ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

பேட்டை கலவர பாதிப்புகளை பார்வையிட்ட புதிய தமிழகம் குழு!

திருநெல்வேலி, பேட்டை ஆஞ்சநேயர் தெரு பகுதியில் இரு சமூகங்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக போலீசார் நடத்திய தடியடியில் பாதிக்கப்பட்ட தேவேந்திரகுல மக்களை சந்தித்து ஆறுதல் கூறி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் அய்யா அவர்களின் ஆணையின்படி மாநில இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் பாஸ்கர் மதுரம் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழு நேரடியாக சென்று தடியடியில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டது. உடன் நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளர் செல்லப்பா, பேட்டை பகுதி செயலாளர் குமார் செட்டியார், பேட்டை பகுதி இளைஞரணி செயலாளர் சக்திவேல், பேட்டை பகுதி மாணவரணி செயலாளர் பாலமுருகன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு அசோக், மாவட்ட தொண்டரணி செயலாளர் கார்த்திக் மள்ளர் , மானூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் ரவீந்திரன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடன் சென்றனர்.

மறவர்களால் வெட்டப்பட்ட இரண்டு மள்ளர்கள் மற்றும் மள்ளர்களால் வெட்டப்பட்ட ஒரு மறவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இரு சமூகங்களுக்குமிடையே ஏற்பட்ட மோதலை தடுக்க முயன்ற போது காவல்துறை ஆய்வாளர் ஒருவர் தாக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து தேவேந்திரகுல மக்கள் வாழக்கூடிய பகுதியில் காவல்துறை நடத்திய தடியடியில் 10-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள், ஒரு லோடு ஆட்டோ ஆகியவை தாக்கப்பட்டதோடு வீடுகளில் உள்ள பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டன.

கோழை போலீசாரால் 10-க்கும் மேற்பட்ட மள்ளர்குல பெண்கள் தாக்கப்பட்டனர்.

தாக்குதல் நடத்திய காவல்துறையினரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் தமிழ்நாடு உள்துறை செயலர் மற்றும் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் (டி.ஜி.பி.) ஆகியோரை நேரடியாக சந்தித்து புகார் செய்யப்படும். மேலும் டாக்டர் அய்யா அவர்களோடு ஆலோசனை செய்த பின்பு அடுத்தகட்ட போராட்டம் பற்றி விரைவில் அறிவிக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக