ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 9 மார்ச், 2013

தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை பிறப்பிக்க தமிழக அரசை வலியுறுத்தி டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம்


புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத்தலைவர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் நெல்லையில்  நிருபர்களிடம் கூறியதாவது:
பள்ளர், குடும்பர், காலாடி, பண்ணாடி என அழைக்கப்படுபவர்களை தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை பிறப்பிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். பட்டியலின துறைக்கு  ‘சமூக நீதித்துறை’ அல்லது  ‘பட்டியலினத்துறை’ என்றே பெயரிடவும், உள் இடஒதுக்கீட்டை உடனடியாக ரத்து செய்யவும் வலியுறுத்தி  கடந்த 20ம் தேதி முதல் மாவட்டம்தோறும் புதிய தமிழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நெல்லையில் 22 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதைத்தொடர்ந்து மார்ச் 20ம் தேதி முதல் ஒன்றிய அளவில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.

நெல்லை அருகே வல்லநாடு அருகே பக்கப்பட்டியை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் திவாகர் ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது கண்டிக்கத்தக்கது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் செல்லும் பஸ்களில் ஜாதி வெறியைத் தூண்டும் வகையில் பாடல்கள் ஒலிபரப்புவதை அரசு தடை செய்ய வேண்டும். இதையும் மீறி அரசு மற்றும் தனியார் பஸ்களில் ஜாதி மோதல்களை ஏற்படுத்தும் வகையில் பாடல்கள் ஒலிபரப்புவதை தடை செய்யவேண்டும். தனியார் பஸ்களில் மட்டுமே ஜாதி மோதல்கள் ஏற்படுகிறது. இதை தடுக்காத தனியார் பஸ்களையும் அந்த வழித்தடங்களையும் ரத்து செய்யவேண்டும். பலியான மாணவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும்.
காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. இது மட்டும் இப்பிரச்னைக்கு நிரந்த தீர்வாகாது. ஆனால் தண்ணீரை பெற தொடர்ந்து போராட வேண்டியது வரும்.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டது, 20ம் நூற்றாண்டில் மிகப்பெரிய மனித உரிமை மீறல். இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவித்து சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணை நடத்தவேண்டும். இவ்வாறு டாகடர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் தெரிவிததார்.

திருச்சியில் 20ஆம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்ட படங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக