ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 28 ஜூன், 2015

உஞ்சனை போராளிகளுக்கு புதிய தமிழகத்தின் வீர வணக்கம்

சிவகங்கை, ஜூன் 28-சிவகங்கை மாவட்டம் உஞ்சனை கிராமத்தில், உரிமைகளுக்காக உயிர் நீத்த தியாகிகளின் நினைவிடத்தில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் மரியாதை செலுத்தப் பட்டது.
சிவகங்கை மாவட்டம் உஞ்சனையில் உள்ள கழனி பெரிய அய்யனார் கோவிலில், ஆதிக்கசாதியினர் மட்டுமே புரவியெடுப்பு விழாவை நடத்துவது வழக்கமாக இருந்தது. 1960களில், பறையடித்தல், கோவிலை சுத்தம் செய்தல் போன்றஇலவச உழைப்பு மற்றும் இழி தொழில்களை செய்ய தாழ்த்தப்பட்ட மக்கள் மறுத்தனர். அவர்கள் மீது ஆதிக்க சாதிய சக்திகள் தாக்குதல் நடத்தினர். அதையடுத்து, 13 ஆண்டுகள் புரவி யெடுப்பு விழா நடக்கவில்லை.
மாவட்ட நிர்வாகம் தலையிட்ட பிறகு, 1979ஆம் ஆண்டு இரு தரப்பி னரும் தனித்தனியாக திருவிழா நடத்த முடிவாகியது. முதலில் ஆதிக்க சாதியினர் விழாவை நடத் தினர்.
அடுத்ததாக, தாழ்த்தப்பட்ட மக்கள் திருவிழா நடத்துவதற்கான ஏற்பாடு களை செய்தபோது ஆதிக்க சாதியசக்திகள் இடையூறுகள் செய்தனர். ஜூன் 28ஆம் தேதியன்று, பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களை தாக்கினர். தேவேந்திர குல   சமுகத் தைச் சேர்ந்த பெண்கள் உட்பட 27 பேர்படுகாயம் அடைந்தனர்.
செ.தேரடியான், அ.குழந்தையன், வெ.வீராச் சாமி, கழ.பெரியய்யா, சாத்தையா ஆகிய 5 பேர் உயிரிழந்தனர். உஞ்சனை நாட்டிற்குள் தான் சர்ச்சைக்குரிய கண்டதேவியும் உள் ளது. கோவில் திருவிழாவை நடத்து வதற்கு தங்களுக்கும் உரிமை உண்டு என்று போராடி உயிர் நீத்த ஐந்து தியாகிகளுக்கும் நினைவிடம் எழுப்பி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 28ஆம் தேதியை எழுச்சி நாளாக உஞ்சனை தேவேந்திர குல   மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

சனி, 20 ஜூன், 2015

பள்ளர்களே பாண்டியர்கள் என்பதற்கு ஆதாரங்கள்....

"கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்கள் அடையாளம் தெரியாமல் மறந்து விட்டனர். நாயக்க மன்னர்களும் இப்பகுதியின் ஆட்சியைக் கைப்பற்றவில்லை. அடுத்திருந்த திருவிதாங்கூர் மன்னர்கள் திருநெல்வேலிச் சீமையின் தென்பகுதியை ஆண்டனர். இதற்கான ஆவணம் திருச்செந்தோர்க் கோயிலில் உள்ளது" எனக் குறிப்பிடுகிறார் கால்டுவெல். (பேராசிரியர் ந.கல்யாண சுந்தரம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு, ப.8 )
ஆனால் பாண்டிய மன்னர்களும், அவர் தம் வழி வந்த மரபினரும், மரபினரும் திட்டமிட்டு அடையாளம் தெரியாமல் ஆக்கப் பட்டுள்ளனர். திருச்செந்தூர்க் கோயிலின் மேற்க்குக் கோபுர வாயில் அடைக்கப்பதர்க்கான காரண காரியங்களை ஆய்ந்து ஆராய்வோமானால் பாண்டிய மரபினரை எளிதாக் கண்டறிய முடியும்.
திருச்செந்தூர்க் கோயிலுக்கு நேரடி உறவும், உரிமையும் உள்ள ஊர் 'திருச்செந்தூர்பட்டி'. இவ்வூர் திருவைகுண்டம் வட்டம், ஆழ்வார்கற்குளம் ஊராட்சிக்கு உட்பட்டதாகும். இவ்வூர் 'திருச்செந்தூர்ப் பச்சேரி' எனவும் வழங்கப்படுகிறது. பொருநை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள பள்ளர்கள் மட்டுமே வாழக்கூடிய இச்சிற்றூர் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஊராகும். வயல் சூழ்ந்த இவ்வூரைச் சுற்றி 35 கோட்டை விதைப்பாடு நிலம் உள்ளது. கோயில் தோன்றிய காலந்தொட்டு பன்னெடுங்காலமாக 'நாள் பூசை' செய்வதற்குப் பல்வேறு ஊர்களில் இருந்து பள்ளர் குல மக்கள் பொருநை ஆற்றில் புனித நீராடி, நெல் குத்தி அரிசி கொண்டு சென்றுள்ளனர். இவ்வரிசியின் மதிப்பு '3 1 /2 கோட்டை' எனக் கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 1947 க்கு முன் திருச்செந்தூர்ப் பட்டியிலிருந்து திருச்செந்தூர்க் கோயிலுக்கு 'நாட்கதிர்' கொண்டு செல்லும் மரபு இருந்துள்ளது. 'நாட்கதிர்' கொண்டு செல்லத் திருச்செந்தூரில் இருந்து கோயில் யானை திருச்செந்தூற்பட்டிக்கு வந்து 'நாட்கதிரை' எடுத்துக் கொண்டு சென்று நான்கு வீதிகளில் வளம் வந்து மேற்கு வாயில் வழியாகக் கருவறைக்குள் சென்று நாட்கதிரைக் கசக்கி அதனை அரிசியாக்கி அதில் ஒரு கைப்பிடி அரிசியை எடுத்துக் கோயிலில் உள்ள அரிசியோடு போட்டுப் பொங்கல் வைப்பார். யானையுடன் நாட்கதிரைக் கொண்டு செல்லக் கூடிய பள்ளர்களின் செலவுத் தொகையைக் கோயில் குடும்புவே ஏற்றுக் கொள்ளும். தமிழ்க் கடவுள் முருகனுக்குப் படைத்த அப்பம், தேங்காய், பழம் ஆகிய பண்டங்களைக் கோயிலுக்குச் சென்றவர்கள் பெற்றுக் கொண்டு வந்து திருச்செந்தூர்பட்டியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் முறைப்படி வழங்குவர். பிற்காலங்களில் சீட்டுக் குலுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட இருவர் 'நாட்கதிரைக்' கொண்டு சென்று கோயிலின் மேற்கு வாயில் வழியாக மண்டபத்தில் வைத்து, அதனை அரிசியாக்கிப் பொங்கலிடுவர். இதற்காகக் கோயில் குடும்பில் இருந்து ரூபாய் 500 செலவுத் தொகையாகக் கொடுக்கப்பட்டு வந்தது. ஒரு முறை சீட்டுக் குலுக்கலில் தேர்ந்தெடுக்கப் பட்ட விவரமறியாத இருவர் நாட்கதிர் கொண்டு செல்ல அங்கே மேலாண்மை செய்ய வந்த வெள்ளையர்கள் நாட்கதிர் கொண்டு சென்ற பள்ளர்களைப் பற்றி கேட்டபோது கோயிலில் ஆதிக்கம் செலுத்தி வந்த வந்தேறி ஆரியப் பிராமணர்கள், "கோயிலுக்கும், பள்ளர்களுக்கும் இனி எந்த உறவும், வரவும் இல்லை" என ஏமாற்றிக் கையொப்பம் வாங்கிக் கொண்டு, 500 ரூபாயும், அப்பமும், தேங்காய், பலமும் கொடுக்காமல் அனுப்பி விட்டனர். அத்தோடு கோயில் குடும்பிற்க்கும், பள்ளர்களுக்குமான நிருவாக உறவுகள் நிறைவுற்றது.
பின்னாளில் பள்ளர் குளத்தில் பிறந்த ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சாத்தூர், சின்ன ஓடைப்பட்டியைச் சேர்ந்த கோ.சங்கிலி என்பவர் திருச்செந்தூர் கோயிலின் அறங்காவல் குழுவில் இருந்தார். அதன் பின்னர் கோயில் நிர்வாகத்திற்கும், பள்ளர்களுக்குமான உறவுகள் முற்றிலும் அறுந்துப் போய் விட்டது. இருப்பினும் வரலாற்றுத் தொடர்புகள் சில உரிமைகளை நிலை நாட்டிக் கொண்டு இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை முருகனுக்குப் பிடிக்கப்படும் வெண்கொற்றக் குடையும், இரண்டு சேவல் கொடியும் திருச்ன்சென்தூர்க் கோயிலில் இருந்து தெருச்செந்தூர் பட்டிக்கு கொடுத்து விடப்படும். அவ்வாறு இறுதியாகக் கொடுத்து விடப்பட்ட வெண்கொற்றக் குடையிலுள்ள வெண்கல கலசமும், இரண்டு சேவை கொடியும் திருச்செந்தூர் பட்டியிலுள்ள அம்மன் கோயிலில் தான் இன்றும் உள்ளது. உடையார் குளம், வடக்குக் காரசேரி, ஒனாகுளம், சிங்கத்தாங்குறிச்சி, ஆலந்தா, வல்லநாடு, நாணல்காடு, முத்தாலங்குறிச்சி, முறப்பநாடு, படுகையூர், காசிலிங்காபுரம், அனைவரதநல்லூர் ஆகிய ஊர்களில் இருந்து பள்ளர்கள் காவடி கட்டித் திருச்செந்தூர்பட்டியில் ஒன்று கூடி அங்கிருந்து திருச்செந்தூர் சென்று மேற்கு வாயில் வழியாகச் சென்று முருகனை வழிபட்டு வந்தனர். அதன் பின்னர்தான் மேற்கு வாயில் அடைக்கப் பட்டது.
"பழம்பெரும் கோயில்களின் மேற்கு வாயில்,பாண்டிய மன்னர்களும் அவர் தம் மரபினரும் வருகின்ற வழியாதலால் பாண்டியர் ஆட்சி முடிவுக்கு வந்த போது கோயில்களின் மேற்கு வாயில்கள் மூடப் பட்டன. அதிகாரத்தை இழந்ததால் பாண்டிய மரபினரான பள்ளர்களுக்கும் கோயில் நுழைவு மறுக்கப் பட்டது" என்ற வரலாற்று அறிஞர் இரா.தேவ ஆசீர்வாதத்தின் கூற்று முற்றிலும் உண்மை என்பது இக்கோயில் வரலாற்றால் உறுதி செய்யப் படுகிறது.
திருச்செந்தூர்க் கோயிலின் மேலக் கோபுர வாயிலும் பாண்டியர் ஆட்சி முடிவுக்கு வந்தபோது இழுத்து மூடப் பட்டுள்ளது. மேற்கு வாயில் பகுதியில் உள்ள தூண்களில் குடும்பன் பெயர் தாங்கிய பல கல்வெட்டுப் பொறிப்புகள் காணப்படுகின்றன. மேலக் கோபுர வாயிலில் அமைந்துள்ள தெருவிக்குக் கோட்டைத் தெரு என்று பெயர். இத்தெருவில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்குப் பாத்தியப் பட்ட பத்து பழம் பெரும் மடங்கள் அமைந்துள்ளன. திருச்செந்தூர்ப் பகுதியைச் சுற்றியுள்ள பள்ளர் குலத்தாரின் கிளைப் பிரிவினர் ஒவ்வொருவருக்கும் ஒரு மடம் என்ற கணக்கில் பத்து பெருமடங்கள் உள்ளன. கோயிலின் மேற்கு வாயிலிலிருந்து கோட்டைத் தெரு வழியாக வரும் போது முதலாவதாக 'அஞஞாப் பள்ளர்' மேடம் உள்ளது. அதன் கீழ்ப்புறம் 'வாதிரியப் பள்ளர்' மடமும், 'சோழியப் பள்ளர்' மடமும் சேர்ந்தார்ப் போல் உள்ளது. அதன் கீழ்ப்புறம் 'வங்கப்பள்ளர்' மடம் உள்ளது. அடுத்ததாக 'அளத்துப் பள்ளர்' மடமும், அதன் கீழ்ப்புறம் 'கொற்கை நாட்டார்( பள்ளர்)' மடமும் உள்ளது. அதற்க்கடுத்ததாகப் 'பருத்தி கோட்டை நாட்டார் (பள்ளர்)' மடமும், 'சீவந்திவள நாட்டார் (பள்ளர்)' மடமும், 'வீரவள நாட்டார் (பள்ளர்)' மடமும் உள்ளன. ஒவ்வொரு மடமும் அரைக்குறுக்கத்திற்கு மேல் பரப்புக் கொண்டதாகச் சுற்றுசுவர் கட்டப் பட்டுள்ளது. இவற்றில் ஐந்து மடங்கள் பயன்பாட்டிலும், நான்கு மடங்கள் பாழடைந்த நிலையிலும் இருக்கின்றன. வீரவள நாட்டுப் பள்ளர் மடத்திற்கு வடபுறம் அருகே இருந்த ஒரு பள்ளர் மடம் மற்றவர்களுக்கு விற்கப் பட்டு மடம் இருந்த சுவடு தெரியாமல் அவ்விடம் வீடுகளாகிப் போயின.நன்றிVeera Vala Naattar Balan.

வெள்ளி, 19 ஜூன், 2015

பள்ளர்களே பாண்டியர்கள் என்பதற்கு ஆதாரங்கள்....


1.சங்கரன் கோவில்-கரிவலம் வந்த நல்லூர் கல்வெட்டு.
2.கேரள சாதிப்பட்டியல்
3.நிலப்பதிவு பத்திர ஆவணங்களில் பாண்டியர் குலம் பதிவு
4.மதுரை தளப்புராணம்- சிவனை பரி மளளர் எனச்சொல்வது
5.மதுரை தெப்பத்திருவிழாவில் அனுப்பானடி குடும்பருக்கு முதல்மரியாதை
6.மீனாட்சியின் நாற்று நடவு (செய்ய பள்ளர் வயலுக்கு வருவது) திருவிழா
7.பாண்டியர்களின் வெண்குடை திருவிழா
8.திருப்பரங்குன்றம்-தேவேந்திர குல வேளாளர் மடத்திற்கு பாண்டிய வேந்தன் முருகன் மறுவீடு வருதல்
9.பழனி-பள்ளர் மடத்திற்கு முருகன் தெயவானை மறுவீடு வருதல்
10.மதுரையில் மீனாட்சி அம்மனுக்கு பள்ளர் மடத்திலிருநது பச்சைப்பட்டு கொடுத்தல்
11.மீனாட்சி அம்மன் கோவில் முதல்மரியாதை
12.சஙகரன்கோவில் குடும்பருக்கு முதல்மரியாதை
13.சிவன் பாண்டியர் பள்ளராக மாறி நாற்று நடவு செய்யும் கோவை நாற்று நடவு திருவிழா
14.மருநிலத்தின் தலைவனே வேந்தர்கள் தான் என தொல்காப்பியம் சொல்வது
15.முற்கால பாண்டிய வேந்தனான சிவனை பள்ளர்கள் தங்களது சமாதியில் நிறுவுவது
16.திருச்செந்தூர்-முருகன் கோவிலின் கல்வெட்டு மற்றும் பழமையான மண்டபங்கள்
17.நிலப்பதிவு ஆவணங்களில் இந்திர குலம் பதிவு
18.மூவேந்தர்களின் கொடியாக தொல்காப்பியம் கூறும் வெணகொடி திருவிழா
19.தொல்லியல் துறையால் ஒப்புக்கொளளப்படட கோவலன் பொடடல் எனும் பாண்டியர் இடுகாடு
20. முருகனை மள்ளன் எனக்கூறும் திருமுருகாற்றுப்படை
21.பாண்டியர் என்ற சொல்லின் வேர்ச்சொல் பளளர்-எனக்கூறிய பாவாணரின் வரிகள்....

செவ்வாய், 16 ஜூன், 2015

லலித் மோடி விவகாரம்: சுஷ்மா பதவி விலக டாக்டர்.கிருஷ்ணசாமி வலியுறுத்தல்!


கோவை: இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக தப்பிய லலித் மோடிக்கு உதவி செய்ததற்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உடனடியாக பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால் பிரதமர் மோடி பதவி நீக்கம் செய்ய வேண்டும்  என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். 

கோவையில் புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தமிழகத்தின் அண்டை மாநிலங்களால் ஏற்படும் பிரச்னைகள், மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் என தமிழகத்தை சுற்றி பலமுனைகளில் பிரச்னைகள் அதிகரித்து வருகிறது. 

இதுபோன்ற சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழக மக்களின் நலனுக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம். தமிழக மக்களின் பிரச்னைகளுக்கு ஒருங்கிணைந்து குரல் கொடுக்கவே அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறேன். கூட்டணிக்காகதான் அரசியல் கட்சி தலைவர்களை சந்திப்பதாக வெளிவரும் தகவல்கள் தவறானது. 

ஆவினில் முழுமையாக பால் கொள்முதல் செய்யாமல் இருப்பதன் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்படு கிறார்கள். ஒரு வார காலத்தில் ஆவின் நிறுவனம் மூலம் முழுமையாக பாலை கொள்முதல் செய்யாவிட் டால் ஆவின் நிறுவனத்துக்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். 

ஐ.பி.எல் விவகாரத்தில் இந்திய அரசை ஏமாற்றி சட்டவிரோதமாக தப்பிய லலித் மோடிக்கு , மத்திய அமைச்சர்  சுஷ்மா ஸ்வராஜ் உதவியது கண்டிக்கத்தக்கது. இதற்கு பொறுப்பேற்று சுஷ்மா  உடனடியாக பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால் பிரதமர் மோடி சுஷ்மாவை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். 

யோகாசனம் என்பது இந்திய மக்களுக்கான கலை என்பதை விட்டு, அதற்கு மதச்சாயம் பூசப்படுகிறது.இதனால் அந்த கலை பாரம்பரிய மகத்துவத்தையும், முக்கியத்துவத்தையும் இழந்து விடும். எனவே பாரதிய ஜனதாவும், அதன் துணை அமைப்புகளும் யோகாசனத்தை குறிப்பிட்ட மதத்திற்குட்பட்டது என பிரதிநிதித்துவம் காட்ட முயற்சிக்கக்கூடாது. 

மேகதாது அணை பிரச்னை, முல்லை பெரியாறு அணை பிரச்னை, பாலாறு பிரச்னை, மீனவர் பிரச்னை என அனைத்து பிரச்னைகளிலும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும். இதற்காக வாய்ப்பு கிடைத்தால் தமிழக முதல்வரையும் சந்தித்து வலியுறுத்துவேன்” என்றார். 

‘ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சிக்கான அரசியல் நிலை இங்கு இல்லை’: புதிய தமிழகம் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி வருத்தம்...


 

கிருஷ்ணசாமி | கோப்புப் படம்

`மத்தியிலும், மாநிலத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களின் சமநிலை வளர்ச் சிக்கான அரசியல் நிலையோ, நிரந் தரத் தீர்வு காணக்கூடிய திட்டங் களோ இல்லை’ என்று புதிய தமிழகம் நிறுவனர் டாக்டர் க. கிருஷ்ணசாமி தெரிவித்தார். `தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி?
தற்போதும், 2016 சட்டப் பேரவைத் தேர்தலிலும் திமுகவுடன் தான் கூட்டணி.
பாமக அன்புமணியை முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்துள்ளதே? அது போல உங்கள் கட்சியில்...?
ஜனநாயகத்தை பல்வேறு கட்சி கள் கோமாளித்தனம் ஆக்குகின்றன. அதில் இதுவும் ஒன்று. நாங்கள் மக்கள் பரிகாசத்துக்கு ஆளாக மாட்டோம்.
முதல்வர் வேட்பாளர் என்று அறி விக்கும் அளவுக்கு, தலித் கட்சித் தலைவர்களை, தமிழகத்தில் உள்ள அனைத்து தலித் மக்களும் இன்னமும் ஏற்காததற்கு என்ன காரணம்?
இங்குள்ள சூழல்தான். உலகம் முழுவதும் விளிம்பு நிலை மக்களை உள்ளடக்கியதான அரசியல்தான் நடக்கிறது. அதில் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, பொருளாதார மேம்பாடு உள்ளடக்கியதாகவே உள்ளது. ஆனால் மத்தியிலும், மாநிலத்திலும் அரசியல் நிலை என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் சமநிலை வளர்ச்சிக்கானதாக இல்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர தீர்வு காணக்கூடிய திட்டங்களும் இங்கு இல்லை.
உங்களுக்கான தளம் தென்காசி மட்டும்தானா? அங்கு மட்டுமே போட்டியிடுகிறீர்கள், வெல்கிறீர்கள்?
அப்படியில்லை. ஒரு தளத்தை அவ்வளவு சுலபமாக இங்கே உருவாக்கிக் கொள்ள முடியாது. உருவான தளத்தை தக்க வைப்பதும், அது தோல்வியில் முடியும்போது, அதிலுள்ள குறைகளைக் களைவதும் அரசியலில் மிக முக்கியமானது. அதை புதிய தமிழகம் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.
விரல்விட்டு எண்ணக்கூடிய தலித் தலைவர்களே இயக்கரீதியாக வெற்றியடைந்துள்ளார்கள். ஆனால் ஆதிக்க சமூக கட்சிகள் சமீப காலமாக பெருகி வருகின்றனவே?
இதை ஓர் அபாயகரமான போக்காகவே பார்க்கிறோம். ஜாதீயக் கட்சிகள் பெருகுவதன் பிரதிபலிப்புகளில் ஒன்றுதான் இன்றைக்கு ஐஐடியில் பெரியாருடைய பெயரே கூடாது என்பது. ஒட்டுமொத்த சமூக வளர்ச்சிக்கும், மாற்றத்துக்கும் துணைபுரியாத எந்த ஒரு கட்சியும், இயக்கமும், தனிநபரின் குழுவும் எளிதில் பட்டுப்போய்விடும்.
உங்கள் கட்சிக்கான ஓட்டு வங்கி எவ்வளவு... சொல்ல முடியுமா?
பணப் பட்டுவாடா செய்யாமல், விளம்பரங்கள் செய்யாமல், அவர்களுக்கென திரும்பின பக்கமெல்லாம் ஊடக ஆதரவு இல்லாமல் மற்ற கட்சிகள் இயங்குமானால் எங்களால் தமிழகத்தில் 10 சதவீத வாக்குகளை பெறமுடியும்.

சனி, 13 ஜூன், 2015

தமிழர் நலனுக்காக விஜயகாந்த்தை சந்தித்தார் டாக்டர் கிருஷ்ணசாமி!

 Image result for தமிழர் நலனுக்காக விஜயகாந்த்தை சந்தித்தாராம் டாக்டர் கிருஷ்ணசாமிதேமுதிக தலைவர் விஜயகாந்த்தை, தமிழர் நலன் தொடர்பாக சந்தித்துப் பேசினேன். அரசியல் தொடர்பாக சந்திக்கவில்லை என்று கூறியுள்ளார் புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. தமிழகத்தில் இது தலைவர்கள் சந்தித்துக் கொள்ளும் காலமாக உள்ளது. யாராவது யாரையாவது தினசரி சந்திப்பதை வழக்கமாக்கி வருகின்றனர். இதை ஆரம்பித்து வைத்தவர் விஜயகாந்த். திமுக தலைவர் கருணாநிதி உள்பட பல தலைவர்களை காலை முதல் மாலை வரை நேரில் போய்ப் பார்த்து பரபரப்பை ஏற்படுத்தினார். அடுத்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது தம்பி மகன் கல்யாண அழைப்பிதழைக் கொடுக்க தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளன் தனது கட்சியின் கூட்டம் ஒன்றுக்காக பல தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை டாக்டர் கிருஷ்ணசாமி இன்று சந்தித்துப் பேசினார். கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைத்து இந்த சந்திப்பு நடந்தது. ஒரு மணி நேரம் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் வெளியே வந்த டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழர் நலன் காக்க, உரிமைகளை மீட்டெடுக்க ஒருமித்த கருத்துக்களை உருவாக்க கடந்த 2 மாத காலமாக பல அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறேன். திமுக தலைவர் கருணாநிதி, ஜி.கே.வாசன், வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து விட்டேன். இன்று தேமுதிக தலைவரை சந்தித்துள்ளேன். அவரோடு பல்வேறு விஷயங்கள் பேசினேன். அவரும் உற்சாகமாக பேசினார். முல்லைப் பெரியாறு பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் முக்கிய பிரச்சனைகள் பற்றி பேசினேன். வருகிற அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் புதிய தமிழகம் கட்சியின் 6 வது மாநில மாநாடு நடக்க இருக்கிறது. அதில் சிறப்பு விருந்தினராக விஜயகாந்தை கலந்து கொள்ளும்படி அழைத்தேன். அது குறித்து பின்னர் தெரிவிப்பதாக கூறினார். ஈழத் தமிழர் பிரச்சனை, காவிரி பிரச்சனை, முல்லைப் பெரியாறு பிரச்சனைகளில் அனைத்து கட்சிகளும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றன. இவர்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டும். அவ்வாறு செயல்பட்டால்தான் கட்சிகளுக்கு இடையேயான இறுக்கங்கள் குறையும். முதல் முறை அனைவரையும் சந்தித்து விட்டேன். தேவைப்பட்டால் மீண்டும் அனைவரையும் சந்திப்பேன். இது தமிழர் நலன் காக்க நடத்தப்படும் பேச்சுவார்த்தை தேர்தல் கூட்டணி குறித்து அல்ல. முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கவும் நிச்சயம் நேரம் கேட்பேன். நேரம் ஒதுக்கினால் அவரையும் சந்திப்பேன் என்றார் டாக்டர் கிருஷ்ணசாமி.

விஜயகாந்த்துடன், டாக்டர் கிருஷ்ணசாமி சந்திப்பு!

விஜயகாந்த்துடன், டாக்டர் கிருஷ்ணசாமி சந்திப்பு!
சென்னை: புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, இன்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை சந்தித்து பேசினார்.

காவிரி, முல்லை பெரியாறு மற்றும் மீனவர் பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர்களை, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

அதன்படி இன்று கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த்தை, கிருஷ்ணசாமி சந்தித்துப் பேசினார். இந்த பேச்சுவார்த்தை சுமார் 1 மணி நேரம் நடந்தது.

இதன் பின்னர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், ''காவிரி, முல்லைப் பெரியாறு, தமிழக மீனவர் உள்ளிட்ட தமிழர்களின் பிரச்னை சம்பந்தமாக அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து பேசி வருகிறேன். அதன்படி, தி.மு.க. தலைவர் கருணாநிதி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டவர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளேன்.

அதன்படி, இன்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை சந்தித்துப் பேசினேன். அப்போது, முல்லைப் பெரியாறு, தமிழக மீனவர்கள் பிரச்னை, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் முக்கிய பிரச்சனைகள் பற்றி பேச்சு வார்த்தை நடத்தினோம். மேலும், வருகிற அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் புதிய தமிழகம் கட்சியின் 6வது மாநில மாநாடு நடக்கவிருக்கிறது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறும் விஜயகாந்த்துக்கு அழைப்பு விடுத்தேன். அது குறித்து பின்னர் தெரிவிப்பதாக அவர் கூறினார்.

காவிரி, முல்லைப் பெரியாறு, ஈழத்தமிழர் உள்ளிட்ட பிரச்னைகளில் அனைத்து கட்சிகளும் தனித்தனியாக செயல்பட்டு வருகிறது. இவர்களை ஒருங்கிணைத்து செயல்பட்டால், கட்சிகளுக்கு இடையே உள்ள இறுக்கங்கள் குறையும்.

தற்போது, பல தலைவர்களை முதல் முறை சந்தித்து இருக்கிறேன். தேவைப்பட்டால் மீண்டும் அனைவரையும் சந்தித்துப் பேசுவேன். அதேபோல், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கவும் நேரம் கேட்பேன். நேரம் ஒதுக்கப்பட்டால் அவரையும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துவேன்'' என்றார்.

ஜெயலலிதாவை சந்திக்கவும் நேரம் கேட்பேன்: விஜயகாந்தை சந்தித்த பின்பு டாக்டர் கிருஷ்ணசாமி தகவல்

தலைவர் விஜயகாந்தை, புதிய தமிழகம் கட்சித் தலைவர்  டாக்டர்  கிருஷ்ணசாமி திடீரென இன்று சந்தித்து பேசினார்.
 
சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் வரை நடைபெற்றுள்ளது.
 
அப்போது ஆர்.கே.நகர் இடைத் தேர்தல், விரைவில், தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல், எதிர்கால கூட்டணி போன்ற பல அம்சங்கள் பேசப்பட்டதாக தெரிய வருகின்றது.
 
இந்த சந்திப்பு குறித்து, டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
தமிழர்கள் நலன் காக்கவும், உரிமைகளை மீட்டெடுக்கவும் ஒருமித்த கருத்துக்களை உருவாக்கும் முயற்சியில் நான், கடந்த இரண்டு மாத காலமாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறேன்.
 
அந்த வகையில், திமுக தலைவர் கருணாநிதி, ஜி.கே.வாசன், வைகோ, ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்தேன். அது போலவே, தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்தேன்.
 
இவர்களை எல்லாம் சந்தித்தது போலவே, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்கவும் நேரம் கேட்பேன். அவர் நேரம் ஒதுக்கி தந்தால், அவரையும் நிச்சயம்  சந்திப்பேன் என்றார்.

விஜயகாந்துடன் டாக்டர் கிருஷ்ணசாமி சந்திப்பு...

விஜயகாந்துடன் டாக்டர் கிருஷ்ணசாமி சந்திப்புபுதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று சந்தித்து பேசினார்.
காவிரி பிரச்சனை, முல்லைப் பெரியாறு பிரச்சனை போன்ற விஷயங்களில் தமிழர்களின் குரல் ஒன்றுபட்டு ஒலிக்க தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் டாக்டர் கிருஷ்ணசாமி ஈடுபட்டுள்ளார்.
இதற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் உள்பட அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் விஜயகாந்தை இன்று சந்தித்தார்.
காலை 11 மணிக்கு கிருஷ்ணசாமி தே.மு.தி.க. அலுவலகத்துக்கு வந்தார். இருவரும் சுமார் ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.
சந்திப்பு முடிந்து வெளியே வந்த டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழர் நலன் காக்க, உரிமைகளை மீட்டெடுக்க ஒருமித்த கருத்துக்களை உருவாக்க கடந்த 2 மாத காலமாக பல அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறேன். குறிப்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஜி.கே.வாசன், வைகோ, கம்யூனிஸ்டு ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து விட்டேன். இன்று தே.மு.தி.க. தலைவரை சந்தித்துள்ளேன். அவரோடு பல்வேறு விஷயங்கள் பேசினேன். அவரும் உற்சாகமாக பேசினார்.
முல்லைப் பெரியாறு பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் முக்கிய பிரச்சனைகள் பற்றி பேசினேன். வருகிற அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் புதிய தமிழகம் கட்சியின் 6–வது மாநில மாநாடு நடக்க இருக்கிறது. அதில் சிறப்பு விருந்தினராக விஜயகாந்தை கலந்து கொள்ளும்படி அழைத்தேன். அது குறித்து பின்னர் தெரிவிப்பதாக கூறினார்.
ஈழத்தமிழர் பிரச்சனை, காவிரி பிரச்சனை, முல்லைப் பெரியாறு பிரச்சனைகளில் அனைத்து கட்சிகளும் தனித்தனியாக செயல்பட்டு வருகிறது. இவர்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டும். அவ்வாறு செயல்பட்டால்தான் கட்சிகளுக்கு இடையேயான இறுக்கங்கள் குறையும். முதல் முறை அனைவரையும் சந்தித்து விட்டேன். தேவைப்பட்டால் மீண்டும் அனைவரையும் சந்திப்பேன்.
இது தமிழர் நலன் காக்க நடத்தப்படும் பேச்சுவார்த்தை தேர்தல் கூட்டணி குறித்து அல்ல.
முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை சந்திப்பீர்களா? என்கிறீர்கள். நிச்சயமாக அவரையும் சந்திக்க நேரம் கேட்பேன். நேரம் ஒதுக்கினால் சந்தித்து பேசுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

செவ்வாய், 9 ஜூன், 2015

அம்பேத்கார் பெரியார் வாசகர் வட்ட தடை நீக்கம் வரவேற்கத்தக்கது:டாக்டர் . கிருஷ்ணசாமி பேட்டி

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
அம்பேத்கார் பெரியார் வாசகர் வட்டத்திற்கான தடை ரத்து செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது. மாணவர்கள் அந்த இருவரின் வாழ்வு முறைகளை தெரிந்துகொள்ள வேண்டும். அது அரசியல் வாசகர் வட்டமாக அல்லாமல் சமூக வாசகர் வட்டமாக இருக்க வேண்டும். அம்பேத்கார் பெரியார் வாசக வட்டங்களை கல்லூரிகளில் மட்டுமல்லாமல், சமூக வட்டத்திலும் கொண்டு வருவதற்கு புதிய தமிழகம் முடிவு செய்துள்ளது. இன்னும் ஓராண்டில் 100 வாசகர் வட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் கொண்டுவர இருக்கிறோம்.
கட்சியின் 17–ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி 6–வது மாநில மாநாடு நடத்த உள்ளோம். இதில் தேசிய தலைவர்கள், சர்வதேச தலைவர்கள்,பங்கேற்க உள்ளனர். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு பல்வேறு பணி நியமனத்தில் மோசடி நடைபெற்றுள்ளது. தற்போது நடைபெற்ற பள்ளிக்கூட ஆய்வக உதவியாளர் எழுத்துத்தேர்வில் வெளிப்படை தன்மை இல்லாமல் இருந்தால் நாங்கள் நீதிமன்றம் செல்வோம். தமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. கூலிப்படைகளுக்கு அரசியல்வாதிகள் பின்புலம் இருப்பதால் பல கொலை–கொள்ளைகள் நடக்கின்றன. 
வருங்காலத்தில் இது பெரும் பிரச்சனையாக இருக்கும். இந்த கலாசாரத்திற்கு போலீசார் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் புகார் செய்யப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் பதவிக்காலத்திலேயே இது நடந்திருப்பதால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

பெரியார் - அம்பேத்கர் பெயரில் 100 வாசகர் வட்டங்கள் தொடக்கம்: டாக்டர் கே.கிருஷ்ணசாமி தகவல்..

தமிழகம் முழுவதும் ஓர் ஆண்டில் பெரியார்-அம்பேத்கர் வாசகர் வட்டங்கள் தொடங்கப்படும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
மதுரையில் அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை ஐஐடியில் பெரியார் - அம்பேத்கர் வாசகர் வட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதை புதிய தமிழகம் கட்சி வரவேற்கிறது. மாணவர்கள் பெரியார்-அம்பேத்கர் வாசகர் வட்டங்கள் அமைக்கும்போது, அந்த இரு தலைவர்களின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். அதுபோன்ற வாசகர் வட்டங்களை அரசியல் ஆக்காமல் சமூக கண்ணோட்டத்துடன் செயல்பட வேண்டும்.
பள்ளி, கல்லூரிகளில் மாணவர் மத்தியில் ஜாதி வேறுபாடுகள் மேலோங்கியுள்ளன. இந்த வேறுபாடுகளைக் களைந்து நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வாசகர் வட்டங்கள் அமைய வேண்டும். கல்லூரிகள் மட்டுமின்றி சமுதாய தளத்திலும் வாசகர் வட்டங்களை ஏற்படுத்த வேண்டும். இதற்காக ஓர் ஆண்டில் மாநிலம் முழுவதும் 100 அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டங்கள் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த வாசகர் வட்டங்கள் மூலம் மக்கள் மனம்விட்டு பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும்.
தூத்துக்குடி, நெல்லை, தருமபுரி மாவட்டங்களில் ஆதி திராவிடர்களுக்கு எதிரான வன்முறை, கொலைகள் அதிகளவில் நடைபெறுகின்றன. இதுபோன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண, புதிய கூட்டணி ஒன்றை உருவாக்க புதிய தமிழகம் முயன்று வருகிறது. ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த கோயில் பூஜாரி தற்கொலை வழக்கில் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.

புதன், 3 ஜூன், 2015

இந்துத்துவ ஆதிக்க எதிர்ப்பின் குறியீடு டாக்டர் கிருஷ்ணசாமி!

இன்று 2014, அக்டோபர் 28. புதிய தமிழகத்தின் சாதனைகளில் என்னை மிகவும் கவர்ந்த சரித்திர சாதனை நிகழ்ந்த நாள்தான் இன்று. ஆம்! இதே அக்டோபர் 28-ஆம் நாளை சுமார் 10 ஆண்டுகள் பின்னோக்கி 2003-ஆம் ஆண்டிற்குச் சென்று புதிய தமிழகத்தின் வரலாற்றுச் சுவடுகளில் பார்த்தால் இன்றைய தினத்தின் சிறப்பு தெரியும்.
1990-களின் மத்தியில் தமிழ்நாடு முழுவதிலும் புரையோடிப்போயிருந்த சாதி என்னும் உயிர்கொல்லி நோயை விரட்டியடித்து, சாதி ஆதிக்க வெறியர்களுக்கு சவுக்கடி கொடுத்து புறமுதுகிட்டு ஓடச்செய்த சரித்திர சாதனைக்கு சொந்தக்காரரான புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் – தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் சாதி ஆதிக்க எதிர்ப்பின் குறியீடு மட்டுமல்ல, இந்துத்துவ ஆதிக்க எதிர்ப்பின் குறியீடும் கூட… ஆம்! இந்தியா முழுவதும் புரையோடிப்போயிருந்த இந்துத்துவ ஆதிக்கவெறி ‘விசுவ இந்து பரிஷத்’ எனும் பெயரில் தமிழகத்தில் நுழைய முயற்சித்தபோது முதல் ஆளாக போர் தொடுத்து இந்துத்துவ ஆதிக்க வெறியர்களை பின்னிட்டுப் பார்க்காமல் ஓடச்செய்த வரலாற்றுச் சாதனைக்குச் சொந்தக்காரர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் என்பது இங்கே அநேகருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் ஏதோ ஒரு அரசியல் தலைவர் என்று மட்டும் தான் இங்கு அநேகர் நினைத்துக்கொண்டிருக்கக்கூடும். ஆனால் அவருடைய புரட்சிகரமிக்க போராட்ட வரலாற்றுச்சுவடுகளை அறிந்தவர்களுக்குத் தான் அவர் ஒரு “சமூகசமநீதிப் போராளி” என்பது தெரியும்.
இந்துத்துவ ஆதிக்கவெறியர்களின் பரிவாரங்களில் ஒன்றான விசுவ இந்து பரிஷத், தான் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இந்துக்களைப் பாதுகாக்கிறோம் என்கிற போர்வையில், ஆர்.எஸ்.எஸ்.-ன் அடையாளமாக திரிசூலம் (சூலாயுதம்) எனும் ஆயுதத்தை தன்னுடைய தொண்டர்களுக்கு வழங்கி இந்துத்துவத்தின் வேரை இந்தியாவெங்கும் பரப்பிக்கொண்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக தனக்கு தொண்டர்களே இல்லாத தமிழகத்தில் வேரொரு ரீதியாக திரிசூலம் வழங்க விசுவ இந்து பரிஷத் திட்டமிட்டிருந்தது. ஆண்டுதோறும் அக்டோபர் 30-ல் அணுசரிக்கப்படும் ஒரு குறிப்பிட்ட சாதித் தலைவரின் நினைவு நாள் நிகழ்வையொட்டி அந்த குறிப்பிட்ட சாதியின் இன்றைய தலைவர்களில் ஒருவரான முருகன் என்பவரின் ஏற்பாட்டில் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 28-ஆம் நாள் மதுரையில் ஒரு மாபெரும் நினைவேந்தல் பொதுக்கூட்டத்தை தயார் செய்து, அந்தக் கூட்டத்தில் வைத்து விசுவ இந்து பரிஷத்-ன் அகில உலக தலைவரான ‘பிரவீன் தொகாடியா’ தலைமையில் அக்கூட்டத்திற்கு வரும் தொண்டர்களுக்கு திரிசூலம் வழங்கி இந்துத்துவத்தை தமிழகத்தில் பரவலாக்க திட்டமிட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளும் வெகு மும்முரமாக முடுக்கிவிடப்பட்டன. விழாவுக்கான அனைத்து பணிகளும் முடிவடைந்து திரிசூலத்தை வழங்குவதற்காக தலைவர்களும், வாங்குவதற்காக தொண்டர்களும் தயார் நிலையில் இருந்தனர். இந்துத்துவ ஆதிக்க வெறியின் வாடையே நுகரப்பட்டிராத தமிழகத்தில் அத்தகைய தவறேதும் நடந்துவிடக்கூடாது, இங்கு நிலைகொண்டிருக்கும் சமூகநல்லிணக்கத்துக்கு சீர்குலைவு ஏற்பட்டுவிடக்கூடாது என்ற அடிப்படையில் முதல் ஆளாக தன்னுடைய அஸ்திரத்தை இந்துத்துவ ஆதிக்கத்திற்கு எதிராக தொடுத்தார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. ஆம்! “அக்டோபர் 28-ஆம் நாள் மதுரையில் விசுவ இந்து பரிஷத் தலைவர் தனது தொண்டர்களுக்கு திரிசூலம் கொடுப்பதற்கு இந்த அரசு அனுமதித்தால் அதே மதுரையில் அதே 28-ஆம் நாள் நான் என்னுடைய தொண்டர்களுக்கு வாள் கொடுப்பேன்” என்பது தான் அந்த அஸ்திரம். அதோடு மட்டுமல்ல, புதிய தமிழகம் கட்சியின் அன்றைய மாவட்டச் செயலாளர் மூலம் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வாள் கொடுக்கும் விழாவுக்கான அனுமதியும் கோரப்பட்டது. இதனையடுத்து தென்மாவட்டங்களில் அசாதாரண சூழ்நிலை உருவாகக்கூடும் என்பதை உணர்ந்த தமிழ்நாடு அரசு உடனடியாக திரிசூலம் வழங்கும் விழாவிற்கு தடை விதித்தது. ‘விசுவ இந்து பரிஷத்தும், அந்த குறிப்பிட்ட சாதி அமைப்பும் தயார் நிலையிலிருந்த தன்னுடைய விழாவை கைவிட்டன’. மத்தியில் பாரதிய ஜனதா கட்சி, மாநிலத்தில் அ.தி.மு.க. என மதவாத அரசுகள் ஆட்சியிலிருந்த காரணத்தால் மத்திய மாநில அரசுகளின் துணையோடு பெரும் துணிச்சலோடு தயார்படுத்தப்பட்ட இந்த திரிசூலம் வழங்கும் விழா மூலம் தமிழகத்தினுள் நுழையவிருந்த மதவாதம் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் வெற்றிகண்ட இந்த திரிசூலம் வழங்கும் விழா எனும் ‘இந்துத்துவ ஆதிக்கவெறியை’ தமிழகத்தின் எந்த அரசியல் கட்சிகளும் எதிர்க்க முன்வராத, துணிந்திராத சூழலில் தனியொரு ஆளாக சாதி ஆதிக்கம், மதவெறி ஆதிக்கம் ஆகிய இரண்டையும் ஒருங்கே எதிர்த்து நின்று, ஒற்றை அஸ்திரத்தால் இரண்டு ஆதிக்க வெறிகளை தூள்தூளாக்கி ஓடச்செய்த சரித்திர சிறப்புமிக்க சாதனையாளரான டாக்டர் அய்யா அவர்கள் சாதி ஆதிக்க எதிர்ப்பின் குறியீடு மட்டுமல்ல… இந்துத்துவ ஆதிக்க எதிர்ப்பின் குறியீடும் டாக்டர் அய்யா அவர்கள் மட்டுமே…
இங்கே ஒன்றை கண்டிப்பாக சுட்டிக்காட்டியே ஆக வேண்டும் என்று நினைக்கிறேன்.
தமிழகத்தின் வரலாற்றுக் காலகட்டங்களில் சங்ககாலம் வரையில் இந்து என்றொரு சமயமே இருந்ததில்லை. சங்ககாலத்தின் இறுதியில் அதுவும் பல்லவர் காலத்தில் தான் இந்து என்கிற மதமே தமிழகத்தினுள் ஊடுருவி உறவாடுகிறது. பண்டைய தமிழர்களின் வரலாற்றுச் சின்னங்களையும், கலாச்சாரங்களையும், பண்பாடுகளையும் அழித்தொழித்து தன்னுடையவைளை உட்புகுத்தி தமிழர்களின் அடையாள அழிப்பு நிகழ்ந்ததே இந்த இந்து சமய வருகைக்குப் பின்புதான் என்பது வரலாறு அறிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். நிலவுடைமையாளர்களாக இருந்த தமிழர்களை குறிப்பாக உழவர்களை நிலமற்றவர்களாக்கி பண்ணை அடிமைகள் என்ற நிலைக்கு கொண்டு சென்றதும் இந்த இந்து மதம் தான்.
"நான் மேலே கூறிய சாதி ஆதிக்கம் மற்றும் இந்துத்துவ ஆதிக்கத்திற்கும் அடுத்து கூறிய தமிழர்களின் சுருக்க வரலாற்றுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அதாவது சங்ககாலத்திற்கு பின்பு தமிழ்நாட்டிற்கு வடக்கே சாளுக்கியர்களின் ஆளுகைக்குட்பட்ட பகுதிவரை பரவியிருந்த இந்து மதமானது தமிழ் மன்னர்களை வீழ்த்தி தமிழ்நாட்டுக்குள் ஊடுருவுவதற்கு எந்த தமிழ்ச்சமூகம் அன்று துணையாக இருந்ததோ அதே தமிழ்ச்சமூகம் தான் இன்று அதே தமிழர்களுக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட சாதி அமைப்பாக உருவாக்கப்பட்டு விசுவ இந்து பரிஷத் எனும் இந்துத்துவ ஆதிக்கத்தோடு கைகோர்த்து நிற்கிறது. பல்லவர் காலத்தில் தமிழ்நாட்டில் இருந்த தமிழ்ச்சமூகங்கள் இந்த சாதி, மத கூட்டு ஆதிக்கத்தை எதிர்த்தனவோ இல்லையோ, ஆனால் இந்த இருபத்து ஓன்றாம் நூற்றாண்டில் இந்த சாதி, மத கூட்டு ஆதிக்கத்தை ஒற்றை மனிதனாக அதிவேக நெஞ்சுரத்தோடு எதிர்த்து பண்டைய தமிழர்களின் வீரத்திற்கு இன்றளவும் செயல்வடிவம் கொடுத்து நிற்கும் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் போர்குணமிக்க போராட்டங்களின் வாயிலாக
சாதி, மத பேதமற்ற சமத்துவ சமூகத்தை அமைப்போம்!
புதிய தமிழகம் படைப்போம்!!"