பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து 5 மாதத்திற்கு பின் ஜான்பாண்டியன் ராமநாதபுரத்திற்கு இன்று வந்தார். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந்தேதி பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல்சேகரன் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியனுக்கு திடீரென அனுமதி மறுக்கப்பட்டது.
இதை தொடர்ந்து பரமக்குடியில் நடந்த கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 6 பேர் பலியானார்கள். கலவரத்தையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜான் பாண்டியன் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதனிடயே ராமநாதபுரத்தை அடுத்துள்ள கீழக் கரை, புல்லந்தை கிராமத்தில் அவரது ஆதரவாளரான முத்துராக்கு இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று காலை ஜான்பாண்டியன் வந்தார். இதையொட்டி ராமநாதபுரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஏராளமான போலீசார் முக்கிய இடங்களில் குவிக்கப்பட்டிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக