ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 28 பிப்ரவரி, 2015

புதிய தமிழகம் கட்சி நிர்வாகி கொலை: சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை தொடக்கம்...

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பிச்சனார் தோப்பை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 28), புதிய தமிழகம் கட்சியின் நகர செயலாளராக இருந்த இவர், கடந்த 22–ந்தேதி மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பாஸ்கரின் உறவினர்கள் 4 நாட்களாக போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் 144 தடை உத்தரவு பிறப்பித்து கலெக்டர் ரவிக்குமார் உத்தரவிட்டார்.
இந்நிலையில் நேற்று பாஸ்கரின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் மதியம் பாஸ்கர் உடல் பலத்த பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் தெப்பக்குள தெருவை சேர்ந்த கணேசன் (வயது 23), விக்னேஷ்(22), பாதாளம் (23), இசக்கி ஆனந்த் (20), சிவா (25) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாதவாறு இருக்க ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் 144 தடை உத்தரவு பிறப்பித்து கலெக்டர் ரவிக்குமார் உத்தரவிட்டார். தற்போது அந்த தடை உத்தரவை மார்ச் 9–ந்தேதி மாலை 6 மணி வரை நீட்டித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் பாஸ்கர் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி நேற்று முன்தினம் தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்துசி சி.பி.சி.ஐ.டி. ஏ.டி.ஜி.பி.கரன்சின்ஹா உத்தரவின் பேரில் சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. அன்பு, டி.எஸ்.பி. பொன்னுதுரை ஆகியோர் தலைமையிலான இன்ஸ்பெக்டர்கள் சிவகுமார், மனோகர், கலையரசன் ஆகியோர் இன்று பிற்பகல் ஸ்ரீவைகுண்டத்திற்கு வருகின்றனர். பின்னர் அவர்கள் ஸ்ரீவைகுண்டம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் விசாரணையை தொடங்கவுள்ளனர்.

ஸ்ரீவைகுண்டம் செல்ல கிருஷ்ணசாமிக்கு அனுமதி: உயர்நீதிமன்றம் உத்தரவு..ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிச்சனார்தோப்பிற்கு செல்ல கிருஷ்ணசாமிக்கு ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது.

புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவரும், ஓட்டப்பிடாரம் தொகுதி எம்எல்ஏவுமான கிருஷ்ணசாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: புதிய தமிழகம் கட்சியின் ஸ்ரீ வைகுண்டம் நகர செயலாளர் லட்சுமணன் (எ) பாஸ்கர் கடந்த பிப்.22ல் கொலை செய்யப்பட்டார். உண்மை குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இதனிடையே ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. எம்எல்ஏவான என்னால் கூட அந்த பகுதிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு பகுதியில் நடந்த கொலைக்காக தாலுகா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்தது தவறு. தடை உத்தரவு பிறப்பிப்பதற்கு உரிய காரணம் கூறப்படவில்லை. எனவே தடை உத்தரவை சட்ட விரோதம் எனக் கூறி ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எஸ்.ரவி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது டாக்டர் கிருஷ்ணசாமி ஆஜராகி, தடை உத்தரவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இது சட்டவிரோதம் எனவே அதை ரத்து செய்ய வேண்டும் என நீதிபதியிடம் கூறினார்.

இதையடுத்து நீதிபதிகள், குறிப்பிட்ட சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ளதால் பிரச்னை ஏற்படும் என கூறுவதை ஏற்க முடியாது. நமது நாடு மதசார்பற்ற நாடு. எதற்காக 144 தடை உத்தரவு போடப்பட்டது என்பது தெரியாமலேயே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே மனுதாரர் மார்ச் 1ம் தேதி காலை 11 முதல் 1.30 மணி வரை கொலை செய்யப்பட்ட லட்சுமணனின் கிராமமான பிச்சனார்தோப்பிற்கு சென்று வரலாம்.

அவருடன் 15 பேர் 3 கார்களில் செல்லலாம். மைக்கில் பேசவோ, கோஷமிடவோ கூடாது. தேவையான போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், மனு குறித்து அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தனர்.

ஸ்ரீவைகுண்டம் செல்ல டாக்டர் கிருஷ்ணசாமிக்கு உயர் நீதிமன்றம் அனுமதி

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் செல்வதற்கு, சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிபந்தனையுடன் அனுமதி அளித்துள்ளது.
ஸ்ரீவைகுண்டத்தில், புதிய தமிழகம் கட்சியின் நகரச் செயலர் லட்சுமணன் என்ற பாஸ்கரன் பிப்ரவரி 22இல் கொலை செய்யப்பட்டார். இதனால், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், அப்பகுதிக்கு டாக்டர் கிருஷ்ணசாமி செல்வதற்கு போலீஸார் அனுமதிக்கவில்லை.
அதையடுத்து, ஸ்ரீவைகுண்டம் செல்ல தனக்கு அனுமதி வழங்கவும், 144 தடை உத்தரவை ரத்து செய்யவும் உத்தரவிடக் கோரி, டாக்டர் கிருஷ்ணசாமி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், ஸ்ரீவைகுண்டத்தில் புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகி கொலை செய்யப்பட்டுள்ளார். போலீஸார் கொலையாளிகளைக் கைது செய்யவில்லை. மேலும், குற்றவாளிகளுக்கு உதவியாக போலீஸார் விசாரணையை கிடப்பில் போட்டுள்ளனர். ஸ்ரீவைகுண்டம் பகுதியை கலவரப் பகுதியைப் போல மாற்றியுள்ளனர். 144 தடை உத்தரவால் பேருந்துகள் இயங்கவில்லை.
பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்கள் செல்ல முடியவில்லை. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தடை உத்தரவு பிறப்பிக்க தகுந்த காரணம் இல்லை. இந்தத் தடை உத்தரவு சட்டவிரோதமானது. எனவே, அதற்குத் தடைவிதிக்க வேண்டுóம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்மனு நீதிபதிகள் எஸ். தமிழ்வாணன், வி.எஸ். ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, டாக்டர் கிருஷ்ணசாமி நேரில் ஆஜராகி, ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் எனது தொகுதிக்கு உள்பட்ட பகுதிகள் உள்ளன. எனவே, எம்.எல்.ஏ. என்ற முறையில் நான் அங்கு செல்ல உரிமை உள்ளது என்றார்.
பின்னர், டாக்டர் கிருஷ்ணசாமி மார்ச் 1ஆம் தேதி ஸ்ரீவைகுண்டம் செல்ல நீதிபதிகள் அனுமதி அளித்தனர். அன்றைய தினம் காலை 11 மணியில் இருந்து மதியம் 1.30 மணி வரையில் அவர் அங்கு இருக்கலாம். தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து 15 பேருடன் 3 வாகனங்களில் செல்லலாம். அதற்கு, போலீஸார் உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டும். ஸ்ரீவைகுண்டத்துக்கு செல்லும் வாகன எண்களைப் போலீஸாரிடம் தெரிவிக்கவேண்டும் என்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. மேலும், இந்த மனுவுக்கு மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு கண்டிப்பு
வழக்கு விசாரணையின்போது நீதிபதி எஸ். மதிவாணன், தூத்துக்குடி ஆட்சியரின் தடை உத்தரவு நகலைப் படித்துப் பார்த்தார். அதில், இடம்பெற்றுள்ள வாசகங்களுக்கு அவர் ஆட்சேபம் தெரிவித்தார். பின்னர் அவர் பிறப்பித்த உத்தரவில், 144 தடை உத்தரவை எந்த அடிப்படையில் பிறப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்குத் தெரியவில்லை.
குறிப்பிட்ட பிரிவினர் அதிகம் உள்ள பகுதி என்றும், குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்தவர் கொல்லப்பட்டுள்ளார் என்பதையும் அதில் குறிப்பிட்டு, அரசியல் பிரமுகர்கள் அங்கு சென்றால் மோதல் ஏற்படும் என ஆட்சியர் அச்சம் தெரிவித்துள்ளார். இது ஜனநாயக நாடு. யாரும் எங்கும் சென்று வரலாம். தடை உத்தரவுக்கு இப்படிக் காரணம் கூறுவது சரியல்ல. இது குறித்து, மாவட்ட ஆட்சியர் உரிய விளக்கம் அளிக்கவேண்டும் என உத்தரவிட்டார்.

வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

ஸ்ரீவைகுண்டம் புதிய தமிழகம் நிர்வாகி கொலை: 5 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் புதிய தமிழகம் கட்சி நிர்வாகி கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சிபிசிஐடி போலீஸார் விசாரணையை தொடங்கினர்.
ஸ்ரீவைகுண்டம் புதிய தமிழகம் கட்சி நகரச் செயலர் லட்சுமணன் என்ற பாஸ்கரன் கடந்த 22-ஆம் தேதி இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில், அவருக்கும் தெப்பக்குளத் தெருவைச் சேர்ந்த விக்னேஷ், கணேசன், பாதாளம் ஆகியோருக்கும் இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இக் கொலை நடந்தது தெரியவந்தது.
இந்த சம்பவத்தால் ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பதற்றம் நிலவியது. இதனால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பாஸ்கரனின் உடல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து வியாழக்கிழமை முற்பகல் 11.45 மணி அளவில் கேடிகே நகருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
இதற்கிடையே, பாஸ்கரன் தந்தை மாரிமுத்துவிடம் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் இளங்கோ இழப்பீட்டு தொகையாக ரூ.5,62,500-க்கான காசோலையை முதல்கட்டமாக வழங்கினார். மீதமுள்ள ரூ.1,87,500 பின்னர் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பாஸ்கரன் கொலை வழக்கு தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் தெப்பகுள தெருவைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் கணேசன் (23), கண்ணன் மகன் விக்னேஷ் (22), சேதுராமன் மகன் பாதாளம் (23), பெரும்பத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் சிவா (25), தோழப்பன்பண்னையை சேர்ந்த சண்முகம் மகன் இசக்கி ஆனந்த் (20) ஆகியோர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
சிபிசிஐடி விசாரணை தொடக்கம்: இக்கொலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி ஏடிஜிபி கரண்சின்கா உத்தரவின்பேரில், எஸ்.பி. அன்பு, டி.எஸ்.பி. பொன்னுரை ஆகியோர் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் சிவகுமார், மனோகர், கலையரசன் ஆகியோர் வியாழக்கிழமை ஸ்ரீவைகுண்டம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் விசாரணையைத் தொடங்கினர்.

வெள்ளகால் கிராமத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தாரா்களுக்கு டாக்டா் கிருஷ்ணசாமி அவா்கள் நோில் சென்று ஆறுதல்...

வியாழன், 26 பிப்ரவரி, 2015

புதிய தமிழகம் நிர்வாகி கொலையில் மணல் கொள்ளையர் தொடர்பு : கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு....

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
நெல்லை: ஸ்ரீவைகுண்டம் புதிய தமிழகம் செயலாளர் கொலையில் தாமிரபரணி மணல் கொள்ளையருக்கு தொடர்பு உள்ளது என டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டினார். ஸ்ரீவைகுண்டத்தில் கொலை செய்யப்பட்ட புதிய தமிழகம் கட்சி நகர செயலாளர் பாஸ்கரன் உடலை வாங்க அவரது பெற்றோர் மறுத்ததால் அது நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு வந்து பாஸ்கரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது: 

தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 102 கவுரவ, சாதி கொலைகள் நடந்ததை நான் சுட்டிக்காட்டியதற்கு சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பாக உள்ளது என முதலமைச்சர் பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் பதிலளித்தார். அதை சமிக்ஞையாக எடுத்துக்கொண்டு ஒரு பிரிவினர் தென்மாவட்டங்களில் மற்ற பிரிவு மக்களை தொடர்ந்து படுகொலை செய்து வருகின்றனர்.ஸ்ரீவைகுண்டம் பாஸ்கரன் போலீஸ் நிலையத்திலிருந்து 50 அடி தூரத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார். இவரது கொலையில் தாமிரபரணியில் மணல் கொள்ளையடித்த முக்கிய பிரமுகர் தொடர்பு உள்ளது. வள்ளியூர், தச்சநல்லூரிலும் பிற சமுதாய மக்களை ஒரு பிரிவினர் கொலை செய்துள்ளனர். விரைவில் சென்னையில் அனைத்து சமுதாய தலைவர்களை கூட்டி கலந்தாலோசித்து இதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

பாவூர்சத்திரத்தில் 2 மாணவர்கள் கொலை: உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கிருஷ்ணசாமி கோரிக்கை...

பாவூர்சத்திரத்தில் 2 மாணவர்கள் கொலை: உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கிருஷ்ணசாமி கோரிக்கை

நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே இனாம்வெள்ளகால் கிராமத்தைச் சேர்ந்த மாரிச்செல்வன், முருகன் என்ற 2 மாணவர்கள், பாவூர்சத்திரம் அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இந்த நிலையில், இனாம்வெள்ளகால் கிராமத்துக்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. நேற்று வந்து, கொலை செய்யப்பட்ட மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
கொலை செய்யப்பட்ட 2 மாணவர்களின் படங்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இதுதொடர்பாக டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. கூறியதாவது:– 
2 மாணவர்கள் கொல்லப்பட்டு, சுமார் 25 நாட்கள் ஆகியும், இதுவரை யாரும் கைது செய்யப்படாதது கண்டிக்கத்தக்கது. குறும்பலாப்பேரியை சேர்ந்த இறந்துபோன அழகர் என்ற சுடலைதான், 2 மாணவர்கள் கொலைக்கு காரணம் என்று போலீசார் கூறுகின்றனர். இதை நாங்கள் கண்டிக்கிறோம்.
போலீசாரின் நடவடிக்கை பாரபட்சமாக உள்ளது. கொலையில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும். இல்லை என்றால் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, சி.பி.ஐ.க்கு மாற்ற முயற்சி செய்வோம்.
இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
 

ஸ்ரீவைகுண்டத்தில் 144 போலீஸ் தடையுத்தரவு.....,கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

தூத்துக்குடி ;புதிய தமிழகம் கட்சி பிரமுகர் கொலைவழக்கு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் 144 போலீஸ் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்தவர் பாஸ்கரன் 26, புதிய தமிழகம் கட்சியின் நகர செயலாளர். கடந்த 22ம் தேதி ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுவரையிலும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டனர். இந்த கொலைக்கு பிறகு ஸ்ரீவைகுண்டம்-வல்லநாடு சாலையில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் நேற்று அந்த பகுதி மக்கள் பஸ்களை மீண்டும் இயக்க வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை டி.ஐ.ஜி.,சுமித்சரண், தூத்துக்குடி எஸ்.பி.,துரை ஆகியோர் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
144 தடையுத்தரவு:
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி நேற்று ஸ்ரீவைகுண்டத்திற்கு வருவதாக இருந்தது. அவர் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்தார். விமானநிலையத்தில் அவரை சந்தித்த தூத்துக்குடி எஸ்.பி.,துரை <உள்ளிட்டவர்கள், ஸ்ரீவைகுண்டத்தில் 27ம் தேதி வரையிலும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அரசியல் தலைவர்கள் யாரும் அங்கு செல்ல தடைவிதிக்கப்பட்டிருப்பதையும், பாஸ்கரன் கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டதையும் தெரிவித்தனர். எனவே இதில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

ஸ்ரீவைகுண்டத்தில் கொல்லப்பட்ட புதிய தமிழகம் கட்சி நிர்வாகி உடல் குடும்பத்தினரிடம் இன்று ஒப்படைப்பு..

ஸ்ரீவைகுண்டத்தில் கொல்லப்பட்ட புதிய தமிழகம் கட்சி நிர்வாகி உடல் குடும்பத்தினரிடம் இன்று ஒப்படைப்புதூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பிச்சினார் தோப்பை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 28). இவர் புதிய தமிழகம் கட்சி நகர செயலாளராக இருந்தார். கடந்த 22–ந்தேதி இரவில் அவர், சிலரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் தெப்பக்குள தெருவை சேர்ந்த கணேசன், விக்னேஷ், பாதாளம் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே பாஸ்கரின் கொலைக்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் சாலைமறியல் உள்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து டி.ஐ.ஜி. சுமித்சரண் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கொலையாளிகள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் மேலக்கோட்டைவாசல் தெருப்பகுதியில் மர்மநபர் ஒருவர் பெட்ரோல் குண்டு ஒன்றை வீசினார். அது வீதியில் விழுந்து வெடித்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உடனே போலீசார் விரைந்து சென்று பெட்ரோல் குண்டு வீசிய ஸ்ரீவைகுண்டம் வடக்கு தெருவை சேர்ந்த மாரியப்பன் (27) என்பவரை கைது செய்தனர்.
தொடர் போராட்டம் காரணமாக ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் 144 தடை உத்தரவை மாவட்ட கலெக்டர் ரவிக்குமார் பிறப்பித்தார். இந்த தடை உத்தரவு நாளை மாலை 6 மணி வரை அமலில் இருக்கும்.
இந்நிலையில் பாஸ்கர் கொலையை கண்டித்து தமிழ்நாடு தேவேந்திர கூட்டமைப்பு சார்பில் ஸ்ரீவைகுண்டம் கே.டி.கே.நகரில் உண்ணாவிரதம் நடைபெற்றது. அங்கு சென்ற போலீசார் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் உண்ணாவிரதத்திற்கு அனுமதி கிடையாது என்றனர். இதைத்தொடர்ந்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஸ்ரீவைகுண்டம் பகுதி முழுவதும் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. முக்கிய பகுதிகளில் சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
கொலை செய்யப்பட்ட பாஸ்கர் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பாளை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. அவரை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 4 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் உடலை வாங்க முன்வந்துள்ளனர். அதன்படி இன்று பிற்பகலில் பாஸ்கர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. 

புதன், 25 பிப்ரவரி, 2015

கொலை குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஸ்ரீவைகுண்டத்துக்கு செல்ல விடாமல் 144 தடை பிறப்பித்தது சட்டவிரோதம் டாக்டர் க.கிருஷ்ணசாமி பேட்டி..

தூத்துக்குடி,
ஸ்ரீவைகுண்டம் நகர புதிய தமிழகம் கட்சி செயலாளர் கொலையில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்ரீவைகுண்டத்துக்கு செல்ல விடாமல் 144 தடை உத்தரவு பிறப்பித்தது சட்டவிரோதம் என்று டாக்டர் க.கிருஷ்ணசாமி தெரிவித்து உள்ளார்.
டாக்டர் கிருஷ்ணசாமி ஸ்ரீவைகுண்டம் நகர புதிய தமிழகம் கட்சி செயலாளர் லட்சுமணன் என்ற பாஸ்கர் கடந்த 22–ந் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அவரது உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக புதிய தமிழகம் கட்சி நிறுவனர் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி நேற்று மாலை விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளத்துக்கு வந்தார்.
அங்கு இருந்த போலீஸ் சூப்பிரண்டுகள் மா.துரை(தூத்துக்குடி), மணிவண்ணன் (கன்னியாகுமரி) மற்றும் போலீசார் டாக்டர் க.கிருஷ்ணசாமியை அழைத்து சென்று தனி அறையில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாகவும், அங்கு அரசியல் தலைவர்கள் செல்லக்கூடாது என்றும் கூறியதாக தெரிகிறது. நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு டாக்டர் க.கிருஷ்ணசாமி வெளியே வந்தார்.
பேட்டி அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கடந்த 6 மாதத்தில் மட்டும் ஏறக்குறைய 80–க்கும் மேற்பட்ட படுகொலைகள் நடந்து உள்ளன. இதுகுறித்து தமிழக அரசு கவனம் செலுத்தி, இது போன்ற வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று 2 மாதங்களுக்கு முன்பு அரசுக்கு கடிதம் எழுதி உள்ளேன்.
இடையிலே ஒரு மாதம் எந்த விதமான சம்பவமும் இல்லாதது போன்று தோன்றியது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு புதிய தமிழகம் கட்சி நகர செயலாளராக செயல்பட்டு வந்த லட்சுமணன் என்ற பாஸ்கர் கொலை செய்யப்பட்டு உள்ளார். ஸ்ரீவைகுண்டத்தை மையமாக வைத்து கடந்த ஓராண்டில் 15–க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்து உள்ளன.
நடவடிக்கை சில தினங்களுக்கு முன்பு சட்டமன்றத்தில் ஆளுநர் உரையில் தமிழ்நாட்டில் சட்டம்– ஒழுங்கு சீராக இருக்கிறது என்று தெரிவித்தார்கள். அப்போது, பல்வேறு கொலைகள் நடந்து இருப்பதை சுட்டிக் காட்டினேன். தொடர்ந்து கொலைகள் நடந்து உள்ளன. தமிழகத்தில் சட்டம்– ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது.
இந்த கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யுங்கள் என்று உறவினர்கள் போராடி வருகின்றனர். கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் பெற்றோரிடம் துக்கம் விசாரிக்க வந்தேன். தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்த உடன் 144 தடை உத்தரவு இருக்கிறது என்று கூறுகிறார்கள். அது சட்டத்துக்கு விரோதமானது. இந்திய ஜனநாயகத்துக்கு வெட்கக் கேடானது. தடை உத்தரவு இருப்பதால், புதிய தமிழகம் கட்சி பொறுப்பாளர்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு டாக்டர் க.கிருஷ்ணசாமி கூறினார்.

புதிய தமிழகம் நிர்வாகி கொலை எதிரொலி: சடலத்தை வாங்க மறுத்து தொடர் போராட்டம் - திருவைகுண்டத்தில் 144 தடை உத்தரவு: பதற்றம் நீடிப்பு..


திருவைகுண்டத்தில் புதிய தமிழகம் கட்சி நகரச் செயலாளர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள்.
திருவைகுண்டத்தில் புதிய தமிழகம் கட்சி நகரச் செயலாளர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள்.
தூத்துக்குடி மாவட்டம் திரு வைகுண்டத்தில் புதிய தமிழகம் கட்சி நகரச் செயலாளர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் நான்காவது நாளாக பதற்றம் நீடித்து வருகிறது.
திருவைகுண்டம் அருகே உள்ள பிச்சனார்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (28). புதிய தமிழகம் கட்சியின் நகரச் செயலாளரான இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மர்ம நபர் களால் வெட்டிக் கொலை செய்யப் பட்டார். இவரது சடலம் பாளையங் கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
உண்மையான குற்றவாளி களை கைது செய்யக் கோரி பாஸ்கரின் சடலத்தை வாங்க மறுத்து தொடர் போராட்டங்கள் நடக்கின்றன.
இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆழ்வார்திருநகரி, செய்துங்கநல்லூர், ஓட்டப்பிடாரம் ஆகிய பகுதிகளில் புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட தலித் அமைப்புகளை சேர்ந்தவர்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர்.
தொடர் மறியல் போராட்டம்
இச்சம்பவத்தை தொடர்ந்து திருவைகுண்டம் - வல்லநாடு இடையே கடந்த நான்கு நாட் களாக பஸ் போக்குவரத்து நிறுத் தப்பட்டுள்ளது. இதனால் கொங்க ராயகுறிச்சி, பத்மநாபமங்கலம், தோழப்பன்பண்ணை, மணக்கரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு பஸ் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
இக்கிராம மக்கள் வெளியே செல்ல முடியாமல் தவிக்கின்றனர். பள்ளி, மருத்துவமனைக்குக்கூட வெளியூர் செல்ல முடியவில்லை. உடனே பஸ் போக்குவரத்தை தொடங்க வேண்டும் எனக் கோரி, நேற்று காலை தோழப்பன்பண்ணையில் இருந்து சுமார் 200 பேர் மறியல் செய்வதற்காக திருவைகுண்டம் நோக்கி கிளம்பினர்.
தகவல் அறிந்து டி.எஸ்.பி விஜயகுமார் தலைமையிலான போலீஸார் அங்கு விரைந்து அவர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
சுமார் 1 மணி நேரம் கழித்து பத்மநாபமங்கலத்தில் சுமார் 150 பேர் சாலை மறியலுக்காக கிளம்பினர். ஏ.டி.எஸ்.பி கந்தசாமி, டி.எஸ்.பி விஜயகுமார் உள்ளிட் டோர் பேச்சுவார்த்தை நடத்தியதில் அவர்கள் கலைந்து சென்றனர்.
மேலும், காலை 11.30 மணியளவில் கெட்டியம்மாள்புரம், வெள்ளூர், கால்வாய், திருவைகுண்டம் பகுதியை சேர்ந்த மக்கள் திருவைகுண்டம் கள்ளபிரான் கோயில் அருகே திரண்டு மறியலுக்கு தயாரானார்கள். தொடர்ந்து அசாதாரண நிலை நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதாக அவர்கள் புகார் தெரிவித்தனர். போலீஸார் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவர்கள் கலைந்து சென்றனர்.
தடை உத்தரவு
தொடர் மறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்கள் காரண மாக திருவைகுண்டம் பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதையடுத்து திருவைகுண்டம் வட்டத்தில் 27-ம் தேதி வரை 3 நாட்களுக்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. தென்மண்டல ஐ.ஜி அபய்குமார் சிங், நெல்லை சரக டி.ஐ.ஜி சுமித் சரண், எஸ்.பி.க்கள் மா. துரை (தூத்துக்குடி), மணிவண் ணன் (கன்னியாகுமரி) ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீஸார் அப்பகுதியில் குவிக்கப் பட்டுள்ளனர்.
கிருஷ்ணசாமிக்கு மறுப்பு
இந்நிலையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி திருவைகுண்டம் செல்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அவரை அங்கேயே தடுத்த போலீஸார் திருவைகுண்டம் செல்ல அனுமதி மறுத்தனர். இதனால் அவர் திருநெல்வேலி சென்றார். இதனிடையே இக்கொலை வழக்கு சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
பெட்ரோல் குண்டு வீச்சு
திருவைகுண்டம் பிச்சனார்தோப்பு பகுதியில் கொலை செய்யப்பட்ட பாஸ்கரின் உறவினர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி சுமித்சரண் நேற்று மாலை 6.30 மணியளவில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார்.
அப்போது அருகே நிறுத்தியிருந்த போலீஸ் வாகனம் மீது மர்ம நபர் பெட்ரோல் குண்டை வீசினார். ஆனால், அந்த குண்டு போலீஸ் வாகனம் மீது படாமல் அருகே விழுந்து வெடித்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுதொடர்பாக ஒரு நபரை போலீஸார் உடனடியாக பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் திருவைகுண்டம் பகுதியில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

நிர்வாகி வெட்டிக்கொலை: புதிய தமிழகம் கட்சியினர் சாலை மறியல் 23 பேர் கைது .

நிர்வாகி வெட்டிக்கொலை: புதிய தமிழகம் கட்சியினர் சாலை மறியல் 23 பேர் கைதுதிருச்சி: நிர்வாகி கொலை செய்யப்பட்டதை;f கண்டித்து திருச்சியில் புதிய தமிழகம் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், கட்சியினருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்ட 23 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் பிச்சனார்தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர்(வயது 28). இவர் புதிய தமிழகம் கட்சியின் ஸ்ரீவைகுண்டம் நகர செயலாளராக பதவி வகித்து வந்தார். இவரை ஞாயிறன்று இரவு மர்ம நபர்கள் 4 பேர் வெட்டி கொன்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை உடனே கைது செய்யக்கோரி புதிய தமிழகம் கட்சியினர் நெல்லை உள்பட பல்வேறு இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிர்வாகி வெட்டிக்கொலை: புதிய தமிழகம் கட்சியினர் சாலை மறியல் 23 பேர் கைது திருச்சியில் மறியல் திருச்சி அண்ணாசிலை அருகில் புதிய தமிழகம் கட்சியினர் புறநகர் மாவட்ட செயலாளர் ஐயப்பன் தலைமையில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட இளைஞரணி செயலாளர் கூத்தூர் பாலு, ஒன்றிய செயலாளர்கள் தினகரன், நம்பிராஜ், முருகானந்தம், வக்கீல் விக்னேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் பற்றிய தகவல் அறிந்த உடன் ஏராளமான போலீசார் அங்கு குவிந்தனர். போலீசார் சமாதானம் சாலை மறியல் போராட்டம் நடத்தியவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று கோரி சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். திடீரென்று அவர்கள் சாலையில் படுத்தும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதித்தது. குண்டு கட்டாக தூக்கி இதையடுத்து போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை குண்டு கட்டாக தூக்கி அருகில் நிறுத்தி இருந்த வேனுக்கு கொண்டு வந்தனர். ஒவ்வொருவராக தூக்கி வரும்போது போலீசாருக்கும், புதிய தமிழகம் கட்சியினருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. 23 பேர் கைது பின்னர் ஒருவழியாக போலீசார் சமாளித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 23 பேரையும் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதிய தமிழகம் கட்சியினர் 4 இடங்களில் மறியல்-193 பேர் கைது..

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் புதிய தமிழகம் கட்சியின் நகர செயலாளர் படுகொலை செய்யப்பட்ட வழங்கில் கொ¬லாயளிகளை கைது செய்ய வலியுறுத்தி விருதுகர் மாவட்டத்தில் 4 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடு பட்ட புதிய தமிழகம் கட்சியினர் 193 பேர்கைது செய்யப்பட்டனர்.

வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் புதிய தமிழகம் கட்சியினர் நகர செயலாளர் பாஸ்கரன் கடந்த சில தினங் களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர் பான வழக்கில் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப் படாதை கண்டித்தும், குற்ற வாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் புதிய தமிழகம் கட்சியினர் நேற்று மறியல் செய்ய போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி விருது நகர் பழைய பஸ் நிலையம் முன்பு கிழக்கு மாவட்ட செய லாளர் ராமராஜ் தலைமையில் மறிய லில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 37 பேர் கைது செய் யப்பட்டனர். ராஜபாளையத் தில் மேற்கு மாவட்ட செயலா ளர் ராஜாலிங்கம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 72 பேர் கைது செய்யப்பட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒன்றிய செயலாளர் கண்ணன் தலை மையில் மறியல் செய்ததாக 47 பேர் கைது செய்யப்பட்ட னர். சிவகாசியில் மத்திய மாவட்ட செயலாளர் செல்லக்கனி தலைமையில் மறியல் செய்த 37 பேர் கைது செய்யப் பட் டனர். ஆக மொத்தம் மாவட் டம் முழுவதும் 4 இடங் களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 193 பேர் கைது செய்யப் பட்ட னர். இந்த மறியல் போராட் டத்தை யொட்டி பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப் பட்டிருந்தது.

ஓட்டப்பிடாரத்தில் புதிய தமிழகம் கட்சியினர் சாலை மறியல்..


ஓட்டப்பிடாரத்தில் புதிய தமிழகம் கட்சியினர் நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

சாலை மறியல்

ஓட்டப்பிடாரம் மெயின் பஜாரில் புதியதமிழகம் கட்சி சார்பில் தென் மாவட்டங்களில் தொடரும் சட்டம் ஒழுங்கு சீர்க்கேட்டைக் கண்டித்தும், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் படுகொலைகள் அதிகரித்து வருவதை கண்டித்து இதற்கு காரணமான கூலிப்படைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், ஸ்ரீவைகுண்டத்தில் படுகொலை செய்யப்பட்ட புதிய தமிழகம் கட்சி நகர செயலாளர் பாஸ்கர் கொலை வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதிப் பொறுப்பாளர் பட்டவராயன் தலைமை தாங்கினார். மறியல் போராட்டத்தில் ஒன்றிய செயலாளர் மனோகரன், மாநில செய்தி தொடர்பாளர் கப்பிகுளம் பாபு, மாவட்ட தொண்டர் அணி செயலாளர் சுடலைமணி, நகர செயலாளர் முருகானந்தம், கதிரவன், கருணாகரபாண்டியன், முனியசாமி உள்ளிட்ட புதிய தமிழகம் கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

கைது

இதனால் தூத்துக்குடி, கோவில்பட்டி, புளியம்பட்டி, குறுக்குச்சாலை, புதியம்புத்தூர் செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக சாலை மறியலில் ஈடுபட்டவர்களை ஓட்டப்பிடாரம் போலீசார் கைது செய்தனர்.

நெல்லையில் புதிய தமிழகம் கட்சியினர் திடீர் மறியல்: 30 பேர் கைது ..


ஸ்ரீவைகுண்டம் நகர புதிய தமிழகம் கட்சியின் செயலர் படுகொலையில் தொடர்புடைகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை திருநெல்வேலியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட அக்கட்சியினர் 30 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீவைகுண்டம் பிச்சினார் தோப்பைச் சேர்ந்த மா. லட்சுமணன் என்ற பாஸ்கரன் (28). புதிய தமிழகம் கட்சியின் நகர செயலரான இவர் ஞாயிற்றுக்கிழமை கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை அடுத்து அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. பாஸ்கரன் கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பேருந்துகள் உடைக்கப்பட்டன. குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்ள பாஸ்கரன் உடலை அவரது உறவினர்கள் வாங்க மறுத்து வருகின்றனர். இதனிடையே திருநெல்வேலி சந்திப்பு அண்ணா சிலை அருகில் செவ்வாய்க்கிழமை புதிய தமிழகம் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலர் எம்.எஸ். செல்லப்பா, தலைமையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் குண்டு கட்டாக தூக்கி சென்று வேனில் ஏற்றினர். கட்சி நிர்வாகிகள் உள்பட 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

2 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் பாஸ்கரன் உடலை அவரது உறவினர்கள் வாங்க மறுத்து வருவதால் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இராஜபாளையத்தில், புதிய தமிழகம் கட்சியின் நகர செயலாளர் பாஸ்கரன் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியினர் சாலை மறியல்..

vlcsnap-2015-02-25-17h26m13s211இராஜபாளையத்தில், புதிய தமிழகம் கட்சியின் நகர செயலாளர் பாஸ்கரன் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா அருகே, புதிய தமிழகம் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் இராஜலிங்கம் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் நகர செயலாளர் லட்சுமணன் என்கிற பாஸ்கரன் படுகொலையை கண்டித்தும், படுகொலை குறித்து சி.பி.ஐ.விசாரணை நடத்த வேண்டும், கொலை குற்றவாளிகளை உடனடியாக காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சாலை மறியலில் ஈடுபட்ட மவாட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் குமார், நகர செயலாளர் முத்து உட்பட 74-பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நெல்லை அருகே புதிய தமிழகம் கட்சி நிர்வாகி கொலை: பதட்டம்–பஸ்கள் நிறுத்தம்..

நெல்லை அருகே புதிய தமிழகம் கட்சி நிர்வாகி கொலை: பதட்டம்–பஸ்கள் நிறுத்தம்

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பிச்சனார்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 28).
ஸ்ரீவைகுண்டம் புதிய தமிழகம் கட்சி நகர செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இவர் நேற்று இரவு ஸ்ரீவைகுண்டம் அருகே புதுக்குடியில் ஒரு பெட்ரோல் பங்கில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்பிக்கொண்டு இருந்தார்.
அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் வந்தனர். அவர்கள் அரிவாளால் பாஸ்கரை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த பாஸ்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
பாஸ்கரை முன்விரோதம் காரணமாக யாரேனும் கொலை செய்தார்களா, வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே பாஸ்கரன் கொலையை கண்டித்து, கே.டி.கே. நகரை சேர்ந்த பொதுமக்கள் வல்லநாடுஸ்ரீவைகுண்டம் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். கொலையில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.
போலீஸ் அதிகாரிகள், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்லாமல் நள்ளிரவுக்கு பின்பும் மறியலை தொடர்ந்தனர். அதிகாலை 3 மணியளவில் கொலையாளிகளை விரைவில் பிடித்து விடுவோம் என போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இன்று காலையும் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. அதிரடிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். தனிப்படை நடத்திய விசாரணையில் பாஸ்கரை வெட்டிக்கொன்றது ஸ்ரீவைகுண்டம் தெப்பகுளம் தெருவை சேர்ந்த கணேசன், விக்னேஷ், பாதாளம் உள்பட 4 பேர் என்று தெரிய வந்தது. அவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கொலை சம்பவத்தையடுத்து நெல்லை சந்திப்பு, ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து வல்லநாடு, கொங்கராயங்குறிச்சி, பத்மநாபமங்கலம், மணக்கறை ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
இன்று காலை கே.டி.கே. நகரில் உள்ள வல்லநாடு, ஸ்ரீவைகுண்டம் சாலையில் பாஸ்கரின் உறவினர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
சோதனை சாவடி மூலம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இருந்து நெல்லை நோக்கி வரும் அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க பாளை புறநகர் பகுதிகளான பாறைகுளம், அரியகுளம், செய்துங்கநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

.தமிழ்நாடு புதிய தமிழகம் கட்சியினர் திடீர் மறியல்..

பழனி பேருந்து நிலையம் முன்பு புதிய தமிழகம் கட்சியினர் செவ்வாய்க்கிழமை திடீர் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் புதிய தமிழகம் கட்சியின் நகர செயலாளர் பாஸ்கரன் என்பவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து புதிய தமிழகம் கட்சி சார்பில் பழனி பேருந்து நிலையம் முன்பு போராட்டம் செய்யப்பட்டது.  திண்டுக்கல் மாவட்ட செயலாளர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தின் போது 20க்கும் மேற்பட்ட கட்சியினர் பங்கேற்றனர்.  பாஸ்கரனை கொலை செய்தவர்களை உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்ற வரும் கொலைகளை காவல்துறையினர் தடுக்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பிய கட்சியினர் திடீரென பேருந்துகள் வெளியேறும் இடத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.  இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பழனி டவுன் போலீஸார் மறியலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வதாக கூறி அழைத்துச் சென்றனர். 
இதனால் பேருந்து நிலைய பகுதிகளில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

புதிய தமிழகம் நிர்வாகி படுகொலை: பேருந்துகள் நிறுத்தம் பதற்றம்!

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பிச்சனார்தோப்பு கிராமத்தை சேர்ந்த புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதால், அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

ஸ்ரீவைகுண்டம் புதிய தமிழகம் கட்சி நகர செயலாளராக  பாஸ்கர் என்பவர் பொறுப்பு வகித்து வந்தார். இவர் நேற்று இரவு ஸ்ரீவைகுண்டம் அருகே புதுக்குடியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்பிக்கொண்டு இருந்தார்.

அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் 4 பேர்,   அரிவாளால் பாஸ்கரை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த பாஸ்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

பாஸ்கரை முன்விரோதம் காரணமாக யாரேனும் கொலை செய்தார்களா, வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே பாஸ்கரன் கொலையை கண்டித்து, கே.டி.கே. நகரை சேர்ந்த பொதுமக்கள் வல்லநாடு - ஸ்ரீவைகுண்டம் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். கொலையில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

போலீஸ் அதிகாரிகள், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்லாமல் நள்ளிரவுக்கு பின்பும் மறியலை தொடர்ந்தனர். அதிகாலை 3 மணியளவில் கொலையாளிகளை விரைவில் பிடித்து விடுவோம் என போலீசார் உறுதியளித்ததைத்  தொடர்ந்து போராட்டத்தைக்  கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்நிலையில் இன்று காலையும் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பதற்றம் நிலவியது. அதிரடிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். தனிப்படை நடத்திய விசாரணையில், பாஸ்கரை வெட்டிக்கொன்றது. ஸ்ரீவைகுண்டம் தெப்பகுளம் தெருவை சேர்ந்த கணேசன், விக்னேஷ், பாதாளம் உள்பட 4 பேர் என்று தெரிய வந்தது. அவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கொலை சம்பவத்தையடுத்து நெல்லை சந்திப்பு, ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து வல்லநாடு, கொங்கராயங்குறிச்சி, பத்மநாபமங்கலம், மணக்கறை ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இன்று காலை கே.டி.கே. நகரில் உள்ள வல்லநாடு - ஸ்ரீவைகுண்டம் சாலையில் பாஸ்கரின் உறவினர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

சோதனை சாவடி மூலம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இருந்து நெல்லை நோக்கி வரும் அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி, போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க, பாளை புறநகர் பகுதிகளான பாறைகுளம், அரியகுளம், செய்துங்கநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர பாதுகாப்புப்  பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ராஜபாளையத்தில் சாலைமறியல் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினர் கைது..

ராஜபாளையம் : ராஜபாளையத்தில் சாலைமறியல் செய்த புதிய தமிழகம் கட்சியினர் 72 பேர் கைது செய்யப்பட்டனர். ஸ்ரீவைகுண்டம் கட்சி நிர்வாகி பாஸ்கரன் கொலைவழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். உண்மைக் குற்றவாளியை கண்டுபிடிக்கவும் கோரி பபுதிய தமிழகம் கட்சியினர் போராட்டம் நடத்தினர். தென்காசி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அரசு மகப்பேறு மருத்துவமனை முன்பு மறியல் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.

புதிய தமிழகம் கட்சி நிர்வாகி கொலை: இருவர் கைது


தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு  புதிய தமிழகம் கட்சி நகரச் செயலர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். கொலையுண்டவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதாலும், அரசுப் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டதாலும் பதற்றம் ஏற்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் பிச்சினார்தோப்பைச் சேர்ந்த மாரிமுத்து மகன் லட்சுமணன் (எ) பாஸ்கரன் (28). புதிய தமிழகம் கட்சி நகரச் செயலரான இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு 4 பேரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளைப் பிடிக்க ஸ்ரீவைகுண்டம் காவல் ஆய்வாளர்கள் பிரான்சிஸ், ராஜாசுந்தர், பத்மநாபன், தங்ககிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இது தொடர்பாக விக்னேஷ், கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மறியல், பேருந்து உடைப்பு: இதற்கிடையே, பாஸ்கரன் கொலையைக் கண்டித்து, ஸ்ரீவைகுண்டம்- வல்லநாடு பிரதான சாலையில் அவரது உறவினர்கள், கிராம மக்கள் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த பத்மநாபமங்கலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர், ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மறியலில் ஈடுபட்டவர்களிடம் மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் துரை மற்றும் போலீஸார் பேச்சு நடத்தினர்.
இதற்கிடையில், பாளை. அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் பாஸ்கரனின் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஸ்ரீவைகுண்டத்தில் மறியல் செய்வதற்காக, பிச்சினார்தோப்பில் இருந்து ஊர்வலமாகச் செல்ல முயன்றனர். அவர்களிடம் மாவட்ட எஸ்.பி. துரை, ஏ.டி.எஸ்.பி. முரளிரம்பா, வட்டாட்சியர் இளங்கோ உள்ளிட்டோர் பேச்சு நடத்தினர்.
அப்போது, கொலையில் தொடர்புடையவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர். இதில் உடன்பாடு எட்டப்படாததால் மறியல் போராட்டம் மாலை வரையில் தொடர்ந்து நீடித்தது. இந்நிலையில், ஸ்ரீவைகுண்டத்திலிருந்து தூத்துக்குடி செல்லும் அரசுப் பேருந்தை ஆயத்துரை அருகே மர்ம நபர்கள் சிலர் தாக்கினர். இதில் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி உடைந்தது.
போலீஸ் குவிப்பு: இந்த சம்பவத்தில் இரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் ஸ்ரீவைகுண்டத்தில் கடும் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து, அந்த இரு சமுதாயத்தினர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் அதிரடிப்படை போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீவை. புதிய தமிழகம் கட்சி பிரமுகர் கொலை: உடலை வாங்க மறுத்து 4–வது நாளாக போராட்டம்..

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த புதிய தமிழகம் கட்சி நகர செயலாளர் பாஸ்கர் (வயது 28). கடந்த 22–ந்தேதி இரவு மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் தெப்பக்குள தெருவை சேர்ந்த கணேசன், விக்னேஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். நேற்றிரவு சேதுராமன் மகன் பாதாளம் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் பாஸ்கர் படுகொலையை கண்டித்தும், முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் ஆழ்வார்திருநகரியில் நேற்று விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து விடுதலை சிறுத்தை கட்சியினர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். அதே கோரிக்கையை வலியுறுத்தி மள்ளர் கழகத்தினர் தென்திருப்பேரை பஸ் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கலைந்து சென்றனர்.
இதனிடையே ஆழ்வார்திருநகரியில் இருந்து காடுவெட்டி வழியாக ஆயத்தூர் செல்லும் சாலையில் நேற்றிரவு மர்மநபர்கள் முட்செடிகளை வைத்து சாலையை மறைத்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. விஜயகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று முட்செடிகளை அகற்றினர். இதன் காரணமாக நேற்றிரவு ஸ்ரீவைகுண்டத்திலிருந்து வல்லநாடு செல்லும் பேருந்துகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன.
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கலவரங்கள் ஏற்படாதவாறு தடுக்க வஜ்ரா வாகனம் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட பாஸ்கரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பாளை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் 4–வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம்..

விழுப்புரம்: புதிய தமிழகம் கட்சி பிரமுகர் படுகொலையைக் கண்டித்து, விழுப்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தூத்துகுடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் நகர செயலாளர் பாஸ்கர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, விழுப்புரம் மாவட்ட புதிய தமிழகம் கட்சி சார்பில் நேற்று மாலை கலெக்டர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ரகுநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் பாரதிராஜா, நகர செயலாளர் குமரன், மாவட்ட பொருளாளர் அய்யனார் முன்னிலை வகித்தனர். இதில் புதிய தமிழகம் கட்சி பிரமுகர் பாஸ்கர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், முக்கிய குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். ஒன்றிய செயலாளர்கள் ஜெயபால், மகேஷ், ஒன்றிய தலைவர் குமார், நகர தலைவர் அன்பு, ஒன்றிய துணை செயலாளர் சாமுவேல், ஒன்றிய இளைரணி தலைவர் பிரகலாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

புதிய தமிழகம் கட்சி நிர்வாகி கொலை: இருவர் கைது


தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு  புதிய தமிழகம் கட்சி நகரச் செயலர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். கொலையுண்டவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதாலும், அரசுப் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டதாலும் பதற்றம் ஏற்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் பிச்சினார்தோப்பைச் சேர்ந்த மாரிமுத்து மகன் லட்சுமணன் (எ) பாஸ்கரன் (28). புதிய தமிழகம் கட்சி நகரச் செயலரான இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு 4 பேரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளைப் பிடிக்க ஸ்ரீவைகுண்டம் காவல் ஆய்வாளர்கள் பிரான்சிஸ், ராஜாசுந்தர், பத்மநாபன், தங்ககிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இது தொடர்பாக விக்னேஷ், கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மறியல், பேருந்து உடைப்பு: இதற்கிடையே, பாஸ்கரன் கொலையைக் கண்டித்து, ஸ்ரீவைகுண்டம்- வல்லநாடு பிரதான சாலையில் அவரது உறவினர்கள், கிராம மக்கள் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த பத்மநாபமங்கலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர், ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மறியலில் ஈடுபட்டவர்களிடம் மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் துரை மற்றும் போலீஸார் பேச்சு நடத்தினர்.
இதற்கிடையில், பாளை. அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் பாஸ்கரனின் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஸ்ரீவைகுண்டத்தில் மறியல் செய்வதற்காக, பிச்சினார்தோப்பில் இருந்து ஊர்வலமாகச் செல்ல முயன்றனர். அவர்களிடம் மாவட்ட எஸ்.பி. துரை, ஏ.டி.எஸ்.பி. முரளிரம்பா, வட்டாட்சியர் இளங்கோ உள்ளிட்டோர் பேச்சு நடத்தினர்.
அப்போது, கொலையில் தொடர்புடையவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர். இதில் உடன்பாடு எட்டப்படாததால் மறியல் போராட்டம் மாலை வரையில் தொடர்ந்து நீடித்தது. இந்நிலையில், ஸ்ரீவைகுண்டத்திலிருந்து தூத்துக்குடி செல்லும் அரசுப் பேருந்தை ஆயத்துரை அருகே மர்ம நபர்கள் சிலர் தாக்கினர். இதில் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி உடைந்தது.
போலீஸ் குவிப்பு: இந்த சம்பவத்தில் இரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் ஸ்ரீவைகுண்டத்தில் கடும் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து, அந்த இரு சமுதாயத்தினர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் அதிரடிப்படை போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

திங்கள், 23 பிப்ரவரி, 2015

தமிழக சட்டப்பேரவையில் இருந்து கிருஷ்ணசாமி வெளியேற்றம்...

தமிழக சட்டப்பேரவையில் இருந்து புதிய தமிழக கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வெளியேற்றப்பட்டார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று, தமிழக சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து அவையில் பேச கிருஷ்ணசாமி அனுமதி கோரினார். அதற்கு அவைத் தலைவர் அனுமதி மறுத்துவிட்டார்.
இதனையடுத்து அவையின் மையப் பகுதிக்குச் சென்ற கிருஷ்ணசாமி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட முற்பட்டார்.
அவைத் தலைவர் தனபால், அவையிலிருந்து கிருஷ்ணசாமியை வெளியேற்றுமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து, பேரவையிலிருந்து கிருஷ்ணசாமி வெளியேற்றப்பட்டார்.

சட்டமன்றத்தில் இன்று திமுக, காங். வெளிநடப்பு: புதிய தமிழகம் வெளியேற்றம்....

சட்டமன்றத்தில் கேள்வி நேரம் முடிந்த உடன் ஒரு பிரச்சினைகுறித்து பேச அனுமதிக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணசாமி அனுமதி கேட்டு அதற்கு பேரவைத் தலைவர் அனுமதி மறுத்ததால் டாக்டர் கிருஷ்ணசாமி பேரவைத்தலைவரின் இருக் கைக்கு முன்பு வந்து தனக்குப் பேச அனுமதிக்க வேண்டும் என கீழே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
இந்நிகழ்வு பேரவை நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவிப்பதாக பேரவைத்தலைவர் தெரிவித்ததோடு, அவரை அவையிலிருந்து வெளி யேற்றுமாறு அவைக்காவ லர்களுக்கு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து அவைக்காவலர்கள் டாக்டர் கிருஷ்ணசாமியை அவையிலிருந்து வெளி யேற்றினார்கள்.
டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி
சட்டமன்றத்துக்கு வெளியே வந்த டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியா ளர்களிடையே தெரிவித் ததாவது:_
தென் தமிழகத்தில் எந்த வித கலவரங்களும் நடை பெறவில்லை என முதல மைச்சர் சட்டமன்றத்தில் பதிவு செய்திருக்கிறார். அவர் பதிவு செய்த அடுத்த நாளே பல இடங்களில் படுகொலைகள் நடந்துள் ளன. அதற்கான  தடுப்பு நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட வில்லை. இது குறித்து அரசின் கவனத்தை ஈர்க்க, பேச முயன்றேன். அதற்கு எனக்கு சட்டமன்றத்தில் அனுமதி வழங்கப்பட வில்லை. என்னை வெளி யேற்றியுள்ளனர் என சட்டமன்ற வளாகத்துக்கு வெளியே டாக்டர் கிருஷ் ணசாமி தெரிவித்தார்.

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

தங்க நாற்கர சாலைத் திட்டத்தில் கோவையை இணைக்க வேண்டும்: டாக்டர் க.கிருஷ்ணசாமி

மத்திய அரசின் தங்க நாற்கர சாலை திட்டத்தில் கோவை,கரூர் உள்ளிட்ட மாவட்டங்களையும் இணைக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
இதுதொடர்பாக கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியது:
போத்தனூர்-பொள்ளாச்சி அகல ரயில் பாதை திட்டத்தை விரைந்து செயல்படுத்தத் தேவையான நிதியை வரும் ரயில்வே பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும்.
மேலும், திண்டுக்கல்லிருந்து கோவை, சத்தி வழியாக மைசூர் வரைச்சாலைத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
அதேபோல், கோவை பல்லடம், காங்கயம், வெள்ளக்கோவில், கரூர் வழியாக திருச்சிக்கு நான்கு வழிச்சாலை அமைக்க வேண்டும்.
தென்னிந்தியாவின்  மான்செஸ்டரான கோவை மாவட்டம் மற்றும் கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை தங்க நாற்கர சாலைத்திட்டத்தில் இணைப்பதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர் வேலை வாய்ப்பை பெறுவார்கள்.
 இத்தகைய, கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துக்கட்சிகள், பல்வேறு அமைப்பினர், வணிகர்கள் மற்றும் பொதுமக்களையும் ஒன்று திரட்டி கோவை ரயில் நிலையம் முன்பாக வரும் மார்ச் 14-ஆம் தேதி புதிய தமிழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது என்றார்.
இதில்,  தந்தை பெரியார் திராவிடக் கழகத்தின் மாநில பொதுச்செயலர் கு.இராமகிருட்டிணன் பேசுகையில், பொள்ளாச்சி போத்தனூர் அகல ரயில் பாதை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆனால், அதே நேரத்திóல் பொள்ளாச்சி பாலக்காடு ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
புதிய ரயில்வே, போக்குவரத்துத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் கோவை மாவட்டம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது என்றார்.
இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சுசிகலையரசன் மற்றும் புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

"தங்க நாற்கர சாலை திட்டத்தில் கோவையை இணைக்க வேண்டும்'..டாக்டர் க.கிருஷ்ணசாமி

மத்திய அரசின் தங்க நாற்கர சாலை திட்டத்தில் கோவையை இணைக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
இதுதொடர்பாக, கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியது:
கோவை பல்லடம், காங்கயம், வெள்ளகோவில், கரூர் வழியாக திருச்சிக்கு நான்கு வழிச்சாலை அமைக்க வேண்டும். தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவை மாவட்டத்தை தங்க நாற்கர சாலைத்திட்டத்தில் இணைப்பதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர் வேலை வாய்ப்பை பெறுவார்கள்.
இத்தகைய, கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை ரயில் நிலையம் முன்பாக வரும் மார்ச் 14-ஆம் தேதி புதிய தமிழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது என்றார்.

வியாழன், 19 பிப்ரவரி, 2015

காங்கிரஸ் - புதிய தமிழகம் வெளிநடப்பு

முக்கியப் பிரச்னைகளை வலியுறுத்தி, பேரவையில் இருந்து காங்கிரஸ், புதிய தமிழகம் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் புதன்கிழமை வெளிநடப்புச் செய்தனர். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்துக்குப் பிறகு முக்கிய பிரச்னைகளை விவாதிக்க அனுமதிக்க வேண்டுமென காங்கிரஸ், புதிய தமிழகம் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
இதற்கு அனுமதி மறுத்த பேரவைத் தலைவர் ப.தனபால், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசும்போது முக்கிய பிரச்னைகளை எழுப்பலாம் என்று தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜயதரணி உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்புச் செய்தனர். புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமியும் பேரவையில் இருந்து வெளியேறினார்.

தமிழக சட்டசபையில் கிருஷ்ணசாமி வெளிநடப்பு..

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி எழுந்து ஒரு பிரச்சினை குறித்து பேச வாய்ப்பு கேட்டார்.
ஆனால் சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்து கவர்னர் உரை மீது நீங்கள் பேசுகையில் பிரச்சினைகளை சொல்லலாம் என்றார். இதை ஏற்க மறுத்து டாக்டர் கிருஷ்ணசாமி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
பின்னர் சட்டசபைக்கு வெளியே அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘பாவூர்சத்திரம் அருகே 2 பள்ளி மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பேச முற்பட்டேன். நேற்றும் இன்றும் அனுமதி கிடைக்கவில்லை. கவன ஈர்ப்பு தீர்மானமும் கொடுத்து இருந்தேன். இதுபற்றி பேச வாய்ப்பு கொடுக்காததால் வெளிநடப்பு செய்தேன்’’ என்றார்.

சட்டப்பேரவையில் பேச அனுமதி அளிக்காததால் புதிய தமிழகம் வெளிநடப்பு

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறும்போது, ‘‘மேட்டுப்பாளையத்தில் வனக்கல்லூரி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம், சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி இடம் மாற்றும் விவகாரம் உள்ளிட்டவை குறித்து பேச முயன்றபோது, பேரவைத் தலைவர் அனுமதிக்கவில்லை. இதனால் வெளிநடப்பு செய்தேன்’’ என்றார்.
வெளிநடப்பு செய்தது குறித்து காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி கூறும்போது, ‘‘வனக்கல்லூரி மாணவர்கள் விவகாரம், சித்தா, ஆயுர்வேத கல்லூரிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும், மோசமான சாலைகள் உள்ளிட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்த பேச முயன்றேன். ஆனால், பேரவைத் தலைவர் அனுமதிக்கவில்லை. இதைக் கண்டித்து வெளிநடப்பு செய்தேன்’’ என்றார்.

புதன், 18 பிப்ரவரி, 2015

சட்டைசபையில் இருந்து டாக்டா் கிருஷ்ணசாமி அவா்கள் வெளிநடப்பு.....

டாக்டர் அய்யா அவர்கள் கொண்டுவந்த மிக முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் பிரச்சினைகள் குறித்த கவன ஈர்ப்புத் தீர்மானங்கள்:
1) திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியத்துக்குட்பட்ட இ.வெள்ளைகால் கிராமத்தைச் சேர்ந்த மாரிச்செல்வம், முருகன் ஆகிய பள்ளி மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டு 3 வாரங்கள் ஆகியும் உண்மைக் குற்றவாளிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படாதது குறித்து
2) தமிழகம் முழுவதும் கடந்த ஓராண்டில் பட்டியலின மக்கள் மீது நடத்தப்பட்ட 100-க்கும் மேற்ப்பட்ட படுகொலைகள் குறித்து.
3) தமிழககத்தில் கடந்த சில மாதங்களாக நிகழ்ந்துவரும் கெளரவக் கொலைகளை தடுக்கும் தனிச்சட்டம் கொண்டுவருதல் குறித்த கவன ஈர்ப்புத் தீர்மானம்.
4) விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகிலுள்ள திருமலைப்புரம்-அகரத்துப்பட்டி பட்டியலின மக்களை தங்கள் நிலங்களில் விவசாயம் செய்யவிடாமல் தடுத்துவரும் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மீது அரசு நடவடிக்கை எடுக்காதது குறித்து.
5) பள்ளர், குடும்பர், காலாடி, பண்ணாடி, தேவேந்திரகுலத்தான் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் ஒரே சமுதாய மக்களை தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை பிறப்பிக்கக் கோருவது குறித்து.
6) சுயநிதி கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயின்று வரும் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கும் அரசாணை எண்.92- ஐ தமிழ்நாடு அரசு முழுவதுமாக அமல்படுத்தாதது குறித்து.
7) சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்வதை எதிர்த்து போராடிவரும் சட்டக்கல்லூரி மாணவர்களின் போராட்டம் குறித்து.
8) கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அரசு வனக்கல்லூரி மாணவர்கள் தங்களது படிப்பிற்கு உரிய வேலைவாய்ப்பு அளிக்கமறுக்கும் அரசாணையில் திருத்தம் கொண்டுவரக்கோரி தொடர்ச்சியாக பல நாட்களாக நடத்தி வரும் போராட்டம் குறித்து.
9) கோவை சி.பி.எம். தனியார் கல்லூரி மாணவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து நடத்திவரும்போராட்டங்கள் குறித்து.
10) கல்விபெறும் உரிமைச்சட்டத்தின் படி தனியார்பள்ளிகளுக்கு அரசால் வழங்கப்படவேண்டிய நிதியை தமிழக அரசு வழங்காததால், தனியார் பள்ளிகள் ஏழை மாணவர்களுக்கான 25 % இடஒதுக்கீட்டை அளிக்கமறுக்கப்படும் நிலை குறித்து.
11) விருதுநகர் மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி மக்களின் வாழ்வாதாரமாக விளங்கக்கூடிய ஆலங்குளம் அரசு சிமெண்ட் ஆலையை நவீனப்படுத்துவதன் அவசியம் குறித்து.
12) கரும்புப் பயிரிடும் தமிழக விவசாயிப் பெருங்குடி மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3500 விலை நிர்ணயம் செய்யக் கோருவது குறித்து.
13) தென்தமிழக விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி வட்டத்துக்குட்பட்ட மேற்குத் தொடர்ச்சிமலையிலுள்ள செண்பகவல்லி அணையை பழுது நீக்கி சீர்செய்ய மத்திய அரசின் உதவியை நாடுவது குறித்து.
14) திருநெல்வேலி மாவட்டம் மானூர் மதிகெட்டான் குளத்தை சீர்செய்ய தமிழக அரசை வலியுறுத்துவது குறித்து.
15) தமிழ்நாடெங்கும் மிகப்பெரிய சமூகச் சீரழிவை உண்டாக்கிவரும் மதுக்கடைகளை ஒழிப்பது குறித்து.
16) தமிழகத்தின் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பல்வேறு தரப்பினரால் ஆக்கிரமிக்கப்பட்ட ஆக்கிரமைப்புகளை அகற்றுவது குறித்து.
17) தமிழகத்தின் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளால் பெருகிவரும் டெங்குக் காய்ச்சல் மற்றும் பிற அபாயகரமான நோய்களால் தொடர்ந்து தமிழக மக்கள் பாதிக்கப்படுவது குறித்து.
18) இராஜபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் மிக வேகமாகப் பரவிவரும் டெங்குக் காய்ச்சல் மற்றும் பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுப்பது குறித்து.
19) மின்துறையில் ஏற்படும் ஊழல்கள் மற்றும் மின்பற்றாக்குறை ஆகியவை குறித்து கவன ஈர்ப்புத்
தீர்மானங்களை கொண்டுவந்தார்.. புதிய தமிழகம் கட்சி உறுப்பினர் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் வெளிநடப்பு செய்துள்ளார்.

செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

சட்டைசபையில் இருந்து டாக்டா் கிருஷ்ணசாமி அவா்கள் வெளிநடப்பு.....

தமிழக சட்டமன்றத்தில் ஆளுநா் உரை ஆற்றுவதற்கு இன்றைய ஆளுநருக்கு எந்தவிதமான தகுதியும் கிடையாது. அவா் திரும்பிபோக வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சாா்பாக என்னுடைய கண்டனத்தை பதிவுசெய்துவிட்டு வெளிநடப்பு செய்துள்ளேன்.
ஒரு ஜனநாயக நாட்டில் ஜனநாயகத்தினுடைய அனைத்து அம்சங்களையும் பாதுகாக்கக்கூடிய பொறுப்புடைய ஆளுநரே, ஆளுங்கட்சியினுடைய கைக்கூலி போல செயல்படுவது எந்தவிதத்தில் நியாயாமாக இருக்கமுடியும்? அவா் இந்த சட்டமன்றத்தில் உரையாற்றினால் அது அண்ணாதிமுகவின் செயற்குழுவிலோ, பொதுக்குழுவிலோ உரையாற்றுவது போல இருக்கமுடியுமே தவிர, அனைத்து சட்டமன்ற உறுப்பினரா்களை உள்ளடக்கிய எட்டுகோடி தமிழ் மக்களின் அபிலாசைகளையும் பிரதபலிக்ககூடிய சட்டமன்றத்தில் நியாயமாக ஜனநாயக கடமையை நிவேற்றக்கூடிய ஆளுநா் உரையாக அமையாது.
டாக்டா்.கிருஷ்ணசாமி
(தமிழகத்தில் நடைந்துள்ள கௌரவக் கொலைகளைக் குறித்து மனு அளிக்க மூன்று முறைகடிதம் எழுதியும் தங்கள் கட்சியினா் ஆளுநரை சந்திக்க ஆளுநா் அனுமதி மறுத்ததும் குறிப்பிடத்தக்கது.)

ஆளுநர் ரோசய்யா அரசின் கைப்பாவையாக செயல்படுகிறார் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு..

தமிழக சட்டப் பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் ரோசய்யா உரையைப் புறக்கணித்து புதிய தமிழகம் கட்சி உறுப்பினர் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் வெளிநடப்பு செய்துள்ளார்.அவைக்கு வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்:-தமிழகத்தில் சட்டம்,ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.இங்கே நடைபெறும் கொலை வழக்குகளில் சரியான விசாரனை மேற்கொள்ளப்படுவதில்லை.கவுரவக் கொலைகள் அதிகரித்து வருகின்றன.சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய ஆளாநர் அரசின் கைப்பாவையாக செயல்படுகிறார்.என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

, கீழப்பாவூா் ஒன்றியம் புதிய தமிழகம் கட்சியினா் சாலை மறியல்..

கடந்த 05.02.2015 அன்று கீழப்பாவூா் ஒன்றியம் வெள்ளகால் கிராமத்தைச் சோ்ந்த தேவேந்திிரகுல மாணவா்களாகிய மாாிச்செல்வம் மற்றும் முருகானந்தம் என்ற முருகன் ஆகிய இருவரும் மா்ம நபா்களால் அடித்து படுகொலை செய்யப்பட்டது தொியவந்தது. ஆனால் படுகொலை செய்து 13 நாட்கள் ஆகியும் இதுவரை உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இதைக் கண்டித்து வெள்ளகால் கிராமத்தைச் சுற்றியுள்ள 10க்கும் மேற்ப்பட்ட கிராமங்களைச் சோ்ந்த தேவேந்திரகுல மக்கள் ஒன்றுகூடி ஏராளமான பெண்கள் உட்பட 1500க்கும் மேற்ப்ட்டோா் புதிய தமிழகம் கட்சியின் மேற்கு மாவட்டச் செயலாள் திரு. ஜெயக்குமாா் அவா்கள் தலைமையில் இன்று பாவூசத்திரம் பஸ்நிலையம் முன்பு தென்காசி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்தனா். இதனால் இரண்டு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மாவட்ட எஸ்பி அவா்கள் நோில் வந்து பொதுமக்களிடம் இன்று மாலைக்குள் உண்மையான குற்றவாளிகளை உங்களுக்கு தொியப்படுத்துவோம் என்று கூறியதன்போில் சாலை மறியல் கைவிடப்பட்டது என்றும் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யவில்லை என்றால் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவா் டாக்டா் அய்யா அவா்களின் ஆணைக்கினங்க அடுத்தக்கட்ட போராட்டம் அறிவிக்கப்படும் என்று நெல்லை மேற்கு மாவட்டச் செயலாளா் திரு. ஜெயக்குமாா் கூறியுள்ளாா்.
இந்நிகழ்ச்சியின்போது. புதிய தமிழகம் மத்திய மாவட்டச் செயலாளா் திரு. இராமகிருஷ்ணன் கிழக்கு மாவட்டச் செயலாளா் திரு. நடராஜன் வடக்கு மாவட்டச் செயலாளா் திரு. இன்பராஜ் மற்றும் பாறை இராமச்சந்திரன் மற்றும் கீழப்பாவூா் ஒன்றிய செயலாளா் முருகேசன் கடையநல்லூா் ஒன்றிய செயலாளா் மகேஷ் மற்றும் ஆலங்குளம் ஒன்றிய செயலாளா் மணி உட்பட நகரம் மற்றும் ஒன்றியம் மற்றும் கிளை பொறுப்பாளா்கள் அனைவரும் கலந்துகொண்டனா்..

வியாழன், 12 பிப்ரவரி, 2015

போக்குவரத்து கட்டமைப்பை விரைவுப்படுத்த வலியுறுத்தல்: மார்ச் 6-ல் புதிய தமிழகம் ஆர்ப்பாட்டம்..

தமிழகத்தில் ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து கட்ட மைப்பை தாமதிக்காமல் விரைந்து முடிக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கே.கிருஷ்ணசாமி வலியுறுத்தி யுள்ளார்.
கோவையில் நிருபர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:
புதுடெல்லியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு தேசியக் கட்சிகளும் வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்துள்ளன. இரு தேசியக் கட்சிகள் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளதை தேர்தல் முடிவு காட்டியுள்ளது. குறிப்பாக, பாஜகவின் ஆட்சி மீது மக்கள் அதிருப்தி அடைந்துள் ளனர். மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.
தமிழகத்தில் போக்குவரத்து கட்டமைப்பின் மீது மத்திய அரசு அக்கறை செலுத்தாமல் இருந்து வருகிறது. குறிப்பாக, போத் தனூர் - பொள்ளாச்சி வரையிலான அகல ரயில்பாதைத் திட்டத்தை பல ஆண்டுகளாக முடிக்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளனர்.
இதேபோல், திண்டுக்கல் முதல் உடுமலை, சத்தியமங்கலம், மைசூர் வரையிலான 4 வழிப் பாதை அமைக்கும் பணியும் அறிவிப்போடு நிற்கிறது. இதனால் உற்பத்தி பொருட் களை விரைந்து கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, போத்தனூர் - பொள்ளாச்சி ரயில்பாதை பணியை முடிக்காமல் இழுத் தடித்து வருவது இப்பகுதி மக்களை மிகுந்த சிரமத்துக்கு உள் ளாக்கியுள்ளது. இந்த அகல ரயில்பாதைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் மார்ச் 6-ம் தேதி கோவையில் எனது தலை மையில் ஆர்ப்பாட்டம் நடத்தப் படும். மேலும் இதர 5 மண்டலங்க ளிலும் போக்குவரத்து கட்ட மைப்பை மேம்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.

சனி, 7 பிப்ரவரி, 2015

சென்னை சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு கிருஷ்ணசாமி ஆதரவு...


சென்னை சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்யும் விவகாரத்தை எதிர்த்து போராடி வரும் சட்டக் கல்லூரி மாணவர்களை புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இன்று சந்தித்துப் பேசினார்.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு தெரிவிப்பதாகவும் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.
நியாயமான கோரிக்கைகளுக்காக போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ள கிருஷ்ணசாமி, இடமாற்றம் தொடர்பாக மாணவர்களுடன் பேசிய தமிழக அரசு முடிவெடுத்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.

ஆலங்குளம் சிமெண்டு ஆலையை செயல்படுத்த கோரி புதிய தமிழகம் கட்சியினர் 9 இடங்களில் மறியலுக்கு முயற்சி 2 பெண்கள் உள்பட 339 பேர் கைது..விருதுநகர் மாவட்டத்தில் ஆலங்குளம் சிமெண்டு ஆலையை நவீனப்படுத்தி செயல் படுத்த கோரி 9 இடங்களில் மறியலுக்கு முயன்ற புதிய தமிழகம் கட்சியினர் 339 கைது செய்யப்பட்டனர்.

அறிவிப்பு


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் சிமெண்டு ஆலையை ரூ.165 கோடி மதிப்பீட்டில் நவீனப்படுத்தி அதனை மீண்டும் செயல் படுத்த கோரி புதிய தமிழகம் கட்சியினர் நேற்று கடை அடைப்பு மற்றும் மறியல் செய்ய போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று ஆலங்குளத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. மாவட்டத்தின் பிற பகுதியில் சில கடைகள் மட்டும் அடைக்கப்பட்டிருந் தன. இதனால் இயல்பு வாழ்க்கை எதுவும் பாதிக்கப் படவில்லை.

மறியல்


மாவட்டம் முழுவதும் 8 இடங்களில் கோரிக்கையை வலியுறுத்தி மறியல் செய்ய முயன்ற புதிய தமிழகம் கட்சி யினர் கைது செய்யப் பட்ட னர். விருதுநகரில் கிழக்கு மாவட்ட செயலாளர் ராம ராஜ் தலைமையில் 18 பேரும், ராஜபாளையத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜ லிங்கம் தலைமையில் 117 பேரும், சாத்தூரில் மத்திய மாவட்ட செயலாளர் செல்லக் கனி தலைமையில் 46 பேரும், கிருஷ்ணன் கோவிலில் ஒன் றிய செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் 29 பேரும் கைதாயினர்.

சிவகாசி

சிவகாசியில் கார்த்தி தலை மையில் 2 பெண்கள் உள்பட 22 பேரும், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒன்றிய செயலாளர் கண்ணன் தலைமையில் 31 பேரும், ஆலங்குளத்தில் ஒன்றிய செய லாளர் அழகுமலை தலைமை யில் 33 பேரும், காரியாபட்டி யில் ஒன்றிய செயலாளர் சேகர் தலைமையில் 26 பேரும், அருப்புக்கோட்டையில் ராமச்சந்திரன் தலைமையில் 17 பேரும் கைதாயினர். மொத்தம் 2 பெண்கள் உள்பட 339 பேர் கைதாயினர். 

சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு....

krishnasamy
சென்னை சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்யும் விவகாரத்தை எதிர்த்து போராடி வரும் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.
 
சென்னை உயர் நீகதிமன்ற வளாகத்தில் செயல்பட்டுவரும், டாக்டர் அம்பேத்கார் சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்யும் விவகாரத்தை சட்டக் கல்லூரி மாணவர்களை புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி நேரில் சந்தித்துப் பேசினார்.
 
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு தெரிவிப்பதாக அவர் அறிவித்துள்ளார்.
 
கிருஷ்ணசாமி, நியாயமான கோரிக்கைகளுக்காக போராடியவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இடமாற்றம் தொடர்பாக மாணவர்களுடன் பேசிய தமிழக அரசு முடிவெடுத்திருக்க வேண்டும் என்று கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினர் 339 பேர் கைது

ஆலங்குளம் சிமெண்ட் தொழிற்சாலையை நவீனப்படுத்தி மீண்டும் இயக்க வலியுறுத்தி வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினர் 339 பேரை போலீஸார் கைது செய்தனர்.
   விருதுநகர் மாவட்டம், ஆலங்குளத்தில் இயங்கி வரும் அரசு சிமெண்ட் தொழிற்சாலையை நவீனப்படுத்தி இயக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியினர் மாவட்டம் முழுவதும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தனர். அதையடுத்து, பல்வேறு பகுதிகளில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
    இதில் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராமராஜ் தலைமை வகித்தார். உடனே அப்பகுதியில் பாதுகாப்பு பணிகளுக்கு நிறுத்தப்பட்டிருந்த மேற்கு காவல் நிலைய போலீஸார் மறியலில் ஈடுபட்ட 18 பேரையும் கைது செய்தனர்.
    இதேபோல், சிவகாசி பேருந்து நிலையம் முன்பு தொகுதி கழக செயலாளர் முத்துக்கிருஷ்ணன் தலைமையில் 22 பேரும், அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் முன்பு நகர செயலாளர் தனசேகரன் தலைமையில் 17 பேரும், காரியாபட்டி பேருந்து நிலையம் முன்பு ஒன்றிய செயலாளர் சேகர் தலைமையில் 26 பேரும், ராஜபாளையம் அரசு பிரசவ மருத்துவமனை வளாகம் முன்பு மேற்கு மாவட்ட செயலாளர் ராஜலிங்கம் தலைமையில் 117 பேரும், ஆலங்குளத்தில் அரசு சிமெண்ட் தொழிற்சாலை வளாகம் முன்பு வெம்பக்கோட்டை ஒன்றியச் செயலாளர் அழகுமலை தலைமையில் 33 பேரும், சாத்தூர் பேருந்து நிலையம் முன்பு நகரச் செயலாளர் செல்லக்கனி தலைமையில் 46 பேரும், ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் முன்பு ஒன்றியச் செயலாளர் கண்ணன் தலைமையில் 31 பேரும், கிருஷ்ணன்கோயில் பேருந்து நிறுத்தம் முன்பு செயலாளர் பொன்ராஜ் தலைமையில் 29 பேரும் என மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மொத்தம் 339 பேரை போலீஸார் கைது செய்தனர். 

விருதுநகர் மாவட்டத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினர் 339 பேர் கைது

ஆலங்குளம் சிமெண்ட் தொழிற்சாலையை நவீனப்படுத்தி மீண்டும் இயக்க வலியுறுத்தி வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினர் 339 பேரை போலீஸார் கைது செய்தனர்.
   விருதுநகர் மாவட்டம், ஆலங்குளத்தில் இயங்கி வரும் அரசு சிமெண்ட் தொழிற்சாலையை நவீனப்படுத்தி இயக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியினர் மாவட்டம் முழுவதும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தனர். அதையடுத்து, பல்வேறு பகுதிகளில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
    இதில் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராமராஜ் தலைமை வகித்தார். உடனே அப்பகுதியில் பாதுகாப்பு பணிகளுக்கு நிறுத்தப்பட்டிருந்த மேற்கு காவல் நிலைய போலீஸார் மறியலில் ஈடுபட்ட 18 பேரையும் கைது செய்தனர்.
    இதேபோல், சிவகாசி பேருந்து நிலையம் முன்பு தொகுதி கழக செயலாளர் முத்துக்கிருஷ்ணன் தலைமையில் 22 பேரும், அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் முன்பு நகர செயலாளர் தனசேகரன் தலைமையில் 17 பேரும், காரியாபட்டி பேருந்து நிலையம் முன்பு ஒன்றிய செயலாளர் சேகர் தலைமையில் 26 பேரும், ராஜபாளையம் அரசு பிரசவ மருத்துவமனை வளாகம் முன்பு மேற்கு மாவட்ட செயலாளர் ராஜலிங்கம் தலைமையில் 117 பேரும், ஆலங்குளத்தில் அரசு சிமெண்ட் தொழிற்சாலை வளாகம் முன்பு வெம்பக்கோட்டை ஒன்றியச் செயலாளர் அழகுமலை தலைமையில் 33 பேரும், சாத்தூர் பேருந்து நிலையம் முன்பு நகரச் செயலாளர் செல்லக்கனி தலைமையில் 46 பேரும், ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் முன்பு ஒன்றியச் செயலாளர் கண்ணன் தலைமையில் 31 பேரும், கிருஷ்ணன்கோயில் பேருந்து நிறுத்தம் முன்பு செயலாளர் பொன்ராஜ் தலைமையில் 29 பேரும் என மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மொத்தம் 339 பேரை போலீஸார் கைது செய்தனர். 

ஆலங்குளம் சிமென்ட் ஆலையை இயக்க புதிய தமிழகம் கட்சி 9 இடங்களில் மறியல்..

விருதுநகர்:ஆலங்குளம் சிமென்ட் ஆலையை இயக்க கோரி புதிய தமிழகம் கட்சி சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் 9 இடங்களில் நடந்த மறியலை தொடர்ந்து, 339 பேர் கைது செய்யப்பட்டனர். ஆலங்குளம் அரசு சிமென்ட் ஆலையை நவீனப்படுத்த அரசு ஒதுக்கிய ரூ. 165 கோடியை உடனடியாக ஒதுக்கீடு செய்து, ஆலையை திறக்க கோரி விருதுநகர் மாவட்டத்தில் பிப்.6ல் பொதுகடையடைப்பு மற்றும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என புதிய தமிழகம் அறிவித்திருந்தது. அதன் படி கட்சியினர் நேற்று சிவகாசி, அருப்புக்கோட்டை, ராஜபாளையம் உள்ளிட்ட 9 இடங்களில் மறியலில் ஈடுப்பட்டனர் . கடைகள், போக்குவரத்துக்கள் வழக்கம் போல் இயங்கின. விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரில் நகர தலைவர் ராமராஜ் தலைமையில் 18 பேர் பங்கேற்றனர்.

* சிவகாசி பஸ் ஸ்டாண்ட் எதிரே புதிய தமிழகம் மாவட்ட செய்தி தொடர்பாளர் கார்த்திக் தலைமையில், மாவட்ட மகளிர் அணி செயலாளர் பாண்டியம்மாள் முன்னிலையில் 20 பேர் ரோடு மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை இன்ஸ்பெக்டர் சீனிவாசன் கைதுசெய்தார். ராஜபாளையத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜாங்கம் தலைமை வகித்தார். மாநில பேச்சாளர் பொன்னுச்சாமி, வக்கீல் குமார், நகர் செயலாளர் முத்து முன்னிலை வகித்தனர். போக்குவரத்து பிரிவு செயலாளர் காளிமுத்து, கனகராஜ், கண்ணன், பெரியசாமி கலந்துகொண்டனர்.
* ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்ட் முன்பு வடக்கு ஒன்றிய செயலாளர் கண்ணன் உட்பட 31 பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணன்கோவிலில் மாவட்ட இளைஞரணி செயலாளர் பவுல் ராஜ் தலைமையில் 29 பேரை கைது செய்தனர்.
* சாத்தூர் காமராஜர் சிலை எதிரில் மாவட்ட மத்திய செயலாளர் செல்லக்கனி தலைமையில் அக்கட்சியினர் 46 பேர் ரோடு மறியல் செய்ய முயன்றனர். போலீசார் கைது செய்தனர். முன்னதாக கடைகளை அடைக்க கோரி கட்சியினர் முன்னாள் ஒன்றிய செயலாளர் கலைச்செல்வன் தலைமையில் ஊர்வலமாக சென்றனர்.
மாவட்டம் முழுவதும் கட்சியினர் 339 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

குற்றவாளிகளை கைது செய்யக்கோாி தேவேந்திரகுல மக்கள் சாலை மறியல்..

கீழப்பாவூா் ஒன்றியம் வெள்ளங்கால் கிராமத்தில் மாாிச்செல்வம் மற்றும் முருகன் இருவரும் 05.02.2015 நேற்று அடித்து கொலை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. ஆனால் இதுவரைக்கும் குற்றவாளிகள் கைது செய்யப்பட் வில்லை. இதைக்கண்டித்து சுரண்டை - பாவூா்சத்திரம் செல்லும் போக்குவரத்து சாலையில் தேவேந்திரகுல மக்கள் 300 மேற்பட்டோ் சாலை மறியல் செய்தனா்.
இச்சம்பவத்தில் கோட்டாட்சியா், தாசில்தாா் மற்றும் டிஎஸ்பி மற்றும் ஏடிஎஸ்பி அவா்களின் பேச்சுவாா்த்தைகளின் உடன்படிக்கையின்படி குற்றவாளிகள் இரண் நாட்களுக்குள் கைது செய்யப்படுவா். குற்றவாளிகள் மாற்று சமுதாயத்தினராக இருந்தால் அவா்கள் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் வழக்கு பதிவு செய்யப்படும். மேலும் சட்டத்திற்கு உட்பட்ட அனைத்து நடைவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்ததன்போில் சாலைமறியல் கைவிடப்பட்டது.
மேலும் புதிய தமிழகம் மேற்கு மாவட்டச்செயலாளா் திரு. ஜெயக்குமாா் அவா்கள் பேசுகையில் இன்னும் இரண்டு நாட்களுக்குள் குற்றவாளிகள் கைதுசெய்யப்பட வேண்டும். அதுவரைக்கும் மாாிச்செல்வம் மற்றும் முருகன் அவா்களின் உடல்களை வாங்கமாட்டோம் என்றும் குற்றவாளிகள் கைது செய்யவில்லை என்றால் 40க்கும் மேற்றபட்ட கிராம மக்களை ஒன்றுதிரட்டி புதிய தமிழகம் நிறுவனத் தலைவா் டாக்டா் அய்யா அவா்களின் தலைமையில் பாவூா்சத்திரம் திருநெல்வேலி நெடுஞ்சாலையில் சாலை மறியல் மற்றும் போரட்டம் நடைபெறும் என்று அறிவித்தாா்.
இந்நிகழ்ச்சியின்போது புதிய தமிகம் மேற்கு மாவட்டச் செயலாளா் திரு. ஜெயக்குமாா் நெல்லை மாநகா் மாவட்டச் செயலாளா் திரு.இராமகிருஷ்ணன் கிழக்கு மாவட்டச் செயலாளா் திரு. நடராஜன் மற்றும் கீழப்பாவூா் ஒன்றிய செயலாளா்முருகேசன் மற்றும் கடையநல்லூா் ஒன்றிய செயலாளா் மகேஷ் மற்றும் தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளா் சந்திரன் மற்றும் முன்னாள் மாவட்ட மாணவரணி ஆறுமுகச்சாமி அவா்கள் உடனிருந்தனா்.