ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 31 ஆகஸ்ட், 2013

இமானுவேல் சேகரன் நினைவுநாளை அரசு விழாவாக அறிவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் ..

 

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் இமானுவேல் சேகரன் நினைவுநாளை தமிழக அரசு உடனடியாக அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான் பாண்டியன் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த வருடம் பரமக்குடிக்கு அனைத்து மாவட்டங்களில் இருந்தும் செல்லும் வாகனங்களுக்கு எந்தவொரு நெருக்கடியும் தரக்கூடாது என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

சங்கரன்கோவில் அருகே பதற்றம் இமானுவேல் சேகரன் சிலை அவமதிப்பு

சங்கரன்கோவில் : நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகே கீழதிருவேங்கடம் மெயின் சாலையில் தியாகி இமானுவேல் சேகரன் உருவசிலை  உள்ளது. சிலையை சுற்றி கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள் சிலையை அவமதிப்பு செய்து விட்டு தப்பினர். தகவல் அறிந்து, அப்பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் நள்ளிரவு 12 மணிக்கு திரண்டு, திருவேங்கடம்,கோவில்பட்டி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுநடத்தினர். சிலையை அவமதிப்பு செய்தவர்களை கைது செய்ய துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுதொடர்பாக, திருவேங்கடம் நாட்டாண்மை சின்ன மாரியப்பன் கொடுத்த புகாரின்பேரில் திருவேங்கடம் போலீசார் வழக்கு பதிந்து சிலை அவமதிப்பில் ஈடுபட்ட  மர்ம நபர்கள் மூவரையும் தேடி வருகின்றனர். பதற்றத்தை தணிக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் சந்திப்பு - தேயிலைத் தோட்ட தொழிலாளர் நலனில் மருத்துவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ அவர்கள்


தென் மாவட்டங்களில் கடந்த ஒரு மாத காலமாக புதிய தமிழகம் கட்சியின் கொடியேற்றி மக்கள் சந்திப்பு  நடத்தி குறைகளை கேட்டுவரும்  கட்சியின் நிறுவனர் - தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ,. அவர்கள் கடந்த 15 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி ஆகிய தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குறைகளைக் கேட்டறிவதற்காக  அங்கு சென்றார்.
தேயிலைத் தோட்டங்களுக்குச் சென்ற தலைவர் அவர்களுக்கு ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். தலைவரைப் பார்த்ததும் அம்மக்கள் அளவு கடந்த மகிழ்ச்சி வெள்ளத்தில் இருந்ததை நம்மால் காண முடிந்தது.
சிறுவர், சிறுமியர்கள் துள்ளிக் குதித்து ஆரவாரமிட்டபடி தலைவர் அவர்களைக் காண ஓடி வந்தனர்.
முதலாவதாக நாலுமுக்கு எஸ்டேட் மக்கள் தலைவரிடம் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
1. காலை சரியாக 7.30 மணிக்கு வேலைக்கு செல்லவில்லை என்றால் சம்பளப் பணத்தைப் பிடித்துக் கொள்கிறார்கள்.
2. வேலை முடிந்து திரும்புவதற்கு மாலை 7 மணி ஆகுது.
3. நிர்வாகம் தொழிற்சங்க போர்டு வைக்க அனுமதிப்பதில்லை. காவல்துறை மூலம் சங்கப் போர்டை  அகற்றியது.
4. நிர்வாகத்தின் கால்நடைகளைத் தவிர தொழிலாளர்களின் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுமதிப்பதில்லை.
என அம்மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இரண்டாவதாக ஊத்து எஸ்டேட் சென்ற தலைவர் அவர்களுக்கு அங்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அம்மக்களும் தலைவரிடம் சில கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
1. பணி ஓய்வு பெற்று தொழிலாளர்களுக்கு  தமிழக அரசு மூலம் இலவச  வீட்டு மனை பட்டா வேண்டும்
2. சாலைவசதி, பேருந்து வசதி
3. மருத்துவமனையை தனியாருக்கு ஒப்பந்ததிற்கு விட்டு இருக்கிறார்கள். தனியாரோ ஓய்வு பெற்ற மருத்துவர்களை பணியில் அமர்த்தியிருக்கிறது.
4. பெண்கள் பிரசவத்திற்கு சென்றால் கூட சரியாக கவனிப்பதில்லை.

மாஞ்சோலை மக்கள் திரளாக கூடி அங்கும் ஆரவாரமிக்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அம்மக்களும் சில கோரிக்கைகளை வைத்தனர்.
1. இலவசபட்டா
2. ரேசன் பொருட்கள் சரியாக விநியோகிப்பதில்லை.
3. திருநெல்வேலியில் இருந்து அரசுப் பேருந்து தங்களுக்காக இயக்கப்பட வேண்டும்.
இக்கோரிக்கைகளை கேட்டறிந்த தலைவர் அவர்கள் உங்கள் கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றித் தருவேன் என அம்மக்களிடம் உறுதியளித்தார்.







ஆசிரியர் தகுதித் தேர்வில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டு முறையைக் கடைப் பிடிக்க வேண்டும் –டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ

ஆசிரியர் தகுதித் தேர்வில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டு முறையைக் கடைப் பிடிக்க வேண்டும் –டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ
தமிழகத்தில் அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்புக்களில் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இட ஒதுக்கீட்டு முறை அமலாக்கப்பட்டு வருகிறது. கடந்த 20 வருடத்திற்கு மேலாக தமிழகத்தில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டு முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வருடத்தில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி இடங்களுக்கு தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டு 15000 த்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டதில் இட ஒதுக்கீட்டு முறை அறவே கடைப்பிடிக்கப்படவில்லை.
மொத்த காலிப் பணியிடங்களில் 31 சதவிகிதம் பொதுப் பிரிவினருக்கும், 30 சதவிகிதம் பிற்பட்டோருக்கும், 20 சதவிகிதம் மிகவும் பிற்பட்டோருக்கும், 18 சதவிகிதம் பட்டியலினத்தவருக்கும், 1 சதவிகிதம் பழங்குடியினருக்கும் என ஒவ்வொரு பிரிவினருக்கும் எவ்வளவு இடங்கள் என்பதை வெளிப்படையாக அறிவித்து அதை 100 அல்லது 200 புள்ளிகள் சுழற்சி முறையில் நிரப்பப்பட வேண்டும்.

ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் சுழற்சி முறை ( Roster ) கடைப்பிடிக்கப்படாததின் விளைவாக பட்டியலின வகுப்பினர், மிக மிக பின் தங்கிய வகுப்பினர், பிற்பட்டோர், பழங்குடியினர் தங்களுக்குரிய பங்கைப் பெற முடியவில்லை. இது சமூக நீதிக்கு எதிரானது. எனவே கடந்த இரண்டு ஆண்டுகளில் தேர்வு பெற்ற ஒவ்வொரு பிரிவினரின் பின்னடைவு பணியிடங்களைக் கணக்கிட்டு தற்பொழுது நடைபெற்றுள்ள 17000 பணி இடங்களுக்கான ஆசிரியர் தேர்விலும் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை சுழற்சி முறையில் நிரப்பிய பின்னரே தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும்.இதை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் முன்பாக வரும் 26 ஆம் தேதி எனது தலைமையில் பல்லாயிரக்கணக்கான இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொள்ளும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டு முறையைக் கடைப் பிடிக்க வேண்டும் –டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ

ஆசிரியர் தகுதித் தேர்வில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டு முறையைக் கடைப் பிடிக்க வேண்டும் –டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ
தமிழகத்தில் அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்புக்களில் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இட ஒதுக்கீட்டு முறை அமலாக்கப்பட்டு வருகிறது. கடந்த 20 வருடத்திற்கு மேலாக தமிழகத்தில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டு முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வருடத்தில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி இடங்களுக்கு தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டு 15000 த்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டதில் இட ஒதுக்கீட்டு முறை அறவே கடைப்பிடிக்கப்படவில்லை.
மொத்த காலிப் பணியிடங்களில் 31 சதவிகிதம் பொதுப் பிரிவினருக்கும், 30 சதவிகிதம் பிற்பட்டோருக்கும், 20 சதவிகிதம் மிகவும் பிற்பட்டோருக்கும், 18 சதவிகிதம் பட்டியலினத்தவருக்கும், 1 சதவிகிதம் பழங்குடியினருக்கும் என ஒவ்வொரு பிரிவினருக்கும் எவ்வளவு இடங்கள் என்பதை வெளிப்படையாக அறிவித்து அதை 100 அல்லது 200 புள்ளிகள் சுழற்சி முறையில் நிரப்பப்பட வேண்டும்.

ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் சுழற்சி முறை ( Roster ) கடைப்பிடிக்கப்படாததின் விளைவாக பட்டியலின வகுப்பினர், மிக மிக பின் தங்கிய வகுப்பினர், பிற்பட்டோர், பழங்குடியினர் தங்களுக்குரிய பங்கைப் பெற முடியவில்லை. இது சமூக நீதிக்கு எதிரானது. எனவே கடந்த இரண்டு ஆண்டுகளில் தேர்வு பெற்ற ஒவ்வொரு பிரிவினரின் பின்னடைவு பணியிடங்களைக் கணக்கிட்டு தற்பொழுது நடைபெற்றுள்ள 17000 பணி இடங்களுக்கான ஆசிரியர் தேர்விலும் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை சுழற்சி முறையில் நிரப்பிய பின்னரே தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும்.இதை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் முன்பாக வரும் 26 ஆம் தேதி எனது தலைமையில் பல்லாயிரக்கணக்கான இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொள்ளும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

மருத்துவர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. அவர்களின் மக்கள் சந்திப்பு.

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் sep 11

விருதுநகர் மாவட்டம், பானாகுளம் கிராமத்தில் மக்கள் சந்திப்பு.

விருதுநகர் மாவட்டம், கரைவளைந்தான்பட்டி கிராமத்தில் மக்கள் சந்திப்பு.

மருத்துவர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. அவர்களின் விருதுநகர் மாவட்டம், பூவாணி கிராமத்தில் மக்கள் சந்திப்பு.

விருதுநகர் மாவட்டம், கொளிஞ்சிப்பட்டி கிராமத்தில் மக்கள் சந்திப்பு.

விருதுநகர் மாவட்டம், பெரும்பள்சேரி கிராமத்தில் மக்கள் சந்திப்பு.

மருத்துவர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. அவர்களின் விருதுநகர் மாவட்டம், பானாகுளம் காலனி கிராமத்தில் மக்கள் சந்திப்பு.

விருதுநகர் மாவட்டம், முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தில் மக்கள் சந்திப்பு.

மருத்துவர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. அவர்களின் விருதுநகர் மாவட்டம், பாட்டக்குளம் கிராமத்தில் மக்கள் சந்திப்பு.

விருதுநகர் மாவட்டம், வி.முத்துலிங்கபுரம் கிராமத்தில் மக்கள் சந்திப்பு.

மருத்துவர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. அவர்களின் விருதுநகர் மாவட்டம், திருமலாபுரம் புதூர் கிராமத்தில் மக்கள் சந்திப்பு.

விருதுநகர் மாவட்டம், நாச்சியார்புரம் கிராமத்தில் மக்கள் சந்திப்பு.

மருத்துவர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. அவர்களின் விருதுநகர் மாவட்டம், என்.சண்முகசுந்தரபுரம் கிராமத்தில் மக்கள் சந்திப்பு.

மருத்துவர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. அவர்களின் விருதுநகர் மாவட்டம், கூனம்பட்டி கிராமத்தில் மக்கள் சந்திப்பு.

மருத்துவர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. அவர்களின் விருதுநகர் மாவட்டம், தட்டான்குளம்பட்டி கிராமத்தில் மக்கள் சந்திப்பு..

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

மாஞ்சோலை வென்ற மன்னரின் மகத்தான மக்கள் சந்திப்பு


தமிழ்நாட்டில் மற்ற அரசியல் கட்சிகளிடமிருந்து சற்று வேறுபட்டு, உழைக்கும் மக்களுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் போராடி வருகின்ற புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர்.க.கிருஷ்ணசாமி அய்யா அவர்கள், அனைவரும் நேற்று சுதந்திர தினைத்தை கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில் முதலாளி வர்க்கத்தால் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து சிக்கல்களை சுமந்து இன்றுவரை அந்நியரின் ஆதிக்கத்திலேயே வாழ்ந்து வரும் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை சந்தித்து அவர்களின் தற்போதைய குறைகளை, கோரிக்கைகளை கேட்கும் விதமாக ஒரு நாள் சுற்று பயணமாக மாஞ்சோலை பகுதிக்கு சென்றார். அங்கு தேயிலை தோட்ட தொழிலாளிகளான உழைக்கும் மக்கள் அவரிடம் 3 கோரிக்கைகளை வைத்தனர். மாஞ்சோலை மக்கள் மருத்துவர் அய்யா அவர்களை இன்றுவரை "தேயிலை தோட்ட தொழிலாளிகளின் தெய்வமாக" தான் கருதுகின்றனர் என்பது அவர்கள் அளித்த வரவேற்பிலேயே தெரிந்தது.

மாஞ்சோலை வென்ற மன்னரின் மகத்தான மக்கள் சந்திப்பு.

புதன், 14 ஆகஸ்ட், 2013

மீண்டெழும் பாண்டியர் ......

தென் மாவட்டங்களில் அனைத்துக் கிராமங்களிலும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வரும் மருத்துவர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. அவர்களின் நெல்லை மாவட்டம், ராஜபாண்டி கிராமத்தில் மக்கள் சந்திப்பு.

க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. அவர்களின் நெல்லை மாவட்டம், வெள்ளகால் கிராமத்தில் மக்கள் சந்திப்பு.

மருத்துவர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. அவர்களின் நெல்லை மாவட்டம், திருச்சிற்றம்பலம் கிராமத்தில் மக்கள் சந்திப்பு.

மருத்துவர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. அவர்களின் நெல்லை மாவட்டம், திருச்சிற்றம்பலம் கிராமத்தில் மக்கள் சந்திப்பு.

மருத்துவர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. அவர்களின் நெல்லை மாவட்டம், கீழசுரண்டை கிராமத்தில் மக்கள் சந்திப்பு.

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

பள்ளர்/மள்ளர் என்பது சாதியா? இனமா?


'தமிழன் உலகாண்டான்' என்பதற்கு அடிப்படையாய் காட்டப்பட்ட பல இடங்களில் 'பள்ளர்/மள்ளர்' என்றே அடையாளங்கள் அதிகமாய் இருந்ததை சுட்டி காட்டி இருந்தோம். அதில் சில நண்பர்களுக்கு பிணக்கும், சாதி மேன்மை பாராட்டுவதாகவும் எண்ணி இருந்தார்கள். அவர்களுக்கான பதிவு இது.

இலக்கியம் கூறும் ஐந்து வகை நிலங்களும், மக்களும்
 
 



இலக்கிய பார்வையில் மள்ளர்/பள்ளர்

*  'செருமலை வீரரும் திண்ணியோடும், மருத நில மக்களும் மள்ளர்'  -- பிங்கல நிகண்டு

* “"மள்ளர் குலத்தில் வரினும் இரு பள்ளியர்கோர்
பள்ளக் கணவன்"” --- முக்கூடற் பள்ளு

* “நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிணச் சேற்றின்
உதிர நீர் நிறைந்த காப்பின்
கடும் பகடு படி கிடந்த கரும் பரப்பின்
இன மள்ளர் பரந்த கையில்
கடு ங்கமல மலர் நாறும் முடிபரந்த
பெருங்கிடக்கைப் பரந்த பண்ணை
தடம் பணையின் நறும் பழனம் தழுவியதே
எனப் பொலியும் தகையும் காண்மின்” --- கம்பராமாயணம்

எனவே இலக்கியங்கள் மருத நிலத்தில் வாழ்ந்த மக்களை குறிக்கவே மள்ளர் என்ற சொல்லாடல் பயன்படுத்தப்பட்டுளதையும், அப்படி குறிக்கப்படும் மள்ளர்கள் ஒரு இனமாகவும்குலமாகவும் தான் காட்டப்பட்டுள்ளனர் என்பதையும் இங்கே முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

வரலாற்று பார்வையில் மருத நில குடிகள்
வேளாண்மையும், அது சார் தொழில்களும், இவற்றை நிர்வகிக்கும் அரசும், வணிகர்களும், அரசை வழி நடத்தும் அனைத்து மக்களுமே மருத நில குடிகளான மள்ளர்கள் ஆவார்கள். இதில் இருந்து 'பள்ளர்'(இன்றைய பள்ளர் சாதி மக்கள்)  மட்டுமே மள்ளரா என்ற கேள்வி அர்த்தமற்றதாகிறது. மேலும் அந்த மள்ளரின் பணி  வேளாண்மை மட்டுமே என்ற குறுகிய கண்ணோட்டமும் அடிபட்டு போகிறது.

அப்படி என்றால் இன்றைய 'பள்ளர்கள்'(சாதி)  மட்டும் தான் 'மள்ளரா',வேறு யாரும் இல்லையா என்ற கேள்வி இயல்பாக எழும். அதை தர்க்க ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் அலசுவோம். உலகம் முழுக்கும் பள்ளர் என்ற சொல்லாடலும், மள்ளர் என்ற சொல்லாடலும், உலகம் முழுவதும் ஒரு குடையின் கீழ் ஆண்ட தமிழனின் அடையாளம் அனைத்திலும் 'பள்ளர்' என்ற வார்த்தையே அதிகம் பயன்படுத்த படுவதில் இருந்தும், அந்த பெருமைக்கு உரியவர்கள் பள்ளர்கள் மட்டுமா என்பதை தெளிவான பார்வையில் இனி காண்போம்.

உலகின் அனைத்து நாகரிகத்திலும் முதன்மையானது உழவு தொழிலே. அந்த உழவுத் தொழிலை ஒட்டியே மற்ற தொழில்களும், அரசும் தோன்றின. எனவே தான் உலகம் முழுதும் உழவு தொழிலை சிறப்பிக்கும் வகையிலும், தான் அந்த வேளாண் சமூகத்தில் இருந்து வந்தவன் என்ற வகையிலும், மற்ற தொழில்களை விடுத்து தன்னை ஒரு வேளாண் குடி சார்ந்தவனாக காட்டிக் கொள்ளவே தமிழன் விரும்பியுள்ளான். இதனாலேயே (ஆயர் என்ற ஒரு சில சொற்களை தவிர), கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் 'பள்ளர்' என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளான். இதன் மூலம் மருத நில மூத்த குடியினரை சிறப்பித்துள்ளான். இந்த அடையாளத்தை தான் இன்றைய 'பள்ளர்' சமூக மக்கள் தக்க வைத்து உள்ளனர். 

கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் அனைத்து பள்ளர் பிரிவையும் (இலக்கியம் சொல்லும் இன,குல மள்ளர்கள்) ஒருங்கே குறிக்கும் அர்த்தத்தில் தான் உலகில் விரவிக் கிடக்கும் பள்ளரையும், தமிழன் அடையாளத்தையும் பார்க்க வேண்டுமே தவிர, 'பள்ளர்' என்ற ஒற்றை சாதி அடையாளமாக அல்ல.

 

மரபணு அடிப்படையில் மருத நில குடிகள்
NOTE: இங்கே அனைவரையும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வில்லை.
 

 

ஆதாரம்: 
http://www.ias.ac.in/jgenet/Vol87No2/175.pdf
http://www.ias.ac.in/jgenet/Vol87No2/175-suppl.pdf

தர்க்க அடிப்படையில் மருத நில மக்கள் இருப்பு:
உலகம் முழுவதிலும் தமிழன் தடத்தில் 'பள்ளர்' இருக்கிறார்கள் என்றால், அந்த இனம் இங்கே பெரும்பான்மையாக கோலோச்சி இருக்க வேண்டும். ஆனால் இன்று 'ஆறில் ஒரு பங்கு அளவு' மட்டுமே இருக்க கூடிய 'பள்ளர்' சமூகத்தால் அது சாத்தியமா? 

'கடலோடியான' தமிழன் ஒரு கப்பலை கட்டி இயக்கவே கீழ் கண்ட தொழில் சார் மக்கள் தேவைப்படுகிறார்கள்.

* பருத்தி உற்பத்தி
* பருத்தி நூற்ப்பு & பாய் மரம் செய்தல்
* மரம் இழைத்தல்
* கப்பலை கட்டும் நிபுணர்
* கப்பலில் செல்ல தேவையான உணவை தயார் செய்தல்
* வானியல் நிபுணர்
* கடலியல் நிபுணர்
* சிற்பி (சென்ற இடத்தில் எல்லாம் தமிழன் கோவில் கட்டியுள்ளான்)
* இரும்பு,செம்பு என கப்பல் கட்ட தேவையான கொல்லர்கள்
* கப்பல் மாலுமி
* கப்பலை செலுத்துபவர்கள்

கடலோடி தமிழன் என்ன தான் மேலே சொன்ன அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து பணி ஆற்றி இருந்தாலும், இவர்களின் ஒட்டு மொத்த அடையாளமாகத் தான் 'பள்ளர்/மள்ளர்' என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளான் என்பதையும், தான் சென்ற இடங்களுக்கெல்லாம் இள வட்டக்கல்லையும், நெல் கதிரையும் கொண்டு சென்று இறங்கியுள்ளான் என்பதையும் நாம் வரலாறின் மூலம் அறிகிறோம். எனவே 'பள்ளர்/மள்ளர்' என்பது ஒரு திணையில் (அ) திணை மயக்கத்தில், வாழ்ந்த, ஒரு இன மக்களை குறிக்கும் வார்த்தை என்பதையும், மருத நிலத்தில் வாழும் அனைத்து தொழில் சார் மக்களையுமே அது சுட்டும் என்பதையும் அறியலாம். மேலும், மூவேந்தர்கள் சுட்டி காட்டும் 'பள்ளர்' உட்பட, இன்று வரை வாழ்ந்து கொண்டு இருக்கும் 'பள்ளர்' சாதி ஆட்கள் அனைவரும் மருந்த நில வேளாண் சார் தலை குடி மக்கள் என்பதையும் உணர்ந்து கொள்வோம்.

மக்கள் குடிக்கணக்கில் மாற்றம்
பாண்டிச்சேரி(1970-72) உள்ளிட்ட இடங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பு பள்ளர் என்று வாழ்ந்து வந்த மக்கள் பலர், தற்போது வன்னியர் என்றும், நாடார் என்றும், கொங்கு வேளாளர் என்றும் வாழ்ந்து வருகின்றனர் (கள ஆய்வு தகவல்: ஒரிசா பாலு) என்பதும், 'SC என்றால் எல்லாரும் ஒன்று தானே' என்று பறையர் என்று சான்றிதழ் பெற்று பள்ளர்கள் பலர் வாழ்ந்து வருகின்றனர் என்பதும் கள ஆய்வில் தெரிய வரும் உண்மை ஆகும்.

எனவே 'உலகில் இருக்கும் பள்ளர்' என்பதை சாதியம் என்று கொள்ளாமல், இனத்தின் அடையாளமாக கொள்ளவும். அந்த பெருமைகளில்,தொழில் சார் நுட்பங்களில், மேலே சொல்லப்பட்ட அனைத்து மருத நில மக்களுக்கும் பங்கு உண்டு என்பதையும் உணர்ந்து கொள்ளவும்.

-- தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம், சென்னை --

தென் தமிழகத்தில் சாதிய மோதல்கள்: உண்மையும், பின்னணியும்: பாகம் 1


முற்சேர்க்கை: தமிழகத்தில் சாதி கோர தாண்டவங்கள் வடக்கு தெற்கு பக்கத்தில் மித மிஞ்சி கிடப்பது அனைவரும் அறிந்ததே. அதற்க்கு மூல காரணங்களாக நாம் இத்தனை நாள் நினைத்து கொண்டிருக்கும் சில அடிப்படை கருத்துகள் எத்துனை அபத்தமானது என்பதையும், உண்மையான காரணங்களை தேடியும் எழுதப்பட்டவை இந்த பதிவுகள்.

நாம், மறவரான திரு.முத்துராம லிங்கம் அவர்களின் தேர்தல் உரைகளை ஒவ்வொன்றாக காண இருக்கிறோம். தொடர்ச்சியாக, அந்த கால கட்டத்தில் நடந்த அரசியல் காய் நகர்த்தல்களையும் நுணுக்கமாக காண இருக்கிறோம். இந்த பதிவின் மூலம், மறவர் சமூகத்துக்கும் பள்ளர் சமூகத்துக்கும் தான் தென் தமிழகத்தில் சண்டையும் சச்சரவும் தொன்று தொட்டு இருந்து வருகிறது என்ற பொய் பிம்பம் உடையும்.

இனி திரு. முத்துராமலிங்கம் அவர்கள் பேசுகிறார்.



முதுகுளத்தூர் வட்டம், பேரையூரில், 28.6.1957 அன்று மாலை 7 மணியளவில் நடைபெற்ற மறவர்களின் கூட்டத்தில் முத்துராமலிங்கத் தேவர் ஆற்றிய உரை.

    பராசக்தியின் பிரதிபிம்பமாக வீற்றிருக்கும் தாய்க்குலமே! மனித சட்டை தாங்கிய உள்ளே தெய்வத்தை மறைத்து நிற்கும் தெய்வத் திருகுலமே! இன்று இந்த கூட்டம் கூட்டியதன் நோக்கம், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இந்த பிராந்தியத்தில் ஒரு தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தல் அடிப்படையில் காங்கிரசை உற்பத்தி பண்ணிய அசல் காங்கிரஸ் தலைவர்களுக்கும் காங்கிரஸ் பிழைப்பு கிடைக்கிறது என்பதன் பிறகு உள்ளே நுழைந்த நகல் காங்கிரசு காரனுக்கும் நடந்த போராட்டம், அந்த போராட்டம். உண்மையில் வெள்ளைக்காரன் அளித்த சுதந்திரம் சுத்த சுதந்திரம் அல்ல என்று கருதுகிறவர்களுக்கும் அது பிழைப்புக்காக நாய் போல் பதவிக்கு வந்த மிதவாதிகளுக்கும் நடந்த ஒரு போராட்டம். ஒழுக்கத்தோடு வாழ வேண்டும் என்று சொல்லுகிற ஒரு கூட்டத்துக்கும் காந்தி வளர்த்த மகாசபைக்கு ஓட்டுப் போடுங்கள் என்று சொல்லுகிற அறிவுகெட்ட காங்கிரஸ்காரகளுக்கும் நடந்த போராட்டம். காந்திஜியின் வணக்கத்துக்கு உரியவர் இராமர் ராஜ்ஜியம் வேண்டும் என்று விரும்பினார்.ஆனால் கீமாயணம் நாடகம் (எம்.ஆர்) இராதா என்பவன் அவன் தாய் விபச்சாரியா,பதி விரதையா என்று தெரியாத தாசி மகன் லோகமாதாவாகிய சீதையை விபச்சாரி,இராமர் கூட்டி கொடுத்தார் என்று நாடகம் நடத்த, அதற்க்கு போலிஸ் பந்தோபஸ்து கொடுத்து நன்றாக பாருங்கள் என்று சொல்லுகிற அளவுக்கு ஒரு தறுதலை பிரதம மந்திரி இருந்தால், அவன் சார்பாக நின்ற ஒரு கூட்டத்துக்கும் தெய்வம் உண்டு என்று நினைத்த ஒரு கூட்டமான நமக்கும் நடந்த போட்டி. அந்த போட்டி விவசாய மக்கள் வாழ வேண்டும் என்று கருதுகிற உத்தம தியாகிகளுக்கும் விவசாயிகளைப் பகலில் திருடி கொள்ளையடிக்கும் கள்ள மார்க்கெட் வியாபாரிகளுக்கும் நடந்த போட்டியாகும். அந்த போட்டியானது நேர்மைக்கும் லஞ்சத்துக்கும் நடந்த போட்டியாகும். அந்த போட்டியில் அடியேன் இந்த பிராந்தியத்துக்கு வர முடியவில்லை. நீங்கள் இன்னது செய்ய வேண்டும் என்றும் கேட்கவில்லை.இருந்த போதிலும் சும்மா இருக்கவில்லை. தூங்கவில்லை. காங்கிரசை உற்பத்தி பண்ணி நேர்மையாக கண்ணீர் விட்டு வளர்த்து நல்ல நிலைக்குக் கொண்டு வந்தோம். அந்த காலத்தில் தண்ணீர் விட்டு உண்டாக்கவில்லை. போலீஸ்காரர்கள் வேகமாக அடிக்கிற பொழுது இரத்தம் வடித்துக் காத்தோம். எத்தனையோ பதிவிரதைகள் போலீஸ்காரர்களால் மானபங்கப் படுத்தப்பட்டார்கள். லாரியில் ஏற்றிக் கொண்டு போய் சேலையை அவிழ்த்து பெரிய பாவம் புரிந்தவன் முன்னாள் டி.எஸ்.பி.யாக இருந்து கடந்த ஐ.ஜி.யாக இருந்த தேவசகாயம் என்ற ஒரு நாடான். சாணான் என்பதற்காக ஐ.ஜி. வேலை கொடுத்தான் இன்னொரு சாணான். அந்த பெண்கள் சேலையை உரித்த காலத்தில் அங்கு போய் அந்த பெண்களுக்கு மேல் துண்டையும் எங்கள் ஆடையையும் கொடுத்து வந்தது பழைய சரித்திரம்.

    இந்த நிலையில் சிரமப்பட்டு வளர்த்த காங்கிரஸ் இன்றைக்கு என்னவாக இருக்கிறது என்று கேட்டால், கரையான் புத்தில் பாம்பு நுழைந்தது போல். அன்றைக்கு வேலை செய்யும் போது பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் வேலை செய்தார்கள். அந்தத் தொண்டர்களில் சாதாரண முட்டாள் தொண்டன் தான் இன்றைய காமராஜ் நாடான். அன்று இருந்த நிலையில் இந்த நபருக்கு வோட்டர் ஆவதற்குக் கூட யோக்கிதை இல்லை. இப்போது இருக்கிற சட்டத்தைப் போல் வயது வந்தவர்களுக்கு வோட் அல்ல, சொத்து இருந்து வரி செலுத்துபவனுக்குத் தான் வோட், அது தான் சட்டம். அப்போது காமராசுக்குச் சொத்துக் கிடையாது. வரி செலுத்தவுமில்லை. அவனுக்கு வோட்டே கிடையாது. இவன் ஜாதியில் எல்லாரும் வியாபாரம் பண்ணுகிறான். இவனுக்கு ஒன்றும் கிடையாது (யாரும்) பெண்கூட கொடுக்கவில்லை. அந்த நேரத்தில் ஒரு வெள்ளாட்டை வாங்கி லைசன்ஸ் கட்டி தகரவில்லை போட்டு காமராஜ் கையில் கொடுத்து வோட்டராவதற்க்கு யோக்கிதையை உண்டாக்கினோம்.இந்த மாதிரி அரசியல் சூழ்நிலையில் தேசம் போய் கொண்டிருந்த வேகத்தில் ஒரு அரசாலும் பதவிக்கு வர முடிந்தது. எப்படி திருவிழாவுக்குப் போகிறவன் எல்லாம் சாமி கும்பிடப் போவது இல்லையோ, அதுபோல் காங்கிரசில் சேர்ந்தவன் எல்லாம் வெள்ளைக்காரனை அழிக்கப் போவதில்லை. மதுரை திருவிழாவுக்கு சாமி கும்பிடப் போகிறவர்களில் சிலர் வானவேடிக்கை பார்ப்பதற்காக போகிறான். சூத்தாட்டம் ஆடப் போகிறவனும் உண்டு. ஆண்கள் பெண்களைப் பார்க்கவும், பெண்கள் ஆண்களைப் பார்க்க போவதும் உண்டு. அங்கு போய் சினிமா பார்ப்போம். தூக்கம் வராமல் இருக்கும் என்று நினைக்கிறவனும் உண்டு. எதையும் வாங்கித் தின்னலாமா  என்றும் நினைக்கிற கூட்டம் உண்டு. இத்தனை முறையில் ஒதுங்கின கூட்டம் போக ஒரு சின்னக் கூட்டம் தெய்வத்தைப் பார்க்க பக்தியோடு போகும். அங்கே போன நேரத்திலும் வாங்க, வாங்க, சாமியைச் சட்னு கும்பிட்டுட்டுப் போகலாம் என்று போகிறவனும் உண்டு.

   ஆகவே, காங்கிரசில் சேர்ந்தவன் எல்லாரும் வெள்ளைக்காரனை அழிக்க சேரவில்லை. பெரும்பாலும் தங்களுக்கு ஒரு பிழைப்புக் கிடைக்கும், பதவி கிடைக்கும், தாங்கள் ஒரு மனிதன் ஆகலாம் என்று சேர்ந்தார்கள். வந்தவன் அவனவன் காரியம் முடிந்தவுடன் வெளியேறி விட்டான். பழைய கால சாஸ்திரம் சரித்திரம் அப்படித்தான். எத்தனையோ பேர் இராமாயணத்தில் சண்டைக்குப் போனார்கள். கடைசியாக அனுமார் உட்பட ஓடிப் போனார்கள். வீரத்தின் பேரால் நிற்க இராமர்,லட்சுமணர்கள். கடைசியில் நின்றது இராமன். பெரும் காரியங்கள் எல்லாம் அதற்க்கதற்க்குப் பிறந்தவர்களால் தான் செய்ய முடியும். ஆசை இருக்கலாம். இருந்தாலும் செய்ய முடியாது. எல்லாவற்றையும் விட உயிர் பெரியது. எவனும் இதை இழக்கத் தயாரில்லை. உயிரை இழக்க தயாராய் இருக்கணும். அந்த நிலை வரும்போது சாதாரண காலிப் பயல்கள்  தன்னாலே ஓடி விடுவான்.

    உதாரணத்துக்கு சொல்கிறேன். இந்த பிரதேசத்தில் இவ்வளவு பெரிய ஒரு கூட்டம் நடத்தக்கூடிய இடம் அல்ல இது. முதுகுளத்தூரில் போட்டால் தாலுகா தலைநகரம் நன்றாக இருக்கும். இந்த பிரதேச மக்களுக்கு அறிவில்லை. இங்கே குடி இருக்கிற சாணாணுக்கும் அறிவில்லை. இங்கே குடியிருக்கிற சாணான் நான் யார் என்று விளங்காமல் லைசன்ஸ் இல்லாத ஓட்டைத் துப்பாக்கிகளை வைத்துக் கொண்டு ஏதோ சொன்னான் என்று தரத்தை இழந்து இந்தக் காலிப் பயல்களுக்காக இவ்வளவு பெரிதாக ஒரு கூட்டம் நம்மவர்கள் கூட்டுவது என்றால் வருந்துவதற்குரிய விசயமாகும். இதில் எந்த வித்தாரமும் கிடையாது.

    இந்த வேலுச்சாமி நாடான் முந்தாநாள் பள்ளர்கள் விரட்டியதைக் கண்டு அழுது ஓடிய பயல். கூரை வீடு வைத்திருந்தான். இன்று மாடி வீட்டில் இருக்க காமராஜ் அரசாங்கம் தான் காரணம். இந்தக் காலிப் பயல்களுக்காகக் சக்களத்திப் போராட்டத்துக்கு தயாராகக் கூடாது. அவனுடைய அறிவு எவ்வளவு மோசமோ அவ்வளவு மோசம் நம்முடைய அறிவு. அவன் நாய் உளறுகிற மாதிரி உளறுகிறான். இங்கு வேண்டுமென்றால், கம்பு, அரிவாள் கொண்டு வரலாம். அடியேன் பம்பாய்க்குப் போகும் போதே டில்லிக்கு போகும் போதோ நீங்கள் வருகிறீர்களா? இந்த காங்கிரஸ் அரசாங்கம் ஒரு தரம்கெட்ட ஒருவனைப் பெரிய மனிதனாக்கி இருக்கிறது. அவன் அவ்வளவு பெரிய மனிதன் அல்ல. அவன் தரங்கெட்டவன் சொன்னால் பெரிதாக்கலாமா? இந்தப் புத்தியை விட்டு விடுங்கள் தரத்துக்குத் தரம் சண்டை போடணும். ஒரு காலிப்பயலைப் பெரிய மனிதனாய் இழுத்து வைப்பது அவமானம். இந்த அறிவு இந்த பிராந்திய மக்களுக்கு வரவேணும்.

   இந்த நாடு எவ்வளவு தரம் கேட்டு இருக்கிறது. காலிப் பயலை மனிதனாக்கி இருக்கிறது. காமராஜ் ஆட்சி என்பதற்கு இதுதான் அடையாளம். அவன் பிதற்றியதைக் கண்டு நீங்கள் கூட்டம் போட்டது மடத்தனம். பேரையூரில் கூட்டம் போட முடியாது என்பதற்காக இவங்களைப் பெரிய மனிதனாக்கும் நினைப்பை இன்றுடன் மறந்து விடனும். எவனும் பேசலாம். வெள்ளைக் காரன் 30 வருசமாக முக்கிப் பார்த்து விட்டும் அந்த துப்பாக்கி பீரங்கிக்கு அசராத மனிதன். என் மீது இதுவரை போட்ட கேஸ்கள் 1927இல் இருந்து நாளது வரை ஓசியாக வக்கீல்கள் ஆஜரானது. வக்கீல்களுக்குப் பணம் கொடுத்தது போக 3 அணா காப்பி, இஸ்டாம்பு வாங்கியது மட்டும் ரூ.1,27,000. இத்தனை கேஸ் வெள்ளைக்காரன் பார்த்து முடியாது என்று ஒதுங்கினான். அப்படிப்பட்டவன் இங்கு ஒருவன் ஏதோ பேசினான் என்று கருதி இங்கு வருவது என்றால் கேவலம். இந்த குணம் வேண்டாம். அதற்க்கு மேல் காங்கிரஸ் அரசாங்கம் இந்த காலிகளை சின்னத்த் தனமாக போக விட்டால், ரகசியமாக ஆயுதங்கள், ரிவால்வர்கள், துப்பாக்கிகள் இதை வைத்துப் பெரிய காரியங்கள் நடத்தப் போவதாகவும் கேள்விப்ப் பட்டேன். இது வெட்கக் கேடான விஷயம். இலண்டனில் அமெரிக்காவில் இருக்கும் ஆயுதங்களை விடவா இந்தப் பேரையூரில் சாணான் ஆயுதம் வைத்திருக்கப் போகிறான்? இதைப் பொருட்படுத்தக் கூடாது. இது பெருமை என்று கருதினால், சிறுமையைக் காட்டுகிறது என்று சொல்லுகிறேன்.

    சாதரணமாக இந்த ஊருக்கு வர ஒத்துக் கொள்ளமாட்டேன். நான் வராமல் அலட்சியப் படுத்தினால் கோழை என்று பைத்தியக்காரத்தனமாக நினைப்பீர்கள் என்று நினைத்துத்தான் இந்த சாணான் ஊருக்கு வந்தது. இல்லையேல் இந்த சின்னப்பயல் ஊரை பெரிதாக கருதவில்லை. இந்தக் கூட்டம் பெரிய தலைநகரில் கூட்ட வேண்டும். இந்த கிராமத்தில் கூட்டியது உங்கள் கோழைத் தனத்தைக் காட்டுகிறது. நாய்கள் எத்தனையோ குலைக்கும். யானை திரும்பிப் பார்க்கக் கூடாது. உண்மையில் யானை திரும்பி பார்த்தால் நடுங்கிக் கழிஞ்சு செத்துவிடும். நாய், யானை மிதிக்க வேண்டியதில்லை. இந்த நிலைமையில் நீங்கள் இந்த மாதிரி குணத்தை விட்டு விடுங்கள். இன்றுடன் நாம் இருக்கும் நிலை வேறு, சக்தி வேறு. பின்னால் இருக்கிற ஆயுதம் வேறு, ஆண்டவன் அருள் வேறு.  இது தெரியாமல் நின்னால் மிகப் பெரிய தவறு இழைத்தவர்கள் ஆவோம். அணுகுண்டு சண்டை நடைபெறும் போது வேல் கம்பு என்ன காப்பாற்றும்?

   இன்று நேதாஜி ஒரு படை ஆயுதத்துடன் போகிறார். அவரை விட ஆபத்தான இடத்தில் நான் போர் புரிய இருக்கிறேன். ஆனால் என்னிடம் ஒரு ஆயுதமும் கிடையாது. நேதாஜி செய்யக் கூடிய காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறேன். இந்த நிலைமையில் இருக்கும் போது சர்க்கார் பயமுறுத்திக் கொண்டு ஏதோ பாச்சல் எல்லாம் காட்டுகிறான். உங்கள் ஆடம்பரத்தால் இந்தக் காலிப்பயல்கலுக்குத் தரத்தை உண்டாக்க கூடாது. காங்கிரஸ் இவ்வளவு கேவலமான நிலைமைக்குப் போய் விட்டதால் அதை சீர்படுத்தி ஒழுங்குபடுத்த இந்தியாவில் ஒரு எதிர்ப்பு அணி அமைத்தோம். மறுநாள் தமிழ் நாட்டில் எதிர்ப்பு அணி அமைத்துப் பேசினேன். அப்படி வந்த காலத்தில் சென்னை கடற்க்கரை முதல் கன்னியாகுமரி வரை சுற்றுப் பயணம் செய்தேன். அப்படிச் செய்யவில்லை என்றால் தமிழ் நாட்டில் ஒரு எதிர்ப்பு அணியை அமைத்திருக்க முடியாது. இராஜகோபாலாச்சாரி கூட முயன்று பலிதம் இல்லை என்று விட்ட இடத்தில் தொட்டோம். 10 நாளைக்குள் எதிர் கட்சியை அமைத்தோம்.

    இங்கே சுற்றுப் பயணத்தின் போது வர சந்தப்பமில்லை என்றாலும் ஊர்ப் பிள்ளையை வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்று இந்தப் பிராந்தியத்தில் உள்ள அத்தனை பெரும் ஒரே உணர்ச்சியுடன் நின்றார்கள். முதுகுளத்தூர் சென்னை சட்டசபைத் தொகுதி சின்னது. தெரிந்த தொகுதி, பார்லிமென்ட் தொகுதி இதோடு ஒப்பிட்டுப் பார்த்தால், இதில் ஆயிரக்கணக்கான ஊர்கள். சாதரணமாக எல்லை பல ஜில்லாக்கள். கிழக்கே கடல், கீழக்கரை. மேற்க்கே சதுரகிரி மலை, வத்திராயிருப்பு வரை. வடக்கே மதுரைப் பக்கம் ஆவியூரைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. தெற்க்கே தூத்துக்குடி பக்கம் குறுக்குச் சாலை வரை. எப்படியாவது அடியேனைத் தோற்கடிக்க வேண்டுமென்று தொகுதி பிரிக்கப்பட்டது. அத்துடன் காமராஜ் கள்ள நோட்டு அடித்த பணமும், வருமான வரியிலிருந்து தப்ப வியாபாரிகள் கொடுத்த லஞ்சமும், மில் வியாபார்கள் கொடுத்த பணமும்,நன்கொடை வசூலும், காங்கிரஸ் சேமநிதி, தேர்தல் நிதியிலிருந்தும் இவையெல்லாம் சேர்த்து அந்த தொகுதியில் அடியேனைத் தோற்கடிக்க செலவழிக்கப்பட்ட தொகை ரூ.2,28,700. இவ்வளவு சிரமப்பட்டும் கூட மனிதப் பிரயத்தனம் பலிக்கவில்லை. ஆண்டவன் சம்மதம் பலித்தது. ஜனங்களுடைய வெற்றி. குறைந்த பணம் கூட செலவழிக்கவில்லை. வால் போஸ்டர் ஒட்டவில்லை. எனக்கு ஓட்டுப் போடு என்று கேட்கவில்லை. எல்லாரும் ஏகோபித்து ஓட்டுப் போட்டு வெற்றி தேடித் தந்தார்கள். மனித சக்தி அல்ல. ஆடம்பரம் அல்ல. ஒரு பெரிய சக்தி வேலை செய்கிறது. இரண்டு தொகுதியிலும் வெற்றி. அதைக் கண்டு ஆங்கில அரசாங்கம் அதிர்ச்சி அடைகிறது. டில்லி சர்க்கார் அதிர்ச்சி அடைகிறது. உலகமே பரிசீலனை செய்தது. இதிலிருந்து மனிதனுக்கு அப்பாற்ப்பட்ட சக்தி ஒன்று உண்டு என்று தெரிகிறது. இரண்டு தொகுதியிலும் அடியேனுக்கு வெற்றி கிடைத்தது.

   நீண்ட காலமாக எதிர்பார்த்த மூன்றாவது உலக மகா உத்தம் பிரம்மாண்டமான யுத்தம் வர இருக்கிறது. இது உத்தம யோகிகளுக்குத்த் தான் தெரியும். காந்தி தான் சுடப்பட்டு சாவோம் என்று அறியாமல் 150 வயது வரை இருப்பேன் என்று சொன்னார். அந்த முழங்காலுக்கு மேல் வேட்டி கட்டிய நபரை மகாத்மா என்று கொண்டாடினான். அந்த நபர் எதையும் அடைந்தவர் அல்ல. யோகமோ ஞானமோ கிடையாது. இதை பின்னால் சரித்திரம் காட்டப் போகிறது. எனக்குக் காந்தியின் அறிவும், ரகசியமும் தெரியும். இருக்கிறவன் எல்லாம் இவரை மகாத்மா என்றான். இந்த நபர் துராத்மா. சீக்கிரம் சுடுபட்டு சாவான் என்று நான் சிறையில் இருந்து விடுபட்டு வந்தவுடன் சொன்னேன். அப்போது என்னமோ இந்த ஆள் கிறுக்கு என்று நினைத்தார்கள். யதார்த்தவாதி பொது ஜன விரோதி. உத்தமர்களைப் புரிந்து கொள்ளமாட்டார்கள். ரொம்ப வேண்டியவர்கள் இந்த வார்த்தையச் சொல்லாதீர்கள் என்றார்கள். கோபத்தில் சொல்லவில்லை. ஒருவரின் லபிதத்தை எனக்குத் தெரியும். சொன்னேன் என்றேன். அதே மாதிரி நடந்த பிறகு என்னைக் கண்டவுடன் தலை குனிந்து கும்பிட்டு விட்டுப் போவான். சுடுபட்டுச் சாவான் என்று சொன்னேன். நடக்கப் போகிற காரியம் எனக்குத் தெரியும். இது விளையாட்டா? எவனால் சொல்ல முடியும்? (குறிப்பு: காந்தியை சுட்டவர்களுக்கு தமிழகத்தில் வரவேற்ப்பு அளித்து, பொன்முடிப்பை முத்துராமலிங்கத் தேவர், அவர்களுக்கு பின்பு வழங்கினார்)

    முன்பு எனக்கு ஜெயிலில் இருந்து வந்தவுடன் ஒரு வரவேற்ப்பு பத்திரம் கொடுத்தான். அப்போது கோகலே ஹாலில் மீட்டிங் நடந்தது. அதற்க்கு கிரி தலைமை வகித்தார். அப்போது நான் சொன்னேன். 1857இல் ஒரு வீரப்புரட்சி நடந்தது. தண்டவாளம் ரெயில்வே எஞ்சின்கள் உருண்டது. அதைப் போல் மீண்டும் செய்யத் தயாராய் இருக்கிறோம் என்றேன். கிரி தலைமை வகித்தவர் பயந்து போய் விட்டார். இருக்கிற கூட்டமெல்லாம் பயந்து ஓடியது. ஆனால் ரோட்டில் நின்று கேட்கிறான். சி.ஐ.டி ரிப்போர்ட்டர் மட்டும் ஒழுங்காக எழுதுகிறான். என்னை அரெஸ்ட் பண்ணப் போகிறான் என்று பார்க்கிறான். காங்கிரஸ்காரன் விபரமில்லாதவன். இம்மாதிரியான புரட்சி மீண்டும் நடத்துவோம். ஒரு யுத்தம் நடந்தது அதற்குப் பின் தற்காலிக ஓய்வு.

    பொருளாதார நிலைமை ஜெர்மனியில் சீர்கேடான நிலைமை. இப்படி ஒவ்வொரு நாட்டிலும். ஆகவே, மீண்டும் ராணுவப் புரட்சி ஏற்ப்படப் போகின்றது என்றேன். உடனே என் பெயரில் 187 செக்சன்படி கேஸ் போட்டான் சர்க்கரை மீற ஜனங்களைத் தூண்டுகிறான் என்று. கேஸ் நடந்து கொண்டிருக்கும் பொழுதே வாபஸ் வாங்கு என்று உத்தரவு போட்டான். இதை வெள்ளைக் காரன் செய்தான். அப்படி இருக்கும்போது இங்கு இருக்கிற எச்சில் பீடி குடித்தவன், கீரை விற்றவன், பேரீச்சம்பழம் விற்றவன் பதவியில் இருக்கிறான். என்ன பண்ணுகிறது என்று பார்க்கிறான். அந்த நினைவுகள் வந்தால் மந்திரிகள் அவமானப்படுகிறான். காங்கிரஸ்காரனும் அவமானப்படுகிறான். அதிகாரிகளும் பயப்படுகிறான். என்னடா இந்த மனிதனில் நிலை என்ன? பெரிய ஆட்களே பயப்படுகிறார்களே, இழிவாகப் பேசுகிறான். கவர்ன்மெண்ட் ஒன்னும் பண்ணவில்லை என்று உண்மை தெரிந்தாலும் சனங்களை ஏமாற்ற நினைக்கிறான். இது சனங்கள் நினைக்கிறதில்லை. இது எப்படி இருக்கு என்றால், மேய்கிற நாட்டை நக்குற மாடு கெடுக்கிற மாதிரி.

    இந்த தேசத்தின் ரகசியத்தை உலக ரகசியத்தை யாரும் கண்டு கொள்ள முடியாது. தெய்வத்தைப் புரிந்திருப்பவர்கள் அவரவர்கள் லபிதம் என்ன என்பதைச் சொல்ல முடியும். இனி மேல் உலகம் என்ன ஆகப் போகிறது என்பது எனக்குத் தெரியும். அடியேன் யார் என்பது வெள்ளைக் காரனுக்குத் தெரியும். இல்லையேல் ஒருவருக்கொருவர் தனிப்பட்ட நபருக்குள் ஆயுதப் பிரயோகம் நடைபெற்றிருக்கும். வெள்ளைக்காரன், அமெரிக்கன் அரசியல், பண்டித நேரு அரசியல் தலைமைக்கு எள்ளளவும் குறைந்ததல்ல.

    சாதாரண விபரங்கள் தெரியாமல், மந்திரிகள் சில்லரைத்தன்மையில் தேவர், போலிஸ் துப்பாக்கி சோளத்தட்டை என்று சொன்னான். நான் புதுக்குண்டு கொடுத்திருக்கிறேன் என்று பேசியிருக்கிறேன். இந்தப் போலிஸ் மந்திரிக்கு துப்பாக்கி சுடத் தெரியுமா? போகும்போது, இந்தப் போலிஸ் மந்திரி இரவில் ஒன்றுக்கு இருக்க பொம்பளையை உசுப்பித்தான் செல்லுவான். அவ்வளவு பயப்படுவான். பேடி. இவன் புதுக்குண்டு என்ன செய்ய முடியும்? காங்கிரஸ்காரன் சொல்லும்போது சிரிப்பாக இருக்கு ரிசர்வ் லாரியைக் கண்டவுடன் ஓடுவான் காமராஜ் ஆள். மறைச்சு வச்ச பிறகு என்னைத் தூங்கவிடவில்லை. ஆகவே இந்த மந்திரிகள் எல்லாம் ஒன்றும் செய்துவிட முடியாது. அவர்களுக்கு இருக்கிற துப்பாக்கிக் குண்டுகளை என்மீது காட்ட நினைத்தால், அவன் வாங்கி இருக்கிற குண்டு அவனைத்தான் திருப்பிச் சுடும். அந்த நேரத்துக்கு காத்து கொண்டிருக்கிறேன். அதுவரை வாங்குகிற சம்பளத்துக்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறான்.

    4 அணா, 8 அணா லஞ்சம் வாங்குகிற போலீஸ்காரனைப் பற்றிக் கவலையில்லை. வீரன் எப்பவும் சல்லித்தனத்துக்குப் போகமாட்டான். விபரம் இல்லாத பயல் ஒருவன் முதுகுளத்தூரில் எஸ்.ஐ.ஆக இருப்பதாக கேள்விப்பட்டேன். அவன் பாரபட்சமில்லாமல் நடக்க வேண்டிய ஒரு அதிகாரி. 2 பேரை ஜார்ஜ் பண்ணினால் ஒருவனை விட்டு விடுவது. ஒருவன் மேல் கேஸ் போடுவது. இந்த லட்சணத்தில் பிராமணன் வேறு. ஆரியர்களை ஒழிக்கணும் என்று சொல்லுகிற நாஸ்த்திக கூட்டத்துக்கு ஆதரவு கொடுக்கிற சாணானை விழுந்து, கும்பிட்டுக் கொண்டிருக்கிறான். இவனெல்லாம் ஒரு பிராமணன் என்று நினைத்துக் கொள்கிறான். ரிவால்வரை சோப்பில் வைத்துக் கொண்டு நிமிர்ந்து நடந்தால் கழிஞ்சு விடுவான் என்று நினைக்கிறேன். வெள்ளைக்காரன துப்பாக்கி பீரங்கியே ஒன்றும் செய்ய முடியவில்லை. நீ பருப்பு தின்று விட்டு எழுந்திருந்து குசு விடுகிறவன் என்ன செய்ய முடியும்? என்ன சொல்லுகிறேன் என்று கேட்டால், சர்க்கார் உத்தியோகஸ்த்தர்கள் ரொம்பவும் தரக் கேடாகப் போகிறான். உன்னுடைய ஆடம்பரத்தை யாரிடம் வைத்துக் கொள்ளனும்? மாட்டைத் திருடியவன், கொள்ளை அடிச்சவன், கொலை செய்தவனிடம் வைத்துக் கொள்ளனும். திருடன் எஜமான் என்று சொல்லுகிறான். நேற்று வெள்ளைக் காரனுக்கு வேலை செய்தாய். சர்க்கார் மாறிய பொழுது இந்த எச்சிப்ப் பீடி குடிச்சவன் காமராஜ் கீழே வேலை செய்கிறாய். அவன் உன்னை காப்பாற்ற முடியுமா? வேட்டுச் சத்தம் கேட்க்கும் போதே அவனவன் மிரண்டு எங்கு ஒடப்போகிறானோ? இதையெல்லாம் இங்கு இருக்கிற எஸ்.ஐ. சர்க்கிள் இன்ஸ்பெக்டர் புரிந்தால் போதும். இதை மறந்து விடுகிறான். போறான் சின்னப்பயல் கவலையில்லை.

    ஜனங்களுக்கு இருக்கிற உணர்ச்சி நிச்சயம் காங்கிரஸ் தோற்றுப் போகும் என்று தெரியும். ஆட்டையில் தோற்றுப் போகிறவன் கள்ள ஆட்டை அடுவான். கலகம் உண்டாக்கி எப்படியோ எலக்சனை கெடுக்கணும் என்று பார்க்கிறான். இந்த முட்டாள் தனம் வேண்டாம். யாருக்கும் பைத்தியம் இல்லை. எவனும் பேசலாம் வாய்ச்சவடால். இங்கிருக்கிற பயல் ரிவால்வர் கொண்டு வரட்டும். ரிவால்வரைக் கீழே போட்டு ஒன்னுக்கு போவான். வீரத்தாய் வயிற்றில் பிறந்திருக்க வேண்டும். பணத்துக்கு வராது வீரம். எவன் எது பேசினாலும் சின்னத்தனமாக காவாலித் தனமாக நடந்தாலும் கலகத்துக்கு தயாராகக் கூடாது. மிதமிஞ்சியே சர்க்கார் போகிறது. நடக்கிறது என்றால் நீங்கள் எனக்கு தகவல் கொடுங்கள். அடியேன் இங்கு தான் இருப்பேன். நான் நேரடியாக வந்து எந்தக் காரியத்தையும் செய்வேன். ஒழுங்கு தவறி துப்பாக்கியை மந்திரி காட்ட நினைத்தால் நான் பார்த்துக் கொள்ளுகிறேன். நீங்கள் பார்க்கக் கூடாது. இந்த நிலைமையில் நீங்கள் நடந்து கொள்ள வேண்டுமென்று உங்களுக்குச் சொல்ல கடமைபட்டிருக்கிறேன்.

    காங்கிரஸ் சர்க்கார் மாட்டுப் பெட்டியைக் காட்டுகிறது. விவசாயிகளுக்காக இருக்கிற பெட்டி என்று இரண்டு காளைகளைப் பார்த்தவுடன் வண்டி அடிக்கிற மாடு உழைக்கிற மாடு என்று நினைக்கிறான். பாவம் விவசாயி. இந்த 10 வருஷ காலத்தில், வெள்ளைக்காரன் போனால் பாலும், தேனும் ஓடும் என்றான். பாவிகள் வந்த பிறகு பச்சைத் தண்ணீர் ஓடி இருக்கிறதா? தெருக்கோடியில் எச்சில் பீடியை எடுக்கிறவன் சிம்மாசனத்துக்கு வந்தால் எப்படி மழை பெய்யும்? இராஜ லட்சணம் இல்லை. சதாரத்தில் உட்காருகிற மாதிரி மந்திரிகள் எல்லாம் குண்டியைத் திருப்பி கொண்டு சிம்மாசனத்தில் உட்கார்ந்த்திருக்கிறான். காங்கிரஸ் மந்திரிகள் லட்சணம் இவ்வளவு தான். பழைய பிளாக் மார்கேட்காரன், எச்சில் பீடி குடிச்சவன் இந்த நிலைமையில் இருக்கும் போது தரித்திரம் நம்ம விட்டு நீங்கவில்லை.

    10 வருசத்தில் பார்க்கிறோம். விவசாயிகள் வாழ்கிற பிராந்தியம் கூரை வீடு குட்டிச்சுவராகி இருக்கிறது. இன்னும் தரை மட்டமாகி விடும் இந்த சண்டாள ஆட்சியில். அதே நேரத்தில் விருதுநகர், கமுதி,அருப்புக் கோட்டை எல்லாம் சாணான் பகுதி. இந்தப் பேரையூரில் பொம்பளை வெளிக்கு இருக்கிற இடமெல்லாம் ஏராளமான கட்டிடங்கள். இவங்களுக்குச் சொத்து எங்கிருந்து வந்தது? புதையல் கிடைத்ததா? அது தான் மாட்டுப் பெட்டியின் ரகசியம். மாட்டுப் பெட்டியைக் காட்டியவுடன் விவசாயிகள் மயங்கிவிடுகிறான். நமது விவசாயிகள் எவ்வளவோ கஷ்டப்பட்டு பருத்தி பயிரிட்டு உற்பத்தி பண்ணுகிறார்கள். நமது பெண் பிள்ளைகள் உப்பு மண் பொரிய சிரமப்பட்டு பருத்தியை எடுத்து சேர்த்து வைக்கிறார்கள். சேர்த்தவுடன் விலையை எதிர்பார்க்கிறார்கள். கொஞ்சம் சம்பலாக இருக்கு என்று ஒருவன் சொல்லுகிறான். நாம் உற்பத்தி பண்ணியும் இன்ன விலைக்கு விற்க வேண்டும் என்ற நியதி உரிமை நமக்கு இல்லை. விவசாயிகள் உற்பத்தி பண்ணிய பருத்திக்கு விலை நிர்ணயம் பண்ண சண்டாள மாட்டுப் பெட்டி சர்க்காருக்கு யோக்யதை இல்லை.

    புரோக்கர் வருகிறான். விருதுநகர் மார்க்கெட் நிலவரம் என்று படிக்கிறான். விலை போடுகிறான். விருது நகர் சாணான் உழுதானா? எந்தச் சாணாப் பொம்பளை பருத்தி எடுத்தாள்? லட்சோபலட்சம் விவசாயிகள் உழைப்பது. விலை வைத்து சாப்பிடுவது விருதுநகர் சாணான். அதற்க்கு டாபர் மாமா வேலை பார்க்கிறது மாட்டுப் பெட்டி சர்க்கார். இதை நினைத்தால் உள்ளம் கொதிக்கிறது. இதே போல் மிளகாயும் பொதி என்ன விலை? விருதுநகர் மார்க்கெட் நிலவரத்தை பார்க்கணும். இது போல்தான் எல்லா தானியங்களும் , நாம் கொடுக்கிற பொழுது விலை வேறு. வாங்கும் விலை வேறு  அப்படியானால் விருதுநகர் நாடார் கூட்டம் ஏன் கட்டிடம் கட்டமாட்டான்?. இந்த நிலைமையில் தான் எல்லா சானாணும், திடீரெண்டு கதர் சட்டை போட்டுக் கொண்டு கத்துகிறான். அவங்களில் எவனும் தியாக பரம்பரையில் பிறந்தவன் கிடையாது. முந்தாநாள் வேல்சாமி நாடான் இருந்த நிலைமை தெரியுதா? இப்போது எப்படி பணக்காரன் ஆனான்?

    ஜமீந்தார் முறை ஒழிக்கப்படும் என்று தெரியும். அதற்க்கு அந்தக் காலத்திலேயே ராமநாதபுரம் ராஜாவுடன் போராடினேன். அப்போது என் தகப்பான் 'சொந்தக்காரனையே எதிர்க்கலாமா?' என்று கேட்டார். விவசாயிகள் அத்தனை பேரும் ஓட்டாண்டியாவது, விருதுநகர் சாணான் கொழுப்பது. இதற்க்கு கைக்கூலியாக இதர சாதிப் பயல்கள் காங்கிரசை பாருங்கள் என்று சொன்னால் என்ன அர்த்தம்? விவசாயிகள் உற்பத்தி பண்ணுகிற விலை பொருள்களுக்கு அவனே விலை வைக்க வேண்டும். இதற்க்கு ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டது. அதை எதிர்த்து விருதுநகர் நாடான் ஹைகோர்ட்டில் வழக்குப் போட்டான். அந்த கேஸ் தள்ளுபடியாச்சு. இப்பொழுது சுப்ரீம் கோர்ட்டுக்கு அப்பீல் போயிருக்கிறான். சிமெண்ட்டுக்கு, கோதுமைக்கு விலை வைக்கிறது எல்லாம் வடநாட்டுக்காரன், இங்கே வியாபாரிகள் எல்லாம் காமராஜை வைத்துக் கொண்டு கொள்ளையடிக்கிறான். இதற்காகத் தான் எல்லாப் பயல்களும் கதர் சட்டையைப் போடுகிறான். தேசாபிமானத்தால் அல்ல. அந்த பரம்பரையைச் சேர்ந்தவன் அல்ல. இந்த மாதிரி கைக்கூலிகள் பேசுவதைப் பற்றி பயப்பட வேண்டாம். முன் கோபத்தில் கலகம் செய்ய வேண்டாம்.

    வருகிற திங்கட்கிழமை, நமக்கு கொடுத்திருப்பது யானைப் பெட்டி. முன்பு சிங்கம், இப்போது சந்திரபால் என்ற நாடானையும் சிங்கச் சின்னம் கேட்கச் செய்து அதற்க்கு ஒரு சீட்டுப் போட்டான். நேர்மையானவன் என்றால் பெற்றவனைத் தான் தகப்பன் என்பான். எவன் எவன் பணக்காரனோ அவன் எல்லாம் அப்பன் என்கிறான். காங்கிரஸ்காரன் விபச்சாரப் புத்தியில் இறங்கி நம்முடைய அடையாளத்தைக் கேட்கச் சொன்னான். சீட்டுப் போட்டான். யானைப் பெட்டி விழுந்தது. முன்னால் யானைப் பெட்டி வைத்து பெருமாள் போட்டியிடவில்லையா? ஒரு சீட்டுத் தான் கொடுப்பார்கள். ஒழுங்காகப் போய் ஆண்டவனைப் பிராய்தித்து  இந்த நாடு விடுதலையடைய,விவசாய மக்கள் முன்னேற, வியாபார்கள் கள்ள மார்க்கெட் காரன் சூழ்ச்சியை முறியடிக்க ஒரே முகமாக அந்த காரியத்தை செய்து முடிக்க வேண்டும். யானைப் பெட்டியில் வாட் செய்ய வேண்டும். இந்த நாட்டில் என்னதான் பேசினாலும் நாடானிடம் இருக்கிற ஒற்றுமை புத்தி உங்களுக்கு வர இன்னும் 100 வருஷம் ஆகும் என்று சொல்லலாம். நமது சாதிக்காரன் தேர்தல் என்றால் ஒரு காசு கூட கையில் எடுத்து கொண்டு வருவதில்லை. பெரிய பணக்காரர்கள் உட்பட தேர்தல் சாதாரணமா? சினிமாவை விடச் சின்னதா? அத்தனை பேரும் பிச்சைக் காரரா? தேர்தளுக்கேன்று 5ரூ  கொண்டு வந்தால் என்ன? இந்த நினைவு உங்களுக்கு வந்தால் சாணான் உங்களை நிமிர்ந்து கூடப் பார்க்க மாட்டான். வெட்டிக் காரியத்துக்கு போனால் 15 ரூ செலவளிக்க்றாய். ஆனால் சங்கத்துக்கு வரி கொடுக்க மாட்டான். அவன் சாதிக்காரன் தேர்தலுக்கு நிற்கிறான் என்றால் ஒவ்வொரு நாடானும் 10 ரூபாயில் இருந்து ரூ.20 வரை கொண்டு வந்து செலவழிக்கிறான். அவன் சாதி வாழுமா? உன் சாதி வாழுமா?

    நம்ம சாதிக்காரன் ஓட்டுப் போட வந்து விட்டு காபி இல்லையா, மிக்சர் இல்லையா? அவன் கொடுக்கிறான் என்று கேட்கிறான். விளங்குமா இந்த நாடு? அவனவன் தன் தகுதிக்குத் தக்கவாறு பணம் கொண்டு வந்தால் எவ்வளவு பணம் சேரும். எவ்வளவு வேலை செய்யலாம்! இம்மாதிரி வேலை செய்வதைப் பார்த்தால் இவங்களெல்லாம் பேரையூரை விட்டு ஓடி விடுவான். சினிமாவுக்குச் செலவழிக்கிறாய். முளைப்பாரி பார்க்க செலவு பண்ணுகிறாய். மாடு விரட்டுப் பார்க்க செலவு பண்ணுகிறாய். ஆனால் இந்த கூட்டத்தைப் போட்ட நீங்கள் இந்த ஒரு குணத்தைப் பெறுங்கள். வசதியுள்ளவன் 5,10 செலவு செய்யட்டும். இந்த குணத்தையும், அறிவையும் வைத்துக் கொண்டு காரியம் செய்தால் யானைப்பெட்டி நிரம்பும். வருகிற மூன்றாவது மகா யுத்தத்தில் முருகன் கிருபையால் வருகிற கந்த சஷ்டிக்குள் உண்மையான சுதந்திரம் இந்த நாட்டுக்கு வரும் என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன். அத்துடன் செய்து முடிக்க அறிவு அருள், ஆண்டவன் அருள வேண்டுமென்று கேட்டுக் கொண்டு விடை பெற்றுக் கொள்கிறேன்.

எனது அரசியல் பயணம் - மத மாற்றங்களைக் குறைத்திருக்கிறோம்... - டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ..




நன்றி துக்ளக் வார இதழ்

எனது அரசியல் பயணம் - பொது வாழ்வுக்கு இழுத்தது கிராமத்து சூழ்நிலை- டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ...



  

நன்றி துக்ளக் வார இதழ்

எனது அரசியல் பயணம் -தி.மு.க. ஆட்சியில் சோக நிகழ்வு...! - டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ..




நன்றி  துக்ளக் வார இதழ் 

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

மருத்துவர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. அவர்களின் நெல்லை மாவட்டம், போகநல்லூர் கிராமத்தில் மக்கள் சந்திப்பு.

நெல்லை மாவட்டம், மேலப்பாட்டாக்குறிச்சி கிராமத்தில் மக்கள் சந்திப்பு

மருத்துவர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. அவர்களின் நெல்லை மாவட்டம், கீழப்பாட்டாக்குறிச்சி கிராமத்தில் மக்கள் சந்திப்பு.

நெல்லை மாவட்டம், சுந்தரபாண்டியபுரம் காலனி கிராமத்தில் மக்கள் சந்திப்பு.

மருத்துவர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. அவர்களின் நெல்லை மாவட்டம், கீழப்புலியூர் கிராமத்தில் மக்கள் சந்திப்பு.