ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 28 ஜூன், 2014

இரயில் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், ரயில் மறியல் புதிய தமிழகம் கட்சியினர் கைது..

விருதுநகர் 27:-இரயில் கட்டண உயர்வை கண்டித்து விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் கோ.ராமராஜ் தலைமையில் நடைப்பெற்றது.

இரயில் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், ரயில் மறியல் புதிய தமிழகம் கட்சியினர் கைது..



மத்திய அரசு அறிவித்துள்ள ரெயில் கட்டண உயர்வை கண்டித்தும், அதனை திரும்பப் பெறக் கோரியும் பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. புதிய தமிழகம் கட்சி சார்பில் இன்று திருச்சிக்கு வரும் ஜனசாதாப்தி ரெயிலை மறித்து பேராட்டம் நடத்தப் போவதாக அக்கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் ஐயப்பன் அறிவித்திருந்தார்.
இதன்படி இன்று காலை முதலே திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் முன்பு புதிய தமிழகம் கட்சியினர் குவியத் தொடங்கினர். போலீஸ் உதவி கமிஷனர் கணேசன், கண்டோன்மென்ட் இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இன்று காலை 11 மணிக்கு திருச்சி வந்த ஜனசதாப்தி ரெயிலை மறிக்க புதிய தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர்கள் ஐயப்பன், வக்கீல் சங்கர் ஆகியோர் தலைமையில் ஏராளமான தொண்டர்களும், நிர்வாகிகளும் ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்ததால் அங்கு தள்ளு முள்ளு நிலவியது. போலீசாருடன் புதிய தமிழகம் கட்சியினர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதன் பின்னர் மாவட்ட செயலாளர்கள் ஐயப்பன், வக்கீல் சங்கர், நிர்வாகிகள் கோபி, அசோக், ஒன்றிய செயலாளர்கள் தினகரன், ஷாஜகான், தங்கத்துரை, பிச்சமுத்து, மேற்கு தொகுதி பொறுப்பாளர் சண்முகம், இளைஞர் அணி பாலு உள்பட 40 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் பீமநர் திருமண மண்டபத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இரயில் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், ரயில் மறியல் புதிய தமிழகம் கட்சியினர் கைது..

திருச்சி 27;-இரயில் கட்டண உயர்வை உடனடியாக திரும்பபெற வேண்டும் என வலியுறுத்தி திருச்சியில் மாவட்ட செயலாளர் ம.அய்யபன் தலைமையில்,மாநகர செயலாளர் சங்கர் முன்னிலையிலும் திருச்சியில் இருந்து மயிலாடுதுறை செல்லும் இரயிலை மறிக்க முயற்ற போது நூற்றுக்கு மேற்ப்பட்ட தொண்டர்கள் கைது செய்யப்பட்டன

இரயில் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், ரயில் மறியல் புதிய தமிழகம் கட்சியினர் கைது..


-ஸ்ரீவில்லிபுத்தூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் மறியலில் ஈடுபட முயன்ற புதிய தமிழகம் கட்சியினர் 108 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
ரயில் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும். தென் மாவட்டங்களில் ஒடுக்க பட்ட மக்கள் மீது நடைபெறும் வன்முறை தாக்குதலை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையத்தில் புதிய தமிழகம் கட்சியின் ஒன்றியச் செயலாளர் எஸ்.டி.கண்ணன் தலைமையில் வெள்ளிக்கிழமை ஏராளமான கட்சித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இவர்கள் ரயில் நிலையத்திற்குள் சென்று மறியல் செய்ய முயன்றபோது, போலீஸார் இவர்களைக் கைது செய்தனர்.
போராட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி பொறுப்பாளர் ராஜலிங்கம், மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் வழக்குரைஞர் பவுண்ராஜ், வத்திராயிருப்பு மேற்கு ஒன்றியச் செயலாளர் பாரதிராஜா, ஸ்ரீவில்லிபுத்தூர் 27:-ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் சீனிவாசன், நகரச் செயலாளர் திருப்பதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இரயில் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், ரயில் மறியல் புதிய தமிழகம் கட்சியினர் கைது..


இரயில் கட்டண உயர்வு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்  என வலியுறுத்தி அனைத்து மாவாட்ட  தலைநகரங்களில்  உள்ள இரயில் நிலையம் முன்பு ஜுன் 27 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாகடர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் அறிவித்திருந்தார்கள் அதன்படி இன்று தமிழகம் முழுவதும்  புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் இரயில்  மறியல்  போராட்டங்கள் நடத்தினர்.

சென்னையில் மாநில அமைப்பு செயலாளர்  வி.கே.அய்யர் தலைமையில்  தெற்கு இரயிவே நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 30 கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர் மாவட்ட செயலாளர் கோ.ராமராஜ் தலைமையில் முன்னாள் மாவட்ட செயலாளர் ராமராஜ், செல்வகுமரேசன்,ரெ.கார்த்திக், மாணிக்கம்,கலைசெல்வன்,ராமசந்திரன்,சேகர், முத்துப்பாண்டி, முத்துராமன், செல்லமணி, பழனிசாமி, வழக்கறிஞர் ஏ.கே.ஜெகன்,குணா ஆகியோர் முன்னிலையில் விருதுநகர் இரயில் நிலையம் முன்பு 300 பேர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இரயில் கட்டண உயர்வு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்  என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் இரயில் நிலையம் முன்பு முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜாலிங்கம், ஒன்றிய செயலாளர்கள்  எஸ்.டி. கண்ணன், சீனிவாசன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


மதுரை மாவட்ட  செயலாளர் செ.பாஸ்கர் தலைமையில்,தாமோதரன்,பன்னீர்செல்வம் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிற்றரசு,டிமிட்ரோ கண்டன உரை நிகழ்த்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 150 பேர் கலந்து கொண்டனர். 

தூத்துக்குடி மாவட்டம்,  கோவில்பட்டி ரயில் நிலையத்தில் மாநில தொண்டரணி செயலாளர் லட்சுமண பாண்டியன் தலைமையில் முன்னாள் மாவட்ட செயலாளர் கிருபைராஜ், கண்ணன்மாநில பொதுகுழு உறுப்பினர், முன்னாள் மாவட்ட செயலாளர் கருப்பசாமி ஒன்றிய செயலாளர் அன்புராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் கருப்பசாமி ராஜசேகர் முன்னிலையில் நாகர்கோவில்- கோவை செல்லும் ரயில் முன்பு மறியலில் ஈடுபட்ட   54 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி மாவாட்டத்தின் சார்பில்,  திருச்சி இரயில்வே சந்திப்பில்  மாவாட்ட செயலாளர் அய்யப்பன் தலைமையில் ,மாநகர செயலாளர் சங்கர் முன்னிலையில் 52 பேர்  இரயில் மறியல் செய்தபோது  கைது செய்யப்பட்டனர்.

கோயமுத்தூர் மாவட்ட  இரயில்வே சந்திப்பில்  மறியல் செய்த  மாவட்ட பொறுப்பாளர்கள்  நக்கீரன்,சுப்பிரமணியன்,மாணிக்கவேல், சிவகுமார், சாந்தி உள்பட 34 பேர் கைது செய்யப்பட்டு இயில் நிலையம் எதிரில் உள்ள அண்ணாமலை விடுதியில் அடைக்கப்பட்டனர்.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு  நெல்லை மாநகர பொறுப்பாளர் செல்லப்பா தலைமையில்  நெல்லைமாவட்ட இளைஞஎஅணி  வீர அரவிந்தராஜா முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் இரயில் நிலையம் முன்பு புறநகர் மாவட்ட செயலாளர் வி.சுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 97 பேர் கலந்துகொண்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி இரயில் நிலையம் முன்பு  முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயகுமார் தலைமையில்  ரயில் மறியல் நடைபெற்றது. 38 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்  ரயில் நிலையம்முன்பு  மாவட்ட பொறுப்பாளர் மு.மாரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தொண்டர்கள் 60 பேர் கலந்துகொண்டனர்.

இராமநாதபுரம்  மாவட்ட செயலாளர்  கதிரேசன் தலைமையில், முன்னாள் பொறுப்பாளர் கலீல், முருகேசன் முன்னையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர்கள் பாலா, காமராஜ்,பால்ராஜ் ,முருகையாபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


கரூர் மாவட்டம்குளித்தலையில் ரயில் மறியலில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
ரயில் கட்டண உயர்வைக் கண்டித்துகுளித்தலையில் புதிய தமிழகம் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில்வெள்ளிக்கிழமை பிற்பகல் ரயில் நிலையத்துக்கு வந்த இக்கட்சியினர்பாலக்காட்டிலிருந்து குளித்தலை வழியாக திருச்சி செல்லும் விரைவு பயணிகள் ரயிலைரயில் நிலையம் முன்பாக மறித்தனர்.
இந்த மறியலுக்கு புதிய தமிழகம் கட்சியின் குளித்தலை ஒன்றியச் செயலர் க. ராஜசேகரன் தலைமை வகித்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே மற்றும் குளித்தலை போலீஸார் மறியிலில் ஈடுபட்ட பேரையும் கைது செய்தனர்.


ரயில் கட்டண உயர்வை கண்டித்து தஞ்சையில் புதிய தமிழகம் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் குணா தலைமை வகித்தார்.
துணை செயலாளர் சுகுமார்நகர செயலாளர் அழகர் முன்னிலை வகித்தனர். மத்திய அரசு ரயில் கட்டணத்தை உயர்த்தியுள்ளதை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்
பாராளுமன்ற தொகுதி செயலாளர் கண்ணன்இளைஞரணி செயலாளர் விவேக்மாணவரணி செயலாளர் ராஜா,ஒன்றிய செயலாளர்கள் தியாகராஜன்கார்த்திக்ராஜ்மோகன்செந்தில்குமார்சதிஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






\





தேர்தல்முறையில் மாற்றம் தேவை- வாக்கு விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதிகளை தேர்வுசெய்ய வேண்டும் - டாக்டர் க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ பேட்டி



புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் விதிமுறைகளை மாற்றவேண்டும். ஏனென்றால்மக்களிடம் போதிய அளவில் வாக்கு சதவீதம் பெற்ற பல தலைவர்களால் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற முடியவில்லை. சமீபத்தில் நடந்துமுடிந்த பாராளுமன்ற தேர்தலில் 39 சதவீதம் வாக்குகள் பெற்ற பாரதிய ஜனதாமத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. 25 சதவீதம் வாக்குகள் பெற்ற காங்கிரஸ்பகுஜன் சமாஜ்சமாஜ்வாடிஜே.டி.யு.இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்காமல் போய்விட்டது. தமிழகத்திலும் இதே நிலைதான். 43 சதவீதம் வாக்குகள் பெற்ற அதிமுக 37 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. 19சதவீதம் வாக்கு மட்டுமே பெற்ற பாரதிய ஜனதா கூட்டணி 2 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. ஆனால், 25 சதவீதம் வாக்குகள் பெற்ற திமுக கூட்டணிக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை. அதிக வாக்குகள் பெற்றும் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடுகிறது. 

எனவேஇத்தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவரவேண்டும்.அந்தந்த கட்சிகள் பெறும் வாக்கு சதவீதத்திற்கு ஏற்பபிரதிநிதிகளை தேர்வுசெய்ய வேண்டும். இந்நடைமுறை நார்வேஸ்பெயின்டென்மார்க்ஸ்வீடன்,சுவிட்சர்லாந்துஜெர்மனிநேபாளம் உள்ளிட்ட 89 நாடுகளில் நடைமுறையில் உள்ளது. இம்முறையை அமல்படுத்தும்போதுஉண்மையான ஜனநாயகம் காக்கப்படும்.இதுநாட்டின் வளர்ச்சிக்கு உதவும். இந்த நடைமுறையை அமல்படுத்த வேண்டும்

இத்தேர்வு முறை வேண்டும் என திமுக 1999ம் ஆண்டே குரல் கொடுத்தது. இந்த எண்ணம் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள்தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் ஆகியோரை ஒன்றுசேர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். பெங்களூரில் செயல்பட்டு வரும் இந்திய தேர்தல் முறையில் மாற்றம் பற்றிய பிரசார நிறுவனம் என்ற அமைப்பு இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதன் தலைவர் எம்.சி.ராஜூ இந்தியா முழுவதும் சென்று தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அவர்இன்று கோவையில் என்னை சந்தித்து ஆதரவு கோரினார்.

நாங்கள் ஒன்றுசேர்ந்துமுதல்கட்டமாகதமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுதமிழக தலைவர்களை ஒன்றுதிரட்டி கருத்தரங்கு நடத்த உள்ளோம். மிக விரைவில் தேதிஇடம் அறிவிக்கப்படும். பின்னர்தேசம் தழுவிய இயக்கமாக இதை விரிவுபடுத்துவோம்.

இவ்வாறு டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் கூறினார்.

ரயில் கட்டண உயர்வை கண்டித்து புதிய தமிழகம் இன்று புதுகையில் ஆர்ப்பாட்டம்..

புதுக்கோட்டை, : மத்திய அரசு ரயில் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி புதுகை மாவட்ட புதிய தமிழகம் கட்சி சார்பில் ரயில் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
புதுக்கோட்டை மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட செயலாளர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய அரசு ரயில் கட்டணத்தினை உயர்த்தியதை கண்டித்தும், காஸ் சிலிண்டர் விலை உயர்வு மற்றும் பயணிகள், சரக்கு ரயில் கட்டண உயர்வினை திரும்ப பெற வலியுறுத்தி புதிய தமிழகம் சார்பில் புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் இன்று (27ம் தேதி) கட்சியின் நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி ஆணையின்படி ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

ரயில் கட்டண உயர்வைக் கண்டித்து புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி காங்கிரஸ், புதிய தமிழகம் கட்சியினர் திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்டத் தலைவர் ராம்நாத் தலைமை வகித்தார். மத்திய முன்னாள் இணையமைச்சர் ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினார்.
காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலர் என்.டி.எஸ்.சார்லஸ், ஐ.என்.டி.யூ.சி. செயலர் ஆவுடையப்பன், பேச்சாளர் ஆலடி சங்கரைய்யா, சங்கரபாண்டியன், வேணுகோபால், ராஜேஷ், மகிளா காங்கிரஸ் நிர்வாகி கோமதிசண்முகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
புதிய தமிழகம்: ரயில் கட்டணம், டீசல் விலை உயர்வு ஆகியவற்றை குறைக்க வேண்டும். பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிறிஸ்தவ மக்கள் மீதான தாக்குதலைக் கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி ரயில் நிலையம் அருகே புதிய தமிழகம் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேரன்மகாதேவி ஒன்றியச் செயலர் ஏ.எஸ்.முத்து வரவேற்றார். மாவட்ட இணைச் செயலர் எம்.சுரேந்திரன், மாவட்ட மகளிரணிச் செயலர் ஏ.முத்துலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர் மாவட்டச் செயலர் எம்.எஸ்.செல்லப்பா, மேற்கு மாவட்டச் செயலர் வீரா.அரவிந்தராசா, சிவகுமார் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சம்பத், அண்ணாதுரை, முத்துராமன், முருகன், சிவகுமார், காளிமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ரெயில் கட்டண உயர்வை கண்டித்து –புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்



ரெயில் கட்டண உயர்வை கண்டித்து கரூரில்,  – புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதிய தமிழகம் கட்சி
இதே போன்று புதிய தமிழகம் கட்சி சார்பில் ரெயில் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். கரூர் ரெயில் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கி னார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தை முன் னிட்டு கரூர் ரெயில் நிலையத் தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

திங்கள், 23 ஜூன், 2014

ரயில் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு- ஜூன் 27ல் புதிய தமிழகம் ஆர்பாட்டம் ........

சென்னை: ரயில் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி ஜூன் 27ம்தேதி புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். மத்திய அரசு பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சென்னையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது: மத்திய அரசு ரயில் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.இல்லை என்றால் வருகிற ஜூன் 27ல் மாவட்ட தலைநகரங்களில் உள்ள ரயில் நிலையம் முன்பு புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறினார். இந்த சந்திப்பின் போது மாநில அமைப்புச் செயலாளர் வி.கே.அய்யர்,துறைமுகம் கண்ணன் ஆகியேர் உடன் இருந்தனர்.
ரயில் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு- ஜூன் 27ல் புதிய தமிழகம் ஆர்பாட்டம்

இரயில் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி ஜூன் 27 ஆர்ப்பாட்டம் டாக்டர் க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ அறிவிப்பு....


புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று  சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்கள் அப்போது அவர் கூறியதாவது:-

பணவீக்கம், பொருளாதார மந்தநிலை, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, விவசாய பொருட்களின் உற்பத்தி குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் உணவு பண்டங்கள் உட்பட அனைத்து பொருட்களுடைய விலைகள் அண்மைக் காலமாக தாறுமாறாக உயர்ந்து வருகின்றன.இதனால் அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.பணி நிமித்தமாகவும் பல்வேறு சமூக காரணங்களுக்காகவும், ஒன்றரை கோடி மக்கள் தினமும்  இரயிலில் பயணம் செய்கின்றனர்.

பெரும்பாலான பொருட்களும் நாட்டினுடைய ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு சரக்கு ரயில்கள் மூலமாகவே கொண்டு செல்லப்படுகிறது. மத்தியில் புதிய அரசு பதவியேற்று ஒரு மாதமே முடிந்துள்ளது. இன்னும் பதினைந்து தினங்களில் இரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் திடீரென்று பயணிகள் கட்டணத்தில் 14% சதவிகிதமும் சரக்கு கட்டணத்தில் 6.5 சதவிகிதமும் உயர்த்தியிருப்பது இந்தியா முழுமைக்கும் உள்ள அனைத்து தரப்பு மக்களுடைய வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கும். சரக்கு கட்டண உயர்வு ஏற்கனவே உயர்ந்துள்ள விலைவாசியை மீண்டும்  பண்மடங்கு அதிகரிக்கும். மோடி தலைமையிலான அரசு தலைமையேற்றவுடன்  மக்களின் சுமைகளை குறைக்கும் என்றே நம்பினர். ஆனால் நேர்மாறாக மக்கள் தாங்கமுடியாத அளவிற்கு சரக்கு மற்றும் பயணக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது ஜனநாயக விரோதமானதும் மக்கள் விரோதமானதும் ஆகும். எனவே சரக்கு மற்றும் ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்.

இரயில் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்  என வலியுறுத்தி அனைத்து மாவாட்ட  தலைநகரங்களில்  உள்ள இரயில் நிலையம் முன்பு ஜுன் 27 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

திருவள்ளூர் மாவாட்ட இந்து முன்னனி தலைவர்  சுரேஷ்குமார் கொலை வழக்கில்  உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து காவல்துறை  வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இறுதி ஊர்வலத்தில் சிறுபான்மையினரின் தேவாலயங்கள், மற்றும் வழிபாட்டு தலங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டனத்துக்குரியது. இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தி மொழி பேசாத  மாநிலங்கள் மீது மத்திய அரசு இந்தி மொழியை திணிக்கக்கூடாது.
மத்திய அரசால் தற்போது பிறப்பித்துள்ள உத்தரவை இரத்து செய்யவேண்டும் என டாக்டர்.க.கிருஷ்ணசாமி  

வியாழன், 19 ஜூன், 2014

டாக்டர்.கலைஞர் அவர்களுடன் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் சந்திப்பு..


தி.மு.க தலைவர் டாக்டர்.கலைஞர் அவர்களை  புதிய தமிழகம் கட்சி தலைவர் இன்று காலை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் கூறியதாவது:-

வளர்ந்த ஐரோப்பிய நாடுகளிலும், ஆசியா மற்றும் தென்அமெரிக்கா நாடுகளிலும் உலகின் பெரும்பாலான நாடுகளிலும் விகிதாச்சார அடிப்படையிலான தேர்வு முறையே அமலில் உள்ளது. விகிதாச்சார தேர்வு முறை மூலமாக ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகளின் விகிதத்திற்கு ஏற்ப அக்கட்சிகளுக்கு சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் கிடைப்பர். இதன் மூலம் ஜனநாயகம் வலுப்பெறும்; கட்சிகளிடையே தோன்றும் பிரிவினைகள், மக்களிடையே தோன்றும் சாதி, மத, மொழி, பிராந்திய மனப்பான்மைகள் மறைந்து போகும்   என்பதை வலியுறுத்தி விகிதாச்சார தேர்வு முறை குறித்து ஒத்த கருத்துள்ள கட்சிகளை ஒருங்கிணைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த    டாக்டர்.கலைஞர் அவர்கள் தலைமையில் தேசிய கருத்தரங்கம் நடத்தவேண்டும் என கேட்டுக்கொண்டேன் என டாக்டர். க.கிருஷ்ணசாமி அவர்கள் கூறினார்.
அப்போது மாநில நிர்வாகிகள்  வி.கே.அய்யர்,துறைமுகம் கண்ணன்  ஆகியோர் உடன் இருந்தனர்.

செவ்வாய், 17 ஜூன், 2014

சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் விடுத்த எச்சரிக்கை...

சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் விடுத்த எச்சரிக்கை.1995 கொடியங்குளம் கலவரத்தின் போது நாங்கள் ஆயுதம் எந்தி போராடியது போலவும்,அகிம்சை வழியில் போராடுவதும் வன்முறையாளர்கள் மீது தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கையை பொருத்தே உள்ளது.

புதிய தமிழகம் கட்சியின் அரசியல் உயர்நிலைக் குழுக்கூட்டம்..

நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்தறிய புதிய தமிழகம் கட்சியின் அரசியல் உயர்நிலைக் குழுக்கூட்டம் இன்று 17.06.2014 புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர்-தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.டி.,எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் சென்னை, நுங்கம்பாக்கம், வி.கங்காதரன் தெருவிலுள்ள புதிய தமிழகம் கட்சி தலைமை அலுவலகத்தில் காலை 9 மணி முதல் நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நாடெங்கும் பெண்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினருக்கு எதிராக அதிகரித்துவரும் வன்கொடுமைகள் குறித்து புதிய தமிழகம் கட்சி ஆழ்ந்த கவலை கொள்கிறது. உ.பி.மாநிலத்தில் பதுகன் மாவட்டத்தில் கற்பழித்து கொடூரமாக தூக்கிலிடப்பட்டு 2 தலித் பெண்கள் கொலை, தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் உடப்பன்குளத்தில் 3 தலித் இளைஞர்கள் படுகொலை, அதேபகுதியில் அழகுனேரி கிராமத்தைச் சேர்ந்த செல்வக்குமார் என்ற தலித் இளைஞர் தீயிட்டு படுகொலை, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றியம் கூமாபட்டியைச் சேர்ந்த பாலமுருகன் என்ற இளைஞர் அடித்துக் கொலை உட்பட தூத்துக்குடி மாவட்டம் மணக்கரை கிராமத்தில் 44 தாழ்த்தப்பட்ட மக்களுடைய வீடுகள் சூறையாடப்பட்டதற்கும், 3 இளைஞர்கள் தாக்கப்பட்டதற்கும், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 2 சிறுமிகள் கற்பழிக்கப்பட்டதற்கும் புதிய தமிழகம் கட்சி தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.
நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி மத்திய, மாநில அரசுகளின் கண்களை மூடி மறைத்துவிடக்கூடாது என்பதற்காகவும், மேலாதிக்க சாதி, மத வெறிக்கு துணைபோய் விடக்கூடாது எனவும் மத்திய, மாநில அரசுகளை புதிய தமிழகம் கட்சி எச்சரிக்கிறது. ஆதிக்கச் சாதிவெறியோடு நடத்தப்பட்ட இச்சம்பவங்களில் ஈடுபட்ட உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டித்திடவும், எதிர்காலத்தில் இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் நடந்திடா வண்ணம் நடவடிக்கை எடுத்திடவும் புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது.

சென்னையில் இன்று (16-06-2014) டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் நடந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை 16:-தென்தமிழகத்தில் பட்டியலின மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் - தமிழகம் மற்றும் உத்திரபிரதேச மாநிலத்தில் நடைபெற்றுவரும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம்
புதிய தமிழகம் கட்சி நிறுவனர்-தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தென்தமிழகத்தில் பட்டியலின மக்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் வன்கொடுமை தாக்குதல்களையும், தமிழகத்தில் பொள்ளாச்சி, உத்திரபிரதேச மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட சிறுமியர், இளம்பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அப்போது அவர் கூறியதாவது:-
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருகிறது. குறிப்பாக உத்திரபிரதேச மாநிலத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் இரண்டு தாழ்த்தப்பட்ட இளம் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டனர்.
அண்மைகாலமாக தென்தமிழத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிராக அதிகரித்து வரும் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது கடந்த மே மாதம் மூன்றாவது வாரத்தில் கோவில்பட்டி - நெல்லை தனியார் பேரூந்து நடத்துனர் சங்கரன்கோவில் தாலூகா அழகனேரி கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் த/பெ.தங்கராஜ் என்பவர் சில ஆதிக்க சாதியினரால் தீயிட்டு கொளுத்தப்பட்டு அகால மரணமடைந்துள்ளார். அந்த சம்பவம் நடத்துனருக்கும், பயணச்சீடு வாங்காத பயணிகளுக்கும் ஏற்பட்ட தகராறில் நடந்த சம்ப்வம் என்று சொல்லப்பட்டாலும் உண்மையில் அது திட்டமிட்ட கொலையாகும். சாதிய வெறியோடு நடத்தப்பட்ட கெளரவ கொலையாகும்.
இரண்டாவதாக அதே சங்கரன் கோவில் அருகே உடப்பன்குளம் என்ற கிராமத்தில் பல்வேறு சமுதாயத்தை சார்ந்தவர்கள் வாழ்கிறார்கள். அதில் பட்டியலின பிரிவில் உள்ள தேவேந்திர குல வேளாளர்கள் வெறும் 40 குடும்பங்கள் மட்டுமே. அந்த நாற்பது குடும்பங்களுக்கு குடிநீர் பிடிப்பது.மாயானப் பாதைக்கு செல்வது, நடைபாதை போன்ற பல அடிப்படை உரிமைகள் அங்கு வாழக்கூடிய பிறசமூகங்கள் மறுக்கப்பட்டு வந்ததும் அதனுடைய தொடர்ச்சியாக வால்பாறையிலிருந்து திருமண நிகழ்ச்சிகு வந்து திரும்பிய 2 பேர் உட்பட மூன்று பேர் அதே கிராமத்திற்கு அருகாமையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தாலூகா மணக்கரை என்ற கிராமத்தில் அதே பட்டியலினப் பிரிவில் தேவேந்திர குல வேளாளர் இனத்தைச் சார்ந்த 30 வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டிருக்கின்றன. 8 பைக்குகள்,2 ஆம்னி பஸ் பலத்த சேதமடைந்துள்ளன, 30 வீடுகளிலும் அந்த மக்களுடைய வீடுகள் குடியிருக்கமுடியா வகையில் வீட்டிலிருந்த சமையல் பாத்திரங்கள், அடுப்புகள் அனைத்தும் நொறுக்கப்பட்டுள்ளன.
அதேபோல இரண்டு தினங்களுக்கு முன்பு 10 வயதிற்குட்பட்ட தாழ்த்தப்பாட்ட சமூகத்தை சார்ந்த இளம் சிறுமிகள் மிக கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இப்படி தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிராக நடைபெற்று வரும் தாக்குதல்களை தடுத்து நிறுத்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. 1989 ஆம் ஆண்டு வன்கொடுமை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் தவறினால் தமிழகம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என டாக்டர். க.கிருஷ்ணசாமி அவர்கள் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்கள்,ஒன்றிய,நகர, தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டு தங்களது கண்டன குரல்களை எழுப்பினார்கள்..

சென்னையில் இன்று (16-06-2014) டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் நடந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

ஞாயிறு, 15 ஜூன், 2014

சென்னையில் ஜூன்-16 டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் புதிய தமிழகம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..

உ.பியில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்த இரண்டு சிறுமிகள் படுகொலையை கண்டித்தும்,தென் தமிழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக சமூக நல்லிணக்கத்தோடு வாழ்ந்த மக்களிடையே வன்முறையில் ஈடுபடுபவர்களை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்தும் சென்னையில் ஜூன்-16 ல் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு காலை 10 மணிக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனையை தீர்வை நோக்கி சரியான முறையில் போராடும் "சமூக விஞ்ஞானி" டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

சென்னையில் ஜூன்-16 டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் புதிய தமிழகம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..

டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..



டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..

தென் தமிழகத்தில் தேவேந்திரகுல மக்கள் மீது நடத்தப்படும் தொடர் வன்முறை சம்பவங்களை கண்டித்தும் உ.பியில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமையும் கண்டித்தும் ஜூன்-16ல் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகைமுன்பு காலை 10 மணிக்கு டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

சனி, 7 ஜூன், 2014

திமுக கூட்டணி தோற்க என்ன காரணம்? கிருஷ்ணசாமி, விளக்கம் ...

திமுக கூட்டணி தோற்க என்ன காரணம்? கிருஷ்ணசாமி, திருமாவளவன் விளக்கம்சென்னை: அதிமுகவின் நாடாளுமன்ற தேர்தல் வெற்றி தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஒத்துழைப்பாலும், பணத்தாலும் வாங்கப்பட்டது என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டினார். திமுக தலவைர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி சென்னையில் நேற்றிரவு நடைபெற்றது. அதில் கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். விழாவில் கிருஷ்ணசாமி பேசுகையில், "திமுக கூட்டணி, நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெறும் என்றுதான் எதிர்பார்த்திருந்தோம். போட்டியிட்ட 40 இடங்களிலும் வெற்றி பெறும் என்று நாங்கள் எண்ணாவிட்டாலும், 18 முதல் 20 தொகுதிகளை கைப்பற்றும் நம்பிக்கை இருந்தது. அதிமுக அமைச்சர்கள் பிரச்சாரம் செய்யப்போன இடங்களில் பொதுமக்கள் அடித்து விரட்டப்பட்ட செய்திகள் ஊடகங்களில் வந்தன. ஜெயலலிதா பொதுக்கூட்டங்களில் பங்கேற்ற மக்களிடம் எழுச்சி இல்லை. இதையெல்லாம் பார்த்து, உளவுத்துறையை வைத்து ஜெயலலிதா தேர்தல் நிலவரத்தை ஆய்வு செய்தார். அதிமுக இறங்குமுகமாக இருப்பதை உளவுத்துறை சுட்டிக்காட்டியது. எனவேதான் தமிழக தேர்தல் அதிகாரிகளை உடந்தையாக்கிக் கொண்டு வெற்றியை பறிக்க ஜெயலலிதா முடிவு செய்தார். ஜம்மு காஷ்மீரில் கலவரம் இல்லாத நாள் கிடையாது, வடகிழக்கு மாநிலங்களில் சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து கலவரம் இருந்து வருகிறது. அங்கெல்லாம் சட்டப்பிரிவு 144ன்கீழ் தடை உத்தரவை பிறப்பிக்காதபோது, அமைதி பூங்காவான தமிழகத்தில் தடை உத்தரவை பிறப்பித்தது தேர்தல் ஆணையம். ஏப்ரல் 20ம்தேதிவரை திமுக கூட்டணி அமோக வெற்றிபெறும் என்று இருந்த நிலை, அதன்பிறகு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததால் மாற்றப்பட்டது. அதிமுக வெற்றியை பெறவில்லை, வாங்கியுள்ளது. எதிர்வரும் காலங்களில் 144 தடையுத்தரவுக்கான விடையை திமுக கூட்டணி கண்டுபிடிக்காமல், அம்பலப்படுத்தாமல் விடக்கூடாது" என்றார்.

தென் மாவட்டங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான தாக்குதல் : டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி..


சென்னை: ‘ தென் மாவட்டங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக நடந்து வரும் தாக்குதல் குறித்து, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்’ என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.  புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று அளித்த பேட்டி:
தென் தமிழகத்தில் அண்மை காலமாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. உதாரணமாக, கடந்த மே மாதம் நெல்லை தனியார் பேருந்து ஓட்டுனர் கொலை செய்யப்பட்டுள்ளார். சங்கரன் கோவில் அருகே உடப்பன் குளத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இரண்டு தினங்களுக்கு முன்பு ஸ்ரீவைகுண்டம் தாலுகா மணக்கரை கிராமத்தில் 30 வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. ஆளுங்கட்சிக்கு நெருக்கமாக இருக்கிறோம் என்று சொல்லிக் கொள்ளும் சிலர் தான் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.  இதனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய போலீசார் தயங்குகின்றனர். மூன்று சம்பவங்களிலும் ஒரு குற்றவாளிகள் கூட இது வரை கைது செய்யப்படவில்லை.

தென் தமிழகத்தில் அண்மைகாலமாக பெரிய அளவிற்கு சாதிய மோதல்கள் குறைந்து வருகின்றன. இந்நிலையில் கடந்த 20 தினங்களில் நடந்துள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தொடர் சம்பவங்கள் ஆழ்ந்த கவலை அளிக்கும் வகையில் உள்ளது. இந்த சம்பவங்களில் சம்பந்தப்பட்ட உண்மை குற்றவாளிகளை கண்டு பிடிக்க வேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி.யிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு உடனடியாக இச்சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இச்சம்பவத்தை கண்டித்து விரைவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதன் பின்னர், ஆளுநரை சந்தித்து மனு கொடுக்கப்படும். அதன் பின்னர் நடவடிக்கை எடுக்காவிட்டால் பிரதமர், உள்துறை செயலாளரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

தென் மாவட்டங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக நடந்து வரும் தாக்குதல் குறித்து, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்’ என்று டாக்டர் கிருஷ்ணசாமி ....



தன் கட்சியினருக்கு ஒரு பிரச்சனை என்றால் கடும் கண்டனம் தெரிவிக்கும் ஜெயலலிதா.தென் தமிழகத்தில் கடந்த இரண்டு வாரம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக தொடர் வன்முறைக்கு ஜெயலலிதா ஒரு கண்டனம் கூட தெரிவிக்காதது ஏன்?....
டாக்டர் கிருஷ்ணசாமி..

‘ தென் மாவட்டங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக நடந்து வரும் தாக்குதல் குறித்து, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்’ என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி .........


சென்னை: ‘ தென் மாவட்டங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக நடந்து வரும் தாக்குதல் குறித்து, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்’ என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று அளித்த பேட்டி:
தென் தமிழகத்தில் அண்மை காலமாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. உதாரணமாக, கடந்த மே மாதம் நெல்லை தனியார் பேருந்து ஓட்டுனர் கொலை செய்யப்பட்டுள்ளார். சங்கரன் கோவில் அருகே உடப்பன் குளத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இரண்டு தினங்களுக்கு முன்பு ஸ்ரீவைகுண்டம் தாலுகா மணக்கரை கிராமத்தில் 30 வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. ஆளுங்கட்சிக்கு நெருக்கமாக இருக்கிறோம் என்று சொல்லிக் கொள்ளும் சிலர் தான் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய போலீசார் தயங்குகின்றனர். மூன்று சம்பவங்களிலும் ஒரு குற்றவாளிகள் கூட இது வரை கைது செய்யப்படவில்லை.
தென் தமிழகத்தில் அண்மைகாலமாக பெரிய அளவிற்கு சாதிய மோதல்கள் குறைந்து வருகின்றன. இந்நிலையில் கடந்த 20 தினங்களில் நடந்துள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தொடர் சம்பவங்கள் ஆழ்ந்த கவலை அளிக்கும் வகையில் உள்ளது. இந்த சம்பவங்களில் சம்பந்தப்பட்ட உண்மை குற்றவாளிகளை கண்டு பிடிக்க வேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி.யிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு உடனடியாக இச்சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இச்சம்பவத்தை கண்டித்து விரைவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதன் பின்னர், ஆளுநரை சந்தித்து மனு கொடுக்கப்படும். அதன் பின்னர் நடவடிக்கை எடுக்காவிட்டால் பிரதமர், உள்துறை செயலாளரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.இந்த பேட்டியின் போது மாநில அமைப்புச் செயலாளர் வி.கே அய்யர் அவர்கள் உடனிருந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் மணக்கரையில் சாதிவெறிகும்பல் கொலைவெறி தாக்குதல் ......

இன்று காலை சென்னையிலிருந்து தூத்துக்குடி விமானநிலையம் வந்த தலைவர் தமிழினவேந்தர் அங்கிருந்து நேராக தூத்துக்குடி மாவட்டம் மணக்கரையில் சாதிவெறிகும்பல் கொலைவெறி தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார். பாதிக்கப்பட்ட மக்கள் தனி ரேசன் கடை , தனி பாலம், டாஸ்மாக் கடை மூடவேண்டும் பாதுகாப்புவேண்டும் என்றனர். பிரச்சனைக்கு தீர்வு இதுதான் என்று மக்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். தலைவர் மக்களை ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தி பேசினார். தலைவர் தமிழினவேந்தர் வருகை அறிந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் துரை முறப்பநாடு காவல்நிலையத்திற்கு வந்து காந்திருந்தார் . அவரிடம் தமிழினவேந்தர் மக்களின் கோரிக்கைகளை தெரிவித்தார் மாவட்டநிர்வாகத்திடம் பேசி உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். அங்கிருந்து நேராக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு வருகைதந்தார் அங்கு சிகிச்சைப்பெற்றுவரும் நபர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

புதிய தமிழகத்தின் போரட்டமும் தொடரும்.மணக்கரை,தூத்துக்குடி

ஆதிக்க சமூகத்தின் அடக்குமுறைக்கு எதிரான புதிய தமிழகத்தின் போரட்டமும், அதன் வெற்றியாக 1, குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டனர், 2, முதன் முறையாக உரிய இழப்பீடு உடனடியாக டி.ஆர்.ஓ முன்னிலையில் வழங்கப்பட்டது, 3, டாஸ்மாக் கடை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவு பிறப்பிக்கபட்டது, 4, தனி ரேஷன் கடை, பாலம், மேலும் கோரிக்கைகள் பரீசிலனைகள் நடந்து கொண்டும், புதிய தமிழகத்தின் போரட்டமும் தொடரும்.மணக்கரை,தூத்துக்குடி.