ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 31 டிசம்பர், 2012

கட்டபொம்மன் வாரிசுகளுக்கான நிலத்தை "மாஜி' எம்.எல்.ஏ., அபகரித்ததாக டாக்டர்.கிருஷ்ணசாமி புகார்

சென்னை: கட்டபொம்மன் வாரிசுகளுக்கு, அரசு அளித்த நிலங்களை, அ.தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ., அபகரித்துள்ளார், என, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.

சென்னையில் அவர் அளித்த பேட்டி: ஒட்டபிடாரம் தொகுதிக்கு உட்பட்ட பாஞ்சாலங்குறிச்சியில், கட்டபொம்மனின் வாரிசுகள், 120 பேருக்கு, தமிழக அரசு, 1970ல், தலா, 3 ஏக்கர் நிலம் அளித்தது. இந்த நிலத்திலிருந்து, பெரும்பகுதியினரை வெளியேற்றி, 200 ஏக்கர் நிலத்தை, அ.தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ., மோகன் அபகரித்துள்ளார்.
அபகரித்த நிலத்திலிருந்து, கிரானைட், மணல், செம்மண் ஆகியவற்றை, சட்டவிரோதமாக எடுத்து விற்று வருகிறார். இதுகுறித்து, போலீஸ் மற்றும் முதல்வருக்கு புகார் செய்தேன்; சட்டசபையிலும், இப்பிரச்னையை எழுப்பினேன்.
இந்நிலையில், வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசாருடன், பாஞ்சாலங்குறிச்சியில் ஆக்கிரமிப்பில் உள்ள, கட்டபொம்மன் வாரிசு நிலங்களை பார்வையிட, கடந்த இருநாள்களுக்கு முன் சென்றேன். அப்போது, மோகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எங்களை தடுத்ததோடு, போலீசார் முன்னிலையிலேயே, புதிய தமிழக கட்சியினரை தாக்கினர். இதில், கட்சியின் மாவட்ட செயலர் படுகாயமடைந்து, சிகிச்சை பெற்று வருகிறார். சுதந்திரப் போராட்ட வீரரின்வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட நிலத்தை, ஆளும் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ., ஒருவரே அபகரித்து, கனிம வளங்களை கொள்ளையடித்து வருகிறார். அவருக்கு, போலீஸ் மற்றும் அதிகாரிகள் துணையாக உள்ளனர். இதுகுறித்து, உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கிருஷ்ணசாமி கூறினார்.

திங்கள், 24 டிசம்பர், 2012

இன்று கீழவெண்மணி போராளிகள் நினைவு தினம் ..... dec..25



டிசம்பர் 25ம் நாள். ஏசுகிறிஸ்து இந்த உலகில் பிறந்த நாள் என்பதாக கடைபிடிக்கப்படும் நாள். யூத மன்னர்களால் கொடுமைப்படுத்தப்பட்ட யூத மக்களுக்காக, ஏசு நாதர் பாடுபட்டார் என்பதாக படிக்கின்றோம். அடிமைகளை விடுதலை செய்து, நல்வாழ்வை அவர்கள் எய்துவதற்காக பாடுபட்ட காரணத்தினால், ஏசு நாதர் சிலுவையில் அறையப்பட்டார். சிலுவையை சுமந்து செல்லும் ஏசு நாதரை, இருபுறமும் கூடி நின்ற அடிமை மக்கள், ஆர்ப்பரித்து ஆதரவு தந்தனர். சாதி ஒடுக்கு முறையில் தவிக்கின்ற இந்தியாவிலும், ஒடுக்கப்படும் மக்கள் விடுதலை பெறுவதற்கு வழி தெரியாமல் தவிக்கின்றனர். சாதிய ரீதியான ஒடுக்கு முறைகளில், கூடுதலான சுமையை சுமப்பவர்கள், தீண்டத்தகாத மக்களாக ஆதிக்க சாதிகளால் அவமானப்படுத்தப்படும் தாழ்த்தப்பட்ட மக்கள்தான்.
மதம் மாறினாலும் இந்த நாட்டில் சாதி மாறுவதில்லை என்பதை சாதித்து வருவது நிலப்பிரபுத்துவத்தின் குணமாகயிருக்கிறது. அப்படித்தான் இதே நாளில் அந்த வெண்மணி நிகழ்ச்சி நடந்தது.

இன்றைய நாகப்பட்டினம் மாவட்டம், நேற்றைய கிழக்கு தஞ்சையாக இருந்தது. அதில் நாகப்பட்டினம் ஒரு வட்டாட்சியாக நிர்வகிக்கப்பட்டது. அதற்கு உட்பட்ட கிராமம் தான், கீழவெண்மணி கிராமம். கீழத்தஞ்சை முழுவதுமே, பெருவாரியான மக்களாக இருக்கும் தலித் மக்கள், கூலி, ஏழை விவசாயிகளாக இருந்து வருகிறார்கள். அவர்கள் மத்தியில், கீழதஞ்சையில், குறிப்பாக நாகப்பட்டினம் வட்டாரத்தில், நெல் உற்பத்தியாளர் சங்கம் என்ற பெயரில், ஆதிக்கசாதிப் பண்ணையார்கள் உருவாக்கிய அமைப்பிற்கு, கோபால கிருஷ்ணநாயுடு தலைவராக இருந்தார். அவர் தான் அந்த வட்டாரத்தின் கூலிப் போராட்டத்தை ஒடுக்குவதில் பெயர் பெற்றவர். அரைப்படி நெல்லை உயர்த்திக் கேட்டதற்காக, கூலி விவசாயிகள் அங்கே ஒடுக்கப்பட்டார்கள். அறுவடை கூலியாக காசுக்கு பதில், நெல் கொடுப்பது தான் அங்கேயிருந்து வந்த பழக்கம். உச்சக்கட்டத்திற்கு போராட்டம் சென்ற போது, பண்ணையார் கோபால கிருஷ்ணன், காவல் துறையுடன் சேர்ந்து கொண்டு, கீழவெண்மணி கிராமத்து போராடும் மக்களை ஒடுக்குவதற்காக உள்ளே நுழைகிறார். தேவேந்திரகுல வேளாளர்கள் என்று அழைக்கப்படும் தலித் மக்கள், அந்த கிராமத்தின் ஒரு பகுதியில் வசித்து வருகின்றனர்.

கூலி உயர்வு போராட்டத்தில் முன்னணி பாத்திரம் வகித்ததாக, அந்த மக்கள் மீது ஆதிக்கச்சாதி பண்ணையார் ஆத்திரம் கொள்கிறார். தன்னுடன் வந்த குண்டர் படையினை, கிராமத்து மக்கள் மீது ஏவிவிடுகிறார். அடிக்குப் பயந்து ஓடிய மக்களில் ஒரு சிலர், ஒரே குடிசைக்குள் புகுந்து ஒளிந்துகொள்கின்றனர். அவர்களை அப்படியே அந்த குடிசையோடு பூட்டி, பண்ணையார் கட்டளைப்படி, குண்டர்கள் குடிசைக்கு தீ வைத்துக் கொளுத்துகின்றனர். கொளுத்தப்பட்ட குடிசைக்குள் இருந்த தலித் கூலி விவசாயிகளில், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோர் அடக்கம். அனைவரும் அந்த பெருந்தீயில் வெந்து மடிகின்றனர். 44 பேர் அன்று நெருப்பில் கொல்லப்பட்டவர்கள். உலகின் மனச்சாட்சிக்கு, நெஞ்சமே வெடித்தது. கூலி உயர்வு போராட்டத்திற்கு, தலைமை கொடுத்து வந்த மார்க்சிஸ்ட் கட்சி அதிர்ச்சியடைந்தது.

இது நடந்தது 1968ம் ஆண்டு. அதே நேரத்தில் சி.பி.எம். கட்சியின் அரசியல் தலைமைக் குழு கூட்டம், கேரளாவில் நடந்து கொண்டிருந்தது. அந்த கூட்டத்திலிருந்து பி.டி.ரணதிவே, ஜோதிபாசு, பி.ராமமூர்த்தி ஆகியோர் திருச்சிக்குப் பறந்து வந்து, மறுநாளே வெண்மணியை அடைந்தனர். நடந்து முடிந்த கோரத் தாண்டவ கொலையைக் கண்டு பொறுக்காத, 1 லட்சம் வரையிலான கூலி விவசாயிகள் அணிதிரண்டு விட்டனர். அணிதிரண்டவர்களின் இலக்கு முழுவதும் பண்ணைஆதிக்கச் சக்தியை, பழிவாங்க வேண்டும் என்ற துடிப்பில் இருந்தது. ஆனால் அங்கே கோபாவேசத்தோடு பேசிய பி.ராமமூர்த்தி, தனது நீண்ட உரையின் மூலம் பண்ணையார்களின் கொடூரங்களை அம்பலப்படுத்தினார். அவர்களது செயல்கள் சட்டவிரோதமானவை என்பதை ஆணித்தரமாக மக்கள் மத்தியில் எடுத்துரைத்தார். அன்றைய முதல்வர் அண்ணா, 2 நாட்களாக உணவருந்தாமல் வெண்மணிப் படுகொலையால் நொந்து போயிருந்ததை, எடுத்துச் சொன்னார். கோபாவேசத்தில் பண்ணையாரை பழிதீர்த்துவிட்டால், பிரச்சனை தீர்ந்து விடுமா என்ற கேள்வியைக் கேட்டு, மக்களை சிந்திக்க வைத்தார்.

சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து, நீதிமன்றத்தின் மூலம் பண்ணையாருக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டுமென்று, நெருப்புப் பறக்கப் பேசினார். தலித் கூலி மக்களும் உணர்ச்சிகளை தலைகவிழ வைத்தனர். அன்றைக்கு அந்த பண்ணையார் தப்பித்து விட்டார். வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்றது. அமர்வு நீதிமன்றம் பண்ணையார் கோபால கிருஷ்ணனுக்கு, 10 ஆண்டுகள் கடும் சிறை என தீர்ப்புக் கொடுத்தது. திருச்சி மத்தியசிறையில், மற்ற தஞ்சை மாவட்ட கூலி விவசாயப் பின்னணி கொண்ட, கைதிகள் மத்தியில், கோபால கிருஷ்ணன் பீதியில் கம்பிகளை எண்ணிக் கொண்டிருந்தான். மேல் முறையீடு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சென்றது.

நீதியரசர்கள் பெருந்தன்மையோடு தீர்ப்புக் கொடுத்தனர். மன்னிக்கும் மனம் படைத்தவர்களாக, கோபால கிருஷ்ணனை விடுதலை செய்தனர். இத்தனை பெரிய பண்ணையார், காவல் துறையுடன் சேர்ந்துக் கொண்டு, தலித் கிராமத்திற்குள் நுழைந்து குடிசைக்கு நெருப்பிடுவார் என்பது நம்பமுடியாத குற்றம் என்று விளக்கமும் கொடுத்தார். பி.ராமமூர்த்தி எதிர்பார்த்த தண்டனையை, நீதிமன்றம் கொடுக்கத் தயாராயில்லை. அதை நம்பி தாங்கள் தரயிருந்த தண்டனையை, தள்ளிப்போட்ட கூலி விவசாயிகள் விரக்தியின் விளிம்புக்கு தள்ளப்பட்டனர். சி.பி.எம்.கட்சி வெண்மணி தியாகிகளுக்கு, அதேயிடத்தில் நினைவு இல்லம் கட்டியது. 12 ஆண்டுகள் உருண்டோடின. 1980ம் ஆண்டில் டிசம்பர் மாதம் வந்தது. 3வது வாரம் தொடங்கும் போதே, கமுக்கமாக பணியாற்றிவந்த தலைமறைவு புரட்சியாளர்களான, நக்சல்பாரி இயக்க கொரில்லாக்கள், கோபால கிருஷ்ணனை தியாகிகள் நினைவிடம் அருகிலேயே வெட்டிச் சாய்த்தனர். வினோத் மிஸ்ரா வாழ்க என தங்கள் தலைவர் பெயரில் துண்டறிக்கைகளை எறிந்து சென்றதாக காவல்துறை குற்றஞ்சாட்டியது. தமிழ்நாடெங்கும் பாதிக்கப்பட்ட மக்கள் இனிப்புக் கொடுத்தனர்.

இதுதான் வரலாற்றில் பதிவான ரத்தசாட்சியங்களின் தழும்புகள். நீதிமன்றம் நீதிகொடுக்க தவறிவிட்டால், மக்கள் மன்றம் தன் கையில் எடுத்துக்கொள்ளுமோ என்ற கேள்வியும் கூட இங்கே படிப்பினையானது. சட்டத்தின் முன்னே அனைவரும் சமம். ஏழையென்றும், எளியரென்றும் சட்டம் வளையாது. நாம் அந்த தாரகமந்திரத்தை உச்சரித்துக் கொண்டேயிருப்போம்.

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

பசுபதி பாண்டியன்


புகைப்படம்

மள்ளர் மன்னன் கட்டிய கோவிலுக்கு வயது 1800!


கருவூர் மாவட்டம் நெரூரில் சுமார் ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் மள்ளர் மன்னன் ஒருவரால் கட்டப்பட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. தற்போது அந்த கோவிலின் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த கோவிலை பராமரிக்கும் பணியை சிவனடியார்கள் செய்து வருகின்றனர். கோவிலில் தினமும் தமிழ் முறைப்படி தேவாரம் திருவாசகம் படித்து வழிபாடு நடைபெறுகிறது! மேலும் கோவிலின் அருகே குடியிருக்கும் சிறுவர் சிறுமிகளுக்கு இலவயமாக தேவாரம் திருமுறை பாடல்கள் சிவனடியார்களால் கற்பிகபடுகிறது. தமிழர் களத்தின் மாநில அமைப்பாளர் திரு.அரிமாவளவன் மற்றும், கருவூர் மாவட்ட தமிழர்கள பொறுப்பாளர்கள் அந்த கோவிலில் வழிபட்டபோது எடுத்த ஒளிபடங்கள் .
தமிழ் தொண்டாற்றும் சிவனடியார்களை தேவேந்திரர் குரல்  வாழ்த்துகிறது !

ராஜபக்ஷேவிற்கு எதிர்ப்பு - ஆனால் போராட்டம் இல்‌லை


ராஜபக்ஷேவிற்கு எதிர்ப்பு - ஆனால் போராட்டம் இல்‌லை : கருணாநிதி # எனது மகளின் தாயார் என்றாலும் எனது மனைவி என்று சொல்ல மாட்டேன் , மத்திய அரசாங்கத்திற்கு கண்டனம் ஆனால் ஆதரவு வாபசில்லை , தண்டவாளத்தில் தலை வைப்பேன் ஆனால் ரயில் வராது ....... பிரபாகரனை ஆதரிக்கவில்லை , ஆனால் இறந்த புலிகளுக்கு இரங்கற்பா வாசிப்பேன் .... சாமியார்களை கண்டிப்பேன் ஆனால் சாய்பாபாவிடம் குங்குமம் வாங்கிக் கொள்வேன் ..
...முதுகெலும்பில் அறுவை சிகிச்சை என்று கூறுவேன் , ஆனால் மல்லாக்க படுத்துக் கொண்டு போஸ் கொடுப்பேன் .... கண்ணகிக்கு சிலை எழுப்புவேன் , ஆனால் கண்ணியம் இல்லாமல் பெண் உறுப்பினரைப் பாவாடையை தூக்கிப் பார்க்கச் சொல்வேன் , டெசோ ஈழத்திற்கு போராடும் , ஆனால் தனி ஈழ தீர்மானங்கள் இருக்காது , போர் நின்றுவிட்டது என்று பிரணாப் தான் தவறான செய்தியைக் கொடுத்தார் என்பேன் , ஆனால் அவர் ஜனாதிபதி ஆவதற்கு நான் முதல் ஆளாக முன்மொழிவேன் .... அதே வரிசையில் , இப்பொழுது ராஜபக்சேவை எதிர்ப்பேன் , ஆனால் போராட்டமில்லை .....இதனால் தான் என்னை அந்தர் பல்டி ஆரூர் தாத்தா என்று என்னை அழைக்கிறார்கள் ...

வெள்ளி, 21 டிசம்பர், 2012

தேவேந்திரகுல வேளாளர் அரசாணை பிறப்பிக்க வலியுறுத்தி புதியதமிழகம் கட்சி மும்முனைப் போரட்டம்



தொல்காப்பியருடைய காலத்தில் மருத நில மக்களாக அடையாளப்படுத்தப்பட்ட வேளாண்குடிமக்கள் இன்றைய தேவேந்திர குல வேளாளர்கள் ஆவர். காலப்போக்கில் அத்தொன்மை வாய்ந்த தமிழ்குடி மக்கள் பள்ளர், குடும்பர், காலாடி, பண்ணாடி, கடையர் என மருவி அழைக்கப்பட்டு வருகின்றனர். பல்வேறு பெயர்களில் அழைக்கப்படக்கூடிய வேளாண்குடி மக்களை தேவேந்திர குல வேளாளர்என ஒரே பெயரில் அழைத்திட அரசாணை பிறப்பிக்க உரிய சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்
 அரசு மற்றும் பொது நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை பெறும் பொருட்டு  சமூகம், பொருளாதாரம், வேலை வாய்ப்பில் புறக்கணிக்கப்பட்ட மக்களை அகில இந்திய அளவில் ஒருங்கிணைத்துஅட்டவணை சமுதாய மக்கள்என அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வகைப்படுத்தினார். தமிழகத்தில் அட்டவணைப்படுத்தப்பட்ட பிரிவில் 76 சாதிகள் உள்ளடங்குவர். இதில் பள்ளர் என்றதேவேந்திர குல வேளாளர்சக்கிலியர் என்றஅருந்ததியர்பறையர் என்றஆதிதிராவிடர்ஆகிய மூன்று பிரிவினர் பெரும்பான்மையினர் ஆவர்.
அகில இந்திய அளவிலும் மற்றும் பிற மாநிலங்களிலும் இதே போன்று அட்டவணைக்குள் அடங்கிய பல்வேறு இன மக்களை தனித்தனியாக அந்த சாதியினுடைய பெயராலும், இட ஒதுக்கீட்டை பெறும் பொருட்டு அரசால் வழங்கப்படும் சான்றிதழ்களில் எஸ்.சி அல்லது அட்டவணை சாதி என்று அழைக்கப்படுகின்றனர். தமிழகத்தில் 1980 ஆம் ஆண்டு சில மூத்த ..எஸ் அதிகாரிகளின் தவறான நடவடிக்கையால் அட்டவணை சாதிக்கு உட்பட்ட 76 சாதிகளையும் ஆதிதிராவிடர்கள்என்று அப்பட்டியலில் உள்ளடங்கிய ஒரு சாதியின் பெயரால் அழைக்கப்படும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டு அதைத் தொடர்ந்து இன்று வரையிலும் நீடித்து வருகிறது.
இந்த தவறான நடவடிக்கையின் காரணமாக பட்டியலினமக்களிடையே தேவையற்ற முரண்பாடுகளும், ஒற்றுமையின்மையும் நிலவி வருகிறது.எனவே பட்டியலின மக்களின் நலன்களுக்கான அரசுத்துறைக்குஆதிதிராவிடர் நலத்துறைஎன இதுவரை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள உத்தரவுகள் அனைத்தையும் ரத்து செய்துபட்டியலின மக்கள்என பொதுவாக அழைத்திட வலியுறுத்தியும்
 அட்டவணை மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் எந்த ஒரு மாற்றம் செய்வதற்கு மாநில அரசிற்கு தனியாக உரிமை இல்லை. கடந்த காலங்களில் ஆந்திரா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் அந்த அரசு கொண்டு வந்த உள் இட ஒதுக்கீடு சட்டங்கள் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 2008 ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த தி.மு.. அரசு தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கான 18 சதவிகித இட ஒதுக்கீட்டை அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு என்ற பெயரில் சிதைத்து, மேலும் இந்தியா முழுமைக்கும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பொது பிரிவினருக்கு அடுத்தபடியாக முன்னுரிமை பெற்றிருந்த அனைத்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கான முதல் வாய்ப்பை தமிழகத்தில் மட்டும் பட்டியலின மக்களில் 3 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கக்கூடிய  சக்கிலியர் அல்லது அருந்ததியர் என்று அழைக்கப்படக்கூடிய ஒரு பிரிவினருக்கு மட்டுமே கிடைக்ககூடிய வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அதன் விளைவாக கடந்த மூன்று வருடங்களாக பல்கழைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணியிடங்கள் அரசு உதவி பெறக்கூடிய பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உருவான அனைத்து ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் அரசினுடைய 110 துறைகளில் உயர் பதவிகள் அனைத்தும் அருந்ததியர் என்ற ஒரே சாதிக்கு மட்டுமே தாரை வார்க்கப்பட்டது.
இதன் காரணமாக  பள்ளர் எனும்தேவேந்திரகுல வேளாளர்கள்”, பறையர் என்று அழைக்கப்படக்கூடிய  ”ஆதிதிராவிடர்கள்உட்பட பிற 70 சாதி மக்களின் படித்த பிள்ளைகள் எண்ணற்ற வேலை வாய்ப்புக்களை இழந்துள்ளனர். முந்தைய தி.மு.. அரசு கொண்டு வந்த பல திட்டங்களை ரத்து செய்துள்ள இந்த அரசு தி.மு.. அரசு கொண்டுவந்த உள் இட ஒதுக்கீடு சட்டத்தை மட்டும் ரத்து செய்ய தயக்கம் காட்டுகிறது.
இந்த அரசு உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்த தேவேந்திர குல வேளாளர் மற்றும் ஆதிதிராவிடர்களு இது  பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது. எனவே பட்டியலின மக்களின் பெரும்பான்மை பிரிவினரின் உரிமையைப் பறிக்கும் உள் இட ஒதுக்கீட்டை உடனடியாக ரத்து செய்யயும் வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பாக பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் மும்முனைப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்று டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் கூறினார்.

வியாழன், 20 டிசம்பர், 2012

குவாரியில் மோதல்: கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. உட்பட 32 பேர் மீது வழக்குப் பதிவு

தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் அருகே ஒரு கல் குவாரியில் ஏற்பட்ட மோதலில் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. உள்ளிட்ட 32 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி அருகே உள்ளது ஓட்டப்பிடாரம். இந்த தொகுதிக்குட்பட்ட பகுதியில் வெள்ளாரம் என்ற கிராமத்தில் கல்குவாரி ஒன்றை முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. மோகனின் உறவினர் வீரபெருமாள் என்பவர் அரசு அனுமதியுடன் நடத்தி வருகிறார். இங்கு முறைகேடுகள் நடப்பதாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவரும், ஓட்டப்பிடாரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் கிருஷ்ணசாமி தனது ஆதரவாளர்கள் 7 பேருடன் கல்குவாரியை ஆய்வு செய்ய சென்றார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வீரபெருமாள் முன்னாள் எம்.எல்.ஏ. மோகனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த மோகன் டாக்டர் கிருஷ்ணசாமியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் இரு தரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் உருட்டுக்கட்டையால் தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு தரப்பினரையும் சமரசம் செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரனை நடத்தினர். இதில், வீரபெருமாள் கொடுத்த புகாரின்பேரில் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ., அவரது ஆதரவாளர் பட்டவராயன், கண்ணப்பன், சுப்ரமணியன் உட்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். அதே போல, கிருஷ்ணசாமி தரப்பைச் சேர்ந்த பட்டவராயன் கொடுத்த புகாரின் பேரில் முன்னாள் எம்.எல்.ஏ. மோகன், வீரபெருமாள் உட்பட 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் மேலும் கலவரம் வெடிக்குமோ என பொது மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

புதிய தமிழகம் கோரிக்கைகள் அதிமுக., அரசு புறக்கணிப்பு

கடையநல்லூர் : எங்களது கோரிக்கைகளை அதிமுக., அரசு நிறைவேற்றவில்லை எனவும், சங்கரன்கோவில் அதிமுக வெற்றிக்கு புதிய தமிழகம் தான் முக்கிய காரணமாக இருந்தது எனவும் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். புதிய தமிழகம் கட்சியின் 15ம் ஆண்டு விழா சிறப்பு மாநாடு கடையநல்லூரில் நடந்தது. கட்சியின் நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ.,தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் அய்யர், நிலக்கோட்டை எம்.எல்.ஏ., ராமசாமி, மாவட்ட செயர் சுப்பிரமணியன் உட்பட பலர் பேசினர். கூட்டத்தில் எம்எல்ஏ., கிருஷ்ணசாமி பேசியதாவது: கட்சி துவங்கப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது என்றால் அது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கட்சியின் மாநாடுகளை பல்வேறு மாவட்டங்களில் புதிய தமிழகம் நடத்தி காட்டியது. யாரிடமும் நிதி கேட்டு செல்லும் கட்சியாக ஒருபோதும் இருந்ததில்லை. கொள்கை அடிப்படையில் தான் புதிய தமிழகம் செயல்பட்டு வருகிறது. எவ்வித பிரதிபலன்களை எதிர்பார்க்காமல் ஏழை, எளிய மக்களுக்காக உருவான இயக்கம் தான் புதிய தமிழகம். பதவியை நோக்கியும் கட்சி ஆரம்பிப்பார்கள், வெற்றியை எதிர்பார்த்தும் கட்சியை ஆரம்பிப்பார்கள். ஆனால் புதிய தமிழகம் மக்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு கொள்கை அடிப்படையில் உருவான கட்சியாக திகழ்ந்து வருகிறது. காங்., ஆட்சிக்கு பின் தொடர்ந்து தமிழகத்தில் திமுக, அதிமுக மாறி, மாறி ஆட்சி அமைத்து வரும் நிலையில் புதிய தமிழகம் மக்கள் நலனுக்காக அரசியல் இயக்கங்களில் ஈடுபட்டு தமிழகத்தில் முக்கியத்துவம் பெற்ற கட்சியாக செயல்பட்டு வருகிறது. மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் பிரச்னைக்கு முதலில் குரல் கொடுத்த கட்சி புதிய தமிழகம் தான். அன்றைய தினம் 150 ரூபாய் சம்பளம் நிர்ணயம் செய்ய வேண்டுமென்ற கருத்தை இன்று பல்வேறு கட்சிகள் சட்டசபையில் கூறி வருகின்றனர். கடந்த தேர்தலில் குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து அதிமுகவிடம் புதிய தமிழகம் தேர்தல் கூட்டணி அமைத்தது. ஆனால் இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றும் இதுவரை அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. திமுக ஆட்சியில் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தை ஆஸ்பத்திரியாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வரும் முதல்வர் அண்ணா நூற்றாண்டு மண்டபத்தையும் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியாக மாற்றுவதற்கு உத்தரவிட்டார். அப்படியிருக்கும்போது புதிய தமிழகம் முன்வைத்த கோரிக்கைகளை மட்டும் ஏன் யோசிக்க வேண்டும். புதிய தமிழகத்தை பொறுத்தவரை ஆதரித்தாலும் முழுமையாக ஆதரிக்கும், எதிர்த்தாலும் முழுமையாக எதிர்த்து செயல்படும். சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் அதிமுகவிற்கு புதிய தமிழகம் ஆதரவு அளித்தது. அப்பகுதியில் புதிய தமிழகம் கட்சியின் 40 ஆயிரம் வாக்குகளை கூட்டணியில் இடம் பெற்ற அதிமுகவிற்கு பெற்று தந்தோம். ஆனால் அதன்பிறகும் கூட எங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. ஜனநாயக நாட்டில் மக்களுக்கு இருக்கும் ஒரே உரிமை ஓட்டுரிமைதான். எனவே சட்டசபை தேர்தலில் ஒரு முடிவு, பார்லி., தேர்தலில் ஒரு முடிவு என்ற சூழ்நிலையை அதிமுக அரசு புதிய தமிழகத்திற்கு ஏற்படுத்தும் சூழ்நிலை தரவேண்டாம். இரண்டு ஆண்டுகளாக எத்தனை முறைதான் எங்கள் கோரிக்கை குறித்து குரல் கொடுப்பது. தமிழகத்தில் புதிய தமிழகம் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டங்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி முதல் துவங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் வேளாண்குடி மக்களை தேவேந்திரகுல வேளாளர் என ஒரே பெயரில் அழைத்திட அரசாணை பிறப்பிக்கவும், ஆதிதிராவிடர் என்ற பெயராலும், ஆதிதிராவிடர் நலத்துறை எனவும் இதுவரை தமிழக அரசு பிறப்பித்துள்ள அனைத்து உத்தரவுகளையும் ரத்து செய்து அட்டவணை மக்கள் அல்லது பட்டியல் இன மக்கள் என பொதுவாக அழைத்திட வேண்டுமெனவும், தமிழகத்தில் உள்ள உள் இடஒதுக்கீட்டை உடனடியாக ரத்து செய்திடவும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கடையநல்லூர் புதிய தமிழகம் ஒன்றிய செயலாளர் குமார், தொகுதி பொறுப்பாளர் சுடலைத்துரை, மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆறுமுகச்சாமி, நகர செயலாளர் முருகையா, கவுன்சிலர்கள் மகேஸ்வரி, ராஜா, நகர துணை செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக புதிய தமிழகம் கட்சி சார்பில் நலிந்தோருக்கு நலத்திட்டங்களை கட்சி தலைவர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ., வழங்கினார்.

சனி, 15 டிசம்பர், 2012

புதிய தமிழகம் சார்பில் ரத்த தான முகாம்


 திருநெல்வேலியில் புதிய தமிழகம் கட்சியின் 15-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரத்த தான முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகர் மாவட்ட செயலர் எம்.எஸ். செல்லப்பா தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி செயலர் வீரா. அரவிந்தராஜா, முன்னாள் மாவட்ட செயலர் கே. நடராஜன், மானூர் வடக்கு ஒன்றிய செயலர் வே. மாரியப்பன், தெற்கு ஒன்றிய செயலர் ஏ. மகாராஜன், பாளை. பகுதி செயலர் வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 30-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.

ஓரணியில் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்கள்




இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தை வென்றெடுக்கும் விதமாக  மகாராஷ்டிரா மாநிலத் தலைநகரான மும்பையில் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்கள் ஒன்றிணைந்த கூட்டம் நடைபெற்றது.மும்பையில்   டிசம்பர் 12 அன்று நடைபெற்ற கூட்டத்தில் லோக் ஜனசக்தி ராம்விலாஸ்  பாஸ்வான்,இந்தியக் குடியரசு கட்சித் தலைவர். ராம்தாஸ் அத்வலே , புதிய தமிழகம்  கட்சியின் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி அவர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைவர்கள் ஒன்று கூடினர்.
இதில் கலந்து கொண்ட புதிய தமிழகம் கட்சித் தலைவர்  டாக்டர்.கிருஷ்ணசாமி அவர்கள் “ஒடுக்கப்பட்ட மக்களிடையே ஒற்றுமை அவசியம்,சம உரிமையை வென்றெடுக்க ஓரணியில்,ஒரே அரசியல் இயக்கமாக திரள வேண்டும்,மத்திய,மாநில அரசுகளின் அரசியல் அதிகாரத்தில் பங்கெடுக்க அனைத்து மக்களும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும்” என்று தனது கருத்துக்களை முன் வைத்தார்.
முன்னதாக கோவையில் இருந்து விமானம் மூலம் மும்பை  வந்த டாக்டர்.கிருஷ்ணசாமி அவர்களுக்கு மும்பை வாழ் தேவேந்திர குல வேளாளர் சர்பாக பூமிநாதன்,ராமையா,சூசை உள்ளிட்ட ஏராளமானோர் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தனர்.