புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர்-தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருபதாவது;-
அ.இ.அ.தி.மு.க-வுடன் புதிய தமிழகம் கட்சி கூட்டணி சேர்ந்த நாள் முதல் தமிழக ஆட்சியாளர்கள் கலங்கி போய் இருக்கிறார்கள்.
தென் தமிழகத்தில் வலுவாக உருவாகி வரும் சமூக நல்லிணக்கத்தை எப்படியும் சீர்குலைத்து அதன் வாயிலாக தேவேந்திரகுல மக்களை அரசியல் மற்றும் சமூக தளத்தில் பலிகடாவாக்க முயற்சி செய்கிறார்கள்.
கடந்த நான்கு மாத காலமாக ஆளும் தரப்பினர் கட்டவிழ்த்து விட்ட பொய் பிரச்சாரங்கள் எடுபடவில்லை.எனவே களத்தில் இறங்கி கலவரத்தை தூண்டும் செயல்கள் நடபெற்று வருகின்றன.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி,வெள்ளையாபுரம் பாட்டாளி மக்கள் கட்சி பிரமுகர் திரு.ராஜ்குமார்,சில சமூக விரோதிகளால் தாக்கப்பட்டு இப்பொழுது ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திரு.ராஜ்குமார் தேவேந்திரகுல சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தினால், சாதி சாயம் பூசி அந்த பகுதியில் கலவரத்தை தூண்டுவதற்கு ஆளும் தரப்பினர் முயற்சி செய்வதாக தெரிகிறது.
சமுதாய அளவில் நல்லிணக்கமும் அமைதியும் நிலவினால் தான் அரசியல் முன்னேற்றமும் பொருளாதர மேம்பாடும் அடையமுடியும்
எனவே தேவேந்திரகுல மக்கள் மீது கலவரங்கள் எந்த ரூபத்தில் சுமத்தப்பட்டாலும்,அதற்கு இரையாகமல் முழுக்க அமைதி காக்க வேண்டுகிறேன்
2011-ல் தமிழகத்தில் அரசியல் மாற்றம் நிகழ்ந்திட நமது கூட்டணியின் வெற்றி ஒன்றையே மனதில் கொண்டு வேண்டுகிறேன் என அறிக்கையில் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக