ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 26 ஜூலை, 2011

மாஞ்சோலை தோட்ட தேயிலை நிலங்களை 5 ஏக்கர் வீதம் பிரித்துக்கொடுக்க வேண்டும் : எம்எல்ஏ.,கிருஷ்ணசாமி










திருநெல்வேலி : மாஞ்சோலை தோட்ட தேயிலையின் நிலங்களை 5 ஏக்கர் வீதம் தொழிலாளர்களுக்கு பிரித்து கொடுக்கவேண்டும் என புதிய தமிழகம் நிறுவன தலைவர் எம்எல்ஏ.,கிருஷ்ணசாமி கூறினார்.தாமிரபரணியில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின், புதிய தமிழகம் நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:கடந்த 1999ம் ஆண்டு 5 மாவட்ட தோட்ட தேயிலை தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு அளிக்க வந்தோம். அப்போது திமுக ஆட்சியின் அடக்கு முறையால் போலீசார் எங்கள் மீது லத்தியால் தாக்கினர்.





இதில் ஒரு வயது குழந்தை உட்பட 17 பேர் ஆற்றில் மூழ்கி இறந்தனர். அவர்களின் நினைவு தினத்தை ஆண்டு தோறும் கடைபிடித்து வருகிறோம். தாமிபரணியில் உயிர்நீத்தவர்களுக்கு நினைவுத்தூண் அமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். இந்த ஆண்டாவது எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். மாஞ்சோலை தேயிலை நிறுவனத்தின் குத்தகை காலம் முடிந்துவிட்டது. எனவே அந்த நிலங்களை தலா 5 ஏக்கர் வீதம் அங்குள்ள தொழிலாளர்களுக்கு பிரித்துக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்

டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் தமிழக முதலமைச்சரை சந்தித்தார்

டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் தமிழக முதலமைச்சரை சந்தித்தார்

திங்கள், 25 ஜூலை, 2011

தாமிரபரணியில் உயிர்நீத்த 17 பேருக்கு வீரவணக்க பேரணி ( படங்கள் )








மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் நினைவுதினம்: நெல்லை தாமிரபரணி ஆற்றில் பல்வேறு கட்சியினர் மலர்தூவிஅஞ்சலி; டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ- ஜான்பாண்டியன் தலைமையில் பேரணி

கூலிஉயர்வு கேட்டு கடந்த 1999-ம் ஆண்டு மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நெல்லை யில் ஊர்வலம் நடத்தினர். அப்போது போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் தாமிர பரணி ஆற்றில் மூழ்கி 17 தொழிலாளர்கள் இறந் தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 23-ந்தேதி நடைபெறும்.




பல்வேறு கட்சியினரும் அஞ்சலி செலுத்துவார்கள். இந்த ஆண்டு அஞ்சலி நிகழ்ச்சி இன்று நடந்தது. அஞ்சலி செலுத்த ஒவ்வொரு கட்சியினருக்கும் வெவ்வேறு நேரம் ஒதுக்கப்பட்டது. அதன்படி பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரரத்தில் நெல்லை தாமிரபரணி ஆற்றுக்கு வந்து மலர்தூவியும், மலத் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினார்கள்.



புதிய தமிழகம் கட்சியினர் நெல்லை சந்திப்பில் இருந்து ஊர்வலமாக கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றுக்கு சென்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த பேரணிக்கு புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், மாநகர் மாவட்ட செயலாளர் செல்லப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் அரவிந்தராஜ், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் அதன் தலைவர் ஜான்பாண்டியன் தலைமையில் பாளை சமாதானபுரத்தில் இருந்து பல வாகனங்களில் ஊர்வலமாக வண்ணார்பேட்டைக்கு வந்தனர். பின்பு அங்கிருந்து நடந்து தாமிரபரணி ஆற்றுக்கு ஊர்வலமாக வந்து ஆற்றில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் அமைப்பு செயலாளர் கண்மணி மாவீரன், மாவட்ட தலைவர் ஜெகதீஸ்வரன், மாவட்ட செயலாளர் ஜெயகுமார், இன்பராஜ், நிர்வாகிகள் செல்வராஜ், சிவா, சிங் தேவேந்திரன், கணேஷ், அருண், வாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் தேவேந்திரன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் துணைத்தலைவர் சப்பாணி, நெல்லை சிவா, பாஸ்கர், ஆனந்த், முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. பொன்பாண்டியன் தலைமையில் காசிவிஸ்வநாதன், ராமலிங்கம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.



மள்ளர் மீட்பு களம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் பொன்ராவணன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாநகர் மாவட்ட செயலாளர் சுப்பையா, தலைமை நிலைய செயலாளர் குபேரமள்ளர், தமிழ்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். பா.ஜ.க. சார்பில் அதன் எஸ்.சி¢.எஸ்.டி. பிரிவு முருகதாஸ் தலைமையில் பாலசுப்பிரமணியன், சுரேஷ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் விவசாய அணி ஆறுமுகம் தலைமையில் அக்கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.



மள்ளர் இலக்கிய கழகம் சார்பில் மாநில பொருளாளர் பழனிவேல்ராஜன் தலைமை யில் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாநில விவசாய அணி செயலாளர் தண்டாயுதபாணி நெல்லை பாலா, மகேஷ், நாங்குநேரிசக்திவேல், சேந்திமங்கலம் சுரேஷ், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் முத்துக்குமார், முனியசாமி, கோபி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

ஜான் பாண்டியன் சுற்றுப் பயணம்






:







தேவகோட்டை, ஜன. 21: தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தேவகோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடியேற்று விழாவுக்கு, அக்கட்சியின் தலைவர் ஜான்பாண்டியன் தலைமை வகித்தார்.



இதைத் தொடர்ந்து கண்டதேவி, ராமநகர், பணிப்புலான்வயல், புலியடிதமம், நெட்டேந்தல், சிறுவாச்சி ஆகிய இடங்களில் கொடியேற்றி வைத்தார். உஞ்சனையில் உள்ள ஐவர் நினைவிடத்திலும், மாடக்கோட்டையில் உள்ள சுப்பு நினைவிடத்திலும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.



இந் நிகழ்ச்சிகளில் மாவட்ட செயலாளர் மணிமுத்து, ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயபிரகாஷ் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.





மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் நினைவுதினம்: நெல்லை தாமிரபரணி ஆற்றில் பல்வேறு கட்சியினர் மலர்தூவிஅஞ்சலி; டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ- ஜான்பாண்டியன் தலைமையில் பேரணி






கூலிஉயர்வு கேட்டு கடந்த 1999-ம் ஆண்டு மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நெல்லை யில் ஊர்வலம் நடத்தினர். அப்போது போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் தாமிர பரணி ஆற்றில் மூழ்கி 17 தொழிலாளர்கள் இறந் தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 23-ந்தேதி நடைபெறும். பல்வேறு கட்சியினரும் அஞ்சலி செலுத்துவார்கள். இந்த ஆண்டு அஞ்சலி நிகழ்ச்சி இன்று நடந்தது. அஞ்சலி செலுத்த ஒவ்வொரு கட்சியினருக்கும் வெவ்வேறு நேரம் ஒதுக்கப்பட்டது. அதன்படி பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரரத்தில் நெல்லை தாமிரபரணி ஆற்றுக்கு வந்து மலர்தூவியும், மலத் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினார்கள். புதிய தமிழகம் கட்சியினர் நெல்லை சந்திப்பில் இருந்து ஊர்வலமாக கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றுக்கு சென்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த பேரணிக்கு புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், மாநகர் மாவட்ட செயலாளர் செல்லப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் அரவிந்தராஜ், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் அதன் தலைவர் ஜான்பாண்டியன் தலைமையில் பாளை சமாதானபுரத்தில் இருந்து பல வாகனங்களில் ஊர்வலமாக வண்ணார்பேட்டைக்கு வந்தனர். பின்பு அங்கிருந்து நடந்து தாமிரபரணி ஆற்றுக்கு ஊர்வலமாக வந்து ஆற்றில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் அமைப்பு செயலாளர் கண்மணி மாவீரன், மாவட்ட தலைவர் ஜெகதீஸ்வரன், மாவட்ட செயலாளர் ஜெயகுமார், இன்பராஜ், நிர்வாகிகள் செல்வராஜ், சிவா, சிங் தேவேந்திரன், கணேஷ், அருண், வாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் தேவேந்திரன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் துணைத்தலைவர் சப்பாணி, நெல்லை சிவா, பாஸ்கர், ஆனந்த், முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. பொன்பாண்டியன் தலைமையில் காசிவிஸ்வநாதன், ராமலிங்கம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். மள்ளர் மீட்பு களம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் பொன்ராவணன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாநகர் மாவட்ட செயலாளர் சுப்பையா, தலைமை நிலைய செயலாளர் குபேரமள்ளர், தமிழ்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். பா.ஜ.க. சார்பில் அதன் எஸ்.சி¢.எஸ்.டி. பிரிவு முருகதாஸ் தலைமையில் பாலசுப்பிரமணியன், சுரேஷ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் விவசாய அணி ஆறுமுகம் தலைமையில் அக்கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். மள்ளர் இலக்கிய கழகம் சார்பில் மாநில பொருளாளர் பழனிவேல்ராஜன் தலைமை யில் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாநில விவசாய அணி செயலாளர் தண்டாயுதபாணி நெல்லை பாலா, மகேஷ், நாங்குநேரிசக்திவேல், சேந்திமங்கலம் சுரேஷ், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் முத்துக்குமார், முனியசாமி, கோபி மற்றும் பலர் கலந்துகொண்டனர்

தாமிரபரணியில் உயிர்நீத்தோர் நினைவு தினம் : டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் புதிய தமிழகம் கட்சியினர் அஞ்சலி


























நெல்லையில் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் நினைவு நாளையொட்டி புதிய தமிழகம் கட்சியினர் க்ட்சியின் நிறுவனர்- தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் தாமிரபரணி ஆற்றில் அஞ்சலி செலுத்தினர்.





கடந்த 99ம்ஆண்டு ஜூலை 23ம்தேதி கூலிஉயர்வு கேட்டு போராடி சிறையில் அடைக்கப்பட்ட மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை விடுவிக்க வலியுறுத்தி நெல்லையில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க தோட்ட தொழிலாளர்கள் ஊர்வலமாக சென்ற போது போலீசார் தடியடி நடத்தினர்.





இதில் ஒரு சிறுவன் உட்பட 17 பேர் தாமிரபரணி ஆற்றில் இறந்தனர்.இதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும் ஜூலை 23ம்தேதியை தாமிரபரணியில் உயிர் நீத்தோர் நினைவு தினமாக அரசியல்கட்சியினர், அமைப்பினர் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.








புதிய தமிழகம் கட்சி சார்பில் தலைவர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ தலைமையில் நெல்லை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து மவுன ஊர்வலம் துவங்கியது. அண்ணாத்துரை சிலை முன்பு ஊர்வலம் நிறைவு பெற்றது.பின்னர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தாமிரபரணி ஆற்றில் மலர்வளையம் வைத்து வீர வணக்க அஞ்சலி செலுத்தினர்.

மாஞ்சோலை தோட்ட தேயிலை நிலங்களை 5 ஏக்கர் வீதம் பிரித்துக்கொடுக்க வேண்டும் : எம்எல்ஏ.,கிருஷ்ணசாமி










திருநெல்வேலி : மாஞ்சோலை தோட்ட தேயிலையின் நிலங்களை 5 ஏக்கர் வீதம் தொழிலாளர்களுக்கு பிரித்து கொடுக்கவேண்டும் என புதிய தமிழகம் நிறுவன தலைவர் எம்எல்ஏ.,கிருஷ்ணசாமி கூறினார்.தாமிரபரணியில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின், புதிய தமிழகம் நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:கடந்த 1999ம் ஆண்டு 5 மாவட்ட தோட்ட தேயிலை தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு அளிக்க வந்தோம். அப்போது திமுக ஆட்சியின் அடக்கு முறையால் போலீசார் எங்கள் மீது லத்தியால் தாக்கினர்.







இதில் ஒரு வயது குழந்தை உட்பட 17 பேர் ஆற்றில் மூழ்கி இறந்தனர். அவர்களின் நினைவு தினத்தை ஆண்டு தோறும் கடைபிடித்து வருகிறோம். தாமிபரணியில் உயிர்நீத்தவர்களுக்கு நினைவுத்தூண் அமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். இந்த ஆண்டாவது எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். மாஞ்சோலை தேயிலை நிறுவனத்தின் குத்தகை காலம் முடிந்துவிட்டது. எனவே அந்த நிலங்களை தலா 5 ஏக்கர் வீதம் அங்குள்ள தொழிலாளர்களுக்கு பிரித்துக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.

செவ்வாய், 19 ஜூலை, 2011

தேவேந்திரகுல வெள்ளாளர் குலத்தில் உதித்த வீரத்திலகம்.வெண்ணிக்காலாடி






1759 நவம்பர் 6ஆம் நாள் பூலித்தேவரின் நெற்கட்டான் செவ்வல் கோட்டையை கூலிப்படைத் தளபதி கான்சாகிப் தாக்கினான். 18 பவுண்டு வெடிகுண்டுகளைக் கொண்டு தாக்கியும் ஒரு பக்க கோட்டைசுவரில் ஒரு விரிசலை தவிர ஏதும் ஏற்படுத்த இயலவில்லை கான்சாகிப்புக்கு. ஏறத்தாழ ஒரு மாதத்திற்கும் மேலாக முற்றுகையிட்டு தமது கூட்டணி படைகளில் 400க்கும் மேற்பட்டவர்களை இழந்து 1760 ஜனவரியில் சென்னை திரும்பிய கான்சாகிப், வீரத்தால் வீழ்த்த முடியாத பூலித்தேவரை துரோகத்தாலும் வஞ்சகத்தாலும் வீழ்த்த திட்டமிட்டான்.



துரோகிகளுக்கா பஞ்சம்! நடுவக்குறிச்சி பாளையக்காரனை கைக்குள் போட்டுக்கொண்டான். இவர்கள் பூலித்தேவரின் வீரர்களுக்குப் பணத்தாசை காட்டித் தம் கூட்டணிக்கு இழுத்தனர். மீண்டும் துரோகிகளை நம்பி கான்சாகிப் படையினர் பூலித்தேவரைத் தாக்க வந்து நெற்கடான் செவ்வலை அடுத்திருந்த ஒரு காட்டுப் பக்கமாக கூடாரங்கள் போட்டு ஒளிந்திருந்தனர். இதை அறிந்த பூலித்தேவரின் வீரர்கள் சென்று இந்த துரோக கோழைக் கும்பலைத் தாக்கலாயினர்.



பூலித்தேவரின் முக்கிய தளபதி வெண்ணிக்காலாடி என்பவர் ஆவார். இவர் தேவேந்திரகுல வெள்ளாளர் குலத்துதித்த வீரத்திலகம். கான்சாகிப் ஒரு மேட்டுப்பகுதியை கோட்டையை தாக்க ஏற்றது போல உருவாக்கிக் கொண்டிருந்தான். தளபதி வெண்ணிக்காலாடி சில நூறு வீரர்களுடன் இந்த கான்சாகிப் படையை தாக்கினார். கடும் போர் நடந்தது. அப்போது மறைந்திருந்த கும்பினிக்காரன் வெண்ணிக்காலாடியின் வயிற்றில் குத்தினான். வயிறு கிழிந்து வெண்ணிக்காலாடியின் குடல் வெளியே தொங்கியது.



வெண்ணிக்காலாடி சரிந்த தன் குடலை தம் கையால் உள்ளே தள்ளி தலைப்பாகையால் அதனை இறுகக் கட்டினார். பின்னர் பல கும்பனிக்காரர்களுக்கும் கான்சாகிப்பின் வீரர்களுக்கும் வீர சுவர்க்கத்தை அருளினார். வெற்றி முழக்கத்துடன் பகைவரைப் புறங்கண்டார். மீண்டும் தோல்வியுடன் ஓடினான் கான். வயிற்றைப் பிடித்தபடி வெற்றிச்செய்தியை பூலித்தேவருக்கு கூறிய பின்னரே அந்த மாவீரனின் ஆவி பிரிந்தது.



பின்னாளில் தமது மனைவிக்கும் குழந்தைகளுக்கும் வெள்ளையரும் ஆர்க்காட்டு நவாபும் சேர்ந்து தீ வைத்தபோது கூட கலங்காத மாவீர பூலித்தேவர், அவ்வீரத்திருமகனின் உடலை அணைத்து குமுறிக் குமுறி கண்ணீர் சிந்தினார்.



பார்துலங்க பூலிமன்னன் பேர்துலங்க -வெண்ணி

பாய்ந்தோடிச் சண்டைகள் போட்டானே

பரங்கியர் தலைகளை வெட்டியே காலாடி

பாங்காய் குவித்திட்டான் மலைபோலே…



எத்தனை பட்டாளம் வெட்டினானடா- வெண்ணியை

எதிர்க்கவும் ஒரு ஆள்கூட இல்லையடா

செங்குருதி நனைத்து பூலித்தேவன் வண்ணச்

சீர்மிகு மேனியெல்லாம் கொப்பளிக்க…



காலாடி உயிருக்கோர் காலன் வந்திட்டான்

கால் நொடியில் காற்றாய் பறந்தானே…

பழிகள் பாவங்கள் வந்ததென்றெனக்கூறி

பார்வேந்தன் பூலித்தேவன் கதறியழ … (பூலித்தேவன் சிந்து)



இது நடந்தது 1760 டிசம்பர் 20 இல்.



பூலித்தேவர் வெண்ணிக்காலாடிக்கு வீரக்கல் நட்டார். அவர் போரிட்டு வீரசுவர்க்கம் பெற்ற இடம் காலாடி மேடு என அழைக்கப்படுகிறது.

வியாழன், 14 ஜூலை, 2011

சுந்தரலிங்கம் குதித்த கிடங்கு



பாஞ்சாலங்குறிச்சியில் ஊரை விட்டு ஒதுங்கிய இடத்தில் சுற்றிலும் தென்னை மரங்கள்; பழஞ்செடிகள் அடர்ந்தபடி கிடக்கிறது, கிணறு மாதிரியான புராதனமான பகுதி. பக்கத்தில் செங்கற்கள் துருத்தியபடி இரண்டு சிதைந்த கல்லறைகள்.

மனித வெடிகுண்டுகள் இப்போது சாதாரணமாகிவிட்டாலும், இந்தியாவின் முதல் மனித வெடி குண்டாகத் தன்னைத் தானே மாய்த்துக் கொண்ட ஓரு வீரனின் வரலாறு தூசி போர்த்தியபடி கிடக்கிறது இந்த இடத்தில்.

கெவிணகிரி.

பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகில் உள்ள சின்னக் கிராமம். இங்கு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன் சுந்தரலிங்கம். தேவேந்திரகுல வேளாளர் குலத்தில் பிறந்த சுந்தரலிங்கத்தின் வீரம் அந்தக் கிராமம் தாண்டி பாஞ்சாலங்குறிச்சி அரண்மனை வரை பரவியிருந்தது. இதையடுத்து வீரபாண்டிய கட்டபொம்மனின் ஒற்றர் படைத் தளபதியானான். பிறகு அனைத்துப் படைகளுக்கும் தளபதியாக உயர்ந்தான். தானியக் கிடங்குகள், வெடிமருந்துக் கிடங்குகள் எல்லாம் அவன் வசத்தில் இருந்தன.

கட்டபொம்மன் பிரிட்டிஷ் அரசுக்கு வரி கட்டாததால் ஆங்கிலேய அரசின் நெருக்கடி அதிகரித்திருந்த நேரம். அப்போதுதான் கட்டபொம்மனைப் பல நாட்கள் அலைய வைத்து ராமநாதபுர அரண்மனையில் சந்தித்தார் ஆங்கிலேய அதிகாரியான ஜாக்சன் துரை. அந்தச் சந்திப்பே கலவரமாக மாறியது. அப்போது பாதுகாப்புக்காகச் சென்றிருந்த சுந்தரலிங்கத்தின் வாள் வீச்சில் பல வெள்ளைச் சிப்பாய்கள் உயிரிழந்தனர். ஜாக்சன் துரைக்கு நெருக்கமான லெப்டினென்ட் கிளார்க் அதில் பலியானது ஆங்கிலேயப் படைக்கு எரிச்சலை உண்டாக்கியது.

இதையடுத்து, 1799இல் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை அடியோடு தகர்க்கத் திட்டமிடப்பட்டது. வெள்ளையரின் படைகள் நெருங்கி போர் நடந்தபோது சுந்தரலிங்கம் முன்னணியில் போராடி கட்டபொம்மனுக்குப் பக்கபலமாக நின்றான்.

ஆங்கிலேயப் படை பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து சற்றுத் தூரத்திலிருந்த கரிசல் காட்டில் முகாமிட்டிருந்தது. பீரங்கிகள், ஆயுதங்கள், வெடிமருந்துகள் எல்லாம் தயாராக இருந்தன. பொருத்தமான சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தார்கள்.

அந்த நேரத்தில் தன்னுடைய முறைப்பெண்ணான வடிவுடன் சேர்ந்து ஆடு மேய்ப்பவர்களைப் போல ஆட்டு மந்தையுடன் வெள்ளையர்களின் வெடிமருந்துக் கிடங்குப் பகுதிக்குப் போனான் சுந்தரலிங்கம். படைவீரர்கள் மறித்தார்கள். தீப்பந்தத்தைக் கொளுத்தியபடி சுந்தரலிங்கமும், வடிவும் வெடிமருந்துக் கிடங்கிற்குள் பாய்ந்திருக்கிறார்கள். பலத்த வெடிச்சத்தம்; கந்தகச் சிதறலுடன் 1799 செப்டம்பர் 8ஆம் தேதி. அதற்கு மறுநாள் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை வெள்ளையர்களின் கையில் சிக்குகிறது.

சுந்தரலிங்கத்தின் இந்தத் தாக்குதலை மறுக்கிற ஆய்வாளர்களும் இருக்கிறார்கள். இருந்தாலும் நாட்டுப்புறக் கதைப் பாடல்களில் இன்றும் தவிர்க்க முடியாத பாத்திரமாகப் பதிந்து போயிருக்கிறான் சுந்தரலிங்கம். இருநூறு ஆண்டுகளைக் கடந்தும் நிற்கிறது, தன்னைத் தானே தீக்கிரையாக்கிக் கொண்ட வீரனின் விசுவாசம்.

புதன், 13 ஜூலை, 2011

தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கப்படுபவர் யார்?

1765ம் ஆண்டு வரை தமிழகத்தையும் இந்தியாவையும் மாறி மாறி ஆண்டவர்களும் கடல் கடந்து மலேசியாவை இலங்கையை பர்மாவை சிங்கப்புரை இன்னும் ஏனைய பல நாடுகளையும் தமது வாளின் வலிமையால் இணையில்லா வீரத்தால் மேன்மையுள்ள இராஜதந்திரத்தால் வென்று ஆட்சி புரிந்து எல்லையில்லாப் புகழ் படைத்து சகல பழம் பெரும் சங்கத்தமிழ் இலக்கியங்களும் போற்றிப்புகழ்பாடும் சேர சோழ பாண்டிய அரச பரம்பரையினராகிய மள்ளர் குலத்தவர்களே! மள்ளர் என்றால் உயர்குலத்தவர் எனப்பொருள்படும்.






அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும்


வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்






- என்று திவாகர நிகண்டும்.






செருமலை வீரரும் திண்ணியோரும்


மருத நில மக்களும் மள்ளர் என்ப






என்று பிங்கல நிகண்டும் பொருள் இயம்புகின்றன.






உழவர் என்பதற்கு தொல்காப்பியம் வேளாளர் எனப்பொருள் கூறுகின்றது.பின் நாட்களில் உழவுத்தொழிலில் இறங்கிய சில சாதிப்பிரிவினர்களும் குல உயர்வு கருதி தங்களையும் வேளாளர்களென அழைக்க முற்பட்ட பொழுது அரச பரம்பரையினராகிய மள்ளர் குலத்தவர் தங்களை மற்றவர்களிலிருந்து வேறுபிரித்து தாம் மேல்க்குலத்தவர் எனப்பொருள்படும்படி தம்மைத் தேவேந்திரகுல வேளாளர் என அழைத்தும் ,பிறரால்( தமிழகத்தில்)அழைக்கப்பட்டும் வருகின்றனர்.






தேவந்திரகுல வேளாளர் எனும் அரச மரபுப்பெயர் 2011 ஜனவரியிலிருந்து இலங்கைக்கு நடைமுறைக்கு வந்துவிட்டது.இலங்கை (யாழ்ப்பாண மாவட்டம் உட்பட)வாழ் மள்ளர் குலத்தவர் யாவரும் இப்பெயரையே இனிமேல் தங்களுக்குத் தரித்துக்கொள்ள வேண்டுமென்பது” உலக தேவந்திரகுல வேளாளர் பேரவை”யால் இம்மக்களை நோக்கி வைக்கப்பட்ட கட்டளையாகும்

மறுபிறவி வழங்கியவர் முதல்வர் : டில்லி சிறப்பு பிரதிநிதி அசோகன்

திருவாரூர்: தமிழக அரசு சார்பில் டில்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள அசோகன் நேற்று திருவாரூர் வந்தார். அவ ரை சுற்றுலாமாளிகையில் திருவ õரூர் கலெக்டர் முனியநாதன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து அசோகன் கூறியதாவது: அரசியல் வாழ்க்கையில் ம றுபிறவியை முதல்வர் ஜெயலலி தா எனக்கு வழங்கியுள்ளார். (தன் னை அறியாமலே கண் கலங்கினார்.) நான் எதிர்பாராத வகையில் மிகப்பெரிய பதவியை வழங்கியுள்ள முதல்வருக்கு வெறும் வார்த்தைகளால் மட்டும் எனது நன்றியை தெரிவிக்காமல் இந்த பதவிக்குரிய பணிகளை முழுமையாக செய்து தமிழகத்துக்கும், முதல்வர் ஜெயலிலதாவுக்கும் நற்பெயரையும் எடுத்து கொடுப்பேன்.







தமிழகத்துக்கு மட்டுமின்றி இம்மாவட்டத்துக்கு தேவையான வளர்ச்சி பணிகளை செய்வதிலும் எனது பணியை தொடருவேன். கடந்த ஐந்தாண்டு காலமாக பராமரிப்பு இல்லாமல் இருந்த டில்லி தமிழ்நாடு இல்லம் தற்போது முழுவதுமாக தூய்மைப்படுத்தப்பட்டு அங்குள்ள அண்ணாதுரை, திருவள்ளுவர் போன்றவர்களின் சிலைகளுக்கு தினமும் மாலை அணிவிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார். ஆர்.டி.ஓ., ஸ்ரீராமன், அ.தி. மு.க., மாவட்ட பொருளாளர் பன் னீர்செல்வம், ஹோட்டல் சங்க தலைவர் கணேசன், மெடிக்கல் சங்க தலைவர் வீரையன் உட்பட பலர் வரவேற்றனர்.



சனி, 2 ஜூலை, 2011

போர்வெல் தண்ணீர் விற்பனை : ஐகோர்ட்டில் டாக்டர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ மனு








ஓட்டப்பிடாரத்தில் போர்வெல் மூலம் குடிநீர் எடுக்கும் பிரச்னையில் தன்னையும் மனுதாராக சேர்க்கக்கோரியும்,ஐகோர்ட் விதித்த தடையை விலக்கக்கோரியும் மதுரைக் கிளையில் கிருஷ்ணசாமி எம்எல்ஏ இன்று மனுத்தாக்கல் செய்தார்.



தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் ராட்சத போர்வெல் அமைத்து தண்ணீர் எடுத்துச் சென்று அங்குள்ள தொழிற்சாலைகளுக்கு விற்கின்றன. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்பகுதிகளில் விற்பனைக்காக தண்ணீர் எடுக்க கோவில்பட்டி ஆர்டிஓ தடை விதித்தார்.



இதுதொடர்பாக புதியம்புத்தூர் சுந்தரபாண்டியன், முனியசாமி உள்பட 3 பேர் ஐகோர்ட் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர். சுந்தரபாண்டியன் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோவில்பட்டி ஆர்டிஓ உத்தரவிற்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.



இந்நிலையில் அத்தடையை விலக்கக் கோரியும், குடிநீர் பிரச்னை தொடர்பாக நிலுவையிலுள்ள அனைத்து வழக்குகளிலும் தன்னையும் இணைக்கக்கோரி ஓட்டபிடாரம் எம்எல்ஏவும், புதிய தமிழகம் கட்சி தலைவரு மான கிருஷ்ணசாமி ஐகோர்ட் மதுரைக்கிளையில் இன்று ஆஜராகி மனுத்தாக்கல் செய்தார்.



பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஓட்டபிடாரம் தொகுதி வறட்சி பகுதியாகும். நிலத் தடி நீரை நம்பியே மக்கள் உள்ளனர். தனி நபர்கள் 800 முதல் ஆயிரத்து 500 அடி ஆழத் தில் போர்வெல் அமைத்து தண்ணீர் எடுத்து விற்பனையில் ஈடுபடுகின்றனர். இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. வணிக நோக்கத்திற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரி களில் தினமும் தண்ணீர் எடுத்துச் செல்லப்படுகிறது. இதனால் குடிநீர் பஞ்சம் நிலவுவதால் ரூ.5 கொடுத்து ஒரு குடம் தண்ணீர் வாங்கி மக்கள் பயன்படுத்துகின்றனர்.



இதனை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தியதால் ஆர்டிஓ தடை விதித்தார். ஆர்டிஓ உத்தரவிற்கு கோர்ட் தடை விதித்துள்ளது. தனியார் நிறுவனங்கள் மழைநீர் சேகரிப்பு, குடிநீர் வடிகால் வாரியம், கடல்நீர் சுத்திகரிப்பு மூலம் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொள்ள வழியுள்ளது. இதை செய்யா மல் நிலத்தடி நீரை உறிஞ்சி சுற்றுச்சூழலை கெடுக்கின்றனர். மனுதாரர் சுந்தரபாண்டியன் இலவச மின் இணைப்பை பயன்படுத்தி தண்ணீரை உறிஞ்சி வியாபாரம் செய்கிறார்.



ஆர்டிஓ உத்தரவிற்கு விதித்துள்ள தடையை ஐகோர்ட் விலக்கிக் கொள்ள வேண்டும். என்னையும் இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்த்து விசாரிக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் கருங்குளம், ஓட்டப்பிடாரம் பகுதிகள் கடும் வறட்சி பகுதிகளாகும். இங்கு குடிநீரின்றி மக்கள் அவதியடைந்துள்ளனர். ஐகோர்ட் தடை விதித்தபிறகு 2 ஆயிரம் லாரிகளில் தண்ணீர் எடுத்துச் சென்றதால் குடிநீர் ஆதாரம் மேலும் பாதிக்கும் வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.



தடையை விலக்கவும், தன்னையும் சேர்க்கக்கோரி நீங்கள் மனுதாக்கல் செய்யலாம். எல்லா மனுக்களும் நாளை மறுநாள் (ஜூலை 1) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். நீங்கள் நேரில் ஆஜராகி உங்கள் வாதத்தை தெரிவிக்கலாம் என நீதிபதி ராஜேந்திரன் கூறினார்.நிலக்கோட்டை எம்எல்ஏ ராமசாமி, புதிய தமிழகம் மாநில இளைஞரணி செயலாளர் பாஸ்கர் மதுரம், வக்கீல் வைகுந்த் ஆகியோர்உடனிருந்தனர்