ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

தூக்கு தண்டனை பற்றி பேச அனுமதி மறுப்பு: சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்கிறேன்: கிருஷ்ணசாமி


சட்டசபையில் இன்று (26.08.2011) புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஒரு பிரச்சினை பற்றி பேச அனுமதி கேட்டார். சபாநாயகர் ஜெயக்குமார், இந்த பிரச்சினை குறித்து பின்னர் எனது அறையில் வந்து பேசுங்கள். தற்போது பேச அனுமதி இல்லை என்றார். கிருஷ்ணசாமியின் பேச்சு அவை குறிப்பில் இடம் பெறாது என்றும் அறிவித்தார்.இதையடுத்து அவர் இருக்கையில் அமர்ந்தார். சிறிது நேரம் கழித்து மீண்டும் அதே பிரச்சினை குறித்து பேச முயற்சி செய்தார். அதற்கும் சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து கிருஷ்ணசாமி சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.அவையில் இருந்து வெளியேறிய பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கிலிடுவதற்காக உத்தரவு வந்துள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் தூக்கிலிடும் நிலைமை உள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் அவர்களை காப்பாற்ற கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தால் மட்டுமே அவர்கள் உயிரை காப்பாற்ற முடியும். கடந்த ஒரு வருடமாக இந்த பிரச்சினையை சட்டசபையில் எழுப்ப முயற்சி செய்து வருகிறேன். ஏற்கனவே 2 முறை இதற்கு எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. இன்றும் அனுமதி கேட்டேன். சபாநாயகர் அனுமதி வழங்க வில்லை. எனவே நான் வெளிநடப்பு செய்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

தூக்கு தண்டனை ரத்து :டாக்டர் கிருஷ்ணசாமி வேண்டுகோள்திருநெல்வேலி:தூக்கு தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் மூவரின் உயிர்காக்கப்படுவது முதல்வர் ஜெயலலிதா கையில் உள்ளது என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி நெல்லையில் கூறியதாவது:ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கு தண்டனையில் இருந்து விடுவிக்கவேண்டும் என பல்வேறு அமைப்புகளும் போராடிவருகின்றன.இலங்கை அரசுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கும் தீர்மானம் உள்படதமிழர்களுக்கு ஆதரவாக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகிறார். இதனால் உலக தமிழர்கள்மத்தியில் ஜெ., மீதான மரியாதை உயர்ந்திருக்கிறது.எனவே அவருக்கு இந்த விஷயத்தில் இக்கட்டான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த மூவருக்குமான தூக்குதண்டனையை நிறுத்தவேண்டிய இறுதி முடிவுதமிழக முதல்வரின் கையில் உள்ளது. இதற்கு முன்பும் கேரளாவில் சி.ஏ.,பாலன் தூக்குதண்டனையும் ஆந்திராவில் இருவரதுதூக்கு தண்டனையும் ரத்தாகியிருக்கிறது. எனவே இந்திய அரசமைப்பு சட்டப்பிரிவு 161ன்படி தமிழக அரசு மேற்கொள்ளும் முடிவின் அடிப்படையில் தூக்கு தண்டனை கைதிகள் விடுவிக்கப்படலாம். எனவேதமிழக அரசு அதற்கான முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்றார்

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

ஓட்டப்பிடாரத்தில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
ஓட்டப்பிடாரத்தில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.


தமிழக முதல்வர் ஜெயலிதா ஆட்சி பொறுப்பேற்றவுடன் விதவை, முதியோர், ஊனமுற்றோர் உதவித் தொகையினை ஆயிரம் ரூபாயாக அதிகரித்து உத்தரவிட்டார். ரேசன் கார்டு இல்லாத நபர்களுக்கு உடனடியாக ரேசன் கார்டுகள் வழங்கிடவும் அறிவிப்பு வெளியிட்டார்.

அதனடிப்படையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் நான்கு இடங்களில் பொதுமக்கள் குறை கேட்கும் முகாம்கள் நடத்தப்பட்டது. பின்னர் சட்டமன்ற உறுப்பினர் கிராமம் தோறும் நன்றி அறிவிப்பு கூட்டங்கள் நடத்தியும் மனுக்களைப் பெற்றார். அந்த மனுக்கள் அனைத்தும் அதிகாரிகள் மூலம் உரிய விசாரணை செய்யப்பட்டு பின்னர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை ஓட்டபிடாரத்தில் ரேசன்கார்டுகள் மற்றும் முதியோர், விதவை, ஊனமுற்றோர் உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தனித் துணை ஆட்சியர் லதா, தாசில்தார் மணி, துணை தாசில்தார் ராமசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜாமணி, சமூக நலத்திட்ட தாசில்தார் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட விதவைகள், முதியோர், ஊனமுற்றோருக்கான தமிழக அரசின் உதவித் தொகைக்கு உத்தரவு வழங்கப்பட்டது. மொத்தம் 271 நபர்களுக்கு இந்த உதவிக் தொகையினை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். க.கிருஷ்ணசாமி அவர்கள் வழங்கினார். மேலும் 70 நபர்களுக்கு ரேசன் கார்டுகள் புதிதாக வழங்கப்பட்டது. முப்பத்தி இரண்டு லட்சத்து ஐம்பத்தி இரண்டாயிரம் மதிப்பிலான தேசிய ஊனமுற்றோர் உதவித் தொகை, ஆதரவற்ற மற்றும் கணவனை இழந்த பெண்களுக்கான விதவைகள் உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டது.

வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்- டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ ஆதரவு
பேரறிவாளன்,சாந்தன்,முருகன் ஆகிய மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யகோரி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கயல்விழி,வடிவம்பாள்,சுஜாதா ஆகியோர் கோயம்பேடு அருகே தனியார் கட்டிடத்தில் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகின்றனர். அவர்களை புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.சனி, 27 ஆகஸ்ட், 2011

ராஜீவ் கொலை வழக்கு தூக்கு தண்டனை தேதி குறிப்பு.சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்கிறேன்: டாக்டர் கிருஷ்ணசாமி

ராஜீவ் கொலை வழக்கு தூக்கு தண்டனை தேதி குறிப்பு.சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்கிறேன்: டாக்டர் கிருஷ்ணசாமி


ராஜீவ் கொலை வழக்கு தூக்கு தண்டனை தேதி குறிப்புஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் வரும் செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி தூக்கு தண்டனை விதிக்கப்படும் என்று வேலூர் மத்திய சிறைச்சாலையின் கண்காணிப்பாளர் அறிவுடைநம்பி தமிழோசையிடம் உறுதிப்படுத்தினார். இது குறித்த அதிகாரபூர்வ தகவல் தமக்கு அளிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

1991 ஆம் ஆண்டு மே மாதம் ராஜிவ் காந்தி சென்னையை அடுத்த ஸ்ரீபெரம்பதூரில் விடுதலைப் புலி தற்கொலை குண்டுதாரியால் கொல்லப்பட்டார்.

அதன் பின்னர், மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் கைதான முருகன், பேரறிவாளன், சாந்தன் மற்றும் நளினி ஆகிய நால்வருக்கும் இந்திய உச்சநீதிமன்றம் 1999 ஆம் ஆண்டு தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

பின்னர், காங்கிரஸ் தலைவரான ராஜிவ் காந்தியின் மனைவி சோனியாகாந்தியின் பரிந்துரையின் பேரில் நளினியின் கருணை மனு ஏற்கப்பட்டு அவரின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

20 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்தை சிறையில் கழித்த இந்த மூவரையும் தூக்கிலிடக் கூடாது என்று மனித உரிமை அமைப்புக்களும், சில அரசியல் தலைவர்களும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இவர்களை தூக்கிலிட தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் கொலை வழக்கு விசாரணையில் குற்றம் சாட்டவர்கள் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் புகழேந்தி, இந்த விடயத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு தூக்கு தண்டனையை நிறுத்துவார் என்று அந்த மூவரும் நம்பியிருந்ததாகத் தெரிவித்தார்.

வெள்ளிக் கிழமையன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் நாள் குறித்து அந்த மூவருக்கும் முறைப்படி தெரிவிக்கப்பட்டதாகவும், அதன் பிறகு தான் அவர்களை சந்தித்த போது அம் மூவரும் நம்பிக்கையுடன் காணப்பட்டதாகவும் புகழேந்தி தமிழோசையிடம் தெரிவித்தார்.

அதேநேரம் தமிழக சட்டசபையில் இது தொடர்பாக ஒரு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வர புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எடுத்த முயற்சிகளுக்கும் பயன்கிட்டவில்லை. இது குறித்து டாக்டர் கிருஷ்ணசாமி சட்டசபையில் கூறிய கருத்துக்களும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுவிட்டது.


பிறகு தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட டாக்டர் கிருஷ்ணசாமி, இந்தப் விடயத்தை முதல்வர் ஜெயலலிதா அவையில் இருந்த சமயத்தில் மூன்று முறை தான் எழுப்ப முயன்றதாகவும், ஆனால் தனக்கு ஆதரவாக எந்த ஒரு உறுப்பினரும் குரல் கொடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

தூக்கு தண்டனை பற்றி பேச அனுமதி மறுப்பு: சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்கிறேன்: டாக்டர் கிருஷ்ணசாமி

 சட்டசபையில் இன்று (26.08.2011) புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஒரு பிரச்சினை பற்றி பேச அனுமதி கேட்டார். சபாநாயகர் ஜெயக்குமார், இந்த பிரச்சினை குறித்து பின்னர் எனது அறையில் வந்து பேசுங்கள். தற்போது பேச அனுமதி இல்லை என்றார். கிருஷ்ணசாமியின் பேச்சு அவை குறிப்பில் இடம் பெறாது என்றும் அறிவித்தார்.


இதையடுத்து அவர் இருக்கையில் அமர்ந்தார். சிறிது நேரம் கழித்து மீண்டும் அதே பிரச்சினை குறித்து பேச முயற்சி செய்தார். அதற்கும் சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து கிருஷ்ணசாமி சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.அவையில் இருந்து வெளியேறிய பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கிலிடுவதற்காக உத்தரவு வந்துள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் தூக்கிலிடும் நிலைமை உள்ளது.தமிழக சட்டமன்றத்தில் அவர்களை காப்பாற்ற கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தால் மட்டுமே அவர்கள் உயிரை காப்பாற்ற முடியும். கடந்த ஒரு வாரமாக இந்த பிரச்சினையை சட்டசபையில் எழுப்ப முயற்சி செய்து வருகிறேன். ஏற்கனவே இரண்டுமுறை இதற்கு எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. இன்றும் அனுமதி கேட்டேன். சபாநாயகர் அனுமதி வழங்க வில்லை. எனவே நான் வெளிநடப்பு செய்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

திங்கள், 8 ஆகஸ்ட், 2011

கருணாநிதியின் குடும்ப சொத்துப் பட்டியல்
அண்மையில் பிரதமரே வியந்து போனார் எனும் அடைமொழியோடு கருணாநிதியின் ஒட்டுமொத்த குடும்ப சொத்துப் பட்டியல் என்று ஒன்று வெளியாகி உலாவந்து கொண்டிருக்கிறது. இந்தியர்கள் வெளிநாட்டு வங்கிகளில் வைத்திருக்கும் கருப்புப் பண பட்டியல் என்று அசாஞ்சே ஒரு பட்டியல் வெளியிட்டிருக்கிறார். பட்டியல்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அதிலிருந்து பெற வேண்டிய படிப்பினைகள் ……. ?

உழைத்த களைப்பும் வெளியேறிய வியர்வையும் ஒரு தேநீர் வேண்டும் என்று தொண்டையில் போராட்டம் நடத்த அனிச்சைச் செயலாய் சட்டைப்பையை தடவிப்பார்த்துவிட்டு எச்சில் விழுங்கி சமாதானமடையும் எண்பது கோடிப்பேர் உலவும் இந்நாட்டில், இவர்களை மனிதர்கள் என்றா கூறமுடியும்?

இது “தி அதர் சைட்” எனும் மாத இதழ் வெளியிட்டிருக்கும் கருணாநிதியின் குடும்ப சொத்துப் பட்டியல்
1. 6,124 சதுர அடிகள் பரப்பளவு​கொண்ட கருணாநிதியின் கோ​பாலபுரத்து வீடு – மதிப்பு 5 கோடி.
2. முரசொலி மாறனின் கோ​பாலபுரத்து வீடு – மதிப்பு 5 கோடி.
3. 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட முரசொலி செல்வத்தின் கோபாலபுரத்து வீடு – மதிப்பு 2 கோடி.
4. கோபாலபுரத்தில் சொர்ணத்தின் வீடு – மதிப்பு 4 கோடி.
5. கோபாலபுரத்தில் மு.க.முத்துவின் வீடு – மதிப்பு 2 கோடி.
6. கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு – மதிப்பு 5 கோடி.
7. மகள் செல்வி, எழிலரசியின் கோபாலபுரம் வீடு – மதிப்பு 2 கோடி.
8. சி.ஐ.டி காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில் 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் வீட்டு மதிப்பு – 12 கோடி.
9. மண்ணிவாக்கம் கிராமத்தில் ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும் இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு 4.5 கோடி.
10. ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் ராஜாத்தி அம்மாளின் ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு – 10 கோடி.
11. 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி வீட்டு மதிப்பு – 2 கோடி.
12. நுங்கம்பாக்கத்தில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு – 2 கோடி.
13. சென்னை போட் கிளப்பில் இருக்கும் கலாநிதி மாறனின் 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு மட்டும் – 100 கோடி.
14. கொட்டிவாக்கத்தில் இருக்கும் மாறன் சகோதரர்களின் பண்ணை வீட்டின் மதிப்பு – 10 கோடி.
15. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு – 2 கோடி.
16. 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் ‘முரசொலி’ அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு – 20 கோடி.
17. மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு – 5 கோடி.
18. சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு – 100 கோடி.
19. கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின் மதிப்பு – 50 கோடி.
20. பெங்களூருவில் இருக்கும் செல்வத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு – 4 கோடி.
21. பெங்களூரு – மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செல்வியின் ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு – 80 கோடி.
22. மாறன் சகோதரர்களின் 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு – 120 கோடி.
23. பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு – 108 கோடி.
24. பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் மு.க.தமிழரசுவின் ‘ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்’ மதிப்பு – 48 கோடி.
25. அந்தியூரில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு 30 லட்சம்.
26. புது டெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு – 50 கோடி.
27. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு – தெரியவில்லை.
28. தினகரன் பப்ளிகேஷன்ஸ் – மதிப்பு தெரியவில்லை.
29. சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் – மதிப்பு தெரியவில்லை
30. முரசொலி அறக்கட்டளை – மதிப்பு தெரியவில்லை
31. ஒரு ஷேர் 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் ‘வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்’ மூலமாக வாங்கப்பட்டது. இதை வாங்கிய சமயத்தில் 13,384 கோடிக்கு வாங்கியதாக கலாநிதி மாறனே பிரகடனம் செய்திருந்தார்.
32. மதுரை, மாடக்குளம் கிராமத்தில் தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு – தெரியவில்லை.
33. தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் கருணாநிதிக்கு இருக்கும் 21.30 ஏக்கரின் மதிப்பு – தெரியவில்லை.
34. திருவள்ளூர் மாவட்டத்தில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் 3.84 ஏக்கரின் மதிப்பு – 1 கோடி.
35. துர்கா ஸ்டாலினுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு – 60 லட்சம்
36. மதுரை வடக்கு தாலுக்கா – உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் அழகிரியின் 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 2 கோடி.
37. மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 7.53 ஏக்கரின் மதிப்பு – 2 கோடி.
38. மதுரை தல்லாகுளத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.5 ஏக்கரின் மதிப்பு – 5 கோடி.
39. மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.54 ஏக்கரின் மதிப்பு – 40 லட்சம்.
40. மதுரை திருப்பரங்குன்றத்தில் அழகிரிக்கு இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு – 50 லட்சம்.
41. மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு – 1 கோடி.
42. மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு – 2 கோடி.
43. மதுரை சத்திய சாய் நகரில் 21 சென்டில் உள்ள அழகிரி வீட்டின் மதிப்பு – 2 கோடி.
44. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு – 60 லட்சம்.
45. மதுரை மாவட்டம் (நாகமலைப் புதுக்கோட்டை) உலியம்குளம் கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு – 20 லட்சம்.
46. மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு – 50 லட்சம்.
47. மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு – 50 லட்சம்.
48. கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் காந்தி அழகிரியின் பண்ணை வீட்டு மதிப்பு – 5 கோடி.
49. மாடக்குளம் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு – 50 லட்சம்.
50. சென்னைக்கு அருகில் சோழிங்​கநல்லூரில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 4,200 சதுர அடியின் மதிப்பு – 2.5 கோடி.
51. சென்னை திருவான்மியூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு – ரூ 3 கோடி.
52. மதுரை சத்ய சாய்நகரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு – 3 கோடி.
53. சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் தயாநிதி அழகிரியின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு – 1 கோடி.
54. சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு – 2 கோடி.
55. மதுரை சிவரக்கோட்டையில் இருக்கும் அழகிரிக்கு சொந்தமான தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு – தெரியவில்லை.
56. மதுரையில் 5 கிரவுண்டில் இருக்கும் தயாநிதி அழகிரியின் 8 மாடிகள்கொண்ட ‘தயா சைபர் பார்க்’ மதிப்பு – தெரியவில்லை.
57. மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் ‘தயா டெக்னாலஜிஸ்’ என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு – 1 கோடி.
58. சென்னை அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271-ஏ) மதிப்பு – 5 கோடி. இது கனிமொழிக்குச் சொந்தமானது.
59. ‘வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்’ என்ற கம்பெனியில் கனிமொழிக்கு இருக்கும் பங்கின் மதிப்பு – 20 கோடி.
60. கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு – 30 கோடி.
61. ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு – 50 கோடி. இது கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது.
62. கலைஞர் டி.வி-யில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு – 90 கோடி.
63. அந்தமான் தீவுகளில் இருக்கும் 400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது – மதிப்பு தெரியவில்லை
64. கூர்க் (குடகு மலை) காபி தோட்டம், கலைஞர் குடும்பத்துக்குச் சொந்தமானது – மதிப்பு தெரியவில்லை.
65. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மல்டிப்ளெக்ஸ் கட்ட கலைஞர் குடும்பத்துக்குத் திட்டம் உள்ளது.
66. எஸ்.டி. கூரியர் என்ற கம்பெனிக்கு சொந்த​மான இரண்டு விமானங்கள் மாறன் சகோதரர்​களுடையதே.
67. தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸுக்குப் பின்னால் இருக்கும் ‘சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை’ – மாறனின் மகள் அன்புக்கரசிக்கு சொந்தமானது.
68. சாய்பாபாவுக்கும் கருணாநிதியின் குடும்பத்​துக்கும் ஏற்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து, ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை மாறன் சகோதரர்கள் கட்ட இருக்கும் மருத்துவமனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள்.
69. கோவை (புரூக் பாண்ட் சாலையில் இருக்கும் புரூக் ஃபில்ட்ஸ் வளாகத்தின் ஒரு பகுதியை) ஆர்.எம்.கே.வி. கடை அமைந்திருக்கும் ஒரு சொத்து கனிமொழிக்கு சொந்தமானது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்.

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

தேவர் ஜெயந்தி விழாவில் திரைப்பட இயக்குநர் சீமான்

மிழ்த் தேசியம், தமிழீழம், பெரியார் கொள்கை பற்றி எல்லாம் மேடைதோறும் முழங்குபவர்களும் சரி, தமிழகத்தில் “முற்போக்கு சக்திகள்’எனத் தம்மைக் கருதிக் கொள்வோரும் சரி, உள்ளூர சாதிவெறி புழுத்து நாறுபவர்களாகத்தான் இருக்கிறார்கள். அதிர்ச்சியூட்டும் இந்த உண்மைகள், அண்மைக்காலத்தில் ஒவ்வொன்றாக அம்பலமாகத் தொடங்கியுள்ளன.
மேடை தோறும் ஈழம், பிரபாகரன், தமிழ்த் தேசியம் பற்றி உணர்ச்சி பொங்கப் பேசியும், தன்னைப் பெரியாரின் பேரன் என்று முழங்கியும் வந்த திரைப்பட இயக்குநர் சீமான், பிரபாகரன் படம் பொறித்த சட்டையணிந்து வந்து தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு தன் சாதி வெறியை வெளிப்படுத்தியுள்ளார். சீமானின் தேவர் சாதிப் பற்றை பெரியார் தி.க. ஆதரவு இணையதளம் மட்டும் விமர்சித்துள்ளது. இதுவரை “தம்பி’சீமானை சீராட்டிவந்த மற்ற ஈழ ஆதரவு சக்திகளோ, இப்போது அவரைக் கண்டுகொள்ளாது கைகழுவி விட்டுவிட்டன. இவர், ஏற்கெனவே தனது “தம்பி’ திரைப்படத்தில் தேவர் புகைப்படத்தை இடம்பெறச் செய்தபோதே விமர்சிக்கப்பட்டார். அதனைத் தவறென ஒத்துக் கொண்ட சீமான், இப்போது தேவர் ஜெயந்தியில் கலந்து கொண்டதை, “இம்மானுவேல் சேகரனுக்கும் மாலை போட்டதை”க் குறிப்பிட்டு நியாயப்படுத்தியுள்ளார். அதாவது, சாதி ஒடுக்குமுறையாளருக்கும் ஒடுக்கப்பட்டவருக்கும் ஒரே மரியாதை. இதுதான், இந்தப் “பெரியாரின் பேரனது’சாதி ஒழிப்பு சமத்துவம்!
இதே பித்தலாட்டத்தைத்தான் புரட்சி பேசும் சி.பி.எம். கட்சியும் செய்திருக்கிறது. சி.பி.எம்-மின் “தீண்டாமை ஒழிப்பு முன்னணி’ தாழ்த்தப்பட்டோர் உரிமைக்காக உத்தப்புரத்தில் போராடுகிறது. அதே கட்சியின் பொதுச் செயலர் என்.வரதராசன், அறுவை சிகிச்சை முடித்து கறுப்புக் கண்ணாடி அணிந்தவாறே, சாதி ஒடுக்குமுறையின் சின்னமான தேவர் சிலைக்கு ஓடோடிப் போய் மாலை போட்டு மரியாதை செய்தார்.
சென்ற ஆண்டு தேவர் ஜெயந்தியை ஒட்டி, சாதிவெறியாட்டம் ஆடிய சட்டக் கல்லூரியின் ஆதிக்க சாதி மாணவர்கள், தாழ்த்தப்பட்டோரிடம் வாங்கிக் கட்டிக்கொண்டதை, சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம், “ஒரு மாணவனைப் போய் இந்த அடி அடித்தார்களே’ என்று சுயசாதிவெறியோடு ஒரு வருடமாக பேசியும் எழுதியும் வந்த வலது கம்யூனிஸ்டு கட்சியின் தா.பாண்டியன், தன் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான லிங்கத்தை பசும்பொன்னுக்கே அனுப்பிவைத்து தேவருக்கு மரியாதை செய்தார். முதலாளிகளின் சீட்டாட்டக் கிளப்பான “லயன்ஸ் கிளப்”பில் முத்துராமலிங்கம் என்ற சொந்த சாதிக்காரர் இருப்பதால், அந்த கிளப்பின் விழாவை தா.பாண்டியன் வாழ்த்தும் விளம்பரம் “ஜனசக்தி”யில் வெளிவந்துள்ளது. தேவர் சாதிவெறித் தலைவர்களான முத்துராமலிங்கத் தேவர், மூக்கையாத் தேவர் போன்றோருக்கு அவ்வப்போது சிறப்புக் கட்டுரைகளை வெளியிடும் ஜனசக்தியில் பணிபுரியும் ஜீவபாரதியோ, டஜன் கணக்கில் தேவர் பெருமை பேசும் நூல்களையும் வெளியிடுபவர். ஜனசக்தி ஆசிரியர் தா.பாண்டியனோ, முக்குலத்தோர் சாதிகளில் ஒன்றான அகமுடையார் சங்க கல்வி அறக்கட்டளை விழாவில் கலந்துகொண்டு “அதில் என்ன தவறு?”என நியாயப்படுத்துபவர்.
“முதுகுளத்தூர் சாதிக் கலவரத்தை நிறுத்தவேண்டுமானால், முத்துராமலிங்கத்தைப் பிடித்துச் சிறைக்குள் தள்ள வேண்டும்”எனக் கோரியவர் பெரியார். அவர் ஆரம்பித்த தி.க.வின் “விடுதலை’”பத்திரிக்கையோ, வழக்கம்போல இந்த ஆண்டும் “தேவர் ஜெயந்தி’விழாவிற்கு விளம்பரம் வாங்கிப் பிரசுரித்துக் கொண்டது. சமூகநீதி, சாதி ஒழிப்பு, சமத்துவம் என்றெல்லாம் வாய்ப்பந்தல் போடும் வீரமணி கும்பலின் பித்தலாட்டம், தேவர் ஜெயந்தியோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. திராவிடர் கழகத்தின் தென்மாவட்டப் பிரச்சாரக் குழுத் தலைவராக இருக்கும் தே.எடிசன் ராஜா, நாடார் சங்கத்திலும் செயல்படுகிறார். மும்பையில் நாடார் சங்கம் நடத்தும் காமராசர் நினைவுப் பள்ளி விழாவில் எடிசன் ராஜாவுக்கு “நாடார்”வால் முளைத்து, “எடிசன் ராஜா நாடார்’ஆக மாறினார். பாரம்பரியமான திராவிட இயக்கக் குடும்பத்தைச் சேர்ந்தவரும், தி.க.வின் தகவல் தொடர்பு செயலாளருமான வழக்கறிஞர் அருள்மொழியின் தாயார் சரசுவதி சென்ற ஆண்டு மறைந்தபோது, “இந்து” நாளேட்டில் தந்திருந்த அஞ்சலி விளம்பரத்திலும் தனது “உடையார்”சாதி அடையாளத்தைத் தெளிவாகவே காட்டியிருந்தார்.
தேவர் சாதியைச் சேர்ந்த திரைப்பட பிரபலங்கள், தங்கள் சாதி விழாக்களில் அண்மைக்காலமாகக் கலந்துகொண்டு சாதி வளர்க்கின்றனர். இவர்களில் செந்தில், மனோரமா, விவேக் வரிசையில் இப்போது தி.மு.க.வைச் சேர்ந்த திரைப்படப் பாடலாசிரியர் வைரமுத்துவும் இணைந்துவிட்டார். நகைச்சுவை நடிகர் கருணாஸ், தேவரைப் புகழ்ந்து “முக்குலத்தின் முகவரி”எனும் பாடல்தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். இதில் முகவரியை எழுதுவதற்கு வைரமுத்து “திருப்பாச்சி அறுவாளை’’த் தூக்கிக் கொண்டு குதித்திருக்கிறார்.
“ஒடுக்கப்பட்ட மக்களே ஒன்று சேருங்கள்”என்ற கொள்கை முழக்கத்தைக் கொண்டிருக்கும் வே.ஆனைமுத்துவின் மார்க்சிய-பெரியாரியப் பொதுவுடமைக் கட்சியோ, “வன்னியர்களே ஒன்றுசேருங்கள்”என்று சொல்லவில்லையே தவிர, வன்னியகுல சத்திரிய “சமூகநீதி’யைத் தாண்டி வரவே இல்லை.


“அம்பேத்கரின் சாதி ஒழிப்பு செயல்திட்டங்களை ஆழமாகப் புரிந்து கொள்ள’ச் சொல்லி சி.பி.எம். கட்சிக்கு “பாடம் நடத்தும்”தலித் முரசில், “இந்து ஆதிதிராவிட மணமகனுக்கு அதே உள்பிரிவில் மணமகள் தேவை”என விளம்பரம் வருகிறது. சாதி காக்கும் இச்செயல் ஒவ்வோர் இதழிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
“சாதியை மறந்து தமிழர்களாக நாம் ஒன்றுபட வேண்டும்”என கருணாநிதி பேசுகிறார். ஆனால், அவரின் மகள் கனிமொழியோ, திருப்பூர்-மல்லம்பாளையம் நாடார் சங்கக் கல்வி நிறுவன விழாவிற்கு நாடார் சாதி தி.மு.க. அரசியல்வாதிகளான சற்குணபாண்டியன், கீதாஜீவன், பூங்கோதை போன்றவர்களுடன் கலந்து கொண்டு “நாடார்களாக ஒன்றுபடுகிறார்’.
பெரியாரின் கொள்கைகளைத் தங்கள் கொள்கையாகக் கருதுவோரும், தமிழ்த்தேசியத்தை வென்றெடுக்கக் களம் கண்டிருப்பவர்களும், சாதி ஒழிப்பிற்குப் பிறகுதான் சோசலிசம் எனத் தலித்தியம் பேசுபவர்களும், தாங்கள் கொண்டிருக்கும் இலட்சியத்திற்குக் கூட விசுவாசமாக இல்லாமல் சாதி உணர்வாளர்களாகவோ, வெறியர்களாகவோதான் இருக்கிறார்கள். தங்களின் தோலைக் கீறி சாதி இரத்தம் ஓடுவதை அவர்களாகவே ஒவ்வோர் நிகழ்விலும் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டியும் விடுகின்றனர்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சமூகத்தை சாதி எனும் நுகத்தடி அழுத்திக் கொண்டிருக்கிறது. மனிதநீதிக்கு எதிரான சாதி ஆதிக்கவெறியை அழிப்பதற்கு, மாபெரும் சமூகப் புரட்சியே தேவைப்படுகிறது. அப்புரட்சி, சாதி வெறியர்களுக்கு எதிரானது மட்டுமல்ல, முற்போக்கு வேடம் போடும் இத்தகைய களைகளுக்கும் எதிரானதுதான். இத்தகைய சுயசாதி மோகம் கொண்டோர்களையும், சாதியத்தைப் பாதுகாத்துவரும் ஓட்டுப் பொறுக்கிகளையும் களைந்தெறியாமல் சாதிவெறிக்கெதிரான போராட்டத்தில் முன்னேறிச் செல்லவே முடியாது

பசும்பொன் தேவரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

நீண்ட முடியும், விபூதிப் பட்டையும், குங்குமப் பொட்டும் கொண்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரது படத்தை அநேக தேவர் சமுதாய மக்கள் வீட்டிலோ, கடைகளிலோ வைத்து வணங்குகிறார்கள். தினசரி, மாதாந்திர சிவகாசி காலெண்டர்கள் மூலம் இந்தப் படம் பிரபலமாயிருக்கிறது. மேலும் பிழைப்பு தேடி நகரங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் செல்லும் தேவர் சாதி மக்கள் தமது அடையாளங்களை மீட்டெடுக்கும் வழியாகவும் தேவர் படத்தை வைத்து வணங்குகிறார்கள். 90களில் தென்மாவட்ட கலவரங்கள் துவங்கிய பிறகு தேவர் குருபூஜை என்பது ஒரு வெட்டியான கௌரவப் பிரச்சினையாகவும் மாற்றப்பட்டு விட்டது. இதே காலத்தில் வந்த தேவர் மகன் திரைப்படத்தின் “போற்றிப் பாடடி பெண்ணே, தேவர் காலடி மண்ணே” பாட்டு அச்சாதி மக்களின் தேசிய கீதமாகவும் மாறியது.
சரி, விசயத்துக்கு வருவோம். தேவர் சாதி மக்கள் பசும்பொன் தேவரை வணங்குவதற்கு சுயசாதி பற்று அன்றி வேறு எந்தக் காரணமுமில்லை. 47க்குப் பிறகு சீர்திருத்த முறையில் முன்னேறி வரும் பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல்வேறு பிற்படுத்தப்பட்ட சாதிகள் வளர்ந்திருக்கின்றன. அரசு பதவிகள், வணிகம், ஓரளவு நிலவுடைமை என்று வளர்ந்த நிலையில் சுயசாதி அடையாளத்தின் வீச்சு முன்னெப்போதைக் காட்டிலும் வளர்ந்து விட்டது.
நவீன தொழில் நுட்ப வசதிகள் வளர்ந்த அளவுக்கு சாதி அபிமானம் குறைந்து விடவில்லை. மணமக்கள் விளம்பரங்களில் கூட சுய சாதி, உட்பிரிவு விதிகளுக்குட்பட்டே மணமக்கள் தேவை விளம்பரங்கள் வருகின்றன. சிதறிக்கிடந்த சாதி மக்களை ஊடகங்களும், திருமண நிலையங்களும், சாதி சங்கங்களும் ஒன்று சேர்த்திருக்கின்றன. இன்னொரு புறம் அரசியலில் அனைத்து சாதிகளும் தத்தமது செல்வாக்கை நிரூபித்து அதிகாரத்தின் பங்கை கேட்பதும் இக்காலத்தில்தான் துவங்கியது.
ஆனால் இத்தகைய முன்னேற்றங்களோடு தேவேந்திரகுல மக்கள் கொஞ்சம் தலைநிமிரத் துவங்கியதை மட்டும் ஆதிக்க சாதியினர் விரும்பவில்லை. தீண்டாமைக்கு எதிர்ப்பு தெரிவித்த இடங்களிலெல்லாம் ‘கலவரங்கள்’ எழுந்தன. கொடியங்குளம் கலவரம் தொடர்ந்து அதிக பரப்பளவில் நீடித்ததற்கு இதுவே காரணம்.
முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் சாதி கலவரங்கள் நடந்ததில்லை, அமைதியாக இருந்த தமிழகம் என்றெல்லாம் பலர் அபத்தமாக ‘ஆய்வு’ செய்து அப்போது கண்டுபிடித்தனர். அந்த அமைதிக்கு காரணம் என்ன? அன்று தேவேந்திரகுல மக்கள் எல்லா வகைக் கொடுமைகளையும் எதிர்க்க இயலாமல் ஏற்றுக் கொண்டு வாழ்ந்தனர். ஆயிரமாண்டுத் தீண்டாமைக் கொடுமை, காலம் காலமாக இருக்கும் ஒரு நியமம் என்ற அளவில் அவை சமூகத்தால் கேள்விக்கிடமின்றி பின்பற்றப்பட்டு வந்தன. தனித்து விடப்பட்ட சேரிகள் ஊரை எதிர்ப்பதற்கு அன்று வழியே இல்லை. இதுதான் அந்த அமைதியின் காரணம். பின்னர் பொருளாதார சுயபலம் வந்த பிறகு அவர்கள் அந்த கொடுமைகளை எதிர்த்துக் கேட்கின்றனர். அமைதி குலைந்து கலவரம் வருகிறது.
இந்த வரலாற்றுப் பின்புலத்தில்தான் பசும்பொன் தேவரது வாழ்க்கையை நாம் மதிப்பீடு செய்ய வேண்டியிருக்கிறது. அமைதிக் காலத்தில் ஆதிக்க சாதிகளது ஆட்சியில் அடங்கிக்கிடந்த காலத்தில் தேவேந்திரகுல மக்களுக்கு தேவர் என்ன செய்திருக்க முடியும்? அவர் கஞ்சி ஊற்றினார், பால்கனியில் இருந்து பொற்காசுகளை அள்ளி வீசினார், தான தருமம் செய்தார் என்றுதானே அதிகபட்சம் இருந்திருக்க முடியும்? எங்கேயாவது தேவேந்திரகுல  மக்கள் மீதான தீண்டாமைகளை தேவர் எதிர்த்திருக்கிறார் என்று பேச்சளவில் கூட எதுவும் வந்ததில்லையே?
தேவர் செய்த பண்ணையார் தரும சிந்தனைகள் கூட புதுச்சரக்கு அல்ல. காந்தி முதல் பல காங்கிரசு தலைவர்கள் அதைத்தான் செய்தனர். அந்த வகையில்தான் தேவேந்திரகுல  மக்களை அரிஜனங்கள் என்று காந்தி அழைத்தார். “ஆயிரங்காலம் அடிமை என்றாயே அரிசனன்னு பேரு வைக்க யாரடா நாயே” என்ற ம.க.இ.க பாடல் வரி அந்த தரும சிந்தனையின் மீதான வரலாற்றுக் கோபத்தை வெளிப்படுத்துகிறது. இன்றளவும் தமிழக தலித் மக்களின் தேசிய கீதமாக அந்தப்பாடல் பாடப்பட்டு வருகிறது.
இமானுவேல் சேகரன் ஒரு தலைவராக சரிக்கு சமமாக தன் முன் பேசுவதை தேவரால் கிஞ்சித்தும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதன் தொடர்ச்சியாகத்தான் அவர் தேவரது அடியாட்களால் கொல்லப்படுகிறார். இதற்கு மேல் தேவரது வாழ்வில் நடந்த சம்பவங்களை கீழே தருகிறோம்.
தேவரது சாதிவெறியை தனியாக தொகுத்தே தர முடியும். 1937 இல் காங்கிரசு வேட்பாளராக இருந்த தேவர் அன்றைய நீதிக்கட்சி வேட்பாளராக போட்டியிட்ட சேதுபதிக்கு ஓட்டுப்போட்ட குற்றத்துக்காக தேவேந்திரகுல  மக்களிடம் உடனடியாக கடனை வசூலிக்குமாறு தமது சாதியினருக்கு கட்டளையிட்டார். ஒரு சப் மாஜிஸ்டிரேட் கொல்லப்பட்டதும், டிஎஸ்பி ஒருவருக்கு காலில் வெட்டு விழுந்த்தும் இந்த கலவரத்தில் நடந்தது.
1957 தேர்தலில் கூட இப்படி ஆன பிறகும் கலவரம் நடத்தினார் தேவர். காமராசர் தமிழக முதல்வராக வந்ததை இழிவாக பார்க்கும் வகையில் அவருக்கு ஓட்டுரிமை பெறுவதற்காக சொத்து வாங்கிக் கொடுத்ததே தன்னால்தான் என்பதை அடிக்கடி வலியுறுத்தி வந்தார். காமராசர் ஆட்சியில் விருதுநகர் நாடார்கள் கள்ள நோட்டு அடித்து தமிழகமெங்கும் புழக்கத்தில் விடுவதாக அவதூறு செய்தார். “சாணாப்பய எல்லாம் பிரதமராகி விடுவதும், கைநாட்டுப் பய எல்லாம் மானத்தை வாங்குகிறார்கள்” என்றும் காமராசரைப் பற்றி சாதிவெறி வன்மத்துடன் கூறியிருக்கிறார்.
காமராசர்
குமாரசாமி காமராஜ்
ஒரே நாளில் நாடுமுழுக்க ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை நியமித்து ஆரம்ப கல்விக்கு உதவிய காமராசரது திட்டத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காக தங்களது பகுதிக்கு பள்ளிகள் வருவதை தடுக்கவும் பேசியிருக்கிறார். இங்கிலீசு படிப்பு சொல்லிக் கொடுத்தால் மதம் அரசிலிருந்து பிரிந்துவிடும் என்று அந்த முருக பக்தர் கூறவும் தவறவில்லை. காந்தியின் சுதந்திரப் போராட்டத்தை விமர்சிக்கும் எவரும் கூட அவரது கொலையை கொண்டாட முடியாது. ஆனால் அதற்காக மறைமுகமான நோக்கத்துடன் கோல்வால்கருக்கு  மதுரையில் பணமுடிப்பு வழங்கி விழா நடத்திவர் தேவர். இந்துமத துரோகி என்று காந்திக்கும் பெயர் சூட்டினார்.
தங்களது உழைப்பு, சுய சாதி சமூக உதவி, சீர்திருத்தம் காரணமாக நாடார் சாதியினர் இன்றும் முன்னேறுவதை நாடே அறியும். 19 ஆம் நூற்றாண்டில் முன்னேற்றம் காணத் துவங்கிய அச்சாதியினருக்கு சமூக அந்தஸ்து ஒன்றும் ஆரம்பத்தில் எளிதாக கிடைத்து விடவில்லை. விவசாயம்,வணிகம் மூலம் முன்னேறிய நாடார் மற்றும் நாயக்கர் சாதியினர்களில் வர்ணாசிரம வரிசையில் கீழ்நிலையில் இருந்த நாடார்கள் மீது முத்துராமலிங்கத் தேவருக்கு ஆண்ட பரம்பரையின் இழந்துபோன வெறுப்பு மேலோங்கி இருந்த்து.
அவரது தேவர் சாதியினரோ நாயக்கர் கால ஆட்சியில் ஊர்க்காவல் வேலையைப் பார்த்து வந்தனர். வெள்ளையரின் முதலாளித்துவ பாணி காவல்துறை எல்லாம் வந்தபிறகு அவர்களுக்கு வேலை இல்லாமல் போகவே அவர்களில் சிலர் திருடுவதை கையிலெடுக்க வேண்டிய அவசியம் வந்தது. எனினும் தேவர் சாதிப் பெண்கள் காடுகளில் பாடுபட்டு உழைத்துக் கொண்டுதான் இருந்தனர். நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்த சிவகாசி கலவரம் என்பதே இதுபோல ஆடு திருடும் கள்ளர்களுக்கும், ஆடுகளைப் பறிகொடுத்த நாடார்களுக்குமிடையில்தான் நடந்தது. திருடப் போகும்போதும், கன்னம் வைக்க முதலில் போகும் நபருக்கும் சிறப்பு பூஜைகளையெல்லாம் செய்யுமளவுக்கு திருட்டை சமூகமயமாக்கினர்.
அப்போது சில சாதியினர் குற்றப் பரம்பரையினர் என்று கூறி அரசு கொண்டுவந்த கட்டுப்பாட்டு சட்டத்தினால் அச்சாதி ஆண்கள் எல்லாம் காவல் நிலையங்களில் இராத் தங்க நேரிட்டது. இச்சாதிகளில் முக்குலத்தோரும் இருந்த காரணத்தால் அன்றைய கம்யூனிஸ்டு கட்சியினருடன் சேர்ந்து அச்சட்டத்திற்கு எதிராகப் போராடினார் பசும்போன் தேவர்.
காங்கிரசில் திறமை இல்லாமல் முன்னுக்கு வந்தவர் காமராசர் என்ற கணிப்பு தேவருக்கு நிரம்பவே இருந்தது. குலக்கல்வி திட்டம் கொண்டு வந்த காரணத்தால் பதவி விலக நேரிட்ட ராஜாஜி தனிமைப்பட்டிருந்த வேலையிலும், ஆசி வாங்க வந்த காமராசரிடம் “நீ முதலமைச்சர் ஆகாமல் கட்சித் தலைவனாகவே இருக்கலாமே” என்று கூறினாராம் தேவர்.
சாலைகளை குக்கிராமங்களுக்கும் விஸ்தரிக்க முனைந்தபோது, அது தங்களது நாட்டு அரசுகள் என்ற கட்டப்பஞ்சாயத்துக்கு எதிரானது என்பதால் “நாங்க எல்லாம் இன்றைக்கு அடித்துக் கொள்வோம் நாளை பேசி தீர்த்துக்கொள்வோம். சாலை எல்லாம் போட்டால் போலீசு எல்லாம் ஊருக்குள் வந்து விடும்” என்று கூறி மறவர் நாடுகளில் சாலை போடுவதையே தடை செய்தவர் தேவர். நம்ம வீட்டு கருமறத்திகள் வெயிலிலும் மழையிலும் பாடுபட்டு எடுக்கும் பருத்தியால விருதுநகர், கமுதி சாணாத்திகள் (நாடார் சாதிப் பெண்கள்) காது மூக்கு எல்லாம் தங்கமாக தொங்குகிறது என பொதுக்கூட்டத்திலே பேசி சாதி துவேசத்தை வளர்த்துவிட்டவர்தான் தேவர்.
ஆனால் இதனால் எல்லாம் தேவர்சாதி மக்கள் அனைவரும் நாடார் இனத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கொள்ளவில்லை. அவரது கைத்தடிகள்தான் இதுபோன்ற கலவரங்களில் ஈடுபட்டனர். இந்து முன்னணி ராமகோபாலன் இன்று ”முசுலீம் கடையில் வாங்காதே” என முழங்குவதைப் போலவே அன்றும் “சாணார் கடையில் சாமான் வாங்காதே” என முழங்கினார் தேவர். இந்தியா – பாக் பிரிவினையின்போது பாதிக்கப்படும் இந்துக்களுக்கு ஆதரவாக இங்குள்ள முசுலீம்களை விரட்டிவிடவும் வேண்டும் என்றும் பேசியிருக்கிறார் தேவர்.
இமானுவேல் சேகரன்
இமானுவேல் சேகரன்
1957- இல் தேவேந்திரகுல மக்கள் சமூகத்தின் தலைவரான இமானுவேல் சேகரனை தனக்கு சமமாக நாற்காலியில் அமர வைத்து பேச வைத்த காரணத்தாலும், அந்த முதுகுளத்தூர் கலவரத்துக்கு பின்னான சமாதானக் கூட்டத்தில் இமானுவேல் சேகரனது வாத திறமையாலும் வெறியூட்டப்பட்ட முத்துராமலிங்கத் தேவர் வெளியே வந்து ஒரு பள்ளப்பய கூட உட்கார்ந்து பேச வச்சுட்டீங்களே என தனது அல்லக்கைகளிடம் சொல்லவே மூன்று நாள் கழித்து பரமக்குடியில் வைத்து இமானுவேல் சேகரன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து வந்த கீழத்தூவல் துப்பாக்கிச் சூடும் அதில் அரசு கடைபிடித்த பிரித்தாளும் சூழ்ச்சியும் தனிக்கதை.
தனது தந்தையிடம் வேலை பார்த்த தேவேந்திரகுல  சமூகத்தை சேர்ந்த சோலைக் குடும்பன் என்பவரையே அடியாளாக பயன்படுத்தி வந்த தேவர் அதை வைத்து தான்தான் தேவேந்திரகுல  மக்களுக்கும் தலைவன் என்றும், இமானுவேல் சேகரன் இல்லை என்றும் பேசினார். அண்ணாத்துரை உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்களை வேசி மகன் என்றும் குறிப்பிட்ட்டிருக்கிறார். பொதுவில் அவர் திராவிட இயக்கத்தை பார்ப்பனிய வருணாசிரம கண்ணோட்டத்துடனே கீழானவர்கள் என்பதாக வசைபாடியிருக்கிறார்.
சில தொழிற்சங்க போராட்டங்களை இவர் ஆதரித்தபடியால் ஈர்க்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் இவரை ஆதரிக்கவும் செய்தனர். அரசியலற்ற பொருளாதாரவாதமும், காங்கிரசுக்கு வால்பிடிப்பதும் அன்று அவர்களிடம் மேலோங்கிய காரணத்தால் தேவரை ஒரு இடதுசாரியாக தவறாக பார்க்க வைத்தது. முதுகுளத்தூர் கலவரத்தில் குறிப்பிட்ட அளவுக்கு அவரை கேடிகே தங்கமணி போன்றவர்கள் ஆதரித்தும் பேசி உள்ளனர்.
மற்றபடி தேவரின் காமடிகளுக்கு அளவே இல்லை.
நேதாஜி இதோ அங்கே வருகிறார். இங்கே பார்த்தேன். என்றெல்லாம் அடித்து விட்டதும், மடியில்தான் அணுகுண்டு இருப்பதாகவும், நேதாஜி யிடமிருந்து டிரங்கால் வந்தவுடன் முதுகுளத்தூரில் இருந்து மூன்றாம் உலகப்போரை தான் ஆரம்பிக்கப் போவதாகவும், தான் வைத்திருக்கும் மேக்கனடிக் எந்திரத்தால் உலகத்தில் உள்ள தண்ணீரை எல்லாம் பனிக்கட்டி ஆக்க முடியும் என்றும், அதனைக் கொண்டு அமெரிக்க சீன கப்பல்களை எல்லாம் ஆங்காங்கே அப்படியே நிற்குமாறு செய்து அமெரிக்காவை பிடிக்க ஐடியா தன்னிடம் இருப்பதாக சொன்னதும் இருபதாம் நூற்றாண்டு கண்ட தேவரின் காமடிகளில் சில.
தனது சொந்த சாதியினரின் கல்வியையும், நகருக்கு போய்வருவதற்கான வாய்ப்பையும் நாடாரான காமராசரை எதிர்க்க வேண்டும் என்ற தனது ஈகோவிற்காக பலிகொடுத்த தேவரை உழைக்கும் தேவர் சாதியினரோ அல்லது முன்னேற நினைக்கும் அச்சாதி அபிமானிகளோ கூட போற்ற முடியாது. இன்றும் மற்ற சாதியினர் படித்து பல்வேறு வேலைகளுக்கு போக முடிந்த வேளையில் கூட ரவுடிகளாவும், கொஞ்சம் முயற்சி செய்தால் போலீசாகவும் மட்டுமே போக முடிந்த அளவுக்குத்தான் மதுரையை சுற்றிலும் அச்சாதியின மக்களில் கணிசமானர் இருக்கின்றனர். இதற்கு ஒருவகையில் காரணமான தேவரை அம்மக்கள் குருபூசை நடத்தி கவரவிப்பது வியப்பாகவே உள்ளது.
நோயை சரிசெய்ய வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேவருக்கு அறுவைச் சிகிச்சை செய்ய முடிவு செய்த போது, இறைவன் கொடுத்த உடம்பில் இறைவனே அளித்த நோயை மனிதர் சரிசெய்வதா என்று கூறி அதற்காக ஆபரேஷனே செய்துகொள்ளாமல் செத்தவர்தான் தேவர் திருமகன்.
ஆதாரம்:
1) தேர்தல் மேடைகளில் பசும்பொன் தேவர் – தொகுப்பு கே.ஜீவபாரதி
2)
பசும்பொன் தேவரும் கம்யூனிஸ்ட்களும் – தொகுப்பு கே.ஜீவபாரதி
3)
பசும்பொன் தேவரின் கட்டுரைகள் – தொகுப்பு கே.ஜீவபாரதி
4)
சட்டப்பேரவையில் பசும்பொன் தேவர் – தொகுப்பு கே.ஜீவபாரதி
5)
பசும்பொன் தேவரும் திராவிட இயக்கங்களும்- தொகுப்பு கே.ஜீவபாரதி
6)
சட்டப் பேரவையில் தேவர் பற்றிய சதி வழக்கு – தொகுப்பு கே.ஜீவபாரதி
90களில் ஜெயா சசி கும்பல் ஆட்டம் போட்ட காலம் முதல் தேவர் சாதி வெறி அதிகார அமைப்புகளிலும், அரசியலிலும் வெகுவாக செல்வாக்கு செலுத்துகிறது. ஆனால் இந்த தேவர் சாதி வெறியின் மூலம் சாதாரண உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த தேவர்களுக்கு என்ன பயன் கிடைத்திருக்கிறது?
தேவர் சாதியினர் நடத்தும் சுயநிதிக் கல்லூரிகளில் தேவர் சாதி மக்களுக்கு இலவச கல்வி வழங்ப்படுகிறதா? ஆம்னி பேருந்துகளில் ஐம்பது சதம் தள்ளுபடி தரப்படுகிறதா? தேவர் சாதியினர் கந்து வட்டித் தேவர்களிடம் கடன் வாங்கினால் வட்டியில்லாமல் அனுமதிக்கப்படுகிறதா? இல்லை சேதுராமலிங்கத்தின் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் தேவர் சாதி மக்களுக்கு மலிவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? எதுவுமில்லையே?
இப்படி இருக்கையில் இந்த சாதி உணர்வால் என்ன பயன்? தேவர் சாதி நண்பர்கள் பரிசீலிக்க வேண்டும். வாழ்க்கைப் பிரச்சினைகள் அதிகரித்து வரும் காலத்தில் சாதி கடந்து உழைக்கும் வர்க்கமாய் நாம் ஒன்றிணைய வேண்டிய தருணத்தில் இந்த சாதிப் பிரிவினைகளும், ஆதிக்க சாதி மனப்பான்மைகளும் நம்மை பிரித்து முடக்குகிறது. சம்பந்தப்பட்டவர்கள் பரிசீலத்து மாற்றிக் கொள்ளட்டும்.

மருதிருவர் குருபூசை: அல்லக்கை சாதிச்சங்கங்கள்!சாதி ஆதிக்கஅரசியல் ஒத்தூதும் அரசு!!

மருதிருவர் குருபூசை: அல்லக்கை சாதிச்சங்கங்கள்! ஒத்தூதும் அரசு!!
இந்தியத் துணைக்கண்ட அரசியல் வரலாற்றில் அன்னியருக்கு எதிராக முதன்முதலாக ஒரு அறிக்கை எழுதி வெளியிட்டது சின்னமருதுதான். நான்கு மொழிகள் தெரியும்.கி.பி 1801- அக்டோபர் மாதம் 24ஆம்தேதி  பகல்பொழுது – இன்றைய சிவகங்கை மாவட்டம், திருப்பத்துர் நகரின் பேருந்து நிலையம், எதிர்புறம் நினைவுச்சின்னம் அமைந்துள்ள முச்சந்தியில் பெரியமருதுவும், அவரது தம்பி சின்னமருது என்று அழைக்கப்படுகிற சின்னப்பாண்டியனும் துக்கிலிடப்பட்டார்கள்.
அவர்களோடு சிறைப்பிடிக்கப்பட்டுக் கொண்டுவரப்பட்ட அவரது உறவினர்களான நுற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் மிகக் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டனர். அன்றும் அதன் பின்னரும் பிரிட்டிஷாரால் கொலை செய்யப்பட்டவர்கள் மட்டும் சுமார் ஐநுறுபேர்களுக்கும் மேல் இருக்கும். தமிழக வரலாற்றில் அதற்கு முன்னரும், பின்னரும் நடந்திராத ஒரு கொடூர நிகழ்ச்சி அது.
24ஆம் தேதி துக்கிலிடப்பட்டு இரண்டு நாட்களாகத் தொங்கவிடப்பட்டிருந்த மருதிருவர்களின் உடல்கள் 27ஆம் தேதி கீழிறக்கப்பட்டது. அவர்களது தலைகள் துண்டிக்கப்பட்டு இன்று குருபூசை நடக்கிற காளையார்கோவில் கோவிலின் முன்பாக உள்ள சிறிய அறைக்குள் அடக்கம் செய்யப்பட்டது.
சற்று நேரம் நினைத்தாலுமே நெஞ்சைக் கீறிவிடுகிற இந்தத் துயரத்திற்கு அந்த மாவீரர்களை தள்ளிவிடக் காரணமாக இருந்தது இரண்டு விசயங்கள்.
  1. மருதிருவர்களின் விடுதலைப் போராட்டத் தன்மான உணர்வு.
  2. ஆங்கிலேய அடிவருடி புதுக்கோட்டைத் தொண்டைமான் கும்பலின் துரோகம். (ஆங்கிலேயருக்கு எழுதிய கடிதத்தில் சின்னமருதுவை நாய் எனத் திட்டுகிறான் துரோகி தொண்டைமான்.)
இந்தியத் துணைக்கண்ட அரசியல் வரலாற்றில் அன்னியருக்கு எதிராக முதன்முதலாக ஒரு அறிக்கை எழுதி வெளியிட்டது சின்னமருதுதான். நான்கு மொழிகள் தெரியும் அவனுக்கு. ஏழைமக்கள் கண்ணீரில்லாத வாழ்க்கை வாழ வேண்டுமென்றால் கும்பினியாரை எதிர்த்துப் போராடவேண்டும் என முழங்கியவன் அவன்.  உடம்பில் ஐரோப்பியரத்தம் ஓடாதவர்கள் எனது பேச்சைக் கேட்பார்களாக என்று அழைத்தான். ஆங்கிலேயருக்கு சேவகம் செய்பவர்கள் ஈனப்பிறவிகள் என்றான். கும்பினி ஆட்சி நமது நாட்டைப் பஞ்சத்திலும், பசியிலும் தள்ளிவிடும் என எச்சரித்தான். கும்பினியை இந்தியத் துணைக்கண்டத்திலிருந்தே விரட்டியடிக்க சாதி மத பேதமின்றி ஒன்றுதிரள வேண்டும் என அறைகூவினான்.
தமிழகத்தின் விடுதலைப் போராட்ட வரலாற்றைப் படிக்க நினைப்பவர்கள் முதலில் சின்னமருதுவின் ஜம்புத்தீவுப் பிரகடனம் 1801-லிருந்து துவங்குகள். நீங்கள் அதை அவசியம் படிக்க வேண்டும். காரணம், வரலாறு மீண்டும் திரும்புகிறது. 1990ல் இந்தியா கையெழுத்திட்ட காட்-டங்கல் ஒப்பந்தம் தன்னைப் பன்னாட்டு நிறுவனங்களின் அடிமையாக ஒப்புக் கொடுத்துவிட்டது. பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகள் நலன்களுக்காக தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்கிற திட்டத்தை ஏற்றுக் கொண்டு இந்தியாவின் கதவுகளை அகலத் திறந்து வைத்து அள்ளிச் செல்லுங்கள் எனச் சொல்லி வீசும் எலும்பைக் கவ்வக் காத்திருக்கும் நாய்களைப் போல மண்டியிட்டுக் கிடக்கிறார்கள் இந்திய ஆட்சியாளர்கள்.
அன்றைய காலனியாதிக்கத்திற்கு எதிராகப் போராடிய மருதிருவர்களின் தன்மானமும், வீரமும், நாட்டுப்பற்றும் இன்றும் நமக்குத் தேவைப்படுகிறது. அடிமைத்தனத்தை மாற்றம் (Change) வளர்ச்சி (Development) என்று சொல்லி, மறைத்துப் பேசும் கோழைத்தனம் கொண்டவர்களாக இந்திய இளைஞர்கள் வடிவமைக்கப்படும் இந்நேரத்தில் மருதிருவர்களின் வீரம் நமக்கு ஒரு வழிகாட்டியாகும் தகுதியுள்ளதாக இருக்கிறது. நம்மை தன்மானம் உள்ளவர்களாக மாற்றக் கூடிய சக்தியுள்ளதாகவும் இருக்கிறது.
ஆனால் இதற்கும் மருதுபாண்டியர் குருபூசைக்கும் மயிரளவும் தொடர்பில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்துதான் இந்த குருபூசைக் கலாச்சாரம் சிவகங்கையில் தொடங்கப்பட்டது. சாதி ஆதிக்கத்தை நிலைநிறுத்தவும், சாதி உணர்வை, சாதிவெறியாக மாற்றவும் பசும்பொன்னில் குருபூசை நடைபெறுகிறது. ஒடுக்கப்பட்ட சாதிகளின் உரிமைக்கான குரல் எழுப்புதலில் படுகொலை செய்யப்பட்ட இமானுவேல் சேகரனாரின் நினைவை ஏந்தி ஒடுக்கப்பட்ட சாதிகளின் விடுதலை உணர்வைப் பிரதிபலித்து பரமக்குடியில் குருபூசை நடைபெறுகிறது. இவ்விரண்டும் சமப்படுத்த முடியாத குருபூஜைகள்தான்.
என்றாலும் மருதிருவர்களின் குருபூசை என்பது முழுக்க, ஓட்டுக்கட்சி அரசியலில் நுழைந்து பதவி சுகத்தை அனுபவிக்கவும் மக்கள் பணத்தைச் சுருட்டவும் முடியாமல் ஏங்கித்திரியும் சாதிய அமைப்புகளால் பரபரப்பாக நடத்தப்படுகிற குருபூசையாகும். தேர்தல் காலம் அல்லாததால் இம்முறை நடந்த விதம் இதை விளக்கமாக வெளிப்படுத்துகிறது.
துயரமான முடிவிற்கு மருதிருவர்களை வெகுவிரைவாக அழைத்துச்சென்ற புதுக்கோட்டை துரோகி தொண்டைமானின் துரோகத்தின் பங்காளிக்கூட்டத்தினர்தான் இன்று மருதிருவர்களின் குருபூசைக்கு அணிதிரளுகிறார்கள். பசும்பொன் முத்துராமலிங்கம் படம் பொறித்த மஞ்சள் கொடிகளும், தேவர் வாழ்க! தேவர் படை போதுமா! இன்னும் கொஞ்சம் வேணுமா! பனமரத்துக்கே வவ்வாலா! தேவருக்கே சவாலா! என்கிற முழக்கங்களும் இம்முறை அகமுடையார் சாதியினரை விடவும் வெகு அதிகமாகவே வெளித்தெரிந்தன.
மருதிருவர்களின், தன்மானத்தையும், வீரத்தையும், நாட்டுப்பற்றையும் தூசி அளவுகூட சிந்தனையில் கொள்ளாத இந்த வெற்றுச் சாதி வெறி ஆரவாரகும்பல்தான் போதையிலே கூச்சலிடுகிறது, கும்மாளமிடுகிறது. ஆதிக்கச்சாதியைச் சேர்ந்த போலீசோ, கத்தி ஓய்ந்துபோன கும்பலை அடித்துவிரட்டுவதைப் போல பாவனை செய்து முறுக்கேற்றிவிடுகிறது. வழியில் தாழ்த்தப்பட்ட மக்களின் வசிப்பிடங்கள் இல்லதாதால் ஒரு தனியார் பேருந்து மற்றும் அரசு பேருந்தின் கண்ணாடிகள் மட்டும் அடித்து நொறுக்கப்பட்டிருந்தன.
தனியார் பேருந்துகள் தங்களது போக்குவரத்தை நிறுத்திக் கொண்டாலும், அரசு பேருந்தின் ஓட்டுநர்களும், நடத்துனர்களும் பேருந்துகளை துணிச்சலாக எடுத்துச் சென்றனர். இருப்பினும் உடைக்கப்பட்ட பேருந்துகளைக் கொஞ்சமும் கவனியாமல் திரிந்தது போலீசு. இதனால் அதிருப்தி அடைந்த அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் இரவு 7மணிக்கு மேல் பேருந்துகளை எடுக்க மறுத்து முறையிட்டனர். கிராமங்களுக்குச் செல்லும் பலபேருந்துகள் நிறுத்தப்பட்டுவிட்டன. மதுரை போகும் தனியார் பேருந்துகள் மேலூர் வழியாகச் சென்றன. ஊர் திரும்ப முடியாமல் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் பொதுமக்கள் பலரும் பெரிதும் அவதிக்குள்ளாகினர். இருப்பினும் போலீசும், அரசும் இது குறித்து கொஞ்சமும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
மேற்கே உசிலம்பட்டியைத் தாண்டியும், தெற்கே முதுகுளத்துரைத் தாண்டியும், கிழக்கே திருவாடனையைத் தாண்டியும், உள்ள கிராமங்களிலிருந்து நுற்றுக்கணக்கான இளைஞர்கள் வாகனங்களிலேயே வரவழைக்கப்பட்டிருந்தனர். தொடர் ஜோதி ஓட்டம் பலபகுதிகளிலிருந்தும் வந்தன. மஞ்சளும், பச்சையும், இணைந்த வண்ணங்களில் அவர்களின் சீருடைகள் இருந்தன. மூவேந்தர் முன்னேற்றக் கழக டாக்டர். சேதுராமனின் சங்கக் கொடியும், ஸ்ரீதர் வாண்டையாரின் சங்கக் கொடியும் கட்டிய வாகனங்கள் தான் அதிகமாகச் சென்றன. அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரசு கொடிகள் கட்டிய கார்கள் ஒன்றிரண்டே சென்றன. சென்ற வருடம் தேர்தல் காலம் ஆகையால் ஓட்டுக் கட்சிகளின் கொடிகள் கட்டிய கார்களும், ஒட்டுக்கட்சிகளின் தலைவர்களின் வருகையுமே மிக அதிகமாக இருந்தது.
நகரங்களில் நுழைந்தவுடன் சமீபத்தியச் சினிமா பாணியிலான ஆபாசக்  குத்தாட்டம் போட்டுக்கொண்டே இளைஞர்கள் ஊர்வலமாய் வந்தனர்.  ஆனால் ஊர்வலத்தில் மூ.மு.கவினரோ, முக்குலத்தோர் வாழ்க என கோசம் போட்டுக் கொண்டு ஆடினர்.
இந்தக் குருபூசையின் பேரைச் சொல்லி கோடிக்கணக்கான ரூபாய்கள் நன்கொடையாகத் திரட்டப்பட்டுள்ளது. அவற்றில் சிறிதளவு மட்டும் செலவு செய்யப்பட்டு (டீசல், உணவு, வாடகை, சாராயம்) மீதம் அப்படியே சுருட்டப்படுகிறது. பெரிய சங்கங்கள் முதல் கல்லுரி மாணவர்கள் வரை இதுதான் நிலை. சாதி, பிழைப்புவாதிகளுக்கான தொழிலாகப் பயன்படுவதை இதிலிருந்தும நாம் அறியலாம். சாதியின் பெயரால் பிழைப்பு நடத்தும் பேர்வழிகளுக்கான திருவிழாவாக மருதிருவர்கள் குருபூசை நடக்கிறது. அந்த வீரமிக்க   மருதுபாண்டியர்களை இதைவிடக் கேவலப் படுத்தக் கூடியது வேறு எதுவும் இல்லை
வரும் ஆண்டுகளில் முறுகல், மோதல் எனத் துவங்கி பின்னர் பெரிய கலவரங்களும் நடைபெறலாம். எதிர்காலத்தில் அப்படியொரு நிலையை உருவாக்க சாதிய அமைப்புகள் துடித்துக் கொண்டிருக்கின்றன. இப்படியொரு பகைச் சூழ்நிலையும், பீதியும் மக்களிடையே நிலவவேண்டுமென்று ஆடு நனைவதைப் பார்த்து அழும் ஓநாய் போல அரசாங்கமும் ஆர்வத்தோடு வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வருகிறது.
இதைத்தடுக்க மருதிருவர்களின் வரலாற்றை அறிந்து, அன்னியமோகம் எனும் அடிமைப்புத்தியைச் சுட்டெரித்து, மறுகாலனி ஆதிக்கத்திற்கு எதிராய் போராட, மருதிருவர்களின் பெயரால் மக்களை அழைக்க வேண்டிய கடமை நம்முன் உள்ளது.

வேட்டி-சேலை-சீருடை! அமைச்சருக்கு எதிராக உமாசங்கர் ஐ.ஏ.எஸ். கிளப்பும் ஊழல் பூதம்!


புதன், 3 ஆகஸ்ட், 2011

தமிழன் தொலைக்காட்சிக்கு தேவேந்திரகுல மக்களின் நன்றி! நன்றி!! நன்றி!!!

தமிழன் தொலைக்காட்சிக்கு தேவேந்திரகுல மக்களின் நன்றி! நன்றி!! நன்றி!!!தங்கள் தொலைக்காட்சியில் புதன் இரவு 9மணி முதல் 9.30 வரை "மீண்டெழுகிறது


தமிழர் வரலாறு" என்ற நிகழ்ச்சியில் தமிழர் யார்? வேந்தர்யார்? மள்ளர்,


தேவேந்திரர் யார் என்று சரியான விளக்கத்துடன் ஒளிபரப்புகிறீர்கள்.


தொடர்ந்து இந்த நிகழ்ச்சி நடத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். 


 psrsivakumar@gmail.com.பி.எஸ்.ஆர்

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல துறை செயலாளராக தேவேந்திரர் நியமிக்கப்பட்டுள்ளார்.


திருவாரூர் மாவட்ட ஆ‌ட்‌சி‌த் தலைவ‌ர் உ‌ள்பட 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தம‌ிழக அரசு அ‌திரடியாக இடமாற்றம் செய்து‌ள்ளது.

சுரங்கம் மற்றும் புவியியல் துறை ஆணையராக இரு‌ந்த தங்க கலியபெருமாள் மாற்றப்பட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தேவேந்திரர் இத் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.பிற்பட்டடோர், மிகவும் பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலராக இரு‌ந்த டி.என்.ராமநாதன் மாற்றப்பட்டு, சுரங்கம் மற்றும் புவியியல் துறை ஆணையராக நியமிக்கப்பட்டு‌ள்ளா‌ர்.கால்நடை பராமரிப்பு துறை ஆணையராக மாலிக் பெரோஸ்கான் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல செயலாளராக மாற்றப்பட்டு‌ள்ளா‌ர்.தமிழ்நாடு தொழில் வெடி மருந்து நிறுவன நிர்வாக இயக்குனராக இரு‌ந்த எம்.ஆர்.மோகன் மாற்றப்பட்டு கால்நடை பராமரிப்புதுறை ஆணையராக நியமிக்கப்பட்டு‌ள்ளா‌ர்.இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணைய‌ர், முதன்மை செயலராக இரு‌ந்த ரமேஷ்குமார், கன்னா எரி சக்தி துறை முதன்மை செயலாளராக மாற்றப்பட்ட‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.திருவாரூர் மாவட்ட ஆ‌ட்‌சி‌த் தலைவராக இரு‌ந்த எம்.சந்திரசேகரன் மாற்றப்பட்டு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனராக நியமிக்கப்பட்டு‌ள்ளா‌ர்.தகவல், மக்கள் தொடர்புதுறை இயக்குனராக இரு‌ந்த கே.பாஸ்கரன் மாற்றப்பட்டு திருவாரூர் மாவட்ட ஆ‌ட்‌சியராக நியமிக்கப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை முதன்மை செயலராக இரு‌ந்த விஸ்வநாத் ஏ.ஷெகாங்கர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர், முதன்மை செயலாளராக மாற்றப்பட்டு‌ள்ளா‌ர்.தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு கழக நிர்வாக இயக்குனராக இரு‌ந்த ருயோல் குமிலியன் புஹ்ரில், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழக திட்ட இயக்குனர், முதன்மை செயலராக நியமிக்கப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.வேளாண்மை மார்க்கெட்டிங் மற்றும் வேளாண்மை வர்த்தக ஆணையராக இரு‌ந்த அதுல் ஆனந்த், வேளாண்மைத்துறை ஆணையராக மாற்றப்பட்டு‌ள்ளா‌ர்.எழுது பொருள் மற்றும் அச்சகத்துறை இயக்குனராக இரு‌ந்த டி.விவேகானந்தன், வேளாண்மை மார்க்கெட்டிங் மற்றும் வேளாண்மை வர்த்தக இயக்குனராக நியமிக்கப்பட்டடு‌ள்ளா‌ர் எ‌ன்று த‌‌மிழக அர‌சி‌ன் செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது