திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் உள்பட 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழக அரசு அதிரடியாக இடமாற்றம் செய்துள்ளது.
சுரங்கம் மற்றும் புவியியல் துறை ஆணையராக இருந்த தங்க கலியபெருமாள் மாற்றப்பட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தேவேந்திரர் இத் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிற்பட்டடோர், மிகவும் பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலராக இருந்த டி.என்.ராமநாதன் மாற்றப்பட்டு, சுரங்கம் மற்றும் புவியியல் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கால்நடை பராமரிப்பு துறை ஆணையராக மாலிக் பெரோஸ்கான் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு தொழில் வெடி மருந்து நிறுவன நிர்வாக இயக்குனராக இருந்த எம்.ஆர்.மோகன் மாற்றப்பட்டு கால்நடை பராமரிப்புதுறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர், முதன்மை செயலராக இருந்த ரமேஷ்குமார், கன்னா எரி சக்தி துறை முதன்மை செயலாளராக மாற்றப்பட்டப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த எம்.சந்திரசேகரன் மாற்றப்பட்டு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தகவல், மக்கள் தொடர்புதுறை இயக்குனராக இருந்த கே.பாஸ்கரன் மாற்றப்பட்டு திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை முதன்மை செயலராக இருந்த விஸ்வநாத் ஏ.ஷெகாங்கர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர், முதன்மை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு கழக நிர்வாக இயக்குனராக இருந்த ருயோல் குமிலியன் புஹ்ரில், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழக திட்ட இயக்குனர், முதன்மை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வேளாண்மை மார்க்கெட்டிங் மற்றும் வேளாண்மை வர்த்தக ஆணையராக இருந்த அதுல் ஆனந்த், வேளாண்மைத்துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
எழுது பொருள் மற்றும் அச்சகத்துறை இயக்குனராக இருந்த டி.விவேகானந்தன், வேளாண்மை மார்க்கெட்டிங் மற்றும் வேளாண்மை வர்த்தக இயக்குனராக நியமிக்கப்பட்டடுள்ளார் என்று தமிழக அரசின் செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக