ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

ஓட்டப்பிடாரம் தொகுதியில் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் கிருஷ்ணசாமி ஓட்டு சேகரிப்பு


ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி புதியதமிழகம் கட்சி வேட்பாளர் டாக்டர் க.கிருஷ்ணசாமி நேற்று புதூர்பாண்டியாபுரம் பகுதியில் பிரசாரத்தை தொடங்கினார். புதூர்பாண்டியாபுரம் பஞ்சாயத்து தலைவர் முனியசாமி தலைமையில் கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.




பிரசாரத்துக்கு மோகன் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், அ.தி.மு.க. தொகுதி செயலாளர் புகழும்பெருமாள், மாநில அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் எஸ்.டி.பொன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து வேலாயுதபுரம், சில்லாநத்தம், புதியம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து ஓட்டு சேகரித்தார்.



பின்னலாடை தொழிற்சாலை அப்போது அவர் பேசியதாவது:-



கடந்த 1996-ம் ஆண்டு புதியம்புத்தூர் மக்கள் அதிக வாக்குகள் அளித்து என்னை வெற்றி பெறச் செய்தீர்கள். அப்போது புதியம்புத்தூர் பகுதி வறட்சி பகுதியாக இருந்தது. இதனால் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மக்கள் கோரிக்கை வைத்தனர்.



உடனடியாக இந்த பகுதிக்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கி ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் பற்றாக்குறை போக்கப்பட்டது. தற்போது கோவையில் உள்ள திருப்பூர் உலக அளவில் பின்னலாடை தொழிற்சாலையில் சிறந்து விளங்கி வருகிறது.



புதியம்புத்தூரில் பின்னலாடை தொழிற்சாலை சிறிய அளவில் நடக்கிறது. என்னை வெற்றி பெறச்செய்தால் வடக்கே உள்ள திருப்பூரை விட புதியம்புத்தூரை உலக அளவில் பின்னலாடை தொழிற்சாலையின் வளர்ச்சியை போற்றும் வகையில் மாற்றுவேன், என்று கூறினார்.



பின்னர் வள்ளிநாயகிபுரம், ஜம்புலிங்கபுரம், உள்ளிட்ட கிராமங்களில் வாக்குசேகரித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக