ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 27 மே, 2013

ராஜபாளையத்தில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தினர் சார்பில் வெண்குடை திருவிழா


ராஜபாளையத்தில் 7 தெரு மக்கள் நடத்திய சித்திரை வெண்குடை திருவிழா


ராஜபாளையத்தில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தினர் சார்பில் வெண்குடை திருவிழா நடைபெற்றது. ராஜபாளையம் நகர் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் 7 தெருக்களுக்கு பாத்தியப்பட்ட சித்திரை வெண்குடை திருவிழா சீனிவாசன் புதுத்தெரு சாவடி தலைமையில் ஆணையூர் தெரு மற்றும் அம்மன் பொட்டல் மத்திய வடக்கு தெரு இணைந்து நடத்தினர்.

நேற்று காலை சுமார் 7.30 மணி அளவில் சீனிவாசன் புதுத்தெரு சாவடியில் இருந்து நீர்காத்த அய்யனார்சாமி சப்பரத்தில் எழுந்தருளி தாரை தப்பட்டையுடன் பட்டத்து யானை, ஆலி ஆட்டம், குதிரை ஆட்டம், மயிலாட்டம், செண்டா மேளம், பேண்ட் வாத்தியம் முழங்க குடைகள் சகிதம் புறப்பட்டு வெண்குடை ஏந்தி செம்புலி சித்தன் அதிவீரராஜ் ஆடி வர 7 தெருக்கள் உலாவி பெரிய கடை பஜார் காமாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு முடங்கியார் சாலை வழியாக அம்பேத்கார் நகர் சென்றடைந்தது.

அங்கு இருந்து மேற்கே அய்யனார் கோவில் சென்று சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் மாலை சுமார் 5 மணிக்கு அம்பேத்கார் நகர் வந்து பின்பு அங்கு இருந்து புறப்பட்டு தாலுகா அலுவலகம் வந்து அங்குள்ள வாழவந்தம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து மீண்டும் பெரிய கடை பஜார் சாவடி வந்தடைந்தது.

இன்று (திங்கட்கிழமை) காலை சீனிவாசன் புது தெரு சாவடியில் இருந்து வெண்குடை ஊர்வலம் புறப்பட்டு 7 தெருக்கள் வழியாக வலம் வந்து தென்காசி ரோடு வழியாக அம்பலப்புளி பஜார் விஸ்வ கர்ம சாவடிக்கு சென்று ஆசி பெற்று மீண்டும் சீனிவாசன் புதுத்தெரு சாவடி வந்தடையும்.

இரவு சுமார் 10 மணி அளவில் பாம்பே லாட்ஜ் எதிர்புறம் அமைந்துள்ள மேடையில் ஆடல்பாடல் நிகழ்ச்சியும், நாளை இரவு வடிவேல் கணேஷ் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சித்திரை வெண்குடை திருவிழா கமிட்டியாளர்கள் செய்திருந்தன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக