ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 18 பிப்ரவரி, 2013

புதிய தமிழகம் கட்சி - மும்முனை போராட்டம்



புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் -தலைவர் அவர்கள் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தி:-
விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கக்கூடிய சமுதாயங்களின் எழுச்சிக்கு பொருளாதார சலுகைகள் அளித்தால் மட்டும் போதாது. அச்சமுதாய மக்களுடைய அடையாளங்கள் மீட்டெடுக்கப்பட வேண்டும். அவர்கள் கவுரவமான முறையில் நடத்தப்பட வேண்டும். இதுவே மத்திய, மாநில அரசின் கொள்கைகளாக சொல்லப்பட்டாலும் நடைமுறையில் செயலுக்கு வருவதில்லை.
தமிழ் சமுதாயத்தின் மூத்த குடிமக்கள் இன்னும் ன்விகிதி வைத்தே ஒருமையில் அழைக்கப்படுகிறார்கள். இந்த தொடரும் சமூக இழிவு நிலையே அம்மக்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. பட்டியலினப் பிரிவில் உள்ள பல்வேறு பெயர்களில் அழைக்கப்படக்கூடிய மக்களை தேவேந்திரகுல வேளாளர்என அழைக்க அரசானை பிறப்பிக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் அதை அரசு இன்று வரை நிறைவேற்றவில்லை.
அதே போன்று இடஒதுக்கீட்டில் பட்டியலின மக்களுக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டை ஒரே ஒரு பிரிவினருக்கு முன்னுரிமை கொடுத்து வழங்கப்படுவதால் தமிழகத்தில் உள்ள 70 சமுதாய மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இடஒதுக்கீடுகள் வழங்க இந்திய அளவிலும் மாநில அளவிலும் பல்வேறு சமூகக் கொடுமைகளுக்கு ஆளான மக்களை அண்ணல் அம்பேத்கார் அவர்கள் அட்டவனைப் பிரிவினர் என வகைப்படுத்தினார். ஆனால் அதை தமிழ்நாடு அரசு ஒரு சாதியின் துறையாக மாற்றிவிட்டது.
எனவே பட்டியலின துறைக்கு  ‘சமூக நீதித்துறை’ அல்லது  ‘பட்டியலினத்துறை’ என்றே பெயரிடவும், உள்இடஒதுக்கீட்டை உடனடியாக ரத்து செய்யவும் தேவேந்திரகுல வேளாளார்என அழைக்க அரசானை பிறப்பிக்கவும் வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பாக மும்முனை போராட்டம் நடைபெற உள்ளது.
முதற்கட்டமாக வரும் 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை காலை 11 மணி முதல் 1 மணி வரை  மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்கள்  நடைபெறும்.
20ம் தேதி : திருச்சி, தேனி, திண்டுக்கல், பெரம்பலூர், கரூர், அரியலூர்
21ம் தேதி : மதுரை, விருதுநகர்,கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி   கடலூர்
22ம்தேதி : துத்துக்குடி, திருநெல்வேலி,திருவண்ணாமலை, நாகப்பட்டினம், விழுப்புரம், திருவாரூர்
23ம் தேதி : இராமநாதபுரம், சேலம்,நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி வேலூர்
24ம் தேதி : சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சென்னை, கன்னியாகுமரி
ஆர்ப்பாட்டத்தில் புதிய தமிழகம் கட்சித் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டப்படுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக