ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 12 ஏப்ரல், 2012

உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடக்கவில்லை: அமைச்சர்

சென்னை: ""பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடக்கவில்லை,'' என்று, அமைச்சர் பழனியப்பன் கூறினார்.

சட்டசபையில் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) எழுப்பிய பிரச்னைக்கு பதிலளித்து, உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் கூறியதாவது: பல்கலைக்கழக மானியக் குழுவின் 11வது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ், பாரதியார் பல்கலைக்கழகத்தில், 35 உதவிப் பேராசிரியர்களை நியமிக்க, 20 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டது. ஐந்தாண்டுகளுக்குப் பின் ஏற்படக் கூடிய செலவை, மாநில அரசே ஏற்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், இந்த நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, "தினமலர்' நாளிதழில் கடந்த ஆண்டு ஜனவரி 27ம் தேதி விளம்பரம் வெளியிடப்பட்டது. விண்ணப்பித்தவர்களின் பட்டியல் பரிசீலிக்கப்பட்டு, தகுதியானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். பின், 24 பேர் மட்டுமே பணியில் சேர்ந்தனர். இந்த நியமனங்களை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை, ஐகோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. "பாரதியார் பல்கலைக் கழகம், நியமனத்தின் போது விதிகளை முழுமையாகக் கடைபிடித்துள்ளது. முறைகேடுகள் ஏதும் நடக்கவில்லை' என்று கோர்ட் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, ஆசிரியர் சங்கத்தினர் மேல்முறையீடு செய்துள்ளனர். தேர்வு செய்யப்பட்டவர்களில் ஒருவர் பணியில் சேரவில்லை. மீதமுள்ள 23 பேரும், கடந்த 1ம் தேதி முதல் பணியில் தொடர உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக