ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 25 மே, 2011

டாக்டர் கிருஷ்ணசாமி

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி அவர்கள் ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதியில் வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்து மக்கள் குறைகளை கேட்டு அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.






காலையில் கருங்குளத்தில் நடைபெற்ற குறை தீர்ப்பு முகாமிற்கு வருகை தந்த சட்டமன்ற உறுப்பினர் மற்றும் உயர் அதிகாரிகளை தொழிலதிபர் செந்தில் தலைமையிலான பொதுமக்கள் மாலை அணிவித்து வரவேற்றனர்.





ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் பேசுகையில், "கருங்குளத்திலும், புதுக்கோட்டையிலும் மக்கள் குறை தீர்க்கும் முகாமில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவை முதியோர், விதவைகள் மற்றும் ஊனமுற்றோர் உதவித்தொகை தொடர்பானது.





சமுதாயத்தில் ஆதரவற்ற அவர்களின் துயர் துடைக்க மாவட்ட ஆட்சியரிடம் பேசி சிறப்பு கிராமசபை கூட்டம் மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். வல்லநாடு, தெய்வசெயல்புரம், வாகைக்குளம், புதுக்கோட்டை, பேருரணி ஆகிய இடங்களில் பாயின்ட் டூ பாயின்ட் வாகனங்கள் என்று பேருந்துகள் நிறுத்தப்படுவது இல்லை. இதனால் மாணவர்கள், நோயாளிகள் பெரும் பாதிப்பிற்குள்ளாகும் அவல நிலை உள்ளது. இதற்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் சார்பில் வல்லநாட்டிலும், புதுக்கோட்டையிலும் தனி ஆய்வாளர் நியமித்து கண்காணிப்பு செய்யப்படும் என உறுதி அளித்துள்ளனர். தனியார் வாகனங்களை நிறுத்தாமல் விதியை மீறி சென்றால் ஓட்டுனர், நடத்துனர் உரிமம் ரத்து செய்யப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் உறுதி அளித்துள்ளார்.





குடிநீர் பிரச்சனை பெரும் பாதிப்பை உண்டாக்கியுள்ளது. தற்காலிகமாக லாரி மூலம் இலவசமாக குடிநீர் விநியோகம் செய்யப்படும். பின்னர் ஆழ்குழாய் கிணறு மூலமாகவோ, சீவலப்பேரி கூட்டு குடிநீர் மூலமாகவோ ஒரு மாத காலத்திற்குள் நிரந்தர தீர்விற்கான வழி காணப்படும். சமுதாயக்கூடம், அங்கன்வாடி, நூலகம் போன்ற கோரிக்கைகளுக்கு இடம் தேர்வு செய்யப்பட்டு சட்டமன்ற உறுப்பினர் நிதி மூலம் கட்டிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கல்லம்பரும்பு, சிறுப்பாடு, அல்லிக்குளம் உள்ளிட்ட கிராமங்களுக்கு பேருந்துகள் செல்வதில்லை என்ற குறை நிவர்த்தி செய்யப்படும்.





ரேசன் கடைகள் இல்லாத அய்யனடைப்பு, சிறுப்பாடு போன்ற கிராமங்களுக்கு பொது விநியோக திட்ட அதிகாரிகள் ரேசன் கடைகள் அமைத்து தர உறுதி கொடுத்துள்ளனர். பள்ளி குழந்தைகள் பேருந்துகளில் ஏற்றி செல்லப்படுவது கண்காணிப்பு செய்யப்படும். காலை, மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளோ அல்லது நேர மாற்றமோ செய்து மாணவர்களின் குறைகள் தீர்வு காணப்படும். இணைப்பு சாலைகள் இல்லாத கிராமங்களுக்கு சாலைகள் அமைத்து தரப்படும். முக்கியமாக எந்த திட்டம் என்றாலும் அதிகாரிகள் யாரும் லஞ்சம் வாங்கக் கூடாது.





பொதுமக்களும் பணம் கொடுத்து எந்த காரியமும் செய்து விடலாம் என நினைக்க கூடாது. இது ஆரம்பம்தான் தொடர்ந்து மூன்று மாதத்திற்கு ஒருமுறை இது போன்ற முகாம்கள் நடைபெறும். மக்களின் குறைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் முழு ஒத்துழைப்பு தருகின்ற வகையில் செயல்படும் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.





இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்த தமிழக முதல்வர் மற்றும் அ.தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்" என்றார்.





அரசுத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் சி.நா.மகேஸ்வரன் உத்தரவின் பேரில் உதவி ஆட்சியர் லதா, வட்டார போக்குவரத்து அலுவலர் தங்கவேல், அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாளர் நாராயணசாமி, கருங்குளம் வட்டார ஆணையாளர் ராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் லீமாரோஸ், பொறியாளர் கணேசன், நெடுஞ்சாலை பொறியாளர் கிருஷ்ணசாமி, பொதுப்பணித்துறை பொறியாளர் சாமுவேல், தூத்துக்குடி தாசில்தார் கலியங்கவரதன், தனி தாசில்தார் முத்துக்கிருஷ்ணன், தூத்துக்குடி வட்டார ஆணையாளர் பாலசுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம் மற்றும் பல்வேறு துறையின் உயரதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களின் மனுக்கள் பெற்று அவற்றிற்கு உடனடி பதில் அளித்தனர். கருங்குளத்தில் 974 மனுக்களும், புதுக்கோட்டையில் 768 மனுக்களும் பெறப்பட்டு அவை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.கிருஷ்ணசாமியின் பரிந்துரைக்குப் பின்பு உரிய துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.



புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் மதுரம் பாஸ்கர், மாநில தொண்டரணி செயலாளர் லட்சுமணப்பாண்டியன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கனகராஜ், விருதுநகர் மாவட்ட செயலாளர் ராம்ராஜ், தொழிலதிபர் செந்தில், அயிரவன்பட்டி முருகேசப்பாண்டியன், தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் பெருமாள், ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் பாபு, நெல்லை மாவட்ட பொறுப்பாளர் அரவிந்த் ராஜா, அசோக்குமார், சி.பி.எம். கருங்குளம் ஒன்றிய செயலாளர் மாரியப்பன், அ.தி.மு.க. முன்னாள் கருங்குளம் ஒன்றிய செயலாளர் பிள்ளைமுத்து, தூத்துக்குடி ஒன்றிய விவசாய அணி செயலாளர் வி.பி.ஆர். சுரேஷ், சமத்துவ மக்கள் கட்சி, தே.மு.தி.க., பார்வர்ட் பிளாக் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.





சனிக்கிழமை காலை தாளமுத்து நகரிலும், மதியம் ஓட்டப்பிடாரத்திலும் இதே போன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெறுகின்றது.



தேவேந்திரர் குரல்

தேவேந்திரர் குரல் உலக தேவேந்திரர்கள் அனைவரும் ஒன்று கூடும் ஒரு நிறைவான இணையதளம்.




தேவேந்திர குலத்தில் இருக்கிற பல்வேறு அமைப்புகளின் செய்திகளையும், கோரிக்கைகளையும், போராட்டங்களையும் உடனுக்குடன் வெளிக் கொணருகிற ஒரு இணையத்தளமாக தேவேந்திரர் குரல்  செயல்படும். இச் செய்திகளை அந்தந்த அமைப்புகளின் அனுமதியோடு வெளியிடுவது, அல்லது அவர்களே நேரடியாக தகவல் உள்ளீடு செய்வது என்ற இரு வகையில் இந்த இணையத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.



பல தேவேந்திரர் அமைப்புகள் பல்வேறு தளங்களில் பல்வேறு வகையில் பல சீரிய பணிகளை இந்த மக்களுக்காக செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய இந்த செயல் ஊடகங்களில் மறைக்கப்படுகிறது, அல்லது உண்மை மறைக்கப்பட்டு பொய்யான செய்திகள் வெளிவருகின்றன. அமைப்புகள் தாங்கள் நடத்தும் இதழ்களின் மூலமாக செய்திகளை வெளிக்கொண்டு வர ஒரு மாதமோ அல்லது மூன்று மாதமோ ஆகிறது. பல அமைப்புகளின் செயற்பாடுகள் வெளிவராமலே போய்விடுகின்றன. இன்னும் சொல்வதென்றால் எத்தனை அமைப்புகள் எங்கெங்கு இருக்கின்றன என்று கூட பல பேருக்கு தெரியாது. இப்படி எத்தனையோ தனித் தனியாக செயல்படும் சிறு அமைப்புகள், வட்டார அமைப்புகள், மாவட்ட அமைப்புகள், மாநில அமைப்புகள், தேசிய அமைப்புகள், உலக தேவேந்திர அமைப்புகளின் தகவல்களை ஒருங்கிணைத்து ஒரே இணையதளத்தில் அனைத்து தேவேந்திர சொந்தங்களுக்கும் தெரிய வைக்கின்ற முயற்சியை தேவேந்திரர் குரல் செய்கிறது. செய்திகள் உடனுக்குடன் வெளியாவதுடன் உலகம் முழுவதும் காண முடியும்.



இதில் தங்கள் செய்திகளை உள்ளீடு செய்ய எந்த கட்டணமும் கிடையாது. எவ்வளவு செய்திகள் வேண்டுமானாலும் உள்ளீடு செய்யலாம்.  தமிழ்நாட்டில் பல ஊர்களில் உள்ள தேவேந்திரர்களின், ஊர் சங்கங்களின் செய்திகளையும் இதில் உள்ளீடு செய்யலாம்.  தேவேந்திர சொந்தங்கள் அவர்கள் ஊரில் தேவேந்திரர்கள் சேர்ந்து கொண்டாடக்கூடிய கோயில் திருவிழா, மன்ற கொண்டாட்டங்கள், ஆண்டு விழாக்கள், பொதுக் கூட்டங்கள் மற்றும் பல நிகழ்வுகளை இத்தளத்தில் வெளியிடலாம்.



இவ்விணையதளத்தை மேலும் பயனுள்ளதாக்க தங்களின் மேலான ஒத்துழைப்பையும், ஆலோசனைகளையும் வரவேற்கிறோம்.

தேவேந்திரர் குரல்


தேவேந்திரர்களுக்கான பொதுவான தகவல் தொடர்பு தளம், தகவல்களை psrsivakumar@gmail.com என்ற மெயில் முகவரிக்கு அனுப்பவும், அனைத்து தகவலும் வெளியிடப்படும்.தேவேந்திரர் குரல் இணையதள நிறுவனர்.பி.எஸ்.ஆர்.

ஞாயிறு, 22 மே, 2011

ஓட்டப்பிடாரம் சட்டப் பேரவை தொகுதி - வல்லநாடு பகுதியில் மக்கள் குறை தீர்ப்பு முகாம்

ஓட்டப்பிடாரம் சட்டப் பேரவை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ள டாக்டர் க. கிருஷ்ணசாமி அவர்கள் மக்களுக்கு நன்றி அறிவிக்கவும், மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்திடவும் ஓட்டப்பிடாரம் தொகுதியில் இரண்டு நாள் சுற்றுப் பயணம் செய்கின்றார்.




முதல் நாளான இன்று வல்லநாட்டில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். முன்னதாக தேர்தலில் பணியாற்றிய அ.தி.மு.க. கூட்டணி கட்சி பொறுப்பாளர்களுக்கும், வாக்களித்த பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்து பேசினார்.



கருங்குளம், வசவப்பபுரம், வல்லநாடு, மணக்கரை, அனவரனல்லூர், நாணல்காடு உள்ளிட்ட பல்வேறு கிரமாங்களை சேர்ந்த மக்கள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணசாமியிடம் மனுக்களை அளித்தனர்.தூத்துக்குடி மாவட்ட பல்வேறு துறையின் உயர் அதிகாரிகள் இம்முகாமில் கலந்து கொண்டு குறை தீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.





































ஞாயிறு, 15 மே, 2011

2011ஒட்டப்பிடாரம் தொகுதி - ஒரு பார்வை









ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரமுழக்கமிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன், கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து சுதேசி கப்பல் இயக்க¤ய வ.உ.சிதம்பரனார், சுதந்திரத்துக்கு வீர முழக்கமிட்ட வீரன் சுந்தரலிங்கம் போன்ற தியாக சீலர்கள் பிறந்த தொகுதி ஒட்டப்ப¤டாரம். இதற்கு சாட்சியாக வீரபாண்டிய கட்டபொம்மன் ஆட்சி செய்த பாஞ்சாலங்குறிச்சி கோட்டை இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. தூத்துக்குடி, திருச்செந்தூர் வரும் சுற்றுலா பயணிகள் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையையும் பார்வையிட்டு செல்கின்றனர். வறட்சியான தொகுதி என்பதால் பலர் பிழைப்¢பு தேடி வெளியூருக்கு இடம் பெயர்ந்து விட்டனர். வானம் பொழிகிறது.... பூமி விளைகிறது என்று கட்டபொம்மன் முழக்கமிட்ட இந்த மண்ணில் மானாவாரி விவசாயம்தான் நடந்து வருகிறது. இந்த தொகுதிக்கு பெருமை அளிப்பது ‘குட்டி திருப்பூர்’ என அழைக்கப்படும் புதியம்புத்தூர். இங்கு உற்பத்தியாகும் ஆயத்த ஆடைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.



தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரே தனி தொகுதி ஒட்டப்ப¤டாரம். ஒட்டப்பிடாரம் தொகுதி 1962ல் உருவானபோது பொது தொகுதியாக இருந்தது. 1962ல் நடந¢த தேர்தலில் ராமகிருஷ்ண நாயக்கர்(காங்கிரஸ்) வென்றார். 1967ல் ஒட்டப்பிடாரம் தனி தொகுதியாக மாறிய பின்னர், நடந்த தேர்தலில் எம்.முத்தையா(சுதந்திரா) வெற்றி பெற்றார். 1971ல் எம்.முத்தையா(பார்வர்ட் பிளாக்), 1977ல் ஒ.எஸ்.வேலுச்சாமி(காங்கிரஸ்), 1980ல் எம்.அப்பாத்துரை(கம்யூனிஸ்டு), 1984ல் ஆர்.எஸ்.ஆறுமுகம்(காங்கிரஸ்), 1989ல் எம்.முத்தையா(திமுக), 1991ல் ராஜமன்னார்(அதிமுக), 1996ல் டாக்டர் கிருஷ்ணசாமி(ஜனதா), 2001ல் ஏ.சிவபெருமாள்(அதிமுக), 2006ல் மோகன்(அதிமுக) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த தொகுதியில் தொடர்ந்து 4வது முறையாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுவதால், ஸ்டார் அந்தஸ்தை தொகுதி பெற்றுள்ளது. தற்போது திமுக வேட்பாளர் சி.எஸ்.ராஜா, புதிய தமிழகம் சார்பில் டாக்டர் கிருஷ்ணசாமி, பா.ஜ வேட்பாளர் முத்துபலவேசம், பகுஜன் சமாஜ் வேட்பாளர் சந்திரா மற்றும் சுயேச்சைகள் களத்தில் உள்ளனர்.



டாக்டர் கிருஷ்ணசாமியை பொறுத்தவரை 1996ல் முதன் முதலாக ஒட்டப்பிடாரத்தில் வெற்றி பெற்ற பின்னர் 2001, 2006 ஆகிய சட்டசபை தேர்தல்களில் இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவியுள்ளார். 1998, 1999, 2004, 2009 ஆகிய பாராளுமன்ற தேர்தல்களில் தென்காசி(தனி) தொகுதியில் போட்டியிட்டு 3வது இடத்தை பிடித்துள்ளார். கடந்த 2006 தேர்தலில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் பகுஜன் சமாஜ் வேட¢பாளராக போட்டியிட்ட புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, அதிமுக வேட்பாளர் மோகனிடம் தோல்வியை தழுவினார். 1996 முதல் ஒவ்வொரு சட்டசபை, பாராளுமன்ற தேர்தல்களிலும் போட்டியிடும் வழக்கத்தை கொண்டுள்ள டாக்டர் கிருஷ்ணசாமி, இந்த தேர்தலிலும் களமிறங்கியுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் ராஜா, முதன் முதலாக சட்டசபை தேர்தலை சந்திக்கிறார். ஒட்டப்பிடாரம் தொகுதியில் ஒரு லட்சத்து 63,343 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 82,125 பேர் ஆண்கள். 81,218 பேர் பெண்கள்.

டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் வரலாறு








பெயர் : மருத்துவர் கருப்புசாமி கிருஷ்ணசாமி, எம்.பி..பி.எஸ்., எம்.டி.,

 சட்டமன்ற உறுப்பினர்





பெற்றோர் : கருப்புசாமி - தாமரை அம்மாள்





பிறந்த நாள் : 03.04.1952





இடம் : மசக்கவுண்டர் புதூர், குடிமங்கலம், உடுமலைப்பேட்டை,

(பழைய கோவை மாவட்டம்) திருப்பூர் மாவட்டம்.





கல்வி

பள்ளி : அரசினர் உயர்நிலைப் பள்ளி பூளவாடி (பள்ளிஇறுதிவரை)



புகுமுக வகுப்பு : அரசினர் கலைக்கல்லூரி, கோயமுத்தூர். (தேசிஅறிவியல் தகுதிகாண் திட்டம் - சிறுவாணி நீர் மாசு குறித்து ஆய்வறிக்கை சமர்ப்பித்தல்)





கல்லூரி

1. வேளாண்மைக் கல்லூரி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை

கழகம், கோயமுத்தூர். 45 நாட்கள் - வேளாண்மைப் பல்கலைக் கழக துணை முதன்மையர் முனைவர் தானியல் சுந்தராசு அறிவுரைப்படி மருத்துவக் கல்லூரியில் சேரல்.(மருத்துவக் கல்லூரி சேர்ப்பு அனுமதிக் கடிதத்தை சாதி வெறி பிடித்த அஞ்சல்காரர் 10 நாட்கள் மறைத்து, வேண்டுமென்றே தாமதப்படுத்தி இடையூறு செய்து கொடுத்தார்.



2. இளநிலை மருத்துவம் M.B.BS.,

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி (1972-75) முதல் இரண்டாண்டுகள்) மதுரை மருத்துவக் கல்லூரி, மதுரை. (1975-78) மூன்றாம் ஆண்டு முதல் பயிற்சி மருத்துவர் பணி வரை),





3. முதுநிலை மருத்துவம் (M.D)

முதுநிலை மருந்தியல் கோயமுத்தூர் மருத்துவக் கல்லூரி (1982 - 84)





திருமணம் : வி.வி. சந்திரிகா, பி.எஸ்.சி., எம்.பி.பி.எஸ்.,





நாள் : 22.01.1984 (திருமணமான இரண்டாவது நாளில் விழுப்புரம் 12

தாழ்த்தப்பட்டவர்கள் படுகொலை தொடர்பான கைது. மதுரை சிறைக்கு அழைத்துச் செல்லப்படல் - மிசா கால சிறை நண்பர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சார்ந்த வழக்கறிஞர் விஸ்வநாதன் அவர்களின் வாதத்திறமையால் பிணையில் விடுதலை)





குழந்தைகள் :

மகள் : திருமதி டாக்டர் கி. சங்கீதா ஓம்நாத் ;

மருமகன் : டாக்டர் ஓம்நாத்

மகன் : கி.ஷ்யாம்







சமுதாயப் பணிகள் :-

கோவையில் தன் அண்ணன் திரு.ராஜு அவர்கள் தலைமையில் நிலவுடைமையாளர்களுக்கு எதிரான போராட்டத்தில் ஆறாம் வகுப்பு மாணவனாக இருந்தபோது பங்கேற்பு - கொங்கு நாட்டில் விவசாய கூலிகளுக்கு கூலியாக விளைபொருளை மட்டும் வழங்கும் போக்கிற்கு எதிர்ப்பு - முதன்முறையாக கூலியாக பணம் கொடுக்க நிலவுடைமையாளர்களுக்கு எதிராக போராடியமை.





- பிறந்த மண்ணில் பள்ளி நாட்களில் தீண்டாமை எதிராக, மனித உரிமைகளுக்காகப் போராடுதல் - பள்ளியில் நடந்த தீண்டாமைக் கொடுமைகளை தட்டிக் கேட்டல் - பள்ளி மாணவர் தலைவர் பொறுப்பு வகித்து சிறப்பாக பணி புரிதல் - சாதி வெறியர்கள் நீக்கக் கோரிக்கை - ஆசிரியர்களிடம் நிலவிய தீண்டாமையைக் கண்டித்து போராட்டம். (1966 - 1970)





- மருத்துவக் கல்லூரி மாணவர் பருவத்தில் பீகார் வெள்ளச்சேதம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி மற்றும் உடமைகள் திரட்டி உதவியமை - அன்றைய இந்திய பிரதமர் அன்னை இந்திராகாந்தி அம்மையார் பாராட்டுச் சான்றிதழ் பெற்றார். (1975)





- நெருக்கடி நிலையின்போது (1976 - 77) இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிய - லெனிய பிரிவு) மாணவர் பிரிவு மாநில அமைப்பாளராக இருந்தமை - கட்டாயக் குடும்பக்கட்டுப்பாடு எதிர்ப்பு - ஜனநாயக நெறிகளை மீறி கலைக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் கலைப்பின்போது தி.மு.க, தி.க, ஸ்தாபன காங்கிரஸ் தொண்டர்களுக்கு புரட்சியாளர்களின் அறைகூவல் என்ற துண்டு பிரசுரம் அச்சிட்டு வெளியிட்டமை - கைது - சிறைவாசம் - 9 மாதம். ஆயுதம் தாங்கிய காவலர்கள் சூழ்ந்து நிற்க மதுரை மருத்துவக் கல்லூரியில் மருத்துவ தேர்வு எழுதியமை - ஜனதா கட்சி ஆட்சி பொறுப்பேற்று மெராஜ்ஜிதேசாய் பிரதமராக பதவி ஏற்ற அன்று விடுதலை.





- 1978 விழுப்புரம் கலவரம் -12 தாழ்த்தப்பட்டவர்கள் படுகொலை - கலவரம் - கண்டனம் - மதுரை மாநகராட்சி தேர்தல் புறக்கணிப்பு சுவரொட்டிகள் -சுவரொட்டி அச்சிட்டு வெளியிட்டமை - காந்தி சிலை மீது தார் ஊற்றிய செயல் - மூன்று காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு.





- விழுப்புரத்தில் 1978 ஆம் ஆண்டு நடந்த சாதிக்கலவரத்தின் போது

அறிக்கை வெளியிட்டதற்காக இறுதியாண்டு மாணவராக இருந்தபோது அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் அரசின் காவல்துறையால் கைது செய்யப்பட்டு மூன்றுமாத சிறைவாசம் - விடுதலை.





- வேடசந்தூர் குடகனாறு அணை உடைப்பின் போது நிதி, உணவுப் பொருட்கள், உறைவிடப் பொருள்கள் திரட்டி பாதிக்கப்பட்ட இராமநாதபுரம் மக்களுக்கு நேரிடையாக சென்று விநியோகம் - அரசு இயந்திரம் அணுக முடியாத சில கிராமங்களுக்கு முதன்முதலாக சென்று உதவியமை (1978)





இராமநாதபுரம் வெள்ளச்சேதத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியமை (1980)





மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் விடுதி தொழிலாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், மாணவர்களால் புறக்கணிப்பு - தொழிலாளர்களின் உரிமைகள் பாதிப்பு - மாணவர்களுக்கு எதிராக தொழிலாளர்களுக்கு ஆதரவாக முதல் குரலை வெளிப்படுத்தியமை - மாணவர்களின் எதிர்ப்பையும் மீறி தொழிலாளர்களுக்கு உதவி.





தென்தமிழகக் கல்லூரிகளில் பயின்ற தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக பல நிலைகளில் போராடுதல்





மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - தேவர்சமூக மாட்டை பிடித்த தேவேந்திர குல வேளாளர் முதியவர் மீது கத்திக் குத்து - தட்டிக் கேட்ட அவனியாபுரம் மலைச்சாமி; மீது தாக்குதல் - வழக்கு - அவர்களுக்காகப் போராடுதல் - மார்க்சிய லெனினிய இயக்க தோழர்கள் எதிர்ப்பு - அமைப்பினருடன் கருத்து முரண்பாடு.





மதுரையில் செமஸ்டர் முறை அறிமுகப்படுத்தியதற்கு எதிர்ப்பு - மாணவர்கள் போராட்டம் - போராட்டத்தை ஒருங்கிணைத்தல் (1977-79)





எம்.ஜி.ஆர் ஆட்சியின் போது நடைபெற்ற போலீசார் சங்கம் அமைப்பதற்கு நடத்திய போராட்டத்திற்கு ஆதரவு.





- உடுமலை பூளவாடியில் மருத்துவமனை தொடக்கம் - தொடக்கவிழாவில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கி.வீரமணி பங்கேற்பு.





- பூளவாடி கிராமப் பகுதியில் பகுத்தறிவு பரம்பரைப் பணிகளில் ஈடுபடல் -





கு.இராமகிருஷ்ணன், திருமகள், பார்வதி, திருமகள், சேலம் அருள்மொழி பங்கேற்பு -





பள்ளிக் குழந்தைகளிடம் சாதிய எதிர்ப்பு பிரச்சாரம் - விடுதலை நாள் ஆகஸ்ட் 15 புறக்கணிப்பு.





- உடுமலைப்பேட்டை பூளவாடியில் மருத்துவர் தொழில் மூலம் ஏழை, எளிய

மக்களுக்கு உதவியதை பொறுக்க முடியாத சாதி வெறியர்களின் இடையூறு (1981).





சாதிவெறியர்களின் இடையூறுகளை முறியடிக்க திராவிடர் கழக செயல்வீரர் கு.இராமகிருஷ்ணன், திராவிடர் கழக வீராங்கனை தோழியர் வழக்கறிஞர் அருள்மொழி, வெள்ளக்கோவில் முத்துக்குமார், தாராபுரம் கருணாநிதி, சுப்பிரமணியன், ரங்கசாமி, ஆத்துக்கிணற்றுப்பட்டி பழனிச்சாமி, எம்.கே.நடராஜன், பேராசிரியர் தங்கவேலு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் வீரத்துடன் துணை நின்றனர். தோள் கொடுத்தனர். இடையூறுகள் முறியடிக்கப்பட்டன.





- பாரதீய தலித் பேந்தர்ஸ் கட்சியை (DPI) கட்சி தொடங்கப்பட்டது - அதே ஆண்டு அண்ணல் அம்பேத்கரின் மனைவி திருமதி. சவிதா அம்பேத்கரை அழைத்து மாநாடு - பாரதீய தலித் பேந்தர்ஸ் நடத்திய மாநாட்டின் அமைப்பாளர் - இம்மாநாட்டில் வை.பாலசுந்தரம், ராம்தாஸ் அத்வாலே, மலைச்சாமி, டாக்டர்.கிருஷ்ணசாமி, மற்றும் பலர் சிறப்புரை (1982).





செப்டம்பர் 1984, கோவையில் பாரதீய தலித் பேந்தர் இயக்கம் சார்பில் வ.உ.சி. திடலில் இரண்டாவது மாநில மாநாடு - தலித் வாய்ஸ் ஆசிரியர் வீ.டி.ராஜசேகர் பங்கேற்பு - பார்வையாளர்கள் பகுதியில் சாதி வெறியர்கள் காரை புகுத்தி வன்முறை - கூட்டத்தைக் கலைக்க முயற்சி - முறியடிப்பு.





- பாரதீய தலித் பேந்தர் இயக்கத்தின் சார்பில் மாநில அளவில் சூழ்நிலைகளுக்கேற்ப தேர்தலில் போட்டியிட முடிவு - முற்போக்கு இயக்கங்களின் ஆதரவுடன் போட்டியிடலாம் என அறிவிப்பு - சவீதா அம்பேத்கர் திருப்பதி தொகுதியில் போட்டி - இராம்தாஸ் அத்வாலே மகாராஷ்டிராவில் போட்டி - தலைவர் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட முடிவு.





- பொள்ளாச்சி (தனித்) தொகுதியில் திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வி (1984).





- நவம்பர் 10, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி சங்கீதா மருத்துவமனையைத் திறந்து வைத்தார் மு.கண்ணப்பன், சி.டி.தண்டபாணி, மு.இராமநாதன், பொங்கலூர் பழனிசாமி மற்றும் தி.மு.க. முன்னனி பிரமுகர்கள் பங்கேற்பு (1984).







- இலங்கைத் தமிழர்களுக்காக தி.மு.க போராட்டம் - போராட்டம் பங்கேற்பு - 15 நாட்கள் சிறை. (1985)





- பரம்பிக்குளம் - ஆழியாறு உழவர்களுக்கான உரிமைப் போராட்டம் (1988) (கோவை மாலைமுரசு இதழில் தொடர் கட்டுரைகள் வெளியீடு).



- செப்டம்பர் 11 புறம்போக்கு நில விவசாயிகளுக்கு தண்ட தீர்வை உயர்வை கைவிடுக - மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கோவை டாக்டர் கிருஷ்ணசாமி மனு. (1998)





- போடி மாவட்டம் மீனாட்சிபுரம் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு

கணிசமான நிதி உதவி (1989).





- செப்டம்பர் 15 தீண்டாமை ஒழிப்புப்பணி - கோவை டாக்டர் கிருஷ்ணசாமிக்கு விருது! கலெக்டர் இராமன் வழங்கினார். (கோவை மாலைமுரசு)





- சாதி கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும் - கோவை டாக்டர் கிருஷ்ணசாமி அறிக்கை. (கோவை மாலைமுரசு)





- விமான நிலையங்களில் குரூப் IVபணியிடங்களில் காண்ட்ராக்ட் முறையைப் புகுத்தி தொழிலாளர் வயிற்றில் அடிப்பதா - கோவை டாக்டர் கிருஷ்ணசாமி கண்டனம். (கோவை மாலைமுரசு)





- இரண்டு தலைமுறைகளாக இரண்டு தாழ்த்தப்பட்ட கிராமங்கள் நடைபாதையின்றி தவிப்பு - 30 அடி அகல நடைபாதை வயல் ஆனது - ஆக்கிரமிப்பிலிருந்து 10 ஏக்கர் நிலம் மீட்பு - டாக்டர் கிருஷ்ணசாமி புகாரின் அடிப்படையில் அன்றைய கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் (ஆளுநர் ஆட்சிக் காலத்தில்) கலெக்டர் நடவடிக்கை. (கோவை மாலைமுரசு).





- 1988 அக்டோபர் 18, உடுமலை அருகே 100 கிராமங்களில் இலவச மருத்துவ சிகிச்சை - பெத்தம்பட்டியில் அரசுப் பள்ளியில் முகாம் - 70 ஏழைத் தாய்மார்களுக்கு இலவச கண்சிகிச்சை முகாம் - இலவச கண்புரை அறுவை சிகிச்சை - 100 சதவிகிதம் வெற்றி





- 1989 ஆகஸ்ட் 25, கோவை சங்கீதா மருத்துவமனை மற்றும் அறக்கட்டளை சார்பில் தாராபுரம் என்.சி.பி. மேல்நிலைப்பள்ளிக் கூடத்தில் இலவச சிகிச்சை முகாம் - தி.மு.க. மாவட்ட செயலாளர் அ.கணேசமூர்த்தி, தி.மு.க. முன்னாள் அமைச்சர் சாதிக்பாட்சா பங்கேற்பு.





- 1989 ஜுலை 02 உடுமலை அருகே ஏழை மாணவ- மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் - டாக்டர் கிருஷ்ணசாமி ஏற்பாடு செய்த விழாவில் தி.மு.க இளைஞரணி செயலாளர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் - டாக்டர் கிருஷ்ணசாமியின் கொடைத்தன்மை எல்லோருக்கும் வரவேண்டும் என புகழாரம்.





- 1991 டிசம்பர் 06, கோவையில் அம்பேத்கர் நினைவு நாள் பேரணி! டாக்டர் கிருஷ்ணசாமி கு.வெ.கி.ஆசான், இ.லெ.கந்தசாமி, முனைவர் அருணா பங்கேற்பு





- உடுமலைத் தாலுக்கா சந்தனக்கருப்பனூர் தி.மு.க செயற்குழு உறுப்பினா; தளி மாரிமுத்து குடும்பத்தினர் தேவேந்திரர்கள் மீது வன்கொடுமை - தலையீடு - காப்பாற்றுதல்.





- தமிழர் பாதுகாப்பு பேரவை தொடக்கம் - இந்தி ஆதிக்க எதிர்ப்பு - தொலைபேசி, தொலைக்காட்சி பெட்டி உடைப்பு போராட்டம் (1991)





- 1991 கர்நாடகா மாநிலத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டித்து கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு - தலைவர் தலைமையில் உண்ணாவிரதம் - கோவையில் தங்கியிருந்த கர்நாடகத் தமிழர்களுக்கு கோவை வீடியோ ஒளிப்பதிவாளர் சங்கம் ஏற்பாடு செய்த மருத்துவமுகாமில் பங்கேற்பு - 50,000 ரூபாய் பெறுமானமுள்ள மருந்துகள் வழங்கல்.





- 1993 தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு -

மதுரையில் தொடக்கம் - கூட்டமைப்பின் தலைவராக தலைவர் தேர்வு.





1994 தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு எனப் பெயர் மாற்றம்.





1995 கொடியன்குளம் தாழ்த்தப்பட்ட கிராமம் அழிப்பு - வன்முறைக்கு எதிராக முதல் குரல்





- பாதிக்கப்பட்ட மக்களுக்கு போராடுதல் - இழப்பீட்டுத் தொகை வழங்க கோரிக்கை - நீதிமன்றத்தில் வழக்கு - டெல்லியில் போராட்டம்.





1996 தமிழக சட்டமன்றத்திற்கு ஒட்டப்பிடாரம் தொகுதியிலிருந்து போட்டி - வெற்றி. (1996 - 2001 சட்டமன்ற உறுப்பினர் பணி).














1997 டிசம்பர் 15, புதிய தமிழகம் அரசியல் கட்சி தொடக்கம்..............

சனி, 14 மே, 2011

நிலக்கோட்டை தொகுதியில் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் ஏ.ராமசாமி வெற்றி








திண்டுக்கல், மே 13: நிலக்கோட்டை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் ஏ.ராமசாமி 24,676 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரைத் தோற்கடித்தார்.

எட்டு வேட்பாளர்கள் போட்டியிட்ட இத் தொகுதியில் மொத்தம் 1,42,943 வாக்குகள் பதிவாயின.



இதில் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் ஏ.ராமசாமி 75,124 வாக்குகள், காங்கிரஸ் வேட்பாளர் கே.ராஜாங்கம் 50410, பாஜக வேட்பாளர் சின்னப்பன் என்கிற ராஜேந்திரன் 3,952, ஜான்பாண்டியன் 6,882, பிச்சையம்மாள் 897, சிவபாலன் 1669, செல்வராஜ் 2,440, சிவக்குமார் 1869 வாக்குகள் பெற்றனர்

ஒட்டப்பிடாரம் தொகுதியில் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் வெற்றி

!










தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகு‌தி‌யி‌ல் போ‌ட்டி‌யி‌ட்ட புதிய தமிழகம் கட்சி தலைவ‌ர் டாக்டர் கிருஷ்ணசாமி அபார வெ‌ற்‌றி பெ‌ற்று‌ள்ளா‌ர்.







ஓட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட டாக்டர் கிருஷ்ணசாமி 71330 வாக்குகள் பெற்றார். இவரை எ‌தி‌‌ர்‌த்து போ‌ட்டி‌யி‌ட்ட ‌தி.மு.க. வே‌‌ட்பாள‌ர் எஸ்.ராஜா 46,204 ‌வா‌க்குகள் பெற்றார்.



இதன் மூலம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி 2வது முறையாக வெற்றி பெற்று இருக்கிறார். அவர் தன்னை அடுத்து வந்த தி.மு.க. வேட்பாளர் சௌ.ராஜாவை, 25,126 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

புதன், 11 மே, 2011

ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும்.


ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை பதுகாப்பிற்காக அரை நூற்றாண்டுகளாக போராடி வருகிறார்கள். பயங்கரவாதத்திற்கு எதிர்ரான இறுதிப்போர் என்ற போர்வையில் அண்மையில் இலங்கையில் ராஜபக்சே அரசு 2009 ஆம் ஆண்டு ஈழத் தமிழ் மக்களின் மீது மிகப்பெரிய தக்குதலை தொடுத்தார்.அந்த தாக்குதல் சர்வதேச விதிகளுக்கு மாறானது என்று தமிழ் ஆர்வலர்களும் சர்வதேச மனித உரிமை ஆர்வலர்களும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர்.



ராஜபக்சே அரசின் போர் விதிமுரை மீரல் குறித்து ஐ.நா அமைப்பின் சிறப்புக்குழு அண்மையில் தனத் அறிக்கையை தெளிவாக வெளியிட்டது. அதில் ஒரே சமயத்தில் 40 ஆயிரம் தமிழ் மக்களை கடல் நீருக்குள் அமுக்கி கொன்றுவிட்டு கொடூரமான தகவல் உலகையே நிலைகுலையச் செய்தது.மேலும் முள்ளிவாய்க்காலில் 30 ஆயிரம் அப்பாவித் தமிழ் மக்களை ஒருசேர கொன்று குவித்ததையும் சுட்டிகாட்டியுள்ளது.



இவை போன்ற மனித உரிமை மீறல்களின் காரணமாக ராஜபக்சேவை கைது செய்து சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி சார்பாக மே10 அன்று சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பாக ஆர்ப்பாட்டம் ந்டைபெற்றது




ஆர்ப்பாட்டத்தி முக்கியமாக மே 13 ஆம் தேதி வெளிவரும் தேர்தல் முடிவிற்குப் பிறகு அமையும் அரசு தனது முதல் தீர்மானமாக ராஜபக்சேவை கைது செய்ய இந்திய அர்சும் குரல் கொடுக்க வேண்டும் என்று தீர்மானத்தை நிறைவேற்றிட வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சனி, 7 மே, 2011

மதுரை வில்லூர் தேவர் சாதிவெறி!





தாழ்த்தப்பட்டவன் வாத்தியாருக்குப் படித்திருப்பதும், அவன் பேண்ட் சட்டை போடுவதும் அந்த ஊரில் அதுவும் மேலத்தெருவிலே புதுசாக வாங்கிய மோட்டார் சைக்கிளை ஓட்டுகிறான் என்றால் சாதிவெறியால் அதை ஜீரணிக்க முடியவில்லை.






மதுரை திருமங்கலத்திற்கு அருகிலுள்ள டி. கல்லுப்பட்டி வட்டத்தை சார்ந்த வில்லூர் கிராமத்தில் ஆதிக்க சாதியான முக்குலத்தோரின் உட்பிரிவான அகமுடையார் சாதியைச் சார்ந்தவர்கள் அதிகம். சிறுபான்மையான தாழ்த்தப்பட்டவர்கள் சுமார் 300 குடும்பத்தினரும் இங்கு வசித்து வருகின்றனர்.



அகமுடையார்கள் வசிக்கும் மேலத்தெருவான காளியம்மன் கோவில் தெருவிற்குள் தாழ்த்தப்பட்டவர்கள் சைக்கிளிலோ அல்லது செருப்பு அணிந்தோ போக கூடாது என்பது இப்போது கூட எழுதப்படாத விதி. மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களில் கூட தேவர் சாதி மாணவர்களை ஐயா என்றுதான் உடன்பயிலும் தாழ்த்தப்பட்டவன் அழைக்க வேண்டுமாம். இது இந்து பாசிசம் கோலோச்சும் குஜராத்திலோ அல்லது வடக்கின் இந்தி பேசும் மாநிலங்களிலோ நடக்கவில்லை. பெரியார் பிறந்த மண்ணில்தான் இந்தக் கொடுமை.



இருபத்தியொன்றாம் நூற்றாண்டிலுமா இப்படி என முகவாயை தேய்ப்பவர்களும், 2020- இல் எப்படியாவது வல்லரசாக வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு வாளாவிருப்பவர்களும் அவசியம் போய் வர வேண்டிய இந்தியாவின் பல கிராமங்களில் ஒன்றுதான் வில்லூர்.



இந்த கிராமத்தில் வசிக்கும் குரு என்பவரின் இளைய மகன் தங்கபாண்டியன். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்தாலும் பள்ளியில் கிடைத்த அவமானங்களையும் சகித்துக் கொண்டு ஆசிரியர் பயிற்சி வரைக்கும் படித்து விட்டு, தற்போது வேலை தேடிக் கொண்டிருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் அவர்களுக்கு 7 ஏக்கர் விவசாய நிலம் வாங்க முடிந்த காரணமே அக்குடும்பத்தினர் மீது தேவர் சாதியினர் கோபமடைய போதுமான காரணமாக இருக்கையில் தங்கபாண்டியனின் எதிர்கால வாத்தியார் வேலை என்பது அவர்களது கோபத் தீயில் எண்ணெய் ஊற்றுவதாகவே இருந்தது.



தந்தை வாங்கித் தந்த மோட்டார் சைக்கிளில் ஊரை வலம் வர விரும்பினார் அந்த இளைஞர். அப்படி வலம் வருகையில் காளியம்மன் கோவில் தெருவிற்குள்ளும் அவரது மோட்டார் சைக்கிள் போகவே, ஆத்திரமடைந்த அகமுடையார் சாதியினர் சுமார் ஐந்து பேர் ஒன்று சேர்ந்து அவரைத் தாக்கியுள்ளனர். 27 வயது நிரம்பிய தங்கப்பாண்டியனை தாக்கிய அகமுடையார் சாதியைச் சேர்ந்த ஐவரில் மூவர் 24 வயது இளைஞர்கள். மற்ற இருவரும் நாற்பதுகளில் உள்ளவர்கள். இன்று யாரும் சாதி பார்ப்பதில்லை என்பதை பேசுபவர்கள் இதனைக் கவனிக்கவேண்டும். பிறகு அவர்கள் மோட்டார் சைக்கிளையும் பிடுங்கிக் கொண்டார்கள்.



இது குறித்து தங்கப்பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் 5 பேரும், தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். கடந்த சனியன்று இரவு நடந்த இச்சம்பவத்திற்கு மறுநாள் போலீசு கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் தலைமையில் அமைதி ஏற்படுத்த அமைதிக்குழு அமைக்கும் பணியை அரசுத் தரப்பு தொடங்கியது.



ஆனால் தங்களிடம் வந்து அபராதம் கட்டி, மன்னிப்புக் கேட்டு மோட்டார் சைக்கிளைத் திரும்ப பெறாமல் போலீசுக்குப் போனதால் ஆத்திரமடைந்த ஆதிக்க சாதியினர் எஸ்.பி மீதும் தாக்குதலை நடத்தினர். காவல்துறை இணை ஆணையாளரின் வாகனத்தையும் சேதப்படுத்தினர்.



இதனையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும், லத்தி சார்ஜீலும் பலர் காயமடைந்தனர். 53 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் முன்னிலையிலேயே தங்கப்பாண்டியனின் அண்ணன் முருகன் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்தி உள்ளனர். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் ஒரு குடும்பம் முன்னேறுவதையே சகிக்க முடியாத அளவுக்கு சாதிவெறி கோலோச்சுகிறது.



தாழ்த்தப்பட்டவனுக்கு தேநீர்க்கடையில் தனிக்குவளையும், மேலத்தெருவில் செருப்புப் போடத் தடையும் உள்ள ஊருக்குள் தாழ்த்தப்பட்டவன் வாத்தியாருக்குப் படித்திருப்பதும், அவன் பேண்ட் சட்டை போடுவதும் அந்த ஊரில் அதுவும் மேலத்தெருவிலே புதுசாக வாங்கிய மோட்டார் சைக்கிளை ஓட்டுகிறான் என்றால் சாதிவெறியால் அதை ஜீரணிக்க முடியவில்லை. ஒரு வேளை தங்கபாண்டியனின் ஆசிரியர், பொருளாதாரத் தகுதி காரணமாக அகமுடையார் சமூகப் பெண்கள் அவனைக் காதலித்திருந்தால் என்ன நடக்கும்? கொலைதான் நடக்கும்.



மதுரை பகுதியைச் சேர்ந்தவர்கள் எவரும் அங்கே நிலவும் ஆதிக்க சாதிவெறியை நன்கு உணர்ந்திருப்பார்கள். பத்தாண்டுகள் அங்கே வாழ்ந்தவன் என்ற முறையில் நானே இதை பார்த்திருக்கிறேன். அக்டோபர் 30- ஆம் தேதி பிறந்து, அதே தேதியில் மறைந்த முத்துராமலிங்கம் என்ற சாதிவெறியனை சாமியாக கும்பிடும் தேவர் சாதியினர், அந்த குருபூஜைக்கு சுயமரியாதை இயக்க அரசியல்வாதிகளை மாத்திரமின்றி, போலிக் கம்யூனிஸ்டுகளையும் வரவழைக்குமளவுக்கு செல்வாக்கான ஆதிக்க சாதியினர். பசும்பொன் கிராமத்திற்கு லாரி, வேன்களில் நிரம்பி வழியும் தேவர் சாதி குடிமகன்கள் மதுரை மேலமாசி வீதி வழியே அம்பேத்கரையும், புதிய தமிழகம் கிருஷ்ணசாமியையும் அர்ச்சிக்கும் வார்த்தைகளை காதால் கேட்கவே கூசும்.



பருத்தி வீரன் கார்த்திக் போல அம்மா மார் சிறுவாடு சேர்த்து வைத்த பணத்தில் குடித்துக் கூத்தடிப்பதும், அம்மா போனபிறகு வழியில்லாமல் பொறுக்கித் தின்ன ரவுடியாவதும் என இச்சாதியின் பெரும்பாலான ரவுடிகளால் மதுரை நிரம்பி வழிகிறது.



மச்சி, மாப்பிள்ளை என்று சக நண்பர்களைப் பதின்வயதில் கூப்பிட்டு மகிழ்ந்தவர்களுக்கு மதுரைப் பகுதியில் வழங்கிவரும் பங்காளி என்ற உறவுமுறை புரிவதற்கு சிரமமானதுதான். ஆதிக்க சாதிகள் தமக்குள் மாத்திரம் விளித்துக்கொள்ளப் பயன்படுத்தும் பிரத்யேக வார்த்தை அது என எனக்கு தெரியாது. அப்படித் தெரியாமல் விளித்து, அவர்களிடம் வாங்கியும் கட்டிக்கொண்டவன் நான். எல்லோரையும் உறவுமுறை வைத்துப் பேசினாலும் தாழ்த்தப்பட்டவர்களை மாத்திரம் அப்படி மறந்தும் கூப்பிட மாட்டார்கள்.



அப்போதுதான் பாரதி கண்ணம்மா திரைப்படம் வந்து போயிருந்தது. எனது அறையை கல்லூரி விடுதியில் பகிர்ந்து கொண்ட சக வகுப்பு மாணவனுக்கு நடிகை மீனாவைப் பிடிக்காது. ஏன் என கடைசி வரை அவன் சொல்லவே இல்லை. கல்லூரி இறுதி நாளில் அவனே சொன்னது இது. “பின்ன என்னடா ! எங்க தேவர் சாதில பொறந்துட்டு போயும் போயும் எஸ்சி தான் கெடச்சானா காதலிக்கிறதுக்கு.”



கஞ்சிக்கில்லை என்றாலும் இத்துப் போன சாதி கௌரவத்திற்காக இந்த தேவர் சாதி வெறியர்கள் நடத்தும் அயோக்கியத்தனங்கள் நிறைய உண்டு. வசதியான தொழில் நடத்தும் தேவர் சாதி பிரமுகர்கள்தான் ஏழை தேவர் சாதி மக்களை வைத்து இப்படி சாதிவெறியைக் கிளப்பிவிட்டு குளிர் காய்கின்றனர். இவர்களை பொது அரங்கில் அம்பலப்படுத்தி விரட்டும் போது மட்டும்தான் வில்லூர் போன்ற கிராமங்களில் இந்தக் கொடுமைகள் நடப்பது குறையும்

செவ்வாய், 3 மே, 2011

ஈழத்தின் பெயரால் இங்கே நடப்பது நாற்காலி அரசியல்



உலகத் தமிழர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐ.நா. சபை அறிக்கையின் விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்துவிட்டன. ஈழத்தில் தமிழினம் இரக்கமற்ற முறையில் கொன்று குவிக்கப்பட்டதற்காக, ராஜபக்ஷே அரசு சர்வதேச நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும் நேரம் நெருங்கிவிட்டது. 'ஆட்சி அதிகார நாற்காலியில் அமரப்போவது யார்?' என்ற போட்டியில் கடுமையாக ஈடுபட்டுக் களைத்துப்போன நம் தலைவர்கள், தேர்தல் முடிவை எதிர்பார்த்து இளைப்பாறும் வேளையில், பொழுதுபோவதற்கு ஈழம் குறித்த லாவணிக் கச்சேரியில் இறங்கிவிட்டனர்!




கலைஞரும் ஜெயலலிதாவும், 'ஈழத் தமிழரின் இன்னல் குறித்து இங்கு இருந்தபடியே அதிகமாக இரு விழி நீர் ஆறாகப் பெருக்கியவர் யார்?' என்று அறிக்கைப் போர் நடத்தத் தொடங்கிவிட்டனர். 'இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை; இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை' என்ற பாடல்தான் நெஞ்சில் நிழலாடுகிறது.







'இலங்கையில் நடந்த இனப் படுகொலையை வேடிக்கை பார்த்ததற்காக, கருணாநிதி பொது மன்னிப்பு கேட்க வேண்டும்' என்றார் ஜெயலலிதா. 'நடந்த கொடுஞ்செயலுக்கு எதிராக சர்வதேச அளவில் கூக்குரல் எழுப்பப்பட்டதோடு மட்டுமல்லாமல், இலங்கை அதிபர் ராஜபக்ஷே சர்வதேச நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, போர்க் குற்றத்துக்காக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஆனால், இந்திய அரசோ, தமிழக அரசோ, இது குறித்து எதிர்ப்பையோ அல்லது வருத்தத்தையோகூட தெரிவிக்க​வில்லை' என்று குற்றம் சாட்டுகிறார் முன்னாள் முதல்வர். 'இந்திய அரசு இலங்கைக்கு உதவியது, இந்திய அரசுக்குக் கலைஞர் உதவிக் கரம் நீட்டினார்' என்பது யாராலும் மறுக்க முடியாத உலகறிந்த உண்மை. ஆனால், வன்னிப் பகுதியில் தமிழருக்கு எதிராக இலங்கை ராணுவத்தின் வெறியாட்டம் நிகழ்ந்தபோது, முள்ளி வாய்க்காலில் எம் இனம் முற்றாக அழித்து ஒழிக்கப்பட்டபோது ஜெயலலிதா என்ன செய்தார்? 'ஒரு கோடிக்கு மேல் உறுப்பினர்கள் உள்ள அரசியல் அமைப்பு அ.தி.மு.க.' என்று அடிக்கடி அறிவித்துப் பரவசப்பட்டுக்கொள்ளும் 'புரட்சித் தலைவி' மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கில் தன்னுடைய தொண்டர்களை வீதியில் நிறுத்தி இந்திய அரசுக்கு எதிராக ஏன் போர்க் குரல் கொடுக்கவில்லை? நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில், 'இந்திய ராணுவத்தை அனுப்பி ஈழத்தைப் பெறப் பாடுபடுவேன்' என்று திடீரென்று சன்னதம் வந்ததுபோல் மேடை​களில் ஆவேசக் குரல் கொடுத்த 'அம்மா', தேர்தல் முடிவுகளுக்குப் பின்பு ஈழம் குறித்து இதழ் திறந்து இரண்டு வார்த்தைகள்கூட இயம்பாமல் மௌனத் தவம் இயற்றியது ஏன்? ஈழம் பற்றி ஜெயலலிதா பேசுவது தகாது. அப்படியானால், 'தமிழினத் தலைவர்' கலைஞர் பேசுதல் தகுமா?



ஈழத் தமிழர் நலன் காக்க இன்று வரை கலைஞர் செய்த அளப்பரிய சேவைகளை, எண்ணிலடங்காத தியாகங்களை, கை வலிக்க எழுதிய கடிதங்களை, மாநாடுகளில் நிறைவேற்றிய தீர்மானங்களை, நெஞ்சு வலிக்க மேடைகளில் முழங்கிய வீர முழக்கங்களை, மூன்று மணி நேரம் பசியடக்கி நடத்தி முடித்த உண்ணாவிரத சாகசங்களை, மக்கள் மழையில் நனைந்தபடி மனிதச் சங்கிலியாய் நிற்க, காரில் அமர்ந்தபடி பார்வையிட்ட வெஞ்சமர் வேள்வியை விரிவாக விளக்கி அறிக்கை வடிவத்தில் அளித்து இருக்கிறார்.



கலைஞரின் தியாகப் பயணத்தின் திருப்பு முனை நிகழ்வுகளில் ஓர் அரிய அரசியல் உண்மை புதையுண்டு​கிடக்கிறது. எம்.ஜி.ஆர். 1977 முதல் 1987 வரை முதல்வராக இருந்தபோது, கோட்டை நாற்காலியில் அமர முயன்றும் கலைஞரால் கோபாலபுரத்தில்தான் முடங்கிக்கிடக்க நேர்ந்தது. அவர் பட்டியலிடும் போராட்டங்களின் புறமுகம் 'ஈழ மக்கள் ஆதரவு' என்றாலும், அவற்றின் உண்மையான சுயமுகம் 'எம்.ஜி.ஆர். எதிர்ப்பு' என்பதுதான் அரசியல் சூட்சுமம்!



ஈழத் தமிழருக்காக 1977-ல் சென்னையில் 5 லட்சம் பேரையும், 1983-ல் 7 மணி நேரத்தில் 8 லட்சம் பேரை​யும் திரட்ட முடிந்த கலைஞரால், செப்டம்பர் 2008 முதல், மே 2009 வரை ஈழ நிலத்தில் தமிழர் ரத்தம் வெள்ளம் எனப் பாய்ந்தபோது, எண்ணற்ற குலப் பெண்டிர் கற்பிழந்து கதறித் துடித்தபோது, சின்னஞ்சிறார்கள் சிதைக்கப்பட்டபோது, உறுப்பிழந்து - உடைமையிழந்து - வாழ்விழந்து வதை முகாம்களில் மூன்று லட்சம் தமிழர் நரகத்தின் பாழ்வெளியில் நடைப்பிணங்களாக உருக்குலைந்தபோது, வெள்ளைக் கொடியுடன் சரணடையச் சென்ற நடேசனும், புலித்தேவனும், நூற்றுக்கணக்கான தமிழ்க் குடும்பங்களும் கொன்றழிக்கப்பட்டபோது, தமிழகத்தின் வீதிகளில் கழக உடன்பிறப்புகளைப் போர் நிறுத்தம் வேண்டி லட்சக்கணக்கில் திரட்டி இந்திய அரசுக்கு நிர்ப்பந்தம் தரமுடியாமற் போனதன் பின்னணி என்ன?!



'இரு வாரங்களில் ஈழப் போர் நிறுத்தப்படாவிடில், 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்வார்கள்' என்று அறிவித்துவிட்டுப் புறநானூறு பேசியவர்கள், அதை நடைமுறைப்படுத்தாமல் புறமுதுகிட்டதின் மர்மம் என்ன?!



எம்.ஜி.ஆர். இருந்தபோது கலைஞர் ஈழ மக்களுக்காக அணி திரட்டியது, முதல்வர் நாற்காலியைக் கைப்பற்று​வதற்காக!



இன்று ஈழ மக்களைக் கை கழுவியது, அமர்ந்திருக்கும் முதல்வர் நாற்காலியைக் காப்பாற்றிக்​கொள்வதற்காக!



சிங்களப் படை ஈழத்தில் இழைத்த மனித உரிமை மீறல்களைக் கண்டித்து சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றுவதற்குக்கூட முன்வராத முதல்வர், தன்னை விமர்சித்த இளங்கோவனையும், காடு வெட்டி குருவையும் கண்டித்துத் தீர்மானம் தீட்டு​வதற்குக் கழகத்தின் உயர்மட்டக் குழுவைக் கூட்டியவர். அதே உயர்மட்டக் குழுவில் ராஜ​பக்ஷேவைக் கண்டித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றத் துணி​வற்றவர் கலைஞர். ஈழம் குறித்துக் கலைஞர் கண்ணீர்விடுவதும், ஜெயலலிதாவின் ஈழ உணர்வு குறித்து ஆய்வு நடத்துவதும், கலைஞரின் வழக்கமான 'ஆதாய அரசியல் நாடகம்' அல்லாமல் வேறு என்ன?



தியாகத் திருவிளக்கு, சொக்கத் தங்கம் சோனியா காந்தியின் தயவுக்காகத் தவம் இருப்பது ஒரு பக்கம்... 'மத்திய அரசு ஐ.நா-வின் மூவர் குழு அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளிவந்ததும் கால தாமதம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று பணிவோடு விண்ணப்பம் தருவது மறு பக்கம்... இதுதான் நம் கலைஞரின் இன்றைய 'இரு' பக்கம்!



'கனைக்கும் உரிமைகூட மாநிலக் குதிரைகளுக்கு டெல்லிப் பேரரசின் லாயத்தில் கிடையாது' (கலைஞர் கடிதம் 3.12.1973) என்று 37 ஆண்டுகளுக்கு முன்பே அறிந்துகொண்டவர் நம் முதல்வர். ஆனால், மேடைகளில் மட்டும் அவருக்குப் பாரதிதாசன் எழுதி அனுப்பிவைத்த 'கிளம்பிற்றுக்காண் தமிழ்ச் சிங்கக் கூட்டம் - கிழித்தெறியத் தேடுது காண் பகைக் கூட்​டத்தை' என்று மறவாமல் முழங்குவார்.



'கூட்டாட்சியும், மாநிலச் சுயாட்சியும் பிரிக்க முடியா​தவை. சுயாட்சி இல்லாமல், கூட்டாட்சி இருக்​கவே முடியாது' என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுப்பாராவ் சொன்னதை (கலைஞர் கடிதம் 23.6.74) உடன்பிறப்புக்கு உணர்த்தியவர், 'ஈழத் தமிழருக்குக் கொஞ்சம் போட்டுக் கொடுங்கள்' என்ற பாணியில் மத்திய அரசிடம் மனுப் போடுகிறார். 'கொட்டும் மழையைச் சுட்டுப் பொசுக்குகிறேன் பார் என்று கொள்ளிக் கட்டையை எடுத்து நீட்டினால் கட்டைதான் அணையுமே தவிர, மழையா நின்றுவிடும்?' (கலைஞர் கடிதம் 6-10-74) என்று எள்ளல் சுவையோடு கேள்வி கேட்ட நம் கலைஞர், இன்று ஈழம் காண எந்தக் கட்டையைக் கையில் எடுத்திருக்கிறார்?!



ஈழத்தைவைத்து இங்கே கலைஞரும் ஜெயலலிதாவும் தொடர்ந்து செய்து வருவது கடைந்தெடுத்த ஆதாய அரசியல்! போகட்டும், நம் இனவுணர்வாளர்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள்? வழக்கம்போல் வைகோவும் நெடுமாறனும் ஒரு பக்கம் கூடுவார்கள். வீரமணி வேறு ஒரு நாள் வீதியில் குரல் கொடுப்பார். சீமான் தனியாக மேடை போட்டு சீற்றவுரை ஆற்றுவார். தமிழினத்தின் நலிவு நீங்கக் குரல் கொடுக்கும்போதும் கூடி நிற்க முடியாதவர்கள், எதற்காகத் தமிழினத்தின் பேரால், தமிழின் பேரால் ஆளுக்கு ஓர் அரசியல் கடை திறக்க வேண்டும்? தமிழ்நாட்டில் இனி யாரும் ஈழத் தமிழர் குறித்துப் பேசாதிருப்பதே... அவர்களுக்குச் செய்யும் பெருந்தொண்டு!



'மனித குலத்தின் மிகப் பெரிய அவலம் சிலரால் இழைக்கப்படும் கொடுமைகள் அன்று; அந்தக் கொடுமைகளை எதிர்க்கத் துணிவின்றி வேடிக்கை பார்க்கும் பலரின் மௌனம்' என்றார் கறுப்பினப் போராளி மார்ட்டின் லூதர் கிங். தமிழ் மண்ணில் நாம் அந்த அவலத்தைத்தான் அரங்கேற்றி வருகிறோம். இனி ஒரு விதி செய்வோம். கட்சி அரசியல் கலக்காமல் ஏழு கோடி மக்களும் நம் இனம் காக்க எழுந்து நின்று போராடுவோம். கலைஞரும், ஜெயலலிதாவும், இனவுணர்வுப் போராளிகளும், ஈழத்துக்காக இணைந்து குரல் கொடுக்க முடியாதெனில், அதுபற்றிப் பேசுவதை அறவே விட்டுவிடுவோம். கொசோவா குடியரசாக முடியும் எனில், இந்தோனேஷியாவின் பிடியில் இருந்து கிழக்கு திமூர் விடுபட இயலும் எனில், 2 சதுர கிலோ மீட்டருக்கும் குறைவான, 35 ஆயிரம் மக்கள் மட்டுமே வாழும் 'மொனகோ' ஒரு தனி நாடாக இயங்குவது சாத்தியம் எனில், ஈழமும் ஒரு நாள் உலக அரங்கில் தனி நாடாய் நிச்சயம் உருவாகும். அதற்கான அடித்தளத்தைப் புலம் பெயர்ந்த தமிழர்களே அமைத்துக்கொள்வார்கள். ஈழத்தின் பெயரால் இங்கே நடப்பது நாற்காலி அரசியல். அதை அவர்கள் நன்றாக அறிவார்கள்.



கவிஞர் இளம்பிறை இங்கு உள்ள தமிழரை நெஞ்சில் நிறுத்தி எழுதிய அர்த்தமுள்ள கவிதையின் கடைசி வரிகள் போதும், நம் இயலாமையைத் தோல் உரிக்க...



'உம் இறந்த உடல்களில் அசைகிறது உயிர்



எம் உயிருள்ள உடல்களில் நடக்கிறது பிணம்!'