புதிய தமிழகம் கட்சியின் சார்பாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு (30.4.15)வியாழன் இன்று காலை 11:00 மணிக்கு சுயநிதிக் கல்வி நிறுவனங்களில் அரசு ஒதுக்கீடு செய்யும் இலவச கட்டண இருக்கைகளில் பயிலும் பட்டியல் வகுப்பினர் ,பழங்குடியினர் மாணவ மாணவியர்க்கு கட்டாய,திருப்பி செலுத்தப்படாத அனைத்து கல்வி கட்டணங்களை வழங்கி ஆணைகள் வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண்:6 நாள்:09.01.2012 யை அமல்படுத்த கோரி தமிழக அரசை வலியுறுத்தி மாபெறும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வியாழன், 30 ஏப்ரல், 2015
புதிய தமிழகம் கட்சியின் சார்பாக .. மாபெறும் ஆர்ப்பாட்டம்... நெல்லை .
புதிய தமிழகம் கட்சியின் சார்பாக நெல்லை மாவட்டம் பாளை ஜவகர் திடலில் (30.4.15)வியாழன் இன்று காலை 11:00 மணிக்கு சுயநிதிக் கல்வி நிறுவனங்களில் அரசு ஒதுக்கீடு செய்யும் இலவச கட்டண இருக்கைகளில் பயிலும் பட்டியல் வகுப்பினர் பழங்குடியினர் மாணவ மாணவியர்க்கு கட்டாய,திருப்பி செலுத்தப்படாத அனைத்து கல்வி கட்டணங்களை வழங்கி ஆணைகள் வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண்:6 நாள்:09.01.2012 யை அமல்படுத்த கோரி தமிழக அரசை வலியுறுத்தி மாபெறும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதிய தமிழகம் கட்சியின் சார்பாக .. மாபெறும் ஆர்ப்பாட்டம்... தூத்துக்குடி...
புதிய தமிழகம் கட்சியின் சார்பாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு (30.4.15)வியாழன் இன்று காலை 11:00 மணிக்கு சுயநிதிக் கல்வி நிறுவனங்களில் அரசு ஒதுக்கீடு செய்யும் இலவச கட்டண இருக்கைகளில் பயிலும் ஆதிதிராவிடர்,பழங்குடியினர் மாணவ மாணவியர்க்கு கட்டாய,திருப்பி செலுத்தப்படாத அனைத்து கல்வி கட்டணங்களை வழங்கி ஆணைகள் வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண்:6 நாள்:09.01.2012 யை அமல்படுத்த கோரி தமிழக அரசை வலியுறுத்தி மாபெறும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதிய தமிழகம் கட்சியின் மே தின வாழ்த்து
புதிய தமிழகம் கட்சியின் மே தின வாழ்த்து
கால நேர எதுவுமின்றி விலங்கினும் மோசமான நிலையில் உழைக்கக் கட்டாயப்படுத்தப்பட்டு வந்த உழைப்பாளிகளுக்கு 8 மணி நேரம் வேலை நேரம் என்பதை உதிரம் சிந்தி உறுதி செய்த நாளே மே தினம் ஆகும்!இந்நாள் உலக உழைப்பாளர்களின் விலங்கொடித்த தினம் ஆகும்.எனினும் இந்திய உழைப்பாளி மக்கள் அனைவருக்கும் இது எட்டாக்கனியாகவே இருக்கிறது.ஆண்டுக்கு ஒரு நாள் விடுமுறை மட்டுமே மே தினத்தின் நோக்கத்தை நிறைவேற்றாது! அனைத்து உழைக்கும் மக்களுக்கும் உண்ண உணவு ,உடை ,உறையுள் ,போதிய ஓய்வு என அனைத்தும் நிறைவடையும் பொழுதே மே தினத்தின் நோக்கம் நிறைவேறியதாகும் அதை நிறைவேற்றிட தமிழ் உழைப்பாளி மக்கள் ஒன்றுபடுவோம் !
புதிய உலகம் படைக்க சபதம் ஏற்போம்.
புதிய உலகம் படைக்க சபதம் ஏற்போம்.
அன்புடன் ,
டாக்டர் .க .கிருஷ்ணசாமி..
ஞாயிறு, 26 ஏப்ரல், 2015
புதிய தமிழகம் கட்சி களப் போராளிக்கு வீரவணக்கம்..
புதிய தமிழகம் கட்சி களப் போராளிக்கு வீரவணக்கம்
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா வீரனாபுரம் கிராமத்தை சேர்ந்த புதிய தமிழகம் கட்சி களப் போராளி முத்துராஜ் அவர்களுக்கு இன்று முதலாமாண்டு வீரவணக்கம் புதிய தமிழகம் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் பாஸ்கர் மதுரம் அவர்கள் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நெல்லை வடக்கு மாவட்ட செயலாளர் இன்பராஜ், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜலிங்கம் முன்னால் மாவட்ட செயலாளர்கள் சுப்ரமணியம், வீர அரவிந்தராஜா , செல்லப்பா, மாநில மாணவரணி பாலாஜி, மாவட்ட மகளிரணி முத்துலட்சுமி , மாவட்ட மாணவரணி வின்சென்ட் ,ஒன்றிய செயலாளர்கள் முத்துசாமி, ராஜரத்தினம், கந்தவேல், பொன்ராஜ், வாசு ஒன்றிய செயலாளர் காமராஜ் . தொகுதி செயலாளர் உமர்கர்த்தா மற்றும் கொள்கை பரப்பு செயலாளர் பெரிய மருது பாண்டிதேவர். சின்ன மருது பாண்டி தேவர் மற்றும் கடையநல்லூர் ஆறுமுகசாமி உட்பட கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
வியாழன், 23 ஏப்ரல், 2015
தனி நபருக்காக 7 கோடி மக்களை தமிழக அரசு வாட்டி வதைக்கிறது : கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு...
சென்னை: தனி நபருக்காக 7 கோடி மக்களை தமிழக அரசு வாட்டி வதைக்கிறது என சென்னையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டியுள்ளார். முதலீட்டாளர் மாநாடு, மெட்ரோ ரயில், புதிய பேருந்துகள் இயக்கம் காலதாமதம் என புகார் தெரிவித்துள்ளார். கடந்த 7 மாதமாக தமிழக அரசு முடங்கி போய் உள்ளதாகவும் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் விவசாயிகளை அடகு வைக்கும் விதமாக நில எடுப்பு மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளது என்றும் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டியுள்ளார். மின்சாரம் மற்றும் உணவுத்துறையில் ஊழல் நிறைந்துள்ளதாகவும் கிருஷ்ணசாமி தகவல் தெரிவித்துள்ளார்.
சனி, 18 ஏப்ரல், 2015
செவ்வாய், 14 ஏப்ரல், 2015
ஆந்திர சம்பவம்: நெல்லையில் ஆர்ப்பாட்டடம்: ஆந்திர வங்கி முற்றுகை..
..ஆந்திர மாநிலத்தில் தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து திருநெல்வேலியில் திங்கள்கிழமை புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆந்திர வங்கியை முற்றுகையிட்ட இந்து மகாசபா அமைப்பினர் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திர மாநிலத்தில் தமிழகத்தை சேர்ந்த 20 தொழிலாளர்களை சுட்டுக் கொன்ற சம்பவத்தை கண்டித்து பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திங்கள்கிழமை திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மத்திய மாவட்டச் செயலர் பா. ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்டச் செயலர் க. நடராஜன், வடக்கு மாவட்டச் செயலர் எஸ். இன்பராஜ், தெற்கு மாவட்டச் செயலர் எம். சுரேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கட்சியின், மேற்கு மாவட்டச் செயலர் ஏ. ஜெயக்குமார், ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட இணைச் செயலர் எட்வர்ட்ராஜ், முன்னாள் மாவட்டச் செயலர் எம்.எஸ். செல்லப்பா, மத்திய மாவட்ட இளைஞரணி செயலர் கார்த்திக் உள்பட 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
வங்கி முற்றுகை: இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அகில இந்திய இந்து மகா சபா அமைப்பினர் திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ஆந்திர வங்கி முன்பு திரண்டுமுற்றுகையிட்டனர். ஆந்திர மாநில அரசுக்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பினர்.
இதில் பங்கேற்ற திருநெல்வேலி மாவட்டச் செயலர் ஜி. இசக்கிமுத்து, மாவட்டத் தலைவர் எஸ்.எம். கணேசபாண்டியன், மாநில துணைச் செயலர் இ. ராமசாமி, மாநகர பொதுச்செயலர் ஜி. இசக்கிபாண்டி, மாவட்ட துணைச் செயலர் எஸ். மாரியப்பன் உள்ளிட்ட 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஆந்திர மாநில அரசை கண்டித்து திருச்சியில் புதிய தமிழகம் கட்சியினர் நூதன போராட்டம் வங்கியை முற்றுகையிட முயன்ற 18 பேர் கைது..
திருச்சி,
திருச்சியில் புதிய தமிழகம் கட்சியினர் ஆந்திர அரசை கண்டித்து நூதன போராட்டம் நடத்தினார்கள். வங்கியை முற்றுகையிட முயன்றபோது 18 பேர் கைது செய்யப்பட்டனர்.
நூதன போராட்டம்திருப்பதி வனப்பகுதியில் செம்மரக்கட்டை வெட்ட சென்ற தமிழக கூலி தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திர போலீசார் சுட்டுக்கொன்றதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் நாள்தோறும் பல போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் திருச்சி புறநகர் மாவட்ட புதிய தமிழகம் கட்சியினர் நூதன போராட்டம் நடத்தினார்கள். துப்பாக்கி குண்டு பாய்ந்து உடலில் ரத்தம் வடிவது போல் சாயம் பூசியபடி நான்கைந்து பேர் தரையில் படுத்து கிடந்தனர். அதன் அருகில் நின்று கொண்டு கட்சியின் மாவட்ட செயலாளர் அய்யப்பன் தலைமையில் கோஷம் போட்டனர். சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், ஆந்திர அரசில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பன உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் பாலு, குணா, அன்பழகன் உள்பட பலர் பேசினார்கள்.
18 பேர் கைதுதிருச்சி சாலை ரோட்டில் ஆந்திரா வங்கி உள்ளது. இந்த வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக புதிய தமிழகம் கட்சியினர் நேற்று மதியம் திடீர் என புறப்பட்டு சென்றனர். வங்கி முன்பு அவர்கள் வந்த போது மாநகர் மாவட்ட செயலாளர் சங்கர், புறநகர் மாவட்ட செயலாளர் அய்யப்பன் உள்பட 18 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சியில் புதிய தமிழகம் கட்சியினர் ஆந்திர அரசை கண்டித்து நூதன போராட்டம் நடத்தினார்கள். வங்கியை முற்றுகையிட முயன்றபோது 18 பேர் கைது செய்யப்பட்டனர்.
நூதன போராட்டம்திருப்பதி வனப்பகுதியில் செம்மரக்கட்டை வெட்ட சென்ற தமிழக கூலி தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திர போலீசார் சுட்டுக்கொன்றதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் நாள்தோறும் பல போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் திருச்சி புறநகர் மாவட்ட புதிய தமிழகம் கட்சியினர் நூதன போராட்டம் நடத்தினார்கள். துப்பாக்கி குண்டு பாய்ந்து உடலில் ரத்தம் வடிவது போல் சாயம் பூசியபடி நான்கைந்து பேர் தரையில் படுத்து கிடந்தனர். அதன் அருகில் நின்று கொண்டு கட்சியின் மாவட்ட செயலாளர் அய்யப்பன் தலைமையில் கோஷம் போட்டனர். சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், ஆந்திர அரசில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பன உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் பாலு, குணா, அன்பழகன் உள்பட பலர் பேசினார்கள்.
18 பேர் கைதுதிருச்சி சாலை ரோட்டில் ஆந்திரா வங்கி உள்ளது. இந்த வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக புதிய தமிழகம் கட்சியினர் நேற்று மதியம் திடீர் என புறப்பட்டு சென்றனர். வங்கி முன்பு அவர்கள் வந்த போது மாநகர் மாவட்ட செயலாளர் சங்கர், புறநகர் மாவட்ட செயலாளர் அய்யப்பன் உள்பட 18 பேரை போலீசார் கைது செய்தனர்.
திங்கள், 13 ஏப்ரல், 2015
புதிய தமிழகம் கட்சி....ஆர்பாட்டம் விருதுநகர்..
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,MLA அவர்கள் உத்தரவின் படி விருதுநகர் மாவட்டம் விருதுநகரில் பழைய பேருந்து நிலையம் அருகில் தேசபந்து மைதானத்தில் ஆந்திராவில் 20-தமிழர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து உச்ச நீதிமன்ற அமர்வு நீதிபதி தலைமையில் நீதி விசாரணையும்,CBI விசாரணையும் நடத்த வலியுறுத்தி இன்று(13.4.15) காலை 11-மணிக்கு புதிய தமிழகம் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆந்திராவில் 20 தமிழா்களை சுட்டு கொல்லப்பட்டதைக் கண்டித்து நெல்லை மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் சாா்பாக கண்டனம் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆந்திராவில் 20 தமிழா்களை சுட்டு கொல்லப்பட்டதைக் கண்டித்து நெல்லை மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் சாா்பாக கண்டனம் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆா்ப்பாட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளா் தங்கராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். கிழக்கு மாவட்ட செயலாளா் நடராஜன் மற்றும் வடக்கு மாவட்ட செயலாளா் இன்பராஜ் முன்னிலை வகித்தனா். மேலும் மேற்கு மாவட்ட செயலாளா் ஜெயக்குமாா் கண்டன உரையாற்றினா். ஆா்ப்பாட்டத்தின் நன்றியுரை தெற்கு மாவட்ட செயலாளா் சுரேந்திரன் கூறினாா்.
நாகையில் புதிய தமிழகம் ஆர்ப்பாட்டம்
நாகப்பட்டினம்: ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து,நாகையில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆந்திராவில் செம்மரம் வெட்டியதாக சுட்டுக் கொல்லப்பட்ட 20 தமிழர்கள் குடுபத்திற்கும் நிவாரணமாக தலா 20 லட்சம் ரூபாய் வழங்க ÷வண்டும்.குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.ஓய்வுப் பெற்ற உச்சநீதிமன்ற அமர்வு நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.வழக்கை சி.பி.ஐ.,வசம் ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி,நாகை கலெக்டர் அலுவலகம் முன் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்திற்கு நாகை மாவட்ட தலைவர் சூர்யா தலைமை வகித்தார்.நகர செயலாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.25 க்கும் ÷
மற்பட்டோர் கலந்து கொண்டு,ஆந்திர அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
ஆந்திராவில் செம்மரம் வெட்டியதாக சுட்டுக் கொல்லப்பட்ட 20 தமிழர்கள் குடுபத்திற்கும் நிவாரணமாக தலா 20 லட்சம் ரூபாய் வழங்க ÷வண்டும்.குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.ஓய்வுப் பெற்ற உச்சநீதிமன்ற அமர்வு நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.வழக்கை சி.பி.ஐ.,வசம் ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி,நாகை கலெக்டர் அலுவலகம் முன் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்திற்கு நாகை மாவட்ட தலைவர் சூர்யா தலைமை வகித்தார்.நகர செயலாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.25 க்கும் ÷
மற்பட்டோர் கலந்து கொண்டு,ஆந்திர அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஆந்திரத்தில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் புதிய தமிழகம் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆந்திர காட்டுப் பகுதியில், கொலை செய்யப்பட்ட 20 தமிழர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும்; குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மத்திய மாவட்டச் செயலர் கருப்பசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர்கள் கண்ணன், அன்புராஜ், இளைஞர் அணிச் செயலர் ராஜசேகரன், மாணவரணிச் செயலர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் ஆந்திர மாநில அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதையொட்டி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்
ஆந்திர சம்பவம்: நெல்லையில் புதிய தமிழகம் ஆர்ப்பாட்டம்
ஆந்திர மாநிலத்தில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து, புதிய தமிழகம் கட்சியினர் திருநெல்வேலியில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆந்திர வங்கியை முற்றுகையிட்ட இந்து மகாசபா அமைப்பினர் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு புதிய தமிழகம் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மத்திய மாவட்டச் செயலர் பா. ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்டச் செயலர் க. நடராஜன், வடக்கு மாவட்டச் செயலர் எஸ். இன்பராஜ், தெற்கு மாவட்டச் செயலர் எம். சுரேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கட்சியின் மேற்கு மாவட்டச் செயலர் ஏ. ஜெயக்குமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட இணைச் செயலர் எட்வர்ட்ராஜ், முன்னாள் மாவட்டச் செயலர் எம்.எஸ். செல்லப்பா, மத்திய மாவட்ட இளைஞரணி செயலர் கார்த்திக் உள்பட 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
வங்கி முற்றுகை: சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அகில இந்திய இந்து மகாசபா அமைப்பினர், திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ஆந்திர வங்கி முன்பு திரண்டு முற்றுகையிட்டனர். இதில் பங்கேற்ற திருநெல்வேலி மாவட்டச் செயலர் ஜி. இசக்கிமுத்து, மாவட்டத் தலைவர் எஸ்.எம். கணேசபாண்டியன், மாநில துணைச் செயலர் இ. ராமசாமி, மாநகர பொதுச்செயலர் ஜி. இசக்கிபாண்டி, மாவட்ட துணைச் செயலர் எஸ். மாரியப்பன் உள்ளிட்ட 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஆந்திர வங்கி முன்பு தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருவதால் வங்கிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
புதிய தமிழகம் ஆர்ப்பாட்டம்
ஆந்திர வனப்பகுதியில் 20 தமிழக கூலித் தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் பழனி தாலுகா அலுவலகம் முன்பு திங்கள்கிழமை மாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலர் விஜயகுமார் தலைமை வகித்தார். நகர செயலர் முருகேசன் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலர் காளிதாஸ் வரவேற்றார். தொழிலாளர்கள் படுகொலை சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரியும், இறந்த கூலித் தொழிலாளர்களுக்கு கூடுதலான இழப்பீட்டுத் தொகை வழங்கவும் கோரிக்கை எழுப்பப்பட்டது.
சிவகிரிப்பட்டி காளிமுத்து, கண்ணன், பேச்சிமுத்து, திருமலைசாமி உள்ளிட்ட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
ஆந்திர அரசைக் கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முன் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஆந்திராவில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் படுகொலை செய்ய்பபட்ட சம்பவத்தைக் கண்டித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு புதிய தமிழகம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாடடம் நடந்தது.
ஆந்திராவில் படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நஷ்டஈடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், உண்மைக் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதன் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவிததிருந்தார்.
அதன்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் கருப்பசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் கண்ணன், அண்பு ராஜ், இளைஞர் அணி செயலாளர் ராஜசேகரன், மாணவர் அணி செயலாளர் ராஜேந்திரன், உட்பட பலர் கலந்து கொண்டனர். இதையொட்டி ஆட்சியர் அலுவலகம் முன்பு டி.எஸ்.பி. சாகுல் ஹமீது தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
சனி, 11 ஏப்ரல், 2015
தென்மாவட்ட கொலைகளை கண்டித்து சென்னையில் ஜூன் 6ல் புதிய தமிழகம் பேரணி
: ‘தென்மாவட்டத்தில் கொலைகளை கண்டித்து சென்னையில் ஜூன் 6ம் தேதி பேரணி, பொதுக்கூட்டம் நடைபெறும்‘ என்று டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். புதிய தமிழகம் கட்சியின் மாநில அரசியல் உயர்மட்டக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதன் பின்னர், கிருஷ்ணசாமி அளித்த பேட்டி: தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் உயர்மட்ட காவல்துறை அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்ட பிறகும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் நாவலடியூர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகராஜா(42) என்ற விவசாயி கடந்த 2ம் தேதி காவல் நிலையம் அருகிலேயே கொலை செய்யப்பட்டுள்ளார். மதுரை சக்கிமங்களத்தை சேர்ந்த கதிரேசக்குமார்(36) என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகமெங்கும் சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞர்களுக்கு எதிரான வன்கொடுமைகளும், கவுரவக் கொலைகளும் மிகவும் அதிகரித்து வருகின்றன.
எனவே, தென் தமிழகத்தில் துணை ராணுவத்தை பாதுகாப்பு பணிக்கு நிறுத்த வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மேலும் வலுப்படுத்தவும், கவுரவக் கொலைகளை தடுத்திடவும் தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி ஜூன் 6ம் தேதி சென்னையில் மாபெரும் பேரணி, பொதுக்கூட்டம் நடைபெறும். அண்மைக்காலமாக தமிழ் திரைப்படங்கள் சாதீய தூக்கலோடு வருகின்றன. இதனால், மோதல் உருவெடுத்து சட்டம் ஒழுங்கு சீர்குலையும் அளவிற்கு வளரும் போக்கு ஏற்படுகிறது. மத்திய திரைப்பட தணிக்கை குழு வெறும் சான்றிதழ் நிறுவனமாக மாறிவிட்டது. எனவே, சமூக அக்கறை கொண்ட பல தரப்பினரை உள்ளடக்கிய சமூக அக்கறை தணிக்கை குழு ஒன்று அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்
இவ்வாறு அவர் கூறினார்
தென்மாவட்ட படுகொலைகளை கண்டித்து சென்னையில் ஜூன் 6ம் தேதி பேரணி...டாக்டர் கிருஷ்ணசாமி
சென்னை: ‘தென்மாவட்டத்தில் கொலைகளை கண்டித்து சென்னையில் ஜூன் 6ம் தேதி பேரணி, பொதுக்கூட்டம் நடைபெறும்‘ என்று டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். புதிய தமிழகம் கட்சியின் மாநில அரசியல் உயர்மட்டக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதன் பின்னர், கிருஷ்ணசாமி அளித்த பேட்டி: தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் உயர்மட்ட காவல்துறை அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்ட பிறகும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் நாவலடியூர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகராஜா(42) என்ற விவசாயி கடந்த 2ம் தேதி காவல் நிலையம் அருகிலேயே கொலை செய்யப்பட்டுள்ளார். மதுரை சக்கிமங்களத்தை சேர்ந்த கதிரேசக்குமார்(36) என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகமெங்கும் சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞர்களுக்கு எதிரான வன்கொடுமைகளும், கவுரவக் கொலைகளும் மிகவும் அதிகரித்து வருகின்றன.
எனவே, தென் தமிழகத்தில் துணை ராணுவத்தை பாதுகாப்பு பணிக்கு நிறுத்த வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மேலும் வலுப்படுத்தவும், கவுரவக் கொலைகளை தடுத்திடவும் தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி ஜூன் 6ம் தேதி சென்னையில் மாபெரும் பேரணி, பொதுக்கூட்டம் நடைபெறும். அண்மைக்காலமாக தமிழ் திரைப்படங்கள் சாதீய தூக்கலோடு வருகின்றன. இதனால், மோதல் உருவெடுத்து சட்டம் ஒழுங்கு சீர்குலையும் அளவிற்கு வளரும் போக்கு ஏற்படுகிறது. மத்திய திரைப்பட தணிக்கை குழு வெறும் சான்றிதழ் நிறுவனமாக மாறிவிட்டது. எனவே, சமூக அக்கறை கொண்ட பல தரப்பினரை உள்ளடக்கிய சமூக அக்கறை தணிக்கை குழு ஒன்று அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
எனவே, தென் தமிழகத்தில் துணை ராணுவத்தை பாதுகாப்பு பணிக்கு நிறுத்த வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மேலும் வலுப்படுத்தவும், கவுரவக் கொலைகளை தடுத்திடவும் தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி ஜூன் 6ம் தேதி சென்னையில் மாபெரும் பேரணி, பொதுக்கூட்டம் நடைபெறும். அண்மைக்காலமாக தமிழ் திரைப்படங்கள் சாதீய தூக்கலோடு வருகின்றன. இதனால், மோதல் உருவெடுத்து சட்டம் ஒழுங்கு சீர்குலையும் அளவிற்கு வளரும் போக்கு ஏற்படுகிறது. மத்திய திரைப்பட தணிக்கை குழு வெறும் சான்றிதழ் நிறுவனமாக மாறிவிட்டது. எனவே, சமூக அக்கறை கொண்ட பல தரப்பினரை உள்ளடக்கிய சமூக அக்கறை தணிக்கை குழு ஒன்று அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: புதிய தமிழகம் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் விவகாரத்தில் உரிய நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி வரும் 13-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என புதிய தமிழகம் கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அந்த கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி இதனை தெரிவித்தார்..
வெள்ளி, 3 ஏப்ரல், 2015
மண்ணுரிமை போராளி..களப்பால்குப்புசாமிதேவேந்திரர்...
களப்பால்குப்புசாமிதேவேந்திரர்............இயற்கை எழில் கொஞ்சும் ஒருங்கினைந்த தஞ்சை மாவட்டத்தை தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்பார்கள்.மள்ளர்களின் உழைப்பால் எங்கும் பசுமை.,வயல்வெளிகள்,,,,அம்மருதநிலத்தில்தான் அரசுகள் தோன்றின, சேர/சோழ/பாண்டியர் அரசுகள் ஏற்பட்டன...வந்தேறி வடுக ஆட்சியாலும்,தமிழ் துரோக சாதிகளின் கூட்டணியாளும் தன் சொந்த நிலங்களை, அரசாட்சியை இழந்து சொந்த மண்ணில் விவசாய அடிமைகளாக, விவசாய தொழிலாளர்களாக விளங்கினர்....பளையப்பட்டுமுறை ஏற்படுத்தப்பட்டு ஆதிக்கசாதிகளும், பண்ணையார்களும் இம்மக்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர்.....இந்த அடிமை விலங்கையும், ஆதிக்கவெறியாட்டங்களையும் தகர்க்க வந்தவர்தான் களப்பால்குப்புசாமிதேவேந்திரர்......திருவாரூர் மாவட்டம்,கோட்டூர் ஒன்றியம் களப்பால் எனும் கிராமத்தில் 1911ம் ஆண்டு வீரவேளாண்குடியை சேர்ந்த அருணாசலம்...சமுத்திரத்தம்மாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார்...உடன்பிறந்த சகோதரிகள் இருவர்...பகுத்தறிவு மாணவனாக, சமூகபற்றாளனாக விளங்கிய குப்புசாமியின் பள்ளிபடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.....நிலஉடமையாளர்கள்,ஆதிக்கசாதிகள் ஒன்று சேர்ந்து தேவேந்திரகுல மக்களை கொடுமைபடுத்தினார்கள்...தொட்டால் தீட்டு, பள்ளிபடிப்பு கிடையாது,பண்ணை அடிமைமுறை,முறையான கூலி கிடையாது,நாள் முழுவதும் வயல்வெளியில் வேலை போன்ற கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.பண்ணையார்களின் அடைக்குமுறைகளுக்கு முடிவு கட்ட எண்ணினார் குப்புசாமி....ஐயா இம்மானுவேல்சேகரன் வழியில் பதிலடி கொடுத்தார்....தலைமறைவு வாழ்க்கைதான்....சாணிப்பால்..சவுக்கடி கொடுமைகளுக்கு முற்றுபுள்ளி வைத்தார்....இந்நிலையில் வாஞ்சோலை என்ற அம்மையாரை திருமணம் செய்துகொண்டார்....இத்தம்பதியினருக்கு நான்கு குழந்தைகள்.....தனியாக போராடுவதைவிட ஏதாவது ஒரு இயக்கத்தில் இணைத்து கொள்வது நல்லது என்று எண்ணிய குப்புசாமிக்கு அப்போது தென்பறையில் உதித்த பொதுவுடமை இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு விவசாய சங்கங்களை அமைத்தார்....கோட்டூர் ஒன்றிய விவசாய சங்க தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.மாவட்ட எல்லைகளை கடந்து பணியாற்றினார்.தன்மனைவி இறந்த செய்தி கேட்டபோதும், தன் மகன் திரு.கணேசன் சமூக விரோதிகளால் வெட்டப்பட்டபோதும் நான் வந்து என்ன செய்ய போகிறேன் இயக்க தோழர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று சொன்ன ஒரே தலைவன் குப்புசாமிதேவேந்திரர்..குன்ணியூர் பண்ணையார் வெளியூர்களில் இறுந்து அடியாட்களை வரவழைத்து மள்ளர்களை அடித்து உதைத்தார்...பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டனர்...குடிசைகள் தீவைத்து கொளுத்தப்பட்டன....வெகுண்டெழுந்த குப்புசாமி தன்ஆதரவாளர்களுடன் சென்று பதில்தாக்குதல் நடத்தினார்..எங்கும் கலவரம் வெடித்தது..பண்ணையாருக்கு சொந்தமான அனைத்து உடமைகளும் தீக்கிரையைன..மாவட்ட காவல்துறை 1944ல் சமாதான கூட்டம் போட்டது...சமாதான கூட்டத்தில் குப்புசாமி...உழைப்பிற்கேற்ற கூலி.....அடித்தால் திருப்பி அடிப்போம் என்று முழங்கினார்....மிரண்ட பண்ணையார்கூட்டம் குப்புசாமிக்கு நிலம் அளிக்கிறோம் மக்களுக்காக போராட வேண்டாம் என்று ஆசை வார்த்தை கூறியது....இவற்றை நிராகரித்தார் குப்புசாமி.1946ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் (இரட்டைஉறுப்பினர் தொகுதி). திருத்துறைப்பூண்டி தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்..திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள ஆலத்தம்பாடி கிராமத்தில் தேவேந்திரகுல மக்களை கொடுமைப்படுத்திய குன்ணியூர் பண்ணையாரை எதிர்த்து மக்களை திரட்டி போராடினார்...இக்கலவரத்தில் பண்ணையாரின் அடியாட்கள் இரண்டுபேர் படுகொலை செய்யப்பட்டனர்.. இக்கொலைவழக்கில் குப்புசாமியை சேர்த்தது அன்றைய காங்கிரசு அரசு....காட்டி கொடுக்கும் கயவர்களால் தலைஞாயிறு கிராமத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.சிறையில் அடைக்கப்பட்ட குப்புசாமி நோய்வாய்பட்டார்.......பண்ணையாரின் ஆட்கள் சிறையில் மருந்து கொடுப்பது போல் குப்புசாமிக்கு விஷம் கொடுத்தனர்.18.04.1948.அன்று காலை 10.40மணியளவில் வீரமரணம் அடைந்தார்....மாவீரனுக்கு மரணமில்லை....இத்தனை ஆண்டுகள் கடந்தும் அம்மாவீரனின் முழுவாழ்க்கை தொகுப்போ....வீரவணக்க நிகழ்வுகளோ இல்லை....தேவேந்திரர் அமைப்புகளும், புதிய தமிழகம் கட்சியும் வீரவணக்கநாள் நிகழ்வும், களப்பாலில் உள்ள அவரது வெண்கலசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.... வாருங்கள்....மரணத்தை முத்தமிட்ட மாவீரன் களப்பால் குப்புசாமிதேவேந்திரர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்த.......நாள்...18.04.2015. இடம்..களப்பால்.. குப்புசாமிதேவேந்திரர்நினைவிடம்......
கொம்பன் சர்ச்சை - தணிக்கை அதிகாரிகளின் பாகுபாடு!
ஏப்ரல் 2ந் தேதி வெளியாகிறது ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் முத்தையா இயக்கியுள்ள கார்த்தி நடித்த கொம்பன் திரைப்படம். படம் ‘யு’ சர்டிபிகேட்டுடன் வெளியாவதாகத் சின்னத்திரைகளில் விளம்பரம் வெளியாகிவரும் நிலையில், இப்படத்தால் சாதிரீதியிலான சர்ச்சையும் பதற்றமும் உருவாகும் என புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி புகார் தெரிவித்தார்.
தணிக்கைக் குழுவினர் இப்படத்தை நிராகரித்துவிட்டதாகவும் எனவே மறுதணிக்கை செய்யக் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் திரையுலகினர் தெரிவிக்கின்றனர்.
மேலும், “ஒரு படம் சென்சார் சர்டிபிகேட் பெறாத நிலையில் ரிலீஸ் தேதியை அறிவிக்க முடியாது. அத்துடன் மறுஆய்வு செய்யவேண்டுமென்றால் அதற்கு சில நாட்கள் ஆகும். அதுவும் அலுவலக வேலை நாட்களில் தணிக்கை உறுப்பினர்கள் படத்தைப் பார்ப்பது வழக்கம்.
ஆனால் இதற்கு மாறாக விடுமுறை நாளான ஞாயிறன்று காலையில் கொம்பன் படம் சென்சார் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பல தயாரிப்பாளர்கள் தங்கள் படத்தின் நெருக்கடி கருதி இப்படிக் கோரியபோது சென்சார் இந்தளவு வேகமாக செயல்பட்டதில்லை.
ஏற்கனவே அஞ்சான் உள்ளிட்ட தமிழ்ப் படங்களும் பல இந்திப் படங்களும் விதிமீறல்களுடனும் தனிப்பட்ட நலன்கள் கருதியும் சென்சார் செய்யப்பட்டது தொடர்பாக அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகும் சென்சார் துறை பாரபட்சமாக செயல்படுகிறது என சினிமா வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.
தேசம் முழுவதும் பாதிக்கும் அளவுக்கு தணிக்கை குழு மாறியிருப்பது கண்டிக்கத்தக்கது. நீ யார் கண்டிப்பதற்கு என்று கேட்டால், நான் கலைஞன் என்று பதில் சொல்லுவேன் என்று உத்தம வில்லன் திரைப்படம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் கமல்ஹாசன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
கொம்பன் பட வட்டாரமோ, மிகப் பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ள படத்தை வெளியிடுவதற்கு சட்டரீதியான முயற்சிகளை மேற்கொள்கிறோம் என்கிறார்கள். தணிக்கை அதிகாரிகள் என்ன பதில் சொல்லப் போகிறார்களோ?
பசும்பொன் கதை அமைத்த சீமான் ,குட்டிப்புலி படத்தை இயக்கிய முத்தையா இபொழுது கொம்பன் !!
பசும்பொன் கதை அமைத்த சீமான் ,குட்டிப்புலி படத்தை இயக்கிய முத்தையா இபொழுது கொம்பன் ...
''அடக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் எதிரான மாபெரும் ஆயுதம்.மானுட வாழ்வியலையும் சமூக அரசியலையும் பிரதிபலிக்கும் சமூக கண்ணாடி'' - பேரறிஞர் அண்ணா.
தமிழ்நாட்டில் சாதி எவ்வளவு வேரான விஷயம் என்று நம் அனைவர்க்கும் தெரியும். எந்த ஒரு துறையிலும் சாதி எவ்வளவு வேரூன்றி இருக்கிறது என்பதும் தெரியும். குறிப்பாக சினிமாவும் அரசியலும் கைகோர்த்திருக்கிற ஒரு சூழலில், அங்கே சாதி எனப்படுவது எத்தகைய ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது என்பதை பார்க்க வேண்டும். தென் தமிழகங்களில் இன்றும் தங்கள் சாதி சார்ந்த நாயகர்களைத்தான் ‘தலைவர்களாக’ வழிப்படுகிறார்கள்.
தமிழ் திரைப்படங்களை ஆய்வு செய்ய யாரும் நினைத்தால், நிச்சயம் எல்லாப் படங்களிலும் அந்த இயக்குனர், அல்லது தயாரிப்பாளரின் சாதி தூக்கி நிறுத்தப்பட்டிருக்கும் என்பதை மிக தெளிவாக காணலாம். ஒன்றிரண்டு விதிவிலக்குகளை தவிர.
பசும்பொன் கதை அமைத்த சீமான் ,குட்டிப்புலி படத்தை இயக்கிய முத்தையா இபொழுது கொம்பன் ...
குட்டிப்புலி படத்தின் தொடக்கத்தில் இருந்தே சாதி வெறி கட்டமைக்கப்படுவதும், மேட்டுத் தெரு கீழத்தெரு என்பதும் சாதி வெறியை உசுப்பேற்றும் விதமாகவே இருக்கும் .
ஆதிக்க சாதி வெறி பிடித்த வசனங்கள்,அச்சாதியை முன்னிறுத்தும் சிலைகள்,உடைகள்,நிறங்கள்,கலாச்சார அடையாளங்கள் என ஓர் குறிப்பிட்ட சாதியினரின் சமூகவியல் குறியீடுகளில் ஆரம்பித்து சாதி தலைவரின் உருவப் படங்கள் பொறித்த காலண்டர் வரை அத்தனையிலும் சாதூர்யமாக சாதியை புகுத்தி இருப்பார்.
'மேட்டு தெருவிற்குள் நுழையும் நீல நிற உடையணிந்த வேற்று தெரு மனிதர்களை தடுப்பது,புலிக்கு ரெட்டை வால் என 'சில்லி'தனமாக வம்புக்கு இழுப்பது என 'குட்டிப்புலி' படம் முழுவதும் ஆதிக்க சாதி வெறியாட்டங்களே புரையோடி கிடக்கிறது.
படத்தின் பல காட்சிகள் ஒரு குறிப்பிட்ட சாதிப் பெருமையையும் வீரத்தையுமே தூக்கிப் பிடிக்கிறதே.
ஒவ்வொரு வருடமும் தென்மாவட்டங்களில் செப்டம்பர் 11ல் தொடங்கி அக்டோபர் - 30வரை நடைபெறும் குருபூஜைகளும் ,அதையொட்டிய சாதிய பதட்டங்களும் ,பீதிகளும், வன்முறைகளும் சாதிகளைக் கடந்து அமைதியாக வாழ விரும்புகின்ற பெரும்பாலான பொதுமக்களுக்கும் ,அப்பாவிகளுக்கும் ,மாணவர்களுக்கும் எவ்வளவு சிக்கல்களை , இடைஞ்சல்களை ,மனஉளைச்சல்களைக் கொடுக்கின்றன என்பதை கண்டுக் கொள்ளாமல் தொடர்ந்து நீங்கள் திரையுலகில் பயணிக்கமுடியாது .
தொண்ணுறுகளில் 'தேவர்மகனு' க்கு (1992)பிறகு சாதிப் பெருமைப்பேசி ஏகப்பட்ட திரைப்படங்கள் வந்ததின் விளைவு தென் தமிழ்நாடு கலவர பூமியானது .நுற்றுக்கணக்கான இளைஞர்கள் ,பட்டதாரிகள் உயிரையும் ,வழக்கை சந்தித்ததால் வாழ்க்கையையும் இழந்தார்கள்.
உங்களைப் போன்றவர்கள் சாதிப் போதையை திரையில் வெட்டியாய் ஊற்றி ,பேசிக் கொம்பு சீவி விடுவதன் விளைவுதான் இவ்வுயிர் பலிகள் .தாயாய் பிள்ளையாய் ,மனிதர்களாய் ,தமிழர்களாய் ,சாதிப் பாகுபாடின்றி அனைவரும் நல்லிணக்கத்தோடு அமைதியான வாழ்க்கை வாழ்வதற்குச் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கும்பொழுது இப்படி உங்களது போதைக்குத் தமிழ்ச்சமூகத்தை ஊறுகாயாக ஆக்குவது நியாயமா ??
நம்ம எப்படி வேண்டுமானாலும் படம் எடுக்கலாம் .வெற்றிபெறலாம். பணம் சம்பாதிக்கலாம். யாரும்நம்மை கேட்க மாட்டார்கள் ,கேட்கமுடியாது என்று இறுமாப்புடன் இருந்து விடாதீர்கள்.
ஒரு கடைசி கேள்வி ?
தமிழராய் நினைக்கும் சீமான் தமிழர்களுக்கு உலகம் முழுவதும் பல பிரச்சனைகள் இருக்கும் பொழுது இன்று அதை எல்லாம் மறந்து கொம்பன் என்கிற சாதி வெறியை தூக்கி பிடிக்கும் படத்திற்கு அதரவாக அறிகைவிடுவதிற்கு தான் நாம் தமிழராய் வந்தாரா ??
தமிழன் சீமான் திரைக்கதை எழுதிய பசும்பொன்நில் வரும் சமத்துவ பாடல் https://www.youtube.com/watch?v=qHVOhDm3B00
சீமானின் முழு படம் :https://www.youtube.com/watch?v=v2I5zPkZaj0
இபொழுது சொல்லுங்கள் சீமானிடம் ஒளிந்து இருப்பது சாதி பற்றா ?? தமிழ் பற்றா ??