ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 11 மே, 2012

ஜாதிவாரி கணக்கெடுப்பு: கிருஷ்ணசாமி வேண்டுகோள்


சென்னை: புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:  தமிழகத்தில் கடந்த 1ம் தேதி முதல் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இந்த கணக்கெடுப்பு பணியில் சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி அமைப்பாளர்கள் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள், ஜாதி பின்னணி என்னவென்று தெரியாமல் உள்ளனர். இது போன்றவர்கள் கணக்கெடுப்பதால், உண்மை பிரதிபலிக்கப்படாது, கணக்கெடுப்பு முடிந்த பின்பு, பிரச்னைகளும், சர்ச்சைகளுமே எழும். திறன்பெற்றவர்கள் மற்றும் சமூகத்தை புரிந்து கொண்டவர்களை மட்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பில் ஈடுபடுத்த வேண்டும்.  பட்டியல் இனத்தில் பள்ளர், பறையர், சக்கலியர் உள்ளனர். பள்ளர் தேவேந்திர குலவேளாளர் என்றும், பறையர் ஆதிதிராவிடர் என்றும், சக்கலியர் அருந்ததியர் என்றும் அடையாளப்படுத்த வேண்டும்.

சனி, 5 மே, 2012

வரும் 30-ல் கிருஷ்ணசாமி உண்ணாவிரதம்

தூத்துக்குடி : நலத்திட்ட உதவிகளை வழங்குவதி்ல மாவட்ட ‌கலெக்டர் முட்டுக்கட்டை போடுகிறார் என ஒட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ., புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:மாவட்ட கலெக்டர் ஆஷிஸ் குமார் மணல் கொள்ளைக்கு ஆதரவாக செயல்படுகிறார். ‌‌தொகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவி பெற வழங்கும் பரிந்துரை கடிதத்தின் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. கலெக்டரின் இத்தகைய போக்கை கண்டித்து வரும் 30-ம் தேதி உண்ணாவிரதம் இருக்க போவதாகவும், முதல்வரிடம் இது சம்பந்தமாக புகார் அளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் சட்ட சபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் இப்பிரச்னை எழுப்ப இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தீண்டாமை ஒழிப்புச் சட்டம் குறித்து காரசார விவாதம்

சென்னை: தீண்டாமை ஒழிப்புச் சட்டம் குறித்து, சட்டசபையில் நேற்று காரசாரமாக விவாதம் நடந்தது. இதில், உள்ளாட்சித்துறை அமைச்சர் முனுசாமி பேசும்போது,தீண்டாமை ஒழியும்போது, தீண்டாமை ஒழிப்புச் சட்டம் தானாக போய்விடும், என்றார்.
ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதம்:
கிருஷ்ணசாமி-புதிய தமிழகம்: ஆதிராவிட, பழங்குடியின மக்கள் முன்னேற்றத்திற்காக, சிறப்பு உட்கூறு திட்டத்தை, இந்திரா பிரதமராக இருந்தபோது அறிமுகப்படுத்தினார். அத்திட்டங்கள், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலேயே செயல்படுத்தப்படுவதில்லை. ஆனால், தமிழகத்தில், இத்திட்டம் சிறப்பாக அமல்படுத்தப்படுகிறது. இத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதி, சிந்தாமல், சிதறாமல் மக்களைச் சென்றடைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். (இதையடுத்து, கிருஷ்ணசாமி தெரிவித்த கருத்துக்கள் சலசலப்பை ஏற்படுத்தின.)
உள்ளாட்சித் துறை அமைச்சர் முனுசாமி: ஜாதியை முன்னிறுத்தி உறுப்பினர் பேசுகிறார். ஜாதியை முன்னிறுத்தி, ஆதிராவிட, பழங்குடியின மக்களின் வேகத்தை குறைக்க வேண்டாம். அவர்களின் திறமையை குறைக்க வேண்டாம்.
பாலபாரதி-மார்க்சிஸ்ட்: ஜாதியை முன்னிறுத்துவதாக அமைச்சர் கூறுகிறார். ஆனால், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை அரசே நடத்துகிறது. ஜாதி அமைப்பு என்பது, நெடுங்காலமாகவே இருந்து வருகிறது.தீண்டாமை ஒழிப்புச் சட்டம் இருந்தாலும், பல இடங்களில் தீண்டாமை கொடுமை சம்பவங்கள் நடக்கின்றன. திறமைக்கும், ஜாதிக்கும் சம்பந்தமில்லை.
அமைச்சர் முனுசாமி: திறமை இருந்தால், ஜாதியைப் பற்றி இழுக்க வேண்டியதில்லை என்று தான் கூறினேன். தீண்டாமை இருப்பதாக உறுப்பினர் கூறுகிறார். எந்த மாவட்டம், எந்த கிராமத்தில் என்று குறிப்பிட்டு கூற வேண்டும்.
பாலபாரதி: இது தொடர்பாக நான் வெட்டுத் தீர்மானமே கொடுத்துள்ளேன். அதில், விவரமாக உள்ளது.
அமைச்சர் முனுசாமி: வெட்டுத் தீர்மானம் இறுதியானது கிடையாது. அதைப்பற்றி அரசு முழுமையாக விசாரித்து, உண்மையை அறிந்தால் மட்டுமே ஒரு முடிவுக்கு வர முடியும். வெட்டுத் தீர்மானம் கொடுத்து விட்டாலே, அது தான் உண்மை என்று ஆகிவிடாது.
சவுந்தரராஜன்-மார்க்சிஸ்ட்: தீண்டாமை ஒழிக்கப்படாதபோது, தீண்டாமை ஒழிப்புச் சட்டம் மட்டும் எதற்கு?
அமைச்சர் முனுசாமி: தீண்டாமை ஒழியும் வரை, அது மறையும் வரை சட்டம் இருக்கும். ஒரு கட்டத்தில் தீண்டாமை ஒழியும்போது, சட்டம் தானாக போய்விடும்.
கிருஷ்ணசாமி-புதிய தமிழகம்: எஸ்.சி., என்றால், பட்டியல் இனம் என்று தான் பொருள். இந்த பட்டியல் இனத்தில், 76 ஜாதிகள் உள்ளன. அதில் ஒரு ஜாதிதான் ஆதிராவிடர். ஆனால், ஒட்டுமொத்த இனங்களுக்கும் சேர்த்து பொதுவாக ஆதிதிராவிடர் என அழைப்பது சரியல்ல. வட மாநிலங்களில், ஆதிராவிடர் என்றால் என்னவென்றே தெரியவில்லை.
செ.கு.தமிழரசன்-இந்திய குடியரசுக் கட்சி: 1921ல் இதே சபையில், அனைத்து ஜாதிகளுக்கும் சேர்த்து தான் ஆதிதிராவிடர் என குறிப்பிட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் பன்னீர்செல்வம்: விவாதம் எங்கேயோ போகிறது. இத்துடன், இப்பிரச்னையை நிறுத்திவிடுவது நல்லது. இவ்வாறு விவாதம் நடந்தது.
பாக்கு கேள்வியால் சிரிப்பலை: சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ஆத்தூர் தொகுதியில் பாக்கு கொள்முதல் நிலையம் அமைக்கப்படுமா? என, அ.தி.மு.க., உறுப்பினர் மாதேஸ்வரன் கேள்வி எழுப்பினார். அதற்கு,பாக்கு கொள்முதல் நிலையம் அமைப்பதற்கான சாத்தியம் இல்லை என, வேளாண் துறை அமைச்சர் தாமோதரன் பதிலளித்தார். அதைதொடர்ந்து, அ.தி.மு.க., உறுப்பினர் சின்னசாமி, பாக்கு மருத்துவ குணம் கொண்டதா? என கேட்டவுடன், அவையில் உறுப்பினர்கள் அனைவரும் சிரித்தனர். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தாமோதரன்,குடற்புழு நீக்கம், தோல் வறட்சி போக்குதல், ரத்த சிவப்பு அணுக்கள் அதிகரித்தல் போன்ற மருத்துவ குணம் உடையது. அதேபோல், தொழிற்சாலைகளில் தோல் பதனிடுதல் போன்ற பல பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதை அதிகம் பயன்படுத்தினால் சிறு மூளை பாதிக்கும். போதை வாஸ்து கொண்ட பாக்கு பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றார். பாக்கு கொள்முதல் நிலையம் அமைக்கப்படுமா என்ற கேள்வியால், அவையில், நீண்ட நேரம் உறுப்பினர்களின் சிரிப்பலை தொடர்ந்தது.

புதன், 2 மே, 2012

மள்ளர் குலத்தில் பிறந்த பொதுவுடைமைப் போராளி களப்பால் குப்பு தேவேந்திரர் 100ம் ஆண்டு ஆண்டு நினைவேந்தல்


தேவேந்திரர் மறுமலர்ச்சி பேரவை-சோழமண்டலம்"

மள்ளர் குலத்தில் பிறந்த பொதுவுடைமைப் போராளி களப்பால் குப்பு தேவேந்திரர் 100ம் ஆண்டு ஆண்டு நினைவேந்தல்

சாதி வாரி கணக்கெடுப்பு தேவேந்திர குல வேளாளர் என்று பதியவும்


மள்ளர் குலத்தில் பிறந்த பொதுவுடைமைப் போராளி களப்பால் குப்பு தேவேந்திரர் 100ம் ஆண்டு ஆண்டு நினைவேந்தல் வீரவணக்கம்..தேவேந்திரர் மறுமலர்ச்சி பேரவை-சோழமண்டலம்"



.

சாதி வாரி கணக்கெடுப்பு தேவேந்திர குல வேளாளர் என்று பதியவும்