ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

இவர்களில் யார் தேசத் தந்தை: டாக்டர்.அம்பேத்கரா? காந்தியாரா?

தேசத்தந்தை" என்று அழைக்கப்படுவதற்கு உண்மையில் இந்த இருவரில் யாருக்கு அதிகத் தகுதிகள் இருக்கிறது என்கிற என்னுடைய கேள்விக்கு விடை கிடைக்க ஏறத்தாழ பத்து ஆண்டுகள் தேவைப்பட்டது. அதுவும், இந்த நன்னாளில் அதற்கான விடையை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. இன்று இந்தியா முழுவதும், " தேசப் பிதா" என்கிற காந்தியாரின் மீதான ஒரு போலியான உருவகம் பள்ளிக்கூடங்களில் இருந்தே தொடர்ச்சியாக செய்யப்பட்டு வருகிறது. வழக்கம் போலவே பார்ப்பனீய ஊடகங்களின் வாயிலாக நிலை நிறுத்தப்படும் இந்த " போலிப் பிம்பம்", தொடர்ச்சியான நமது அடுத்த தலைமுறையை அடையக்கூடாது என்ற நோக்கத்தில் நான் உறுதியாக இருக்கிறேன்.சரி, நண்பர்களே, ஒரு நாட்டின் தந்தை என்று அழைக்கப்படுவதற்கு என்ன தகுதிகள் வேண்டும்?"நீங்கள் அந்த நாட்டின் ஆதரவற்ற மக்களுக்கு, அவர்களின் உண்மையான விடுதலைக்குப் போராடி, அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றிருக்க வேண்டும்" அப்படியென்றால், காந்தியார் இதனைச் செய்யவில்லையா என்கிற உங்கள் கேள்விக்கான பதில் "இல்லை" என்று பல்வேறு ஊடக, அரசுக் கட்டமைப்புகளின் உடைந்த சிதிலங்களில் இருந்து ஒரு மெல்லிய இழையாய் வெளியே வரும்."வெறும் நிலப்பரப்பு நோக்கிய விடுதலைப் போராட்டம்" மற்றும் "அடிப்படை அடிமைத் தளைகளில் இருந்து வெளியேறும் சமூக, அரசியல் அதிகாரம் நோக்கிய விடுதலைப் போராட்டம்" என்றும் இரு கூறுகளாகப் பிரிந்து கிடக்கும் தேசத்தந்தை ஆவதற்கான தகுதிச் சான்றுகளில் காந்தியாரிடம் இருந்தது முந்தையது. ஆனால், தேசியம் சார்ந்த விடுதலைப் போராட்டத்தின் ஊடாக ஒடுக்கப்பட்டு, வாழ்விழந்து கிடந்த அடிமை மக்களின் விடுதலையை நோக்கி எந்தநேரமும் சிந்தனை செய்த டாக்டர்.அம்பேத்கர் இன்றைக்கு பார்ப்பனீயத்தின் பித்தலாட்டங்களுக்கு இரையாகி ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் என்கிற அளவில் குறுக்கப்பட்டு விட்டார். சாதீயத்தின் மீதான அவரது கடுமையான நிலைப்பாடும், இந்துமதம் என்கிற சாக்கடையின் மீதான முழுமையான வெறுப்புணர்வும் அவரது உண்மையான "தேசத் தந்தை" உருவகத்தை பார்ப்பன வடிவங்களில் சிதைக்க முனைந்தன. ஒருவேளை அவர் இந்து மதத்தின் உயர் பீடங்களை தொழுகை செய்யும் முன்னாள், இந்நாள் குடியரசுத் தலைவர்களை முன்பற்றியிருந்தால் "தேசத் தந்தை" ஆகி இருக்கலாமோ என்னவோ?வெறும் அரசியல் அதிகாரங்களுக்கான பார்ப்பனப் போட்டியில் ஆங்கில அரசுடனனான அரசியல் தரகராக இருந்த காந்தியார் இந்தியாவின் விடுதலை என்கிற நோக்கை விடவும் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலையை எதிர்ப்பதில் முதன்மையாக இருந்தார் என்பதை வரலாற்றின் பக்கங்களை நடுவு நிலை தவறாமல் புரட்டுபவர்களுக்கு நன்றாகவே புரியும்.மாறாக ஒரு தேசத்தின் பெரும்பான்மை மக்களுக்கான சமூக, அரசியல் மற்றும் கல்வியை நோக்கிய உண்மையான விடுதலைப் போராட்டத்தில் மட்டுமன்றி, தேசிய விடுதலையிலும், தொழிற்சங்க அமைப்புகளின் உரிமைகளுக்கும் உரக்கக் குரல் எழுப்பிய, வாழ்வின் எந்த ஒரு பகுதியிலும் தனி மனித ஒழுக்கம் தவறாத போராளியாக வாழ்ந்த "டாக்டர்.அம்பேத்கர் தான் இந்த தேசத்தின் உண்மையான தந்தை".பல்வேறு காலகட்டங்களில், வரலாற்றின் பக்கங்களில் அவரே வெளிப்படுத்தி இருக்கும் கருத்துக்கள் அவரை இந்த உயர்ந்த நிலையை நோக்கி தானியக்கமாக எடுத்துச் செல்லும். 1929 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள், ரத்னகிரி மாகாண உழவர் மாநாட்டில், சிப்லம் என்னும் ஊரில் உரையாற்றும் போது பின்வருமாறு கூறுகிறார்," ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான வன்முறைகளும், அடக்குமுறைகளும், கோத்தி முறையும் ஒழிக்கப் பட வேண்டும் என்றால், சட்ட மன்றங்களுக்கு நீங்கள் சரியான மனிதர்களை அனுப்பும் கடமையை சரியாகச் செய்ய வேண்டும்" மேற்சொன்ன இந்த தேசத்தந்தையின் வார்த்தைகளை இன்று வரை நாம் கடைபிடிக்க இயலாமல் போனதற்கு ஒரு வகையில் இரட்டை வாக்குரிமை முறையை எதிர்த்து உண்ணா நோன்பிருந்து பயமுறுத்திய போலி தேசத்தந்தை காந்தியாரும் ஒரு காரணம்.1930 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் நாள் புனேயில் நடைபெற்ற " சாந்த சமாஜ்" என்னும் அமைப்பின் கூட்டத்தில் உரையாற்றிய அண்ணல், "சம உரிமைகளைப் பெற வேண்டுமென்றால், சமூக உரிமைகளை மீட்டெடுக்க வேண்டுமென்றால், இப்போதைய் விடவும் அதிகமாகப் போராடுங்கள், நன்கு இணைந்து செயல்படுங்கள்" என்று முழங்கினார்.1933 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் நாள் தானேயில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், “ஒரு போதும் விதியை நம்பாதீர்கள், உங்கள் வலிமையை நம்புங்கள்" என்றார். இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு எளிமையான அழகான வழியைச் சொன்னார், அது வேறொன்றுமில்லை, "இந்து மதம் என்கிற சாக்கடையை புறக்கணியுங்கள்" என்பது தான். இந்த ஒரு காரணமே போதும் அவரை நாம் இந்த தேசத்தின் தந்தையாகக் கொண்டாடுவதற்கு. ஏனென்றால், இன்று ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக, பொருளாதார, கல்வி மற்றும் அரசியல் அடிமைத் தனங்கள் துவங்குகிற மைய ஊற்று இந்துமதம் என்கிற சாக்கடை தான்.இப்படித் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் இரவுபகலாய் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த மனிதகுலம் தழைப்பதற்கும், இந்தியக் குடியரசின் சட்ட முன்வடிவங்களை செதுக்கியதற்கும் "டாக்டர்.அம்பேத்கர் அவர்களைத் தான் நாம் தேசத் தந்தை என்று குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்", காந்தியார் வேண்டுமானால் டாக்டர்.அம்பேத்கர் என்கிற அந்த உண்மையான தேசத் தந்தையின் பின்னால் ஒரு தேசக் குழந்தையாகவோ, மற்ற உறவாகவோ இருந்து விட்டுப் போகட்டும்.ஒரு மாமேதையின் நினைவு நாளில், அவரது கனவுகளை மெய்ப்பிக்க ஒன்றிணையும் உறுதி கொள்வோம், நம் சகோதரச் சண்டைகளை விடுத்து உண்மையான விடுதலை நோக்கி விரைவோம்

முதுகுளத்தூர் கலவரம்

முதுகுளத்தூர் கலவரம் கா.அ.மணிக்குமார் ஆசிரியர்: தினகரன்முதற்பதிப்பு: ஜனவரி 1958மறுபதிப்பு: டிசம்பர் 2006. பதிப்பாசிரியர்:அ.ஜெகநாதன்பக்கம் 120. விலை:ரூ.70.யாழ்மை வெளியீடு134,3 வது தளம்தம்புசெட்டித்தெரு,பாரிமுனை, சென்னை-11957 செப்டம்பரில் கிழக்கு ராமநாதபுர மாவட்ட தலித்களுக்கும்(பள்ளர்) தேவர்களுக்கும் (முக்குலத்தோர்-மறவர், கள்ளர், அகமுடையார்) நடந்த மோதல்கள் பற்றி அறிய சம காலத்து நூல்களாக டி.எஸ் சொக்கலிங்கத்தின் முதுகுளத்தூர் பயங்கரம், தினகரன் எழுதிய முதுகுளத்தூர் கலவரம் திகழ்கின்றன. பார்ப்பனரல்லாத காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு தொல்லை கொடுத்துவந்த எதிர்கட்சிகளின், பிரதானமாக கம்யூனிஸ்ட் தலைவர்கள், மாபொசி, முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரின் செயல்பாடுகளை விமர்சனம் செய்தும் கலவரங்களை ஒடுக்குவதற்கு காங்கிரஸ் அரசு எடுத்த நடவடிக்கைகளை நியாயப்படுத்தியும் சொக்கலிங்கம் எழுதியுள்ளார்.தினகரனோ (அன்றைய தினகரன் பத்திரிகை ஆசிரியர்) உயர்கல்வி, வெளியுலக தொடர்பு பெற்று அதன் மூலம் தான் பெற்ற பயனை தனது முக்குலத்தோர் இன மக்களும் பெற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென விரும்பினார். ஆனால் தனது சுய அரசியல் லாபத்திற்காக முக்குலத்தோரை தவறான பாதையில் இட்டுச் செல்வதாக முத்துராம லிங்கத் தேவரை வெறுத்தார். எனவே அவரையும் அவருக்கு ஆதரவாக இருந்த எதிர்கட்சியினரையும் நூல் முழுவதும் சாடுகிறார். இவரும் விடுதலை இயக்கத்தில் பங்கு கொண்டு காங்கிரஸ் ஆதரவாளராக இருந்தவர்.சமீபகாலத்தில் தமிழில் வெளிவந்துள்ள கட்டுரைகள், புத்தகங்கள் பெரும்பாலும் மேற்கூறிய இரு ஆசிரியர் களின் கருத்துக்களையே ஆதாரங்களாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. அதன் விளைவு: சில ரவுடிகள் துணையுடன் தனது தலைமையை தம் இன மக்கள் மீது தேவர் திணித்ததாக சித்தரிப்பதும் அவரது அரசியலுக்கு துணைபோனதாக கம்யூனிஸ்ட்டுகளை கண்டிப்பதும் ஆகும். அரசியலில் வன்முறை அகந்தை சர்வாதிகார சிந்தனை போன்ற பலகீனங்களைக் கொண்டிருந்தாலும் தேவர் முக்குலத்தோர் ஆதரவு பெற்ற தனிப்பெரும் அரசியல் தலைவராக கிழக்கு ராமநாதபுர மாவட்டத்தில் விளங்கியவர். அதற்கான பின்னணியை இங்கு விளக்க வேண்டியது அவசியம்.1930களில் நிலவிய பொருளாதார பெருமந்தத்தால் ஏற்பட்ட விவசாய பொருட் களின் விலை வீழ்ச்சி விவசாயிகளை கடுமையாக பாதித்தது. காலனி அரசு எத்தகைய நிவாரண நடவடிக்கையும் எடுக்காததால் இரயத்துவாரி பகுதிகளில் வரிகொடா இயக்கம் நடத்தியும் ஜமீன் பகுதிகளில் குத்தகை பணம் செலுத்த மறுத்தும் விவசாயிகள் போராடினர். இப்போராட்டங்களுக்கு பல இடங்க ளில் காங்கிரசார் தலைமையேற்றிருந்த னர். குறிப்பாக ஆந்திர கடலோரப் பகுதி களில் நடைபெற்ற போராட்டங்களை முன்னின்று நடத்தியவர் என்.ஜி.ரங்கா. அக்காலகட்டத்தில் ராமநாதபுரம் ராஜா வுக்கு சொந்தமான ஜமீன் நிலங்களில் குத்தகைதாரர்கள் குத்தகை பாக்கியை தர மறுத்தனர். இதனால் 1934ல் ராமநாத புரம் ஜமீன் திவாலாகியது. இவ்வாடகை கொடா இயக்கத்துக்கு தலைமை ஏற்ற தன் மூலம் பெரும்பாலும் குத்தகை விவசாயிகளாக இருந்த தன் இன மக்க ளின் நல்லெண்ணத்தை முத்துராமலிங் கத்தேவர் பெற்றார். அதுபோல் குற்றப் பரம்பரை சட்டம் ராமநாதபுர மாவட்டப் பகுதிகளில் அமுல்படுத்த முடியாத அளவுக்கு மக்களைத் திரட்டி எதிர்ப்பு தெரிவித்ததில் தேவருக்கு பெரும் பங்குண்டு. மக்கள் ஆதரவு பெற்று அங்கீ கரிக்கப்பட்ட தலைவராக இருந்தமை யாலே காங்கிரஸ் அவரை 1937 தேர்தலில் நீதிக்கட்சி ஆதரவுடன் போட்டி யிட்ட ராமநாதபுரம் சேதுபதிக்கு எதிராக நிறுத்தியது. இத்தேர்தலில் தேவர் அமோக வெற்றி பெற்றார்.சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தேவர் மதுரை மில்தொழிலாளர் போராட்டங்களுக்கு தலைமை ஏற்றார். 1937-39ல் ஆட்சிப் பொறுப்பிலிருந்த காங்கிரஸ் தலைமையின் கட்டளைக்கு எதிராக, மில் வளாகத்தில் போடப்பட்டிருந்த 144 தடைச்சட்டத்தையும் மீறி தொழிலாளர்கள் கோரிக்கைக்காக கைதாகி சிறைக்கும் சென்றவர் தேவர். ஆனால் இவற்றையெல்லாம் இருட்டடிப்பு செய்து "அரசுக்கு நிலவரி செலுத்தாதே என மக்களை ஏவியவர்," "காவல் துறையினரை செயல்பட அனுமதிக்காது சில ரவுடிகளை ஏவி அராஜகம் செய்தவர்" போன்ற குற்றச்சாட்டுகள் 1950களில் போடப்பட்டன. அவையே பிரதானமாக அரசின் ஆவணங்களில் இடம் பெறுவதால் தேவரின் அரசியல் பங்களிப்பு கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. தேவரைப் பற்றிய நூல்கள் எல்லாம் அவரை துதி பாடுவதாக அமைந்துவிட்ட நிலையில் அவர் மீது உண்மையான மதிப்பீடு என்பதே இயலாது போய்விட்டது.தஞ்சையில் குத்தகை விவசாயிகளும் விவசாய தொழிலாளர்களும் இணைந்து ஜமீன்தார்/பெரும் நிலவுடமை யாளருக்கு எதிராக வர்க்கரீதியாய் போராடுவது 1930 களின் இறுதியில் சாத்தியமானபோது ராமநாதபுரத்தில் முத்துராமலிங்கத்தேவரின் சாதி ஆதரவுடனான எழுச்சி அத்தகையதொரு வர்க்கரீதியிலான ஒற்றுமையை கட்டு வது சாத்தியமற்றதாக்கியிருக்கலாம். காவல் துறையின ரின் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு தஞ்சை மாவட்டத்தில் தலித்கள் எழுச்சியை ஒடுக்கிய காங்கிரஸ், ராமநாதபுர மாவட்டத்தில் ஓட்டுவங்கியாக தலித்களை கருதி நீலிக்கண்ணீர் வடிக்கிறது என்பதை நன்கு புரிந்திருந்த கம்யூனிஸ்ட்டுகள் காங்கிரஸ் எதிர்ப்புக் கொள்கையையே பிரதானமாக முன்னிருத்தி செயல் பட்டனர். தலித்களின் எழுச்சியை விரும்பாத முத்து ராமலிங்கத்தேவருக்கு அது சாதகமான அரசியல் நிலை யாக அமைந்ததால் கம்யூனிஸ்ட்டுகள் இன்று விமர்சனத்திற்குள்ளாகியுள்ளனர்.இங்கு முக்குலத்தோர் பற்றிய புரிதலும் மிக அவசிய மாகிறது. சிவகாசி கலவரம்(1899), கமுதி கலவரம் (1918) ஆகியவற்றுக்கும் முத்துராமலிங்கத் தேவருக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. ஆனால் முக்குலத்தோ ரின் நடத்தை அப்போது எப்படி இருந்ததோ அப்படியே தான் தேவர் காலத்திலும் இருந்தது. சமூக வரலாற்றறிஞர் எரிக் ஹாப்ஸ்பாம் எமுதிய ஆதிகால கலவரக்காரர்கள் புத்தகத்தை படித்து தேவர்களின் குணாதிசயங்களை புரிந்துகொள்ள முடியும். வரலாற்றுக் காலத்தில் பல்வேறு காரணங்களால் அவதிக்குள்ளாகி பின்தங்கிய நிலையிலிருந்த தேவர்களும் தாழ்த்தப்பட்ட தலித்களும் மோதிக்கொள்ளுவதை மனித சமூகத்தின் பால் அக்கறைகொண்ட எவரும் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரவே முயலுவர். அத்தகையதொரு நிலை பாட்டையே கம்யூனிஸ்ட்டுகள் எடுத்துள்ளனர்.குற்றபரம்பரைச் சட்டத்திற்குட்படுத்தப்பட்ட இனத்தின ருக்கு சுதந்திர இந்தியாவில் மற்ற மாநிலங்களில் சிறப்பு நிவாரணங்கள் மற்றும் மறுவாழ்வுத் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்டு வந்தபோது இங்கு தமிழகத்தில் அத்த கைய பிரிவைச் சார்ந்த தேவர்களை காங்கிரஸ் அரசு மேலும் கடுமையான இன்னலுக்கு ஆளாக்கியது. எனவே தான் தினகரன்கூட இவ்விஷயத்தில் காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கத் தவறவில்லை."காங்கிரஸ் சார்பில் தேர்தலுக்கு நிற்கும் அபேட்சகர்கள் சீட்டி ஆக்டால் அவதிப்பட்டவர்களையும், அவர்கள் சந்ததியினர்களையும் அணுகும்போது நாங்கள்தான் சீட்டி ஆக்டை எடுத்தவர்கள் என்று எலெக்ஷனில் ஜெயிப்பதற்காகச் சொன்னாலும் உண்மையில் அப்பரம் பரையினரிடம் காணும் கெட்ட பழக்கத்தை மாற்றி யமைக்க வழிசெய்தார்களா? என்பதும் சிந்திக்கத்தக்க விஷயம்."1930களில் சிறு, குத்தகை விவசாயிகள் போராடிய அதே காலத்தில் விவசாயத் தொழிலாளர்களும் எழுச்சிமிக்கதோர் இயக்கம் கண்டனர். தலித்களின் விடுதலைக்கான இவ்வியக்கம் 1930களில் வலுப்பெற்று பலப்படுத்தப்பட்டதாக காவல்துறை அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. இராமநாதபுரத்தில் விவசாயத் தொழி லாளர்களான தலித்கள் (பெரும்பாலும் பள்ளர்கள்), ஜமீன்தாரின் குத்தகைதாரர்களாக இருந்தபோதிலும் நடைமுறையில் நிலஉடைமையாளர்களாக நடந்து கொண்ட தேவர்களோடு மோதியது, அப்பகுதியில் காவலர்களை நிரந்தரமாக நிறுத்த காலனி அரசைக் கட்டாயப்படுத்தியது.பதிப்பாசிரியர் குறிப்பிடும் "காந்தி என்ற மனிதர்" தான் இம்மோதலுக்குத் தீர்வுகாண அவரது பாணியில் முயன் றிருக்கிறார். அவரது அரிஜன சேவா சங்கம் முக்குலத்தோ ருடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி 1)அரிஜனங் கள் ஆதிக்க சாதியினருக்கு இலவசமாக ஊழியம் செய்ய கட்டாயப்படுத்தப்படக்கூடாது. உழைப்புக்கு கூலி கேட் கும் உரிமையும், கூலி கொடுக்காவிட்டால் உழைப்பு வழங்க மறுக்கவும் அவர்களுக்கு உரிமையுண்டு. 2) அரிஜனங்களுக்கு சட்டை போடவும், மேலாடை அணிய வும் உரிமை உண்டு. பெண்கள் அவர்களுக்குப் பிடித்த ஆபரணங்களை அணியலாம். ஆனால் கண்டதேவி, மற்றும் இளவன்கோட்டை தேர்த்திருவிழாவின் போது நாட்டார்கள் மேல்சட்டை போடும் பழக்கம் இல்லா ததால் அரிஜனங்களும் மேல்சட்டை போடத் தேவை யில்லை. 3)அரிஜனங்கள் தங்களுக்கு பிடித்தமான முறை யில் எப்படியென்றாலும் வீடுகள் கட்டிக் கொள்ளலாம்.மேற்கூறிய ஒப்பந்தத்தை வரவேற்று காந்தி 1937-ம் ஆண்டு மார்ச் 27 அன்று "அரிஜன்" பத்திரிகையில் கீழ் கண்டவாறு எழுதுகிறார்: இந்திய சமூகத்தின் ஒரு பிரிவினர் தாங்கள் விரும்பிய ஆடையையும், அணிகலன் களையும் அணியமுடியாது, "உயர்சாதி"யினரின் விருப் பத்தைப் பொறுத்தே அவர்கள் உழைப்பிற்கு ஊதியம் கிடைக்கும் என்பது அற்பக் குணத்தைக் குறிப்பதாகும். 'உயர் சாதியினர்' அரிஜனங்களை விட மேலானவர்களாகக் கருதுகிறார்கள், ஆனால் எவ்விதத்திலும் அவர்கள் அரிஜனங்களுக்கு உயர்ந்தவர்கள் அல்லர்.பி.மருதையாவின் அறிக்கை பற்றி குறிப்பிடும் பதிப்பா சிரியர் "இராமநாதபுரம் ஜில்லாவில் நடக்கும் கலவரங் கள் சாதிச்சண்டையா? அல்லது அரசியல் குழப்பமா? உண்மை விவரங்கள்" என்ற தலைப்பில் 16 பக்கங்கள் கொண்ட அவரது அறிக்கையை புத்தகத்துடன் இணைக் கவில்லை. அதில் காந்தி பற்றி பி.மருதையார் எழுதும் வரிகள் இவை: எத்தனையோ மகான்கள் தோன்றிய இந்த நாட்டில் உலகம் போற்றும் உத்தமர் மகாத்மா காந்திஜி அவர்கள் தோன்றி ஹரிஜன சேவை செய்திரா விட்டால் இன்று ஹரிஜன மக்கள் மனிதர்களாக சுதந்திர நாட்டில் வாழமுடியாது என்பதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. இன்று இராமநாதபுரம் ஜில்லா வில் சுமார் 3000 ஹரிஜன வீடுகள் தீக்கிரையாகி ஹரிஜன மக்கள் பரிதவிப்பது ஜாதியின் கொடுமையே தவிர வேறல்ல, இன்று காந்திஜி உயிரோடு இருந்தால் ஹரிஜன மக்கள் ஜாதிக்கொடுமையால் அவதிப்படுவதைப் பார்த்து கண்ணீர்விடுவார்... (ப.5, 6)காந்திஜியின் தலித்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டால் அவரை இந்து மத துரோகி என தேவர் சாடினார். இந்து மகாசபைத் தலைவரான கோல்வால்கருக்குப் பண முடிப்பு கொடுக்கப்பட்டபோது, 'காந்தி இந்து மதத் துரோகி, ஆதலால்தான் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கி றேன்' என்றார். இதுபற்றி எழுதும் தினகரன் 'கசந்து போன காங்கிரஸ்பக்தி, காந்தியைக்கூடக் கன்னா-பின்னா என்று பேசச் சொல்லுகிறது. நேரு எந்த மூலை? காமராஜர் எம்மாத்திரம்" என்கிறார். காந்தி பற்றி இங்கு குறிப்பிடுவது காந்தியத்தை உயர்த்திப் பிடிக்க அல்ல. மாறாக வராற்றில் ஆய்வு செய்யும்போது கடந்தகால நிகழ்வுகளை அன்றைய சூழலிலேயே நோக்க வேண்டுமென்பதை வலியுறுத்துவதற்காகவே ஆகும்.தேவராக இருந்தபோதும் சாதிய உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தியவர் தினகரன். தலித்களை வன்முறையில் ஈடுபடுமாறு நாடார்கள் தூண்டுகிறார்கள், அவர்கள் பின்னால் காம ராஜர் உள்ளார் என தேவர் குற்றம்சாட்டிய வேளையில் நாடார் சமூகம் நம்நாட்டின் நல்ல சமூகங்களில் ஒன்று என துணிச்சலாகக் கருத்து தெரிவித்து எழுதுகிறார் தினகரன்.இதர சமூகங்கள் எவ்வளவுக்கெவ்வளவு தூரத்தில் தள்ளி வைத்ததோ அவ்வளவுக்கவ்வளவு சீக்கிரத்தில் அது முன் னேறி வருகிறது. பொதுப்பாதைகளில் நடக்கக் கூடாது, பொதுக்கோவில்களில் கும்பிடக்கூடாது, பொதுப்பள்ளி களில் படிக்கக்கூடாது என்று... அத்தனை தடைகளையும் மீறி இப்போது முன்னேறியிருக்கிறது. சொந்தமாய் கிணறுகள் வெட்டிக் கொண்டும், கோவில்கள் கட்டிக் கொண்டும், பள்ளிகள் அமைத்துக் கொண்டும் அது முன்னேறியது. ஹரிஜனங்கள் அப்படிச் செய்யமுடிய வில்லை. அரசாங்கமே வந்து அதைச் செய்து கொடுக்க வேண்டியதிருக்கிறது. (பக்-31)எனவே தினகரன் எழுதிய முதுகுளத்தூர் கலவரம் புத்தகத்தை மறுபதிப்பு செய்திட பெருமுயற்சி மேற் கொண்டுள்ள தோழர் ஜெனநாதன், அதை வெளியிட்ட பதிப்பாளர் திரு.இளம்பரிதி ஆகியோர் பாராட்டுவதற்குரியவர்கள்.

எதிர்திசை

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராமத்திலும் இந்துக்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும் இடையே ஒரு நிரந்தர யுத்தம் நடைபெற்றுவருகிறது. அது வெளியே தெரிவதில்லை. அதனை விளம்பரப்படுத்த இந்துக்களின் பத்திரிகைகள் தயாராக இல்லை; உலகக் கண்ணோக்கில் தங்களது சுதந்திர லட்சியத்துக்கு அது ஊறு விளைவித்துவிடுமோ என்று அவற்றுக்கு அச்சம், ஆனால் ஒரு மௌனப் போராட்டம் நடைபெற்று வருகிறது என்பது மட்டும் உண்மை’- அம்பேத்கரின் இவ்வரிகள் (அம்பேத்கர் நூல் தொகுப்பு-17, 1999;38) தலித்துகளுக்கும் சாதி இந்துக்களுக்கும் இடையேயான மோதலை ஆழமாக ஆராயத் தூண்டுகிறது. சாதி மோதல் குறித்த ஆய்வு இன்று கல்வியாளர்களிடம் முதன்மையான இடம்பிடித்துள்ளது.தமிழ்ச்சமூகத்தில் ஒதுக்கப்பட்ட சாதியான மள்ளர்களுக்கும்*, ஆதிக்கச்சாதியான தேவர்களுக்கும் இடையே 1990களில் நடைபெற்ற மோதலை-பத்திரிகைகள் ‘’கலவரம்’’ எனக் கூறின; கல்வியாளர்கள், தலித் ‘எழுச்சி’ என்று கண்டறிந்தனர். (Manikumar, K.A. 1997; Pandian, M.S.S. 2000).கலவரமா? அல்லது தலித் எழுச்சியா? என்பதனை ஆராய்வதற்கு சிவந்திபட்டி கிராமத்தை தேர்வு செய்தேன். இந்த ஆய்விற்கு, சிவந்திப்பட்டி ஒரு பொருத்தமான கிராமம் தானா?. இக்கிராமத்தில் மள்ளர்களுக்கும் தேவர்களுக்கும் இடையே மிகக் கடுமையான மோதல் நடைபெற்றிருக்கிறது.காலனி ஆட்சிக் காலத்திலும், அதற்குப் பின்னரும் சிவந்திப்பட்டியில் நடைபெற்று வந்த-சமூகப் பொருளாதார பரிவர்த்தனை அங்கே வசித்து வந்த சாதிகளுக்கிடையேயான குறிப்பாக-பண்ணையார், உழவுரெட்டி, தேவர் மற்றும் மள்ளர்-ஆகியோருக்கிடையே ஏற்கனவே இருந்துவந்த ஏற்றத்தாழ்வுகளையும் முரண்களையும் மேலும் அதிகரிக்கச் செய்திருக்கிறது. இதன் விளைவு மள்ளர்களுக்கும் தேவர்களுக்கும், மோதல்களும் படுகொலைகளும் நிகழ்ந்துள்ளன. இந்த காரணங்களினால், நாம் எடுத்துக் கொண்ட சிக்கலை ஆராய்வதற்கு சிவந்திப்பட்டி சந்தேகத்திற்கிடமின்றி ஒரு பொருத்தமான கிராமமே.அம்பேத்கர் கூறியதுபோல் கிராமங்களில் இந்துக்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும் இடையேயான மோதல்கள் வெளியுலகிற்கு தெரியாததால், மோதல் குறித்த பதிவுகளும் இல்லாமல் போய்விடுகிறது. இருப்பினும், அம்மக்களிடையே இன்றும் இருந்து வரும் வாய்மொழி வரலாறுகள் சான்றுகளாக கிடைக்கின்றன. எனவே, சிவந்திப்பட்டியில் வசிக்கும் மக்கள், அங்கிருந்து இடம் பெயர்ந்தோர் மற்றும் சிவந்திப்பட்டி குறித்து அறிந்த வர்கள் ஆகியோரிடம் வாய்மொழித்தரவுகள் சேகரிக்கப்பட்டன. பத்திரிகை செய்திகள், ஆய்வு அறிக்கைகள் மற்றும் இரண்டாம்தர ஆதாரங்கள் இக்கட்டுரையை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. 2005, ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலும், அவ்வப்போது சில தனிநபர்களிடமும் தரவுகள் சேகரிக்கப்பட்டன. இக்கட்டுரை தலித்துகளுக்கும் சாதி இந்துக்களுக்கு மிடையேயான நடைபெற்ற மோதலுக் கான காரணிகளை புரிந்துகொள்வதற்கு.சிவந்திப்பட்டி வரலாறு:சிவந்திப்பட்டி, திருநெல்வேலியிலிருந்து சுமார் 19கி.மீ. தூரத்தில் 1930.90 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. 1991ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கின்படி இங்கு 3166 பேர் வசித்து வருகின்றனர் (The Census of Panchayat book, 1991, Tirunelveli, p.5).இவர்களில் மள்ளர், பறையர், தேவர், ரெட்டியார், கோனார், போன்றோர் அடங்குவர். ரெட்டியார் ஆந்திராவிலிருந்தும் (நேர்காணல்: குமாரசாமி, வ.62, காந்திநகர், 29.01.05), தேவர் ராமநாதபுரத்திலிருந்தும் (Kadirvel.S. 1977;7),கோனார் திருச்சியிலிருந்தும் இடம் பெயர்ந்து சிவந்திப்பட்டியில் குடியேறினர்.கோனார், தாங்கள் திருச்சிராப்பள்ளி பகுதியிலிருந்து இங்கு இடம் பெயர்ந்து வந்ததற்கான வாய்மொழி வரலாற்றினை இன்றும் தங்களின் கோயில் திருவிழாவின்போது பாடலாக பாடிவருகின்றனர். மேற்குறிப்பிட்ட சாதியினர் வருகைக்கு முன்னரே தலித்துகள் இங்கு வசித்து வருகின்றனர். (கால்டுவெல், 2004; 5-6 ). மிகப் பழங்காலத்திலிருந்தே அவர்கள் தாங்களாகவே குளங்கள் தோண்டி விவசாயம் செய்து வந்ததனை மள்ளர் ஒருவர் பின் வருமாறு கூறினார்: ‘கொடியவன், நெறிஞ்சான் ஆகியோர் தலைமையில் எங்கள் சாதியினர் குளங்கள் அமைத்து நிலங்களை சீர்படுத்தி விவசாயம் செய்தனர். அப்பொழுது ஆந்திராவிலிருந்து இங்கு வந்த ரெட்டியார்கள் எங்களை ஆயுதபலத்தால் ஒடுக்கினர். வன்முறையால் எங்களின் விவசாய உற்பத்தியினை அபகரித்தனர். இவர்களின் வருகைக்கு முன்னர் எங்கள் ஊர் கொடிக்குளம் தென்பாகம் என அழைக்கப்பட்டது’. (நேர்காணல், ராம சாமி, வ67, சிவந்திப்பட்டி, 27.01.05).டேவிட் லடன் என்பவர் (1989;53-54) தெலுங்கர்களின் வருகைக்கு முன் திருநெல்வேலி பகுதிகளில் குளத்துப் பாசனமே அதிகம் இருந்திருக்கிறது என்று கூறியிருப்பது மள்ளர்களின் வாய் மொழி வரலாற்றிற்கு வலுசேர்க்கிறது. ரெட்டியார் சாதியினரின் குடியேற்றம், மள்ளர்கள் மீது ஒடுக்குமுறையாலும், வன்முறையாலுமே நிகழ்ந்திருக்கிறது என்பது நினைவில் கொள்ளவேண்டிய வரலாறு. ரெட்டியார்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கொடிக்குளம் தென்பாகம், சிவந்திப்பட்டி என்று 18ம் நூற்றாண்டில் சிவந்தி நாயக்கரால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது (Bala,V. 2001;2-3).இதுவே, மள்ளர் மீது ரெட்டியார்களால் நடத்தப்பட்ட முதல் ஒடுக்குமுறை. இதன் விளைவு, மள்ளர்கள் ரெட்டியார்களிடம் அடிமை போல் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.சமூகப் பொருளாதார பின்னணி:ரெட்டியார்களில் ஒரு பிரிவினரான கெண்டாரத்தார், சிவந்திப்பட்டியின் நிலவுடைமையாளர்கள். உழவுரெட்டி, மள்ளர், பறையர் விவசாய வேலை களையும், தேவர், அருந்ததியர் முறையே காவல், விவசாயத்திற்குத் தேவையான தோல் பொருட்களைத் தயாரித்தல் பணிகளையும் செய்து வந்தனர். கோனார்கள் நிலவுடைமைக் கட்டமைப்பிற்குள் இருந்திருக்கவில்லை; அவர்கள் மேய்ச்சல் வாழ்வினையே மேற்கொண்டிருந்தனர். பண்ணையாளர்களிடம் தொடர்ச்சியாக வேலை செய்துவந்த மள்ளர் குடும்பங்கள் ‘பதிவாள்’, ‘உழவு பள்ளன்’ என்றழைக்கப்பட்டனர். ஒரு பண்ணையாரின் பதிவாள் மற்றொரு பண்ணையாரிடம் வேலைக்குச் செல்வது தடை செய்யப்பட்டிருந்தது.உழவு ரெட்டியார்களும் பண்ணையாளர்களிடம்தான் விவசாய வேலைகள் செய்துவந்தனர். இவர்கள் மீதான பொருளாதார-சமூக மதிப்பீடுகள் தலித்துகளிடமிருந்து பெரிதளவு வேறுபட்டிருக்கவில்லை.உழவு ரெட்டிகளும் தலித்துகள்,தேவர்களைப்போல் பண்ணையாளர்களை ‘ஐயா’ என்று பணிவோடு தான் அழைக்க வேண்டிய நிலையிருந்தது. சுருக்கமாகக் கூறுவதென்றால், உழவுரெட்டியின் சமூகப்-பொருளாதார-பண்பாட்டு வாழ்க்கை முறை தலித்துகளிடமிருந்து வேறுபட்டிருக்கவில்லை. அதாவது, மள்ளர்களைப்போல் இவர்களும் ஒடுக்கு முறைக்குள்ளாகி இருந்தனர்.இந்த நிலபிரபுத்துவக் கட்டமைப்பில் ஆளும் வர்க்கமாக பண்ணையார்களும், ஆளப்படும்- உழைக்கும் வர்க்கமாக உழவு ரெட்டி, மள்ளர், ஆதி-திராவிடர், அருந்ததியர் சாதிகளும் இருந்தன. தேவர் சாதியினரின் பணியானது விளைச்சலை காவல் காத்தல், பண்ணையார்களின் ஏவலை நிறை வேற்றுதல். இப்பணி பண்ணையார்களின் அதிகாரத்தினையும் பாதுகாத்தது. தேவர்களின் பணி, ஒருபுறம், ஆளும் வர்க்கத்தை பாதுகாத்தலும்; மற்றொரு புறம் உழைக்கும் வர்க்கம் மீது ஆதிக்கத்தை செலுத்துதலுமாகும். அதாவது, தேவர்கள் பண்ணையார்களால் ஆளப்படும் வர்க்கமாகவும், மற்ற சாதியினரை ஆளும் வர்க்கமாகவும் இருந்தனர். ஆனால் தலித், உழவு ரெட்டி, தேவர் சாதிகளுக்கிடையே இந்து மதம் வழங்கியிருக்கும் சமூக ஏற்றத்தாழ்வு களைத் தவிர வர்க்க வேறுபாடுகள் இருந்திருக்கவில்லை.சிவந்திப்பட்டியில் வசித்த ஒவ்வொரு சாதியும் இதர கிராமங்களில் வசித்து வந்த தனது சாதி உறுப்பினர்களோடு இன்ப-துன்ப உறவுகளைக் கொண்டிருந்தது. இவ்வுறவானது கிடைமட்ட அளவில் சுமார் 30கி.மீ.தான் இருந்துள்ளது. இவர்களின் திருமணங்கள் பெரும்பாலும் இரவுநேரங்களில் ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவையாகவே நடந்துள்ளன. இச்சமூக-பொருளாதார கட்டமைப்பும் பண்பாடும் காலனிய ஆட்சிக்காலத்திலிருந்து மாற்றத்திற்கு உள்ளானது.களவு உருவாக்கிய பகைமை:காலனிய ஆட்சிக்காலத்தில் சிவந்திப்பட்டி பறையர் மற்றும் உழவு ரெட்டி சாதியினைச் சேர்ந்த ஆண்கள் (மனைவி மக்களை இங்கேயே விட்டுவிட்டு) உள்நாட்டின் பெருநகரங்களுக்கும் வெளிநாட்டிற்கும் இடம் பெயர்ந்தனர் (நேர்காணல் சுப்புராயலு, வ.62, திருநெல்வேலி, 19.01.05). இவ்விடப் பெயர்வு சமூக, பொருளாதார ஒடுக்கு முறையிலிருந்து விடுவித்துக் கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒரு வகைப் போராட்டமாகும். பறையர், உழவு ரெட்டிகளின் இடப்பெயர்வு, சிவந்திப் பட்டி நிலப்பிரபுத்துவக் கட்டமைப்பில் ஒரு மாற்றத்தைக் ஏற்படுத்தியது. அதாவது, ஆளும் வர்க்கமாக பண்ணையாளர்களும் தேவர்களும், உழைக்கும் வர்க்கமாக மள்ளர்களும் இருந்தனர். இக்காலத்தில் காலனி ஆட்சி அறிமுகம் செய்த நவீன காவல் துறை தேவர்களின் காவல் தொழிலை அப்புறப்படுத்தியது. இச்சூழலில் தேவர்களுக்கும் மள்ளர்களுக்கும் முரண்பாடு தோன்ற ஆரம்பித்தது. வேலையற்ற தேவர்கள் திருநெல்வேலி, மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒதுக்கப்பட்ட மக்களை அச்சுறுத்தி ‘காவல்கட்டு’ பெற்று வந்தனர் (Public (Police), G.O. No. 124, 8 March 1933).மேலும் பிறர் பொருட்களை களவு செய்தும் வந்தனர் (இது குறித்த ஆழமான வாசிப்புக்கு பார்க்க, Arnold, David.1979)). சிவந்திபட்டியில் மள்ளர் கள் தம் விவசாயப் பணிகளை முடித்து இரவுநேரங்களில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் சமயங்களில் தேவர்கள் அவர்களின் வீடுகளில் புகுந்து வெண்கலப் பாத்திரங்கள், ஆடு, கோழி போன்றவற்றைத் திருடினர். திருட்டு நடந்த அடுத்தநாள் தமது உடைமைகள் திருடப்பட்டிருப்பதை மள்ளர்கள் தங்களுக்குள் அதிர்ச்சியோடு பகிர்ந்து கொண்டனர். தேவர்களின் இச்செயல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஒருமுறை தேவர்கள் அவ்வூர் தலையாரியின் (தேவர்) கிணற்றிலிருந்து பாத்திரங்களை எடுத்து பழைய பாத்திர வியாபாரியிடம் விற்பனை செய்ததை மள்ளர்கள் பார்த்து விட்டனர் (நேர்காணல்: சங்கரசுப்பு, வ.53, 20.01.05). தேவர்கள் அக்கிணற்றிலிருந்து நகர்ந்த பின்னர் மள்ளர்கள் கிணற்றில் குதித்து சோதனையிட்டு அங்கே பாத்திரங்கள் பதுக்கி வைக்கப் பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.அப் பாத்திரங்களில் சிவந்திப்பட்டி மள்ளர்களின் பெயர்களே பொறிக்கப்பட்டிருந்ததால் அவை தமது பாத்திரங்கள் என்பதனை உறுதி செய்தனர் (மேலது). இத்திருட்டு குறித்து கிராம அதிகாரியிடம் மள்ளர்கள் புகார் செய்தனர். அவர் தலையாரியை அழைத்து திருட்டில் தொடர்புடையவர்களை விசாரித்தார். ஆனால் குற்றத்தை தேவர்கள் ஒப்புக் கொள்ளாததால் விசாரணை நடத்த ஆங்கிலேய காவல் அதிகாரி வரவழைக்கப்பட்டார். அவரது விசாரணையில் குற்றவாளிகளான தேவர்கள், தாங்கள் மள்ளர்கள் வீட்டில் களவாடியதை ஒப்புக் கொண்டதால் அவர்கள் மீது தண்டனை விதித்தார். தேவர்களின் தொடர் திருட்டு நடவடிக்கையால் பாதிப்புக்குள்ளான ஒரு சில மள்ளர் சிறு விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர். அவர் காவல்துறையினர் மூலம் சிவந்திப்பட்டி தேவர்களை குற்றப் பரம்பரை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்குக் கட்டளையிட்டார். இதனால் தேவர்கள் அன்றாட இரவில் செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் தங்கும் சூழல் உருவானது. (நேர்காணல்:பொற்செழி யன், பாளையம்கோட்டை, 16.05.05).இத்திருட்டுச் சம்பவத்தில் ஊர் மக்கள் முன்னிலையில் தேவர்கள் தங்களின் குற்றத்தினை ஒப்புக்கொள்ள வேண்டியதாகிவிட்டதால் மள்ளர்கள் மீது தணியாதக் கோபம் கொண்டனர். இதுவே, சிவந்திப்பட்டி மள்ளர்-தேவர்களுக்கிடையே உருவான முதல் முரணாகும். இம்முரண் உருவாக அடிப்படைக் காரணமாயிருந்த தேவர்களின் திருட்டு நடவடிக்கையில் பண்ணையார்களின் நிலைப்பாட்டினை காண்பது அவசியம். பண்ணையார்கள், திருட்டு தொடர்பான விசாரணையின் போது ‘தங்களின் உழவன்’ என்ற முறையில்கூட மள்ளர்களுக்கு ஆதரவாக எந்தவிதத்திலும் செயல்பட்டிருக்கவில்லை. இந்த மவுனம் இன்னொருபுறத்தில் தேவர்களின் செயல்களுக்கு ஆதரவாகவே இருந்தது. (ஆனால் மறவர்களின் திருட்டு நடவடிக்கைக்கு எதிராக இதர சாதிகள் இணைந்து நடத்திய போராட்ட வரலாறு உள்ளது. பார்க்க: Pandian, Anand. 2005).பண்ணையார்களின் நிலைபாட்டிற்கு அடிப்படைக் காரணம் உண்டு. பண்ணையார்கள் மள்ளர்களின் உழைப்பினைச் சுரண்டியதற்கும், தேவர்கள் மள்ளர் உடைமைகளைக் கொள்ளையடித்ததற்கும் இடையில் என்ன வேறுபாடு இருக்க முடியும்? சுரண்டல் அன்றாடம் நிகழும், கொள்ளை திடீரென நடைபெறும். இவ்விரண்டும் மள்ளரது உழைப்பையும் பொருளையும் அபகரிப்பதில் ஒன்றுபட்டவை; நிகழ்த்தப்படும் காலம் மட்டுமே வேறுபடுகிறது. இக்காரணங்களினால் பண்ணையார்களும் தேவர்களும் ஒரே வர்க்கமாகவும் இருக்கின்றனர். எனவே, பண்ணையார்கள் தேவர்களின் திருட்டை எதிர்க்காமல் இருப்பதில் வியப்பொன்றுமில்லை.‘பள்ளக்குடி பஸ்’: நவீனத் தீண்டாமை:இம்முரணுக்கு நடுவில் மற்றொரு மாற்றம் நிகழத் தொடங்கியது. இலங்கைக்கு இடம் பெயர்ந்த உழவு ரெட்டியார்கள் அங்கு ஈட்டிய பொருளாதாரத்தைக் கொண்டு சிவந்திப்பட்டியில் நிலம் வாங்கத் தொடங்கினர் (நேர்காணல்: சுப்புராயலு, வ.60.) இந்நிலங்கள் பெரும்பாலும் பண்ணையார்களிடமிருந்தே வாங்கப்பட்டது. சமூக ஆதிக்கத்தின் குறியீடாக உள்ள நிலத்தை பண்ணையார்கள் பிறரிடம் விற்பதற்குப் பின்னணியாக இருந்த காரணிகள் எவை? பொதுவாகவே, பண்ணையார்கள் தங்கள் வாரிசுகளை படிக்க வைத்தல், சடங்கு சம்பிரதாயங்களுக்கு செலவு செய்தல், ஆடம்பரமாக திருமணம் செய்தல் போன்றவற்றால் ஏற்பட்ட அதிக பொருட்செலவானது அவர்களை நிலத்தை விற்கும் நிலைக்குத் தள்ளியதென எம்.என். ஸ்ரீனிவாஸ் கருதுகிறார். (1996;77). அத்தோடு குடி, கூத்தியாள் போன்ற பழக்கவழக்கங்களாலும் அவர்கள் நிலத்தை விற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் அவர்கள் தம் வாரிசுகளை படிக்க வைத்திருக்கவில்லை என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி.பண்ணையார்கள் தம் நிலங்களை உழவு ரெட்டியார் களிடம் விற்கத் தொடங்கியதால், உழவுரெட்டியார்கள் புதுப் பண்ணையார்களாக மாறிக் கொண்டிருந்தனர். இதன் விளைவு ஒருபுறம், பண்ணையார்களுக்கும் மள்ளர்களுக்கும் இருந்து வந்த உறவு அறுபடத் தொடங்கியது மறுபுறம், சமூகப் பொருளாதாரத்தில் தங்களின் நிலைக்கு இணையாக இருக்கின்றனர் என்று மள்ளர்களால் கருதப்பட்ட உழவு ரெட்டிகளான புதுப் பண்ணையார்களின் நிலத்தில் பணி செய்யவேண்டிய சூழல் உருவானது. இம்மாற்றங்களுக்கிடையே பண்ணையார்களில் சிலர் இடம்பெயரத் தொடங்கினர். இம்மாற்றம் சிவந்திபட்டி கட்டமைப்பில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்திவிடவில்லை. பண்ணையார்களில் நபர்கள்தான் மாறினார்களே யொழிய, பண்ணையார்-பதிவாள் உறவுமுறை நீடித்துவந்தது.ஆனால், மள்ளர்களின் சமூகப் பொருளாதாரத்தில் சில அடிப்படையான மாற்றம் நிகழத் தொடங்கியது. கல்வி வேலைவாய்ப்பில் தலித்துகள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. தீண்டாமை கொடுமைக்கும் பொருளாதார சுரண்டலுக்கும் உள்ளாகி வந்த மள்ளர்கள் அதிலிருந்து விடுதலை பெற முயற்சித்தனர். 1940களின் இறுதியிலும் 1950களின் தொடக்கத்திலும் பிறந்த மள்ளர் குழந்தைகள் கல்வி கற்கத் தொடங்கினர். தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு எனப்படும் பாளையம்கோட்டை சிவந்திப்பட்டியிலிருந்து சுமார் 10கி.மீ. தூரத்திற்கு அப்பால் இருந்தபோதிலும் பேருந்து வசதி இல்லாததால் நடந்து சென்றே கல்வி கற்றுவந்தனர். இந்த இளந்தலைமுறையினர் கல்வி மட்டுமன்றி பண்பாட்டு அளவில் தம் நடை உடைகளை மாற்றிக் கொண்டனர்; சமத்துவம் குறித்த கருத்துக்களையும் கற்கத் தொடங்கினர். தம் மக்களை முன்னேற்ற வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், சிவந்திப்பட்டியும் வளர்ச்சியடைய வேண்டும் என்ற ‘பொது சமூக’ நோக்கத்தோடு மள்ளர்களில் கல்வி கற்ற இளம்தலை முறையினரான சிவந்தி கா. செல்வராசு, பொற்செழியன் முன்முயற்சியில் ‘வளர்மதி’ என்ற சங்கம் 1967ல் ஆரம்பிக்கப்பட்டது.மின்விளக்கு, சாலை, பேருந்து உட்பட இதர அடிப்படைத் தேவைகளைப் சிவந்திப்பட்டி ‘பொது’மக்களுக்கு பெற்றுத்தரும் பணியில் வளர்மதி சங்கம் ஈடுபட்டு வந்தது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தல், தனியார் பேருந்து உரிமையாளர்களை சந்தித்து பேருந்தின் தேவையை வலியுறுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் பல வசதிகளைப் பெற்றனர்.1969ல் பேருந்து வசதி கிடைத்தது. பேருந்தின் இறுதி நிறுத்தம் மேல்சாதியினரின் வசிப்பிடம் அருகேயே இருந்தது. மேல்சாதியினர் பேருந்தின் இருக்கையில் அமர்ந்து பயணிக்கத் தொடங்கினர்; ஆனால் பேருந்து பெற்றுத் தருவதற்கு உழைத்த வளர்மதி சங்கத் தலைவர்களுக்கும் தலித்துகளுக்கும் பேருந்தில் அமர்ந்து பயணம் செய்ய அனுமதியை மறுத்தனர் சாதி இந்துக்கள். இருக்கைகள் காலியாக இருந்த போதிலும், தலித்துகள் நின்று கொண்டு தான் பயணிக்க வேண்டும் என்ற புதியதொரு தீண்டாமை வடிவத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தனர். இதனால் பேருந்தின் நிறுத்தத்தை பொதுவானதொரு இடத்திற்கு மாற்ற வேண்டி வளர்மதி சங்கம் முயற்சி எடுத்தது. அம்முயற்சி பலனளிக்கவில்லை.இருப்பினும் ஒரு புதிய பேருந்து அனைவருக்கும் பொதுவான இடம்வரை சென்றுவருவதற்கான ஏற்பாடு நடந்தது. இப்பேருந்தை மள்ளர்கள் மட்டுமே பயன்படுத்தினர். சாதி இந்துக்கள் இதில் பயணம் செய்வதனை தவிர்த்ததோடு மட்டுமல்லாமல் அப்பேருந்தை ‘’பள்ளக்குடி பஸ்’’ என்றழைத்தனர். பொதுவாகவே, தீண்டாமையை நிலைநிறுத்துவதற்கு, தலித்துகளுக்கெதிரான இத்தகைய சூழல் சாதி இந்துக்களிடத்தில் உருவாகி யிருந்தது (M. N. Srinivas, 1960; 368). தீண்டைமைக் கெதிராகவும், சமத்துவக் கருத்துக்களையும் வளர்மதி சங்கம் மள்ளர்களிடத்தில் விதைத்தது.‘அருவாக்கட்டு’: மரபுரிமைப் போராட்டம்அன்றாடம் அறுவடை முடிந்த பின்னர் அறுவடைக்குப் பயன்படுத்தப்பட்ட அருவாவில் சிறிதளவு நெற்கதிர்களைக் கட்டிக்கொள்ளும் ‘அருவாக் கட்டு’ முறை ஒரு மரபாக இருந்து வந்திருக்கிறது; இது அறுவடைக்கான கூலியோடு சேர்த்துக் கொள்ளப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. 1970களில் புதுப் பண்ணையார்கள் அருவாக்கட்டு உரிமையை பறித்தனர். இதனால் கோபமுற்ற மள்ளர்கள் புதுப் பண்ணையார்களுக்கெதிராக கிளர்ந்தெழுந்தனர். போராட்டத்திற்கு ஆதரவாக வளர்மதி சங்கத்தினரும் எதிராக பண்ணையார்கள் மற்றும் தேவர்களும் செயல்பட்டனர். (நேர்காணல் : சின்னச்சாமி, வ.60) இச்சமயம் மள்ளர் ஒருவர் தனது புதுப்பண்ணையார் வீட்டுக்குள் சென்று தனது கொடும்பசியை ஆற்றிக்கொள்ள அங்கிருந்த சோற்றை எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது, அங்கு வந்த புதுப் பண்ணையார் குடும்பத்தினர் ஆத்திரமுற்று அவர் மீது சோற்றைக் கொட்டி அனுப்பினர்.இதனால் கோபமுற்ற மள்ளர்கள் புதுப் பண்ணையார்களிடம் வேலைக்குச் செல்வதில்லை என்று முடிவு செய்தனர் (நேர்காணல்: ராமசாமி, வ.67.). இதனால் புதுப் பண்ணையார்களோடு மள்ளர்களின் உறவு முற்றிலும் திடீரென அறுந்து போனது. இதுவே, மள்ளர்கள் தங்கள் மரபுரிமைக்காக நடத்திய முதல் வர்க்கப் போராட்டமாகும். இருப்பினும், இப்போராட்டத்தை ‘வர்க்கப்’ போராட்டம் என்று மட்டும் அணுக முடியாது. காரணம், பண்ணையார் மற்றும் தேவர்களின் எதிர்ப்பு நிலைப்பாடு தன்னகத்தே தீண்டாமையைக் கொண்டுள்ளது. இந்த வர்க்க போராட்டமானது எந்த அரசியல் இயக்கப் பின்னணியுமின்றி சிவந்திபட்டி மள்ளர்களாலேயே ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.இக்காலத்தில் நிலப்பறி இயக்கம் நடத்திவந்த இந்திய பொதுவுடைமைக் கட்சி 1970களில் , திருநெல் வேலி மாவட்டம் உட்பட, தமிழகம் முழுவதும் உள்ள பண்ணையார்களின் நிலங்களைப் பறிக்கப் போவதாக அறிவித்திருந்த போதிலும் (நல்லகண்ணு, ஆர்.1970), அவ்வியக்கம் சிவந்திப்பட்டியில் நடைபெற்றுவந்த போராட்டத்தின் மீது கவனம் செலுத்தியிருக்கவில்லை.இப்போராட்டத்தினால் மள்ளர்களுக்கு பொருளாதாரச் சிக்கல் உருவானது. இதைத் தீர்ப்பதற்காக அவர்கள் ஒன்றிந்து சிவந்திபட்டியில் வெள்ளாளர் களுக்குச் சொந்தமாயிருந்த தரிசு நிலங்களை ‘தசைக்கூலி (தசைக்கூலி: உற்பத்தியில் நிலஉரிமையாளருக்கு பங்கீடு கொடுப்பதோடு குத்தகைக்கு எடுத்த நபரே நிலத்திற்கான தீர்வினையும் கட்ட வேண்டும்) அடிப்படையில் பெற்று அந்நிலங்களைச் சீர்படுத்தி காட்டுப் பருத்தி, கரும்பு, ஆமணக்கு போன்ற பணப்பயிர்களை பயிர்செய்தனர். ஒருவருக்கொருவர் எந்தவித கூலியும் பெற்றுக்கொள்ளாமல் தமது உழைப்பினை மட்டுமே பரிமாற்றம் செய்து கொண்டு மிகப் பரந்த அளவில் பயிரிட்டனர். பயிரிடும்போதும் அறுவடையின்போதும் அனைவரும் கூட்டு உழைப்பில் ஈடுபட்டனர்.1970கள் முழுவதும் நடைபெற்ற இக்கூட்டுழைப்பு மள்ளரது பொருளாதார விடுதலைக்கு தீர்மானகரமான உந்து சக்தியாக இருந்தது. மேலும், இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி சில மள்ளர் இளைஞர்கள் அரசு ஊழியர்களாயினர். சில பத்தாண்டுகள் நடைபெற்றுவந்த மள்ளர்களின் கூட்டுழைப்புமுறை, இட ஒதுக்கீட்டின் மூலம் கிடைத்த பலன் ஆகியவை மள்ளர்களுக்கு பொருளாதார விடுதலையைக் கொடுத்தது. ஆனால் புதுப் பண்ணையார்களும் தேவர்களும் பொருளாதாரச் சிக்கலை சந்திக்க வேண்டிய நிலை உருவானது. முன்னவர்களிடமுள்ள உறவினை மள்ளர்களின் போராட்டம் அறுத்து விட்ட காரணத்தினால் அவர்களின் விவசாய உற்பத்தி சிக்கலுக்குள்ளானது; அவர்களிடம் காவல்கட்டு பெற்றுவந்த தேவர்களுக்கும் பொருளாதார பிரச்னை ஏற்பட்டுவிட்டது. இந்த பொருளா தாரச் சிக்கல் புதுப் பண்ணையார்களை வேறு தொழிலைத் தேடி இடம்பெயர வைத்தது.உடைந்து நொறுங்கிய நிலவுடைமைபண்ணையார், புதுப்பண்ணையார்களின் பொருளாதாரச் சுரண்டலிலிருந்து விடுதலை பெற்றிருந்த போதிலும் மள்ளர்கள் சமூக விடுதலை பெற்றுவிடவில்லை. இந்து சமூக ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறுவதற்காக கல்வி கற்று வந்த மள்ளர் இளைஞர்கள் தம் பண்பாடுகளையும் மாற்றிக் கொண்டனர் என்பதனை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். ஆனால் மள்ளர் அல்லாத, குறிப்பாக தேவர் சாதி இளைஞர்கள் கல்வி கற்பதில் அக்கறையின்றியிருந்தனர். இந்து சமூக அமைப்பில் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சமூக ‘மரியாதை’ கல்விகற்கும் அக்கறையின் மையை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அது மிகையான கூற்றல்ல. நேர்மாறாக தலித்துகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் சமூக ‘அவமரியாதை’ அவர்களை கல்வி கற்பதற்குத் தள்ளியது; தங்கள் மீதான அன்றாட பண்பாட்டு ஒடுக்கு முறையை மீறத் தூண்டியது. மள்ளர் இளைஞர்களின் கல்வியறிவையும் அவர்களின் பண்பாட்டு மாற்றத்தையும் கண்டு வெறுப்புற்ற தேவர் இளைஞர்கள் பேருந்து பயணத்தின் போது மள்ளர் இளைஞர்களிடம் ‘வீண்வம்பு’ செய்து வந்தனர்.மேலே விவாதித்த வர்க்க போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த சூழலில் இளம்தலைமுறையினரிடையே சமூக பண்பாட்டு முரண்பாடு உருவாகிக் கொண்டிருந்தது. இந்த முரண்பாடு கல்வியின் மீது அக்கறையற்றிருந்த தேவர் இளைஞர்களால் உருவாக்கப்பட்டது என்பது கவனத்தில் கொள்ள வேண்டும். இருசாதி இளைஞர்களுக்கிடையையான முரண்பாடு வாய்த்தராறு மோதல் என்ற வடிவத்தை அடையத் தொடங்கியது. இதற்காக நடத்தப்பட்ட பஞ்சாயத்தில் இருசாதி இளைஞர்களும் தேவர்களின் கோயிலுக்கு எண்ணெய் ஊற்ற வேண்டும் என்ற தண்டனை வழங்கப்பட்டது (நேர்காணல்: முருகானந்தம், வ.59. சிவந்திப் பட்டி 29.06.05). தேவர் இளைஞர்களால் உருவாக்கப்படும் மோதல்களுக்கு தாங்களும் தண்டனைக்குள்ளாவது அநீதி என்பதை உணர்ந்த மள்ளர்கள் தாங்கள் இதுவரை தேவர்களுக்கு வழங்கிவந்த காவல்கட்டை நிறுத்தி விட்டனர்(நேர்காணல்: ராமசாமி, வ.67). இது தேவர்களுக்கு மேலும் பொருளாதார சிக்கலை உருவாக்கியது.பொருளாதாரச் சிக்கலிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள விரும்பிய தேவர்கள், தாம் ஏற்கனவே செய்து வந்த திருட்டுத்தொழிலோடு கள்ளச் சாராயம் காய்ச்சி விற்றல், வட்டிக்குக் கொடுத்தல் மூலமாக பொருளீட்டத் தொடங்கினர். உடல்உழைப்பற்ற இத்தொழில்கள் அடிப்படையில் பிறரை சுரண்டும் தன்மை கொண்டது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. தேவர்களின் வட்டித்தொழில் தலித்துகளை மிகக் கடுமையாகச் சுரண்டியது. கள ஆய்வின்போது தேவர் ஒருவர், ‘என் தந்தையிடம் தாழ்த்தப்பட்டவர்கள் சிலர் வட்டிக்கு பணம் வாங்கிவிட்டு திருப்பி தராமலேயே இருக்கின்றனர். எனது தந்தையும் இறந்துவிட்டார். நான் தற்போது பாளையம்கோட்டையில் வசிக்கிறேன். வட்டிக்கு பணம் வாங்கிய ஆவணங்களை எடுத்துச் செல்ல இங்கு வந்தேன். இதில் நாங்கள் எங்கள் விருப்பம்போல் ஆயிரக் கணக்கில் அல்லது லட்சக்கணக்கில் நிரப்பிக்கொள்வோம்’ என்றார் (நேர் காணல்:சந்தானம்(60) பாளையம்கோட்டை)இச்சூழலுக்கு நடுவில் மள்ளர்களுக்கும் தேவர்களுக்கும் தகராறுகள் அதிகரித்துக் கொண்டிருந்தன. மேலும், தேவர்கள், புதுப்பண்ணையார்களின் பெண்களிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட னர் (நேர்காணல்: கணேசன், வ.64, சிவந்திப் பட்டி, 29.06.05). மள்ளர்-தேவர்களுக்கிடையே அவ்வப்போது மூண்ட சிறிய வாய்த்தகராறுகளால் மள்ளர்கள் தம் வசிப்பிடத்திலிருந்து ஆதிக்கச்சாதியினர் வசிக்குமிடத்திற்கு செல்வது தடைபட்டது. இதனால் புதுப்பண்ணையார்களிடம் விவசாய வேலை செய்து வந்த சொற்ப அளவிலான மள்ளர்களும் அவர்களிடம் வேலைக்குச் செல்வது முற்றாக நின்றுபோனது. மேலும் தேவர்கள் பண்ணையார்களின் வீடுகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பதால் அவ்வப்போது காவல்துறை சோதனை தேவர்களின் வசிப்பிடத்தில் (பண்ணையார்கள் முன்னர் வசித்த இடம்) நடைபெற்றது.காவல்துறையினர் இவ்விடத்திற்கு வருவதற்காக புதுப் பண்ணையார்களின் வசிப்பிடத்தினை கடந்து செல்வதால், இச்சோதனை அவர்களின் வாழ்வையும் கடுமையாக பாதித்தது. இந்நிலையில் புதுப்பண்ணையாளர்களின் வாரிசுகள், ஏற்கனவே நகரங்களில் உணவுவிடுதி தொழில் நடத்திவரும் ரெட்டியார்களுடன் இணைந்து தொழில் செய்ய சிவந்திப்பட்டியை விட்டு வெளியேறி விட்டனர். தம் வாரிசுகள் வருமானம் ஈட்டுவதால் புதுப்பண்ணையார்கள் பலரும் தங்களின் நிலங்களை 1980களில் விற்கத் தொடங்கினர். ஓரளவுக்கு பொருளாதாரத்தை வைத்திருந்த மள்ளர்களே புதுப் பண்ணையார்களிடமிருந்து நிலம் வாங்கினர்.1970களின் இறுதியில் தொடங்கி 1980களின் ஆரம்பம்வரை மள்ளரது போராட்டத்தினால் சிவந்திப்பட்டி நிலவுடைமை உறவில் ஏற்பட்ட மாற்றம் அங்கு புதுப் பண்ணையார்களின் பொருளாதார ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. குறைவான எண்ணிக்கையில் வசித்து வந்த பண்ணையார், புதுப் பண்ணையார்களின் நிலங்கள் அதிக எண்ணிக்கையில் வசித்துவரும் மள்ளர்களால் வாங்கப்பட்டன. இது, மேலும் ஒரு சாதி மற்றொரு சாதியின் மீது பொருளாதார ஆதிக்கம் செலுத்தும் நிலையையோ அல்லது ஒரு சாதி மற்றொரு சாதியை சார்ந்து வாழ வேண்டிய நிலையையோ முற்றிலுமாக அழித்து விட்டது. இதனால் சிவந்திப் பட்டியின் நிலவுடைமைக் கட்டமைப்பு உடைந்து நொறுங்கியது எனலாம்.அரசியல் சூழ்ச்சியும் படுகொலையும்பொருளாதார விடுதலையடைந்த மள்ளர்கள் பண்பாட்டு விடுதலையை எட்டத் தொடங்கினர். கல்வி கற்ற வளர்மதி சங்கத்தினர் அப்போது தமிழகத்தில் உச்சத்திலிருந்த தமிழர் அடையாள அரசியலை உள்வாங்கியிருந்தனர். இந்த இளைஞர்கள் தமிழர் பண்பாட்டை தங்கள் கிராமங்களில் கொண்டாட முடிவு செய்தனர்.தமிழர் திருநாளான பொங்கல் திருநாள், உழவர் திருநாள், திருவள்ளுவர் திருநாள் ஆகிய மூன்றுநாட்களிலும் திருவள்ளுவரின் அகராதிகளிலிருந்து ஏதாவதொரு தலைப்பில் கருத்துரை, சமூகம்-அரசியல் தொடர்பான பட்டிமன்றம், உழவர் திருநாளன்று வேளாண்துறை சார்பில் அலுவலர்களை அழைத்து கருத்துரை, போர்முறைகள், விளையாட்டுப் போட்டிகள் போன்றவைகளை 1985 ஆண்டு முதன்முதலில் கொண்டாடினர் (சு. பெரியசாமி, தலைவர் விழாக்குழு, விழா அழைப்பிதழ், 1985). ‘தேர்தலில் அரசியலாளர்களின் நடைமுறையால் மக்கள் மனநிலை சீரழிகிறா? சீரடைகிறதா?’ என்ற பட்டி மன்றம், ‘வள்ளுவரின் வாழ்க்கை நெறி’, ‘’வள்ளுவரின் பார்வையில் உழவர்’’ ஆகிய தலைப்புகளில் சிறப்புரை நிகழ்த்தப்பட்டதானது, வளர்மதி சங்கத்தினர் தமிழ்பற்று மற்றும் அரசியல் ஆர்வத்துடன் இருந்திருக்கின்றனர் என்பதை எடுத்துரைக்கிறது. ஆனால் இத்தகையதொரு விழா தேவர்களால் கொண்டாடப்படவில்லை என்பது இங்கு கவனத்திற்கொள்ள வேண்டும்.இம்மாற்றங்களுக்கு நடுவே, அதாவது 1980களின் நடுப்பகுதியில், பஞ்சாயத்து களுக்கான தேர்தல் தமிழகத்தில் நடத்து வதற்கான அறிவிப்பு வெளியானது. அரசியல் நிலைப்பாட்டில் தேவர்கள் தி.மு.க.வோடும், மள்ளர்கள் காங்கிரசோடும் இணைந்திருந்தனர். சிவந்திப்பட்டியில் இதுவரை பஞ்சாயத்து தலைவர்களாக பண்ணையார்கள்தான் இருந்திருக்கின்றனர். ஆனால் தற்போது அங்கு பண்ணையார்களும் இல்லை, புதுப்பண்ணையார்களும் பொருளாதார ஆதிக்கத்தினை இழந்துவிட்டனர். ஆனால் பொருளாதாரப் பலம் படைத்தவர்களாக மள்ளர்களும் தேவர்களும் இருக்கின்றனர். மள்ளர்களின் பொருளாதார பண்பாட்டு விடுதலைகளுக்கிடையே அச்சமுகத்தினரிடம் தேர்தலில் பங்கேற்பதா? வேண்டாமா? என்று விவாதித்தனர்.தற்போதைய சூழலில் அரசியல் போராட்டத்தில், குறிப்பாக சிவந்திப்பட்டி பஞ்சாயத்து தேர்தலில் பங்கேற்க வேண்டாம் என்றே மள்ளர்கள் முடிவு செய்தனர். அப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருந்த சமூக-பண்பாட்டு போராட்டமே அவர்களை இம்முடிவுக்கு இட்டுச் சென்றது. ஆனால் அவ்வூர் மக்களுக்காக தன் வாழ்வினை அர்ப்பணித்து வந்த முத்தையா என்பவர் தான் போட்டியில் பங்கேற்பதாக தெரிவித்தபோது அதை மள்ளர்கள் ஆதரிக்கவில்லை. இதனால் மனமுடைந்த அவர் அவ்வூரைவிட்டே வெளியேறிவிட்டார். (இன்றுவரை அவர் எங்கு வசிக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை).இதற்கிடையில் மள்ளர்களும் தேவர்களும் தங்களுக்குள் ஓர் எழுதப்படாத உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டனர். அதன்படி, மள்ளர்கள் அதிகமாக வசிக்கும் முத்தூர் பஞ்சாயத்தில் அவர்கள் போட்டியிடுவது என்பது முடிவானது. சிவந்திப்பட்டியில் வசிக்கும் மள்ளர்கள் பெரும்பான்மையானோர் முத்தூர் பஞ்சாயத்திலேயே இணைக்கப்பட்டிருந்ததே இவ்வுடன்பாட்டிற்கு காரணமாக அமைந்தது. தேவர்கள் சிவந்திப்பட்டி பஞ்சாயத்தில் குறைந்த எண்ணிக்கையில் இருந்தபோதிலும் அப்பஞ்சாயத்தில் அவர்கள் போட்டியின்றியே வெற்றிபெற விரும்பினர். இத்தேர்தலில் பங்கேற்பதற்கு மனுதாக்கல் செய்ய வந்த பண்ணையார் தேவர்களின் அச்சுறுத்தலுக்குப் பயந்து திரும்பிச் சென்றுவிட்டார். (நேர்காணல் ராமசாமி, வ.67). இதனால் சிவந்திப்பட்டி பஞ்சாயத்தில் போட்டியின்றியே கோட்டியப்பன் (தேவர்) தேர்வு செய்யப்பட்டார்.முத்தூர் பஞ்சாயத்திற்கு, வளர்மதி சங்கத்திற்கு தலைவராக இருந்த பரமானந்தம் (25) போட்டியிட்டார். அப்போது தலித்துகளிடத்தில் எழுச்சி பெற்றுக் கொண்டிருந்த ஜான் பாண்டியன் பரமானந்தத்திற்கு ஆதரவு தெரிவித்தார். இங்கு தேவர்சாதியினைச் சேர்ந்த பூலையா என்பவரும் மள்ளர்-தேவர்களின் எழுதப்படாத உடன்பாட்டை மீறி போட்டியிட்டார். இப்பஞ்சாயத்தில் மள்ளர்களே எண்ணிக்கையில் அதிகமாக வசிப்பதால், வாக்களிக்கும் தினத்தன்று பரமானந்தம் வெற்றி பெற்றுவிட்டார் என்றதொரு வதந்தி மதியவேளையில் பரவியது. அப்போது நூற்றுக்கணக்கான மள்ளர்கள் வாக்களிக்காதிருந்தனர். இதனால் மள்ளர் இளைஞர்கள் வாக்களிக்காமலிருந்த தங்கள் மக்களை வாக்களிக்கச் செல்லுமாறு வேண்டினர். தேவர்கள் வசிக்கும் கொடிக்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு தேவர்கள் அவர்களை வாக்களிக்கவிடாது தடுத்ததோடு மள்ளர்களின் மிதிவண்டிகளையும் அடித்து நொறுக்கினர்.ஆத்திரமடைந்த மள்ளர்கள் எதிர்தாக்குதல் தொடுக்கத் தொடங்கினர். இம்மோதல் மள்ளர்களை வாக்களிக்க வந்த நோக்கத்திலிருந்து திசை திருப்பியது. இறுதியில் அவர்கள் வாக்களிக்க முடியாமற்போகவே, தேவர் சாதி பூலையாவே வெற்றி பெற்றார். இத்தேர்தலினால் ஏற்பட்ட மோதலால் மள்ளர்களே அதிகம் பாதிப்புக்குள்ளாயினர். பாதிக்கப்பட்ட மள்ளர்களை தலித் தலைவரான இளையபெருமாள் வந்து பார்த்து விட்டு, அரசு அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார் (மருதமலர், 1986,மே-ஜூன்). இம்மோதலுக்குப் பின் மள்ளர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி நலனை முன்னிட்டு டாக்டர் அம்பேத்கர் மழலைப்பள்ளியை 07.06.1987 அன்று தொடங்கினர். காரணம், அவர்கள் ஏற்கனவே படித்து வந்த பள்ளி சாதி இந்துக்களின் வசிப்பிடத்தில் அமைந்திருந்ததால் தங்களின் குழந்தைகளுக்கு அவர்களால் அச்சுறுத்தல், தகராறுகள் ஏற்படக்கூடும் என்ற எச்சரிக்கை மள்ளர்களை தமக்கென தனி பள்ளிக்கூடம் அமைக்க வித்திட்டது.பஞ்சாயத்து தேர்தலில் தேவர்களால் ஏற்படுத்தப்பட்ட மோதலானது இது வரை நடைபெற்று வந்த வாய்த்தகராறுகளை அந்நிலையிலிருந்து, தேவர் களின் தாக்குதல் - மள்ளர்களின் எதிர் தாக்குதல் என்ற வன்முறை நிலைக்கு மாற்றிவிட்டது. மோதல் நடைபெற்ற சில மாதங்களுக்குள் தேவர் சாதியைச் சேர்ந்த உச்சிமாளி மள்ளர்களின் விளை நிலத்தில் திருடினார். காவல் காத்துக் கொண்டிருந்த மள்ளர்கள் திருடனை அடித்து கொன்றுவிட்டனர். இதுவே தேவர்களின் திருட்டு நடவடிக்கைக்கு எதிராக முதன்முறையாக மள்ளர்கள் எடுத்த ‘வன்முறை’ நடவடிக்கை ஆகும். இக்கொலை வழக்கில் 50க்கும் மேற்பட்ட மள்ளர்கள் கைது செய்யப் பட்டனர் (நேர்காணல்). இவர்களில் காவல்துறையின் பலத்த தாக்குதலுக்கு இலக்கானோர் ஒருசில வருடங்களி லேயே இறந்துவிட்டனர்.இக்காலங்களில் தமிழக அளவில் உருவாகிக் கொண்டிருந்த சாதிச் சங்கங்களில் மள்ளர்கள், தேவர்கள் முறையே, தேவேந்திரகுல வேளாளர் சங்கத்திலும், ‘முக்குலத்தோர்’ சங்கத்திலும் இணையத் தொடங்கினர். இதனால் இவர்கள் தங்களின் சாதிப் பெயர்களை தேவேந்திரர், தேவர் (Manikumar,K.A. 1997) என்று அழைக்கத் தொடங்கினர். தேவேந்திரர்களுக்கு இம்மானுவேல் சேகரனும், தேவர்களுக்கு முத்து ராமலிங்கத்தேவரும் குறியீடாயினர். அ.தி.மு.க. அரசு 1993ம் ஆண்டு முதல் முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாளை ‘தேவர் குருபூசை’ (தற்போது தேவர் ஜெயந்தியாகிவிட்டது) என்று அரசு விழாவாக அறிவித்ததில் தொடங்கி அச்சாதியினருக்கென்று அதிக முக்கியத்துவம் கொடுத்தது (Pandian, M.S.S., 2000, p.503). இது தேவர்களின் ஆதிக்கத்திற்கு மேலும் வலு சேர்ந்தது. ஆனால், இத்தகைய அரசியல் ஆதரவு மள்ளர்களுக்கு கிடைத்திருக்கவில்லை.தேவர்களின் கொலைவெறியும் - மள்ளர்களின் எதிர்படுகொலையும்இச்சூழலில் பருவமழை பொய்த்தல், விவசாயத்தில் நட்டம் போன்ற காரணங்களால் மள்ளர்களில் பல இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபடாமல் கட்டிடம் கட்டும் வேலையிலும், பெண்கள் பீடி சுற்றுவதிலும் ஈடுபடலாயினர். மள்ளளர்கள் கட்டிடத் தொழில் ஈடுபடுவதற்கு காரணம், அச்சமயத்தில் சிவந்திப்பட்டியிலிருந்து சுமார் 8கி.மீ. தூரத்தில் தியாகராஜர் நகர் என்ற நடுத்தரவர்க்க குடியிருப்பு உருவாகிக் கொண்டிருந்தது. மள்ளர் சமுகத்தினைச் சேர்ந்த சபாபதி என்ற இளைஞர் கட்டிட ஒப்பந்த வேலைகள் மூலம் மள்ளர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்து வந்தார். கட்டிடம், பீடி சுற்றும் தொழிலானது விவசாயத் தினை போலல்லாமல், அவர்களுக்கு வாராவாரம் பணம் கொடுத்தது.ஆனால் தேவர்கள் சாராய விற்பனை, வட்டித்தொழிலையே செய்து வந்தனர். இந்நிலையில் இரண்டு சாதியினருக்கும் இடையேயான மோதலும் வலுத்துக் கொண்டேயிருந்தது. மேலும் 1990 களின் ஆரம்பத்தில் தென்தமிழகத்தில் மள்ளர்கள் தங்கள் விடுதலைக்கான போராட்டத்தினை நடத்திக் கொண்டிருந்தனர். ஆனால் இவர்களின் முயற்சிகளை ஒருபுறம் ஒடுக்கிய ஆளும் அரசுகள் மறுபுறம் தேவர்களுக்கு ஆதரவான பல செயல்களைச் செய்தது. புறநிலையாக நடைபெற்றுக் கொண்டிருந்த மள்ளர்களின் எழுச்சியும் தேவர்களின் ஆதிக்கமும், சிவந்திப்பட்டியில் அக நிலையாக இருந்துவந்த மள்ளர்-தேவர் மோதலை பெரும் முரணாக மாற்றும் வினையூக்கியானது.சிவந்திப்பட்டியிலிருந்து திருநெல்வேலிக்கு சென்றுவந்த பேருந்துகள் குறித்து ஏற்கனவே விவரித்திருந்தோம். பேருந்தில் பயணம் செய்கிற பொழுது மள்ளர்களும் தேவர்களும் உரச நேரிடும் சமயங்களில் தாக்கிக் கொண்டனர். சிவந்திப்பட்டிக்கும் முத்தூருக்குமிடையில் (சுமார் 2 கி.மீ.) மக்கள் வசிப்பிடங்கள் இல்லை. தேவர்கள் வசிப்பிடமான முத்தூருக்கும் ராஜகோபாலபுரம் என்ற ஊருக்கும் இடையில் (5கி.மீ) காட்டுப் பகுதியாகும். ராஜகோபாலபுரம் மள்ளர் வசிக்கும் பகுதியாகும். பேருந்தில் ஏற்படும் வாய்த்தகராறுகளுக்கு தேவர்கள் முத்தூரிலும், மள்ளர்கள் ராஜ கோபாலபுரத்திலும் பேருந்தை நிறுத்தி மாறிமாறித் தாக்கிக் கொண்டனர். இது வரை சிவந்திப்பட்டிக்குள் நடைபெற்று வந்த போராட்டம் அவ்வூருக்கு வெளியே நடைபெறத் தொடங்கியது.மேற்குறிப்பட்ட ஊர்களில் ஒருசாதியினர் மற்றொரு சாதியினரை தாக்கும் போது அவ்வூரிலுள்ள மக்கள் தங்கள் சாதி இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து நேரடியாக களத்தில் இறங்கவில்லை. இருப்பினும், மோதலில் ஈடுபட்ட இளைஞர்கள் தங்கள் சாதி மக்கள் வசிக்குமிடத்தில் பிறரைத் தாக்குவது தமக்கு பாதுகாப்பானதாகக் கருதினர். இம்மோதலில் சபாபதி மள்ளர் இளைஞர்களை ஒருங்கிணைத்து தேவர்களை எதிர்த்து தாக்கி னார். முத்தூருக்கும் ராஜகோபாலபுரத்திற்குமிடையில், அதாவது, இரு பிரிவினருக்கும் ஆதிக்கமற்ற பகுதியான காட்டுப்பகுதியில் ஒருமுறை மள்ளர்கள் பேருந்தை நிறுத்தி தேவர்களை கடுமையாகத் தாக்கிவிட்டனர். இது தொடர்பாக காவல்துறை இருதரப்பையும் அழைத்து சமாதானமாக பேசிமுடித்த பின்னர் அதில் திருப்தியடையாத தேவர்கள் மள்ளர்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.இப்பேச்சுவார்த்தையில் தங்கள் முதியோர்கள் பங்கேற்பதற்கு மள்ளர் இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் அவர்கள் 1996 ஜூனில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் பங்கேற்றனர். மள்ளர், தேவர்கள் தவிர இதர ஆதிக்கச் சாதியினரும் பங்கேற்றனர். பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் சபாபதி தியாகராஜநகரில் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி சிவந்திப் பட்டியை வந்தடைந்தது. உடனடியாக சமாதானக் கூட்டம் ரத்து செய்யப் பட்டது. சபாபதி கொலை செய்யப் பட்ட செய்தியால் கொதிப்படைந்த மள்ளர்கள் அருவாள், கம்பு, கத்தி போன்ற ஆயுதங்களுடன் தேவர்களின் வசிப்பிடத்திற்குச் சென்றனர். ஆனால் அங்கு ஒருசில முதியவர்களைத் தவிர யாரும் இல்லாததால், சபாபதி படுகொலை திட்டமிட்டே தேவர்களால் நடத்தப்பட்டுள்ளது என்பதனை புரிந்து கொண்ட மள்ளர்கள் ஆத்திரத்தில் சுமார் 50வயதான ஆறுமுகத்தேவர் என்பவரை கொலை செய்தனர்.இச்சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திருநெல்வேலியிலிருந்து ஒரு பேருந்து சிவந்திப்பட்டிக்கு வந்து கொண்டிருந்தது. ஊர் எல்லையிலேயே பேருந்து நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். மோதலின் சூழலினை கணக்கில் கொண்டு பயணிகள் தத்தமது சாதி சாதியாகப் பிரிந்து கூட்டம் கூட்டமாகச் சென்றனர். ஒவ்வொருவரும் தமது சாதி உறுப்பினர்களோடு செல்வது பாதுகாப்பானதாகவும், பலமானதாகவும் கருதியே அவ்வாறு கூட்டம் கூட்டமாக பிரிந்தனர். மள்ளர்கள் கூட்டமாகச் செல்வதற்காகத் தயாரானபோது, மனநிலை சரியில்லாத சுமார் 24 வயதான ராசையா என்பவர் மட்டும், ‘என்னை யாரும் ஒன்றும் செய்ய மாட்டார்கள்’ (நேர்காணல்) என்று கூறி விட்டு அவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.இந்நிலையில் மள்ளர்களால் தேவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட செய்தியறிந்த தேவர்கள் சமாதானக் கூட்டத்திற்கு வந்திருந்த 55வயதான ராசையா என்பவரையும், மனநிலை சரியில்லாத ராசையாவையும் அடுத்தடுத்து படு கொலை செய்தனர். இளம் வயது ராசையா மனநலம் சரியில்லாதவர் என்பது தேவர்களுக்கு தெரியாமலிருக்க வாய்ப்பே இல்லை. சாதிய மோதல் ஏற்பட்டால் ஒரு சாதியினரை மற்ற சாதியினர் கொலை செய்யும் பொழுது அவர் வயதானவரா? ஊனமுற்றவரா? மனநிலை பாதிக்கப்பட்டவரா? என்றெல்லாம் பார்ப்பதில்லை. பைத்தியமாக இருந்தாலும் அவர் தனக்கு எதிரான சாதியின் உறுப்பினரென்றால் படுகொலை செய்யப்படுவதிலிருந்து தப்பமுடியாது என்பதை ராசையா படுகொலை விளக்குகிறது. ஊனமுற்றவர் என்றாலும் அவர் என்ன சாதியைச் சேர்ந்தவர் என்பதுதான் மோதலின்போது வெளிப்படுகிறது. இப்படுகொலைகளுக்குப் பின்னர் சிவந்திப்பட்டியின் எல்லையில் புறக்காவல் நிலையம் ஏற்படுத்தப்பட்டு அங்கே பேருந்து நிறுத்தப்பட்டு விட்டது. ஊரில் எல்லை என்பது தேவர்கள் உட்பட இதர ஆதிக்கச் சாதியினருக்கு மிகஅருகாமையில் உள்ள பகுதியாகும்.சபாபதி படுகொலையில் முக்கியப்பங்கு வகித்ததாகக் கருதப்பட்ட சிவந்திப்பட்டி பஞ்சாயத்து தலைவர் கோட்டியப்பனையும் (தேவர்) அவரது தம்பி தங்கபாண்டியனையும் மள்ளர்கள் கொலை செய்ய முடிவுசெய்தனர். இந் நிலையில் கோட்டியப்பன் கொலை செய்யப்படவே மள்ளர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் கோட்டியப்பனை கொலை செய்தது தேவர்கள் என்ற கருத்தும் நிலவுகிறது. தங்கபாண்டியனை கொல்ல மள்ளர்கள் மூன்று முறை முயற்சி மேற்கொண்டனர் (தினமலர், 29.07.01, 05.08.01). இதில் ஒரு முறை நடந்த முயற்சியில் தங்கபாண்டியனின் ஆதரவாளர் கோட்டியப்பன் இறந்துவிட்டார். ஆனால் தங்கபாண்டியனை மள்ளர்களால் கொல்ல முடியவில்லை. அதன்பின் மீண்டும் மள்ளர்கள் எந்த முயற்சி யும் எடுத்ததாகத் தெரியவில்லை.இன்றைய சிவந்திப்பட்டிநாம் இதுவரை சிவந்திப்பட்டியின் ஒரு நூற்றாண்டு கால சமூக, பொருளாதார, பண்பாட்டு, அரசியல் மாற்றங்களைக் கண்டோம். தற்போது அங்கு வசிக்கும் மக்களின் சமூக, பொருளாதார, பண்பாட்டு மற்றும் அரசியல் நிலை என்ன என்பதனைக் காணலாம். சிவந்திப் பட்டியில் தற்போது மள்ளர், பறையர், கோனார், சில புதுப்பண்ணையார் போன்ற சாதியினர் வசித்து வருகின்றனர். நிலவுடைமைக் கட்டமைப்பில் இச்சாதிகளிடையே இருந்து வந்த சமூக உறவு முற்றிலும் உடைந்து நொறுங்கி விட்டது. குறிப்பாக நாம் கட்டுரை முழுவதும் கண்ட மள்ளர்-தேவர்-பண்ணையார், புதுப்பண்ணையார் ஆகியோருக்கிடையே தற்போது எவ்வித உறவுமில்லை.சிவந்திப்பட்டி என்ற பெயர் பெயரளவில்தான் உள்ளது. இங்கு வசிக்கும் அனைத்துச் சாதிகளுக்குமிடையேயான சமூக உறவினைவிட வெளிக்கிராமங்களில் உள்ள அந்தந்தச் சாதியினரோடுதான் உறவுடன் இருக்கின்றனர். அதாவது, ஒரு மள்ளருக்கு தேவர், கோனார் போன்ற சாதிகளுடன் இருக்கின்ற உறவினைவிட, வெளிக் கிராமங்களிலுள்ள மள்ளருடனேயே தான் வலுவான உறவு இருக்கிறது. தேவர்களுக்கும் கோனார்களுக்குமிடையே நெருக்கமான உறவு இல்லை. ஆனால் 1990களில் மள்ளர்களுக்கெதிரான தேவர்களின் ஒடுக்குமுறையின் போது இவர்கள் தேவர்களுக்கு ஆதரவான நிலைபாட்டுடனேயே இருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.வெளியூரிலிருந்து ஒருவர் தன் உறவினரைப் பார்க்க வேண்டுமென்றாலோ அல்லது இங்குள்ள சாதிகளைக் குறித்து ஆய்வு செய்ய விரும்பினாலோ, தன் உறவுக்காரரை அல்லது தான் ஆய்வு செய்ய விரும்பும் சாதியினரை அடையாளம் காண்பதானது மிக எளிது. அதாவது, அன்று ஒரு சாதியின் பெயரைக் குறிப்பிட்டு அவர்கள் வசிக்கின்ற தெருவுக்கு எவ்வாறு போக வேண்டும் என்று கேட்கவேண்டும். ஆனால், இன்று ஒவ்வொரு சாதியும் தனக்காக தேர்வு செய்து வைத்திருக்கும் வண்ணங்களைத் தெரிந்திருந்தாலே போதுமானது. அனைத்துச் சாதியினரும் அவர்களின் தெரு நுழைவாயிலில் அவர்களுக்கான வண்ணங்களைத் தீட்டியுள்ளனர். மள்ளர்கள், தேவர்கள் முறையே பச்சை-சிவப்பினையும், மஞ்சள் நிறத்தைனயும் தங்களுக்கான வண்ணமாகக் கொண்டிருக்கின்றனர். அன்று குடிசைகளாக இருந்த மள்ளர் தேவர்களின் வீடுகள் இன்று நவீனவீடுகளாகி விட்டன. பண்ணையார்களின் வீடுகள் சிதைந்து காணப்படுகின்றன. சில பண்ணையார்களின் வீடுகளில் தேவர்கள் குடியிருந்து வருகின்றனர்.1980களில் பள்ளர்கள் தொடங்கிய பொங்கல் விழாவினை 1990களில் மறவர்களும் கொண்டாட ஆரம்பித்தனர். ஆனால் இவ்விழா மள்ளர்களைப் போல் தமிழ் பண்பாட்டைக் கொண்டாடாமல் அதிலிருந்து மாறுபட்டிருக்கிறது. மள்ளர்களின் பொங்கல் விழாவிலும் முன்னர் போன்றுதான் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படினும் அன்று மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றது போல் இன்று இல்லை. அவர்களை தொலைக்காட்சிப் பெட்டியில் அரங்கேற்றப்படும் சினிமா நட்சத்திரங்களின் கவர்ச்சிகள் கவர்ந்திழுத்துக் கொண்டிருக்கிறது (நேர் காணல்:பொற்செழியன்).இச்சாதிகளின் திருமண உறவுகளிலும் குறிப்படத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. அன்று ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் இரவு நேரங்களில் நடந்தன; இன்று பகல் நேரங்களில் தனித்தனியாக நடைபெறுகிறது. திருமணம் ஒரு ஆண் பெண் இணைவு என்பதனை விடவும் சம்பந்தபட்டவரின் சாதி, பொருளாதார வலுவை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது.மள்ளர்களில், மணப்பெண்ணுக்கு பீடி சுற்றத் தெரிந்திருப்பதோடு குறைந்தபட்சம் 10 அல்லது +2 படித்திருக்கவேண்டும். மாப்பிளை விவசாயக் குடும்பமாக இருக்கக்கூடாது, ஆனால் தினக்கூலியாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளத்தயராக இருக்கின்றனர் பெண்வீட்டார். தேவர்களில் பெண் வீட்டார், மாப்பிளை இடைஞ்சல் தரக்கூடிய எத்தொழிலையும் பார்க்கக்கூடாது என்றும், மாப்பிளை வீட்டார் பெண் பீடி சுற்றத் தெரிந்தவளாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். பட்டம் அல்லது அதற்கு மேல் படித்தவர்கள் தனக்கு இணையாகக் கற்றவர்களின் துணையையே விரும்புகின்றனர். இவர்களின் உணவிலும் பல மாற்றங்கள் நடந்துவிட்டன. இம்மாற்றத்தில் மட்டும் அனைத்துச் சாதி முதியவர்களும் ஒரே கருத்தினை வெளிப்படுத்தினர். அதாவது, ‘அன்று எங்கள் ஊரில் விளையும் காய்களை சமைக்கும்போதே நல்ல மணமும், சாப்பிடும்போது ருசியும் மிகநன்றாக அதேசமயம் மிகச் சத்தாக இருந்தது. ஆனால் இன்று இங்கு விளையும் காய்களின் ருசி மட்டரகமாக உள்ளது’ என்றனர். இங்குள்ள இளைஞர்கள் உணவில் நடந்த சத்து, ருசி போன்ற மாற்றங்களை அறிந்திருக்கவில்லை.மள்ளர்கள் தற்போது விவசாயம், அரசு, தனியார் நிறுவனங்களில் அலுவலகப் பணிகள், கட்டிடம் கட்டுவது மூலம் பொருளீட்டுகின்றனர். மள்ளர்கள் மேலும் நிலம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை. இது நிலத்தின் மீதான வெறுப்பல்ல, மாறாக விவசாயத்தில் ஏற்பட்டுவரும் நட்டமாகும். உள்ள நிலத்தைப் பராமரித்தாலே போதுமானது என்று நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டனர். தேவர்கள் சாராயம் வடித்தல், வட்டி கொடுத்தல் போன்றவற்றிலிருந்து விலகிவிட்டனர். சில தேவர்கள் திருட்டுத்தொழிலில் ஈடுபட்டு வருவதும் தொடர்கிறது (தினத்தந்தி, 20.06.2006, பக்.15, நெல்லை பதிப்பு). இச்சமூகத்தின் பல இளைஞர்கள் வெளியூர்களில் தின்பண்டங்கள் விற்பனை செய்தல் மற்றும் கூலித்தொழிலிலும் ஈடுபடுகின்றனர். இது அம்மக்களிடத்தில் நடைபெற்றுள்ள மிகப்பெரும் மாற்றமாகும்.ஒருசில புதுப்பண்ணையார்கள் தங்களின் நிலங்களில் தாங்களே உழைப்பாளர்களாக இருந்து உற்பத்தி செய்கின்றனர். மேலும் தம் வாரிசுகள் வெளியூர்களிலிருந்து அனுப்பும் பணத்தில் மூலம் வாழ்க்கை நடத்துகின்றனர். பஞ்சாயத்து அதிகாரத்தினை பொறுத்தமட்டிலும் சிவந்திப்பட்டியில் தேவர் சாதியைச் சேர்ந்தவரும், முத்தூரில் 1986ல் தோல்வியுறச் செய்யப்பட்ட பரமானந்தமும் தற்போது தலைவராக இருக்கின்றனர். எனவே, சிவந்திப்பட்டியில் ஒரு சாதி மற்றொரு சாதியினை சமூகம், பொருளாதாரம், பண்பாடு, அரசியல் ஆகிவற்றில் ஆதிக்கம் செலுத்தவில்லை என்று கூறலாம். ஆனால் 1990களின் மோதலின் போது நிறுத்தப்பட்ட பேருந்து இன்றுவரை மீண்டும் தனது பழைய நிறுத்தத்திற்குச் (மள்ளர்கள் வசிப்பிடம் அருகே) செல்லவில்லை. இதற்கு அரசு சட்டம்-ஒழுங்கு என்று கூறிவருகிறது ( திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலர் கடிதம், எண்.52917/உ1/99).பேருந்து பழைய நிறுத்தம் வரை வந்து செல்ல வேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கு பல ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டது. இப்பிரச்சினைக்காக சி.பி.எம். கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. வழக்கும் தொடுத்தது. இதே கோரிக்கையினை முன்வைத்து சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்கும் போரட்டத்தை மள்ளர்கள் அறிவித்தனர் (The Hindu, 25.04.2006). ஆனாலும் எவ்வித பலனும் ஏற்படவில்லை. இந்நிலையில் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதி மன்றம் (மதுரை) பேருந்து வசதி அளிக்கவும், பிரச்னை ஏற்படாமல் தடுக்கவும் காவல் துறை பாதுகாப்பு பணியில் ஈடுபடவும் உத்தரவிட்டது. இவ்வுத்தரவு வழக்கு தொடரப்பட்டு பதினொரு ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியிடப்பட்டது என்பது கவனத்திற்கொள்ள வேண்டும். தலித்துகளின் விடுதலையில் நீதிமன்றங்களின் பொறுப்பினை விளக்குவதற்கு இது சிறந்த சான்றாக விளங்குகிறது.போராட்டம் ஓர் விவாதம்மள்ளர்களின் போராட்டம் ஒரு அமைப்பின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்ட மக்களோடு திட்டமிட்ட இலக்கினைக் கொண்டிருந்ததா? அல்லது அவ்வப்போது ஆதிக்கச் சாதியினருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட எதிர்தாக்குதலா? 1940 களில் தேவர்களின் திருட்டு நடவடிக்கைக்கு எதிராகவும், அருவாக்கட்டு பறிக்கப்பட்டதை எதிர்த்தும் நடந்தவை மள்ளர்களது முக்கியமான போராட்டங்களாகும். சாதி இந்துக்களின் ஒடுக்கு முறைகளால் விளைந்த இந்த எதிர் நடவடிக்கையில் மள்ளர்கள் ஒருங்கிணைந்ததானது திட்டமிட்டு நடைபெறாமல் திடீரென உருவானதாகும். சாதி இந்துக்கள் எதனால் தங்களை ஒடுக்குகிறார்களோ, எதனை அபகரிக்கிறார்களோ அதிலிருந்து பாதுகாத்தல் அபகரிக்கப்பட்டதை மீட்டெடுத்தல் இவையே இலக்காக இருந்தது. ஆனால் இப்போராட்டத்தால் உருவான கூட்டு உழைப்புமுறை மள்ளர்களால் விரிவான விவாதத்திற்குப் பின்னர் உருவானதாகும்.வளர்மதி சங்கத்தின் தொண்டும் தமிழ்ப்பண்பாட்டை கொண்டாடுதலும் திட்டமிட்டே நடத்தப்பட்டன. தேவர் இளைஞர்களுக்கெதிராக மள்ளர் இளைஞர்களின் வன்முறையானது, தேவர்களின் திட்டமிட்ட வன்முறையால்தான் உருவானது. சபாபதி கொலையானது தேவர்களால் முன்கூட்டியே திட்டமிட்டே நடத்தப்பட்டிருக்கிறது. இவர்களின் குரூர உளவியலை மள்ளர் இளைஞர்கள் தமது போராட்ட அனுபவம் மூலம் உணர்ந்திருக்கின்றனர்; ஆனால் முதியவர்கள் உணர்ந்திருக்கவில்லை. தேவர் இளைஞரது தொடர் ஒடுக்குமுறைக்காளான மள்ளர் இளைஞர்களின் இலக்கு யாருக்கும் ஆதரவற்ற பகுதியில் தேவர் இளைஞர்களைத் தாக்குவதாகும்; உண்மையில் இதில் வெற்றி கண்டனர். மள்ளர் போராட்டம் சிவந்திப்பட்டிக்குள்ளேயே பண்ணையார், புதுப்பண்ணையார், தேவர் என மூன்று ஒடுக்குமுறையாளர்களையும் எதிர்த்து நடைபெற்றது. விளைவு, சமூகப் பொருளாதார அரசியல் பண்பாட்டு ஒடுக்குமுறையையும் ஏற்றத்தாழ்வையும் கொண்ட செங்குத்தான கிராமக் கட்டமைப்பு சிதைவுக்குள்ளானது.சிவந்திப்பட்டி போராட்டம் எழுப்பும் கேள்வி, தலித்துகள் ஒடுக்குமுறைக்கு எதிராக போராட வேண்டிய களம் எது? அங்கு மள்ளர்கள் சாதி இந்துக்களால் ஒடுக்கப்பட்டபோது அவர்கள் சிவந்திப்பட்டிக்கு வெளியே ஒரு பொது இடத்தில் போராட்டம் நடத்தினால் என்ன பலன் கிடைத்திருக்கும்? யாரால் எங்கே தலித்துகள் ஒடுக்கப்படுகிறார்களோ அங்கேயே ஒடுக்குமுறையாளர் களை எதிர்த்துப் போராடுவதுதான் சரியான களமாக இருக்கும். பொது இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது அல்லது அரசு எந்திரத்திடம் புகார் கொடுப்பது இவற்றினால் பலன் கிடைப்பதற்கு ஆண்டுகள் பல காத்திருக்க வேண்டும் என்பதற்கு பேருந்துக்காக அம்மக்களும் அவர்கள் சார்பில் பிறரும் நடத்திய போராட்டம் சாட்சியாக இருக்கிறது.மள்ளரது போரட்டத்தினால் விளைந்த பொருளாதாரச் சுதந்திரமே அவர்களுக்கு பண்பாட்டு விடுதலையைக் கொடுத்தது. இவ்விடுதலையால் இவர்கள் பிறர் மீது ஆதிக்கம் செலுத்தவில்லை; மாறாக, தமிழ்ப் பண்பாட்டை நோக்கி பயணிக்க ஆரம்பித்தனர். இது இன்னொருபுறத்தில் பார்ப்பனிய பண்பாடுகளைப் புறக்கணித்தலாகும். மள்ளர்கள் குடிப்பழக்கத்தை புறக்கணித்ததை பார்ப்பனியமயமாக்கல் என்று புரிந்து கொள்ளக்கூடாது. காரணம் சிவந்திப்பட்டியில் சாராய உற்பத்தியாளராக தேவர்களும் அதனை நுகர்வதன் மூலம் பொருளை இழப்பவர்களாக மள்ளர்களும் இருந்தனர். மதுவை புறக்கணித்ததன் மூலம் மள்ளர்கள் தம் பொருளாதாரத்தை வளப்படுத்திக் கொண்டனர். மற்றொரு புறம் இது தேவர்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தியது.இக்கட்டுரையில் விவாதித்த தேவர்களின் காவல் பணியானது, ஒருபுறம் நிலவுடைமையாளர்களுக்கு அடிமைப் பணியாகவும், அதேசமயம் பிறசாதியினர் மீது ஆதிக்கம் செலுத்தும் பணியாகவும் இருந்தது. விவசாய உற்பத்தியை பாதுகாத்த இப்பணியானது ஆளும் வர்க்கத்தையும் பாதுகாத்தது. எனவே, ஒரேநேரத்தில் அடிமைப்பணி, ஒரு ஆளும் வர்க்க குணாதிசயத்தோடு இருப்பது ஆகிய இருவிதப் பண்புகள் இவர்களிடம் இயங்கிக் கொண்டிருந்தன. அடிமைத்தனத்திலிருந்து விடுபட போராட முற்பட்டனரா? என்ற கேள்வி சிக்கலானதே. பொருளாதாரரீதியாக முன்னேற விரும்பிய தேவர்கள் பண்ணையார்களிடமிருந்து அதிகக் கூலியைப் பெற போராடவில்லை. மாறாக பண்ணையார்களிடம் கூலி வேலை செய்து வந்த மள்ளர்களிடம் திருடினர். பண்ணையார்களிடம் திருடியிருந்தால் அதனை ஒரு போராட்ட வடிவமாகக் கருதலாம். ஆனால் தம்மையொத்தக் கூலிகளான மள்ளர்களிடம் திருடியதானது, தேவர்களை திருடர்களாகவும், தலித்களிடம் சொத்து இருக்கக் கூடாது என்ற மநு அதர்மத்தை அமுல்படுத்தும் நபர்களாகவும் அடையாளப்படுத்துகிறது. பின்னர் குறிப்பிட்ட செயல்பாட்டில் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை.தேவர்களின் அன்றைய காவல் பணியை இன்றைய காவல்துறையின் பணியோடு ஒப்பிடலாம். பொதுவாகவே காவலர்கள் தமது உரிமைக்காகப் போராடுவதில்லை. பொருளாதாரத் தேவைக்காக ஏழை எளிய மக்களிடம் ‘லஞ்சம்’ வாங்குவதை சிவந்திப்பட்டி தேவர்களின் ‘திருட்டு’ நடவடிக்கையோடு ஒப்பிட்டால் இவ்விருவருக்கிடையே வேறுபாடு காண்பதரிது. பண்ணையார்கள், புதுப்பண்ணையார்கள், தேவர்களின் நடவடிக்கையை ஒருபோதும் எதிர்த்திருக்கவில்லை. மள்ளர்களுக்கு எதிரான கூட்டணியில் இணைந்தே செயல்பட்டனர். இதற்கு காரணமாகயிருந்திருப்பது, மள்ளர்கள் தலித்துகள் என்பதாலேயே.முடிவுசிவந்திப்பட்டி மள்ளரது போராட்டம் விரிவாகவே எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து, ‘கலவரம்’ என்ற ஊடக சித்தரிப்பு தவறானது; உண்மையில் அது சாதி இந்துக்களின் ஒடுக்கு முறைக்கு எதிரான ‘தலித் எழுச்சி’ என்பதே ஆய்வின் முடிவு. மேலும், தலித்துகளின் விடுதலை வர்க்க போராட்டத்தில் மட்டும் இல்லை. வர்க்க விடுதலையை விடவும் சமூகப் பண்பாட்டு விடுதலைக்கு தலித்துகள் அதிக விலைகொடுத்தாக வேண்டியிருக்கிறது. தலித்துகளின் போராட்டம் சம்பந்தப்பட்ட இடத்தில் அல்லாது அதற்கு வெளியே நடத்துவது பயனற்றது என்பது தெளிவு. மேலும், தலித் விடுதலைக்கான போராட்டத்தில் ‘வன்முறை’ தவிர்க்க இயலாததாகி விடுகிறது. சிவந்திப்பட்டி மள்ளரது போராட்ட அனுபவம், கிராமங்களில் ஒடுக்குமுறைக்குள்ளாகிவரும் தலித்து களுக்கு ஒரு மாதிரி என்று கூறினால் அது மிகையான மதிப்பீடு அல்ல.சான்றுகள்ARNOLD, DAVID. 1979. Dacoity and Rural Crime in Madras,1860-1940. Journal of Peasant Studies, 6.BALA,V. 2001, History of Sivanthipatti, A dissertation submitted to the MS University, Tirunelveli (Unpublished).LUDDEN, DAVID. 1989. Peasant History in South India. Delhi: Oxford University Press.PANDIAN, ANAND. 2005. Securing the Rural Citizen: The anti-Kallar Movement of 1896. The Indian Economic and Social History Review , Vol. XLII, 2005.PANDIAN, M.S.S. 2000. Dalit Assertion in Tamil Nadu: An Exploratory Note. Journal of Indian School of Political Economy, 12(3,4).MANIKUMAR, K.A. 1997. Caste Clashes in South Tamil Nadu. EPWeekly, XXXII (36).SRINIVAS, M.N. 1960. The Indian Road to Equality. EPW, XII (23,24 & 25).SRINIVAS, M.N. 1996. Village, Caste, Gender and Method - Essays in Indian Social Anthro pology. New Delhi:Oxford University Press.அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 17.கால்டுவெல். 2004. திருநெல்வேலி சரித்திரம். சென்னை: காவ்யா.கா.அ.மணிக்குமார். 2003. தென் மாவட்டச் சாதிய மோதல்கள்-1995, வல்லினம்.நல்லகண்ணு, ஆர். 1970. நிலப்பறி நடத்தியது யார்?. சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.நாயக்கர் ஆட்சிக் காலத்தில் தோன்றிய பள்ளு நூல்கள் மூலமாக மள்ளர், பள்ளராக மாறி பரவலாகியதென்று இரா. தேவ ஆசீர்வாதம், பள்ளர் அல்ல மள்ளர் ஆம் மன்னர் (1991) என்ற நூலில் நிறுவியுள்ளார். ம என்னும் ஒலி ப என தமிழ்மொழியில் மாறிட வாயப்புகள் இருப்பதைக் கூறும் சிவசண்முகம் (1996;13-16) மள்ளர் பள்ளராக மாறியிருக்க இடமுள்ளது என்கிறார். எனவே இக்கட்டுரையில் சம்பந்தப்பட்ட பட்டியல் வகுப்பின மக்கள் விரும்பும் பெயரான மள்ளர் என்றே சுட்டப்படுகின்றனர்.

மாமல்லர் ராஜராஜ சோழ தேவேந்திரர் சதய விழா

> *ராஜா ராஜா சோழதேவர் மள்ளர் மரபினர் *ஆவார். ராஜா ராஜா சோழதேவர் பற்றி > மட்டுமல்ல தமிழகத்தின் அனைத்து சேர சோழ பாண்டிய மன்னர்களும் மள்ளர் மரபினரே. > மீண்டும் மீண்டும் கூறுகிறேன் அக்காலத்தை இக்கால கண்ணாடி போட்டு > பார்க்காதீர்கள். *தேவர் என்பது பட்ட பெயர்.சாதி பெயர் அல்ல.* தேவர் > பட்டமானது மல்லர்களுக்குரியது. சேர சோழ பாண்டியர் , ஆரிய- தெலுங்கர் மற்றும் > கள்ளர் கூட்டணியால் முற்றாக வீழ்ந்த பின் , தேவர் எனும் மள்ளர்களுக்கான > பட்டத்தை கள்ளர்கள் எடுத்துக்கொண்டனர் என்பது இன்றைய வரலாற்று ஆசிரியர் > அனைவருக்கும் நன்றாகவே தெரியும். *உலகின் எந்த ஒரு கல்வெட்டிலோ அல்லது சங்க > இலக்கியங்களிலோ எந்தவொரு சேர சோழ பாண்டிய மன்னனும் கள்ளர் என்று > குரிக்கப்பட்டிருக்கவில்லை மாறாக அனைவரும் மள்ளர் இனத்தவர் என்றே > குறிப்பிடப்பட்டுள்ளனர்.* *மேலும் தேவர் என்கிற பட்டமும் கள்ளர்களுக்கு > வழங்கப்பட்டதர்க்கான எந்த ஒரு சான்றும் இல்லை.* ஆக தற்போது குல உயர்வு கருதி > கள்ளர்-மறவர் என்போர் தேவர் என தங்களைத்தாங்களே அழைத்துக்கொள்கின்றனர். > தஞ்சையில் இருக்கும் பிரமலைக்கள்ளர்கள் தங்களை தேவர் என்று அழைப்பது கிடையாது. > தேவர் என்று சான்றிதல் வேண்டுமென கள்ளர் மற்றும்மறவர்கள் 2006 - இல் > கேட்கப்பட்டபோது அதை முதலில் எதிர்த்தவர்கள் தஞ்சை கள்ளர்கள் தான். *தென் > தமிழகத்தின் தெற்கத்தி கள்ளர்களே தங்களை தேவர் என அழைக்க முற்படுகின்றனர்.* > சேர சோழ பாண்டியரை மரபு கொண்டே அறிய முடியுமே தவிர உறவு கொண்டு அறிய > முடியாது என்பது கூட உங்களுக்கு தெரியாமல் போனது வேடிக்கைதான். கரிகால் > பெருவளத்தான் மள்ளர் மரபினன் என கல்வெட்டுகளும் இலக்கியங்களும் கூறுகின்றன. > அப்படியேதான் ராஜா ராஜா சோழனையும் குறிப்பிடுகின்றனர். இதையெல்லாம் பக்கத்தில் > உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு வந்தால் தான் அறியமுடியும என்ன?!. களபிரர் > படையெடுப்பில் சோழ படையின் சில பிரிவுகள் இன்றைய ஆந்திர நிலப்பரப்பில் > குடிபோனது உண்மைதான். அதற்காக சோழ மரபினர் சோழ நாட்டிலிருந்து முற்றிலும் > அழிந்தோ அல்லது அகன்றோ விட்டனர் அல்ல.அதனால் தான் கடுங்கோன் பாண்டியனால் > மீண்டும் தமிழகத்தை மீட்ட்க்க முடிந்தது. > ராஜா ராஜன் ஆரியர்களை கோவிலில் நடனமாடவும் , தேவதாசி முறைக்காகவும் > தான் கூட்டி வந்தானே தவிர தம் மக்களை அடிமைப்படுத்துவதர்க்காக அல்ல. இது ராஜா > ராஜா சோழன் செய்த தவறுதான் , இல்லையென்று கூறுவதற்கில்லை. அதே நேரம் > தற்காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை தற்கால நடைமுறை கொண்டே நாம் இங்கு அணுகுவோம். > இன்று தமிழகத்தில் உ . முத்துராமலிங்கம் , தெலுங்கு கட்டபொம்முலு மற்றும் சில > தியாகிகளுக்கு(!!!!) அரசு விழா எடுக்கையில், ராஜா ராஜன் போன்ற தஞ்சை பெறுடையார் > கோவில் கட்டிய , குடமுழக்கு முறை கண்ட , மழை நீர் சேமிப்பு மற்றும் நீர் > மேலாண்மை கண்ட தமிழனுக்கு அரசு விழா எடுப்பதில் என்ன தவறு இருக்கிறது?. இன்று > ராமநாதபுரம் முத்துராமலிங்கம் குருபூஜை, சென்னை நந்தனம் சிலை மற்றும் > தமிழகத்தின் பிற இடங்களில் உள்ள முத்துராமலிங்கம் சிலைகள் அனைத்துமே ஒவொரு > தமிழனில் வியர்வைத்துளியில் இருந்து பெறப்பட்ட மக்களின் வரிப்பணத்தில் இருந்து > நிறுவப்பட்டவை. இதையெல்லாம் எவன் அப்பன் வீட்டு சொத்தை எடுத்து இவர்கள் > செய்கிறார்கள்?. இதையெல்லாம் கண்டிக்க கூட உங்களுக்கெல்லாம் முதுகெலும்பில்லை. > ஆனால் வெட்டி நியாயம் பேசவந்துவிடுகிறீர்கள்.

மூவேந்தர்

மள்ளர் - தேவேந்திர குல வேளாளர்

நெல் நாகரிகத்தின், நெல்லின் மக்களாகிய மள்ளர்களும் அவர்களுடைய பண்பாட்டுத் தலைவர்களுமாகிய (வேந்தன்) தேவேந்திரர், முருகன், மள்ளர், திருமால் மள்ளர், சிவன் மள்ளர், பார்வதி, சேர வேந்தர், சோழ வேந்தர், பாண்டிய வேந்தரும் அனைத்துக் தமிழ் இலக்கியங்களிலும் பலவாறு புகழ்ந்து பேசப்படுவார்கள். சங்க காலத் தழிழ் இலக்கியங்கியங்கள் தொடங்கி இன்று வரை இலக்கியங்களில் பேசப்படும் நெல்லின் மக்களாகிய மள்ளர் என்னும் தேவேந்திர குல வேளாளர்களின் பண்பாட்டு மேலாண்மை, தமிர்; வளர்ச்சிக்கும் தமிழர் முன்னேற்றத்திற்கும் அவர்கள் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. முழுமையானது. சங்க காலம் தொட்டு சென்ற நூற்றாண்டு வரை இயற்றப்பட்ட அனைத்துத் தமிழ் இலக்கியங்களும் இந்த தேவேந்திர மள்ளர்களின் புகழ் பாடும். இலக்கியங்களில் நாட்டு வளம் என்னும் படலம் நெல் நாகரிகத்தின் மேன்மையையும் அம்மக்களின் சிற்பபையும் கூறும். ஏர் மங்கலம், வான் மங்கலம், வாள் (கலப்பையில் உள்ள கொழுவு) மங்கலம் உழத்திப்பாட்டு முதலியன அரசர்களுக்கு இணையாக இம்மக்களின் சிறப்பை உயர்த்திப் பாடும். அரசர்களின் இந்நெல் நாகரிகத்தின் தலைவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்நெல் நாகரிகத்தினைத் தோற்றுவித்த மக்களின் தற்போதைய பெயர்களான மள்ளர், பள்ளர், தேவேந்திரர், தேவேந்திர குலத்தார், தேவேந்திர குல வேளாளர், பண்ணாடி, காலாடி, குடும்பன், குடையர், அதிகாரி, குடும்பனார், மூப்பனார், பணிக்கர், வாய்;காரர் (வாய் - நீர்வரும் வாய், மதகு), குளத்து மள்ளர் முதலிய பெயர்களுக்கும் தற்போதும் இம்மக்களுடைய முதன்மைத் தொழில் நஞ்செய் விவசாயம் என்பதுவும் நெல் நாகரிகத்தின் தொன்மையும் தொடர்ச்சியையும் இந்நாகரிகத்தின் பங்களிப்பையும் உணர முடியும். தமிழ் மள்ளர்களின் இந்நெல் நாகரிகம் இந்தியா முழுவதிலும் இலங்கை, தாய்லாந்து, வியட்நாம், மியான்மர் (பர்மா), பாகிஸ்தான், சீனா, சப்பான், இந்தோனேசியா, மலேசியா, கம்போடியா, பங்காள தேசம், பிலிப்பைன்ஸ் முதலிய தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதிலும் பரவியுள்ளது, இதன் சிறப்பையும் இன்றியமையாமையையும் உணர்த்துகின்றது.

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

நெல் நாகரிகம்

மருத நிலத்தில் தோன்றிய தமிழர் நாகரிகம் "நெல் நாகரிகம்" எனப்படும். இந்த நெல் நாகரிகத்தைத் தோற்றுவித்த தமிழர் மள்ளர் எனப்பட்டனர். இந்த நெல் நாகரிகம் தமிழகத்தில் தோன்றி தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பரவியது. (இந்தியாவின் மேற்குகுப்புறத்தில் முக்கிய சாதியினராக, மள்ளர் இருந்தனராம்) நிகண்டில் மள்ளர்... அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர் உழவர், வீரர், மன்னர் என்ற மூன்று சொற்களுக்கும் பொருள்படுவதாக மள்ளர் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது எனத் திவாகர நிகண்டு சொல்கின்றது. பெரிய புராணத்தில் மள்ளர்... மள்ளர் - தேவேந்திர குல வேளாளர் வளமை - நெல் வேளாண்மைக்கு இன்றியமையாத நீரை இம்மக்கள் வேண்ட அவர்களின் இறைவனும் மாரிக் கடவுளுமான தேவேந்திரர் கோடை காலத்திலும் கொடுப்பார் என்கிறார் பெரிய புராண ஆசிரியர் சேக்கிழார் பெருமான். பிள்ளை தைவரப் பெருகுபால் சொரி முலைத்தாய்போல் மள்ளர் வேனிலின் மணல் திடர் பிசைந்து கைவருட வெள்ள நீரிரு மருங்குகால் வர்p மிதந் தேறிப் பள்ள நீள் வயல் பருமடை உடைப்பது பாலி. கம்பராமாயணத்தில் மள்ளர்... கம்பர் தமது இராமாயணத்தில் இவர்கள் போர்க்களத்தில் பகைவர்களின் தலைகளை வெட்டி வீழ்த்தியதை உழவு, தொளி கலக்குதல், நாற்று முடிகளைப் பரவுதல் முதலிய நிகழ்வுகளோடு ஒப்பிட்டு கூறுவார். நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிணச் சேற்றின் உதிர நீர் நிறைந்த காப்பின் கடும் பகடு படி கிடந்த கரும் பரப்பின் இன மள்ளர் பரந்த கையில் கடு ங்கமல மலர் நாறும் முடிபரந்த பெருங்கிடக்கைப் பரந்த பண்ணை தடம் பணையின் நறும் பழனம் தழுவியதே எனப் பொலியும் தகையும் காண்மின் காரை முகுந்தன் குறிப்பிடும் பாலாவோடையில் இருப்பவர்கள் தலித்துகளல்ல அவர்கள் மள்ளர் குலத்தவர்கள். மள்ளர் என்ற அவர்களது பூர்வீகப் பெயர் சேர, சோழ, மாமன்னர்களின் ஆட்சியதிகார வீழ்ச்சியின் பின் விஜயநகர வடுகர்களால் அவர்களின் கைக் கூலிகளால் பள்ளர்கள் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அத்ற்குதவியாக பள்ளு இலக்கியங்கள் இயற்றப்பட்டது. தற்பொழுது நாற்பது பள்ளு இலக்கிய நூல்கள் தமிழகத்தில் இருக்கின்றன். அவ்ற்றில் இரண்டு, நூறு வருடங்களுக்கு யாழ்ப்பாணப் புலவர்களால் இயற்றப்பட்டது. இச்சமூக மக்களை இழிவபடுத்தவே பள்ளு இலக்கியம் இயற்றப்பட்டதாகக் கருதவேண்டியுள்ளது. மள்ளர் என்ற பெயர்தான் பள்ளர் என்று மாற்றப்பட்டதனை பள்ளு நூல்களிலேயே காணலாம். செங்கோட்டுப் பள்ளு மள்ளர் குலத்தவர்களின் கொடைப் பண்புகளையும் விழுமியங்களையும் எடுத்துக் கூறுகின்றது.

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

சேர, சோழ, பாண்டியர்கள்

CHERACHOLAPANDIYAS (MOOVENDAR)

Introduction / History
Devendrakulam is the name of a caste in India. The members of the caste claim they have this name because they are the descendents of Lord Indra, King of the Devas. Majority of the people of this caste are involved in agriculture. The people of this caste are also called by Palla, Pallar, Kudumbar, Pannadi, Devendrakula Vellalar. The Devendrakula are also called "Mallar" which means Brave Warrior. The Devendrakulavellalar people belong to Moovendar (Chera Chola Pandiyas) origins. Though people of this caste claim superiority of their origin, the caste is included in the Scheduled Caste and many of its members were held as agriculture slaves and bonded agriculture labourers during the 17th Century until mid 20th Century.

Research suggest that the people of this caste are the descendents of the famous ancient Tamil Kings Cheras, Cholas, Pandyas and Pallavas who ruled the current Tamilnadu, Kerala, Karnataka, Part of Andra and Maharastra during ancient period and ruled Tamilnadu up to the 16th Century. Most of the ancient temples in and around Tamilnadu were built and owned by this community. After the invasion of Vijaynagar Empire and Marata Kings, the Tamil Kings and their community were removed of their title, land and were made as agricultural labourers in their own farms for which they were the then owners. To hide this historic fact these people who were then called as Mallar (Malla, Mallan) were named as Pallas (Palla, Pallan) and many poems were written during 17,18,19 and beginning of 20th Century in the name of Pallu Poems with the encouragement from Vijayanagar (Nayak) dynasty.

The Mallars were ex-communicated, then gradually over the next 300 years, their lands were removed and given to other new formed upper castes that were loyal to Telugu kings. The Mallars were named as Pallas and were made as agricultural labourers in the land in which they were once owners. Then after a few generations they were made as bonded labourers and then were removed of all basic human rights (Prevented from having education, access to public places and Temples built by their own ancestors, prohibition from wearing Ornaments and dress on the upper part of the body, shoes etc). To hide the truth that all temples built upto 16th Century AD were built by the ancestors of these people, attempts were made to hide temple paintings by redrawing new paintings on the old ones (Tanjavur Periya Koyil, Mariamman Koyil). During 1932 when British gave self-autonomy to Indians, 1000s of new castes sprung up claiming superiority on one over the other.

What are their lives like?
Day-to-day activity shows evidence of the rich heritage these people had from ancient times. The community people have their own village self government (Panchayat), have special priests for temples, barbers, dobbies, doctors etc in villages. These people also have their own temples that are called as King Temples. They are also the priests in village temples, exclusively owned by these people. In ancient temples like Perur, Samayaburam, Tirunelvelli and so on, leaders of this community are brought to the temple with festivities on an elephant with white umbrella coverage, playing trumpets and drums and given the first respect during temple festivals and are asked to touch the TempleCaravan (Thear) first before it comes on procession. These were the privileges only the ancient Tamil kings had and were passed on to their descendents that still continues. Priests of these ancient Temples accept and agree that the ancestors of DevendraKulathar are the ancient Tamil Kings, Cheras, Cholas Pandyas and Pallavas.

There are ownership documents (Pattayam signed during 1500s) that show that the Palani Murugan Temple and numerous ancient Temples belong to people of Devendrakulam. These ancient Temples were built by ancient Tamil Kings thus these documents and respect given to people of this community at these temples bridge the relation between the ancient Kings and the Devendrakula community. Stonescriptures (Kalvettu) and inscription written in the 1500s also claim that the Devendrakulathars are the descendents of the Pandya dynasty.

சனி, 28 ஆகஸ்ட், 2010

கருணாநிதி குடும்ப சண்டையால் பழிவாங்கப்பட்டு பலிகடாவாக்கப்பட்டுள்ளார் உமாசங்கர்-ஜெ.

முதல்வர் கருணாநிதியின் குடும்ப சண்டையில் சிக்கி, பின்னர் அவர்கள் ஒன்று சேர்ந்ததைத் தொடர்ந்து இப்போது பழிவாங்கப்பட்டு பலிகடாவாக்கப்பட்டுள்ளார் ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் தாற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருப்பதில் உள்நோக்கம் இருப்பதாகத் தெரிகிறது. அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு இடையூறாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைத்தவர் உமாசங்கர். ஆனால் இடையூறு செய்தவர்கள் பிற்காலத்தில் ஆட்சியாளர்களுடன் சமாதானம் ஆகிவிட்டதால் இப்போது உமாசங்கர் பழி வாங்கப்படுகிறார். மாறன் சகோதரர்களுக்கும், மு.க.அழகிரிக்கும் இடையே சண்டை ஏற்பட்ட காலத்தில், மதுரையில் நடந்த வன்முறை அனைவருக்கும் தெரிந்ததே. அதன் பின்னர் தமிழக அரசு அரசு கேபிள் டிவி கார்ப்பேரஷனை அமைத்தது. அதில் ரூ. 400 கோடிக்கு முதலீடு செய்யப்பட்டது. ஆனால் அதில் நடந்த முறைகேடுகள், ஊழல்களை வெளிக் கொணர்ந்தார் உமாசங்கர். இதற்காக இப்போது பழிவாங்கப்படுகிறார் அவர். எல்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்த காலத்தில், எல்காட்டின் துணை நிறுவனமான எல்நெட் என்ற நிறுவனம் தனியார் நிறுவனமாக மாற்றப்பட்டது பற்றியும் உமாசங்கர் கேள்வி எழுப்பியிருக்கிறார். அந்த நிறுவனத்துக்கு ரூ.700 கோடிக்கு சொத்து இருக்கிறது. இந்த எல்நெட் நிறுவனம் இடிஎல் நிறுவனம் என்ற பெயரில் சென்னை அருகே பள்ளிக்கரணையில் தகவல் தொழில்நுட்ப பூங்காவை நிறுவியிருக்கிறது. இதில் தியாகராஜன் செட்டியார் உள்ளிட்டோர் பங்குதாரர்களாக உள்ளனர். இது எல்காட் நிறுவனத்தின் துணை நிறுவனமாக காட்டிக் கொண்டு பல சலுகைகளைப் பெற்றுள்ளது. சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற அந்தஸ்தையும் பெற்றுள்ளது. இதை தனியார் நிறுவனமாக ஆக்கியதில் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்களுக்குத் தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. இந்த தியாகராஜன் செட்டியார் யார், இவருக்கும், கருணாநிதிக்கும் என்ன தொடர்பு என்பதை கருணாநிதி மக்களுக்கு விளக்க வேண்டும். அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் ரூ.400 கோடி முதலீடு செய்து வாங்கிய நவீன கருவிகள் இப்போது என்னவாயிற்று என்றும் தெரியவில்லை. கருணாநிதியின் குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், பிறகு சமாதானம் ஆகியவற்றால் மக்களின் வரிப் பணம் பல கோடி வீணாகியுள்ளது. அரசு கேபிள் டி.வி. நிறுவனம் தொடங்கப்பட்ட சூழ்நிலை, அதற்கு செய்த முதலீடு, இப்போது அந் நிறுவனம் உள்ள நிலை, முதலீட்டின் இப்போதைய நிலை, எல்நெட் நிறுவனம் தனியார் நிறுவனமாக மாறியது உள்ளிட்ட விவரங்கள் குறித்து முதல்வர் கருணாநிதி மக்களுக்கு விளக்கம் தர வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

உமாசங்கர் ஐ.ஏ.எஸ் நேர்காணல்.

ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது நடவ டிக்கை எடுக்கப்பட்டதற்காக தெரு வில் நின்று பொதுமக்கள் போராட் டம் நடத்தும் அதிசயம், உமாசங்கர் விஷயத்தில்தான் நடந்திருக்கிறது. சென்னையின் அரங்குகளிலும் நெல்லையின் தெருக்களிலும் நின்று ‘உமாசங்கரைப் பணியில் சேர்த்துக்கொள்‘ என்று மக்கள் கோரிக்கைவைக்கிறார்கள். இது எப்படிச் சாத்தியம் ஆனது?ஆண்டவன் ஒருவனை நம்பியே களத்தில் நிற்கிறேன். உலகின் பல்வேறு மூலைகளில் இருந்தும் முகம் தெரியாதவர்கள்கூட தொலைபேசி வாயிலாகவும், இ-மெயில் மூலமாகவும் வார்த்தைகளிலும் எழுத்திலும் நம்பிக்கையை விதைக்கிறார்கள். முன் எப்போதையும்விட, என் வீடு இப்போது மகிழ்ச்சியும் அன்பும் நிறைந்து காணப்படுகிறது. முதல்வருக்கு நன்றி!” – தெளிவாகப் பேசுகிறார் உமாசங்கர். தமிழகத்தின் பிரபலமான ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக இருந்த உமாசங்கரைப் பணியிடை நீக்கம் செய்திருக்கிறது அரசு.வயதிலேயே அரசுப் பணிக்கு வந்தவன் நான். வங்கிப் பணியில் இருந்துகொண்டே சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, 26-வது வயதில் ஐ.ஏ.எஸ்., ஆனேன். முதலில் வேலூரில் ஒரு வருடம் உதவி கலெக்டர். பிறகு மயிலாடுதுறை, மதுரை, திருவாரூர் என வெவ்வேறு ஊர்களிலும், துறைகளிலும் பணி. பிறகு வந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஒழுங்கு நடவடிக்கை ஆணையராக ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வனவாசம். தி.மு.க. ஆட்சி வந்ததும் எல்காட் எம்.டி. பணி. அதன் பிறகு, தமிழ்நாடு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் பணி. அங்கிருந்து வேறு பணிக்கு திடீரென மாற்றப்பட்டேன். வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் என்னை விசாரிக்க… நான் நீதிமன்றப் படியேற… பணி நீக்கம் செய்யப்பட்டு இப்போது வீட்டில் உள்ளேன்.” “உங்களை தலித் ஆதரவு அதிகாரி என்று கூறுகிறார்களே?” “இன்னும் சிலர் கம்யூனிஸ்ட் என்பார்கள். தீவிரமாக மக்கள் பணி செய்வதால், சிலர் ‘தீவிரவாதி‘ என்றார்கள். நான் எங்கு பணியில் இருந்தாலும், நிலமற்ற ஏழை விவசாயிகள் பெருமளவில் என்னைச் சந்திப்பார்கள். அவர்களில் 90 சதவிகிதம் பேர் தலித்துகள். தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் என்பதால், அவர்களின் வலியை என்னைவிட வேறு யார் உணர்ந்துகொள்ள முடியும்? என் அலுவலகம், வீடு இரண்டின் கதவும் அவர்களுக்காக எப்போதுமே திறந்தே இருக்கும். இதனால்தானோ என்னவோ, எனக்குக் குறைவான நண்பர்களே உள்ளனர். 20 ஆண்டுகள் பணி முடித்துவிட்டேன். மீதம் உள்ள 15 ஆண்டுகளையும் பாதி அரசுப் பணி, மீதி மக்கள் பணி என்று வடிவமைத்துக்கொள்வதாகத் திட்டம் இருக்கிறது.” “உங்களை எதிரியாக நினைத்த ஜெயலலிதாவே உங்களுக்கு ஆதரவாக அறிக்கைவிடும் அளவுக்கு வந்திருக்கிறாரே?” “பணியிடை நீக்கம் செய்யப்பட்டதும், ‘உங்களுக்காகக் களம் இறங்குகிறோம்‘ என்று பல தரப்புகளில் இருந்தும் ஆதரவு அலை. ‘வேண்டாம். அரசியல் சாயம் பூசுவார்கள். நான் அரசியல் சார்பற்ற அதிகாரியாகவே தொடர விரும்புகிறேன்‘ என்றேன். ஆனால், நெருக்கடி முற்ற முற்ற… அவர் களே களத்துக்கு வந்துவிட்டார்கள். தேவேந்திரகுல வேளாளர் உட்பட பல்வேறு அமைப்புகள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். கம்யூனிஸ்ட் தோழர்கள், வைகோ, டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட தலைவர்கள் பேசி வருகிறார்கள். ஆனால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசுவார்… அறிக்கைவிடுவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. ‘பலவான்களை உனக்காக இறங்கிப் பேசவைப்பேன்‘ என்கிறது பைபிள். அது தான் இன்று நடக்கிறது!” “கருணாநிதியின் செல்லப் பிள்ளையாக இருந்தீர்கள். உங்க ளுக்குள் பிணக்கு வர என்ன காரணம்? “நான் யாருக்கும் செல்லப் பிள்ளை கிடையாது. என்றுமே மக்களுக்காக செயல்படும் பிள்ளையாகத்தான் இருந்து வருகிறேன். கோப்புகள் அனைத்திலும் கேள்வி கேட்காமல் கையெழுத்திடும் அதிகாரிகளையே அரசியல்வாதிகள் விரும்புகிறார்கள். ஆனால், இன்று துணை முதல்வர் ஸ்டா லின் மட்டுமே துணிச்சலாகக் கேள்வி கேட்டு, சாதக பாதகங்களை விளக்கிச் சொல்லும் சில அதிகாரிகளைத் தனக்குக் கீழ் வைத்திருக்கிறார்.” “அ.தி.மு.க. ஆட்சி வனவாசம் என்கிறீர்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் உங்களுக்கு நல்ல பதவிகள்தானே கொடுக்கப்பட்டன?” “தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் என்னை அழைத்த முதல்வர், ‘எங்கேய்யா போறே?’ என்றார். கம்ப்யூட்டரில் ஆர்வம் என்ப தால் ‘எல்காட்‘ என்றேன். ஓ.கே. என்றார். அந்தச் சமயத்தில்தான் இலவச கலர் டி.வி. திட்டம் நடைமுறைக்கு வந்தது. பலரும் பதறிஅடித்துப் பின்வாங்கிய அந்தத் திட்டத்தை நான் கையில் எடுத்து வெற்றிகரமாகச் செயல்படுத்தினேன். எல்காட்டின் துணை நிறுவனமான ‘எல்நெட்‘, டைடல் பார்க் அருகில் உள்ளது. இந்த நிறுவனம் ‘ஈ.டி.எல். இன்ஃப் ராஸ்ட்ரக்சர்‘ என்ற துணை நிறு வனத்தைத் தொடங்கியது. இதற் காக 25 ஏக்கர் பள்ளிக்கரணையில் இடம் வாங்கப்பட்டது. ஆனால், நாளடைவில் அந்த கம்பெனியே காணாமல் போனது. அந்த முறைகேடுகளை விசாரிக்கப் போனபோது, கோப்புகள் காணா மல் போய்விட்டதாகச் சொன் னார்கள். நானே அமர்ந்து தேடி, கிடைத்த கோப்புகளை வைத்து ஆய்வு செய்யச் சென்றேன். நான் அங்கு சென்ற சில நிமிடங் களிலேயே ‘உங்களை மாற்றி விட்டார்கள்‘ என்று தகவல் வந் தது. ஆனால், முறைகேடுகள்பற்றி தெளிவான அறிக்கையை, முதல்வர், தலைமைச் செயலர், எல்காட் போர்டு ஆகியோருக்கு அனுப்பினேன். இவை அனைத் தையும் சென்னை உயர்நீதி மன்றம், மத்திய தீர்ப்பாயத்தில் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்துள்ளேன். நீதிமன்ற நட வடிக்கையில் இருப்பதால் பிர மாணப் பத்திரத்தில் குறிப்பிட் டுள்ளதைத் தவிர வேறு எதையும் தெரிவிக்க விரும்பவில்லை!” “லஞ்ச ஒழிப்பு குற்ற விசாரணை உங்கள் மீது தொடர்கிறதா?” “வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக விசாரிக் கிறார்கள். உடனடியாக என் மீது வழக்கு பதிவு செய்து, என்னைக் கைது செய்யுங்கள் என்றுதான் நீதிமன்றத்தில் என் வழக்கறிஞர் வாதாடினார். ஆனால், அதை செய்யத் தயங்குகிறார்கள். ஏன் என்றால், என்னுடைய கணக்கு வழக்குகள் அனைத்தும் தெளிவாக உள்ளன. ஓர் அரசு ஊழியன் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எது வாங்கினாலும் அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பது விதி. கம்ப்யூட்டர், செல்போன், கார் என்று எது வாங்கினாலும் உடனடியாகத் தெரியப்படுத்தி வருகிறேன். அப்படி இருக்கையில் என் மீது என்னவென்று அவர்கள் எஃப். ஐ.ஆர். ஃபைல் செய்வார்கள்? இந்த வழக்கில்தான் உயர்நீதிமன்ற தடை உத்தரவு வாங்கியிருக் கிறேன். இதை எல்லாம் எஸ்.சி., எஸ்.டி. கமிஷனுக்குப் புகாராக அனுப்பினேன். அந்தக் கோபத் தில்தான் என் சாதிச் சான்றித ழைக் காரணம் காட்டி, என்னைப் பணி நீக்கம் செய்துள்ளார் முதல்வர். நான் இந்து தலித் கோட்டாவில் பணிக்குச் சேர்ந்த வன். காலப்போக்கில் நம்பிக்கை யின்பால் கிறிஸ்துவ தேவாலயங்களுக்குச் சென்றுவருகிறேன். இதில் என்ன தவறு இருக்கிறது? இதனால் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவனாக மாறிவிடுவேனா? மேலும், சாதிச் சான்றிதழ் தொடர்பாகக் கேள்வி எழுப்பும் அதிகாரம், மாநில அர சுக்குக் கிடையாது. யூ.பி.எஸ்.சி-க்கு மட்டுமே அதிகாரம் உண்டு.” “கருணாநிதி அரசின் சாதனை என்று எதையாவது சொல்ல விரும்புகிறீர்களா?” “ஓரிரு விஷயங்கள் உண்டு. சி.பி.எஸ்.சி., மெட்ரிக், ஸ்டேட் போர்டு, ஆங்கிலோ-இந்தியன் என்று பாடத் திட்டத்தில் இருந்த ஏற்றத்தாழ்வுகளைப் போக்கக் கொண்டுவந்த சமச்சீர் கல்வித் திட்டம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அதேசமயம், ‘நேர் நேர் தேமா… நிறை நேர் புளிமா‘ என்று குழப்பியடிக்கும் அளவுக்கு தமிழ்ப் பாடங்களில் இலக்கணம் தேவை இல்லை என்பது என் கருத்து. செய்யுளைக் குறைத்து உரைநடையை அதிகரித்தால், பிறகு மாணவர்களே ஆர்வமாக இலக்கணம் கற்பார்கள்.” “அடுத்து என்ன செய்வதாக உத்தேசம்?” நான் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவன். 12 பேர்களில் ஒருவ னாகப் பிறந்தவன். மாதத்துக்கு ஒரு லட்சம் ரூபாயை வரியாகச் செலுத்தும் அளவுக்கு வருமானம் உள்ள தம்பி இருக்கிறார். தங்கை கள், வெளிநாட்டில் இன்ஜினீயர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அனுப்பிய பணத்தில் கார் வாங்கி உள்ளேன். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நேரத்தில், கார் வாங்கிய ஒரே ஐ.ஏ.எஸ்., அதிகாரி நானாகத்தான் இருப்பேன். இதையும் அரசிடம் தெரிவித்துவிட்டேன். என் அனுபவங்களைப் புத்தகமாக எழுத உள்ளேன். ‘நாசி யில் சுவாசம் இருக்கும் மனிதர்களை நம்பாதே‘ என்றார் இயேசு. இனி, நானும் அப்படியே எச்சரிக்கையுடன் வாழ இருக்கிறேன்!”

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

கருணாநிதியின் 'ஒருகுலத்துக்கொருநீதி'

சிலமாதங்களுக்கு முன்பு வலைப்பக்கங்களில் ஒரு விவாதம் நடந்தது அனைவருக்கும் தெரிந்ததே. தெருக்களில் சாதிப்பெயரை நீக்குவது குறித்தான தமிழக அரசின் நிலைப்பாடு குறித்ததே அச்சர்ச்சை. டோண்டு ராகவன் அவர்கள் தெருக்கள் மற்றும் பொதுவிடங்களில் சாதிப்பெயர்களை நீக்கக்கூடாது என வாதாடினார். அத்தகைய வலதுசாரி நிலைப்பாட்டை ஜனநாயகச் சக்திகளான நாமனைவரும் எதிர்த்தோம். ஆனால் டோண்டுவின் வாதத்தில் ஒரு நியாயமிருந்ததை நாம் மறுக்கமுடியாது. அனைத்து சாலைகள் மற்றும் பொதுவிடங்களில் தலைவர்களின் பின்னுள்ள சாதியொட்டு நீக்கப்பட்டாலும் நந்தனத்தை ஒட்டியுள்ள முத்துராமலிங்கத்தின் சிலையும் சாலையும் முத்துராமலிங்கத்தேவர் சிலை மற்றும் முத்துராமலிங்கத்தேவர் சாலை என்றே அதிகாரப்பூர்வமாக அறியப்படுகிறது. வேறு ஏதும் தமிழக அரசியல் ஆளுமைகள் அவர்களது சொந்த சாதிச்சங்கத்தவரைத் தவிர மற்றவர்களால் சாதிப்பெயரால் அழைக்கப்படுவதில்லை. இந்தியாவிலேயே 30களில் சாதிப்பெயர்களை நீக்குவது குறித்து தீர்மானம் போட்டு இன்றளவும் பெருமளவிற்குப் பொதுவெளியில் சாதிப்பெயர்கள் புழங்கப்படாமலிருப்பதற்குக் காரணம் தோழர். பெரியார் ஈ.வெ.ராதான். ஆனால் அத்தைகய ஜனநாயக உணர்வை அவமானப்படுத்துவதாகவே முத்துராமலிங்கம், தேவர் என்னும் சாதிப்பெயர் சுமந்து சிலைகளாகவும் சாலைகளாவும் நிற்கிறார். இத்தகைய கீழ்த்தரமான விளையாட்டுகளை ஆரம்பித்ததில் திமுக தலைவர் கருணாநிதிக்கு ஒரு குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. 1995 - 1996 தென்மாவட்டங்களில் நடைபெற்ற சாதிய மோதல்களுக்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது தலித் தளபதி சுந்தரலிங்கத்தின் பெயரால் ஒரு போக்குவரத்துக்கழகம் ஆரம்பிக்கப்பட்டதே. அப்போது முக்குலத்துச் சாதிவெறியர்கள் ஒரு பள்ளரின் பெயர் சூட்டப்பட்டதற்காக அப்பேருந்துகளில் ஏற மறுத்துக் கலவரம் விளைவித்தனர். நியாயமாகப் பார்க்கின் வன்கொடுமைச் சட்டத்தில் கைதுசெய்யபப்ட வேண்டிய சாதிவெறியர்களின் ஆலோசனைக்கிணங்க, சுந்தரலிங்கத்தின் பெயரை மட்டுமல்லாது தேசியச்சின்னங்களிலிருந்த அனைத்து அரசியல் தலைவர்களின் பெயர்களையும் நீக்கியது இதே கருணாநிதிதான். இப்போது மீண்டும் அதே சாதிவெறியர்களின் வேண்டுகோளையேற்று மதுரை விமானநிலையத்திற்கு முத்துராமலிங்கத்தின் பெயரைச் சூட்டியுள்ளார் கருணாநிதி. இந்த 'ஒரு குலத்துக்கொரு நீதி' நடவடிக்கைகளை யார் கண்டிக்கப்போகிறார்கள்? பின் குறிப்பு : விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத்தின் பெயர் சூட்டப்பட்டதற்கு சி.பி.எம் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கதே. ஆனால் அத்தகைய சாதித்தலைவருக்கு அஞ்சலி செலுத்தியது மற்றும் கட்சி அமைப்புகளிலும் தேர்தலின்போது வேட்பாளர் தேர்விலும் வட்டார அளவிலான பெரும்பான்மை சாதிகளுக்கு முன்னுரிமை அளிப்பது குறித்து சி.பி.எம் வெளிப்படையாக விளக்கமளிக்க முன்வரவேண்டும். மேலும் முத்துராமலிங்கத்திற்கு எதிரான பிரச்சாரத்தை தனது கட்சி அமைப்புகளின் மூலம் பொதுவெளியில் நிகழ்த்த முன்வருமா என்பதும் கேட்கபப்டவேண்டிய கேள்வியே.

இம்மானுவேல் சேகரன் பெயரை சூட்ட வலியுறுத்தி டாக்டர்.க.கிருஷ்ணசாமி தலைமையில் மதுரையில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.

தியாகி இம்மானுவேல் சேகரனின் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்று கடந்த மாதம் திருச்சியில் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் மதுரை மேலமாசி வீதி-வடக்கு மாசி வீதி சந்திப்பில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெற்றது முன்னதாக டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:- மதுரை விமான நிலையத்திற்கு தியாகி இமானுவேல் பெயரை சூட்டக்கோரி புதிய தமிழகம் கட்சி சார்பில் மாபெரும் உண்ணாவிரதம் நடத்தப்படுகிறது. இமானுவேல் சேகரனை பொறுத்தவரை இந்திய சுதந்திரத்திற்கு பிறகு சமூக சீர்திருத்த போராளியாக விளங்கினார். இதனால் அவரது மறைவிற்கு பிறகு சட்டமன்றத்தில் அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், பெரியார் ஆகியோர் புகழ்ந்து பேசி இருக்கிறார்கள். அவருடைய புகழுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் மதுரை விமான நிலையத்திற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும். எனவே இந்திய அரசும், தமிழக அரசும் இமானுவேல் சேகரனார் பெயரை சூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் எங்களது போராட்டம் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் அரசியல் மாற்றம் மிக அவசியம் - டாக்டர்.க.கிருஷ்ணசாமி

எங்களை கூட்டணியில் சேர்த்துள்ளதன் மூலம் புதிய தமிழகம் கட்சிக்கு மட்டுமின்றி தமிழகம் தழுவி வாழும் கோடான கோடி அடித்தட்டு மக்களுக்கும், தேவேந்திர குல வேளாளர்களுக்கும் அங்கீகாரம் கொடுத்துள்ளார் அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்று கூறியுள்ளார் புதிய தமிழகம் கட்சித் தலைவர். அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது குறித்து அவர் கூறியதாவது: தமிழக அரசியல் வரலாற்றில் புதிய தமிழகம் கட்சி, ஏழை-எளிய மற்றும் அடித்தட்டு மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க உருவான அடிப்படை ஜனநாயக இயக்கம் ஆகும். 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசியலில் பல்வேறு சமூக பிரச்சினை, அரசியல் பிரச்சினைகளை கையில் எடுத்து போராடி வருகிறது. இருந்தாலும், வலுவான கூட்டணியில் இடம் பெற வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. 19-ந் தேதி மாலை 3.00 மணிக்கு அ.இஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதாவை அவர்களை புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகளுடன் சந்தித்து பேசினேன். அ.தி.மு.க. கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இடம்பெறும் வாய்ப்பை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவர்கள் உறுதி செய்துள்ளார். இது புதிய தமிழகம் கட்சிக்கு மட்டுமின்றி தமிழகம் தழுவி வாழும் கோடான கோடி அடித்தட்டு மக்களுக்கும், தேவேந்திர குல வேளாளர்களுக்கும் கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறோம். இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவர்களுக்கும், அக்கட்சியின் முன்னணி தலைவர்களுக்கும், கூட்டணியில் உள்ள ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் கடந்த நாலரை ஆண்டுகளாக நடைபெற்று வரும் தி.மு.க. ஆட்சியில், தேர்தல் அறிக்கையில் சொன்ன பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. நிலம் இல்லாத ஏழை விவசாயிகளுக்கு இரண்டரை ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்றும், வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்ட 3 சென்ட் இடம் வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்கள். அதை நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் அரசியல் மாற்றம் கொண்டு வருவது மிக மிக அவசியம் ஆகும். அது, அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் தலைமையில் அமையும் கூட்டணியால்தான் முடியும். இந்த கூட்டணியை வலுப்படுத்த புதிய தமிழகம் கட்சி இணைந்து பணியாற்றும். தாழ்த்தபட்ட அமைப்புகளையும் இந்த கூட்டணிக்கு கொண்டுவர முயற்சி எடுப்பேன். 2001-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க.வுடன் அமைந்த மெகா கூட்டணியை விட வலுவான கூட்டணி வரும் தேர்தலில் அமையும் என்றார் டாக்டர்.கிருஷ்ணசாமி.

அ.இ.அ.தி.மு.க கூட்டணியில் புதிய தமிழகம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் அவர்களை, அவர்களது இல்லத்தில் நேற்று திங்கட் கிழமை, புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி அவர்கள் நேரில் சந்தித்துப் பேசினார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடைபெற்ற இச் சந்திப்பின் போது, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டாக்டர் அருணா, அமைப்புச் செயலாளர் திரு. வி.கே. அய்யர், மாணவர் அணிச் செயலாளர் திரு. பாஸ்கர் மதுரம், விருதுநகர் மாவட்டச் செயலாளர் திரு. ராமராஜ், திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் திரு. வி. சுப்பிரமணியம் மற்றும் திருச்சி மாவட்டச் செயலாளர் திரு. ஐயப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.

புதன், 25 ஆகஸ்ட், 2010

உமாசங்கர் I.A.S சத்தியம் தோற்பதில்லை!!

ஜெயலலிதா ஆட்சியின்போது நடந்த சுடுகாட்டு கூரை ஊழலை அம்பலப்படுத்தியவரும், தற்போதைய திமுக அரசு கொண்டு வந்து தற்போது முடமாகிக் கிடக்கும் அரசு கேபிள் டிவி நிறுவனத்தை, சன் டிவியின் சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்திடமிருந்து காக்கப் போராடி தற்போது ஊழல் குற்றச்சாட்டை சுமந்து நிற்பவருமான ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர், தன்னை அரசு பழிவாங்குவதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் அமைச்சர் ஒருவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு ச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்ததால் ஆத்திரமடைந்துள்ள அரசு தன்னைப் பழிவாங்கும் வகையில் ஊழல் வழக்கை ஏவி விட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், உயர்நீதிமன்றத்தில் உமா சங்கர் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறப்பட்டுள்ளது: தமிழ்நாடு பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக 1991-ம் ஆண்டு பதவியேற்றேன். 1995-ல் மதுரை மாவட்ட கூடுதல் கலெக்டராகவும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராகவும் பணியாற்றினேன். அப்போது ஜவஹர்லால்நேரு வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சுடுகாட்டு கூரை கட்டுவதற்கு ஒப்பந்தம் வழங்குவது தொடர்பாக மாவட்ட கலெக்டரின் தவறான உத்தரவை செயல்படுத்த மறுத்துவிட்டேன். 1996-ம் ஆண்டு விஜிலென்ஸ் இணை கமிஷனராக நியமிக்கப்பட்ட நேரத்தில் முன்னாள் முதல்வர், அமைச்சர்கள், மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள், அதிகாரிகள் மீது ஊழல் வழக்கு தொடர்வதற்கு பரிந்துரை செய்தேன். 1999-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை திருவாரூர் மாவட்ட கலெக்டராக பணியாற்றினேன். 2006-ல் எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும், பிறகு 2008-ம் ஆண்டு அரசு கேபிள் டி.வி.கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனராகவும் நியமிக்கப்பட்டேன். பதவி ஏற்றது முதல் எந்தவித புகாருக்கும் ஆளாகாமல் நேர்மையாகப் பணியாற்றி வருகிறேன். அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக 2008, அக்டோபர் 30-ம் தேதி நியமிக்கப்பட்டேன். சன் டி.வி. குழுமத்துக்குச் சொந்தமான சுமங்கலி கேபிள் டி.வி. நிறுவனம் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை முடக்க அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டது. எஸ்.சி.வியின் சட்டவிரோத நடவடிக்கைகள் இந்த முயற்சிகளில் இருந்து அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தைப் பாதுகாக்க முயற்சிகள் மேற்கொண்டேன். சுமங்கலி கேபிள் நிறுவனத்தின் சட்ட விரோத நடவடிக்கைகளையும் அரசின் கவனத்துக்குக் கொண்டு வந்தேன். சுமங்கலி கேபிள் நிறுவனத்தை தேசியமயமாக்குவதுடன், அமைச்சர் ஒருவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம், குண்டர் தடுப்புச் சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்தேன். இதையடுத்து, சிறுசேமிப்புகள் துறை ஆணையராக நான் பணியிடமாற்றம் செய்யப்பட்டேன். இப்போது அரசு கேபிள் டி.வி. நிறுவனம் செயலிழந்து காணப்படுகிறது. சுமங்கலி கேபிள் நிறுவனத்தை தேசியமயமாக்க வேண்டும் என்ற பரிந்துரைத்த காரணத்தால், என் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்பட்டது. சட்ட விரோதமான இந்த ஒழுங்கு நடவடிக்கைக்கு மத்திய நிர்வாக தீர்ப்பாயம் தடை விதித்தது. இதைத் தொடர்ந்து, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகக் கூறி ஊழல் தடுப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் என்னிடம் விசாரணை நடத்தினார். ஆனால், என் மீது எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பதால் அவ்வப்போது எனது சொத்து விவரங்களை அரசிடம் சமர்ப்பித்து வருகிறேன். என் மீது விசாரணை நடத்துவதற்கு சட்டப்படி அனுமதியும் பெறப்படவில்லை. ஊழல்வாதிகளைக் காப்பாற்றும் தமிழக அரசு நேர்மையாகவும், பொதுமக்களுக்கு நன்மை தரும் வகையிலும் செயல்பட்டதால் என் மீது களங்கம் கற்பிக்கும் வகையில் இந்த விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. ஊழல்வாதிகளையும், அதிகாரம் மிக்கவர்களையும் காப்பாற்றும் அரசு, அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்ததால் என்னை பழிவாங்குகிறது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக போதுமான ஆதாரங்கள் இருந்தால் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், விசாரணை என்ற பெயரில் என் மீதும், எனது குடும்பத்தினர், நண்பர்கள் மீது போலீஸாரை ஏவி விட முடியாது. இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இம்மனு நீதிபதி தனபலான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, உமாசங்கர் மீதான ஊழல் தடுப்புப் போலீஸாரின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தார். மேலும் ஜூன் 28ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார் உமாசங்கர் மற்றும் அவரது நண்பர்கள் அவரது குடும்பத்தினர் நீதிக்காக போராடும் இந்த சூழ்நிலையில் இறைவன் அவர்களுக்கு நல்ல மனவலிமையும்,துணிச்சலையும் ,இவருக்கு எதிரானவர்களுக்கு நல்ல புத்தியயும் தரட்டும்.சத்தியம் தோற்பதில்லை.

தியாகி. இம்மானுவேல் படுகொலை- கம்யூனிஸ்ட்களின் நிலைபாடு

செப்டம்பர் 11, 1957 தியாகி இம்மானுவேல் சேகரன் ஆதிக்க சாதியினரால் படுகொலையுண்ட நாள். ஆதிக்கத்திற்கு அடங்க மறுத்த முகவை தலித்துகளின் எழுச்சி முதுகுளத்தூர் கலவரத்தின் முக்கிய காரணம். அடக்கியாளப்பட்ட மக்கள் தங்கள் அடிமைத்தனத்தை உடைத்தெறிக்க முற்படும்போது அவை கலவரமாக மாறும் என்பதுதான் உலக வரலாறு. ‘அளவு மாற்றம் குணமாற்றத்தை ஏற்படுத்தும்’ என்ற மார்க்சிய விதிக்கு ஏற்ப தலித்துக்கள் அதிகமாக வாழ்ந்த முகவை மாவட்டத்தில் 52 ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட இந்த எழுச்சியின் அதிர்வுகள் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. முகவை மாவட்டத்தில் மட்டுமல்லாமல் தென்மாவட்டங்களில் இருக்கக்கூடிய தேவேந்திர இன மக்கள் ஒடுக்குமுறைக்கு எதிராக எழுச்சியுற்றமைக்கும், அவர்கள் சமூக ரீதியான அடையாளத்தை நிறுவியதற்கும் ஓர் அரசியல் சக்தியாக அணி திரள்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர் தியாகி இம்மானுவேல் சேகரன். 1943 ஆம் ஆண்டு இந்திய இரானுவத்தில் சேர்ந்த அவர், தமது இன மக்களின் ஒடுக்கு முறைக்கு எதிரான எழுச்சியை ஒருமுகப்படுத்துவதற்காக, அப்பணியிலிருந்து விலகி, 1952 முதல் தமது 33 வயதில் ஆதிக்க சாதிய வெறியர்களால் கொலை செய்யப்படும் வரை முழு நேர சமூகப் போராளியாக மக்கள் பணியாற்றியுள்ளார். 1953 ஆம் ஆண்டில் ஒடுக்கப்பட்டோர் இயக்கத்தின் தலைவராக இருந்து இராமநாதபுரத்தில் “ஒடுக்கப்பட்டோர் எழுச்சி மாநாடு” நடத்தியதும், 1954 ஆம் ஆண்டில் முதுகுளத்தூரிலும், அருப்புக்கோட்டையிலும் தேநீர் கடைகளில் இரட்டை டம்ளர் முறையை எதிர்த்து போராட்டங்களையும், மாநாடுகளையும் நடத்தியதும் தியாகி இம்மானுவேல் சேகரனின் சமூக களப்பணிக்கு மிகச்சிறந்த உதாரணங்கள் ஆகும். வரலாறுகளை புதிய பார்வையில் அணுகும் பொழுது அவை சொல்லும் செய்திகள் என்பது, ஏற்கனவே ஏற்படுத்தியுள்ள கட்டமைப்புகளை தகர்க்கக் கூடியதாக இருக்கும் என்பது தவிர்க்க இயலாதது. மாறும் என்ற வார்த்தையைத் தவிர அனைத்தும் மாறும் என்று சொன்ன மார்க்சின் தத்துவத்தை புரிந்து கொள்வதில் மார்க்சிஸ்ட்களுக்கு ஏற்பட்டிருக்கும் சமீபத்திய மாற்றம் (தலித்துகள் - வர்க்கம் குறித்த பார்வை) சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்னே ஏற்பட்டிருப்பின், இந்தியாவின் விளிம்பு நிலை மனிதர்களின் அவல நிலை இன்றைய அளவிற்கு இருந்திருக்காது என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். முதுகுளத்தூர் கலவரம் குறித்த அன்றைய கம்யூனிஸ்ட்டுகளின் நிலைப்பாடு இன்றும் தலித் அறிவு ஜீவிகளால் விமர்சனத்துக்குள்ளாக்கப்படுகிறது. சாதி இந்துக்கள் உழைக்கும் மக்களாக இருப்பினும் அவர்களின் ஆதிக்கச் செயல்பாடுகளை காண கம்யூனிஸ்ட்டுகள் மறுத்தனர். ‘முதுகுளத்தூர் கலவரத்திற்கு அரசியல் காரணங்கள் மட்டுமே கம்யூனிஸ்ட்டுகளால் முன்வைக்கப்பட்டதே தவிர, அடக்கு முறை, அதற்கு எதிரான சமூக எழுச்சி போன்ற காரணங்களை அவர்கள் ஆராயவில்லை’ என்பது தலித் பகுதியினர் கம்யூனிஸ்ட்டுகள் மீது சுமத்தும் குற்றச்சாட்டு. வர்க்கப் போராட்டம் குறித்த கம்யூனிஸ்ட்டுகளின் புரிதல் அன்றைக்கு அத்தகைய நிலைப்பாடு எடுக்க வைத்ததா? அல்லது காங்கிரஸ் எதிர்ப்பு நிலைப்பாடு என்பது முத்துராமலிங்கத் தேவர் ஆதரவு நிலைப்பாட்டில் போய்முடிந்ததா என்ற கேள்விகளுக்கு கம்யூனிஸ்ட்டுகள் தான் பதில் சொல்ல வேண்டும். இரண்டு சமூக மக்களிடையே ஒற்றுமையைக் குலைப்பதற்கே இக்கலவரம் தூண்டப்பட்டுள்ளது என்பது போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்களின் அறிக்கைகள் பிரச்சனையின் முழுப்பரிமாணத்தையும் காண மறுத்ததின் வெளிப்பாடு ஆகும். இந்நிலைப்பாடு அப்பகுதி தலித் மக்களிடமிருந்து கம்யூனிஸ்ட்டுகளை அந்நியப்படுத்தியது. அது மட்டுமல்லாமல், அவர்களை காங்கிரசுக்கு மேலும் நெருக்கமாக்கியது. பள்ளர் கட்சி, பறையர் கட்சி என்று 1950களில் அறியப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் பெரும்பாலான தலித்துக்கள் தங்களை இணைத்துக் கொள்வது இதனால் தடைப்பட்டது. தற்போதைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடான தலித் மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லுதல் என்பது வர்க்க போராட்டத்தின் ஒரு பகுதியே என்பதை தலித்துக்ளில் ஒரு பகுதியினர் நம்ப மறுப்பதற்கான காரணம் இன்னும் முதுகுளத்தூர் கலவரத்தின் காயங்கள் அவர்கள் மனதில் வடுக்களாக இருப்பதால் தான். இருப்பினும் மார்க்சிஸ்ட்டுகளின் தற்போதைய தீவிர தலித் ஆதரவுக் கொள்கை, மார்க்சியத்தைப் புரிந்துகொள்வதில் அவர்களின் பரிணாம வளர்ச்சியைக் காட்டுகிறது. சித்தாந்த ரீதியில் ஏற்பட்டிருக்கக்கூடிய இம்மாற்றம் நிச்சயமாக தேர்தல் அரசியலை முன்வைத்து அல்ல என்பதை மட்டும் உறுதியாகச்சொல்ல முடியும். இருப்பினும் வர்க்க போராட்டம் குறித்த 1990களுக்குப் பின்னான மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டினை அதன் உறுப்பினர்கள் அனைவரும் அதன் உண்மையான அர்த்தத்தில் புரிந்து கொண்டுள்ளனரா என்றால், இல்லை என்றே சொல்ல முடியும். கம்யூனிஸ்ட் கட்சியில் இருப்பினும், பெண்கள் குறித்து பல பிற்போக்கு கருத்துக்கள் கட்சி உறுப்பினர்களிடம் உள்ளது என்பதை வெளிப்படையாகக் கூறும் கட்சி, தலித்துகள் குறித்தும் இத்தகைய பார்வை, கட்சி உறுப்பினர்களிடம் உள்ளது என்பதை வெளிப்படையாகக் கூறி, அதை சரி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும். “கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கம்யூனிஸ்ட்டுகள் அல்ல” என்ற யதார்த்தத்தை தலித்துகளும் புரிந்து கொள்ளல் வேண்டும். தலித் மக்களின் விடியலுக்கு உண்மையாக பாடுபடும் தலித் தலைவர்கள் கம்யூனிஸ்ட்டுகளோடு இணைந்து இயக்கம் நடத்திட முன்வர வேண்டும். கம்யூனிஸ்ட் இயக்கங்களும், தலித் இயக்கங்களும் ஒரு மையப்புள்ளியில் சந்திக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். ஆதிக்க சக்திகளுக்கு அடங்க மறுத்து எழுச்சியுறும் ஒரு இனம், தனக்கும் கீழாக ஒரு இனம் இருக்க வேண்டும் என்ற நிலப்பிரபுத்துவ மனோபாவத்தை கைவிடுதல் என்பது தலித் மக்களின் ஒற்றுமைக்கான வளர்ச்சியை நோக்கிச் செல்லும் என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. பூர்ஷ்வா கட்சியினருடன் கூட்டணி சேர்ந்து தலித் தலைவர்கள் சட்டமன்றங்களில், பாராளுமன்றஙகளில் உறுப்பினராக இருப்பதால் மட்டும் தலித் விடியலுக்கான முழுமையான தீர்வு கிடைக்காது என்பதனையும், ஜனநாயக மன்றங்களுக்கு வெளியேயும் தங்களது போர்க்குணமிக்க போராட்டங்களின் மூலம் போராட்ட குணங்களை வளர்த்தெடுப்பது என்பது தலித் விடுதலையின் ஒரு பகுதியே என்பதையும் தலித் மக்கள் உணர வேண்டும். நிறைவாக, மேல் சாதி ஆதிக்க சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட தியாகி. இம்மானுவேல் சேகரனை “சமூக உரிமைப் போராளி” என்று தங்களது சமீபத்திய பரிணாம வளர்ச்சியின் பார்வை மூலம் மார்க்சிஸ்ட்கள் அங்கீகரிக்க வேண்டும். அணுகுமுறைகள் மாறும்பொழுது பின்னேற்பு செய்வது அவசியம் தானே? கலிலியோவுக்கு கொடுத்த தண்டனைக்கு திருச்சபை வருந்தியது என்பது ஒரு பின்னேற்பு தானே? -சிவசு.முகிலன் ( sivsumukilan@yahoo.inஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )

துரோகத்தின் நூற்றாண்டும், தியாகத்தின் பொன்விழாவும்!

துரோகத்தின் நூற்றாண்டும், தியாகத்தின் பொன்விழாவும்! செப்டம்பர் 11: இந்த நாள் பலருக்கு பயங்கரவாதிகளால் அமெரிக்க இரட்டைக் கோபுரம் இடிக்கப்பட்ட நாளாக நினைவிருக்கும். இன்னும் சிலருக்கு அமெரிக்கப் பயங்கரவாதத்தால் சிலி அதிபர் அலண்டே படுகொலை செய்யப்பட்டது நினைவு வரும். ஆனால் நம் நாட்டில், அதுவும் தமிழகத்தில் நடந்த ஒரு படுகொலையும், அதனைத் தொடர்ந்த கலவரமும் நம்மில் பலருக்கு தெரிந்திருக்குமா என்று சொல்லமுடியவில்லை. தனக்கு நிகராக எதிரில் அமர்ந்து, தன்னால் தாழ்த்தப்பட்டவர்களாக கருதப்படுவோரைத் தலைமை தாங்கி நடத்துகிறார் என்பதற்காக ஒருவர் கொல்லப் படக் கூடுமா? கூடும் என்கிறது தமிழக வரலாறு... 1957 பொதுத் தேர்தாலையும், இடைத்தேர்தலையும் ஒட்டி, முதுகுளத்தூர் பகுதிகளில் எழுந்த கொந்தளிப்புகளை அடக்க மாவட்ட ஆட்சித் தலைவர் கூட்டிய அமைதிக்கூட்டத்தில் தனக்கு நிகராக எதிரில் அமர்ந்து, தன்னால் தாழ்த்தப்பட்டவர்களாக கருதப்படுவோரைத் தலைமை தாங்கி நடத்துகிறார் என்பதற்காக கொல்லப்பட்டவர்தான்... தியாகி இம்மானுவேல் சேகரன் ஊர் ஊராகச் சென்று தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு தன் 34-ஆவது வயதிலேயே தான் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காகவே தியாக மரணத்தைச் சந்தித்த பெருமை இவருக்கு உண்டு. 'நீதானடா தேவருடன் சவால்விட்டுப் பேசியவன்' எனக்கத்திக் கொண்டே இம்மானுவேல்சேகரன் மீது தன் கொலை வெறியைத் தீர்த்துக்கொண்ட அந்தக் கூட்டம் யாரால் தூண்டப்பட்டது? அதன் தொடர்ந்து நடந்த கலவரங்களுக்கு காரணம் யார்? தன்னைப் பின்பற்றிய மக்களை முழுக்க முழுக்க தனது சுயலாபத்துக்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டு, அவர்களின் முன்னேற்றத்துக்கு எதிராகவே மாற்றியது யார்? இன்னமும் தென் மாவட்டங்களில் தொடரும் ஜாதிக் கலவரங்களுக்கு அடையாளமாக நிற்பது யார்? 'சாணான் கட்டிய பள்ளியில் படிக்கப் போகாதீங்கடா' என்று காமராஜர் கட்டிய தமிழக அரசுப்பள்ளிகளில் படிப்பதை நிறுத்தச் சொல்லி, தன் இனத்துக்கே, தன்னை நம்பிய மக்களுக்கே துரோகம் செய்தது யார்? வரலாற்றின் பக்கங்களில் தேடிப் பாருங்கள்.. இன்று புனித உருவம் கட்டப்பட்டு, தேசீயத் தலைவர் என்று புகழப்படும் ஒரு குறுகிய மனம் படைத்தவரை நோக்கி வரலாறு அழைத்துச் செல்லும். அவர் முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினரான பசும்பொன் திரு. உ.முத்துராமலிங்கம் ஆவார். விடுதலைப் போராட்ட வீரர், தீரர், போஸின் படைக்கு ஆள் அனுப்பியவர், ஆங்கில அரசால் வாய்ப்பூட்டுச் சட்டம் போடப்பட்டவர், தேசியமும் தெய்வீகமும் இரு கண்களென்றவர், மதுரை மீனாட்சிஅம்மன் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்களை அழைத்துச் செல்ல வைத்தியநாத அய்யருக்கு பாதுகாப்பாக ஆள் அனுப்பியவர்...... இப்படியெல்லாம் எனக்கு பாடநூல்கள் வாயிலாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார் உ.மு. சாந்தமான முகத்தோடும், நெற்றி நிரம்பிய பட்டையோடும், ஓவியர்களால் வரையப்பட்ட தலையின் பின்புறத்தில் சுற்றும் ஒளிவட்டங்களோடும் சில முறை... சிங்கத்தின் மேல் கை வைத்தபடி, வெறிக்கும் கண்களோடு வரையப்பட்ட ஓவியம் சிலமுறை என நான் பார்த்த தேவர் இருக்க... (அவரது பெயர் எனக்கு சிறு வயதிலிருந்தே அறிமுகம். ஒருங்கிணைந்த முகவை மாவட்டத்திலிருந்து, சிவகங்கையைத் தலைமையிடமாகக் கொண்டு எங்கள் மாவட்டம் எம்.ஜி.ஆர். அரசால் பிரிக்கப்பட்டபோது இடப்பட்ட பெயர் பசும்பொன் முத்துராமலிங்கனார் மாவட்டம். பின்னாளில் கலைஞரால் பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர் திருமகனார் மாவட்டம் என நீட்டி முழக்கப்பட்டது. எனது மாவட்டப் பெயர் என்ற வகையில் நான் அடிக்கடி புழங்கிய பெயர்.) அவர் ஜாதி வெறியர் என்பதும், ஜாதி வெறியர்களின் பதாகை என்பதும் என்னுடைய புரிதலாக இருந்தது. ஆனால் திரு.முத்துராமலிங்கம்(தேவர்) அவர்களின் உண்மை சொரூபத்தை எனக்குக் காட்டியது 'தினகரன்' நாளிதழின் நிறுவனரும், பன்னூல் ஆசிரியருமான திரு.தினகரன் அவர்கள் எழுதிய 'முதுகுளத்தூர் கலவரம்' என்னும் நூல். சில மாதங்களுக்கு முன்பு நான் படித்த அந்தப் புத்தகம்தான் தேவரின் முகத்திரையைக் கிழித்து, அவரது சுயநலப் போக்கிற்கு எவ்வாறு அந்த இனமே ஆளாக்கப்பட்டது என்பதைத் தெளிவுறுத்தியது. "முதுகுளத்தூர் கலவரத்தின் போது எத்தனை உயிர்கள் இருபுறமும் பலியாகி இருக்கின்றன? குடிசைகள் எரிக்கப்பட்டிருக்கின்றன? தேவரைக் கைது செய்து சிறையிலடைக்கும் வரை தொடர்ந்த கலவரம், முத்துராமலிங்கத் தேவர் கைதைத் தொடர்ந்து அடங்கிப் போனதேன்?" என்று கேள்வி எழுப்புகிறது விடுதலை நாளேடு. கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து ஒரு தலைவர், கண்ணீர்த்துளி(தி.மு.க)த் தலைவர் ஒருவர், ஒரு காங்கிரஸ் கண்ணீர்த்துளி தலைவர் (அநேகமாக ம.போ.சி)என மூவர் தலைமையில் சமாதானக் குழு மதுரைக்குச் சென்று தேவரின் கைதைக் குறைகூறுவதை 'எலியும், பூனையும், நாயும் ஒரே தட்டில் சாப்பிடுவது போன்ற சர்க்கஸ். சாதி வெறியர்களுக்கு ஆதரவாக ஊர்வலமாம், கடையடைப்பாம், நிதி திரட்டாம், நீதி மன்ற வழக்காம்' என்று எள்ளி நகையாடுகிறது 'விடுதலை' நாளிதழ், விசாரணையின் தீர்ப்பு என்ற தலைப்பில்.(12.10.1957) ஓட்டுக்காக என்று எல்லோரும் பயந்தபோது, கொஞ்சமும் கவலைப்படாமல் தந்தை பெரியார் தான் அன்றைய முதல்வர் காமராஜருக்கு ஆதரவாக இருந்தார். தைரியமாக களத்தில் இறங்கி, கலவரத்தை அடக்கிக் கட்டுக்குள் கொண்டுவர போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டையும் தேவர் கைதையும் முழுமையாக ஆதரித்தார். கீழத்தூவல் கலவரத்தின் போது போலீஸ் துப்பாக்கிப் பிரயோகம் செய்யாவிட்டால் இருபுறமும் நூற்றுக்கணக்கான உயிர்கள் அழிந்திருக்கும். ஆதிதிராவிடர்களின் குடிசைகள் எரிந்திருக்கும் என கவலை கொள்கிறார் பெரியார். "திரு. தேவர் அவர்களுக்கு கட்சியுமில்லை, கொள்கையுமில்லை. சுபாஷ் போஸ் உயிரோடிருக்கிறார் என்பது மட்டும் ஒரு கட்சிக்கு கொள்கைஆகிவிடுமா?" என்று கேள்வி எழுப்பும் பெரியார் ஒருவர்தான் முதுகுளத்தூர் கலவரத்தின் போது தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருந்ததாக நூலாசிரியர் தினகரன் விளக்குகிறார். ஆடு, மாடு திருட்டு வழக்கிலிருந்து, ஆளை மறித்துப் பணம் பிடுங்கிய கேஸ் வரைக்கும் எது எதற்கெல்லாம் அவர் பஞ்சாயத்துக்கு வந்தார்.. நிலம் பிடுங்கிய வழக்கு முதல், விசாரிக்க வந்த அரசு அலுவலர் கொலல வ்ரைக்கும் ஏற்கனவே என்னென்ன வழ்க்குகள், தீர்ப்புகள், நீதிபதிகள் திரு.முத்துராமலிங்கத்தின் நடத்தைக்கு வழங்கிய சான்றுகளும் விரவிக் கிடக்கின்றன. ஒரு முறை கீழ்க் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல் கோர்ட்டுக்குப் போனபோது... "ம்ம்ஹூம் பத்தாது..பத்தாது. இன்னும் கொஞ்சம் சேர்த்து ஜாமீன் வாங்கு " என்று தண்டனையை உயர்த்திய செய்திகளெல்லாம் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன. இப்படி ஒரு நபருக்குத்தான் நூற்றாண்டு விழாவாம், இன்னொரு பக்கத்தில் 100 அடி உயர சிலையாம், திருவிளக்காம், முடிகாணிக்கையாம். எமக்கு இருக்கும் வருத்தமெல்லாம் தன் இனத்துக்காக உயிரைத் தியாகம் செய்த இம்மானுவேல் சேகரனின் நினைவு நாள் பொன் விழாவைவிட, தன் இனத்தின் முன்னேற்றத்தைத் தடுத்த ஒரு துரோகத்தின் நூற்றாண்டுவிழாவை அம்மக்களும் அரசுமே எடுக்கிறதே என்பதுதான்.