திருநெல்வேலி : மாஞ்சோலை தோட்ட தேயிலையின் நிலங்களை 5 ஏக்கர் வீதம் தொழிலாளர்களுக்கு பிரித்து கொடுக்கவேண்டும் என புதிய தமிழகம் நிறுவன தலைவர் எம்எல்ஏ.,கிருஷ்ணசாமி கூறினார்.தாமிரபரணியில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின், புதிய தமிழகம் நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:கடந்த 1999ம் ஆண்டு 5 மாவட்ட தோட்ட தேயிலை தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு அளிக்க வந்தோம். அப்போது திமுக ஆட்சியின் அடக்கு முறையால் போலீசார் எங்கள் மீது லத்தியால் தாக்கினர்.
இதில் ஒரு வயது குழந்தை உட்பட 17 பேர் ஆற்றில் மூழ்கி இறந்தனர். அவர்களின் நினைவு தினத்தை ஆண்டு தோறும் கடைபிடித்து வருகிறோம். தாமிபரணியில் உயிர்நீத்தவர்களுக்கு நினைவுத்தூண் அமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். இந்த ஆண்டாவது எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். மாஞ்சோலை தேயிலை நிறுவனத்தின் குத்தகை காலம் முடிந்துவிட்டது. எனவே அந்த நிலங்களை தலா 5 ஏக்கர் வீதம் அங்குள்ள தொழிலாளர்களுக்கு பிரித்துக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக