ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 22 ஜூன், 2012

ஓட்டப்பிடாரத்தில் ஆய்வுக் கூட்டம்







ஓட்டப்பிடாரம், ஜூன் 21: ஓட்டப்பிடாரத்தில், கிராம நிர்வாக அலுவலர்களின் நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.  ஓட்டப்பிடாரம் தொகுதி எம்எல்ஏ கிருஷ்ணசாமி, பொதுமக்களிடம் குறைதீர்க் கூட்டம் நடத்தி மனுக்கள் பெற்றுள்ளார். அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி வட்ட அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டதாம்.  பின்னர் அந்த மனுக்கள், அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர்களிடம் பரிசீலனைக்காக அளிக்கப்பட்டதாம். இருப்பினும் அவர்கள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லையென கூறப்படுகிறது.  இத்தகைய போக்கை கண்டித்து ஜூலை 9-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தவுள்ளதாக கிருஷண்சாமி எம்எல்ஏ அறிவித்தார்.  இதற்கிடையே, அந்த மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து கேட்டறிய கிராம நிர்வாக அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.  ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.அமிர்தஜோதி தலைமை வகித்தார்.  வட்டாட்சியர் ராமசுப்பிரமணியன், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் காளிமுத்து உள்பட கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் தகுதி வாய்ந்தவர்களுக்கு முதியோர் உதவித்தொகை அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை ஜூலை 31-ம் தேதிக்குள் எடுத்து புள்ளி விவரத்துடன் வழங்க வேண்டுமென கூட்டத்தின்போது உத்தரவிடப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக