ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 31 ஜூலை, 2012

தேவேந்திர குல இளைஞர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்.

அண்ணன் பசுபதி அவர்கள் நம் சமுதாய வளர்ச்சிக்கு மிகவும் பாடுபட்டவர். மக்கள் மனதில் எழுச்சியை ஊட்டியவர். திருப்பி அடி என்ற துணிச்சலை குடுத்தவர். ஆனால் அவரது குழந்தைகள் இன்று அரவணைக்க ஆளில்லாமல் அனாதைகளாக நிற்கிறார்கள். அவர்களது படிப்பு செலவிற்க அவகளது சொந்த பெயரில் வங்கி கணக்கு திறக்கப்பட்டுள்ளது. இது மறுத்த மலரில் வெளி வந்தும் மிகவும் குறைவான பணமே சேர்ந்துள்ளது வருத்தமளிக்கிறது.
ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் செய்ய நினைத்தாள் அது இயலாத காரியம். ஆகவே இளைன்கர்கள் உண்டியல் வசூல் மூலம் அவரவர் கிராமத்தில் மக்களிடம் வசூலித்தல் நல்ல தொகை கிடைக்கும், தயவு செய்து தனை ஒவ்வொரு இளைங்கர்களும் அந்த குழந்தைகளை தனது சொந்த சகோதரர்களாக பாவித்து இதனை செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். 

ACCOUNT DETAILS - STATE BANK OF INDIA, KANDASAMYPURAM (BRANCH), Branch Code-8145, Tuticorin,
SANTHANA PRIYA - 32156436236
SANTHOSH PANDIAN - 32156438608

வியாழன், 26 ஜூலை, 2012

வ.புதுப்பட்டி பிரச்னை: சமாதானக் கூட்டத்தில் திருமாவளவன், ஜான்பாண்டியன் பங்கேற்பு

ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூலை 24: ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வ.புதுப்பட்டி கிராமத்தில் சுமார் 20 ஆண்டுகளாக இருதரப்பு மக்களிடையே நீடித்து வரும் மோதல் போக்கிற்கு தீர்வு காண்பதற்கான சமாதானக் கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த மோதல்களைத் தடுத்து நிறுத்தி இரு சமூக மக்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்கும் முயற்சியில் சமூகச் செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், வழக்குரைஞர்கள், பேராசிரியர்கள் அடங்கிய அமைதிக் குழு ஏற்படுத்தப்பட்டது. இக்குழு கடந்த ஒரு மாதமாக ஒடுக்கப்பட்ட சமூக இயக்கத் தலைவர்களைச் சந்தித்துப் பேசியது. அதனடிப்படையில் இக் கூட்டம் நடத்தப்பட்டது.யாக்கன் தலைமையிலான இந்தக் குழுவில் சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் மற்றும் சாதி ஒழிப்பும் முன்னணி அமைப்பாளர் ரஜினிகாந்த், சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் மற்றும் அம்பேத்கர் மக்கள் விடுதலை இயக்க மாநில பொதுச் செயலாளர் தமிழ்இனியன், சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் சத்திய சந்தீபன், தலித் முரசு ஆசிரியர் புனிதபாண்டியன், குருஞானக் கல்லூரி பேராசிரியர் ஜெயகணேஷ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.மேலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டின், தியாகி இமானுவேல் பேரவையின் பொதுச் செயலாளர் சந்திரபோஸ் மற்றும் குறிப்பிட்ட சமுதாயத்தின் வ.புதுப்பட்டி பகுதி மக்கள் தலா இருவர் கலந்து கொண்டனர்.முடிவில் மூன்று தலைவர்களும் சேர்ந்து விடுத்த கூட்டறிக்கை:வ.புதுப்பட்டி கிராமத்தில் பட்டியல் சாதியினராகிய பறையர், பள்ளர் சமுதாய மக்களிடையே நீண்ட காலமாக நடந்துவரும் மோதல்கள் எங்களை வேதனையடையச் செய்துள்ளன. தொடர் மோதல்களுக்குப் பின்னால், தீர்க்கவே முடியாத சிக்கல்கள் இருப்பதாகத் தெரியவில்லை. சிறு பிரச்னைகளே கலவரங்களுக்கு அடிப்படைக் காரணங்களாக அமைந்திருக்கின்றன. தொடர் மோதல்களினால், இரு சமுதாயத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், மாணவர்கள் மீது கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் இரு சமூக மக்களின் கல்வி, பொருளாதார வளர்ச்சி பெரிதும் தடைப்பட்டுள்ளது.எனவே வ.புதுப்பட்டி கிராமத்தில் வசிக்கும் பட்டியல் சாதி மக்கள், பழைய பகைமை உணர்வுகளை விட்டொழித்து, மோதல் மனப்பான்மையைக் கைவிட்டு அமைதியாகவும், ஒற்றுமை உணர்வுடனும் வாழ வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். இரு சமூக மக்கள் மீதும் தொடரப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசையும், காவல் துறையையும், மாவட்ட நிர்வாகத்தையும் கேட்டுக் கொள்கிறோம் என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கூட்டத்தில் கலந்து கொண்ட தென்காசி மக்களவை உறுப்பினர் பொ.லிங்கம், சட்டப் பேரவை உறுப்பினர் வெ.பொன்னுப்பாண்டியன் உள்ளிட்டோரும் கையொப்பமிட்டனர்....

ஜனாதிபதி தேர்தலில் பிரணாப்புக்கு ஆதரவு புதிய தமிழகம் முடிவு

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சென்னை: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, சென்னையில் நிருபர்களிடம் இன்று கூறியதாவது: ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பிரணாப் முகர்ஜிக்கு புதிய தமிழகம் கட்சியில் உள்ள 2 எம்எல்ஏக்களும் வாக்களிப்பது என்று ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் தற்போது அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம். பிரணாப்புக்கு வாக்களிப்பதன்கூட்டணியில் எந்த பிளவும் ஏற்படாது.

சங்கரன்கோவில் மற்றும் புதுக்கோட்டையில் நடந்த இடைத்தேர்தலின்போது முதல்வர் ஜெயலலிதா எங்களை தொடர்பு கொண்டு அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால், ஜனாதிபதி தேர்தல் குறித்து எங்களிடம் எதுவும் பேசவில்லை. அதனால் சுதந்திரமாக முடிவெடுத்துள்ளோம். ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி, என்னிடம் தொலைபேசியில் நேரடியாக ஆதரவு கேட்டார். சங்மா எங்களிடம் ஆதரவு கேட்கவில்லை. அதனால் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க முடிவு செய்தோம்.

செவ்வாய், 24 ஜூலை, 2012

மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் நினைவு நாள்

திருநெல்வேலி : நெல்லையில் மாஞ்சோலை தேயிலைத்தோட்ட தொழிலாளர்களின் 13ம் ஆண்டு நினைவுநாளையொட்டி புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள், பா.ம.க., கம்யூ., உட்பட 21 கட்சிகள், அமைப்புக்களை சேர்ந்தவர்கள் ஆற்றில் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 99ம்ஆண்டு ஜூலை 23ம்தேதி கூலிஉயர்வு கேட்டு போராடி சிறையில் அடைக்கப்பட்ட மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை விடுவிக்க வலியுறுத்தி நெல்லையில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்க தோட்ட தொழிலாளர்கள் ஊர்வலம் சென்ற போது கலவரம் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தினர். 17 பேர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இறந்தனர்.
ஆண்டுதோறும் ஜூலை 23ம்தேதி ஆற்றில் மூழ்கி இறந்தவர்களுக்கு பல்வேறு அரசியல்கட்சியினர், அமைப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 13ம் ஆண்டு நினைவுநாளையொட்டி நேற்று 21 கட்சிகள், அமைப்புக்களை சேர்ந்தவர்கள் அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் ஆற்றில் அஞ்சலி செலுத்தினர்.
புதிய தமிழகம் கட்சி சார்பில் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நெல்லை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து மவுன ஊர்வலம் துவங்கியது. மாநில, மாவட்ட நிர்வாகிகள், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர். அண்ணாத்துரை சிலை முன்பு ஊர்வலம் நிறைவு பெற்றது.
பின்னர் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் எம்.எல்.ஏ., ராமசாமி, மாநில பொதுச்செயலாளர் வி.கே.அய்யர், மாவட்ட செயலாளர்கள் மாநகர் செல்லப்பா, புறநகர் சுப்பிரமணியன், தூத்துக்குடி அதிசயக்குமார், விருதுநகர் ராமராஜ் உள்ளிட்டோர் ஆற்றில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இந்திய கம்யூ.,
இந்திய கம்யூ., சார்பில் மாநில செயலாளர் தா.பாண்டியன் தலைமையில் மாவட்டச்செயலாளர் சண்முகவேல், துணைச்செயலாளர் காசிவிஸ்வநாதன், மாநகர செயலாளர் இசக்கிமுத்து உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
பா.ம.க., சார்பில் மாநில துணைப்பொதுச்செயலாளர் வியனரசு, துணைத்தலைவர் மோகன்ராஜ் தலைமையில் மாவட்ட செயலாளர் சீயோன் தங்கராஜ், தலைவர் நிக்சன், பொருளாளர் பாப்பாரத்தினம், தொழிற்சங்க செயலாளர் ஆறுமுகம், மாவட்ட துணைச்செயலாளர் ரமேஷ், தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளர் மாரியப்பன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
விடுதலை சிறுத்தைகள்
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தலைவர் திருமாவளவன், மாநில அமைப்புச்செயலாளர் ஆற்றலரசு, துணை செயலாளர் கலைவேந்தன், மாவட்ட செயலாளர் கார்த்திக் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
பா.ஜ., சார்பில் மாவட்ட தலைவர் கட்டளை ஜோதி, மாநில செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், மாநில எஸ்.சி., அணி செயலாளர் முருகதாஸ், மாவட்ட எஸ்.சி., அணி தலைவர் முத்துபலவேசம், மாவட்ட பொதுச்செயலாளர் குருசாமி, அமைப்புச்செயலாளர் ரமேஷ், செயற்குழு உறுப்பினர் நத்தம் முருகன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
த.ம.மு.க.,
த.ம.மு.க., சார்பில் நிறுவனர் ஜான் பாண்டியன் தலைமையில் மாநில அமைப்புச்செயலாளர் நெல்லையப்பன், மாநகர் மாவட்ட செயலாளர் கண்மணிமாவீரன், மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், கிழக்கு மாவட்ட செயலாளர் இன்பராஜ், மாநகர தலைவர் அந்தோணி அன்பரசன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். ஆற்றங்கரையில் நினைவுச்சின்னம் அமைக்க கையில் செங்கற்களுடன் வந்த நிர்வாகிகளை வண்ணார்பேட்டையில் போலீசார் மறித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் தேவேந்திரன் தலைமையில் மாவட்ட துணைத்தலைவர் சப்பாணி யாதவ், மாவட்ட கட்டடத்தொழிலாளர் சங்கத்தலைவர் சிவா, பிரபுகாளிதாஸ், ஆனந்த், முருகேசன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
தேசிய அம்பேத்கர் மக்கள் கழகம் சார்பில் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஞானசேகரன் தலைமையில் மாவட்ட தலைவர் பொன்னுசாமி, பொருளாளர் ராமகிருஷ்ணன், துணைத்தலைவர் ஆறுமுகம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
நாம் தமிழர் கட்சி சார்பில் தென் மண்டல அமைப்பாளர் சிவக்குமார் தலைமையில் மாவட்ட அமைப்பாளர் சக்திபிரபாகர், நடராஜன், ராம்குமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
அகில இந்திய திரிணாமூல் காங்., சார்பில் எஸ்.சி.எஸ்.டி., பிரிவு மாநில தலைவர் ராகவ் மாடசாமி, நிர்வாகிகள் கோமு, குணசேகரன், குமார், செல்லப்பா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
மள்ளர் நாடு சார்பில் மாவட்ட செயலாளர் மகேஷ், விவசாய அணி செயலாளர் தண்டாயுதபாணி, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் முத்துக்குமார், பாளை. பகுதி செயலாளர் குமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்புலிகள் சார்பில் பொதுச்செயலாளர் நாகை திருவள்ளுவன் தலைமையில் மாநில துணை பொதுச்செயலாளர்கள் முகிலரசன், முத்துக்குமார், நெல்லை மாயா, மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
ஆதித்தமிழர் பேரவை சார்பில் மாநில துணை பொதுச்செயலாளர் கண்ணன் தலைமையில் மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன், மாநகர செயலாளர் வேலாயுதம், இளைஞரணி மாவட்ட செயலாளர் இளஞ்செழியன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
மள்ளர் மீட்புக்களம் சார்பில் தலைவர் செந்தில்மள்ளர், மாவட்டத்தலைவர் சுப்பையா பாண்டியன், குமரமள்ளர், பாண்டியன், செல்லையா, ரவிக்குமார், தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
மா.லெ., கம்யூ., சார்பில் மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ் தலைமையில் முற்போக்கு பெண்கள் கழக மாநில தலைவர் தேன்மொழி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கணேசன், கருப்பசாமி, ரவிடேனியல், சபாபதி, ராமையா, மாரிமுத்து, அன்புசெல்வி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
மா.லெ.கம்யூ. மக்கள் விடுதலை சார்பில் மாநில செயலாளர் பாண்டியன் தலைமையில் மாவட்ட செயலாளர் துளசி, ராஜமாணிக்கம், மாரியப்பன், ஆறுமுகம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
செந்தமிழர் முன்னேற்றக்கழகம் சார்பில் நிறுவனத்தலைவர் ராஜா.டி. ஆனந்தன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மா.கம்யூ., சார்பில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் தலைமையில் மாவட்ட செயலாளர் பாஸ்கரன், செயற்குழு உறுப்பினர்கள் பழனி, கருணாநிதி, ஜெயராஜ், மோகன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சுடலைராஜ், வண்ணமுத்து, மாநகரக்குழு உறுப்பினர்கள் துரைராஜ், ராஜசேகரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
மத்திய, மாநில அரசு எஸ்.சி.எஸ்.டி., ஊழியர் சங்கம், மின்வாரிய டாக்டர் அம்பேத்கர் எம்ப்ளாயீஸ் யூனியன் உட்பட 21 கட்சி, அமைப்புக்களை சேர்ந்தவர்கள் ஆற்றில் அஞ்சலி செலுத்தினர்.

தாமிரபரணி ஆற்றங்கரையில் மணிமண்டபம் : புதிய தமிழகம் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

திருநெல்வேலி : நெல்லை ஆற்றங்கரையில் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நினைவு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
நெல்லை தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இறந்த மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு புதிய தமிழகம் கட்சித்தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான கிருஷ்ணசாமி கட்சியினருடன் நேற்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் கூறியதாவது:
நெல்லை, கோயம்புத்தூர், நீலகிரி, திண்டுக்கல், சேலம் மாவட்டங்களை சேர்ந்த 5 லட்சம் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சட்டரீதியிலான உரிமைகள் அளிக்கப்பட வலியுறுத்தி 99ம் ஆண்டு நெல்லையில் பேரணி நடத்தினோம்.
அப்போது போலீசார் தடியடி நடத்தியதில் ஒரு வயது விக்னேஷ் உட்பட 17 பேர் ஆற்றில் மூழ்கி இறந்தனர். இறந்தவர்களுக்கு ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தி வருகிறோம்.
ஜாதி, மதம், அனைத்தையும் கடந்து ஆற்றில் மூழ்கி இறந்த 17 பேருக்கு நினைவஞ்சலி செலுத்த ஆற்றங்கரையில் இடம் ஒதுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்தவர்கள் நினைவாக மணிமண்டபம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

தாமிரபரணியில் மூழ்கி இறந்தவர்களுக்கு 13ம் ஆண்டு நினைவு தினத்தில் மலரஞ்சலி

நெல்லை : நெல்லை தாமிரபரணி ஆற்றில் இறந்த மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் நினைவு தினத்தையொட்டி அனைத்துக்கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். 1999ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தனர். அப்போது போலீசார் நடத்திய தடியடியில் 17 பேர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இறந்தனர்.

அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஆண்டு தோறும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளால் தாமிரபரணி ஆற்று நீரில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதன் ஒருபகுதியாக கொக்கிரகுளத்தில் நடந்த நிகழ்ச்சியில், இந்தியக் கம்யூனிஸ்ட் சார்பில் மாநில செயலாளர் தா.பாண்டியன் தலைமையில் அக்கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ தலைமையில் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து அமைதிப் பேரணி நடந்தது. பின்னர் ஆற்றில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையிலும், திரிணாமுல் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ராகவ் மாடசாமி தலைமையிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. பாமக சார்பில் மாநில துணைப் பொதுச் செயலாளர் வியனரசு, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் ஆகியோர் ஊர்வமலாக சென்று அஞ்சலி செலுத்தினர்.
பா.ஜ., சார்பில் எஸ்சி அணி மாநில செயலாளர் முருகதாஸ் தலைமை யிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவன தலைவர் தொல் திருமாவளவன் தலைமையிலும் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

மாநகர போலீஸ் கமிஷனர் கருணாசாகர் மேற்பார்வையில் துணை கமிஷனர் ஜெயபாலன் தலைமையில் கொக்கிர குளம் தாமிரபரணி ஆற்றங்கரை, சந்திப்பு, வண்ணார்பேட்டை பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

தாமிரபரணியில் 17 பேர் பலியானதன் 13ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

திருநெல்வேலி: நெல்லை, தாமிரபரணியில் உயிர் நீத்த 17 பேரின் நினைவு தினத்தையொட்டி, பல்வேறு கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். கடந்த 1999ல், நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கோரி நடந்த ஊர்வலம், கலெக்டர் அலுவலகம் அருகே வந்தபோது, போலீசார் தடியடி நடத்தினர். அப்போது, தாமிரபரணி ஆற்றில் மூழ்கி, 17 பேர் பலியாகினர். தி.மு.க., ஆட்சியில் நடந்த இந்த சம்பவத்தின் 13வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் தா.பாண்டியன், புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட், பா.ஜ., மள்ளர் மீட்புகளம், பா.ம.க., ஆதிதமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். ஒவ்வொரு கட்சியினருக்கும் தனித்தனியே நேரம் ஒதுக்கி, போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்ததால், அஞ்சலி நிகழ்ச்சிகள் அமைதியாக நடந்தன. ஜான் பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தலைவர்களைக் கொண்ட மாஞ்சோலை போராளிகள் நினைவுத் தூண் அமைப்புக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அக்குழுவினர் நெல்லை கலெக்டரைச் சந்தித்து, நினைவுத் தூண் அமைக்க, ஆற்றுப்படுகையில் 10 சென்ட் நிலம் ஒதுக்கித் தருமாறு கேட்டனர்.

திங்கள், 23 ஜூலை, 2012

நீர் ஆதாரங்களை பாதுகாக்க போராட்டம் "புதிய தமிழகம்' கிருஷ்ணசாமி அழைப்பு

கோவை : ""தமிழகத்தின் நீர் ஆதாரங்களை பாதுகாக்க, அனைத்து அமைப்புகளும் ஒன்று திரண்டு போராடும் விதத்தில், ஆக., 6ம் தேதி சென்னையில் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்படும்'' என, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி
தெரிவித்தார்.கோவையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தேயிலை தோட்டத் தொழிலாளர் உரிமைக்காக, 1999 ஜூலை 23ல், "புதிய தமிழகம்' தலைமையில், திருநெல்வேலியில் நடந்த பேரணியில், போலீஸ் தாக்குதலுக்கு ஆளாகி, 17 பேர் தாமிரபரணி ஆற்றில் இறந்தனர். அவர்களின் 14வது நினைவு தினத்தை முன்னிட்டு, நாளை (இன்று) திருநெல்வேலியில் பேரணி மற்றும் மவுன அஞ்சலி நடக்கிறது. தமிழகத்தின் நீர் ஆதாரங்கள் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளன. நீர் ஆதாரங்களை பாதுகாக்க தொடர்ச்சியான போராட்டங்கள் நடத்த, தமிழக அளவில் அனைத்து அமைப்புகளையும் ஒன்று திரட்டி, ஆக., 6ம் தேதி சென்னையில், ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்துகிறோம். டாஸ்மாக் "பார்' ஒப்பந்த படிவ வினியோகத்தில்,விண்ணப்பங்களை வெளிப்படையாக கொடுக்காமல், குறிப்பிட்ட சிலருக்கு தருவதாக திண்டுக்கல், திருவள்ளூர் மாவட்டங்களில் புகார்கள் வந்துள்ளன. இது அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும்; அரசு வருமானத்தில் நஷ்டத்தை தரும். தகுதியுடையவர்களுக்கு மட்டும் வாய்ப்பு தர, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

சனி, 14 ஜூலை, 2012

மீண்டெழும் பாண்டியர் வரலாறு எனும் ஆய்வு

திரு.கு.செந்தில்மள்ளர் தனது படைப்பான மீண்டெழும் பாண்டியர் வரலாறு எனும் ஆய்வு நூலில் மறுக்க முடியாத இலக்கிய,கல்வெட்டு,செப்பேடு,நில ஆவனம் உள்ளிட்ட சான்றுகளால் பள்ளர்களே பாண்டியர்கள் என மெய்ப்பித்திருக்கிறார். தமிழ்நாட்டின் மிக உயர்ந்த தரத்தில் வந்துள்ள முதல்தர புத்தகம் மள்ளர்களால் மள்ளர்களே பாண்டியர்கள் என எழுதப்பட்ட உலக தரத்தில் அச்சடிக்கப்பட்ட புத்தகம் அவசியம் வாங்கி படியுங்கள்

கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தலைமையில் அமைச்சரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தலைமையில் அமைச்சரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
தூத்துக்குடி, ஜூலை.12-

தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய்த்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆய்வுகூட்டம் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தூத்துக்குடி வந்தார். அப்போது புதியதமிழகம் கட்சி தலைவரும், ஓட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ. வுமான டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் அமைச்சரை முற்றுகையிட்டனர்.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் எந்த வளர்ச்சி பணிகளும் செய்யப்படவில்லை என்றும், வீட்டுமனைபட்டா,குடிநீர், முதியோர் உதவித்தொகை தொடர்பாக கொடுக்கப்பட்ட 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் மீது விசாரணை நடத்தாமலேயே தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.

இதையடுத்து அந்த பிரச்சினை தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்தார். அதன்பிறகு அமைச்சரை முற்றுகையிட்டிருந்த பொது மக்கள் கலைந்துசென்றனர். கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தலைமையில் பொதுமக்கள் நடத்திய இந்த திடீர் போராட்டத்தால் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.