங்கத் தேவேந்திரர்’ என்னும் பெயர் கொண்ட அவரது ஆய்வு நூல், மிகுந்த முக்கியத்துவம் உடையது. இந்த நூல் மூலம் பல மறைக்கப்பட்ட செய்திகள் வெளியாகி உள்ளன. அவைகளில் முக்கியமான ஒன்று, பாஞ்சாலங்குறிச்சிப் போரில், கட்டபொம்மனின் தோளுடன் தோளாக நின்று, கடைசிவரை அவருடன் சேர்ந்து போராடித் தம் உயிரைத் தந்தவர்கள் தேவேந்திரர்களும் பகடைகளுமே ஆவர். காலாடிகளையும், பகடைகளையும் தம் பிள்ளைகள் போலக் கருதிக் கட்டபொம்மு வளர்த்தான் என்கிற முக்கியச் செய்தியைத் தமிழவேள் பல ஆதாரங்கள் மூலம் தந்துள்ளனர். இந்தக் கட்டுரையில் பல முடிவுகளை அந் நூலில் இருந்தே நான் எடுத்துக் கொண்டேன்.
5.9.1799 -ம் தேதி பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை முற்றுகை இடப்பட்டு அன்றே தாக்கப்பட்டது. சுந்தரலிங்கத் தேவேந்திரர் தலைமையில் காலாடிக் கருப்பத் தேவேந்திரர், வீரமல்லு நாயக்கர், கந்தன் பகடை, பொட்டிப் பகடை முதலான துணைத் தளபதிகளின் வழிகாட்டுதலில் பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் கும்பனிப்படை வீரர்களுடன் மோதினார்கள். மிகவும் உக்கிரமாக நடைபெற்ற முதல் நாள் போரில் ஐந்து முக்கிய ஆங்கிலத் தளபதிகள் கொல்லப்பட்டார்கள். ஆங்கிலப் பகுதிக்குப் பெரும் சேதம் விளைந்தது.
மறுநாள் 6-ம் தேதி இரவு கட்டபொம்மன், தன் தம்பி ஊமைத்துரையோடு கோட்டையைவிட்டு வெளியேறி, படை திரட்டும் பொருட்டுக் கோலார்பட்டிக்குச் செல்கிறார். மறுநாள் கோட்டை இடித்துத் தள்ளப்படுகிறது. அரண்மனைக்குள் ஆங்கிலேயர்கள் கொள்ளையடிக்கிறார்கள்.
மன்னர்கள் காலத்திலே இருந்து பாளையக்காரர்கள் வரை, ஆங்கிலேயர்கள் மற்றும் ஆதிக்கச் சக்திகளிடம் தோற்றமைக்குக் காரணம், தமிழ்நாட்டு வீரர்கள் அவர்கள் தமிழர்களோ, கம்பளத்தார்களோ யாராக இருந்தாலும் ஒழுங்கான படைப் பயிற்சியும் போதுமான ஆயுதங்கள் இல்லாமையும், ஆயுதங்கள் நவீனமானதாய் இல்லாமையும், எல்லாவற்றுக்கும் மேலே துரோகத்தாலும் வீழ்ந்தார்கள். ஆயிரக்கணக்கான தேவேந்திரர்கள், அதே அளவு அருந்ததியர்களின் வீரத்தில் பழுதில்லை. தாய் பூமிப் பற்று மற்றும் விசுவாசம் அல்லாமல் வேறு எதுவும் அவர்களிடம் இல்லை.
கோலார்பட்டியில் இருந்து கொண்டு படைதிரட்டிக் கொண்டிருந்த கட்ட பொம்மனையும் ஊமைத் துரையையும் எட்டயபுரம் படையும், ஆங்கிலேயர் படையும் சுற்றிக்கொண்டது. கட்டபொம்மனும் ஊமைத்துரையும் தப்பித்து வெளியேறினர். தாளாபதிப்பிள்ளை கைது செய்யப்படுகிறார். சுந்தரலிங்கம் தலைமறைவாகிறார்.
கட்டபொம்மனைக் கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. தமிழவேள் மிகுந்த ஆவண ஆதாரங்களுடன் இக்குறிப்புகளை எழுதுகிறார். ஒற்றர்கள் மூலம் கட்டபொம்முவும், ஊமைத்துரையும் புதுக்கோட்டையில் சந்திப்பதாகத் தகவல் அறிந்த பாளர்மேன், புதுக்கோட்டை தொண்டைமானுக்குத் தகவல் அனுப்பி, கட்டபொம்மன் குழுவினரைக் கைதுசெய்ய உதவும்படிக் கேட்டுக்கொள்கிறான். சிவகங்கை வட்டத்தைச் சேர்ந்த திருக்களம்பூர் அருகில் கலியபுரம் எனும் இடத்தில் 23.9.1799 அன்று தொண்டைமான் ஆட்கள் கட்டபொம்மன், ஊமைத்துரை, மைத்துனர்கள் இருவர் மற்றும் மூன்று பேருடன், ஆக ஏழுபேரைக் கைது செய்கிறார்கள். 5.10.1799 அன்று அவர்கள் கயத்தாறு கொண்டுவரப்பட்டு 16.10.1799 வரை சிறையில் வைக்கப்படுகிறார்கள். 16.10.1799 அன்று காலை கட்டபொம்மு மீது விசாரணை நடத்தப்படுகிறது. தீர்ப்பை எழுதிவைத்துக்கொண்டு, விசாரணையைத் தொடங்குகிறார் பாளர்மேன். ஐந்து குற்றச்சாட்டுகளை அடுக்குகிறான். ‘ஏதேனும் கூற விரும்புகிறாயா?’ என்று கட்டபொம்மனிடம் கேட்கிறான் அவன். பாளர்மேனை அலட்சியப்படுத்துகிறார் கட்டபொம்மன். வேடிக்கை பார்க்க வந்த கும்பனி விசுவாசிகளான எட்டயபுரம், சிவகிரிப் பாளையக்காரர்களை மிக ஏளனத்துடன் பார்க்கிறார். தூக்குமேடைக்கு மிகுந்த வீரத்துடன் நடந்து செல்கிறார் கட்டபொம்மன். கயத்தாறு பழைய கோட்டைக்கு எதிரே உள்ள புளிய மரத்தில், கட்டபொம்மன் தன் உயிரைச் சுதந்திரத்துக்கு விலையாகக் கொடுத்தார்.
பாஞ்சாலங்குறிச்சி போரின் அடுத்தகட்டம், ஊமைத்துரையோடு ஆரம்பமாகிறது. உண்மையில் இந்தக் காலகட்டத்தில் கதாநாயகன் சுந்தரலிங்கத் தேவேந்திரன்தான். பாளையங்கோட்டைச் சிறையில் அகப்பட்டு, தூக்குக்குக் காத்திருந்த ஊமைத்துரையையும் மற்றும் உள்ள பாஞ்சை வீரர்களையும் மிகப் பெரிய சாகசம் செய்து தப்பிக்கச் செய்தவர் சுந்தரலிங்கத் தேவேந்திரர். அந்த வீரம் செறிந்த வரலாற்றை அடுத்துக் காண்போம்.
பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரர் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டது 1799-ம் ஆண்டு. அவருக்குப் பிறகு பாளையக்காரராகத் தம்மை அறிவித்துக்கொண்ட, அவரது தம்பி ஊமைத்துரை கொல்லப்பட்டது 1801-ம் ஆண்டு. இடையில் கழிந்த இரண்டு ஆண்டுகள் மேலும் முப்பது நாட்கள், கும்பனிக்கு எதிராக, ஒரு சுதந்திரப் போராட்டத்தை நடத்தினார் ஊமைத்துரை என்கிற குமாரசுவாமி. ஊமைத்துரையோடு அவருக்கு நிகராக, சில வேளைகளில் மேலாகப் போர்ச் செயல்பாடுகளில் ஈடுபட்டவர், பாஞ்சாலங்குறிச்சியின் தளபதியாக இருந்த கட்ட கருப்பச் சுந்தரலிங்கத்தேவேந்திரர் என்றே வரலாறு பதிவு செய்திருக்கின்றது. இப்போதும் வெள்ளையருக்கு எதிராகப் படைகளும், நாயக்கர்களும் தேவேந்திரர்களும் கிளர்ந்தெழுந்திருக்கிறார்கள், ஊமைத்துரைக்கு ஆதரவாக.
கயத்தாறில் கட்டபொம்மன் தூக்கிலிடப்-பட்டபோது (16.10.1799) ஊமைத்துரையும் அவருக்கு நெருக்கமான உறவும், சில வீரர்களும் ஆகப் 16 பேரும் பாளையங்கோட்டைச் சிறையில், தூக்குக் கயிறை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் கைவிலங்கும், கால் விலங்கும் போடப்பட்டு மிக விழிப்பாகக் கண்காணிக்கப்பட்டனர்.
முன்னர், 9.9.1799 அன்று கோல்வார்பட்டியில் நடந்த சண்டையின்போது தலைமறைவான சுந்தரலிங்கம், சும்மா இருக்கவில்லை. தலைமறைவுக் காலமான அந்த ஐந்து மாதங்களைப் பயன்படுத்திக்கொண்டு, பாஞ்சாலங்குறிச்சியின் பக்கத்தில் அவர் பிறந்த ஊரான சுவர்னகிரி, பசுவந்தனை, பட்டணமருதூர் முதலான ஊர்களில் தேசப்பற்றும் (தேசம் என்பது அந்தக்காலத்தில் பாஞ்சாலங்குறிச்சிதான்), போர் ஆர்வமும் கொண்ட இளைஞர்களைத் திரட்டி படையாக்கிப் போர்ப் பயிற்சி கொடுத்தார். இப்படியாகச் சிறுபடையைத் தயார்செய்து கொண்டிருந்த சுந்தரலிங்கம், பாளையங்கோட்டை சிறையை உடைத்து ஊமைத்துரை மற்றும் குழுவினரையும் மீட்கத் திட்டமிடத் தொடங்கினார். சிறையிலிருக்கும்
ஊமைத்துரைக்கும் சுந்தரலிங்கம் முதலான புரட்சிக்காரருக்கும் பாலமாக இருந்து பெரும்பணி செய்தவர். பொட்டிப் பகடை. ஊமைத்துரைக்கு உணவு கொண்டு போய் கொடுக்கும் பணியில் இருந்த பொட்டிப் பகடை, ஊமையன் குழுவினர் சொல்வதைப் புரட்சிக்காரர்க்கும், இவர்கள் திட்டத்தை ஊமையனுக்கும் சொல்லி வந்து, சிறை உடைப்புக்கு உருவம் கொடுத்தார். வெளியில் இருந்த புலிக்குட்டி நாயக்கரும் உதவி செய்ய முன்வந்தார். (ஊமையன் என்ற சொல், அன்போடு பயில்கிறது, வரலாற்றில்)
சிறை உடைப்பு 1801-ஜனவரி இரண்டாம் தேதி என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கு முன்நாள் சுமார் 200 புரட்சியாளர்கள், நெல்லை-பாளையங்கோட்டை சாலையில் காணப்பட்டார்கள். அவர்கள் திருச்செந்தூர், முருகனுக்குக் காவடி எடுப்பதுபோல, காவடிகளைத் தம் தோளில் வைத்துக்கொண்டு சிந்துப் பாடல்கள் பாடியபடி வந்தார்கள். இடுப்பில் மஞ்சள் துண்டு கட்டிக்கொண்டு, மந்திரங்கள் ஓதியபடி பக்தர்களுக்குத் திருநீறு அளித்துக்கொண்டு நடந்தார்கள். முன்னரே அங்கிருந்த வீரர்களுடன் சங்கேதச் சொற்களில் உரையாடியபடியும் பாளை சிறைச்சாலைக்கு முன்பாக நடந்து இடத்தைக் கவனித்தார்கள். அதில் பெரிய காவடி எடுத்தவராகச் சுந்தரலிங்கம் இருந்தார்.
இதேநாள், சிறைச்சாலையில் இருந்த ஊமையன் குழுவினர், ஒரு நாடகம் நடத்தத் தொடங்கினார்கள். சிறையில் பெரியம்மை வந்த ஒரு கைதி இறந்ததை முன்னிட்டு, ஊமையன் குழுவினரின் கை விலங்குகள் விலக்கப்பட்டிருந்தது, அவர்களுக்கு நல்ல வாய்ப்பைத் தந்தது. அதோடு, போரில் இறந்த உற்றார் உறவினர்களுக்குத் திதி கொடுக்க விரும்புவதாகவும், அதற்கான வாழை இலை, தேங்காய், சூடம் பொங்கலுக்கான அரிசி, வெல்லம், விறகு போன்றவை வாங்க அனுமதி வேண்டும் என்று சிறையதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்கள். விஷயம் தெய்வ நம்பிக்கை சார்ந்ததாக இருப்பதால், தனக்குத் தெய்வக் குற்றம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் அதிகாரி அனுமதி கொடுத்தார்.
அதே நேரம் காவடி எடுத்துக்கொண்டு வந்த சுந்தரலிங்கம் குழுவினர், விறகுகள், வாழை, பழங்கள், அரிசி, பருப்பு விற்கும் வியாபாரிகளாக உருமாறினார்கள். திருச்-செந்தூருக்குக் காவடி எடுத்து வரும் பக்தர்கள், ஆங்காங்கே தங்கிப் பொங்கிச் சாப்பிடுவது யாதார்த்தம் ஆனதாலும், இம்மாதிரி வியாபாரிகள் அங்கு திரிவது இயல்பானது என்பதாலும், சிறை அதிகாரி, ‘இந்த’ வியாபாரிகளை விகற்பமாக நினைக்கவில்லை. அதோடு, சிறை அதிகாரி, அந்த வியாபாரிகளைச் சிறைக்குள் அனுமதித்தார். சிறைக்குள் புகுந்த வியாபாரிகள் ஊமையனின் சைகையைப் பெற்றவுடன், அந்தச் சமயத்தில் சிறைக்குள் இருந்த இருட்டைப் பயன்படுத்திக்கொண்டு, விறகுச் சுமைக்குள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை வெளியே எடுத்தார்கள். சிறைக்குள் அடுத்து ஏற்பட்ட சண்டையில் சிறைக்கதவு உடைக்கப்பட்டு, ஊமையன் குழுவினர் வெளியேறினர்.
புரட்சியாளர்கள், ஜனவரி 2-ம் தேதியைத் தேர்ந்தெடுத்தமைக்கான காரணம், அன்று கும்பனி அதிகாரி மெக்காலே வீட்டில் மாலை நடந்த விருந்துக்கு, இருபது அதிகாரிகளும், அவர்களது பாதுகாப்புக்கு நிறைய சிப்பாய்களும் கலந்துகொண்டிருந்தார்கள். சிறை பாதுகாப்பு பலவீனப்பட்டிருந்தது.
ஊமையன் குழுவும், சுந்தரலிங்கம் வீரர்களும் நேராகப் பாஞ்சாலங்குறிச்சிக்கு (சுமார் 30 கல் தொலைவில் இருக்கிறது) வந்து சேர்ந்தார்கள். ஆங்கிலேயரால் இடித்துப் பாழ்பட்ட கோட்டையை மீண்டும் கட்ட வேண்டியதே முதல் பணியாக அவர்களுக்கு இருந்தது. ஆறு நாளில், கோட்டை உருவாயிற்று. சுமார் 500 அடி உயரமும் நீளமும், 200 அடி அகலமும் கொண்ட கோட்டை. கோட்டைச் சுவரின் உயரம் 12 அடிகள்.
ஊமையனின் சிறையுடைப்பு கும்பனிக்கு மாபெரும் பின்னடைவு என்பதை அவர்கள் உணரவே செய்தார்கள். கயத்தாற்றை நோக்கி கும்பனிப் படைகள் புறப்பட்டன. குலைய நல்லூரிலும் மற்றும் பல ஊர்களிலும் ஊமையனின் கெரில்லா முறைத் தாக்குதலில் பெரும் நஷ்டங்களைச் சந்தித்தது கும்பனி படை. இந்தக் கட்டத்திலும் ஊமைத் துரை, ஒரு கூட்டணிக்கு முயற்சி செய்தார். பாளையக்காரர்கள் பலருக்கும் தனக்கு உதவுமாறும், உதவவில்லை என்றாலும், கும்பனிக்கு உதவ வேண்டாம் என்றும் சுதந்திரத்தின் பெயரால் ஓலை அனுப்பினார். தஞ்சை, புதுக்கோட்டை, எட்டையபுரம், ஊத்துமலைப் பாளையங்கள் ஊமையன் கோரிக்கையை நிராகரித்தன. தொடக்கத்தில் ஊமையன் சில குறிப்பிடத்தகுந்த வெற்றிகளைப் பெற்றார். என்றாலும் கும்பனிப் படை பலம், பீரங்கிகள் போன்ற நவீன ஆயுதபலம், தமிழ் நிலத்தில் நிலைபெற்றிருக்கும் துரோக பலம் ஆகியவற்றின் உதவியால் கும்பனி, வெற்றியை ஈட்டத் தொடங்கியது.
பாஞ்சாலங்குறிச்சி கோட்டை 24.5.1801-ல் வீழ்ந்தது. ஊமைத் துரையும் சுந்தரலிங்கமும் தப்பித்து வெளியேறினார்கள். பகடைகளும், தேவேந்திரர்களும், நாயக்கர்களும் இரத்தத்தாலும், வியர்வையாலும் கட்டிய கோட்டை சிதைந்தது.
போரிட்டுக் கொண்டே சென்றதில் பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் கோட்டைக்கு வெளியே சிதறிக் கிடந்தனர். கோட்டையில் இருந்து மூன்று கல் தொலைவில் இருந்த சுவர்னகிரிக்கு அருகில் ஊமையனும், சுந்தரலிங்கம், வேறு பலரும் வெட்டுக் காயங்களுடன் மண்ணில் கிடந்தனர். வீழ்ந்துக்கிடந்த வீரர்களின் மத்தியில் சுந்தரலிங்கத்தைக் கண்டுபிடித்தார், சுந்தரலிங்கத்தின் தாயாரான முத்தம்மாள். சுந்தரலிங்கம், தன் தாயிடம் ‘என்னை விடு, பக்கத்திலே கிடக்கும் சாமியைக் (குமாரசாமியாகிய ஊமைத்துரை) காப்பாற்றும்மா’ என்று சொல்லி இருக்கிறார். முத்தம்மாள் இருவரையுமே, தன் வீட்டுக்கு எடுத்து வந்து, காயங்களுக்கு மருந்திட்டுக் காப்பாற்றி இருக்கிறார்.
உடல் நிலை தேறியதும், ஊமைத்துரையும் சுந்தரலிங்கமும், மருது சகோதரர்களின் உதவியைப் பெற சிறுவயலுக்குச் சென்றார்கள். ஊமையனுக்கு அடைக்கலம் கொடுத்தமைக்காக, கும்பனி சிவகங்கை மேல் படையெடுத்தது. மருது சகோதரர்கள் மற்றும் ஊமைத்துரை, சுந்தரலிங்கம் ஆகியோர் அணிதிரண்டு போரிட்டார்கள். நான்கு மாதங்கள் தொடர்ந்த இந்தப் போரின் இறுதி, மிக்க சோகத்தில் முடிந்தது. மருது சகோதரர்கள் தூக்குக் கயிற்றில் தங்கள் சுதேச மானத்தை எழுதினார்கள். விருப்பாட்சியில் ஊமையனும், சுந்தரலிங்கமும் கைது செய்யப்பட்டு பாஞ்சாலங்குறிச்சி பீரங்கி மேட்டில் வைத்து, 16.11.1801 அன்று ஒரே நாளில் ஒரே இடத்தில் தூக்கிலிடப்பட்டார்கள்.
இப்படியாக ஆதிச் சுதந்திரப் போராட்டம், பாஞ்சாலங்குறிச்சியைப் பொறுத்தவரையில் ஒரு முடிவுக்கு வந்தது. மாபெரும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான தமிழ் நிலத்துப் போர், தமிழர்கள் பெருமைப்படும் விதத்திலேயே நடந்து முடிந்தது.
வரலாற்றின் பக்கங்களை, வரலாறு நிகழ்ந்து கொண்டிருக்கும்போது, யாரும் அறிவதும் இல்லை. உணர்வதும் இல்லை. பல காலங்களுக்குப் பிறகு, வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் ஓர் ஆய்வாளர், வரலாற்று நிகழ்ச்சிகளை, வரலாற்றை உருவாக்கிய மாமனிதர்களின் பங்கை, தன் அறிவையும் தன் சார்பையும் கொண்டு அளவிடுகிறார். போராட்டமே வரலாற்றை உருவாக்குகிறது என்கிற ஞானம் கைவரப்பெற்ற ஆய்வாளர், தன் வரலாற்றைப் போராளிகளைச் சார்ந்து உருவாக்குகிறார். கான்கிரீட் தரையிலும் மீன் பிடிக்க ஆசைப்படும் ஆய்வாளர், நிறுவனங்கள் தமக்குச் சாதகமாக உருவாக்கி இருக்கும் கருத்துகளோடு உடன்பட்டுப் பொய்யை விரிக்கிறார்.
பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் பற்றிய கதைப் பாடல்கள், அவர்கள் அனைவரும் மறைந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகே, அதாவது 1850க்குப் பிறகே உருவாக்கப்படுகின்றன. 1847-ம் ஆண்டு, கும்பனி அரசு அடிமை முறையை ஒழித்த பிறகே, இந்தக் கலை இலக்கியங்கள் வெளிப்படத் தொடங்கின. நாட்டுப் புலவர்கள், தங்களுக்கு வந்து சேர்ந்த நிகழ்ச்சிகளின் புரிதல் அடிப்படையில் மட்டுமே அல்லாது, அவர்கள் காலத்து ஊரின் பாடப்படும் இடத்தின் சாதி மேலாண்மைக்கு இசையத் தம் பாடல்களைப் பாடி இருக்கிறார்கள்.
பாஞ்சாலங்குறிச்சி போர் இலக்கியத்தில் நிறைய புனைவுகள் புகுந்துள்ளன. இப்புனைவுகளில் இருந்து, உண்மையைத் தேடும் சில ஆய்வாளர்கள் அண்மைக் காலத்தில் உருவாகி இருக்கிறார்கள். மேற்சாதித் தலைவர்களோடு, சமகாலத்தில் சம அளவில் பங்குகொள்ளும் வீரர்கள், அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தால், வரலாற்றில் இருந்தே அழிக்கப்பட்ட இழி நிலையை மாற்றும் ஆய்வாளர்கள், கடந்த சில ஆண்டுகளில்தான் வந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் சுந்தரலிங்கத்தை வெளிக் கொணர்ந்த தமிழவேள்.
பாஞ்சாலங்குறிச்சிப் போரில் முக்கியமானவர்-களாக, கட்டபொம்மன், ஊமைத் துரை, சிவத்தையா, தானாபதிப்பிள்ளை, சுந்தரலிங்கம், தாலாடி கருப்பணர், கந்தன் பகடை, முத்தன் பகடை, பொட்டிப் பகடை ஆகியோரே முக்கியமானவர்கள் என்கிறார் தமிழவேள். தேவேந்திரன், பகடை, பறையர்கள் என்று எழுதவே ஆதிக்க சாதிப் பேனாக்கள் மறுக்கும் சூழ்நிலையே வரலாறு முழுதும் இருந்துள்ள காலகட்டத்தில் இவர்களின் தியாகம் மறைக்கப்பட்ட காரணத்தை விளங்கிக் கொள்ள முடிகிறது. பாஞ்சாலங்குறிச்சி வரலாற்றில் வெள்ளையத் தேவன், வெள்ளையம்மாள் இருவரும் புனைப் பாத்திரங்கள் என்கிறார் தமிழவேள்.
பாஞ்சாலங்குறிச்சிப் போரில் முதல் களப்பலியே துணைத் தளபதி கந்தன் பகடை. வரலாற்று ‘மேற்குல’ ஆசிரியர்களுக்கு அதை எழுதவே கை கூசுகிறது. ஆனால், மக்கள் தங்கள் வீரர்களை மறப்பதில்லை.
கட்டக் கருப்பன் சுந்தரலிங்கம்
மட்டிலா பேரும் கொடுத்தானடா
ஆயிரம் கம்பளம் நூறு பரிவாரமவதற்கு
நீயொரு வீரனடா-என்று வானமாமலை தொடுத்த கட்டபொம்மன் கதைப்பாடல் கூறுகிறது.
.......பிரபஞ்சன்
-சரித்திரம் தொடர்கிறது
விஜயநாராயணம் அருகே வீரன் சுந்தரலிங்கம் படம் அவமதிப்பு: பொதுமக்கள் மறியல்
நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் அருகே உள்ள காரியாண்டியில் வீரன் சுந்தரலிங்கம் பேரவை சார்பாக ஒரு போர்டு வைக்கப்பட்டு உள்ளது. இதில் உள்ள சுந்தரலிங்கம் படத்தில் யாரோ சாணம் பூசி அவமரியாதை செய்திருந்தனர்.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து கிளை செயலாளர் முத்து தலைமையில் அங்குள்ள ரோட்டில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர்.
சுந்தரலிங்கம் படத்தை அவமரியாதை செய்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து விஜயநாராயணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லிங்க திருமாறன் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சு நடத்தினார்.
இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.

நெல்லையில் வீரன் சுந்தரலிங்கம் பிறந்த நாள்: ஏழை பெண்களுக்கு தையல் எந்திரம் ஜான்பாண்டியன் வழங்கினா
நெல்லையில் வீரன் சுந்தரலிங்கம் பிறந்த நாள்: ஏழை பெண்களுக்கு தையல் எந்திரம் ஜான்பாண்டியன் வழங்கினார்...சுதந்திர போராட்ட வீரர் வீரன் சுந்தரலிங்கம் பிறந்த நாள் விழா நெல்லை சந்திப்பில் உள்ள அம்பேத்கார் சிலை அருகே இன்று நடைபெற்றது. தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநகர் மாவட்ட செயலாளர் கண்மணி மாவீரன் தலைமை தாங்கினார்.
இதில் அக்கட்சியின் நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் கலந்து கொண்டு சுந்தரலிங்கம் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு ஏழை பெண்கள் 15 பேருக்கு இலவச தையல் எந்திரம் வழங்கினார்.
சுந்தரலிங்கம் பிறந்த நாளை முன்னிட்டு பாளை மார்க்கெட் மற்றும் சமாதான புரம் பகுதியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.அதன் திறப்பு விழா மாநகர் மாவட்ட தலைவர் அந்தோணி அன்பரசன் தலைமையில் நடந்தது. இந்த தண்ணீர் பந்தல்களை ஜான்பாண்டியன் திறந்து வைத்தார்.
இந்த விழாக்களில் நாங்குநேரி யூனியன் சேர்மன் லெக்கன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநில அமைப்பு செயலாளர் நெல்லையப்பன், கொள்கை பரப்பு செயலாளர் எட்வின், மாவட்ட இணைச்செயலாளர் கண்ணன், இளைஞர் அணி கணேஷ் பண்ணையார், கிங் தேவேந்திரன், துரைப் பாண்டியன், வரதன், பெருமாள்பாண்டியன், முத்து, தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டன
வீரர் சுந்தரலிங்கம் பிறந்த நாள்
சுதந்திர போராட்ட வீரர் வீரன் சுந்தரலிங்கம் பிறந்த நாள் விழா நெல்லை சந்திப்பில் உள்ள அம்பேத்கார் சிலை அருகே இன்று நடைபெற்றது. தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநகர் மாவட்ட செயலாளர் கண்மணி மாவீரன் தலைமை தாங்கினார்.
இதில் அக்கட்சியின் நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் கலந்து கொண்டு சுந்தரலிங்கம் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு ஏழை பெண்கள் 15 பேருக்கு இலவச தையல் எந்திரம் வழங்கினார்.
சுந்தரலிங்கம் பிறந்த நாளை முன்னிட்டு பாளை மார்க்கெட் மற்றும் சமாதான புரம் பகுதியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.அதன் திறப்பு விழா மாநகர் மாவட்ட தலைவர் அந்தோணி அன்பரசன் தலைமையில் நடந்தது. இந்த தண்ணீர் பந்தல்களை ஜான்பாண்டியன் திறந்து வைத்தார்.
இந்த விழாக்களில் நாங்குநேரி யூனியன் சேர்மன் லெக்கன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநில அமைப்பு செயலாளர் நெல்லையப்பன், கொள்கை பரப்பு செயலாளர் எட்வின், மாவட்ட இணைச்செயலாளர் கண்ணன், இளைஞர் அணி கணேஷ் பண்ணையார், கிங் தேவேந்திரன், துரைப் பாண்டியன், வரதன், பெருமாள்பாண்டியன், முத்து, தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செவ்வாய், 16 ஏப்ரல், 2013
தேவேந்திர குல வேளாளர்களும் திராவிட கட்சிகளும் - கு.செந்தில்மள்ளர்
12). 1995 ஆம் ஆண்டு கன்னடத்துக் கொள்ளைக்காரியான செ.செயலலிதாவின் கூலிப்படையும், குற்றம்பரம்பரையில் தோன்றி சசிகலாவின் காலிப்படையும் கூட்டுச் சேர்ந்து கொண்டு கொடியன்குளம், காசிலிங்கபுரம், ஆலந்தா ஆகிய தேவேந்திர குல மக்கள் வாழும் உர்களைச் சூறையாடியும், கொள்ளையடித்தும் சின்னாபின்னப்படுத்தியது. இதனை விசாரணை செய்ய அ.தி.மு.க. ஆட்சியின் போதே ‘கோமதி நாயகம் விசாரணைக்குழு’ தனது அறிக்கையை தி.மு.க.வின் ஆட்சியின் போது – கருணாநிதி மீண்டும் தமிழக முதல்வராயிருந்தபோது வெளியிட்டது. அப்போது அந்த அறிக்கையில் ‘கொடியன் குளத்தைக் காவல்துறையினர் தாக்கவில்லை’ என்ற அநீதி தேவேந்திரகுல மக்களுக்கு வழங்கப்பட்டது. தெலுங்கர் மு.கருணாநிதிக்குக் கன்னடப் பிராமணத் தியான செ.செயலலிதா எதிரியா? அல்லது தனித் தமிழர்களான தேவேந்திர குல மக்கள் எதிரியி‘? என்பதை இதனைக் கொண்டே முடிவு சொல்லலாம்.
13). 05.05.1997 அன்று துறையூரில் நடந்த சாலை மறியல் போராட்டத்தின் போது, கருணாநிதியின் காவவல்துறை திட்டமிட்டு சமூகப் போராளிகளான துறையூர் பிலிப் அந்தோணியையும், ஆலந்தா சண்முகத்தையும் குறிவைத்துச் சுட்டுக் கொன்றது.
14). 23.07.1999 அன்று உரிமைக்காகப் போராடிய மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்காக நடத்திய போராட்டத்தில் இசுலாமியர் 3 போர்; மீனவர் 1; அடையாளம் தெரியாதவர் 1; தேவேந்திரர்கள் 13 பேர்; என பதினெட்டுத் தமிழர்கள், தெலுங்கள் மு.கருணாநிதியின் திட்டமிட்ட நயவஞ்சகத்தால், பாபநாசம் அணையிலிருந்து அளவிற்கு அதிகமாகத் தண்ரைத் திறந்து விட்டு, ஆற்றுவரத்தை அதிகரிக்கச் செய்து, ஆட்சியர் அலுவலக மாடியில் மக்களைத் தாக்குவதற்காக முன்கூட்டியே கருங்கற்களையும், செங்கற்களையும் ஏற்றி வைத்துக் காவலர்களுக்க முன்கூட்டியே கொலைத் திட்டத்தை எடுத்துகூறிச் செங்கற்களாலும், கருங்கற்களாலும் எறிந்து தாக்கியும், தடியடி நடத்தியும் ஆற்றில் மூழ்கடித்துக் கொல்லப்பட்டனர். தேவேந்திர குல மக்களைத் தான் ஆட்சிக்கு வந்த காலந்தொட்டே அடக்கியும், ஒடுக்கியும், பிற சாதியினரை மோத விட்டும் படுகொலைகளை நிகழ்த்தி வந்த கருணாநிதி இந்தப் போராட்டத்திலும் தனது காவல்துறையை ஏவி விட்டுப் பெண்கள், குழந்தைகள் என்று கூடப் பாராமல் 18 பேரை அடித்து ஆற்றில் வீசிப் படுகொலை செய்தார்.

14). 23.07.1999 அன்று உரிமைக்காகப் போராடிய மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்காக நடத்திய போராட்டத்தில் இசுலாமியர் 3 போர்; மீனவர் 1; அடையாளம் தெரியாதவர் 1; தேவேந்திரர்கள் 13 பேர்; என பதினெட்டுத் தமிழர்கள், தெலுங்கள் மு.கருணாநிதியின் திட்டமிட்ட நயவஞ்சகத்தால், பாபநாசம் அணையிலிருந்து அளவிற்கு அதிகமாகத் தண்ரைத் திறந்து விட்டு, ஆற்றுவரத்தை அதிகரிக்கச் செய்து, ஆட்சியர் அலுவலக மாடியில் மக்களைத் தாக்குவதற்காக முன்கூட்டியே கருங்கற்களையும், செங்கற்களையும் ஏற்றி வைத்துக் காவலர்களுக்க முன்கூட்டியே கொலைத் திட்டத்தை எடுத்துகூறிச் செங்கற்களாலும், கருங்கற்களாலும் எறிந்து தாக்கியும், தடியடி நடத்தியும் ஆற்றில் மூழ்கடித்துக் கொல்லப்பட்டனர். தேவேந்திர குல மக்களைத் தான் ஆட்சிக்கு வந்த காலந்தொட்டே அடக்கியும், ஒடுக்கியும், பிற சாதியினரை மோத விட்டும் படுகொலைகளை நிகழ்த்தி வந்த கருணாநிதி இந்தப் போராட்டத்திலும் தனது காவல்துறையை ஏவி விட்டுப் பெண்கள், குழந்தைகள் என்று கூடப் பாராமல் 18 பேரை அடித்து ஆற்றில் வீசிப் படுகொலை செய்தார். 1 1/2 வயது விக்னேசு என்ற தேவேந்திர குலக் குழந்தையைக் கருணாநிதியின் கொலை வெறி பிடித்த காவல்துறை காலால் மிதித்து, கழுத்தை நெறித்துக் கொன்று ஆற்றில் தூக்கி வீசியது. இதனைப் படமெடுத்த பத்திரிக்கையாளர்கள் கடுமையாகத்தாக்கப்பட்டு, அவர்களின் புகைப்படக் கருவிகளும் பிடுங்கி நொறுக்கப்பட்டன. இந்தக் கொலைகளை நியாயப்படுத்த நினைத்த கருணாநிதி ‘மோகன் விசாணைக் குழு’ என்ற பெயரில் ஒன்றை அமைத்தார். அந்த மோகன் விசாரணை ஆணையம் கருணாநிதியைக் காப்பாற்றுவதற்காக “17 பேர்களும் ஆற்றில் தாமாகவே விழுந்து செத்து விட்டனர்” என்று சொல்லி நீதியின் குரல்வளையை நெறித்து உண்மையைச் சாகடித்தது.
15). விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு, கூமாப்பட்டியில் கருணாநிதியின் காவல்துறை தேவேந்திரர்களின் மீது தாக்குதல் நடத்தி 50 அகவையுடைய லெட்சுமியம்மாள் என்னும் தேவேந்திர குலப் பெண்மணியை அடித்துக் கொன்று மதுரை தத்தநேரி சுடுகாட்டில் அனாதைப் பணிமாக எரியூட்டியது.
16). அண்மையில் தூத்துக்குடி மாவட்டம், மூலகக்ரை மேலூரைச் சார்ந்த இராமச்சந்திரன் என்ற தேவேந்திர குல இளைஞரைக் கருணாநிதியின் காவல்துறை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று அடித்தே கொன்றது. இந்தக் கொலையை தி.மு.க. அரசு வழக்கம் போல திட்டமிட்டு மூடி மறைத்தது.

17). தற்போது தேனி மாவட்டம், டொம்புச் சேரியில் தேவேந்திர குல மக்களை அடித்து, உதைத்து வழக்குகளில் சிக்க வைத்துச் சீரழித்து, உடமைகளைச் சூறையாடி கருணாநிதியின் காவல்முறை வெறியாட்டம் நிகழ்த்தியுள்ளது.
அ.தி.மு.க.வில் தங்கள் சமூகத்தின் எதிரிகளாக அடையாளப்படுத்தப்பட்ட சசிகலாவும், கள்ளர்-மறவர் கூட்டமும் இருப்பதால் அந்தக் கட்சியையே ஆட்சியை விட்டு அகற்றி தேவேந்திர குல மக்கள் தி.மு.க.வி வாக்கு வங்கியாக மாறியதின் காரணம்தான் விளங்கவில்லை. ஏனென்றால் தி.மு.க.வில் அதிகாரப் பொறுப்புக்களை வகிக்கக் கூடியவர்களும் – ஆதிக்கத்தையும், அடாவடித்தனத்தையும் மேற்கொள்ளக் கூடியவர்களும் கள்ளர்-மறவர்களே என்பதைத் தேவேந்திர குல மக்கள் கவனிக்கத் தவறி விட்டனர். தி.மு.க.வில் உள்ள கருப்பசாமி பாண்டியன் ஒரு மறவர். ஆவுடையப்பன் ஒரு மறவர். மாலை ராசா ஒரு மறவர். சே.கே.ரித்தீசு ஒரு மறவர். ஐ.பெரியசாமி ஒரு கள்ளர். டி.ஆர்.பாலு ஒரு கள்ளர். எல்.கணேசன் ஒரு கள்ளர். தங்கம் தென்னரசு ஒரு கள்ளர். பொன்.முத்துராமலிங்கம் ஒரு கள்ளர். மதுரை துணை மேயர் மன்னன் ஒரு மறவர். நெல்லை துணை மேயர் முத்துராமலிங்கம் ஒரு மறவர். நெல்லை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் விசுவநாதன் ஒரு மறவர். தேனி மாவட்டச் செயலாளர் மூக்கையா ஒரு கள்ளர். தமிழச்சி தங்கபாண்டியன் ஒரு கள்ளர்+வடுகர் கலப்பு. மு.க.அழகிரியைச் சுற்றி நின்று தேவேந்திர குல மக்களுக்கு எதிராக அரசியல் செய்யக்கூடிய தி.மு.க.வில் மாவட்டம், வட்டம், குட்டம் என்று பொறுப்பு வகிக்கக் கூடியவர்கள் அத்தனை பேர்களும் கள்ளர்களும், மறவர்களுமோயவர். ஆக, தி.மு.க.வின் ஆட்சி என்பது கள்ளர் – மறவரைக் கொண்டு, தேவேந்திர குல மக்களை அடக்கி ஒடுக்குகின்ற ஆட்சி என்பதை இனிமேலாவது எமது மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். அதிகாரப் பகிர்வினைப் பெறுவதற்கு அடிமைச் சிந்தனைகளை உதறித் தள்ளிவிட்டு, ஆளுமைச் சிந்தனையோடும், தனித்தன்மையோடும் தேவேந்திர குல மக்கள் தமது முந்தைய வரலாற்றின் மூலம் மீண்டெழுந்து, தலைநிமிர்வு காண வேண்டும்.

செயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வின் ஆட்சி என்பது தேவர் சமூகத்தின் ஆட்சி என்றும், கருணாநிதி தலைமையிலான தி.மு.க.வின் ஆட்சி என்பது தேவேந்திர குல மக்களின் ஆட்சி போன்று என்றும், ஒரு மாயத் தோற்றத்தினை திராவிடம் நம் மக்கள் நடுவே உருவாக்கி வைத்துள்ளது. உண்மையென்னவென்றால் அ.தி.மு.க.வின் ஆட்சி என்பது ஒரு கன்னடர் ஆட்சி. தி.மு.க.வின் ஆட்சி என்பது ஒரு தெலுங்கர் ஆட்சி. தமிழ் மண்ணில் தமிழினத்தின் தலைக்குடியாகிய மள்ளர் எனப்படும் தேவேந்திர குல மக்கள் தமிழர் ஆட்சியை நிறுவும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும். இந்த ஆண்டகுடி மீண்டும் தமிழ் மண்ணை ஆள வேண்டும்.
தமிழ் இனத்தை அழிப்பது, தமிழ் மொழியை ஒழிப்பது, தமிழ்ப் பண்பாட்டைப் பழிப்பது என்ற தமிழர் நலன்களுக்கு எதிரான செயல்களைத் தன் வாழ்நாள் முழுவதும் திட்டமிட்டுத் தொடர்ந்து செய்து வருகின்ற தெலுங்கர் மு.கருணாநிதி, ‘தமிழ் இனத்தின் தலைக்குடியாகிய தேவேந்திர குல மக்களுக்கு நண்பரா? பகைவரா?’ என்பதற்குத் தேவேந்திர குல பெருமக்களே நீங்கள்தான் தீர்ப்புச் சொல்ல வேண்டும்.
தேவேந்திர குலச் சொந்தங்களே!
திற விழி! திருப்பு முகம்!
திராவிடத்தை வேரறுப்போம்!
தமிழ்த் தேசியத்தை வென்றெடுப்போம்!!
நன்றி: கு.செந்தில்மள்ளர்
http://devendrakulam.blogspot.com/