ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 29 அக்டோபர், 2011

மாமள்ளர் இராஜராஜ சோழனின் 1026 வது சதய விழா!!! 5 நவம்பர் 2011.

மள்ளர் குல மாமன்னனின் 1026 வது சதயவிழா
” தமிழ் எங்கள் மூச்சு, தமிழ் எங்கள் பேச்சு.

குடவோலை முறையை கொண்டுவந்தவனை,
ஈழம் முதல் இமயம் வரை வென்று, இமயத்தில் புலி இலச்சினையை பதித்தவனை,
சிங்கபூரிலும், மலேசியாவிலும், இலங்கையிலும் இன்று தமிழ் ஆட்சி மொழியாய் அலங்கரிக்கபடுவதற்கு காரணமானவனை,

வீராணம் ஏரி வெட்டி, கல்லணை எடுத்து கடலுக்கு வீணே போன காவிரி பிரவாகத்தை
உபயோகமாய் திருப்பி தமிழகத்தை செழிக்கச் செய்தவனை,
ஆயிரம் ஆண்டுகளாய் பெருமை குறையாமல் உறுதி குறையாமல் தமிழ்க் கலாச்சாரத்தை தலை நிமிரச்செய்து நிற்கும் தஞ்சாவூர் கோவிலைக் கட்டியவனை,

திரைகடல் ஓடிய தேசங்களிலெல்லாம் தமிழ் மனம் பரப்பியவனின்
1026 வது சதயவிழாவை கொண்டாட தஞ்சாவூர் நோக்கி தேவேந்திர குல மக்கள் அரசியல் பாகுபாடின்றி அலைகடலென ஆர்பரித்து அணிதிரள்வீர்.

வியாழன், 27 அக்டோபர், 2011

என்கவுண்டருக்கு நாம் தரும் ஒப்புதலில் இருந்து முளைக்கிறது துப்பாக்கிச் சூட்டுக்கான துணிச்சல்.துப்பாக்கிச் சூட்டுக்கான துணிச்சல்.



போலீஸ் நடத்தும் என்கவுண்டருக்கும் துப்பாக்கிச்சூட்டுக்கும் என்ன வேறுபாடு? பெயர் தெரிந்து சுட்டால் அது என்கவுண்டர். சுட்டபிறகு பெயரைத் தெரிந்துகொண்டால் அது துப்பாக்கிச்சூடு.
சுட்டார்கள், செத்தார்கள் எனும் சாதாரண மனோநிலையுடன் நம்மில் பலரும் இந்த செய்தியை கடந்து செல்கிறோம். பத்திரிக்கைச் செய்திகளை அப்படியே நம்புவோர், கலவரம் பண்ணினா போலீஸ் என்னதான் செய்யும் என நியாயம் பேசலாம். ஜான் பாண்டியன் மாதிரி தலைவர்களுக்காகவெல்லாமா ரோட்டுக்கு வந்து போராடுறது என சிலர் சலித்துக்கொள்ளலாம்.. ஒட்டுமொத்தமாக நம் சமூகத்திலிருந்து வெளிப்படும் அலட்சியத்தால் ஏராளமான ஆபத்துக்கள் முளைக்கக் காத்திருக்கின்றன அல்லது ஏற்கனவே முளைத்துவிட்டன.
இந்த நேரத்தில் வந்த வேறொரு செய்தியையும் நாம் சாதாரணமாக எடுத்துக்கொண்டிருப்போம். அது சன் டிவி சக்சேனாவின் அடியாள் அய்யப்பன் மீதான போலீசின் தாக்குதல். இவனுக்கு நல்லா வேணும் என்பதுதான் இங்கு பொதுக்கருத்து. எப்படியோ அடிவாங்குனவன் என்ன யோக்கியனா என நாம் அவனது மீதான தாக்குதல் குறித்து மகிழ்ச்சி கொள்கிறோம். இங்குதான் போலீசின் திமிர் அங்கீகாரம் பெறுகிறது. ரவுடிகள்தானே அடி வாங்குகிறார்கள் என காவல்துறையின் கொட்டடித் தாக்குதல்கள் மக்களால் நியாயப்படுத்தப்பட்டு அவை கொட்டடிக் கொலைகளில் முடிந்தன.
பிறகு லாக்கப் மரணங்கள் பரவலான கண்டனங்களுக்கு உள்ளானபிறகு என்கவுண்டர்கள் வந்தன (இப்போதும் லாக்கப் கொலைகள் தொடர்கின்றன என்பது வேறு விசயம்). அப்போதும் நமக்கு இதே நிலைப்படுதான், சாகப்போவது ரவுடிதானே?
ஒரு கோணத்தை நாம் எப்போதும் யோசிப்பதில்லை. ஏன் அய்யப்பனை ஷிப்ட் போட்டு அடிக்கும் போலீஸ் சக்சேனாவை கொஞ்சம் மரியாதையுடன் நட்த்தியிருக்கிறது? (அது அவர் நடப்பதிலேயே தெரிகிறது). ஏன் கலாநிதியை இன்னும் விசாரிக்கக்கூட முடியவில்லை? என்கவுண்டரில் ரவுடிகள் கொல்லப்படுவது ரவுடியிசத்தை ஒழிக்கும் என்றால் இத்தனை என்கவுண்டர்களுக்கு பிறகு ஏன் ரவுடியிசம் குறையவில்லை? கொஞ்சம் யோசித்தாலே போலீசாரின் அத்துமீறல்களுக்கு காரணம் வேறு என்பது புலனாகும்.
போலீசின் துப்பாக்கிப்பிரயோகம் என்பது ஒரு கற்பித்தல் முறை. முதலில் ரவுடிகள் காவலர்களால் தாக்கப்பட்டு தாக்குதல் மீது நல்லெண்ணம் உருவாக்கப்படுகிறது. இதன் நீட்சியாக அவர்களுக்கு தேவையில்லாத ரவுடிகள் என்கவுண்டர் செய்யப்படுக்கிறார்கள். சமூகவிரோதிகள் தண்டிக்கப்படுகிறார்கள் எனும் சிந்தனை மெல்ல தண்டிக்கப்படுபவர்கள் சமூகத்தின் விரோதிகள் எனும் நிலைக்கு உருமாற்றம் பெறுகிறது. தங்களுக்கு நெருக்கமானவர்கள் பாதிக்கப்படாதவரை பெரும்பான்மையான சாமான்ய மக்கள் காவல்துறைக்கு தரப்படிருக்கும் அதீத அதிகாரம் சரியானதே எனக் கருதுகிறார்கள். முரண்நகையாக காவல்துறைதான் லஞ்ச ஊழலில் புரையோடிப்போயிருக்கும் துறை என்பதை இவர்களில் பெரும்பாலானாவர்கள் ஒத்துக்கொள்வார்கள்.
கவனமாக பரிசீலிக்கையில் காவல்துறையின் அனேக அத்துமீறல்களும் ரவுடித்தனங்களும் அவர்களது தனிப்பட்ட லாபத்துக்காக செய்யப்படுபவை அல்லது லாபத்துக்கு இடையூறு வராமல் இருக்க செய்யப்படுபவை என்பது தெரியவரும். இதனை அனுமதிப்பதால் அரசுக்கு எந்தவித லாபமும் இல்லை. ஆனால் இதனை அனுமதிப்பதன் வாயிலாக யாரை வேண்டுமானாலும் மனசாட்சியின்றி தாக்குவதற்கு அவர்கள் மனதளவிலும் உடலளவிலும் தகுதியுடையவராகிறார்கள். இந்த பயிற்சிதான் அரசு விரும்பும்போதெல்லாம் யார்மீது வேண்டுமானாலும் தடியடி நடத்தவும் யார் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தவும் அவர்களை தயார் நிலையில் வைக்கிறது. இல்லாவிட்டால் தங்களுக்கு யாதொருவகையிலும் எதிரியல்லாத மக்கள்மீது அரசு உத்தரவிட்டதாலேயே துப்பாக்கிச்சூடு நடத்த இவர்களால் எப்படி முடியும்? எதிர்த்து தாக்குமளவு உடல்வலு இல்லாத பெண்களையும்கூட மிருகத்தனமாக விரட்டிவிரட்டி அடிக்க இவர்களால் எங்கணம் முடியும்?
அரசு அதிகாரிகளுக்கு தரப்படும் அதிகப்படியான ஊதியம் அரசே அவர்களுக்கு அளிக்கும் லஞ்சம் என்கிறார் தோழர் லெனின். அரசு ஊழியர்களின் லஞ்சம் மறைமுகமாக அனுமதிக்கப்படுவதுகூட உயர்மட்டத்தில் நடக்கும் பெரிய அளவிலான ஊழலை அவர்கள் கண்டுகொள்ளாதிருப்பதற்கும் அதற்கு ஒத்துழைப்பதற்கும்தான். இந்த சாத்தியப்பாட்டை போலீசுடன் பொருத்திப்பாருங்கள். உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் போலீசின் தனிப்பட்ட விருப்பமென்றால் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் துப்பாக்கிகள் முழங்குவது அரசின் விருப்பம். இது இருவருக்குமான் புரிந்துணவு நடவடிக்கைகள்.
ஏன் துப்பாக்கிச்சூடு பெரும்பாலும் தலித் மக்கள்மீதும் பழங்குடி மக்கள் மீதும் நடத்தப்படுகிறது? காரணங்கள் இரண்டு. அவர்கள் அதிகாரவர்கத்துக்கு எளிமையான இலக்காக இருக்கிறார்கள், அத்துமீறலை சட்டபூர்வமாக எதிர்கொள்ளும் பொருளாதார வலு அவர்களிடம் இருக்காது. இரண்டாவது காரணம் அடிப்பவனுக்கும் அடிவாங்குபவனுக்கும் தெரியாத பூடகமான விசயம். எந்த நாட்டின் உரிமைப்போராட்டங்களும் சுதந்திரப்போராட்டங்களும் பொருளாதாரரீதியாகவே அல்லது இனரீதியாக ஒடுக்கப்பட்டவர்களாலேயே முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே ஒரு அரசு மக்களிடம் உரிமைப்போராட்டங்களோ விடுதலைப்போராட்டங்களோ நடக்கக்கூடாதென விரும்பினால் ஒடுக்கப்பட்டவர்களை ஒன்றுகூடவிடாமல் செய்துவிட்டால் போதும். சாராயத்தையும் சினிமாவையும் மீறி ஒன்றுசேரும் சாத்தியம் தென்படும்போதெல்லாம் அரசு தடியடியையோ துப்பாக்கிச்சூட்டையோ பிரயோகிக்கிறது.
பரமக்குடி துப்பாக்கிச்சூடு அரசின் உத்தரவாலோ அல்லது போலீசின் அதிகாரத்திமிராலோ நடந்திருக்கலாம். எதனால் நடந்திருந்தாலும் அதற்குப்பின்னால் இருப்பது தலித் விரோத சிந்தனை மட்டும்தான். ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் ஊர்வலம் எல்லா அராஜகங்களைமும் உள்ளடக்கியவாறு நடக்கிறது. அங்கேயெல்லாம் போலீசின் நாக்குகூட அத்துமீறுவதில்லை. மசூதிகளுக்கு அருகே சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலான வெறித்தனமான நடவடிக்கைகளை வருடாவருடம் செய்கிறார்கள். குறைந்தபட்சம் பாதையை மாற்றும் வேளையைக்கூட போலீஸ் செய்ததில்லை. முழுபோதையில் இருக்கும் விநாயக பக்தர்களிடம் போலீஸ் காட்டும் மென்மையான அணுகுமுறையையை நீங்கள் எல்லா ஊரிலும் காணலாம். பிறகு எப்படி தலித் மக்கள் ரோட்டுக்கு வந்தால் மட்டும் போலீசின் ஆயுதங்கள் உடனடியாக உயர்கின்றன??
ஜான் பாண்டியன் ஒரு ரவுடி, அவரை கைது செய்ததற்கு ரோட்டை மறிப்பார்களா என கேட்பதற்கும்  ****தானே சாகட்டும் என பேசுவதற்கு  பெரிய வேறுபாடு கிடையாது. ஒவ்வொரு சாதித்தலைவரும் ரவுடிதான். எல்லோரும் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள்தான். சிதம்பரத்தில் பல பத்தாண்டுகளாக தாதாவேலை பார்ப்பது (ஸ்ரீதர்) வாண்டையார் கோஷ்டி. போலி தங்கக்காசு விற்றது, சொந்த மனைவியை மன்நோயாளி என்று சொல்லி ஒதுக்கிவைத்தது என சேதுராமனின் முகம் பொறுக்கிகளின் எல்லா லட்சனங்களும் பொருந்தியது. இவர்களால் வராத கலவரம் ஜான் பாண்டியன் வந்தால் மட்டும் வந்துவிடுமா?
பரமக்குடி துப்பாக்கிச்சூடு நம் சமூகத்தின் பல அங்கங்களின் நிஜ முகத்தை அம்பலப்படுத்துகிறது. ஜெயலலிதாவின் விளக்க அறிக்கை அவரது போலீஸ் பாசத்தை மட்டும் காட்டவில்லை, அது அவரது தலித் மக்கள் மீதான அலட்சியத்தையும் வெறுப்பையும் காட்டுகிறது. சுட்டவர்கள் மீது போடப்படாத வழக்கு உயிருக்காக ஓடியவர்கள் மீது பாய்கிறது. கண்டன அறிக்கை எந்த வகையிலும் போலீசாரை காயப்படுத்திவிடக்கூடாது என பார்த்துப் பார்த்து தயாரிக்கப்பட்டது போலிருக்கிறது கருணாநிதியின் அறிக்கை. போலீசார் கற்களோடு காத்திருக்கும் புகைப்படத்தை வைத்திருந்தாலும் கலவரம் ஏற்பட்டதால் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டியிருந்தது என ஒப்பிக்கின்றன ஊடகங்கள்.
போலீசுக்கு எதிராக எந்த வலுவான சக்தியும் பேசுவதில்லை. ஏனெனில் அவர்களுக்கு போலீசால் ஏராளமான அனுகூலமிருக்கிறது. ஆனால் நம்மைப்போன்ற சாமான்ய மக்கள் போலீஸ் மீது பக்தி கொள்வது நம் வீட்டில் நாமே கொள்ளிவைத்துக்கொள்வதைப் போன்றதே. தன்னுடன் தகராறு செய்த பக்கத்து வீட்டுப்பெண்ணின் புகைப்படத்தை செயின் திருடர்கள் பட்டியலில் சேர்த்து பேருந்துநிலையத்தில் பேனராக வைத்தார் ஒரு காவல் அதிகாரி (திருச்சி). மாநிலத்தில் நடக்கும் நில அபகரிப்புக்களும் கட்டப்பஞ்சாயத்துக்களும் பெரும்பாலும் இவர்களது தலைமையிலோ அல்லது கவனத்திலோ நடப்பவைதான்.
இந்த அழகில் நாம் போலீசை தியாகிகள் எனவும் சமூகத்துக்காக அயராது உழைப்பவர்கள் என புகழ்வதும் இன்னும் கொடுமை. உண்மையில் இந்த புகழுரைகளுக்கு நிஜமாகவே சொந்தக்காரர்களான சுகாதாரத் தொழிலாளர்களை நாம் சக மனிதனாகக்கூட நடத்துவதில்லை. ஒரு மந்திரியோ அல்லது தாசில்தாரோகூட யாரோ ஒருவரை பொது இடத்தில் தாக்கியதற்கான ஆதாரம் கிட்டினால் அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்படுவது கட்டாயம் (தற்காலிகமாக). ஆனால் நடுரோட்டில் எந்த எச்சரிக்கையுமில்லாமல் மக்களை சுட்டு வீழ்த்தவும், சுட்டுக்கொன்றுவிட்டு சந்தேக மரணம் என முதல் தகவல் அறிக்கை தயாரிக்கும் அளவுக்கு இவர்களுக்கு அதிகாரமிருக்கிறது. சுடப்பட்டு இறந்தவர்கள் பலர் சொந்த வேலைக்காக அந்த சாலைக்கு வந்திருந்தவர்கள். இந்த கதி தமிழ்நாட்டில் வசிக்கும் யாருக்கு வேண்டுமானாலும் நேரலாம்.
பரமக்குடி சம்பவம் நமக்குத் தரும் செய்தி இதுதான், நாம் உடனடியாக போலீஸ் பஜனா மண்டலியில் இருந்து விலகிக்கொள்ள வேண்டிய நேரமிது. காவல்துறையின் துப்பாக்கி ரவுடிகளை சுட உருவாக்கப்பட்டதல்ல, அது அவர்களுக்கு பிடிக்காதவர்களையும் தேவையில்லாதவர்களையும் கொல்லவே உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை பெரிய விலை கொடுத்து நாம் தெரிந்துகொண்டிருக்கிறோம்.

பரமக்குடி துப்பாக்கிச்சூடு! ஜான் பாண்டியன் மனைவி கண்டன அறிக்கை!





தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளரும், ஜான் பாண்டியன் மனைவியுமான பிரிசில்லா பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


தியாகி இமானுவேல் சேகரன் அவர்கள் சமநீதிக்காக போராடிய ஒரு மாபெரும் தியாகி. ஜனநாயகத்தை அழிக்கின்ற சாதிய சக்தியை ஒழிக்க போராடியவர். அவர் காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர், சமநீதி கிடைக்க போராடிய போராளி. 

சிறுவயதிலேயே இந்திய தேசத்தின் சுதந்திரத்திற்காக வெள்ளையனே வெளியேறு என்ற போராட்டத்தில் பங்கு கொண்டு தன் தந்தையுடன் 17 வயதில் சிறை சென்றவர். அவர் மதிக்கப்பட வேண்டிய தியாகி. இவரின் பெருமையை கவுரவிக்கவே கடந்த ஆண்டு மத்திய அரசு இவரின் உருவத்தில் அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது. பேரறிஞர் அண்ணாவும், காமராஜரும் அவரின் இரங்கல் செய்தியில் தியாகியை சமநீதி போராளி என்று விவரித்துள்ளனர்.

இந்த தியாகிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுக்கு அனைத்து தலைவர்களுக்கும் அனுமதி அளித்துவிட்டு, அவர் சார்ந்த அவரின் வாரிசுகளான அவர் வழியில் சமூக நீதியை வலியுறுத்தி சமூகத்தை வழி நடத்த கூடிய தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் பெ.ஜான்பாண்டியன் அவர்களை, தடை உத்தரவு போடப்பட்டதாக கூறி செல்லவிடாமல் தடை செய்தது தியாகி இமானுவேல் சேகரனையும், கோடான கோடி மக்களையும் அவமதிப்பதாகும்.

இங்கு நடந்துள்ள சம்பவங்கள் அனைத்தையும் வன்மையாக கண்டிக்கிறோம். அப்பாவி மக்கள் 6 பேரின் உரிரை பிடுங்கி உள்ள இந்த காட்டுமிராண்டி செயலை செய்துள்ள ஒரு சில காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் மற்றும் இந்த சம்பவத்திற்கு காரணமான தென் மண்டல ஐஜி ராஜந்திரதாஸ் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து அவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

இறந்த 6 பேரில் இருவர் காவல் துறையினரால் சுடப்பட்டு அடித்து கொள்ளப்பட்டிருக்கிறார்கள். மேலும் 4 பேர் துப்பாக்கி சூட்டினால் சம்பவ இடத்திலேயே இறந்திருக்கிறார்கள். இது கண்டிக்கத் தக்கது. 

மண்டல மாணிக்கத்தை சேர்ந்த பழனி குமார் தேவேந்திரன் இரு தினங்களுக்கு முன்பாக மற்றொரு ஜாதியினரால் கொலை செய்யப்பட்டிருக்கிறான். இந்த சம்பவத்தால் பரமகுடியில் இந்த மாபெரும் துயர சம்பவத்தை நடத்தியுள்ளது கண்டிக்கத்தக்கது. 

தியாகி இமானுவேல் சேகரனாரின் குருபூஜையை நடத்த விடாமல் தடுக்கும் நோக்கத்தோடு திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூடு வன்மையாக கண்டிக்கத் தக்கது. எனவே இச்சம்பவத்திற்கு நீதி கேட்டு உயர்நீதிமன்றத்தை அணுகவும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தயங்காது என அறிவிக்கப்படுகிறது.

இழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும் மற்றும் அரசு வேலை வழங்கப்படு வேண்டும். உடனடியாக உயர்நீதிமன்ற நீதிபதிகளை கொண்டு குழு அமைத்து நீதி வீசாரணை செய்யப்பட வேண்டும். 

இவ்வாறு தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளரும், ஜான் பாண்டியன் மனைவியுமான பிரிசில்லா பாண்டியன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

பரமக்குடி துப்பாக்கிச்சூடு

தமிழர் அமைப்புக்கள் எங்கே? பழ. நெடுமாறன், தமிழருவி மணியன், சீமான், கொளத்தூர் மணி, நீங்களெல்லாம் எங்கே? ஏன்.... ஈழ தமிழர்களுக்கு மட்டும்தான் உங்கள் போராட்டமா? இப்போது இறந்தவர்கள் மலையாளியா? இல்லை கன்னடகாரனா? தமிழன்தானே... உங்கள் கருத்துதான் என்ன? இல்லை கருணாநிதியையும் திமுகவையும் வசைபாட மட்டும்தான் உங்களுக்கு கூலி வருகிறதா? இங்குள்ள தமிழனுக்கு கூவினால் கூலி வராதா?

தென் தமிழ் நாட்டில் சாதி பிரச்சனையின் காரணம்...

ஜான் பாண்டியன் கைது-பரமக்குடியில் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. -போலீஸ் வாகனங்கள் எரிப்பு-துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி.



தேவர் ஜெயந்தி விழா படுவிமர்சையாக எந்த பிரச்சினையும் இல்லாமல் நடக்கும் பொழுது இமானுவேல் சேகரன் நினைவு தின நிகழ்சி நடப்பதில் என்ன பிரச்சினை?

சீமான் உள்ளிட்ட ‘முற்போக்கு’ நரிகளின் தேவர் சாதிவெறி !

தம்பி´ படத்தை சீமான் இயக்கிய போது அதில் ஒரு காட்சி. கதாநாயகன் வீட்டின்
சுவற்றில் தேவர் படம். புரட்சி பேசும் சீமான் தேவர் படத்தை வைத்திருக்கிறாரே
என்றொரு விவாதம் அப்போது எழுந்தது. பார்ப்பவர்களுக்கு இதில் என்ன இருக்கிறது
என்றொரு கேள்வி எழக்கூடும். ஆனால், பெரியாரின் பேரன் என சொல்லிக் கொள்ளும்
சீமான் தேவரை படத்தில் காட்டியதுதான் முக்கியத்துவமாகிறது. இவை குறித்து கீற்று
இணையதளத்தின் பேட்டியின் போது சீமானிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது.

"முத்துராமலிங்கத் தேவரை கைது செய்தாத்தான் தமிழ்நாட்டில் சாதிப்பிரச்சனை
ஒழியும்னு முதுகுளத்தூர் கலவர நேரத்தில் பெரியார் சொல்லியிருக்கார். ஆனால்
உங்களோட படங்களில் முத்துராமலிங்கத் தேவரோட புகைப்படம் தொடர்ந்து
இடம்பெறுகிறது..?"

[image:
http://2.bp.blogspot.com/_r2AE3uABVyI/SgUQcO4-PdI/AAAAAAAAAL8/EWjE1Jr...]

அதற்கு சீமான் சொல்கிறார்:

"கொஞ்சநாள் முன்பு வரைக்கும் எனக்கு முத்துராமலிங்கத் தேவர் பத்தின உண்மைகள்
எதுவும் தெரியாது. ´தம்பி´ படம் வந்தபிறகு அண்ணன்களெல்லாம் சொன்னபிறகு தான்
என்னோட பிழை தெரிஞ்சது. அவரை முன்னிறுத்தணுங்கிற உள்நோக்கம் எல்லாம் எதுவும்
கிடையாது. படம் வந்த பிறகு தான் தேவரும், பெரியாரும் கொள்கை ரீதியா
வேறானவங்கன்னு எனக்குத் தெரிய வந்தது. பெரியார் இறந்தபோது அரைக் கம்பத்தில்
பறக்காத ஒரே கொடி, முத்துராமலிங்கத்தோட ´பார்வார்ட் பிளாக்´ கொடிதான்
என்பதையும் தெரிஞ்சிக்கிட்டேன். நான் முழுக்க முழுக்க பெரியாரைப்
பின்பற்றுகிறவன். முத்துராமலிங்கம் படத்தை நான் பயன்படுத்தியது முழுக்க முழுக்க
அறியாமல் நடந்த பிழைதான்."

இராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த சீமான் கியூபாவில் இருந்த
சேகுவாராவையும், இலண்டனில் இருந்த கார்ல் மார்க்சையும் அவர்களின்
தத்துவங்களையும் கரைத்து குடித்த ´தம்பி´க்கு தன் மாவட்டத்தில் தன் கிராமத்தில்
இருக்கும் தேவர்களின் ஆதிக்க வெறியையும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
பற்றிய உண்மைகள் எதுவும் தெரியாமல் போனதைக் குறித்து சீமான் கூடிய போது...

ஓகோ! சீமான் ´தொலைநோக்கு பார்வை´ உடையவர் போலும்! என்று சமாதானம் கொண்டோம்.

சரி, அண்ணன்களெல்லாம் தேவர் பெருமையை பற்றி சொல்லி உண்மையை புரிய வைத்து
விட்டார்கள். ´தம்பி´க்கு மீண்டும் வந்தது ஆவேசம். தமிழ் நாடு முழுவதும் ஓடி
ஓடி ஆவேசப்பட்டார். நான் ´பெரியாரின் பேரன்´, ´நான் பெரியாரையும் பிரபாகரனையும்
மட்டுமே தலைவர்களாக ஏற்றுக் கொண்டவன்´ என ஏகவசனம் பேச ஆரம்பித்தார்.

பெரியாரை தேசியப் போராட்டத் தியாகி என்றார்.

அண்ணன்மார்கள் ´தம்பி சொல்வதை தெளிந்து சொல்!´ என்று விளக்கம் கொடுத்தார்களா?
என்று தெரியவில்லை. பெரியார் தவறாக அடையாளப்படுத்தப்படுகிறார் என பதறிப்போய்
நாம் விளக்கம் கொடுத்தோம்....

´தம்பி´ தலித்தியம் பேசி குழப்பிய போது அண்ணன்கள் உண்மையை எடுத்து
சொன்னார்கள்....

´திராவிடம்´ என்பது வெத்துவாதம் என்ற போது மீண்டும் அண்ணன்மார்கள் பதறிப்போய்
விளக்கம் கொடுத்தார்கள். ´தம்பி´ இப்போதைக்கு பெரியாரின் திராவிடம் பற்றி வாயை
திறப்பதில்லை.

கவனியுங்கள் இப்போதைக்கு மட்டுமே!

சமீபத்தில் மும்பையில் 04.10.2009-இல் ´விழித்தெழு இளைஞர் இயக்கம்´ முப்பெரும்
விழா ஏற்பாடு செய்திருந்தது. பெரியார், அம்பேத்கர், காமராசர் என்ற முப்பெரும்
தலைவர்களை வாழ்த்தியும், தீண்டாமைக்கு எதிராகவும் வீர வசனம் பேசினார் தம்பி.

நமக்குத் தெரிந்தது தானே ´தம்பியின் தலித்தியப் பார்வை´ எப்படிப்பட்டது என்று.

´புதிய தலைமுறை´ பத்திரிக்கையில் சீமானோடு கலந்துரையாடல் செய்த கல்லூரி
மாணவர்களின் பேட்டி ஒன்று வெளியாகி இருந்தது.

"தமிழ்த் தேசியம் பேசும் நீங்கள் [சீமான்] ஏன் தலித்தியம் பேசுவதில்லை? அந்த
மக்கள் உங்க கண்களுக்கு தெரியலையா? என்றார்கள் கல்லூரி மாணவர்கள்

சீமான் சொல்கிறார்:

"நீங்கள் ஏன் சேரியிலேயே கொண்டு போய் பிரச்சனையை நிறுத்துகிறீங்க? நாங்க
ஒட்டுமொத்தமாக எல்லோருக்கும் பேசுகிறோம். சாதியை மறந்து தமிழன் என்று ஒரு
சாதியாய் இணைவது பற்றி பேசினால் நீங்க திரும்பத் திரும்ப கொண்டு போய் சேரியில்
நிறுத்துறீங்க. சாதியை மறந்து வாங்க! பிறகு பாருங்க!"

சாதியை மறந்து வாங்க என்றவர், மும்பை முப்பெரும் விழாவில் சாதி குறித்து
பேசுகிறார்.. பேசுகிறார்... பேசிக் கொண்டே இருக்கிறார்...!

சரி பேசியவர் பிறகு என்னவானார்?

சாதியை மறந்து வாங்க என்றவர் ´தேவர் ஜெயந்தி´யில் அரசியல் ஓட்டுப்
பொறுக்கிகளுக்கு போட்டியாக கறுப்புச் சட்டையும் நெற்றியில் பட்டையுமாக
தேவருக்கு மாலை போட்டு இளித்துக் கொண்டிருக்கிறார்.

இதற்கு அண்ணன்மார்கள் என்ன விளக்கம் கொடுக்கப்போகிறார்கள்? தம்பி எப்படி
சமாளிக்கப் போகிறார்? நாம் எப்படி மீண்டும் கேணயன்களாக்கப்படப் போகிறோமோ! அது
ஓட்டுக்பொறுக்கி சீமானின் சாமர்த்தியமான வார்த்தைகளில் கிடக்கிறது.

தமிழ்நாட்டில் பெரியார், அண்ணா, காமராசர் போன்ற தலைவர்களின் பிறந்த தினமும்,
நினைவு தினமும் தமிழ்சொற்களால் வழங்கப்பட்டுக் கொண்டிருக்க, தேவர் பிறந்த
தினமும், நினைவு தினமும் ´ஜெயந்தி´ என்ற சமஸ்கிருத வார்த்தையால் சொல்லப்படுவதன்
அரசியல் என்ன?

´ஜெயந்தி´ என்பது சமஸ்கிருத மொழியில் பிறந்தநாள் எனப் பொருள்படும். சாதாரண
மனிதர்களின் பிறந்தநாட்களை போல் வழக்கு இருக்கக் கூடாது என்பதற்காக கடவுள்
பிறந்த நாள்களும், மகான்களின் பிறந்த நாள்களும், ´ஜெயந்தி´ என்ற சமஸ்கிருத
வார்ததையால் சொல்லும் போது மேன்மை நிலையில் இருப்பதால் கிருஷ்ண ஜெயந்தி, காந்தி
ஜெயந்தி என கடவுள்களும், மகாத்மாக்களும் நினைவு கூறப்பட்டன. அதன்போக்கிலே தேவர்
கடவுளும், மகானுமாக தேவர் சமூகத்தால் வாழும் போதே கடவுளாக்கப்பட்டார் முத்து
இராமலிங்கத் தேவர்.

இன்றைய அரசியல்வாதிகள் கட்சி பேதமின்றி தேவரை தூக்கி பிடித்து ஆடுகிறார்களே
என்னவென்று சொல்லி. அவர்களுக்கு தேவரின் உண்மை நிலை தெரியாதா என்ன? இருப்பினும்
இந்திய தேசத்தின் சுதந்திரப் போராட்ட தியாகியாகவும், தேவர் இன மக்களின்
கடவுள்களாகவும் கருதப்படும் பசும்பொன் முத்து இராமலிங்கத் தேவரின் இந்திய தேசிய
சுதந்திரப் போராட்டத்தின் பங்களிப்புதான் என்ன?

அகிம்சை வழியில் போராடிய காந்தியின் சுதந்திரப்போராட்டத்தை விட ஆயுதம் தாங்கி
போராடிய நேதாஜி சுபாஷ் சந்திர போசின் சுதந்திரப் போராட்டத்தில் ஈர்ப்பு கொண்டு
நேதாஜி தலைமையில் ஆங்கிலேயர்களை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு
தமிழகத்திலிருந்து தன் இனத்தைச் சேர்ந்த தேவர்களை பெரும் படையாக திரட்டி
அனுப்பிய செயலை தவீர்த்து வேறென்ன செய்தார் சுதந்திரப் போராட்டத்திற்கு?

அதுதான் போகட்டும்?

ஆங்கிலேயர் இந்தியாவில் தனது கட்டளைக்கும், உயர்நிர்வாகம் என்ற பெயரால் அடக்கி
ஆள்வதற்கும் அடியபணியாத இனக்குழுக்கள், நாடோடிகள், பாடித்திரியும் இனங்கள்
போன்ற மக்களை அடக்குவதற்கு
1871-ஆம் ஆண்டு "குற்றப் பரம்பரைச் சட்டம்“ [Crimainal Tribes Act] என்ற
அடக்குமுறைச் சட்டமொன்றைப் பிறப்பித்தது. 160-இனக் குழுக்கள் இந்தச் சட்டத்தின்
கீழ் பிறப்பிலேயே குற்றவாளிகள் ஆக்கப்பட்டனர். முதலில் வடக்கிலும், 1876-ஆம்
ஆண்டு வங்காளத்திலும் அமுல்படுத்தப்பட்டது.
1911-ஆம் ஆண்டு தமிழ்ப்பிரதேசத்தில் முதன்முதலாக "கீழக்குயில்குடி" என்ற ஊரில்
நடைமுறைப்படுத்தப்பட்ட போது ´குற்றப் பரம்பரைச் சட்டம்´ நீக்கப்பட வேண்டும்
என்றும், அம்மக்களுக்குச் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்றும்
கோரிக்கைகளையும் முன்வைத்து தேவர் போராடினார். அதில் வெற்றியும் பெற்றார்.
ஆனால் நல்ல நோக்கத்திற்காக வென்றெடுத்த ´சமஉரிமைகள்´ சுயநலம் சார்ந்ததாக
மாறிவிட்டது.

ஐனநாயக நோக்கத்தோடு செயல்பட வேண்டிய தேவர் தன் சாதிக்கு முக்கியத்துவம்
கொடுத்தார். நேதாஜியின் கட்சியான ´பார்வர்டு பிளாக்´ மேற்கு வங்கம் மற்றும்
கேரளாவில் இடதுசாரி கட்சிக்களாக இருக்க தேவர் தமிழகத்தில் ஜாதி கட்சியாக
நடத்திக் கொண்டிருந்தார். ஹரிஜனங்கள் ஓட்டுப் போடக்கூடாது, மேல் சட்டை
போடக்கூடாது, கோவிலுக்குள் நுழைக்கூடாது என்று அதிகாரம் பேசும் யோக்கியதையை
மட்டும் வளர்த்துக் கொண்டு சாதி வெறி உணர்வோடு இருந்த தேவர் தாழ்த்தப்பட்ட
மக்கள் மீது கடுமையான வன்முறைகளை கையாண்டார்.

அவர் வாழ்ந்த காலங்களில் அவர் மீது எத்தனையெத்தனை கொலை வழக்கு இருந்தன என்பதை
கவனிக்க வேண்டும்.

உதாரணத்திற்கு முதுகுளத்தூர் கலவரம். பெரியார் கேட்கிறார்:

"முதுகுளத்தூரில் நூறுபேரைக் கொன்று இரண்டாயிரம் வீட்டைக் கொளுத்தினானே என்ன
செய்தாய்? என்ன செய்ய முடிந்தது? யாரோ நாலு
பேர் மீது வழக்குப்போட்டால் தீர்ந்துவிடுமா? எரிந்த வீடும் செத்தவனும்
வந்து விடுவானா? தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை குறித்து நான்
சொல்வதைவிட மந்திரி பக்தவத்சலம் அவர்களே நல்லபடி சொல்லியிருக்கிறார்."

[03.11.1957-அன்று தஞ்சை தனி மாநாட்டில் தலைமை வகித்து பெரியார் அவர்கள் பேசிய
முன்னுரையில் இருந்து சில வாக்கியங்கள். திரு.எம்.பக்தவச்சலம் அறிக்கை குறித்து
பெரியார் பாராட்டி பேசியதை சுட்டிக்காட்டுவதற்காக இங்கே குறிப்பிடுகிறோம்.]

1957-அக்டோபர் 26-ந் தேதி தமிழ்நாட்டு சட்டசபையில் உள்துறை அமைச்சர்
திரு.எம்.பக்தவச்சலம் அறிக்கை சட்டசபையில் வாசிக்கப்படுகிறது. அதில்
முதுகுளத்தூர் கலவரம் பற்றிய செய்தியும், பசும்பொன் முத்து இராமலிங்கத் தேவர்
மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களையும் பாருங்கள்.

தேவரின் பிறந்தநாளும், நினைவுநாளும் மகாத்மாவுக்கு நிகரான ஒரு பிம்பத்தை
தோற்றுவித்த அரசியலாக மாறியது எப்படி? அல்லது மாற்றப்பட்டது எப்படி?

பெரியாரின் கொள்கைகளை செயல்படுத்துவதாக வீராப்பு பேசும் கருணாநீதி ´தேவர்
ஜெயந்தி´ அன்று குடும்பத்தோடு மாலை போட ஓடுகிறார். ஜெயலலிதா தேவர் சமுகத்தை
சேர்ந்த சசிகலாவை இழுத்துக் கொண்டு ஒடுகிறார். வை.கோ தன் பங்குக்கு ஜால்ரா
அடிக்கிறார்.

இவர்களுக்கு தெரியாதா தேவரின் யோக்கியதை? தேவரின் மறுபக்கம் இருண்ட பக்கமல்ல.
தேவரின் ஒவ்வொரு வன்முறையும் அப்பட்டமான வெளிச்சத்தில் இருக்கின்றன.
இருப்பினும் தேவர் குறித்து தமிழ்சமூகம் கருத்துச் சொல்ல அஞ்சுகிறது.

தமிழ்நாட்டின் பெரும்பான்மையான ஓட்டுக்கள் தேவர் சமுகத்திடம் இருப்பதால்
குழைந்து கூத்தாடி தேவர் சமுகத்தினரின் காலை நக்கும் அரசியல் செய்கிறார்கள்.

1995,1996-இல் தென்மாவட்டப் பகுதியில் பேருந்து நிலையத்திற்கு தாழ்த்தப்பட்ட
சமுகத்தைச் சேர்ந்த ´தலித் தளபதி சுந்தரலிங்க´த்தின் பெயரை வைத்ததற்காக
பேருந்துக்களில் ஏறமாட்டோம் என்றும், பள்ளரின் பெயரை நீக்கு என்றும்
கலவரங்களில் ஈடுபட்ட போது முக்குலத்து சாதி வெறியர்களுக்கு பயந்து தமிழக அரசு
தலித் தளபதி சுந்தரலிங்கத்தின் பெயரையே தூக்கிவிட்டு முக்குலத்தாருக்கு ஆதரவாக
செயல்பட்டதும், அதே தமிழக அரசு மதுரை விமானநிலையத்திற்கு பசும்பொன் முத்து
இராமலிங்க தேவரின் பெயரை வைத்து விசுவாசத்தை காட்டிக் கொண்டதும், தேவர்
நூற்றாண்டு விழாவின் போது பசும்பொன் தேவரின் தபால்தலையை வெளியிட்டு தமிழக அரசு
தன் ஒருபக்க சாதி ஆதரவை காட்டிக் கொண்டதும், எல்லாவற்றிற்கும் மேலாக தலித்திய
தலைவன் திருமா தேவர் ஜெயந்தி நூற்றாண்டை முன்னிட்டு 3-நாட்கள் விடுமுறை விட
வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொண்டதும்,

2008-இல் சென்னை சட்டக் கல்லூரி மாணவர்களுக்குள் ஏற்பட்ட கலவரத்தில்தலித்
மாணவர்கள் பாதிக்கப்பட்ட போதும் எந்த விசாரணையும் தீவிரப்படுத்தாமல் கலவரத்தில்
ஈடுபட்ட ஆதிக்க சாதியான தேவர் சமுகத்தின் பக்கம் தமிழக அரசு ஆதரவாக இருந்ததும்,

கடைசியாக காமெடியன் விவேக், நடிகை புவனேஸ்வரி பிரச்சனையில் ஊடகத்துறையைச்
சார்ந்த குடும்பத்தினரைக் குறித்து கேவலமாக பேசியதால் மீது அவதூறு வழக்கு
தொடுத்த ஊடகத்துறையினருக்கு பயந்துபோய் தனது சாதி [தேவர்] சங்கத்தில் இணைந்து
கொண்டு பாதுகாப்பு கோரியதையும், இன்னமும் நீதிமன்றத்தில் விவேக் அவதூறாக
பேசியதற்கான ஆதாரங்கள் இல்லை என்று வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்ததும் ஆதிக்க
சாதியின் அட்டூழியங்கள் எந்தளவுக்கு ஒடுக்குமுறைகளுக்கு முன்னெடுக்கிறது
என்பதையும், அதற்கு அரசாங்கம் அனுசரித்து போவதையும் நாம் அவதானித்துக்
கொண்டுதானே இருக்கின்றோம்.

வெறும் ஓட்டுக்களுக்காக ´குலத்துக்கொரு நீதி´ கற்பித்த முக்குலத்தான் தேவரை
தூக்கிப்பிடித்து ஆடுகிறார்கள்; அவர்கள் அரசியல்வாதிகள் போய்த் தொலையட்டும்.

´பெரியாரின் பேரன்´ என்று தன்னையே வர்ணித்துக் கொள்ளும் சீமானுக்கு என்ன கேடு
வந்தது?

சீமான் நியாயமான உணர்வாளனாக பெரியாரின் பேரனாக இருந்திருந்தால் என்ன
செய்திருக்க வேண்டும்?

தேவர் சிலையை உடைத்துப் போட்டுவிட்டு வந்திருக்க வேண்டும்...!

செய்தாரா?

தேவர் சிலைக்கு மட்டுமா சீமான் மாலை போட்டார்? போராளி இமானுவேல் சேகரன் நினைவு
இடத்திலும் சீமான் மலர் வளையம் வைத்தார் என்றொரு கேள்வி எழக்கூடும்.

"தமிழ்ச்செல்வன் வீரமரணத்திற்கு இரங்கல் கவிதை- அவரைக் கொலை செய்த
ராஜபக்சேவுக்கும் பொன்னாடை என இரட்டை வேடம் போடும் கருணாநிதிக்கும்,
சீமானுக்கும் என்ன வேறுபாடு?"

"இமானுவேல் கேசரனுக்கும் மாலை; அவரைக் கொலை செய்த தேவருக்கும் மாலை"

அந்தோ பாவம்!

தம்பி சீமானை ஓட்டு அரசியல் எப்படியெல்லாம் ஆட்டம் போட வைக்கிறது?

வாசகர்களே! திரும்பவும் கீற்று கட்டுரைக்கு வருவோம்!

"கொஞ்சநாள் முன்பு வரைக்கும் எனக்கு முத்துராமலிங்கத் தேவர் பத்தின உண்மைகள்
எதுவும் தெரியாது. தம்பி படம் வந்தபிறகு அண்ணன்களெல்லாம் சொன்னபிறகு தான்
என்னோட பிழை தெரிஞ்சது. அவரை முன்னிறுத்தணுங்கிற உள்நோக்கம் எல்லாம் எதுவும்
கிடையாது. படம் வந்த பிறகு தான் தேவரும், பெரியாரும் கொள்கை ரீதியா
வேறானவங்கன்னு எனக்குத் தெரிய வந்தது. பெரியார் இறந்தபோது அரைக் கம்பத்தில்
பறக்காத ஒரே கொடி, முத்துராமலிங்கத்தோட பார்வார்ட் பிளாக் கொடிதான் என்பதையும்
தெரிஞ்சிக்கிட்டேன். நான் முழுக்க முழுக்க பெரியாரைப் பின்பற்றுகிறவன்.
முத்துராமலிங்கம் படத்தை நான் பயன்படுத்தியது முழுக்க முழுக்க அறியாமல் நடந்த
பிழைதான்" என்கிறார் சீமான்.

சரி, ´தம்பி´ படத்தில் தேவர் படத்தை தெரியாமல் தொங்கவிட்டு விட்டார். தேவர்
ஜெயந்தியில் பெரியார் இறந்தபோது அரைக்கம்பத்தில் பறக்காத ஒரே கொடி,
முத்துராமலிங்கத்தோட ´பார்வார்ட் பிளாக்´ கொடிதான் என்பதும் பெரியாரை
கேவலப்படுத்தியவர் சாதிவெறி பிடித்த தேவர் என்பதும் தெரிந்து தானே மாலை
போட்டார்.

பெரியார் மரணமடைந்தபோது - அதற்கு தமிழ்நாட்டில் இரங்கல் தெரிவிக்காத அமைப்புகள்
இரண்டு. ஒன்று சங்கரமடம், மற்றொன்று ´அகில இந்திய பார்வர்டு பிளாக்´. பார்ப்பன
அமைப்பு இரங்கள் தெரிவிக்காததன் காரணம் நமக்கு தெரிந்ததுதான். ´பார்வர்டு
பிளாக்´ அமைப்பைச் சேர்ந்த கள்ளர், தேவர், மறவர் சமூகத்தினர் ஏன் இரங்கல்
தெரிவிக்கவில்லை என்பதற்கு காரணம் 1957-இல் முதுகளத்தூரில் நடந்த கலவரத்தில்
நூற்றுக்கணக்கான சேரிகள் நூற்றுக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்கள்
எரிக்கப்பட்டனர். சாதிப் போர் நடந்தது என்னும் அளவுக்கு மோசமான விளைவுகளை
ஏற்படுத்திய சம்பவம்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நடந்த கொடுமைகளைக் கண்டு காந்தியார் அறிக்கை
விட்டதோடு சரி. பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்காக எந்த உதவியும்
செய்யவில்லை. பெரியாரோ தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருந்தார்.
"நூற்றுக்கணக்கான தலித் மக்கள் எரித்து கொல்லப்பட்டதற்கும், 19-தாழ்த்தப்பட்ட
மக்களை தேவர் இனத்தை சேர்ந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதற்கும்
காரணமாக பசும்பொன் முத்து இராமலிங்கத் தேவரை கைது செய்ய வேண்டும்" என அப்போதைய
ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சிக்கு பெரியார் அழுத்தம் கொடுத்தார்.
அப்போதைய முதல்வராக இருந்த காமராசர் தேவரை கைது செய்ய ஆணை பிறப்பித்தார்.

இச்சம்பவம் தமிழக்ததில் பெரிய கலவரத்தை உருவாக்கிய போதும் பெரியாரின் உதவியோடு
துணிந்து நின்று போராடினார் கமாராசர். அதனால் தான் காமராசர் இறந்த அன்று, ´கெடா
வெட்டி தீபாவளி கொண்டாடுங்கள்´ என்று தேவர் சமுகம் அறிவித்தது. பெரியார் இறந்த
போது அஞ்சலி செலுத்தாமல் அவமரியாதை செய்யும் பாவணையாக பார்வார்ட் பிளாக் கொடியை
பறக்கவிட்டது.

இத்தனையும் மிகத் தெளிவாக சொல்கிறார் சீமான்.

இதே சீமான் பெ.தி.க தோழர்களிடம் அடிக்கடி சொல்வார்:

"பெரியார் சொல்லை காமராசர் செயல்படுத்தியதைப் போல, நான் காமராசர் போல்
பெரியாரின் கொள்கைகளை செயல்படுத்துவேன்" என்று.

தம்பி ´புரட்சி செய்´, ´ரௌத்ரம் பழகு´, ´நையப்புடை´ என்று சொல்லிக்
கொண்டிருப்பாரே பெரியாரின் தொண்டர்களுக்கு...

தம்பி மாலையும் கையுமாக காரியத்தை முடித்துவிட்டு வந்திருக்கிறார்.
இருக்கட்டும்...

ஆனால், இனி எந்தக் கூட்டத்திலாவது ´பெரியாரின் பேரன்´ என்று தம்பி சீமான்
கூறுவாரேயானால், எங்கள் தோழர்கள் நையப்புடைக்கத் தயங்கமாட்டார்கள்.

"எந்த கூட்டத்திலாவது பெரியாரின் பேரனாகிய நான் என வீரவசனம் பேச ஆரம்பித்தால்
நாம் மீண்டும் மீண்டும் எழுத்துக்களால் நையப்புடைப்போம்..."

இவ்வாக்கியங்களை நினைவில் நிறுத்திக் கொண்டு சீமான் ´வீர வசனம்´ பேசட்டும்!

துரோகிகளே,

´பெரியாரை பெரியாராக இருக்க விடுங்கள்´ என்றுதான் கோருகிறோம். இன்னும் எத்தனை
காலத்திற்கு அரசியல் செய்ய உங்களுக்கு பெரியார் வேண்டும்?

சொல்லுங்கள் துரோகிகளே!
சொல்லுங்கள் புரட்டு கதை பேசும் புரட்டர்களே!!!

தேவர் ஜெயந்தி ! - தமிழக அரசின் அரசு விழாவா ?



கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் போல மதுரைக்கு தெற்கே ஆண்டுதோறும் தேவர் ஜெயந்தி என்ற பெயரில் முத்துராமலிங்க தேவருக்கு விழா எடுக்கிறார்கள். அதற்கு ஆயிரக்கனக்கான போலிஸ் பாதுகாப்பு, இது கடந்த 15 - 20 ஆண்டுகளாக புதிதாக புகுத்தப்பட்டு நடைபெறும் ஒரு சாதி சார்ந்த விழா. முத்துராமலிங்க தேவர் ஒரு சாதி சார்ந்த சமூகத்தலைவராக அடையாளப்படுத்திக் கொண்டவர். அவருடைய சமூகம் அவருக்கு விழா எடுக்கிறது, அதைப்பற்றி ஒன்றும் சொல்வதற்கு இல்லை. ஆனால் அந்த கூ(ட்ட)த்தின் கைவரிசையில் மதுரையில் இருந்த அம்பேத்கார் சிலை உடைபெற்றிருக்கிறது. தேவர் ஒரு மாநிலத்திற்குள், ஒரு சாதிக்குள் தன்னை குறுக்கிக் கொண்டவர். தேவரை எந்த வகையிலும் ஒப்பிட முடியாத அளவுக்கு உயர்வு பெற்றவர் அம்பேத்கார், மேலும் அவர் ஒரு தேசிய தலைவர். தேவரை போற்றுபவர் தேவரை மட்டும் போற்ற வேண்டியதுதானே. எதற்கு அம்பேத்கார் சிலைமீது கை வைத்து ஒரு கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் ?

அங்கு நடைபெறும் தேவர் விழா என்பது வெள்ளிடை மலையாக ஒரு குறிப்பிட்ட சாதி விழா என்றே தெரிகிறது, ஓட்டு வங்கி குத்தகையை தக்கவைத்துக் கொள்ள ஆண்டுக்கு ஒருமுறை கையெழுத்துப் போட்டு செல்ல அரசியல் வாதிகள் குறிப்பாக ஜெ, கருணாநிதி போன்றோர் படையெடுத்துச் செல்கின்றனர். ஆண்டுக்கு ஆண்டு இந்த விழா விளம்பரப்படுத்தப்படுவதையும், அதற்கு முதன்மைத்துவம் கொடுத்து செய்திதுறைகள் கூட படங்களை வெளி இடுவதைப் பார்க்கும் போது தென் மாநில, தமிழக சாதி அரசியலும், சாதி வெறிகளும் ஒழிப்பதற்கு இந்த நூற்றாண்டிற்கு வாய்ப்பு கிடைப்பது போல் தெரியவில்லை.

பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலங்கள் அவலங்களுக்கு காரணமே உயர்சாதி நினைப்பில் முத்துராமலிங்க தேவரின் சமூகம் தலித்துகளுக்கு எதிராக செய்யும் அடக்குமுறைதான். அந்த ஊரில் குறிப்பிட்ட அந்த சமூகத்திடம் பேசி தேர்தலை நடத்த துப்பு இல்லாத அரசியல்வாதிகள் தேவர் ஜெயந்திக்கு சென்று மாலை அணிவித்து வருவதைப் பார்க்கும் தலித் பெருமக்களை அரசியல்வாதிகளும் ஒதுக்கித் தள்ளுவதாகத்தான் நினைக்க முடிகிறது. சாதியால் அடையாளப்படுத்தப்பட்டு முழுக்க முழுக்க சாதி விழாவாகவே நடைபெறும் விழாக்களுக்கு முன்னாள் முதல்வரும், இந்நாள் முதல்வரும் சென்று வருவதைப் பார்க்கும் தமிழகத்தின் ஒவ்வொரு சாதியும் தங்கள் சாதிக்கு அத்தகைய அங்கீகாரம் கிடைக்காதா ? என்று நினைக்கத்தான் செய்யும். தங்கள் சாதியையும் முன்னிலை படுத்தவேண்டும் என்று அனைத்து தமிழர்களும் நினைக்க ஆரம்பித்துவிடுவர். தீண்டாமை ஓரளவு குறைந்திருக்கிறது, ஆனாலும் சாதி வெறி வளர்ந்தால் மக்கள் தீவு கூட்டங்களாக மாறிப் போய்விடுவர்.

இஸ்லாமியர் கடைகளில் பொருட்களை வாங்காதே என்று இந்துத்துவ வாதிகள் நல்வழி(?) காட்டுவதைப் போலவே அடுத்த சாதிகாரர்களிடம் வியாபாரம் செய்யவோ, வாங்கவோ கூடாது என்ற மனநிலைக்கு சாதி வெறி இட்டுச் செல்லும். இன்றைய தேதியில் சாதியை வளர்க்க மறைமுகமாக பாடுபடுவது அரசியல்வாதிகள் தான். முதல்வர் பதவிக்கு அனைத்து சாதி/மத பெருமக்களும் தான் வாக்கு அளித்து இருக்கின்றனர். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சாதியை சேர்ந்தவராக இருக்கின்றனர், வாஉசி...திருப்பூர் குமரன்.. போன்று பட்டியல் எழுதி மாளாது.... இவர்கள் இன்னின்ன சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டு நாள்தோறும் ஒரு சாதி தம் தலைவருக்கு ஜெயந்தி விழா எடுத்தால் ஜெ, மற்றும் கருணாநிதி சென்று வருவார்களா ? நிச்சயம் முடியாது. தேவர் ஜெயந்தி விழாவுக்கு இவர்கள் சென்று வருவதன் மூலம் குறிப்பிட்ட சாதி(வெறி)யை வளர்க்க இவர்களும் சேர்ந்தே பாடுபடுகிறார்கள் என்று தான் நினைக்க முடிகிறது. எந்த கட்சித்தலைவர் அந்த சாதிக்கு நெருக்கமானவர் என்று காட்டிக் கொள்ள நடக்கும் 'போட்டோ' போட்டி போலவும் தெரிகிறது.

அனைத்து சாதிப்பிரிவினருக்கும் பொதுவாக இருக்க வேண்டிய பொறுப்புள்ள முதல்வர் பதவி வகித்தவர்கள், வகிப்பவர்கள் சாதி விழாக்களுக்கு சென்று வருவது முதல்வர் பதவிக்கே இழுக்கானது.

சீமான் உள்ளிட்ட ‘முற்போக்கு’ நரிகளின் தேவர் சாதிவெறி !


தமிழ்த் தேசியம், தமிழீழம், பெரியார் கொள்கை பற்றி எல்லாம் மேடைதோறும் முழங்குபவர்களும் சரி, தமிழகத்தில் “முற்போக்கு சக்திகள்’எனத் தம்மைக் கருதிக் கொள்வோரும் சரி, உள்ளூர சாதிவெறி புழுத்து நாறுபவர்களாகத்தான் இருக்கிறார்கள். அதிர்ச்சியூட்டும் இந்த உண்மைகள், அண்மைக்காலத்தில் ஒவ்வொன்றாக அம்பலமாகத் தொடங்கியுள்ளன.
மேடை தோறும் ஈழம், பிரபாகரன், தமிழ்த் தேசியம் பற்றி உணர்ச்சி பொங்கப் பேசியும், தன்னைப் பெரியாரின் பேரன் என்று முழங்கியும் வந்த திரைப்பட இயக்குநர் சீமான்,  பிரபாகரன் படம் பொறித்த சட்டையணிந்து வந்து தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு தன் சாதி வெறியை வெளிப்படுத்தியுள்ளார்.  சீமானின் தேவர் சாதிப் பற்றை பெரியார் தி.க. ஆதரவு இணையதளம் மட்டும் விமர்சித்துள்ளது. இதுவரை “தம்பி’சீமானை சீராட்டிவந்த மற்ற ஈழ ஆதரவு சக்திகளோ, இப்போது அவரைக்  கண்டுகொள்ளாது கைகழுவி விட்டுவிட்டன. இவர், ஏற்கெனவே தனது “தம்பி’ திரைப்படத்தில் தேவர் புகைப்படத்தை இடம்பெறச் செய்தபோதே விமர்சிக்கப்பட்டார். அதனைத் தவறென ஒத்துக் கொண்ட சீமான்,  இப்போது தேவர் ஜெயந்தியில் கலந்து கொண்டதை, “இம்மானுவேல் சேகரனுக்கும் மாலை போட்டதை”க் குறிப்பிட்டு நியாயப்படுத்தியுள்ளார்.  அதாவது, சாதி ஒடுக்குமுறையாளருக்கும் ஒடுக்கப்பட்டவருக்கும் ஒரே மரியாதை. இதுதான், இந்தப் “பெரியாரின் பேரனது’சாதி ஒழிப்பு சமத்துவம்!
இதே பித்தலாட்டத்தைத்தான் புரட்சி பேசும் சி.பி.எம். கட்சியும் செய்திருக்கிறது. சி.பி.எம்-மின் “தீண்டாமை ஒழிப்பு முன்னணி’ தாழ்த்தப்பட்டோர் உரிமைக்காக உத்தப்புரத்தில் போராடுகிறது. அதே கட்சியின் பொதுச் செயலர் என்.வரதராசன், அறுவை சிகிச்சை முடித்து கறுப்புக் கண்ணாடி அணிந்தவாறே, சாதி ஒடுக்குமுறையின் சின்னமான தேவர் சிலைக்கு ஓடோடிப் போய் மாலை போட்டு மரியாதை செய்தார்.
சீமான் உள்ளிட்ட முற்போக்கு நரிகளின் தேவர் சாதிவெறிசென்ற ஆண்டு தேவர் ஜெயந்தியை ஒட்டி, சாதிவெறியாட்டம் ஆடிய சட்டக் கல்லூரியின் ஆதிக்க சாதி மாணவர்கள், தாழ்த்தப்பட்டோரிடம் வாங்கிக் கட்டிக்கொண்டதை, சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம், “ஒரு மாணவனைப் போய் இந்த அடி அடித்தார்களே’ என்று சுயசாதிவெறியோடு  ஒரு வருடமாக பேசியும் எழுதியும் வந்த வலது கம்யூனிஸ்டு கட்சியின் தா.பாண்டியன், தன் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான லிங்கத்தை பசும்பொன்னுக்கே அனுப்பிவைத்து தேவருக்கு மரியாதை செய்தார். முதலாளிகளின் சீட்டாட்டக் கிளப்பான “லயன்ஸ் கிளப்”பில் முத்துராமலிங்கம் என்ற சொந்த சாதிக்காரர் இருப்பதால், அந்த கிளப்பின் விழாவை தா.பாண்டியன் வாழ்த்தும் விளம்பரம் “ஜனசக்தி”யில் வெளிவந்துள்ளது. தேவர் சாதிவெறித் தலைவர்களான முத்துராமலிங்கத் தேவர், மூக்கையாத் தேவர் போன்றோருக்கு அவ்வப்போது சிறப்புக் கட்டுரைகளை வெளியிடும் ஜனசக்தியில் பணிபுரியும் ஜீவபாரதியோ, டஜன் கணக்கில் தேவர் பெருமை பேசும் நூல்களையும் வெளியிடுபவர். ஜனசக்தி ஆசிரியர் தா.பாண்டியனோ, முக்குலத்தோர் சாதிகளில் ஒன்றான அகமுடையார் சங்க கல்வி அறக்கட்டளை விழாவில் கலந்துகொண்டு “அதில் என்ன தவறு?”என நியாயப்படுத்துபவர்.
“முதுகுளத்தூர் சாதிக் கலவரத்தை நிறுத்தவேண்டுமானால், முத்துராமலிங்கத்தைப் பிடித்துச் சிறைக்குள் தள்ள வேண்டும்”எனக் கோரியவர் பெரியார். அவர் ஆரம்பித்த தி.க.வின் “விடுதலை’”பத்திரிக்கையோ, வழக்கம்போல இந்த ஆண்டும் “தேவர் ஜெயந்தி’விழாவிற்கு விளம்பரம் வாங்கிப் பிரசுரித்துக் கொண்டது. சமூகநீதி, சாதி ஒழிப்பு, சமத்துவம் என்றெல்லாம் வாய்ப்பந்தல் போடும் வீரமணி கும்பலின் பித்தலாட்டம், தேவர் ஜெயந்தியோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. திராவிடர் கழகத்தின் தென்மாவட்டப் பிரச்சாரக் குழுத் தலைவராக இருக்கும் தே.எடிசன் ராஜா, நாடார் சங்கத்திலும் செயல்படுகிறார். மும்பையில் நாடார் சங்கம் நடத்தும் காமராசர் நினைவுப் பள்ளி விழாவில் எடிசன் ராஜாவுக்கு “நாடார்”வால் முளைத்து, “எடிசன் ராஜா நாடார்’ஆக மாறினார். பாரம்பரியமான திராவிட இயக்கக் குடும்பத்தைச் சேர்ந்தவரும், தி.க.வின் தகவல் தொடர்பு செயலாளருமான வழக்கறிஞர் அருள்மொழியின் தாயார் சரசுவதி சென்ற ஆண்டு மறைந்தபோது, “இந்து” நாளேட்டில் தந்திருந்த அஞ்சலி விளம்பரத்திலும் தனது “உடையார்”சாதி அடையாளத்தைத் தெளிவாகவே காட்டியிருந்தார்.
தேவர் சாதியைச் சேர்ந்த திரைப்பட பிரபலங்கள், தங்கள் சாதி விழாக்களில் அண்மைக்காலமாகக் கலந்துகொண்டு சாதி வளர்க்கின்றனர். இவர்களில் செந்தில், மனோரமா, விவேக் வரிசையில் இப்போது தி.மு.க.வைச் சேர்ந்த திரைப்படப் பாடலாசிரியர் வைரமுத்துவும் இணைந்துவிட்டார். நகைச்சுவை நடிகர் கருணாஸ், தேவரைப் புகழ்ந்து “முக்குலத்தின் முகவரி”எனும் பாடல்தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். இதில் முகவரியை எழுதுவதற்கு வைரமுத்து “திருப்பாச்சி அறுவாளை’’த் தூக்கிக் கொண்டு குதித்திருக்கிறார்.
“ஒடுக்கப்பட்ட மக்களே ஒன்று சேருங்கள்”என்ற கொள்கை முழக்கத்தைக் கொண்டிருக்கும் வே.ஆனைமுத்துவின் மார்க்சிய-பெரியாரியப் பொதுவுடமைக் கட்சியோ, “வன்னியர்களே ஒன்றுசேருங்கள்”என்று சொல்லவில்லையே தவிர, வன்னியகுல சத்திரிய “சமூகநீதி’யைத் தாண்டி வரவே இல்லை.
“அம்பேத்கரின் சாதி ஒழிப்பு செயல்திட்டங்களை ஆழமாகப் புரிந்து கொள்ள’ச் சொல்லி சி.பி.எம். கட்சிக்கு “பாடம் நடத்தும்”தலித் முரசில், “இந்து ஆதிதிராவிட மணமகனுக்கு அதே உள்பிரிவில் மணமகள் தேவை”என விளம்பரம் வருகிறது. சாதி காக்கும் இச்செயல் ஒவ்வோர் இதழிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
“சாதியை மறந்து தமிழர்களாக நாம் ஒன்றுபட வேண்டும்”என கருணாநிதி பேசுகிறார். ஆனால், அவரின் மகள் கனிமொழியோ, திருப்பூர்-மல்லம்பாளையம் நாடார் சங்கக் கல்வி நிறுவன விழாவிற்கு நாடார் சாதி தி.மு.க. அரசியல்வாதிகளான சற்குணபாண்டியன், கீதாஜீவன், பூங்கோதை போன்றவர்களுடன் கலந்து கொண்டு “நாடார்களாக ஒன்றுபடுகிறார்’.
பெரியாரின் கொள்கைகளைத் தங்கள் கொள்கையாகக் கருதுவோரும், தமிழ்த்தேசியத்தை வென்றெடுக்கக் களம் கண்டிருப்பவர்களும், சாதி ஒழிப்பிற்குப் பிறகுதான் சோசலிசம் எனத் தலித்தியம் பேசுபவர்களும், தாங்கள் கொண்டிருக்கும் இலட்சியத்திற்குக் கூட விசுவாசமாக இல்லாமல் சாதி உணர்வாளர்களாகவோ, வெறியர்களாகவோதான் இருக்கிறார்கள். தங்களின் தோலைக் கீறி சாதி இரத்தம் ஓடுவதை அவர்களாகவே ஒவ்வோர் நிகழ்விலும் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டியும் விடுகின்றனர்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சமூகத்தை சாதி எனும் நுகத்தடி அழுத்திக் கொண்டிருக்கிறது. மனிதநீதிக்கு எதிரான சாதி ஆதிக்கவெறியை அழிப்பதற்கு, மாபெரும் சமூகப் புரட்சியே தேவைப்படுகிறது. அப்புரட்சி, சாதி வெறியர்களுக்கு எதிரானது மட்டுமல்ல, முற்போக்கு வேடம் போடும் இத்தகைய களைகளுக்கும் எதிரானதுதான். இத்தகைய சுயசாதி மோகம் கொண்டோர்களையும், சாதியத்தைப் பாதுகாத்துவரும்  ஓட்டுப் பொறுக்கிகளையும் களைந்தெறியாமல் சாதிவெறிக்கெதிரான போராட்டத்தில் முன்னேறிச் செல்லவே முடியாது.

தமிழகத்தின் தென்மாவட்ட சாதிக்கலவரங்கள்:ஏன்? எதற்கு? எப்படி?

தென் தமிழகத்தில் சாதி வெறி குறிப்பாக முக்குலத்தோருக்கு அதிகமாக இருப்பதன் முக்கிய காரணம் சசிகலா,காவல்துறையில் ஆதிக்கம்,மற்றும் தேவர்,மறவர்,கள்ளர் ஆகிய மூன்று பேருக்குள்ளும்(ஒருவொருக்கொருவர் பெண் எடுப்பதோ பெண் கொடுப்பதோ கிடையாது.அவர்களுக்குள் சண்டைகளும் உண்டு)ஒற்றுமையை உண்டு பண்ண,அதன் மூலம் அரசியல் சக்தி அதிகம் பெற நடக்கும் முயற்சிகள்.முக்குலத்தோரில் குறைவாக பார்க்கப்படும் கள்ளர் பிரிவை சேர்ந்த சசிகலா (மற்றும் குடும்பம்)அதன் தன்னிகரில்லா தலைவராக மாற உருவாக்கப்பட்ட பல வழிகளில் ஒன்று தான் பெரிய அளவில் குரு பூஜை,அதிகார வர்க்கம் காவல் துறைக்கு ஆதரவாக செயல்படுவது போன்ற செயல்கள்.
திரை துறையினரின் பங்கும் இதில் பெருமளவு உண்டு.திரைத்துறையில் பிரபலமான பலர் இந்த சாதியை சேர்ந்தவர்கள்.அதன் பலனாக சாதி வெறியூட்டும் பல படங்கள்,பாட்டுக்கள் உருவாகி வெறியை தூண்டுகின்றன.தேவர் மகன் திரை படம் ஒரு முக்கிய உதாரணம்.அதில் சிவாஜி நேதாஜியின் படையில் அதிகம் இருந்தது நம்ம பயல்கள் தான் என்று சொன்ன வசனத்தை ஒரு தெய்வ வாக்காக பிடித்து கொண்டு பலர் பேசுவதை,வாதாடுவதை பார்த்திருக்கிறேன்.
இந்திய தேசிய ராணுவம்சப்பானால் பிடிக்கப்பட்ட இந்திய ராணுவ வீரர்களை கொண்டு அமைக்கப்பட்டது.அதில் பல முகம்மதியர்கள்,கோர்க்ஹாக்கள்,வட இந்தியர்கள் என்று அனைவரும் உண்டு.புதிதாக சேர்ந்தவர்கள் பர்மாவில் வாழ்ந்த தமிழர்கள்.அந்த காலகட்டமான 1940 -45 ஆண்டுகளில் முக்கால்வாசி தினங்கள் முத்துராமலிங்கம் சிறையில் இருந்தார்.இது போன்று பல கதைகளை உண்மை என்று நம்பி வெறியோடு அலைவது தான் வருத்தம் தரும் செய்தி.
இன்னொரு செய்தி.இம்மானுவேல் சேகரன் ராணுவத்தில் பணியாற்றி ஹவில்தாராக ஓய்வு பெற்றவர்.அதுவும் அவர் சாதியை எதிர்த்து போராடுவதற்கு,தன சாதியை ஒன்றிணைத்து போராடுவதற்கு காராணமாக இருந்திருக்கலாம்.அம்பேத்கரின் தந்தையும் ராணுவத்தில் பணியாற்றியவர்.தன் மகனை படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வர காரணம் அது தான்.

பரமக்குடி துப்பாக்கிச்சூடு

தேவர் ஜெயந்தி என்கிற ஜாதி பெருமையை மட்டும் கொண்ட விழா, அரசாங்கம், சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டு கோலாகலமாக நடைபெற்று, ஊடகங்களிலும் பரப்பப்படும்; ஆதிக்க ஜாதி வெறிக்கு எதிரான தங்களின் போராட்டத்தின் ஒரு முக்கியமான நினைவை, பள்ளர்கள் முன்னெடுப்பது மகா பாதகம் போல காட்டப்படும் என்றால், நாம் இன்னும் ஜாதிய காட்டுமிராண்டித்தனத்தில் இருக்கிறோம் என்றுதான் சொல்லவேண்டும்.

- பத்ரியின் பதிவின் பின்னூட்டத்தில் ரோசாவசந்த்.

முத்துராமலிங்க (தேவர்) நூற்றாண்டு விழா அரசு நடத்தலாமா?



எதிர்வரும் அக்டோபர் 30ஆம் நாள் பசும்பொன் முத்துராமலிங்கதேவரின் நூற்றாண்டு விழாவை அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மிகப் பிரமாண்டமாகக் கொண்டாட ஏற்படுகள் செய்து வருகின்றனர்। பிரமாண்டம் என்பதைப் புரிந்து கொள்ள சில விவரங்கள் நமக்கு உதவும். அதாவது வழக்கமாக ஒரே நாள் மட்டும் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வந்த இந்த நிகழ்வு இவ்வாண்டு 28,29,30 ஆகிய மூன்று நாட்கள் அரசு விழாவாகக் கொண்டாடப்பட இருக்கிறது. அரசு செலவில் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது நினைவு இல்லம் புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 1 1/2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அவரது நினைவிட விரிவாக்கத்திற்கு பசும்பொன் கிராமத்தில் நீண்ட காலமாக, தேவர் சமூகத்தோடு இணக்கமாக வாழ்ந்து வந்த 72 தாழ்த்தப்பட்ட சமூகக் குடும்பங்கள் அவ்வூரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாற்றிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்தாலும், தலித் மக்களின் வாழ்க்கை ஆதாரம் ‘நிரந்தரமற்றது’ என்பதை இது உறுதிப்படுத்துகிறது। மேலும், (தேவர்) இறந்து போன பசுமலையில் அவரது நினைவு மண்டபம் கட்ட அரசு முடிவு செய்து அதற்கும் நிதி ஒதுக்கியுள்ளது. இந்நினைவு மண்டபம் கட்ட தேவைப்படும் இடத்திற்காக பசுமலையில் நீண்டகாலமாக இருந்து வரும் ஒரு மேல்நிலைப்பள்ளியின் இடத்தை அரசு கேட்டுள்ளது. இதை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் அப்பள்ளியின் நிர்வாகம் தொடுத்த வழக்கில் உயர்நீதி மன்ற நீதிபதி சந்ரு அரசிற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளார்.
மேற்சொன்ன இரண்டு பிரச்சினைகளும் சொல்வது என்ன? ஒரு தனிப்பட்ட நபரின் புகழ்பாட இப்படி இடங்களை அரசே ஆக்கிரமிப்பதின் மூலம் பாதிக்கப்படுவது ஒரு எதிர்கால தலைமுறையின் வாழ்வு என்பது தான்। தேவையெனில் பள்ளிக்கூடத்தை இடம் மாற்ற ஆலோசனை சொல்கிறது உயர்நீதி மன்றமும் அரசும். ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம், ஒரு பள்ளிக்கூடம் உருவாக்கத் தேவையான இடம் – நிலம் அமைவிடம், கட்டுமான உருவாக்கம், அப்பள்ளிக்கூடத்தை மையப்படுத்தி அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் என பாதிப்பிற்கு உள்ளாகும் பல்வேறு அம்சங்களைக் கணக்கில் எடுக்கத் தவறியுள்ளது உயர்நீதி மன்றம். எல்லாவற்றையும் பணம் மட்டுமே சரி செய்துவிட முடியாது. பொதுமக்களின் அடிப்படை உரிமைகள், வாழ்க்கை ஆதாரம் என்ற அக்கறை ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அரசுக்கு அக்கறை வேண்டாமா?
பசும்பொன் முத்துராமலிங்கத்தைப் போல இவ்வாண்டு கம்யூனிஸ்ட் கட்சி தலைவராயிருந்த ஜீவா, சுதந்திரப் போராட்ட மாவீரன் பகத்சிங் ஆகியோரின் நூற்றாண்டு விழாவும் கொண்டாடப்பட்டது। ஆனால் இவ்விழாக்கள் ஒரே ஒருநாள் மட்டுமே அரசால் அனுசரிக்கப்பட்டது. அதிலும் சென்னை கலைவாணர் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட பகத்சிங் நூற்றாண்டு விழாவில் தமிழக முதலமைச்சர் கலந்து கொள்வதாக இருந்தும், அவ்விழா கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. நாளிதழ்களின் செய்திகளின்படி, அவ்விழாவிற்குப் போதிய கூட்டம் வராததால்தான் ரத்து செய்யப்பட்டதாக அறிகிறோம். மிக வலிமையான அரசியல் கட்சியாகவும், அக்கட்சியின் தலைவராகவும் இருக்கும் தமிழக முதல்வர் கலைஞர் கலந்துகொள்வதாக இருந்தும், அவ்விழாவிற்கு 100 பேருக்கும் குறைவானவர்களே வந்திருந்ததால் அவ்விழா ரத்து செய்யப்பட்டது.
ஜீவா, பகத்சிங் ஆகியோருக்கு இருக்கும் ‘பொது அடையாளம்’ அடிப்படையில் முத்துராமலிங்கத்திற்கு இல்லை। அவர் தேசிய தலைவர் என்றும், அனைத்து சமூகங்களின் நலனில் அக்கறை கொண்டிருந்தவர் என்றும், சுதந்திரப்போராட்ட தியாகி என்றும் பல்வேறு அடையாளங்களை அவருக்கு ஆதரவானவர்கள் உருவாக்கி வருகின்றனர்.ஆனால் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்தவர் என்பதைத் தவிர மற்றைய அடையாளங்கள் இட்டுக்கட்டப்பட்டவை. சுதந்திரப் போராட்டத்தில் தனது முழு சொத்தையும் இழந்து, நீண்ட காலம் சிறையில் வாடி தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் இழந்து இந்திய விடுதலைக்காக சாதி, மத பேதமின்றி எள்ளளவும் சுயநலமின்றி வாழ்ந்து மறைந்தவர் வ.உ.சிதம்பரனார் அவர்கள். அவருக்கு வழங்கப்படாத ‘தேசிய தலைவர்’ அடையாளம் ஒரே நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுபினர் என இரு பதவிகளுக்கும் போட்டியிட்ட, சொந்த சாதி மக்களை தன் சுயநல அரசியலுக்குப் பயன்படுத்தி சாதிவெறியூட்டி வளர்த்த, தமிழகத்தில் ‘சாதிக்கலவரம்’ என்ற தொடர் மோதல்கள் நிகழக் காரணமான ஒருவருக்கு அதாவது முத்துராமலிங்கத்திற்கு வழங்கப்படுகிறது. இதைத் தேவர் சாதியினர் உருவாக்கி மகிழலாம். அரசு அதை அங்கீகரிக்கக்கூடாது.
1957ல் இராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுதேர்தலின் போது முத்துராமலிங்கத்தை எதிர்த்து, தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியினரை எதிர்ப்பதாகக் கருதிக்கொண்டு, தாழ்த்தப்பட்ட மக்களின் மீது கடுமையான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டவர் முத்துராமலிங்கம்। இவ் வன்முறையின் தொடர்ச்சியாக தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கிய இம்மானுவேல் சேகரன் 11-09-1957 அன்று படுகொலை செய்யப்பட்டார் (அவரது 50ஆம் ஆண்டு நினைவுநாள் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும் பங்கேற்றதாகக் கடந்தமாதம் அனுசரிக்கப்பட்டது. எவ்வித அசம்பாவிதங்களுமின்றி ஒரே ஒருநாள் நடந்து முடிந்தது) அவ்வழக்கில் முத்துராமலிங்கம் குற்றவாளியாகக் கருதப்பட்டு, வழக்கின் முடிவில் விடுதலை செய்யப்பட்டார். 1957 ‘முதுகுளத்தூர் கலவரம்’ குறித்து அப்போதைய மாநில உள்துறை அமைச்சர் பக்தவச்சலம் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் , முத்துராமலிங்கத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டுள்ளன. இவ்வாறாக, தனித்த சாதி அடையாளத்துடன் கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஒருவர் தேசியத் தலைவராகவோ,அனைத்து மக்களுக்கான பொது அரசியல்வாதியாகவோ கருதப்படக் கூடாது என்பதே நமது விமர்சனம்.
தேவர் ஜெயந்தி விழாவை அரசு நடத்த எதிர்ப்பு தெரிவித்து ‘ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி’ என்ற அமைப்பு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது। இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி, இது சம்பந்தமாக விளக்கம் தர தமிழக அரசுக்கு நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். இவ்வழக்கு விசாரணை மீண்டும் அக்டோபர் 30ந்தேதி அதாவது தேவர் நூற்றாண்டு தினம் அன்று எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. இவ்விசாரணைக்கான அடிப்படை ஆதாரமாக, 1957ல் தமிழக சட்டமன்றத்தில் திரு,பக்தவச்சலம் தாக்கல் செய்த அறிக்கை பயன்படுத்தப்பட்டுள்ளது. பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவதும், வழக்குகள் புனையப்படுவதும் வழமையான செயல்கள் தானே என்று முத்துராமலிங்கத்தின் மீதான குற்றச்சாட்டுகளை நாம் புறந்தள்ளிவிட முடியாது.
ஏனெனில் இக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் சமூக நல்லிணக்கத்திற்குப் பாதகமாக,அவரும் அவரைச் சாந்தவர்களும் மேற்கொண்ட நடவடிக்கைகளின் மீது புனையப்பட்டவை. பல்வேறு சாதியினரும் அன்றைய காலகட்டத்தில் அவரது அரசியல் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர், அரசியல் சட்ட நெறிமுறைகளுக்குப் புறம்பாக, ஒரு அரசின் இறையாண்மைக்கு சவால்விடும் விதமாக,பல்வேறு கூட்டங்களில் அவரது சொற்பொழிவுகள் அமைந்திருக்கின்றன. அவரது பேச்சுக்கள் தொகுக்கப்பட்டு, புத்தகங்களாக வந்துள்ளன. அவற்றை வாசிப்பவர்களுக்கு உண்மை தெரியும். சமீபத்தில் வெளியான ‘முதுகுளத்தூர் கலவரம்’ – ஆசிரியர் தினகரன் என்ற நூல் அவர் மீதான குற்றச்சாட்டுகளின் இரத்த சாட்சியமாக இருப்பதை பலரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
பார்ப்பன எதிர்ப்பு, திராவிட இயக்க அரசியல், பிற்படுத்தப்பட்டவர்கள் நலன் என்ற அடிப்படையில் மட்டுமே தமிழகத்தில் கடந்த நாற்பது ஆண்டுகாலமாக அரசியல் நட்ந்து வருகிறது। 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே தமது சுயமரியாதைக்கும், அரசியல் உரிமைக்காகவும் போராடி வரும் தாழ்த்தப்பட்ட மக்கள் இன்றைக்கும் தனிச்சேரிக் குடிகளாகவும், மனித மலத்தை மனிதனே சுமக்கும் கொடுமைகளை ‘தொழில்’ என்ற பெயரில் சுமப்பவர்களாகவும், சாதி இந்துக்கள் என அறியப்படுகிற பிற்படுத்தப்பட்ட அனைத்து சாதியினராலும் ஒடுக்கப்படுகிறவர்களாகவும் ஒவ்வொரு நாளும் தீராத துன்பத்தில் உழன்று வருகின்றனர். தென்மாவட்டங்களில் முத்துராமலிங்கத் தேவருக்குப்பின் இத்தகைய ஒடுக்குமுறைகள் அரசியல் மயப்படுத்தப்பட்டு அமைப்பாக்கப்பட்ட வன்முறைகளாக நாள்தோறும் ஏதேனும் ஒரு ஊரில் நிகழ்ந்தவண்ணமே உள்ளன.
இத்தகைய வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்த, கடுமையாக ஒடுக்க, சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூட இதுவரையான எந்த அரசுகளும் முன்வருவதில்லை। நடுநிலையானவர்கள், சனநாயகவாதிகள், முற்போக்காளர்கள் என சொல்லிக் கொண்டவர்கள் கூட நேர்மையாக இவ்விசயத்தில் நடந்து கொள்வதில்லை. அனைத்தும் போலிகள் என தோலுரிந்து போன நிலையில் ஒடுக்கப்பட்ட மக்களே நேரடியாகக் களத்தில் இறங்கி, தம்மைப் பாதுகாத்துக்கொள்ளவும், அரசியல் ரீதியாக அமைப்பாகவும் முன்வர வேண்டிய அவசியம் நேர்ந்துள்ளது. இச் சூழலில் ‘சூத்திரன் பட்டம்’ நீங்க போராடும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் ‘பஞ்சமன்’ என ஆயிரம் ஆண்டுகளாக ஒதுக்கப்பட்டிருக்கும் பெரும் சமூகக் குழுமத்தின் வலிகளுக்கும்-காயங்களுக்கும் காரணமானவர்களாக இருந்து வருவதைத்தான் ‘தேவர் ஜெயந்தி’ போன்ற சாதிவெறிக் கொண்டாட்டங்கள் உணர்த்துகின்றன.

தேவர் ஜெயந்தி - வரலாற்றின் அவமானம்

‘பெரியார் பிறந்த பூமி’ என்று நாம் அவ்வப்போது பெருமையடித்துக் கொள்வதற்குச் சொல்லும் காரணங்களில் பிரதானமானது, ‘அண்டை மாநிலமான ஆந்திரா, கேரளா தொடங்கி வடமாநிலங்கள் வரை பலரும் தங்கள் பெயருக்குப் பின்னால் சாதிப்பெயரைப் போட்டுக் கொள்கிறார்கள். மய்யநீரோட்ட இடதுசாரி அமைப்புகள் தொடங்கி புரட்சிகர மார்க்சிய லெனினிய அமைப்பைச் சேர்ந்த முன்னணித் தலைவர்கள் கூட சாதி ஒற்றைப் போட்டுக் கொள்ளும் வழக்கத்தைக் கைவிடவில்லை. ஆனால் தமிழகத்தின் பொதுவெளியில் பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரைப் போட்டுக்கொள்வது என்பது கூச்சகரமான செயலாக மாற்றப்பட்டிருக்கிறது’ என்பது. ஆனால் தமிழகத் தலைநகர் சென்னையின் மய்யப்பகுதியன்றில் ஒரு சிலை சாதிப்பெயரோடு நிற்கிறது. அந்த சிலை அமைந்த சாலையும் சாதி ஒற்றைத் தாங்கியிருக்கிறது. 
அதிர்ஷ்டவசமாக தமிழகச் சாதிகளுள் ஒன்றில் பிறக்காத எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் தெருக்கள் மற்றும் பூங்காக்கள், நினைவிடங்களில் இருந்த சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டன. பிற்காலத்தில் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் காயிதேமில்லத் பெயரால் மாவட்டம் அமைக்கப்பட்டதையட்டி எழுந்த மதக்கலவரம், வீரன் சுந்தரலிங்கம் பெயர் அரசுப்போக்குவரத்துக் கழகமொன்றிற்கு வைக்கப்பட்டதன் விளைவாய் எழுந்த சாதிய வன்முறைகள் ஆகியவற்றின் காரணமாக ஒட்டுமொத்தமாக தலைவர்களின் பெயர்கள் மாவட்டங்கள் மற்றும் போக்குவரத்துக்கழகங்களிலிருந்து நீக்கப்பட்டன. இத்தனைக்கும் மாவட்டங்களுக்கு வைக்கப்பட்ட தலைவர்களின் பெயர்களின் ஒன்றில் கூட தலித் தலைவர்கள் இல்லை. ஆனால் இத்தனை மாற்றங்களுக்குப் பிறகும் அசையாமல் அப்படியேதான் நிற்கிறது பசும்பொன் முத்துராமலிங்கத் ‘தேவர்’ சிலையும் பசும்பொன் முத்துராமலிங்கத் ‘தேவர்’ சாலையும்.
முக்குலத்துச் சாதி அதிகாரத்தையும் அரசியலையும் கேள்விக்குட்படுத்தாமல் தமிழ்ச்சமூகத்தின் பல தீர்மானகரமான மய்யங்கள் ஏற்றுக்கொண்டது என்பதே இதன் அர்த்தம். இன்று வரை வெகுஜன ஆதரவு பெற்ற எந்த ஒரு சின்ன அசைவும் கூட இந்த முக்குலத்தோர் அதிகாரத்திற்கு எதிரானதாக இல்லை. மாறாக அதற்கேற்றவாறு சமூகம் ஒத்திசைந்து தன்னைத்தானே தகவமைத்துக் கொள்கிறது. அதன் உச்சம் ‘தேவர் ஜெயந்தி’ என்னும் கலாச்சார அநாகரீகம், ஜெயமோகனின் வார்த்தையில் சொல்வதானால் ‘ஜனநாயகரீதியிலான மக்கள் கூடுகை’. சாதி குறித்த பிரக்ஞையுடனும் பிரக்ஞையற்றும் எவ்வாறு தமிழ்ச்சமூகம் பெருவாரியாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை மூன்று விதமான தளங்களினின்றும் அணுகலாம்.
அரசியல்:
திமுகவும் கருணாநிதியும் ஒருகாலத்தில் முக்குலத்தோரால் விலக்கப்பட்ட சக்திகளாகவே இருந்தனர். காரணம், திமுகவின் தலைவராக இருந்த கருணாநிதி போன்ற ‘எளியசாதி’ மனிதர்களை அவர்களின் சாதிய உளவியல் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் தேவர் சாதிக் கருத்தியல் பிதாமகன் பசும்பொன் முத்துராமலிங்கம் திமுக முன்வைத்த தமிழின -பார்ப்பன எதிர்ப்பு & இந்துமத எதிர்ப்பு அரசியலுக்கு எதிராய் இயங்கி வந்தவர். ஆனால் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் முக்குலத்தோர் அதிமுகவிலும் அரசு அதிகாரங்களிலும் போதுமான செல்வாக்கைச் செலுத்தினர். காளிமுத்து, திருநாவுக்கரசர் போன்றவர்கள் கட்சியில் அதிகார மய்யங்கள் என்றால், பொன்.பரமகுரு போன்ற முக்குலத்துப் போலீஸ் அதிகாரிகள் அரசு எந்திரங்களின் தீர்மானகரமான சக்திகளாக இருந்தனர். முக்குலத்தோர் & அதிமுகவினர் உறவு என்பது ஜெயலலிதா தலைமைக்காலத்தில் உச்சத்தை எட்டியது என்பதும் அதற்குக் காரணம் சசிகலாவின் செல்வாக்கு என்பதும் சாதாரண தமிழ்ஜனங்களும் அறிந்ததுதான்.
ஆனால் இப்போது இழந்துபோன முக்குலத்தோர் ஆதரவைப் பெறுவதற்காக கருணாநிதியும் பல உத்திகளைக் கையாளத் தொடங்கியுள்ளார். தேவர் ஜெயந்தியை அரசு விழாவாக மாற்றுவது, மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத்தின் பெயர் சூட்டுவதான அறிவிப்பு என்பதாகத் தொடர்கிறது. மேலும் இப்போது தென்மாவட்ட திமுகவில் அதிகார மய்யங்களில் இருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் முக்குலத்தோர்தான். ஆனால், என்ன ஒரு மனத்தடையாலோ இதுவரை கருணாநிதி நேரடியாக முத்துராமலிங்கத்தின் சமாதிக்குச் சென்று மாலை அணிவித்தது இல்லை. இந்த ஆண்டு சென்னையில் முத்துராமலிங்கத்தின் சிலைக்கு மாலை அணிவித்தது மு.க.ஸ்டாலின், பரிதி இளம்வழுதி, ஆற்காடு வீராசாமி. இதில் ஒருவர் கூட முக்குலத்தோர் அல்ல. பசும்பொன்னில் மரியாதை செலுத்தியது அழகிரி. ஆனால் அவருடன் சென்றது ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு போன்ற முக்குலத்து அமைச்சர்கள். தன்னுடைய கருத்தியல் அடிப்படைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக நழுவ விடுகிற திமுக சாதி ஓட்டுக்காக எந்த சமரசத்தையும் செய்துகொள்ள தயாராகத்தானிருக்கும்.
ஜெயலலிதா பொதுவாக எந்த அரசியல் முன்னோடிகளையும் மதிக்கும் பழக்கம் கொண்டவர் அல்ல. அண்ணா, பெரியார், காமராசர், காயிதேமில்லத் போன்ற அரசியல் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிக்க ஜெயலலிதா போவது அரிதினும் அரிது. ஜெயலலிதாவின் கைத்தடிகளை அந்த வேலையைச் செய்ய பணித்து விடுவார். அதுவும் இந்த ஆண்டு பெரியார் பிறந்தநாளுக்கு சிலைக்குக் கூட மாலை அணிவிக்கச் செல்லவில்லை. தான் இருந்த கொடநாடு எஸ்டேட்டிற்குப் பெரியாரின் புகைப்படத்தை வரவழைத்து ‘மரியாதை’ செய்தார். அண்ணாவுக்கும் அஃதே. கொடுமை என்னவென்றால் இத்தனைக்கும் இந்த ஆண்டு அண்ணா நூற்றாண்டு நிறைவுவிழாவும்கூட. ஆனால் முத்துராமலிங்கத்தின் பிறந்தநாளைக்கு நேரடியாகச் சென்று மாலை அணிவிக்க ஜெயலலிதா தவறியதேயில்லை. எம்.ஜி.ஆர் காலத்தில் நிலவிய கச்சாடாவான ஜனரஞ்சகக் கலாச்சாரத்தை அழித்து இந்துத்துவ பார்ப்பனியச் சார்பு நிலை எடுத்து வலதுசாரி அமைப்பாக மாறிப்போன ஜெ&அதிமுகவிற்கு மிகவும் இசைவானதுதான் இந்த முக்குலத்தோர் அதிகார அரசியல்.
திமுக, அதிமுக என்கிற திராவிடக் கட்சிகளைத் தாண்டிப்போனால் தென்படுபவர்கள் ‘இடதுசாரிகள்’. சென்ற ஆண்டு முத்துராமலிங்க ஜெயந்திக்கு மரியாதை செலுத்த அதே சாதியைச் சேர்ந்த நல்லகண்ணுவை அனுப்பி தன் ‘புரட்சிகரத் தன்மையை’ நிறுவிக்கொண்டது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி. மதுரை விமானநிலையத்திற்கு முத்துராமலிங்கத்தின் பெயர் வைக்க எதிர்ப்பு தெரிவித்தவர் சி.பி.எம் கட்சியின் என்.வரதராஜன். ஆனால் இந்த ஆண்டு அறுவைச்சிகிச்சை முடிந்து கறுப்புக்கண்ணாடியோடு முத்துராமலிங்கத்தின் சிலைக்கு மாலை போட்டு அட்டகாசமாய்ச் சிரிக்கிறார் காம்ரேட் என்.வி.
இத்தகைய சீரழிவின் கடைசிக்கொழுந்து, புளுத்துப்போன சந்தர்ப்பவாத சவடால் அரசியலுக்குப் புதுவரவு பெரியாரின் பேரன், பிரபாகரனின் தம்பி, பகுத்தறிவு இயக்குனர், செந்தமிழ் நாட்டு சேகுவாரா சீமான். நல்லவேளையாக நாத்திகம் பேசுவதைத் தவிர பெரியாருக்கும் சீமானுக்கும் பெரிய தொடர்புகள் இல்லை. குஷ்பு விவகாரத்தில் ஆணாதிக்கவாதியாக அம்பலப்பட்டுப் போன சீமான், பெரியார் மற்றும் பிரபாகரனின் பெயரை உச்சரித்தே தனக்கான இளைஞர் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார். ‘தம்பி’ திரைப்படத்தில் முத்துராமலிங்கத்தின் புகைப்படத்தைக் காட்டி மாற்று அரசியலாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். பின் கீற்று இணையத்தள நேர்காணலில் ‘தான் செய்தது தவறு’ என்று ஒத்துக்கொண்டார். இருந்தபோதும் சீமானின் சாதிய உளவியல் ஒழிந்தபாடில்லை. ஈழ ஆதரவு என்ற பெயரில் காங்கிரசுக்கு எதிரான பிரச்சாரக் கூட்டங்களில் "ஈனசாதிப் பயலா இருந்தா காங்கிரசுக்கு ஓட்டுப்போடு" என்று விஷத்தைக் கக்கினார். இப்போது கொஞ்சமும் வெட்கமில்லாமல் முத்துராமலிஙக்த்தின் சிலைக்கு மாலை அணிவித்து வந்திருக்கிறார்.
"இம்மானுவேல் சேகரனுக்கும் மாலை போட்டோமே" என்பது சீமான் தரப்பு வாதம். சுயமரியாதைக்காகப் போராடிய போராளிக்கும் மாலை, ஒடுக்குமுறையை ஏவிய கொலைகாரனுக்கும் மரியாதை. இதுதான் சீமானின் ‘தமிழ்த்தேசிய தகிடுதத்தம்’. முத்துராமலிங்கம் மீது பேரன்பும் ராஜபக்ஷே மீது பெருங்கோபமும் கொண்ட பிஸ்கோத்து தமிழர்களை உருவாக்குவதுதான் சீமானின் ‘நாம் தமிழர்’ இயக்கம். இது சீமானோடு மட்டும் நிற்பதில்லை. தமிழ்த்தேசியம் என்ற பெயரில் இங்கு முன்வைக்கப்பட்டவை அனைத்தும் ஆதிக்க சக்தி நலன் பேணும் கருத்தியல்களே.
ஈழ ஆதரவுப் போராட்டங்களில் பெரியார் திராவிடர் கழகத்தோடு பல தமிழின அமைப்புகள் இணைந்து போராடின. ஆனால் தமிழகம் முழுவதும் இரட்டை டம்ளரை எதிர்த்து பெரியார் திக போராடியபோது தமிழின அமைப்புகள் கைகோர்க்கவில்லையே. தமிழினவாதம் என்பது ஆதிக்கசாதிகளின் அயோக்கியத்தனமே என்பதற்கு ஆதாரம் தேட எங்கும் போகத் தேவையில்லை. இதே கீற்று இதழில் வெளியான முனைவர் வே.பாண்டியனின் ‘மார்க்சிஸ்ட்களின் புதிய அக்கறை & ஆலய நுழைவுப் போராட்டம்’ என்னும் கட்டுரையே போதுமானது. மார்க்சிஸ்ட் கட்சியில் பார்ப்பனத் தலைமை, மலையாளிகள் தலைமை என்று காரணங்காட்டி சாதியாதிக்கத்தைக் காப்பாற்றுகிற அயோக்கியத்தனம்தான் பாண்டியனின் ‘தமிழின ஒற்றுமை’ கட்டுரை.
சினிமா:
அவ்வப்போது  சீர்திருத்தப் பூச்சாண்டி காட்டும் விவேக், எவ்வளவு மோசமான தேவர் சாதி வெறியர் என்பதை விளக்குவதற்கு ஆதாரங்கள் தேவையில்லை. இப்போது அதன் புதிய வரவு கருணாஸ். ‘முக்குலத்து முகவரி’ என்னும் இசை ஆல்பத்தை வெளியிட்டிருக்கும் கருணாஸ் ‘இந்து, முஸ்லீம், கிறித்தவர்கள் என்பதுதான் முக்குலத்தோர்’ என்று ‘அறிவியல்’ விளக்கம் அளித்திருக்கிறார். இந்துமகாசபைத் தலைவனாக இருந்த முத்துராமலிங்கம் எப்படி முஸ்லீம்களுக்கும் கிறித்தவர்களுக்கும் முகவரியாக இருப்பார் என்று நமக்கு விளங்கவில்லை. கஞ்சா கருப்பு, ஆச்சி என்று அழைக்கப்படுகிற மனோரமா என சினிமாவில் பலரும் முக்குலத்தோரே. இயக்குனர்கள், நடிகர்கள் என பலமட்டங்களிலும் சினிமாவில் முக்குலத்தோர் ஆதிக்கம் உண்டு.
உதட்டுக்கு மேலே முளைக்கிற மயிரையும் முக்குலத்தோரையும் வீரத்தின் குறியீடாக மாற்றியதில் தமிழ்ச்சினிமாவிற்கு மிக முக்கியப் பங்குண்டு. இதை முக்குலத்தோர் மட்டும்தான் செய்தார்கள் என்றில்லை; கமல்ஹாசன் மாதிரியான பார்ப்பனர்கள் தொடங்கி பல முக்குலத்தோர் அல்லாதோரும்கூட இதைச் செய்திருக்கிறார்கள். தமிழ்ச் சினிமாக்களில் தேவராதிக்கம் கட்டமைக்கப்பட்டது குறித்து தனிக்கட்டுரையே எழுத வேண்டும். தேவர்சாதிப் பெண்ணைக் காதலித்ததால் சாதிய வன்முறை ஏவப்பட்டு மனநோயாளியாகும் தலித் இளைஞனைச் சித்தரிக்கும் ‘காதல்’, குறவர்சாதிப் பெண்ணைத் திருமணம் செய்ததால் அந்த குடும்பத்தையே விலக்கி வைக்கும் முக்குலத்துச் சாதிவெறியை அம்பலப்படுத்திய ‘பருத்திவீரன்’, தலித் & பள்ளர் முரண்பாட்டைச் சொன்ன ‘பாரதிகண்ணம்மா’ போன்ற சில படங்களைத் தவிர (இதனால் இந்த படங்கள் முற்றுமுழுதான & பிரச்சினைகள் எதுவுமற்ற அரசியல் சினிமாக்கள் என்று பொருளில்லை) பெரும்பாலும் தமிழ்ச்சினிமா என்பது முக்குலத்தோர் அதிகாரத்திற்கு ஒத்திசைந்தே உருவானது.
இலக்கியம்:
90களுக்குப் பிறகு உருவான கோட்பாட்டு வெளிச்சங்களில் சாதிய இழிவுகளுக்கு எதிராய்ப் பேசிய மனநிலை இன்றைய பெரும்பாலான இலக்கியவாதிகளிடம் இல்லை. தன்மய்யநோக்கு கொண்ட,  அரசியல் நீக்கம் செய்யப்பட்ட பிரதிகளே பெரும்பாலும் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஈழத் தமிழர்களுக்காகப் போராடத் துணிகிற கோணங்கி மாதிரியான படைப்பாளிகள் எப்போதும் சுயசாதி ஆதிக்கத்தைக் கேள்விக்குட்படுத்தியதில்லை. தங்கள் படைப்புகளில் கூட பதிவு செய்ததில்லை.
சமீபத்தில் உயிரெழுத்து இதழில் இலக்கிய விமர்சகர் முருகேசபாண்டியனின் எதிர்வினை ஒன்றைப் படிக்க நேர்ந்தது. கவிஞர் கரிகாலன் காலச்சுவடு இதழ் குறித்து எழுதிய கட்டுரைக்கான எதிர்வினை. "சுந்தரராமசாமி பாவம், கண்ணன் பாவம், நோ நோ டாடி பாவம், மம்மி பாவம், ஆல் பேமிலி டேமேஜ்" என்று புலம்பும் முருகேசபாண்டியன் "பார்ப்பனர்களையே ஏன் திட்டுகிறீர்கள். இட ஒதுக்கீட்டினால் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்" என்று அரற்றுகிறார். அரட்டை அரங்கத்தில் பேசிக் கைதட்டல் வாங்க வேண்டிய முருகேசபாண்டியன்தான் நம் காலத்து ‘இலக்கிய விமர்சகர்’.
இப்படியாகத்தான் சாதி குறித்த பிரக்ஞையுடனும் பிரக்ஞையற்றும் உருவாகியுள்ள மொன்னைத்தனம் நிரம்பிய இலக்கியவாதிகள் சாதி ஆதிக்கத்திற்கு எதிராகக் குரல் எழுப்புவார்களா என்ன? இதனால்தான் "தேவர் ஜெயந்தி என்பது ஜனநாயகத்திற்கான மக்கள் கூடுகை" என்று ஜெயமோகன் ‘கருத்துமுத்து’ உதிர்க்கிறார். (ஆனால் இதே ஜெமோதான் ‘புரட்சி என்பதே மாஸ் ஹிஸ்டீரியா’ என்று ஏழாம் உலகத்தில் அருள்வாக்கு சொன்னவர்.) "நீதிக்கட்சி முக்குலத்தோருக்கு எதிரான குற்றப்பரம்பரைச் சட்டத்தைப் பரப்பியது" என்று கூசாமல் பொய் சொல்கிறார். அதுசரி கமலாதாஸையே கறுப்பு என்றவருக்கு இது எம்மாத்திரம்?
ஜெயமோகனின் மொழி ஆளுமையில் பலர் சொக்கிப் போவது உண்டாம். ஆனால் ஒரு சட்டத்தை எப்படி ‘பரப்ப’ முடியும் என்று அந்த சொக்கநாதர்களிடம் தான் கேட்க வேண்டும். (ஜெயமோகனுக்கு வந்த வாசகர் கடிதமொன்றில் முதுகுளத்தூர் கலவரம் குறித்து வாசகரொருவர் சுட்டிக்காட்டுகிறார். "முதுகுளத்தூர் பிரச்சினை குறித்து தனியாக எழுத வேண்டும்" என்கிறார் ஜெமோ. "அய்யய்யோ, அது வேற‌யா?" என்று அலறத் தோன்றியது.) காலச்சுவடுக்கும் பார்ப்பனர்களுக்கும் ஆதரவாக எழுதுகிற முருகேசபாண்டியன்கள் ஜெயமோகனின் இந்த முக்குலத்துச்சார்பு கட்டுரை குறித்து எழுதுவார்களா என்ன?
இப்படியாக அரசியல், கலை, இலக்கியம் என எல்லாமும் சாதியக்கறை படிந்து இறுக்கம் சூழ்ந்துள்ள நிலையில் இந்த அழகிய கற்பனையை நீங்களும் கற்பனை செய்து பாருங்கள். சென்னை நந்தனத்தில் உள்ளபசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சாலையிலும் முத்துராமலிங்கத்தின் சிலையில் உள்ள பீடத்திலும் உள்ளதேவர்சாதிப்பெயரைத் தார்பூசி அழிக்கும் போராட்டத்தை ஒரு இயக்கம் நடத்துகிறது என்று கற்பனை செய்யுங்கள். நிச்சயமாக அது இந்தியத் தேசியக்கொடியை எரிப்பதை விடவும் கடுமையான போராட்டமாகத் தானிருக்கும்.

உள்ளாட்சித் தேர்தலில் ஜெயலலிதாவும் கருணாநிதியும் எப்படி ஒற்றுமையாய் ஒத்துப்போனார்கள்...?


                 தமிழக மக்களே... ஒன்றை கவனித்தீர்களா...? தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவித்த நாளிலிருந்தே இந்நாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும் ஒருவரையொருவர் அடித்துக்கொள்ளவும்  இல்லை... கடித்துக்கொள்ளவும் இல்லை.... ஒருவரையொருவர் சேற்றைவாரி பூசிக்  கொள்ளவில்லை.  தேர்தல் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே இருவரும் ஒற்றுமையுடன் சமாதானமாகவே  சென்றது போலத்தான் இருந்தது.
               ''குரங்குகளும், குல்லா  வியாபாரியும்'' கதையில... அந்த குல்லா வியாபாரி தன் தலையில் இருந்த குல்லாவை கழட்டி தூக்கி எரிந்தவுடன் குரங்குகளும் தன் தலையில் இருந்த குல்லாவை கழட்டித் தூக்கி எரிந்து விடும். இந்த கதையை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். இந்தக் கதையை சரியான நேரத்தில் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டவர் கருணாநிதி தான்.  ஜெயலலிதா - விஜயகாந்த் கூட்டணியை உடைக்கவேண்டுமென்ற நோக்கத்துடன், கருணாநிதி வஞ்சகமாகவும், தந்திரமாகவும்  ''திமுக தனித்துப் போட்டி'' என்று அறிவித்து விட்டு, தன்னுடன் கூட்டணிக்கட்சிகளாக இருந்த காங்கிரஸ் போன்ற கட்சிகளை கழட்டித் தூக்கி எறிந்துவிட்டார். அதைப்பார்த்த ஜெயலலிதாவோ...    அதுவரையில் கூட்டணிப் பற்றி பேசுவதற்கு குழு அமைத்து, கூட்டணிக்கட்சிகளுடன் பேச்சுவார்த்தையும் தொடங்கிவிட்ட சூழ்நிலையில், கருணாநிதி கூட்டணிக்கட்சிகளை கழட்டி தூக்கி எறிந்தது போல் இவரும் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் சத்தம் போடாமல் கூட்டணிக்கட்சிகளை கழட்டி தூக்கி எறிந்து விட்டு தனித்து நின்றார். இதில் எப்படி இருவருக்கும் இவ்வளவு ஒற்றுமை. குரங்கு குல்லா கதையை கருணாநிதி தான் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்.  இந்த குரங்கு குல்லா கதையை ஜெயலலிதாவோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நான் பொறுப்பில்லை. ஆமா... சொல்லிபுட்டேன்...
               விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் அளவுக்கு உயர்ந்ததில் இந்த இருவருக்குமே  பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இருவரும் ஒன்றில் தெளிவாக இருக்கிறார்கள்... விஜயகாந்த் வளர்ந்துவிடக்கூடாது என்பதில் இருவரும் ஒத்துப்போகிறார்கள்... ஐந்து ஆண்டுகளுக்குகொரு முறை தாங்களே மாறிமாறி வரவேண்டும். இவர்களுக்கிடையில் மூன்றாவதாக இன்னொருவர் வந்துவிடக்கூடாது என்பதில் இருவரும் தெளிவாகத் தான் இருக்கிறார்கள்.
                      முடிந்துபோன   உள்ளாட்சித் தேர்தலில் கூட, தாங்கள்  வெற்றி பெறுவதற்கு, தமிழகம் முழுதும் அதிமுக வேட்பாளர்களும், திமுக வேட்பாளர்களும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதும், நிறைய பரிசுப் பொருட்கள் தருவதுமாகத் தான் இருந்தார்கள். அப்போது கூட ஒருவரையொருவர் குற்றம் சொல்லவில்லை. மாநில தேர்தல் ஆணையமும் இந்த இருவரையும் கண்டுகொள்ளாமல் தான் இருந்தது என்பதும் உண்மை. இந்த விஷயத்திலும் கருணாநிதியும், ஜெயலலிதாவும் ஒற்றுமையாய் ஒத்துப்போயிருக்கிறார்கள் என்று தான் சொல்லவேண்டும்.
      இப்படியாக பணத்தையும் பொருட்களையும் கொடுத்து தான் முதல் இடத்திலும், இரண்டாவது இடத்திலும் இவர்கள் இருவரும் வந்திருக்கிறார்கள் என்பது இவைகளை வாங்கிக்கொண்டு வாக்களித்த தமிழக மக்களின் மனசாட்சிக்கு நிச்சயம் தெரியும்.
               '' அம்மாவிற்கும் அப்பாவிற்கும் 
                 சண்டை... விவாகரத்து...
                 குழந்தை 
                 அம்மாவிடம் ஐந்து ஆண்டுகள்..
                 அப்பாவிடம் ஐந்து ஆண்டுகள்..
                 நீதிமன்றத் தீர்ப்பு... 
                குழந்தையின்  பெயர் தமிழ்நாடு...''    
என்று யாரோ எழுதிய புதுக்கவிதை தான் என் ஞாபகத்திற்கு வருகிறது.

கருணாநிதி - ஜெயலலிதாவிற்கு மாற்று அவசியம் - தமிழ்நாடு என்ன இவர்களின் குத்துகை நிலமா...


               1967  - ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்தை பிடித்து ஆட்டிப்படைப்பது இந்த திராவிடக்கட்சிகள் தான். அண்ணாவில் தொடங்கி கருணாநிதி, எம்ஜிஆர்., ஜானகி, ஜெயலலிதா வரை முதலமைச்சர்களாக தமிழகம் பார்த்துக்கொண்டிருக்கிறது. இடையில் இவர்கள் சிறிது நேரம் இளைப்பாறிய போது, நெடுஞ்செழியன், ஓ. பன்னிர்செல்வம் போன்றவர்கள் இவர்கள் சார்பில் முதலமைச்சர்களாக இருந்தவர்கள். ஆக திராவிடக்கட்சிகளின்  ஆதிக்கம் தொடங்கிய காலத்திலிருந்தே தமிழக மக்கள் தங்களுக்கான முதலமைச்சரை சினிமா கொட்டகையில் தான் தேடுகிறார்கள் என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மை.
                சிறிது காலம் தான் ஆட்சி செய்தார் என்பதனால் அண்ணாதுரையைத் தவிர மற்ற அனைவரும் லஞ்ச - ஊழலில் கைதேர்ந்தவர்கள் தான். அதிலும், எம்ஜிஆரின் மறைவிற்குப் பிறகு இன்று வரை பார்த்தால், மிகப்பெரிய அளவில் ஊழல் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இருவரும் மாறி மாறி ஐந்தாண்டுகொரு முறை முதலமைச்சர்களாக வந்து போகிறார்கள். ஒவ்வொரு முறையும் இவர்களின் ஊழல் அட்டகாசங்கள் அதிகரித்துக்கொண்டு தான் போகிறது.
               ''திருடரா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது...'' கருணாநிதியோ ஜெயலலிதாவோ   திருந்தமாட்டார்கள். ஆனால் இவர்களை தேர்ந்தெடுக்கும் தமிழக மக்களாவது திருந்துவார்களா என்றால் அவர்களும் திருந்த முடியாமல் இருக்கிறார்களே என்பது தான் வருத்தமாக இருக்கிறது. ''மாற்று சிந்தனை'' என்பது இன்றைக்கு தமிழக மக்களுக்கு மிக மிக அவசியமானது என்பதை அவர்கள் உணரவேண்டும்.
                திராவிட இயக்கம் என்பது  ஆரம்பத்தில் இந்தி எதிர்ப்பு உணர்வை கிளப்பிவிட்டு அரசியல் நடத்தி ஆட்சிக்கு வந்தது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் இன்றைக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது...? தமிழ்.. தமிழ்.. என்று கூப்பாடு போட்ட இவர்களின் ஆட்சியில் தானே தமிழகம் முழுதும் அந்நிய மொழியான ஆங்கிலம்  வளர்ச்சியடைந்திருக்கிறது. தாய்மொழிக் கல்விக்கு பதிலாக ஆங்கிலவழி கல்வி என்பது இவர்கள் ஆட்சியில் தான் செழுமைபெற்றது. இன்றைய இளையத்தலைமுறையினருக்கு தாய் மொழி மறந்து போனதற்கு இந்த திராவிடக்கட்சிகளே காரணம் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. இவர்கள் ஆட்சியில் தான் ஆங்கிலம் வாழ்கிறது. தமிழ்  செத்துக்கொண்டிருக்கிறது. தாய் மொழி அழிந்து போனால் அந்த சமூகம் அழிந்து போகும். தமிழகம் அழிந்து போகும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
              திராவிட இயக்க ஆட்சிக்காலத்தில் தான், தங்களை  மாமன்னர்களைப் போல நினைத்துக்கொண்டு,  குடும்ப உறுப்பினர்களை  எல்லாம் ஆட்சியில் பங்கெடுக்கச் செய்வது. குறுநில மன்னர்களைப் போல் தமிழகத்தைப் பங்கு போட்டுக்கொள்வது. கூட்டுக்கொள்ளை அடிப்பது. ஆனாலும்  கூச்சப்படாமல் மக்களோடு  நடமாடுவது. இது தான் கடந்த நாற்பத்து நான்கு ஆண்டுகால திராவிட இயக்க ஆட்சிகளின் கலாச்சாரமாகவும், பண்பாடாகவும் இருந்துவருகிறது.
               தங்களின் ஆட்சிக்கும், கூட்டுக்கொள்ளைக்கும் பங்கம் வராமல் திமுகவும்  அதிமுகவும் தங்களுக்குள் ஒரு ரகசிய உடன்பாட்டோடு தான் தமிழகத்தில் அரசியல் நடத்துகிறார்கள். இந்த இருவருக்கும் மாற்று அவசியம் தேவை என்பதை தமிழக மக்கள் உணரவில்லை. இவர்கள் இருவரும் சேர்ந்து இந்த மக்களின் கோவணத்தை  உருவி அம்மணமாய் நிற்கவைத்தாலும்  கைத்தட்டி கும்மாளம் போடும் மக்கள் தான் இவர்கள்.
                 இந்த மாற்று சிந்தனையை மக்களிடம் உருவாக்கவேண்டும். அதற்கான காலம் கனிந்திருக்கிறது. நேற்று முன்தினம் தான் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, திமுக - அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக மூன்றாவது அணி உருவாகவேண்டும் என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார். இவரின் இந்தக் கருத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர். ஜி. ராமகிருஷ்ணன் அவர்களும் வரவேற்றிருக்கிறார்.
              அந்த அடிப்படையில், காங்கிரஸ் - பாரதீய ஜனதா கட்சி போன்ற தேசியக்கட்சியும், திமுக - அதிமுக போன்ற மாநிலக்கட்சியும் அல்லாத ஒரு  மாற்று அணியை உருவாக்கவேண்டும். அந்த மாற்று அணி என்பது இடதுசாரிகளின் வழிகாட்டுதலோடு நடைபெறவேண்டும். அப்போது தான் சுயநலமில்லாத - போராட்டகுணமிக்க அணியாக அது இருக்கும். அப்போது தான் சட்டமன்றத்திலும், சட்டமன்றத்தின் வெளியிலும் ஒரு ஆக்கபூர்வமான - பலமான எதிர்க்கட்சிகளைக்  கொண்ட மாற்று அணியாக மாறும். 
               இந்த மாற்று அணிக்கான மாற்று சிந்தனையை வைகோ, விஜயகாந்த், திருமாவளவன், தா. பாண்டியன் போன்றவர்களும் யோசிக்கவேண்டும். அப்போது தான், வெறும் கவர்ச்சி அரசியலிலேயே ஏமாந்து  போகும் தமிழகம்  இனிமேலாவது  ஒரு நல்ல திசை நோக்கிச் செல்லும் என்பதில் ஐயமில்லை.

பரமக்குடி துப்பாக்கிச்சூடு தன்பதத்தான் தானே கெடும்



 

 " சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
 தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் "
என்று பாடிய பாரதியின் நினைவு நாள் செப்டெம்பர் 11. மக்கள் ஒன்றிணைந்து சாதிப்பேயை ஓட்டி, சமத்துவத்தை நிலைநாட்டுவது பற்றிய சிந்தனையில், செயல்பாட்டில் ஈடுபட வேண்டிய நாள். 1957இல் பாரதியின் நினைவுகளைப் பேசிப் பகிர்ந்து திரும்பிய தோழர் இம்மானுவேல் சேகரனை சாதி வெறியர்கள் வெட்டிக் கொலை செய்ததும் அவர் நினைவாக, தலித் மக்கள் குரு பூஜை கொண்டாடுவதும் இதே நாளில்தான்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடியதற்காகத் தனது முப்பத்துமூன்றாம் வயதில் கொல்லப்பட்ட இம்மானுவேல் சேகரனின் நினைவுநாளான 11.09.2011 அன்று பரமக்குடியில் நடந்த அரச பயங்கரவாதமும் படுகொலைகளும் மிகத் துரதிர்ஷ்டவசமானது மட்டுமின்றி நடுநிலை உணர்வு கொண்ட மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாததுமாகும். அன்றைய தினம் நடந்த கலவரத்தில் ஆறு உயிர்கள் பலியாக்கப்பட்டதுடன் நூற்றுக்கணக்கானோர் காயம்பட்டுள்ளனர். இந்தக் கலவரம் திட்டமிட்டே உருவாக்கப்பட்டுள்ளது என்பதைத் தொடர்ந்த நிகழ்வுகளைக் கவனிப்பதன் மூலம் யாருமே உணர முடியும். ஆனால் தமிழக முதல்வர், நடந்த உண்மை என்னவென்றால், அந்தக் கிராமத்தில் ஒரு சுவரில் முத்துராமலிங்கத் தேவரைப் பற்றி இழிவான சில வாசகங்கள் எழுதி வைக்கப்பட்டிருந்தன. அதைத் தொடர்ந்துதான் இந்த மாணவர் பழனிக்குமாரின் கொலை நடந்திருக்கிறது; ஜான் பாண்டியன் அங்கே படையெடுத்துப் புறப்பட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்துதான் இந்தக் கலவரங்கள் எல்லாம் நடைபெற்று இருக்கின்றன  என்று சொல்லிக் காலங்காலமாக நடக்கும் கொடுமையை மூடி மறைத்துப் பேசுகிறார். அன்றைய தாக்குதலில்,
1.    பல்லவராயனேந்தலைச் சேர்ந்த கணேசன் (55)
2.    வீராம்பலைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (50)
3.    மஞ்சூரைச் சேர்ந்த ஜெயபால் (19)
4.    கீழ்க்கொடுமாநல்லூரைச் சேர்ந்த தீர்ப்புக்கனி (25)
5.    காட்டுப் பரமக்குடியைச் சேர்ந்த முத்துக்குமார் (25)
6.    காக்கனேந்தலைச் சேர்ந்த வெள்ளைச்சாமி (55)
ஆகிய ஆறு பேர் அதிகார சக்திகளுக்குப் பலியாகியுள்ளனர்.
தமிழக முதல்வரின் கூற்றின்படி இது ஏதோ, ஒரு சம்பவத்தைப் பின்பற்றி நிகழ்ந்த நிகழ்வல்லஒடுக்குமுறையை ஏற்காத அவர்களின் மனநிலையும் தன்னடையாளத்தை உறுதி செய்துகொள்ளும் போக்கும் வளர்ச்சி பெற்று வந்துள்ளதையே காட்டுகிறது. 1957 இல் முதுகுளத்தூர் கலவரத்திற்குப் பிறகு தீவிரப்பட்ட ஆதிக்க சாதிகளுக்கு எதிரான எதிர்ப்பு நிலை தொடர்ந்த போக்காக நின்று, கூர்மைப்பட்டு, இன்றைக்கு ஆண்டுதோறுமான பதட்டத்தை ஏற்படுத்தி வருவதைக் கணக்கிலெடுக்காமல் பேசுவது அம்மக்களுக்கு நன்மையைச் செய்வதாகாது. பூலித்தேவனுக்குச் சமமாக ஒண்டிவீரனை நிறுத்திப் பேசுவதும் வரலாற்றின் புதைபக்கங்களைத் திருப்பி ஒண்டிவீரனை மன்னரென நிலைநிறுத்துவதும் அந்தப் பகுதியின் ஆதிக்க சாதியினரைக் கோபமூட்டுகிறது. இதனை ஊதிப் பெரிதாக்கி, மக்களுக்கிடையிலிருக்கும் பகைமனநிலையைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் முயற்சியில் அதிகார சக்திகள் இயங்குவதையும் கவனத்திலெடுக்க வேண்டும்.
கல்வி மற்றும் ஜனநாயக உணர்வுகளின் ஊடாக மேலெழும் அடித்தள மக்களின் அடையாள உறுதிப்பாட்டை ஏற்க மறுக்கும் ஆதிக்க சமூகத்தின் மனநிலையைப் பரமக்குடியில் தெளிவாக அடையாளம் காண முடிகிறது. தேவேந்திரர்கள் இம்மானுவேல் சேகரனைத் தங்களின் திருவுருவாக மாற்றுவதையும் அவர் கொல்லப்பட்ட நாளைக் குருபூஜையாகக் கொண்டாடுவதையும் ஆதிக்க மனங்கள் சகித்துக் கொள்ள முடியாத நிலையில் அதற்கு முன்னர் ஏதேனும் ஒரு வன்முறையை நிகழ்த்துவதை, நாம் கடந்த கால வரலாற்றின் மூலம் அறிய முடியும். 2007இல் வின்சென்ட், 2009 இல் அறிவழகன், 2010இல் கொந்தகை அரிகிருஷ்ணன் எனக் கொல்லப்பட்டவர்களின் பட்டியல் நீளுகிறது. முத்துராமலிங்கத் தேவருக்கு இணையாக இம்மானுவேல் சேகரன் பேசப்படுவதும் முன்னிறுத்தப்படுவதும் அவருடைய குருபூஜைக்கு மக்கள் பெருந்திரளாகக் கூடுவதும் அரசியல் தலைவர்களும் அமைச்சர்களும் விழாவுக்கு வரத் தொடங்குவதும் அங்கு ஆதிக்க சாதியினராக இருப்பர்களை எரிச்சலுறுத்துகிறதுகடந்த ஆண்டு நடுவணரசு இம்மானுவேல் சேகரனின் அஞ்சல்தலை வெளியிட்டதும் தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவருடைய நினைவுநாளை அரசுவிழாவாக நடத்துவோம் என்று .தி.மு. வைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான அழுத்தத்தை அவர்கள் அரசுக்கு அளித்ததையும் விரும்பாத ஆதிக்க சாதியினர் தங்கள் அதிகார பலம் கொண்டு சாதித்துக் கொண்டதே பரமக்குடிக் கலவரமும் படுகொலைகளும். இதன்மூலம் அரசு விழா எடுப்பதைத் தடுப்பதும் அடுத்த ஆண்டு விழாவுக்கு அனுமதி மறுப்புமே அவர்தம் நோக்கம். அதனை உடனடி அதிகாரத்தைக் கையில் வைத்துள்ள காவல்துறையின் உதவியோடு நிறைவேற்றிக் கொண்டுள்ளனர். செப்டெம்பர் 7ஆம் தேதி அரசு போக்குவரத்துக் கழகப் பட்டியல் சாதித் தொழிற்சங்கத்தினர் தேசியத் தலைவர் தெய்வத் திருமகனார் இம்மானுவேல் சேகரன் என்று விளித்துத் தட்டி (Flex board) வைக்கின்றனர். இதனை எதிர்க்கும் மறத்தமிழர் சேனை என்னும் அமைப்பு காவல் துறையிடம் புகார் அளித்ததுடன் மாவட்ட ஆட்சியரிடமும் மனுக் கொடுக்கின்றனர். தங்கள் அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிகாரிகளுக்கு அழுத்தம் தருகின்றனர்தெய்வத் திருமகனார் என்ற அடைமொழி தேவருக்கு மட்டுமே உரித்தானது; அதை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது என்பது அவர்களுடைய வாதம். தெய்வத் திருமகன் என்ற படத் தலைப்புக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையும் இங்கே கவனப்படுத்தலாம். பாதுகாப்பளித்திருக்க வேண்டிய காவல் துறையினர் தட்டியை நீக்க வேண்டுமென வற்புறுத்த, அவர்களின் மிரட்டலுக்குப் பணிந்து தொழிற்சங்கத்தினர் அந்தச் சொற்களை நீக்கி விட்டனர். ஆனால் அடுத்த நாள் ஊரெங்கும் முளைத்தன புதிய, புதிய தட்டிகள்ஆதிக்கத்துக்கு அடங்க மறுக்கும் மக்கள் கூட்டத்தைத் தூண்டிவிட்டது காவல்துறையின் முட்டாள்தனம்.
இந்த ஆண்டுக்கான பலியாக செப் 9 ஆம் தேதி கொல்லப்பட்ட பள்ளப்பச்சேரி என்னும் தலித் கிராமத்தைச் சேர்ந்த பழனிக்குமார் என்ற சிறுவனுக்கு அஞ்சலி செலுத்த வந்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியனைச் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்ற காரணத்தைச் சொல்லி வல்ல நாட்டுக்கருகில் கைது செய்தது காவல்துறை. ஆனால் அவரைக் கைது செய்ததன் மூலமாகவே கலவரம் ஏற்பட்டதுதான் முரண்நகை. தொடர்ந்த ஒடுக்குமுறை, இழிவு செய்தல், போன்ற செயல்களால் கூர்மை பெற்றிருந்த ஒடுக்கப்பட்ட மக்களின் மனம் எழுச்சியுறுவதைப் பொறுக்காத ஆதிக்க சமூகத்தைச் சார்ந்திருக்கும் அரசும் அதன் அதிகாரக் கையாட்களான காவல்துறையும் திட்டமிட்டு நடத்திய வன்முறையே பரமக்குடிப் படுகொலைகள். போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்த ஐந்து முக்கு சாலையில்  மறியல் செய்தவர்களின் எண்ணிக்கை 50 லிருந்து 300 வரையே இருந்திருக்கிறது. பேச்சுவார்த்தை பலனளிக்காத பட்சத்தில், சாலை மறியல் செய்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டிருந்தாலும் கூட தொடக்க நிலையிலேயே லேசான தடியடி, தண்ணீர், கண்ணீர்ப்புகையைப் பிரயோகித்துக் கலைத்திருக்க முடியும். ஆனால் அறிவிக்காமலே துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கின்றனர். துப்பாக்கியால் சுடுவதற்கு முன்னர் முன்னெச்சரிக்கை செய்ய வேண்டும், கால்களில் சுட வேண்டும் என்ற எந்த விதிகளையும் பின்பற்றாமல் சுட்டிருக்கின்றனர். காயம் பட்டவர்களின் குண்டுக் காயங்கள் அனைத்துமே நெஞ்சிலும் நெற்றியிலும் இருப்பது காவல்துறையினரின் உள்நோக்கத்தைக் காட்டுகிறது. வேடிக்கை பார்க்க வந்த அப்பாவி மக்கள் சுடப்பட்டிருப்பது, மாணிக்கம் நெற்றிப் பொட்டில் சுடப்பட்டிருப்பது, தீர்ப்புக்கனி உயிரோடு இருக்கும்போதே சவக்கிடங்கில் போடப்பட்டது, இறந்தவர்களும் காயம் பட்டவர்களும் காவல்துறையினரின் தடிகளாலும் துப்பாக்கியின் பின்புறத்தாலும் மிக மோசமாகத் தாக்கப்பட்டது, மறியல் செய்தவர்களை சாதியைச் சொல்லி இழிவாகப் பேசியிருப்பது ஆகியவை காவல்துறையினரின் தலித் விரோதப் போக்கையும் மேற்சாதி ஆதரவு மனப்பான்மையையும் வெளிப்படுத்துவதாக உள்ளது.
இந்தக் கலவரத்தில் காயம்பட்ட போலீசார் தனியார் மருத்துவமனைகளில் வசதி வாய்ப்புகளோடு சிகிச்சை செய்து கொள்வதும் அப்பாவி மக்கள் சரியான சிகிச்சை மறுக்கப்பட்டு, அரசு மருத்துவமனைகளில் தரையில் கிடப்பதும் கண்டிக்கத்தக்கது. பெண் போலீஸ் டெய்சி தாக்கப்பட்ட செய்தியில் முதல் தகவல் அறிக்கை தெளிவாக இல்லாமல் இருப்பதும் மாவட்ட ஆட்சியர் அதைப் பற்றிக் குறிப்பிடாமல் விட்டதும் இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியோ என்ற ஐயத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இது போன்ற துயரச் சம்பவங்கள் நடந்தபிறகு, ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் தலைமையில் கமிஷன் அமைப்பது என்பதும் ஒரு சடங்காக, சம்பிரதாயமாக மாறி விட்டது. இதற்கு முன்னர் நடந்த கொடியங்குளம், தாமிரபரணிச் சம்பவங்களுக்காகப் போடப்பட்ட கமிஷன்களின் அறிக்கைகளில் சிலவாயினும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் பரமக்குடிச் சம்பவம் நடந்திருக்காதுஎனவே மேலும் மேலும் இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல் தடுத்து முற்றுப்புள்ளி வைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். அரசு ஏற்படுத்தவுள்ள அமைதிக் குழுக்கள் முரண்பட்ட இரு சமூகங்களுக்கிடையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து சமநிலை பெறவும், அம்மக்கள் வாழும் ஊர்களில் பதற்றமின்றி இயல்பு நிலை திரும்ப வழிவகுக்க வேண்டும். தன் மக்களை எந்த விதமான பாரபட்சமுமின்றிக் காக்க வேண்டிய அரசு, உயர்சாதி ஆதரவுப்போக்கைக் கைக்கொள்வதுடன் தலித் மக்களுக்கு எந்த விதமான நம்பிக்கையையும் அளிக்காமல் இருப்பது நாட்டுக்கு நன்மை பயக்காது.
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉம் கோடா தெனின்
என்ற குறளை, பேரவையில் அன்றாடம் குறள் சொல்லும் பேரவைத் தலைவர் முதல்வருக்கு எடுத்துச் சொன்னால் நல்லது....