ராமநாதபுரம்: புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது. இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். அருந்ததியருக்கான உள்ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 13ஆம் நாள் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புல்லந்தை, பேரையூர், தேவிபட்டணம் உள்ளிட்ட ஐந்து இடங்களில் உண்ணாவிரதம் இருப்பதற்காக புதிய தமிழகம் கட்சியினர் காவல் துறையிடம் அனுமதி கேட்டிருந்தனர். சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் இந்த உண்ணாவிரதத்திற்கு போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். இதில், கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பங்கேற்க இருப்பதாகவும், பாதுகாப்பு கோரியும், கட்சியினர், போலீசில் மனு செய்தனர். சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதால் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் நுழைவதற்கு மாவட்ட எஸ்.பி பரிந்துரை கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதன் பேரில் கிருஷ்ணசாமிக்கு தடை விதித்து கலெக்டர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்
.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக