ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

சங்கரன்கோவில் அருகே பதற்றம் இமானுவேல் சேகரன் சிலை அவமதிப்பு

சங்கரன்கோவில் : நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகே கீழதிருவேங்கடம் மெயின் சாலையில் தியாகி இமானுவேல் சேகரன் உருவசிலை  உள்ளது. சிலையை சுற்றி கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள் சிலையை அவமதிப்பு செய்து விட்டு தப்பினர். தகவல் அறிந்து, அப்பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் நள்ளிரவு 12 மணிக்கு திரண்டு, திருவேங்கடம்,கோவில்பட்டி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுநடத்தினர். சிலையை அவமதிப்பு செய்தவர்களை கைது செய்ய துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுதொடர்பாக, திருவேங்கடம் நாட்டாண்மை சின்ன மாரியப்பன் கொடுத்த புகாரின்பேரில் திருவேங்கடம் போலீசார் வழக்கு பதிந்து சிலை அவமதிப்பில் ஈடுபட்ட  மர்ம நபர்கள் மூவரையும் தேடி வருகின்றனர். பதற்றத்தை தணிக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக