ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 24 ஜூலை, 2012

மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் நினைவு நாள்

திருநெல்வேலி : நெல்லையில் மாஞ்சோலை தேயிலைத்தோட்ட தொழிலாளர்களின் 13ம் ஆண்டு நினைவுநாளையொட்டி புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள், பா.ம.க., கம்யூ., உட்பட 21 கட்சிகள், அமைப்புக்களை சேர்ந்தவர்கள் ஆற்றில் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 99ம்ஆண்டு ஜூலை 23ம்தேதி கூலிஉயர்வு கேட்டு போராடி சிறையில் அடைக்கப்பட்ட மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை விடுவிக்க வலியுறுத்தி நெல்லையில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்க தோட்ட தொழிலாளர்கள் ஊர்வலம் சென்ற போது கலவரம் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தினர். 17 பேர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இறந்தனர்.
ஆண்டுதோறும் ஜூலை 23ம்தேதி ஆற்றில் மூழ்கி இறந்தவர்களுக்கு பல்வேறு அரசியல்கட்சியினர், அமைப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 13ம் ஆண்டு நினைவுநாளையொட்டி நேற்று 21 கட்சிகள், அமைப்புக்களை சேர்ந்தவர்கள் அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் ஆற்றில் அஞ்சலி செலுத்தினர்.
புதிய தமிழகம் கட்சி சார்பில் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நெல்லை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து மவுன ஊர்வலம் துவங்கியது. மாநில, மாவட்ட நிர்வாகிகள், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர். அண்ணாத்துரை சிலை முன்பு ஊர்வலம் நிறைவு பெற்றது.
பின்னர் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் எம்.எல்.ஏ., ராமசாமி, மாநில பொதுச்செயலாளர் வி.கே.அய்யர், மாவட்ட செயலாளர்கள் மாநகர் செல்லப்பா, புறநகர் சுப்பிரமணியன், தூத்துக்குடி அதிசயக்குமார், விருதுநகர் ராமராஜ் உள்ளிட்டோர் ஆற்றில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இந்திய கம்யூ.,
இந்திய கம்யூ., சார்பில் மாநில செயலாளர் தா.பாண்டியன் தலைமையில் மாவட்டச்செயலாளர் சண்முகவேல், துணைச்செயலாளர் காசிவிஸ்வநாதன், மாநகர செயலாளர் இசக்கிமுத்து உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
பா.ம.க., சார்பில் மாநில துணைப்பொதுச்செயலாளர் வியனரசு, துணைத்தலைவர் மோகன்ராஜ் தலைமையில் மாவட்ட செயலாளர் சீயோன் தங்கராஜ், தலைவர் நிக்சன், பொருளாளர் பாப்பாரத்தினம், தொழிற்சங்க செயலாளர் ஆறுமுகம், மாவட்ட துணைச்செயலாளர் ரமேஷ், தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளர் மாரியப்பன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
விடுதலை சிறுத்தைகள்
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தலைவர் திருமாவளவன், மாநில அமைப்புச்செயலாளர் ஆற்றலரசு, துணை செயலாளர் கலைவேந்தன், மாவட்ட செயலாளர் கார்த்திக் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
பா.ஜ., சார்பில் மாவட்ட தலைவர் கட்டளை ஜோதி, மாநில செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், மாநில எஸ்.சி., அணி செயலாளர் முருகதாஸ், மாவட்ட எஸ்.சி., அணி தலைவர் முத்துபலவேசம், மாவட்ட பொதுச்செயலாளர் குருசாமி, அமைப்புச்செயலாளர் ரமேஷ், செயற்குழு உறுப்பினர் நத்தம் முருகன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
த.ம.மு.க.,
த.ம.மு.க., சார்பில் நிறுவனர் ஜான் பாண்டியன் தலைமையில் மாநில அமைப்புச்செயலாளர் நெல்லையப்பன், மாநகர் மாவட்ட செயலாளர் கண்மணிமாவீரன், மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், கிழக்கு மாவட்ட செயலாளர் இன்பராஜ், மாநகர தலைவர் அந்தோணி அன்பரசன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். ஆற்றங்கரையில் நினைவுச்சின்னம் அமைக்க கையில் செங்கற்களுடன் வந்த நிர்வாகிகளை வண்ணார்பேட்டையில் போலீசார் மறித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் தேவேந்திரன் தலைமையில் மாவட்ட துணைத்தலைவர் சப்பாணி யாதவ், மாவட்ட கட்டடத்தொழிலாளர் சங்கத்தலைவர் சிவா, பிரபுகாளிதாஸ், ஆனந்த், முருகேசன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
தேசிய அம்பேத்கர் மக்கள் கழகம் சார்பில் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஞானசேகரன் தலைமையில் மாவட்ட தலைவர் பொன்னுசாமி, பொருளாளர் ராமகிருஷ்ணன், துணைத்தலைவர் ஆறுமுகம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
நாம் தமிழர் கட்சி சார்பில் தென் மண்டல அமைப்பாளர் சிவக்குமார் தலைமையில் மாவட்ட அமைப்பாளர் சக்திபிரபாகர், நடராஜன், ராம்குமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
அகில இந்திய திரிணாமூல் காங்., சார்பில் எஸ்.சி.எஸ்.டி., பிரிவு மாநில தலைவர் ராகவ் மாடசாமி, நிர்வாகிகள் கோமு, குணசேகரன், குமார், செல்லப்பா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
மள்ளர் நாடு சார்பில் மாவட்ட செயலாளர் மகேஷ், விவசாய அணி செயலாளர் தண்டாயுதபாணி, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் முத்துக்குமார், பாளை. பகுதி செயலாளர் குமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்புலிகள் சார்பில் பொதுச்செயலாளர் நாகை திருவள்ளுவன் தலைமையில் மாநில துணை பொதுச்செயலாளர்கள் முகிலரசன், முத்துக்குமார், நெல்லை மாயா, மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
ஆதித்தமிழர் பேரவை சார்பில் மாநில துணை பொதுச்செயலாளர் கண்ணன் தலைமையில் மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன், மாநகர செயலாளர் வேலாயுதம், இளைஞரணி மாவட்ட செயலாளர் இளஞ்செழியன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
மள்ளர் மீட்புக்களம் சார்பில் தலைவர் செந்தில்மள்ளர், மாவட்டத்தலைவர் சுப்பையா பாண்டியன், குமரமள்ளர், பாண்டியன், செல்லையா, ரவிக்குமார், தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
மா.லெ., கம்யூ., சார்பில் மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ் தலைமையில் முற்போக்கு பெண்கள் கழக மாநில தலைவர் தேன்மொழி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கணேசன், கருப்பசாமி, ரவிடேனியல், சபாபதி, ராமையா, மாரிமுத்து, அன்புசெல்வி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
மா.லெ.கம்யூ. மக்கள் விடுதலை சார்பில் மாநில செயலாளர் பாண்டியன் தலைமையில் மாவட்ட செயலாளர் துளசி, ராஜமாணிக்கம், மாரியப்பன், ஆறுமுகம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
செந்தமிழர் முன்னேற்றக்கழகம் சார்பில் நிறுவனத்தலைவர் ராஜா.டி. ஆனந்தன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மா.கம்யூ., சார்பில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் தலைமையில் மாவட்ட செயலாளர் பாஸ்கரன், செயற்குழு உறுப்பினர்கள் பழனி, கருணாநிதி, ஜெயராஜ், மோகன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சுடலைராஜ், வண்ணமுத்து, மாநகரக்குழு உறுப்பினர்கள் துரைராஜ், ராஜசேகரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
மத்திய, மாநில அரசு எஸ்.சி.எஸ்.டி., ஊழியர் சங்கம், மின்வாரிய டாக்டர் அம்பேத்கர் எம்ப்ளாயீஸ் யூனியன் உட்பட 21 கட்சி, அமைப்புக்களை சேர்ந்தவர்கள் ஆற்றில் அஞ்சலி செலுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக