ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

கேரளா தேவேந்திரகுல சமுதாய சங்கம் நடத்திய மண்டல மாநாடு...

22-09-2013 ஞயிற்றுக்கிழமை கேரளா தேவேந்திரகுல சமுதாய சங்கம் நடத்திய மண்டல மாநாடு கடந்த 22-09-2013 அன்று கோவில்கடவில் நடந்தது. இதில் நமது தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சிறப்பு அழைப்பாளராக அழைத்ததின் பேரில் கலந்துகொண்டோம். தலைவர் தமிழினவேந்தர் மாநட்டில் சிறப்புரையாற்றினார். கேரளா மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் உள்ள மறையூர் , கோவில் கடவு, காந்தலுர்,பெரடிபள்ளம், சுரக்குளம், மிசன் வயல், சாணல்மேடு,திண்டுகொம்பு, மூணார் என பல்வேறு மலை கிராமங்களில் பெரும்பாண்மையாக நமது தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள் வாழ்கின்றனர். இதில் மூணார் தவிர மற்ற கிராம மக்கள் தேயிலை தோட்ட தோழிலாளர்கள் அல்ல.பெரும்பாண்மையாக விவசாயம் செய்து வருகின்றனர். தொழில் செய்து வருகின்றனர். நில உடைமையாளர்களாக உள்ளனர். அனைவரும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மொழிவாரி கேரள மாநிலம் உருவாவதற்கு முன்பாகவே குடியேறிய மக்கள். தற்போது இடுக்கி , தேவிகுளம், பீர்மேடு பொன்ற பகுதியில் வாழும் இம்மக்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சனை சாதிச்சான்றிதழ் பெரும் பிரச்சனை. முல்லைப்பெரியாறு பிரச்சனைக்குப்பிறகு பெருமளவில் நம்மக்களை பாகுகுபடுத்திபார்க்கும் நிலை உள்ளது. இதற்காக விரைவில் திருவனந்தபுரத்தில் ஒரு பேரணி நடத்தி போராட வேண்டும் என்று அப்போராட்டத்தை அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர் சங்கத்தின் சார்பில் ஒருங்கிணைக்வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மாநாட்டில் சிகப்பு பச்சை கொடியுடன் உணர்வோடு கலந்துகொண்ட நமது பெண்களின் எழுச்சிமிகு உணர்வு நம்மை வியக்கவைத்தது. தலைவருக்கு மக்கள்கொடுத்த வரவேற்பு பிரமிக்கவைத்தது. மறையூர்,காந்தலூரில், கோவில்கடவில் தலைவர் சமுதாயக் கொடிஏற்றி வைத்தர்.தலைவரின் வருகை அறிந்து சந்திக்க வந்த பெண்கள் கூட்டம் நம்மை பிரமிக்கவைத்தது. குடும்பம் குடும்பமாக மாநட்டில் கலந்துகொண்டதோடு மட்டுமல்லாது தலைருடன் புகைப்படம் எடுக்க மக்கள் காட்டிய ஆர்வம் எழுச்சி மிக்கது.தலைவருடன்தோழர் கண்மணிமாவீரன்,

துரைப்பாண்டியன்,குபெந்திரபாண்டியன்,கிங்தேவேந்திரன்,தேவப்பிரியன்,மதுரை ஆம்புலன்ஸ் முனியாண்டி உள்ளிட்ட பலர் உடன்சென்றிருந்தனர்.

நன்றி! தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக